Agri Info

Adding Green to your Life

June 5, 2022

TET - ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எப்போது நடைபெறும்?

June 05, 2022 0

 ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

6.33 லட்சம் பேர் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிகாரி தகவல்

இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

For More All Job Notification Link : Click Here

June 3, 2022

போட்டித் தேர்வுகள் எதை சார்ந்துஇயங்குகின்றன -அறிவை சார்ந்ததா, ஆளுமை சார்ந்ததா? - நீந்திக் கடப்போம்… வா!

June 03, 2022 0

 போட்டித் தேர்வுகள் எதை சார்ந்துஇயங்குகின்றன என்று முதலில்யோசிப்போம். அவை அறிவை சார்ந்ததா, ஆளுமை சார்ந்ததா? அல்லது, இரண்டும் கலந்த கலவையா?

அறிவை சார்ந்தது என்று முடிவுக்கு வந்தால், அறிவின் அடிப்படை தகவலை சார்ந்தது. தகவல்களின் திரட்சி அறிவு என இன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அரசுப் பணிகள், நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் 3 வகைப்படும். ஒன்று,கீழ்நிலைப் பணிகள். 2-வது, இடைநிலைப் பணிகள். 3-வது, மேல்நிலைப் பணிகள். இதில் வெறும் தகவல் சார்ந்த வினாக்கள் கீழ்நிலைப் பணிகளுக்கே கேட்கப்படுகின்றன.

இதில் கீழ்நிலைப் பணியாளர்களின் தன்மை எது என்று கேட்டால், உயரதிகாரியால் கொடுக்கப்படும் பணிகளை செய்து முடிப்பது. அவற்றை பொருத்தவரை சிக்கல் தீர்க்கிற, முடிவெடுக்கிற திறன் எதிர்பார்க்கப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் போன்ற குரூப்-4 பணிகளைச் சார்ந்த அவர்களுக்கு வேலைக்கான தேர்வுகளில் தகவல்சார்ந்த கேள்விகளே கேட்கப்படுகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானதாகிறது. சுருக்கெழுத்தர், தட்டச்சர் போன்றோருக்கு கூடுதலாக, அதுசார்ந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது.

அதற்கு மேல் இடைநிலைப் பணிகள். இவர்களைப் பொருத்தவரை, கீழ்நிலை ஊழியர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்தார்களா என்று மேற்பார்வையிடும் பொறுப்பு உண்டு. மாநில அரசு நிர்வாகத்தை பொருத்தவரை இது குரூப்-2, 2A போன்ற பிரிவாகக் கருதப்பட்டு, இவர்களுக்கான கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்த இரண்டும் மத்திய அரசுப் பணிகளுக்கும் பொருந்தும். இங்கு TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல, மத்தியில் SSC எனப்படும் Staff Selection Commission இதற்கான அதிகாரப்பூர்வ தேர்வு வாரியம் ஆகும். SSC தேர்வு முறைப்படி, கீழ்நிலைப் பணிகளுக்கு NTS எனும் பிரிவிலும், இடைநிலைப் பணிக்கு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வும் நடத்தப்படுகிறது.

இப்போது, மேல்நிலைக்கு வருவோம். அதாவது குரூப்-2 பிரிவு.இப்பிரிவில் தேர்வாகிறவர்கள் அதிகாரிகளாகப் பொறுப்பேற்கிறார்கள். அவர்கள் கீழ்நிலையில் உள்ள எழுத்தர்கள் போலவோ, இடை நிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் போலவோ செயல்பட முடியாது. அவர்கள் ஆளுமையை பயன்படுத்துபவர்களாக, கொள்கை வகுப்பாளர்களாக, முடிவெடுப்பவர்களாக, துறையின் நோக்கத்தையும், போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் மாநில அரசுப் பணியாக இருந்தால் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 பிரிவு அலுவலர்கள். அதாவது, துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கதுணை பதிவாளர், வணிக வரி உதவிஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் அலுவலர் ஆகியோர்.

இதுவே மத்திய அரசுப் பணியாக இருந்தால், UPSC நடத்தும் IAS, IPS, IRS, IFS போன்று 24 விதமான உயர் பதவிகள் இருக்கின்றன. இப்பதவிக்கும் கல்வித்தகுதி பட்டப் படிப்பே. ஆனால் குரூப்-1 தேர்வு - குரூப்-2 தேர்வு இரண்டுக்கான போட்டித் தேர்வு முறைகளில்தான் வேறுபாடு இருக்கிறது.

UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் 3 நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam), மற்றும் ஆளுமைத் தேர்வு (Personality Test). ஏன் இப்படி மூன்று நிலைகள்? அடிப்படையில் இது வடிகட்டல் முறை. இதில் முதல்நிலைத் தேர்வில் அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்கள் (Objective Type Questions). பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் இத்தேர்வில் எத்தனை பேருக்கு சிந்தனைத் தெளிவு இருக்கிறது, எத்தனை பேரிடம்தெளிவான தகவல் அறிவு புதைந்திருக்கிறது என்பது சோதிக்கப்படுகிறது. அதாவது Concept Clearing and Knowledge Clearing ஆகிய இரண்டையும் சோதிக்கும் களமாக முதல்நிலைத் தேர்வு இருக்கிறது.

முதல்நிலைத் தேர்வு என்ற சிறுநதியைக் கடந்து கரையேறுபவர்களுக்கு அடுத்த களம் முதன்மைத் தேர்வு. இது அனைத்து கேள்விகளுக்கும் சொந்தமான நடையில் விவரித்து விடையளிக்கும் (Descriptive) தன்மையில் அமைந்துள்ளது. அதிலும் பக்கம் பக்கமாக நாம் கதை எழுத முடியாது. ஒரு வினா கேட்கப்பட்டு, 30 வரிகள் இடம் விடப்பட்டிருந்தால் அந்த அனுமதிக்கப்பட்ட வரிகளுக்குள் உங்களால் தெளிவான பதிலை அளிக்க முடிகிறதா என்பதை சோதிக்கும் முயற்சியே அது.

முதல்நிலைத் தேர்வில் சரியானவற்றை தேர்வு செய்யும் திறனும்,முதன்மைத் தேர்வில் கொடுக்கப்பட்ட சிக்கலுக்கு சரியான தீர்வு எழுதும் திறனும் சோதிக்கப்படுகிறது. இறுதியாக ஆளுமைத் தேர்வு.

இதில் பெரிதாக பாட வினாக்கள் கேட்கப்படுவது இல்லை. அரை மணி நேரம் உங்களோடு உரையாடுவதில் இருந்து, உங்கள் ஆளுமையை எடைபோடும் முயற்சி. வெகு சாதாரணமான கேள்விகள்கூட கேட்கப்படலாம். உங்கள் சொந்த ஆளுமையைக் கண்டறிந்து, கொடுக்கப்படும் பணிக்கு இவர் சரிப்பட்டு வருவாரா? என்று பொருத்திப் பார்க்கும் நடைமுறை இது. டிஎன்பிஎஸ்சியிலும் சில பணிகளுக்கு ஆளுமைத் தேர்வு இருக்கிறது. ஆளுமைத் தேர்வு பல்வேறு ஆளுமை கூறுகளைக் கண்டறியும் முயற்சியே அன்றி வேறில்லை. முதல் இரண்டும் சிறு, பெரு நதிகள் என்றால், மூன்றாவதான ஆளுமைத் தேர்வானது நதி கடலோடு சேரும் கழிமுகப் பகுதியாக உள்ள ஒரு காயல் போன்றது. சரியான பயிற்சி இருந்தால், இந்த மூன்றையும் மூச்சடக்காமலே நீந்திக் கடக்கலாம்... வா..!

TNPSC EXAMS | வெற்றிக்கான மூன்று சூத்திரங்கள்! | TNPSC போட்டித்தேர்வு

June 03, 2022 0

 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் புதிய பகுதி ‘வெற்றி மேடை உனதே’. வருமான வரித் துறை கூடுதல் ஆணையரும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியாளருமான வீ.நந்தகுமார் ஐஆர்எஸ், நல்ல பல வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை இத்தொடரில் உங்களுக்காக வழங்க உள்ளார். வாசிக்கத் தயாராகுங்கள். இனி, ‘வெற்றி மேடை உனதே!’

- 1 -

போட்டித் தேர்வு எனும் பந்தயக் களத்தில் இருவேறு மாணவர்களை சந்தித்துக்கொண்டே வருகிறேன். இதில் வெல்பவர்களைவிட தோற்பவர்களே அதிகம். அவர்களை தோல்வியாளர்கள் என்பதைவிட வெற்றியைவிட்டு சற்று விலகி நிற்பவர்கள் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தில் தோற்றவர்கள் என்று யாருமே கிடையாது. மனிதனாகப் பிறப்பெடுத்ததே உயிரியல் உலகில் ஓர் உயிரணுவின் வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

அப்படி வெற்றியைவிட்டு விலகி நிற்பவர்களிடம் பேசும்போது அவர்கள் கூறுவது, பொதுவான காரணங்களாகவே உள்ளன. ‘‘பயிற்சி வகுப்புக்குசெல்ல முடியவில்லை, பயிற்சிக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை, சரியான வழிகாட்டுதல் இல்லை, தொடர் பயிற்சி எடுக்க முடியவில்லை, நேரம் போதவில்லை..’’ என்பன போன்ற சுய காரணங்கள் முதல் ரகம்.

‘‘நன்றாகத்தான் படித்தேன், எதிர்பார்த்த மாதிரி வினாத்தாள் இல்லை, என் சூழ்நிலை சரியில்லை..’’ என்பன போன்ற சூழ்நிலை காரணங்கள் இரண்டாவது ரகம்.

இதையும் தாண்டி சிலர் சொல்லும் காரணம் ஒன்று உண்டு. ‘‘நன்றாகத்தான் எழுதினேன், சூழ்நிலையும் ஒத்துழைத்தது. ஆனால் என் கெட்ட நேரம் 2 மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்துவிட்டேன்’’ என்பார்கள்.

100 கேள்விகள் கொண்ட ஒரு தேர்வை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை அதில் 50 கேள்விகளுக்கு சரியாக விடையளித்து, 50 மதிப்பெண் பெற்றால் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று விடலாம் என்றும் வைத்துக்கொள்வோம். தோற்றவரிடம் கேட்டால், ‘‘48 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தேன். ஜஸ்ட் 2 மார்க்குல போய்டுச்சு’’ என்பார்.

இதுபோன்றவர்களின் இலக்கு குறைந்தபட்ச தேவை எதுவோ, அதை நோக்கியே இருந்திருக்கிறது. 50 எடுத்தால் தேர்ச்சி என்றால், அந்த 50-ஐ நோக்கியே பயணிப்பார்கள். 70, 80 என்பது இவர்களது இலக்காக இருப்பதில்லை.

பார்க்கப்போனால், முழு மதிப்பெண் 100 என்றால், நமது இலக்கும் அந்த உச்சபட்ச எல்லையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச எல்லையை உறுதியாக எட்ட முடியும்.

எவ்வளவு கட்-ஆஃப் மதிப்பெண்ணோ, அதை மட்டும் எட்டினால் போதும் என்று நினைப்பவர்களின் அணுகுமுறையில் நிறைய தடைகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். அந்த தடைகளை எப்படி உடைப்பது என்பதை, நீண்ட நாள் போட்டித் தேர்வு பயிற்சி அளித்த என் அனுபவங்களில் இருந்து கற்றுத்தர விரும்புகிறேன்.

எந்தெந்த காரணங்களால் போட்டித் தேர்வில் தோல்விகள் நேர்கிறது? அவற்றை எப்படி களைவது என்பதை சொல்வதுடன், வெற்றிக்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் சொல்லித்தர விரும்புகிறேன்.

வெற்றிக்கான சூத்திரங்கள் மூன்றுவழிகளில் காத்திருக்கின்றன. ஒன்று,கவனக் குவிப்போடு தயாராவது, இரண்டாவது, பயிற்சி எடுத்துக்கொண்டு தயாராவது, மூன்றாவது நாம் படிப்பதெல்லாம் தேர்வில் வருமா என்பதை கணித்து தயாராவது.

ஆக, எந்த ரூபத்திலாவது நாம் வெற்றியின் பக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, போட்டித் தேர்வர்கள் மனதில் கொள்ளவேண்டிய பிள்ளையார் சுழி.

இக்கட்டுரையில் வெற்றிக்கான சிந்தனை, வெற்றிக்கான செயல் இரண்டையும் பார்ப்போம்.

முதலில் போட்டியாளர்கள் பற்றிபார்ப்போம். பொதுவாக, பள்ளிப்பருவத்தில் இருந்தே போட்டி என்று வந்துவிட்டால் குறிப்பிட்ட ஒருசிலரே பெயர் கொடுப்பதை பார்த்திருப்போம். போட்டிக்கென்று பிறந்தவர்கள் போலவே இருப்பார்கள். அவர்கள் பெயர் கொடுக்காவிட்டாலும், ஆசிரியர்களே அவர்களது பெயரை எழுதிக்கொள்வார்கள். 40 பேர் கொண்ட ஒரு வகுப்பில், போட்டிகளில் பங்கேற்பவர்கள் 7, 8 பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

அப்படி வேடிக்கை பார்ப்பவர்கள்கூட, பின்னாளில் படித்து முடித்து வேலைக்கு என்று முயற்சிக்கிறபோது பிறரோடு போட்டி போட்டுத்தான் ஆகவேண்டி உள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுக்கும்போது, பேச்சுத் திறமையுள்ள மாணவனைப் பார்த்து தயங்கி, நாம் பெயர் கொடுக்காமல் ஒதுங்கிப் போவதுபோல, போட்டித் தேர்வுகளிலும் யாரோ ஒரு அறிவாளியோடு நாம் போட்டி போட வேண்டி இருக்குமோ என்று பயந்து, போட்டித் தேர்வுகளை கண்டு தப்பித்து ஓடுகிறோம்.

உண்மையில் இங்கு 3 விதமான போட்டியாளர்களே உண்டு. ஒன்று, அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பித்துவிட்டு, பின்பு ஏறத்தாழ மறந்துவிட்டு கடைசி நாளில் பெயருக்கு படித்துவிட்டு தேர்வுக்கு செல்பவர்கள்.

இரண்டாவது, விண்ணப்பித்தபிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து தயாராகிறவர்கள்.

மூன்றாவது, விண்ணப்பித்த நாளில் இருந்தோ, அல்லது அதற்கும் முன்பிருந்தோ, தமது எண்ணம், செயல், நேரம் அனைத்தையும் அர்ப்பணித்து தேர்வுக்கு என்றே தயாராகும் ஒரு சிறிய குழுவினர்.

இந்த மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. இவர்கள் எல்லாம் கவனக் குவிப்போடு கடமையாற்றுபவர்கள்.


June 2, 2022

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர்... அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

June 02, 2022 0

 காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலான மக்கள் சூடாக ஒரு கப் டீ அல்லது காஃபி அருந்துவதை விரும்புகின்றனர். வேறுசிலர் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கின்றனர். ஆனால், அதிகாலையில் நம் சோம்பலை முறித்து, நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு கப் வெந்நீர் போதுமானது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



அதே சமயம், காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துபவர்களுக்கு, அதீத அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் இருக்க கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நலன்கள் கிடைக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ஆயுர்வேத மருத்துவர் தீக்‌ஷா பாவ்ஸர், வெந்நீர் அருந்துவதன் பலன் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக பல கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:

காலையில் தினமும் முதல் வேலையாக வெந்நீர் அருந்துவதால் உங்களுக்கு ஒருபோதும் கவலை ஏற்படாது. ஆனால், அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனை இருந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். காலை நேரத்தில், குறிப்பாக பயணம் செய்யும் காலத்தில் வெந்நீர் அருந்தினால், உடலில் நல்ல மாற்றங்கள் தென்படுவதை நீங்கள் உணர முடியும்.

* நம் மலக்குடலை சுத்தம் செய்யும் பணியை எளிமையாக்குகிறது.
* உங்கள் பசி உணர்வு அதிகரிக்கும்.
* வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
* நமது சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது.
* இது மட்டும் அல்லாமல், பயணத்தின் போது நாம் சாப்பிடும் அதிகப்படியான உணவுகளால் நமது உடல் எடை அதிகரித்து விடாமல் தடுக்கிறது.

எந்த அளவு சூடாக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் :

உங்கள் உடல் வாகு அல்லது தோஷ வாகுவை பொறுத்து குடிநீர் எந்த அளவுக்கு சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது..


* உடலில் கபம் மிகுதியாக இருந்தால் நீங்கள் மிகுந்த சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இது கபத்தால் ஏற்படும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
* உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், வெந்நீரை ஆற வைத்து உங்கள் உடல் வெப்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வாதம் மிகுதியாக இருப்பவர்கள் சூடாகவும் இல்லாமல், குளுமையாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் அல்லது சீராக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் காலையில் வெந்நீர் குடிப்பது உதவியாக இருக்கும். உடலில் வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக இது இருக்கும்.

June 1, 2022

World Milk Day 2022: மறந்து கூட பாலுடன் இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க

June 01, 2022 0

 ஒவ்வொரு வருடமும் உலக பால் தினம் 2022 ஜூன் 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் பாலில் காணப்படுகின்றன, மேலும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.



அது எலும்புகளை வலுப்படுத்தும் அதோடு மட்டுமல்லாமல் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் வளப்படுத்துகிறது. அது மட்டுமன்றி மன சோர்வு மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

இந்த நிலையில் பாலின் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி பாலுடன் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் நம் உடலுக்கு தீங்கு விளையக்கூடும். அத்தகைய சில உணவை பற்றி தான் நாம் இன்று காண உள்ளோம்.

மீனுடன் பால்
பொதுவாக பால் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அதேபோல் மீன் சாப்பிடுவதன் மூலம் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே இந்த இரண்டு உணவையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் சமநிலையின்மையை உருவாக்கும், மேலும் இவை இரண்டிலும் மாறுபட்ட தன்மைகள் இருப்பதால் ஒன்றாக சாப்பிடும் போது வயிற்று வலியை ஏற்படுத்தும். உணவுக்கு விஷத் தன்மையை கொடுக்கும்.

வாழைப்பழம்-பால்
பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவதால் தசைகள் வலுவடையும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இந்த கலவையானது அஜீரணம் மற்றும் வயிற்றில் கனத்தை ஏற்படுத்தும். பால் மற்றும் வாழைப்பழம், இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே வாழைப்பழத்தை பாலுடன் ஒன்றாக உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்தும்.

சிட்ரஸ் பழங்களுடன் பால்
சிட்ரஸ் வகை பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு, பால் குடித்த பிறகும் அல்லது பால் குடிப்பதற்கு முன்பாகவும் குறிப்பு பழங்கள் அல்லது குறிப்பான சுவை கொண்ட பொருட்களை உண்ணக் கூடாது. அவ்வாறு செய்தால் தோல் பிரச்சினைகள் ஏற்படும்.அதன்படி இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையும் அதிகரிக்கும். இதனால், வாந்தி, பேதி பிரச்னையும் ஏற்படும். எனவே தனித்தனியாக சாப்பிடவும்.

முள்ளங்கி மற்றும் பால்
முள்ளங்கி சாப்பிடுவதால் எந்த வித தீமையும் பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தில் பால் குடித்து சிறிது நேரத்தில் முள்ளங்கி சாப்பிட கூடாது என்று உள்ளது. முள்ளங்கி சாப்பிடுவதால் எந்த வித தீமையும் பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தில் பால் குடித்து சிறிது நேரத்தில் முள்ளங்கி சாப்பிட கூடாது என்று உள்ளது.

May 30, 2022

உஷார்... தினசரி நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் இதய நோய்க்கு காரணமாம்..!

May 30, 2022 0


பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நம் உடலின் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்து இருக்கிறது. தினந்தோறும் கண்ணில் தென்படும் பல வகையான உணவுப் பொருட்களை நாம் வாங்கி சாப்பிடுகிறோம். பிரச்சனை என ஒன்று வரும் வரையில் நாம் எதைப் பற்றியும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நோய் வந்த பிறகு, நாம் எவ்வளவு தான் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முயற்சி செய்தாலும் அதில் போதுமான பலன் கிடைப்பதில்லை. பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாவுச்சத்து உணவுகள் : காலை நேரத்தில் நல்ல சுவையான உணவை வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். குறிப்பாக, அரிசி உணவு, கோதுமை உணவு போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்கிறோம். இதனுடன் சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது. ஆனால், இவை இரண்டுமே உடல் நலனுக்கு ஆபத்தானவை ஆகும்.

பழ ஜூஸ்கள் : ஆம், கோடை காலத்தில் நம் தாகத்தை தணிக்க பழங்களின் பிரஸ் ஜூஸ் குடிப்பதை நாம் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெரும்பாலான கடைகளில் இத்தகைய ஜூஸ்களில் நிறைவூட்டப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது உடல் நலனுக்கு தீங்காகும். ஜூஸ்களை வீட்டிலேயே தயார் செய்து அருந்த வேண்டும்.

சைனீஸ் உணவுகள் : நாள் முழுவதும் வேலை செய்து, களைப்பு அடைந்த பிறகு இரவு உணவாக சைனீஸ் வகை உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். பிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உடன் மஞ்சூரியன் சாப்பிடுவது உங்கள் விருப்பத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால், அதில் அதிக அளவு உப்பு, மசாலாக்கள், சாஸ் போன்றவை சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உருளைக்கிழங்கு சிப்ஸ் : டிவி பார்க்கும் போது அல்லது செல்ஃபோன் பார்க்கும்போது பலருக்கும் சிப்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது சுவையாக இருந்தாலும் இதய நலனை பாதிக்கும்.

தக்காளி கெட்சப் : சமோசா உடன் தக்காளி சாஸ் எனப்படும் கெச்சப் எடுத்துக் கொள்வது உங்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம். ஆனால் கெட்சப்களில் உள்ள அதிகளவிலான சோடியம் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

வெள்ளை பிரட் : நீங்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடும் பிரட் மூலமாக உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஆசிட் ரிஃப்லெக்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.

May 26, 2022

எவ்வளவு காஃபி குடிக்கிறோம் என்பதை ஏன் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்..?

May 26, 2022 0

 ஒரு அருமையான காலை வேளையில் ஒரு கப் சூடான காஃபியை குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. இப்படி கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே பிடித்த காஃபியின் வரலாற்றில் உண்மையியேயே குழப்பங்கள் உள்ளன. ஏனெனில் காஃபி எப்படி அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது யாருக்குமே சரியாக தெரியாது, இருப்பினும் காஃபியின் தோற்றம் குறித்த பல வகையான "கதைகளுக்கு" மட்டும் இங்கே பஞ்சேமே இல்லை.




எத்தியோப்பிய பீடபூமியில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவர் ஆன கல்டி தான், முதல் முதலில் காஃபி பீன்களின் "திறனை" கண்டுபிடித்தார் என்கிற ஒரு கதை உள்ளது. ஒரு குறிப்பிட்ட மரத்தின் பழங்களை சாப்பிட்ட பிறகு, தனது ஆடுகள் இரவில் தூங்க விரும்பாத அளவுக்கு ஆற்றல் மிக்கதாக மாறியதைக் கவனித்த பிறகே கல்டி காஃபி பீன்களை கண்டுபிடித்தார் என்கிறது அந்த கதை!

இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான புள்ளி என்னவென்றால் - ஆடுகள் தூங்கவில்லை என்பதே ஆகும். ஆம், அது உண்மை தான் காஃபி தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.  அதுமட்டுமல்ல அதிகப்படியான காஃபின் பலவகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதை நாங்கள் சொல்லவில்லை காஃபி குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகப்படியான காஃபி உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்:

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்:

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கப் 'எஸ்ப்ரெசோவை' குடிப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். குறிப்பாக இதன் கீழ், பெண்களை விட ஆண்களுக்கே கொலஸ்ட்ராலின் அளவு வலுவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கவலையை அதிகரிக்கும்:

எஸ்ப்ரெசோவை அதிகமாக உட்கொள்வது நடுக்கத்தையும், சங்கடத்தையும் கூட ஏற்படுத்தலாம், இவை பொதுவாக பதட்டத்தின் அறிகுறிகளாகும். சிலருக்கு, காபி குடிப்பதால் சக்தி அதிகரிக்கும், ஆனால் நீங்கள் ஏற்கனவே கவலையாக உள்ளீர்கள் என்றால், இரண்டாவது கப் காஃபியை குடிப்பதற்கு முன் சற்றே சிந்திக்க வேண்டும்.

ஹார்மோன் மாற்றம்:

அதிகப்படியான காஃபின் மனித உடலை அதிக விழிப்புடன் வைக்கலாம், அது சில ஹார்மோன் மாற்றம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுவது பெண்களுக்கு ஆபத்தானது.

தூக்கமின்மை :

நமக்கு தூக்கம் வரும்போதெல்லாம், நம்மை எழுப்பும் சக்தி காஃபிக்கு உள்ளது. ஆக அதை அதிகமாக உட்கொண்டால் தூக்கம் பாதிக்கப்படும். காஃபியில் குறைந்த அளவிலான அல்லது மிதமான அளவிலான காஃபின் இருந்தால் அது நுகர்வோரின் தூக்க சுழற்சியை பாதிக்காது. அப்படியாக ஒரு நாளைக்கு ஐந்து கப் காஃபி வரை குடிப்பது பாதுகாப்பானது மற்றும் ஆரோக்கியமானது என்று நிரூபிக்கும் ஆய்வுகள் உள்ளன. ஆனாலும் காஃபியின் அதிக நுகர்வு பற்றி நிறைய கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில்கள் உள்ளன. காஃபி மட்டுமல்ல தேநீர், மதுபானம் என எதுவாக இருந்தாலும் எந்தவொரு பானத்தையும் மிதமாக உட்கொள்வதே நல்லது.