தூங்கும் - விழிக்கும் நேரம்:
தினமும் இரவில் ஒரே நேரத்தில் தூங்கி காலையிலும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். அதனை கடைப்பிடிக்கும்போது எழுந்திருக்க வேண்டிய நேரத்தை உடல் அறிய உதவும். ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.
சரியான சூழல்:
படுக்கையறை சூழலை உறங்குவதற்கு ஏதுவாக அமைக்க வேண்டும். அது குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், சத்தமில்லாமலும் அமைந்திருக்க வேண்டும். இவை நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.
காபியை தவிர்க்கவும்:
காபி, டீயில் கலந்திருக்கும் காபின் விழிப்புடன் வைத்திருக்கும் தன்மை கொண்டது. எனவே, தூங்க செல்வதற்கு முன்பு டீ மற்றும் காபியை தவிர்க்கவும். மேலும், தூங்குவதற்கு முன்பு எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும்.
நீல நிற ஒளியை தவிர்க்கவும்:
ஸ்மார்ட்போன், டி.வி. லேப்டாப் போன்ற எந்த வகையான மின்னணு சாதனங்களையும் தூங்குவதற்கு முன்பு பார்க்கக்கூடாது. இந்த சாதனங்கள் அனைத்தும் நீல ஒளியை வெளியிடுகின்றன. இது தூக்கத்தை பாதிக்கச்செய்யும் தன்மை கொண்டது.