Agri Info

Adding Green to your Life

May 10, 2022

உடல் எடையைக் குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்

May 10, 2022 0

 கோடைக்காலத்தில் கலோரிகள் குறைவாக உள்ள காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கின்றன. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கோடைக்காலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.




தினமும் அன்றாட உணவில் இந்தக் காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியும். அந்தக் காய்கறிகளின் தொகுப்பு இங்கே:

வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் கோடைக் காலத்தில் மலிவாக கிடைக்ககூடிய ஒன்று. நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனைக் கோடையில் அதிகம் சாப்பிட்டால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். இது கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும்.

சுரைக்காய்:
சுரைக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு கலோரி, அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. வைட்டமின், கால்சியம், 
மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. சுரைக்காய் சாறு உடலுக்கு சத்துக்களைத் தருவதோடு, கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ், கொலஸ்ட்ரால் பிரச்சினையைத் தடுத்து, கல்லீரலைச் சுத்தம் செய்யும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் சாறு குடிக்கலாம் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.  இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பாகற்காய்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும் பாகற்காய், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவும். 
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, ஜீரண சக்தியை அதிகரித்து உணவில் இருக்கும் சத்துகளைப்  பிரித்துக் கொடுக்கும். கொழுப்பை வெளியேற்றும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்பு வோர் தினமும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது காலையில் எழுந்தவுடன் பாகற்காய் சாறு அருந்தலாம்.

பிரோக்கோலி
இது உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். எடை இழப்புக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதில் 89 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், போதுமான நீரேற்றம், நார்ச்சத்துக்களைப் பெற பிரோக்கோலியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேரட்
உடல் எடை குறைப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைந்த கலோரிகளைக் கொண் டது. அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவும். கேரட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். 

பீன்ஸ்
இதில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவும். 

குடைமிளகாய் 
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடல் எடையைக் குறைக்க வழிசெய்வதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள  உதவுகிறது. 

May 9, 2022

மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள நிதிஉதவி

May 09, 2022 0

 மொழி­பெ­யர்ப்­புத்­து­றை­யில் பணி­யாற்­று­ப­வர்­கள் மேலும் தங்­கள் மொழி­பெ­யர்ப்­புத் திறனை வளர்த்­துக்கொள்­ளும் வகை­யில் மொழி­பெ­யர்ப்­புத் திற­னா­ளர் மேம்­பாட்­டுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது தொடர்பு தக­வல் அமைச்சு.


இதன்­மூ­லம், மொழி­பெ­யர்ப்­புத் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யி­லான பயிற்சி, பட்­டறை வகுப்­பு­களில் சேர்ந்து பயில விரும்­பும் சிங்­கப்­பூ­ர­ர்கள் அதற்­கான கட்­ட­ணத்­தில் 90 விழுக்­காடு அதா­வது $10,000 வரை­யி­லான நிதி உதவி பெற­லாம்.

இந்­தத் திட்­டத்­தின் வழி நிதி உதவி பெற விரும்­பு­வோர், மொழி­பெ­யர்ப்பு, உரை­பெ­யர்ப்­புத் துறை­யில் குறைந்­த­பட்­சம் ஓராண்டு காலம் அனு­ப­வம் பெற்­றி­ருக்க வேண்­டும். 

சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நா­டு­களில் குறு­கிய காலப் படிப்பு, பட்­ட­யப் படிப்பு, இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு, முது­நிலை பட்­ட­யப் படிப்பு, முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு ஆகி­ய­வற்­றுக்கு நிதி­உ­தவி கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம். 


அத்­து­டன் மாநாடு, கருத்­த­ரங்கு, இணை­யக் கருத்­த­ரங்கு, சான்­றி­த­ழ் கல்வி ஆகி­ய­வற்­றுக்கும் நிதி உதவிக்கு விண்­ணப்­பிக்­க­லாம். மேல் விவ­ரம்: https://www.mci.gov.sg/ttds/

நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் வழிகள்

May 09, 2022 0

உடற்­ப­யிற்­சி­களில் பல­வகை உள்­ளன. அவற்­றில் நடைப்­ப­யிற்சியும் ஒன்று. உல­கெங்­கும் நடைப்­ப­யிற்சி பிர­ப­ல­மாக இருக்­கிறது.



கடு­மை­யான உடற்­ப­யிற்சி செய்ய முடி­யா­த­வர்­கள் அல்­லது விருப்­ப­மில்­லா­த­வர்­கள் இதில் அதி­கம் ஈடு­ப­டு­கின்­ற­னர். இவர்­கள் மட்­டு­மின்றி உடல்தி­றன் அதி­க­முள்­ள­வர்­களும் நடைப்­ப­யிற்­சியை விரும்­பு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

மிக எளி­தாக, எவ்­வித செல­வும் இன்றி செய்­யக்­கூ­டிய நடைப்­ப­யிற்சி எல்லா வய­தி­ன­ருக்­கும் பொருந்­தும்.

காற்­பந்து, நீச்­சல் போன்ற உடற்­ப­யிற்­சி­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது நடைப்­ப­யிற்சி சுவா­ரா­சி­ய­மா­ன­தல்ல என்று ஒரு சாரார் கூறு­கின்­ற­னர்.

இதை மறுக்­கும் சிலர், நடைப்­ப­யிற்­சியை எவ்­வாறு சுவா­ர­சி­ய­மாக்­க­லாம் என்­பது குறித்து ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­னர்.

நடைப்­ப­யிற்­சி­யில் அதிக ஆர்­வ­முள்­ள­வர்­கள் சிலர் முன்­வைத்­துள்ள ஆலோ­ச­னை­க­ளைச் சற்று பார்க்­க­லாம்.

மேடு பள்ளம் உள்ள பாதை

சம தள­மான பாதை­யில் நடைப்­ ப­யிற்சி மேற்­கொள்­ளா­மல் கரடு முர­டான, மேடு, பள்­ள­மான வழியைத் தேர்வு செய்­ய­லாம். அது நடைப்­ப­யிற்சியை சுவா­ர­சி­ய­மா­ன­தா­க­வும் சவா­லா­ன­தா­க­வும் மாற்­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

எடைப் பயிற்சி

உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்­ப­யிற்சி செய்ய முடி­யா­த­வர்­கள் நடைப் பயிற்சி மேற்­கொள்­ளும்­போது அதிக எடை கொண்ட பொருள்களையோ

அல்­லது ‘டம்ப்­பெல்ஸ்’ எனப்­படும் உடற்­ப­யிற்சிக் கரு­வி­யையோ கைகளில் தூக்­கி­ய­வாறு நடைப்­ப­யிற்சி செய்­ய­லாம்.

இது ஒரே நேரத்­தில் கார்­டியோ மற்­றும் உடல் வலி­மைக்­கான பயிற்­சியைச் செய்­வ­தற்கு வழி­வ­குக்­கும்.

நடைப்­ப­யிற்சி செய்­யும்­போது அதிக ஆற்­றலை உற்­பத்தி செய்­வ­தற்­கும் வித்­தி­டும்.

இத­யத்தை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருப்­ப­தற்கு இந்த வகை எடைப் பயிற்சி மிக­வும் பொருத்­த­மா­னது என்று உடற்­ப­யிற்சி நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். மேலும் வளர்­சிதை மாற்­றக் கோளா­றுக­ளின் அபா­யத்­தை­யும் இது 17 விழுக்­காடு குறைக்­கிறது.

அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்­தம் மற்­றும் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டா­மல் இருக்க இந்த நடைப்பயிற்சி மேற்­கொள்­வது சிறந்­தது.

தடுப்­புப் பலகை/கயிற்­றாட்­டம்

வெறு­மனே நடந்­து­கொண்­டி­ருந்­தால் சலிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் உள்­ளது.

எனவே இடையிடையே வேறு சில எளிய பயிற்சிகளை­யும் மேற்­கொள்­ள­லாம்.

தடை தாண்­டும் போட்­டிக்­கான கட்­ட­மைப்பு போல் சில அடி உய­ரத்­திற்கு வரி­சை­யாக தடுப்­புப்

பல­கை­களை அமைத்து கால்­க­ளால் தாண்டி பயிற்சி செய்­ய­லாம்.

அதனை செய்ய முடி­யாத பட்­சத்­தில் கயிற்­றாட்­டத்­தில் ஈடு­ப­ட­லாம்.

நடைப்­ப­யிற்சி செய்­து­விட்டு 50 முறை கயிற்­றாட்­டம் பயிற்சி மேற்­கொள்­வது சிறப்­பா­னது.

அதன்­பி­றகு சிறிது ஓய்வு எடுத்து­விட்டு நடைப்­ப­யிற்­சியைத் தொட­ர­லாம்.

இந்­தப் பயிற்­சி­களைச் செய்­யும்­போது கணுக்­கா­லுக்கு அதிக அழுத்­தம் கொடுக்­கக்­கூ­டாது.

கேலரிகளை எரிக்க உத­வும் ‘புஷ் அப்’ பயிற்சி

நடைப்­ப­யிற்­சிக்கு இடையே ‘புஷ் அப்’ எனப்­படும் தண்­டால் பயிற்­சி­யும் மேற்­கொள்­ள­லாம்.

இத்­த­கைய பயிற்சி முறை­கள் வழக்­க­மாக எரிக்­கக் கூடிய கேலரி­களை இரு­ம­டங்காக உயர்த்­து­வ­தற்கு உத­வும்.

நண்­பர்­க­ளு­டன் இணைந்து நடைப்­ப­யிற்­சி­யில் ஈடு­ப­டு­தல்

தனி­யாக நடைப்­ப­யிற்சி செய்­வ­தை­விட நண்­பர்­க­ளு­டன் இணைந்து அதில் ஈடு­ப­டு­வது நடைத் திறனை அதி­க­ரிக்க உத­வும்.

வழக்­க­மாக நடைப்­ப­யிற்­சிக்குச் செல­வி­டும் நேரத்­தைப் பற்றி

கவ­லைப்­ப­டா­மல் நண்­பர்­க­ளு­டன் பேசி­ய­படி அதிக தூரம் செல்­ல­லாம். அப்­படி நடக்­கும்­போது சோர்­வும் சட்­டென்று எட்­டிப்­பார்க்­காது.

அதிக கலோ­ரி­க­ளை­யும் எரித்து விட­லாம்.

இந்த வழி­மு­றை­யில் உங்­கள் ஆரோக்­கி­யம் மட்­டு­மின்றி

நண்­பர்­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­யும் ஒரே நேரத்­தில் மேம்­ப­டுத்­த­லாம். ‘நண்­பர்­க­ளு­டன் நடைப்­ப­யிற்­சிக்குச் செல்­லும் மூத்­தோர், சிறந்த உடல்­நி­லையைக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் வாழ்க்­கையை மகிழ்ச்­சி­யாக அனு

பவிப்­ப­தா­க­வும் இது­தொ­டர்­பாக ஆய்வு நடத்­திய மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­த­னர்.

தியா­னத்­துக்­குச் சமம்

இந்­தி­யா­வின் தேசிய சுகா­தா­ரக் கழ­கம் நடத்­திய ஆய்­வின்படி,

தியா­னம் என்­பது உட­லை­யும் மன­தை­யும் ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்க உத­வும் பயிற்­சி­யா­கும்.

மன­தை­யும் உட­லை­யும் ஒரே சம­யத்­தில் தளர்த்தி, ஆயுள்­கா­லம் மற்­றும் வளர்­சிதை மாற்­றத்தைத் தியானம் ஒழுங்­கு­ப­டுத்­தக்­கூ­டி­யது.

புல்­வெ­ளி­யில் வெறும் காலில் நடைப்­ப­யிற்சி மேற்­கொள்­வது கால்­க­ளுக்­கும் மன­துக்­கும் இதமளிக்­கும்.

உடல் ஆரோக்­கி­யத்தை இது மேம்­ப­டுத்­து­கிறது. பூங்­கா­வில் நடப்­பது மனதை நிதா­னப்­ப­டுத்­த­வும் உத­வு­வ­து­டன் தியா­னம் செய்­வது போன்ற பலனை தரும்.

படிக்­கட்டுகள்

அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­கள், அலு­வ­ல­கங்­கள், கடைத்தொகுதிகள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் போன்ற இடங்­க­ளுக்குச் செல்­லும்­போது படிக்­கட்டுகளுக்குப் பதி­லாக மின்தூக்கியில் செல்லவே பல­ரும் விரும்­பு­கி­றார்­கள். இதன் காரண மாகப் படிக்­கட்­டில் ஏறும் பழக்­கம் குறைந்­து­போய்­விட்­டது. நாள்தோறும் படிக்­கட்டு ஏறு­வ­தற்­கும் சில நிமி­டங்­கள் ஒதுக்க வேண்­டும். அது­வும் பல நோய் அபா­யங்­களில் இருந்து நம்மைத் தற்­காத்­துக்­கொள்ள உத­வும்.


 Click here to join whatsapp group for daily health tip

பல மணி நேரம் இடைவெளிவிட்டு சாப்பிடுவதால் பலனில்லை

May 09, 2022 0

 ஒவ்­வொரு நாளும் பல மணி நேரம் இடைவெளிவிட்டு சாப்­பி­டா­மல் இருந்­தால் உடல் எடை­யைக் குறைக்­க­லாம் என்று இது­நாள்­வரை சொல்­லப்­பட்டு வந்­தது.



ஆனால், அப்­படி நேரக் கட்­டுப்­பாடு வகுத்து, சாப்­பி­டு­வ­தால் பெரும்­ப­யன் விளை­யாது எனப் புதிய ஆய்வு முடி­வு­கள் கூறுகின்­றன.

காலை 8 மணி­ முதல் மாலை 6 மணிக்­குள் குறைந்த கேலரி கொண்ட உணவை அல்­லது நாளின் எந்த நேரத்­தி­லும் அதே கேலரி கொண்ட உணவை உட்­கொள்ளுமாறு ஓராண்­டிற்கு ஆய்வு நடத்­தப்­பட்­டது. ஆனால், அப்­ப­ழக்­கம் உடல் எடைக் குறைப்­பில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை என கண்­ட­றி­யப்­பட்­டது.

நேரக் கட்­டுப்­பாடு வகுத்து உண்­ப­தால் எந்­தப் பய­னும் இல்லை என்­ப­தைத் தமது ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் சான் ஃபிரான்­சிஸ்­கோ­வில் உள்ள கலிஃ போர்­னி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உண­வுத்­திட்ட ஆய்­வா­ளர் டாக்­டர் ஈத்­தன் வீஸ் தெரி­வித்­தார்.

கடந்த மாதத்­தின் ‘நியூ இங்­கி­லாந்து மருத்­து­வச் சஞ்­சிகை’யில் இந்த ஆய்­வுக் கட்­டுரை வெளி­யி­டப்­பட்­டது.

சீனா­வின் குவாங்சோ நகர தெற்கு மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் குழு, உடற்­ப­ரு­மன் பிரச்­சி­னை­யால் அவ­திப்­படும் 139 பேரை இந்த ஆய்­விற்கு உட்­ப­டுத்­தி­யது. பெண்­கள் நாளொன்­றுக்கு 1,200 முதல் 1,500 கேலரி வரை­யும் ஆண்­கள் 1,500 முதல் 1,800 கேலரி வரை­யும் உட்­கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

ஓராண்­டிற்­குப்­பின் அவர்­க­ளின் எடை சரா­ச­ரி­யாக 6.35 கிலோ முதல் 8.16 கிலோ வரை குறைந்­தது. ஆனால், இரு­வகை உண­வுப் பழக்­கங்­க­ளி­லும் பெரிய வேறு­பாடு காணப்­ப­ட­வில்லை.

ஆனால், இடுப்­புச் சுற்­ற­ளவு, உடற்­கொ­ழுப்பு, உடற்­தசை ஆகி­ய­வற்­றி­லும் குறிப்­பி­டத்­தக்க வேறு­பாடு காணப்­ப­ட­வில்லை.

அதே­போல, இரத்­தச் சர்க்­கரை அளவு, இன்­சு­லி­னுக்­கான உணர்­தி­றன், இரத்­தப் புர­தங்­கள், இரத்த அழுத்­தம் ஆகி­ய­வற்­றி­லும் எந்த வேறு­பா­டும் இல்லை.

இத­னை­ய­டுத்து, குறித்த நேரத்­திற்­குள் குறிப்­பிட்ட அளவு கேலரி எடுத்­துக்­கொள்­வ­தால் உடல் எடைக் குறைப்­பில் பெரும்­ப­யனை விளை­விப்­ப­தில்லை என்ற முடி­விற்கு ஆய்­வா­ளர்­கள் வந்­த­னர்.

இப்­படி நேர வரம்­பிற்­குள் உண்­ப­தால் பெரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்த டாக்­டர் வீச், கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக நண்­ப­கல் தொடங்கி, இரவு 8 மணிக்­குள் உண்­டு­வி­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

தமது முன்­னைய ஆய்­வில், ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்­ணு­மா­றும் பசி­யெ­டுத்­தால் இடை­யி­டையே நொறுக்­குத்­தீனி சாப்­பி­ட­லாம் என்­றும் டாக்­டர் வீஸும் அவ­ரின் குழு­வி­ன­ரும் 116 பேரைக் கேட்­டுக்­கொண்­ட­னர்.

அதே­போல, இன்­னொரு தரப்­பி­னர் நண்­ப­கல் 12 மணி­யில் இருந்து இரவு 8 மணிக்­குள் தாங்­கள் விரும்­பி­யதை உண்­ண­லாம் என அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

இரு­த­ரப்­பி­ன­ரின் உடல் எடை­யும் பெரிய அள­வில் குறை­யா­ததை முடி­வு­கள் காட்­டின. நேரக் கட்­டுப்­பாடு வகுத்து உண்­ட­வர்­க­ளின் உடல் எடை சரா­ச­ரி­யாக 0.9 கிலோ­வும் மூன்று வேளை­யும் உண்­ட­வர்­க­ளின் எடை 0.6 கிலோ­வும் குறைந்­தி­ருந்­தன.

ஸ்டான்­ஃபோர்ட் ஆராய்ச்சி மையத்­தின் ஊட்­டச்­சத்து ஆய்­வு­களின் இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் கிறிஸ்­டோ­பர் கார்ட்­னர், “கட்­டுப்­படுத்­தப்­பட்ட நேர­கால உண­வு­கள் சந்­தர்ப்­பத்­தில் வேலை செய்­தா­லும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை,” என்று கூறுகிறார்.

“கிட்­டத்­தட்ட ஒவ்­வொரு வகை உண­வும் சில­ருக்கு வேலை செய்­கிறது,” என்­றும் குறிப்பிட்டுள்ளார்.

டீ குடிக்கும்போது இவற்றைச் சாப்பிடுவது ஆபத்தில் முடியும்!

May 09, 2022 0

 உலகளவில் பலரும் தேநீரை விரும்பி அருந்துகின்றனர், இது பலருக்கும் களைப்பை நீக்கி சுறுசுறுப்பு தரும் ஒரு அற்புத பானமாக செயல்படுகிறது. தேநீர் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது எனலாம்.




எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது தேநீர் தான் . பால், சர்க்கரை, தேயிலை தூள் கலந்த ஒரு ஆரோக்கியமான பேக்காக தேநீர் நமக்கு கிடைக்கிறது.

தேநீரில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. மாலை நேரத்தில் அருந்தும் தேநீருடன் சிறிது சிற்றுண்டி சேர்த்து அருந்தினால் கூடுதல் இன்பமாக இருக்கும். ஆனால் தேநீருடன் சில சிற்றுண்டிகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கை விளைவிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அப்படி எந்த வகையான சிற்றுண்டிகளை தேநீரோடு சேர்த்துப் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்வோம்.


தவிர்க்க வேண்டியவை

கடலை மாவு போன்ற மாவுகளில் செய்த பக்கோடா போன்ற சில சிற்றுண்டிகளைத் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அஜீரண கோளாறு ஏற்படுகிறது. அடுத்ததாக தேநீர் அருந்தும்போது அதனுடன் பச்சை காய்கறிகளை சேர்த்து உண்ணக்கூடாது. வெறுமனே பச்சை காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும், ஆனால் தேநீருடன் சேர்த்து சாப்பிடும்பொழுது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது.

லெமன் டீ

பலருக்கும் லெமன் டீ என்றால் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்கள் கூட இந்த லெமன் கலந்த தேநீரை பருகுவார்கள். ஆனால் இந்த லெமன் தேயிலையுடன் கலக்கும்பொழுது அமிலமாக மாறி வயிறு சம்மந்தமான கோளாறை ஏற்படுத்துகிறது. மேலும் மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தேநீர் அருந்தும்போது உட்கொள்ளக்கூடாது. அது அமிலத்தன்மையை அதிகரிக்க செய்து செரிமான கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.அதேபோல பாலுடன் இரும்பு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வது அவ்வளவு நல்லதல்ல.

நட்ஸ்

தேநீருடன் நட்ஸ் வகைகளை உண்ணுவது உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தேநீரில் உள்ள டானின் என்கிற பொருள் நட்ஸ்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை தடுக்கிறது.

May 6, 2022

உங்க சொந்த ஊரில் 18,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 | Karur Vysya Bank Recruitment 2022

May 06, 2022 0

 


Karur Vysya Bank Recruitment 2022 Posting Name and Jobs Details :

Posting Name : Sales and Service Associate Post

Job Category : Private Bank Jobs

Employment Type : Regular / Temporary ( Contract )

Place of Posting : Tamilnadu - Karur Vysya Bank Branch(  Near By Your Home Down )

Selection Process : Interview

Apply Job Mode : Online

Last Date to Apply Job Online : 30-06-2022

Kvb Official Website : https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

Karur Vysya Bank Recruitment 2022 Vacancies Details :

Sales and Service Associate Post - Various Vacancy

The Karur Vysya Bank Limited, a leading Private Sector Bank in India invites online applications for appointment of Sales & Service Associate (on contract) from the qualified candidates.

Last Date of Online Registration : 30.06.2022

Only Indian Nationals can apply.

Karur Vysya Bank Recruitment 2022 Salary Details :

Sales and Service Associate Post - Rs.15000/- to Rs.18000/-
1. The selected candidates will be appointed on contract basis for a period of one year
initially and the salary would be on consolidated basis in the range of ₹15,000 to ₹18,000
depending upon the candidate experience and place of posting.

2. Apart from the salary, there are no other benefits.

3. Candidates selected are liable to be posted / placed as per the administrative requirements
and discretion of the Bank.

Karur Vysya Bank Recruitment 2022 Age Limit :

Sales and Service Associate Post Age: Minimum 21 years & Maximum 28 years

Service Agreement: 

The selected candidates will be required to execute Service Agreement (in Non-Judicial Stamp paper) upon joining the Bank.

Karur Vysya Bank Recruitment 2022 Job Description :

1) Assist and educate the customers to use our digital / technology products.

2) Cross-selling of bank’s products.

3) Lead generation and ensure 100 % conversion of customers to digital platform.

4) Improving the customer experience and ensure delightful service to the customers by promoting and use array of digital products / services offered by the bank.

5) Be conversant with various digital products / platforms available in the bank.

6) Resolve any issues that may arise while using the digital products.

7) Assist customers by demonstrating the use of our digital applications, products and service.

8) Any candidate having keen interest in sales may apply.

Karur Vysya Bank Recruitment 2022 Educational Qualification :

Sales and Service Associate Post - Any Degree

Any candidate who has completed Under Graduate Degree under regular course
from a college affiliated to a recognized University with 50% of marks and above.

Karur Vysya Bank Recruitment 2022 Mode of Selection Process :

1. Screening of Candidates will be done by conducting personal interview

2. Candidates will be called for Personal Interview (Date of Interview and Venue will be
informed by the Bank to the individual candidates through registered e-mail only).

3. Depending upon the number of vacancies, the Bank reserves the right to call for
Personal Interview.

Application Fee : No Fee

How to Apply Kvb Bank Jobs :

Apply Job Online

Last Date to Apply Online : 30-06-2022

Candidates are required to apply online through website www.kvb.co.in (careers page) No other means/ mode of application will be accepted.

Candidates should ensure that their personal email ID (as specified in the online application form) and mobile number is to be kept active. Bank may send call letters for interview to the registered e-mail ID only

Karur Vysya Bank Recruitment Official Notification & Online Application Form Links :


உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், இதை கட்டாயம் சாப்பிடுங்கள்

May 06, 2022 0

 உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். அதேபோல் தசைப்பிடிப்பும் தொடங்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.

பொதுவாக கால்சியம் குறைபாட்டை போக்க பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயாபீன், எள் போன்றவற்றை சாப்பிட அறிவுறுத்தப்பட்டாலும், இது திவிரவும் சில உணவுகளிலும் கால்சியம் உள்ளது. அதன்படி கால்சியம் நிறைந்த ஐந்து உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:

விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை

விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றில் சில, கசகசா, எள் விதைகள் மற்றும் சியா போன்ற்றில் கால்சியம் அளவு அதிகமாக நிறைந்துள்ளது.

சானா மற்றும் ராஜ்மாவில் கால்சியம் நிறைந்துள்ளது

பருப்பு வகைகள் பெரும்பாலும் புரதம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது, ஆனால் சில பருப்புகளில் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் உள்ளது. அதன்படி சனா மற்றும் ராஜ்மாவில் கால்சியம் அதிகளவு நிறைந்துள்ளது.

பாதாமில் கால்சியம் உள்ளது

பாதாம் உடலுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். பாதாமில் இருந்தும் நல்ல அளவு கால்சியத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

பசலைக்கீரையில் இரும்புச்சத்துடன் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது
பசலைக் கீரையில் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அபரிமிதமாக இருக்கிறது. இதேபோல இஞ்சி, கடுகு விதைகள் நம் உடலில் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. வெந்தயம் பரோட்டா, கீரை தோசை, கீரை மற்றும் முட்டை ஆம்லெட் ஆகியவை கால்சியம் நிறைந்த உணவு பொருட்களாகும்.

ராகியில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது
ராகி மாவில் இரும்பு, புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மிகுதியாக உள்ளது. ராகி ரொட்டி அல்லது ராகி தோசை செய்ய நீங்கள் சாப்பிடலாம். வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற (மெனோபாஸ்) பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்  ஏற்படாமல் தடுக்க இது உதவும்.

எள் கால்சியம் நிறைந்தது
எள் விதைகளில் நம்பமுடியாத அளவிற்கு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. எள் கொண்டு எண்ணற்ற தின்பண்டங்கள் தயாரிக்க முடியும். எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன. இதனால் அன்றாட உணவில் எள் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை தரும். 

May 5, 2022

கோடையில் இந்த 4 மசாலா பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்

May 05, 2022 0

 காய்கறிகளின் சுவையை அதிகரிப்பதில் மசாலாப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, ஆனால் மசாலாப் பொருட்கள் எல்லாப் பருவங்களிலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூற முடியாது. இதுபோன்ற சில மசாலாப் பொருட்களை கோடை காலத்தில் சாப்பிடவே கூடாது. இருப்பினும், நீங்கள் இந்த மசாலாப் பொருட்களை குறைந்த அளவில் உட்கொண்டால், எந்தத் தீங்கும் ஏற்படாது, ஆனால் இந்த மசாலாப் பொருட்களை அதிக அளவில் சாப்பிட்டால், அவற்றை எடுத்துக்கொள்வதற்கு நீங்கள் மருத்துவரிடம் அதிக பணம் செலுத்த வேண்டி இருக்கும். அப்படியானால், அதிகப்படியான நுகர்வினால் பிரச்சனைகளை உண்டாக்கும் மசாலாப் பொருட்கள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

1. மஞ்சளை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்


மஞ்சள் உங்கள் உடலுக்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் நீங்கள் அதை அதிக அளவில் பயன்படுத்தினால் அதிக இரத்தப்போக்கு ஏற்படும். 

2. துளசி உட்கொள்ளலைக் குறைக்கவும்

துளசியையும் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலருக்கே தெரியும். இது பெண்களின் கருவுறுதலையும் பாதிக்கும்.

3. இலவங்கப்பட்டை உபயோகத்தை குறைக்கவும்
இலவங்கப்பட்டை அதன் சொந்த நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் வாயில் கொப்புளங்கள் ஏற்படலாம். மேலும், இதை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும்.

4. கருப்பு மிளகு
கருப்பு மிளகு பெரும்பாலும் காய்கறிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது எடையைக் குறைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இரத்த உறைவு பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு மிளகு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

May 4, 2022

பழங்களும் பயன்களும்!

May 04, 2022 0

 கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் உஷ்ணமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.


அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால்… பெண்களுக்கு வெள்ளைப்படுவது நிற்கும். வாந்தி, பித்தம், தாகவறட்சி, காமாலை, மாதவிடாய்க் கோளாறுகளில் நல்ல பலனை அளிக்கக் கூடியது.இலந்தை: இப்பழம் உடலை குளிர்ச்சியாக்கும். தாது விருத்தியை உண்டாக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். அஜீரணம், புளி ஏப்பம், கண்நோய், தொண்டைப் புகைச்சலை நீக்கும்.

ஆப்பிள்: தூக்கத்தில் நடமாடும் பிரச்னை உள்ளவர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுப்பது நல்லது. இருதய நோய்களுக்கு ஆப்பிளுடன் தேன் கலந்து உண்ணலாம். ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தப் போக்கு, இன்ஃப்ளூயன்ஸா தடுக்கப்படுகிறது. உணவுக் கழிவுகள் குடலில் தங்கி விடாமல் தடுக்கிறது. முகப்பருவிற்கு ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்துப் பூசலாம்.

திராட்சை: உடல் சூட்டை தணிக்கும். கபக்கட்டு நீக்கும். ரத்தம் விருத்தியாகும். மூளைத் திறன் அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை அகற்றும். ஆஸ்துமா பிரச்னைக்கு திராட்சை ரசம் நல்ல பலன் அளிக்கும். சிறுநீரக அழற்சியை நீக்கும்.

நெல்லிக்கனி: நீண்ட ஆயுளைத் தரும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக்கனி சாறு பயன்படுகிறது. வாந்தி, குமட்டல் போன்றவற்றுக்கு நெல்லிக்கனிச்சாறு பலன் தரும். இதன் சாற்றில் தேன் கலந்து கொடுத்தால் சுவாசக் கோளாறு, விக்கல், பித்த மயக்கம் குணமாகும்.

பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. ஜீரணம் ஆகக் கூடியது. இளமையும், அழகும் தருவது. பெண்களின் கருப்பைத் தசை நார்களை சுருங்கச் செய்வதற்கு பப்பாளி உதவுகிறது. முறையான மாதவிடாய்ப் போக்கை நிகழ்த்தும்.

கோடைக்கு குளுகுளு தரும் நுங்கு

May 04, 2022 0

 கோடையை தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது.


* நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்பாரிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

* கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.

* வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நுங்கு நல்ல தீர்வு.

*  உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு எவ்வளவு தண்ணீர் பருகினாலும் தாகம் அடங்காது. ஆனால் நுங்கை சாப்பிட்டவுடன் அந்த தாகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும். ரத்த சோகைக்காரர்கள் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகும். உடலும் சுறுசுறுப்பு அடையும்.

* நுங்கில் உள்ள ஆந்த்யூசைன் என்ற ரசாயனப்பொருள் பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது.

* கோடையில் தோன்றும் அம்மை நோய் வராமல் பாதுகாக்கிறது.

* நுங்கை அரைத்து தேங்காய்ப்பாலுடன் சேர்த்து குடித்தால் வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.

* நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகளின் மேல் பூசினால் விரைவில் சரியாகும்.

* இளநீருடன் நுங்கை சேர்த்து ஜூஸாக செய்து குடிக்கலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். உடல் பொலிவடையும்.

* நுங்கை உடைத்து கால் டம்ளர் நுங்கு நீரில் ஒரு எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சர்க்கரையுடன் சர்பத்தாக அருந்தலாம்.

* நுங்கின் மேலுள்ள பழுப்பு நிறமான தோலில்தான் நார்ச்சத்து அதிகம் என்பதால் அதைச் சேர்த்துச் சாப்பிடுவதுதான் நல்லது.

* களைப்பாக உள்ள நேரத்தில் நுங்கு சாப்பிட்டால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும்.

* நுங்கை வெட்டி துண்டுகள் செய்து தேனை சேர்த்து, பச்சை திராட்சையை கலந்து சாப்பிட சுவையே தனிதான்.