Agri Info

Adding Green to your Life

July 6, 2022

Drones for Agricultural Development - Free Online Training Programme by MANAGE- Register Now

July 06, 2022 0

 

1

Trg Prg No. & Year

:

161, 2022-23

2

Title

:

Drones for Agricultural Development*

3

Dates

:

11/07/2022 to 15/07/2022

4

Venue

:

Online (No Fee), MANAGE

5

Objectives

:

The Objective of the Training program is to create awareness about Drones in general and Role of Drones in the Agricultural Sector. The program covers in detail about various aspects of the Drones in Agriculture. At the end of the training program, the participants will be able to understand the uses of drones and impact of technology and drones in the Agriculture Sector.

6

Content

:

The course content includes but not limited to 

● Introduction to Drones & Robotics 

● Drones in Agriculture – Opportunities 

● Challenges for Drones in Agriculture 

● Hands on Training for the participants 

● AI and ML usage in Drones – Role of Data Analytics 

● Drone basics – mapping – Analysis – Measurements 

● Drones as Spraying bots 

● Drones for Seed Distribution

7

Methodology

:

The course includes practical aspects of the drones and the sessions will be by Startups operating Drones in Agriculture sector, R & D professionals and Resources persons from Reputed Institutions

8

To Whom

:

Extension professionals, 

Students, 

Startups founders, 

Agriculture Ecosystem enablers, 

Agri Business Professionals, 

FaaS companies etc




முளைக்கட்டிய தானியங்களை எடுத்துக்கொள்வதால் என்ன பயன்கள்...?

July 06, 2022 0

 ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.


















முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேகவைத்து சாப்பிடலாம் .

சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள். அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.

முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது. ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது.

மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது. முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம். முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.

அன்றாடம் தோப்புகரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

July 06, 2022 0

 நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால் நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையில் தினமும் அதை செய்கிறோம்.




















தோப்புகரணம் போட செய்வதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும். தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது. மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.

இந்த எளிமையான உடற்பயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.

முதலில் கால்களுக்கு இடையில் ஒரு சான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு, மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும். அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும். பிறகு நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை போடலாம்.

குழந்தையின் சிந்தனை திறனை அதிகரிக்க கேள்வி கேளுங்கள்...

July 06, 2022 0

 நாம் நம் குழந்தைகளை அறிவாளிகளாக, திறமை உள்ளவர்களாக, புத்தி கூர்மை உடையவர்களாக உருவாக்க ஆசைப்படுகின்றோம். அது சரிதான். அதற்காக நல்ல பள்ளியில் சேர்க்கின்றோம். 

செஸ் போன்ற விளையாட்டுகளில் சேர்க்கின்றோம். கூடுதல் நேர வகுப்புகளில் சேர்க்கின்றோம். கூடவே நாமும் அலைந்து, விழித்து, நொந்து நூலாகி, பின் மதிப்பெண் வரும் பொழுது அவர்களைத் திட்டுகின்றோம். 

ஆனால் நாம் செய்யும் முயற்சி அவனை ஒரு தன்னம்பிக்கை உடைய, சிந்திக்கும் திறன் கொண்ட, உலகை அறிந்து எதிர் கொள்ளும் மனிதனாக உருவாக்குகின்றதா? என்றால் சற்று யோசிக்க வேண்டி உள்ளது.

பிறந்த குழந்தை முதல் புத்தகம் வைத்து பல கதைகளை இன்றைய நாகரீக உலகத்திற்கேற்ப கற்றுக் கொடுக்கும் தாய்மார்கள் ஏராளம். 

3-4 வயதில் குழந்தை புரிந்து பேச ஆரம்பிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு சில கேள்விகளைக் கேட்டு அக்குழந்தையின் சிந்தனைத் திறனையும் கூட்டலாமே. உதாரணமாக இந்த கதையின் முக்கிய கதாநாயகன் இவ்வாறு எதிரியினை வென்றான். 
நீ இந்த ஹீரோவாக இருந்தால் எந்த முறையில் எதிரியினை வெல்வாய் என்று என்றாவது கேட்டிருக்கிறோமா? அக் குழந்தை எந்த வயதாயினும் சிந்திக்க வைத்திருக்கிறோமா? அதனை எழுதச் சொல்லி படித்திருக்கிறோமா? இல்லையே!

உலகத்தினையே சிறு பெட்டிக்குள் கொண்டு வந்து உலக நாடுகளைப் பற்றி பேசியிருக்கின்றோமா? பலர் செய்திருக்கலாம். வாய்ப்பிருந்தால் நீ எங்கு வசிக்க விரும்புகின்றாய்? ஏன்? என கேட்டிருக்கின்றோமா? 18 வயது ஆனாலும் கொஞ்சம் அம்மா புடவை தலைப்பும், அப்பாவின் பாதுகாப்பும் தேடும் பிள்ளைகளாகத்தான் நம் நாட்டு பிள்ளைகள் உள்ளனர். இத்தகைய கேள்விகள் உலகினைப் பற்றி அவர்களை அறிய வைக்கும். வீட்டில் ஒரு அவசரம், விபத்து, ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி கையாள வேண்டும்? எந்தெந்த எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என சொல்லிக் கொடுத்திருக்கின்றோமா? வளரும் குழந்தைகளின் மனதில் அவனுக்குப் பிடித்த பிரபலம் யார் இருக்கின்றார்? என்ன காரணத்திற்காக அவரை பிடிக்கும் என உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை தெரிந்து கொண்டவர்களா? இல்லையே!

வாழ்க்கையில் 40-50 வயதினை கடந்தவர்களாகிய நாம் எந்த கால கட்டத்தில் துணிச்சலாக, தன்னம்பிக்கையுடன் ஒரு சவாலை, ஒரு சோதனையை ஏற்று சாதித்தோம் என எண்ணி பார்த்தோமா? அதனை இன்னும் கூடுதல் சிறப்பாக செய்திருக்க முடியுமா? மன கலக்கம் எப்படி கீழே தள்ளியது என்று ஆராய்ந்தால் ஒரு முறை உங்கள் பிள்ளைகளிடம் (ஓயாமல் நான் கஷ்டப்பட்டேன், உழைத்தேன் என்று சொல்லி நச்சரிக்க வேண்டாம்) எடுத்துச் சொன்னால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். உங்கள் மீதான மதிப்பும் உயரும். 

இளம் வயது குழந்தைகளிடம் அவர்கள் நாட்டின் தலைவராக ஆனால் நாட்டிற்காக என்னென்ன செய்வார்கள் என்று கேலி செய்யாது கேட்டிருக்கின்றீர்களா? உங்களைப் பற்றி உங்களுக்கு பிடித்தது என்ன என்ற கேள்வியினை முதலில் உங்களிடமே நீங்கள் கேட்டுப் பாருங்கள். நம் திறமை என்ன என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நம் லட்சணம் நமக்கு புரியும். அடுத்தவரிடம் சதா குறை காண்பது வெகுவாய் குறையும். முன் பின் அறியாதவர் பிள்ளைகளை அணுகும் பொழுது என்ன செய்ய வேண்டும் என விவரமாக நன்கு மனதில் பதியும் அளவு சொல்லிக் கொடுத்திருக்கின்றீர்களா?


ஒரு நண்பனுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என உங்கள் பிள்ளைகள் விரும்புகின்றார்கள் என தெரிந்து கொள்ளுங்கள். கல்லூரி படிப்பை முடித்தாலும் கூட இனிய நாட்களாக அவர்கள் படிக்கும் காலத்தில் இருந்தது எது? என்று கேளுங்கள். வகுப்பில் ஆசிரியர் என்றால் எவ்வளவு மரியாதையுடன் அணுக வேண்டும், பண்போடு பேசி கற்க வேண்டும் என உருட்டி மிரட்டி பிள்ளைகளிடம் வலியுறுத்துங்கள்.

 பொங்கல், தீபாவளி, இப்படி எந்த விடுமுறையினை அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்? டி.வி. முன் அமர்வதற்காக மட்டும் தானா? அல்லது தன் உறவுகளை சந்திக்கும் மகிழ்ச்சியால் விரும்புகிறார்களா? என்று தெரிந்து கொள்ளுங்கள். யாரை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்? உங்களுக்கு பிடிக்காத நபராக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் என்ன உண்மைகள் இருக்கின்றது என்பதனை உண்மையாய் அறிந்து கொள்ளுங்கள். 
சிலர் அவர்களுக்கு பிடித்த சிறுவயது பொம்மையினை தொடர்ந்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதன் ஆழமான காரணத்தினை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் மீது வீண்பழி, தவறு சுமத்தப்பட்ட போது நீங்கள் எத்தனை வேதனையினை அனுபவித்தீர்கள். அதனை சற்று யோசித்தால் உண்மை தெரியாமல் பிறர் மீது வீண் பழி போட மாட்டீர்கள். உங்களுக்கு பிடிக்கும் இசை, அதன் தன்மை இது கூட உங்கள் மனநிலையினை காட்டும் அளவுகோள்தான். ஒரு ஹீரோ என்பவர் உங்கள் பிள்ளைகளின் மனதளவில் என்ன எண்ணங்களாய், கருத்தாய் இருக்கிறார் என என்றாவது கேட்டுள்ளீர்களா? இங்கு ஹீரோ என குறிப்பிடுவது வாழ்வின் ஹீரோவினை பற்றியதாகின்றது. வாழ்நாளில் நாம் எதற்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என்று எண்ணிப் பார்க்கின்றோமா? முதலில் நம் பெற்றோர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்கின்றோமா என்று நினைத்துப் பாருங்கள். பல நன்றியாய் இருக்க வேண்டிய விஷயங்களை நாம் நினைத்து பார்க்கின்றோமா?
 * நீங்கள் ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது யாருடன் பேசுவீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நமக்கு ஒருவராவது இருக்கின்றார்களா என்று நினைத்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் பிரச்சினை என வரும்பொழுது அவர்கள் உங்களது குடும்பத்தில் யாரை அணுகுகின்றார்கள் என்று கவனியுங்கள். இது உங்கள் பிள்ளைகளை மேலும் புரிந்து கொள்ள உதவும்.
 * சதா எதனைப் பற்றியாவது நீங்கள் கவலைப்படுகின்றீர்களா என்று உங்களையே ஆராய்ந்து கொள்ளுங்கள். அதுபோல உங்கள் பிள்ளைகள் எந்நேரமும் எந்த பயத்தினை, கவலையை மனதில் கொண்டுள்ளார்கள் என்று கவனியுங்கள். பணம் சேமிப்பின் அவசியம் பற்றி உங்கள் பிள்ளைகள் எவ்வளவு புரிந்து கொண்டு உள்ளார்கள்? ஆரோக்கியமான உணவு என்பது அவர்களின் மனதில் எந்த அளவு பதிந்து உள்ளது என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
 * திடீரென அதிக பணம் வழியில் கண்டெடுத்தால் எப்படி நீங்களும், உங்கள் பிள்ளைகளும் சிந்திப்பீர்கள்? பேசிப் பாருங்கள். இதில் இருக்கும் ஆபத்தினையும் அவர்கள் உணர வேண்டும். உதாரணம் 100 ரூபாயில் 99 ரூபாயினை திருப்பிக் கொடுத்தாலும் ஒரு ரூபாயினை இவன் எடுத்து விட்டானோ என்ற சந்தேகம் தான் தலை தூக்கும். எனவே முதலில் யாருடைய பணமும் நமக்கு வேண்டாம். இன்றைய சின்ன ஆசை நாளைய பெரிய ஆசையினைத் தூண்டி ஒருவரை அழிக்கும். முறைப்படி ஒப்படைப்பது நமக்கு புகழ் தர வேண்டாம். இகழ் இல்லாமல் இருந்தால் போதும் என்பதனை புரிய வைக்க வேண்டும்.
 * நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எந்த விதத்தில் எந்த விஷயத்தில் என சற்று அமைதியாய் யோசித்துப் பாருங்கள். பிள்ளைகளுக்கு பிடிக்காத பிரிவு பாடம் எது? அதனை சரி செய்ய பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? நமக்கு பிடித்த எழுத்தாளர் இவர் என சொல்லும் அளவு பல புத்தகங்களை நாம் படித்து இருக்கின்றோமா?
 * நேர்மை என்பதன் பலத்தினை பிள்ளைகள் உணர்ந்து செயல்படுத்த முனைகின்றார்களா? இல்லையெனில் அதனை அவர்களே உணர எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்னமும் இப்படி பல கேள்விகள் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளலாம். 

நம் பிள்ளைகளிடமும் கேட்கலாம். உண்மையில் முழு முயற்சியுடன் இதனை செய்து பாருங்கள். வாழ்வை பற்றிய நம் குறுகிய எண்ண ஓட்டம் நிச்சயமாய் மாறும். நம்மை நாமே அதிகமான தீய எண்ண ஓட்டங்களில் இருந்து சுத்தம் செய்து கொள்வோம். இன்று பிள்ளைகளை வளர்ப்பதற்குள் பெற்றோர் பெரும் பாடு பட்டு விடுகின்றனர். உயிரை கொடுத்து செய்யும் எதனையும் தன் பிள்ளைகள் உணரவில்லை என கண்ணீர் சிந்துகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் சக்திக்கு மீறிய பெரும் பள்ளியில் என் பிள்ளை படிக்க வேண்டும். அவன் நினைப்பதெல்லாம் நான் வாங்கி கொடுத்து விட வேண்டும். 

நான் ஆசைப்படும் படி படிப்பு, வேலை, வாழ்வு என்று அவன் பெற வேண்டும் என்ற கண் மூடித்தனமான அதிக அன்பு தான். அன்பு என்பது அமைதியான அருவி போல் இருக்க வேண்டும். கட்டுக்கடங்கா காட்டு வெள்ளம் போல் இருக்க கூடாது. அவர்களுக்கும் தன் வாழ்வை தன் சுய விருப்பப்படி முறையாய் அமைத்து கொள்ள உரிமை உண்டு. அது தடம் மாறி செல்லாது வழிகாட்டியாக அமைய செய்வதும், நல்லவைகளை அடையாளம் காட்டி கொடுப்பது மட்டும் தான் பெற்றோரின் முக்கிய பொறுப்பு. இந்த கால கட்டம் பல கல்லூரிகளுக்கு 'சீட்' தேடி பெற்றோர் அலைகின்றனர். வருவாய் பெற்றுத் தரும் அநேக கல்வி படிப்புகளை பலர் ஏனோ ஒதுக்குகின்றனர். தானும் மனம் நொந்து பிள்ளைகளும் சில ஏமாற்றங்களை சந்திப்பதால் தன்னம்பிக்கை இழக்கின்றனர். வருங்கால சமுதாயம் இப்படி உருவாக கூடாது. 

நம்மை நாமே பல கேள்விகளை கேட்டுக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பல வெளிநாடுகளில் பல கேள்விகள் மூலம் பிள்ளைகளை சிந்திக்க செய்து அவர்களின் தவறுகளை அவர்களே திருத்தி கொள்ள வழி காட்டுகின்றனர். அவைகளை படிக்க நேர்ந்த பொழுது நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சுயமாய் சிந்தித்து அவர்கள் கால்களில் அவர்கள் நிற்க இத்தகு கேள்விகள் உதவுமே என்ற ஆர்வத்தினால் உருவான ஒரு துளியே இந்த கட்டுரை ஆகும். ஆக வாழ்வில் இதுபோல் சிந்தித்து செயல்பட்டு வெற்றியாளராக வாழ்வோம்.


July 5, 2022

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த உடற்பயிற்சி போதும்

July 05, 2022 0

 

உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிப்பது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதால், பிற்காலத்தில் அதிக பிபி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வரலாம். 

அதே சமயம், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது, ​​பல அறிகுறிகள் ஆரம்பத்திலிருந்தே தெரிய ஆரம்பிக்கும். 

அதன்படி அதிக கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகும். மறுபுறம், உடலில் அதிகரித்த கொழுப்பைக் குறைக்க, உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்யலாம், கொலஸ்ட்ராலைக் குறைக்க நீங்கள் என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். 

உடலில் 2 வகையான கொலஸ்ட்ரால் உள்ளது

உங்கள் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. முதலில் நல்ல கொலஸ்ட்ரால் இரண்டாவது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஆரம்பித்தால், மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்தப் பயிற்சிகளைச் செய்யுங்கள்

சுறுசுறுப்பான நடைபயிற்ச்சி
உடலில் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் குறைக்க, தினமும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் குறையும். அதே நேரத்தில், இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் இது குறைக்கிறது.

ரன்னிங் பயிற்சி
உடலில் அதிகரித்த கொழுப்பைக் குறைக்க ரன்னிங் பயிற்சி மிகவும் நன்மை பயக்கும். தினமும் சில கிலோமீட்டர்கள் ஓடினால், எடை மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டையும் குறைக்கலாம்.

சைக்கிள் ஓட்டவும்
கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உடலில் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்கவும் தினமும் சைக்கிள் ஓட்டலாம். ஆம், தினமும் சைக்கிள் ஓட்டுவது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் நன்மை பயக்கும். இதற்காக தினமும் சில கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டலாம்.

யோகா
யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் அதிகரித்த கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால், தினமும் யோகா செய்யுங்கள். இதற்காக 40 நிமிடங்கள் யோகா செய்யலாம். அதே சமயம் யோகாவில் சூரிய நமஸ்காரம், கபால்பதி போன்றவற்றையும் செய்யலாம்.

இஞ்சி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க வீட்டு மசாலாவை எடுத்துக் கொள்ளலாம், அதன்படி சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் இஞ்சி எல்டிஎல் ஐ குறைக்க உதவும். 


 Click here to join whatsapp group for daily health tip

எச்சரிக்கை: இந்த விஷயங்களால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்

July 05, 2022 0

 



உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் உணவுகள்: சிறுநீரகங்கள் உடலின் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான பகுதியாகும். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். உடலில் இருந்து கழிவுகள் அல்லது நச்சுகளை அகற்றுவது சிறுநீரகத்தின் செயல்பாடாகும். இது சிறுநீர் உற்பத்தியுடன், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும் ஹார்மோன்களையும் சுரக்கிறது.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீரகத்தை நேரடியாக சேதப்படுத்தும் சில உணவுகள் உள்ளன. தவறான உணவுப் பழக்கம் மற்றும் குழப்பமான வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரக தொற்று, சிறுநீரக கல், சிறுநீரக புற்றுநோய் போன்ற பல வகையான பிரச்சனைகள் சிறுநீரகத்தில் ஏற்படுகின்றன.

சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன?

சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சிறுநீரக பிரச்சனை கண்டறியப்பட்டவர்கள், தங்கள் உணவில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சிலருடைய பிரச்சனைகள் கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்டு, அதன் காரணமாக அவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்

- பசியிழப்பு

- உடல் வீக்கம்

- அதிக குளிர்

- தோல் தடிப்புகள்

- சிறுநீர் கழிப்பதில் சிக்கல்

- எரிச்சல்

சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை

மது: 

அதிகமாக மது அருந்துவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும். அது உங்கள் மூளையை பாதிக்கலாம். ஆல்கஹால் உங்கள் சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும்.

உப்பு: 

உப்பில் சோடியம் உள்ளது. இது பொட்டாசியத்துடன் சேர்ந்து, உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது. ஆனால் உப்பின் அளவு உணவில் அதிகமானால், அது திரவத்தின் அளவை அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீரகத்துக்கு சேதம் விளைகிறது. 

பால் பொருட்கள்: 

பால், பனீர், போன்ற பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லதல்ல. பால் பொருட்களில் புரதங்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகங்களை சேதப்படுத்தும். பால் பொருட்களிலும் கால்சியம் அதிகம் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும். எனவே, அவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

சிவப்பு இறைச்சி: 

சிவப்பு இறைச்சியில் புரதம் மிகவும் அதிகமாக உள்ளது. புரதம் நம் உடலுக்கும் அவசியம். சிறுநீரகத்தை பாதிக்கும் இத்தகைய இறைச்சி ஜீரணிப்பது நம் உடலுக்கு கடினமாகிறது.

Click here to join whatsapp group for daily health tip


July 4, 2022

ஜங்க் ஃபுட் சாப்பிட தோன்றினால் இந்த 3 உணவு பொருட்களை சாப்பிடுங்க... ஆசையே போய்விடும்...

July 04, 2022 0

 ஃபாஸ்ட்டான இந்த வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதும் பாஸ்ட் ஃபுட் அயிட்டங்களைத் தான். இப்போதெல்லாம் வாழை இலை போட்டு, சாதம், குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், தயிர், பாயாசம் என்றெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிடவும், சமைக்கவும் யாருக்கும் நேரம் கிடையாது. எனவே போகிற போக்கில் கிடைக்க கூடிய பாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்கள் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கலோரிகள் நிறைந்த, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது இன்றைய இளைய தலைமுறையினரிடையே பிரபலமாகிவிட்டது. பசிக்கு சாப்பிடாமல், ருசிக்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற அல்லது நொறுக்குத் தீனிகளில் நிறைவுற்ற கொழுப்புகள், அதிக சோடியம் மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் நிறைந்துள்ளது, இது நீரிழிவு, இருதய நோய், உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு நம்மை அதிக வாய்ப்புள்ளது.

ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் ஆசை மன அழுத்தம், உணர்ச்சிவசப்பட்ட உணவு (Emotional Eating) மற்றும் உணவு மகிழ்ச்சி (food euphoria) போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணம், இது நம் வசதிக்கேற்ப கிடைப்பது.

ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கான முதல் படி, ஜங்க் ஃபுட் சாப்பிட தூண்டும் ஆர்வத்தை கட்டுப்படுத்துவது ஆகும். தவிர, ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை வைத்திருப்பது மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்களுடன் இருப்பதும் முக்கியமானது. ஜங்க் ஃபுட் சாப்பிட தோன்றும் போதெல்லாம் நீங்கள் உண்ண ஏற்ற மூன்று மாற்று உணவுகள் இதோ...

1. பாதாம்:

பாதாம் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது மற்றும் பச்சையாகவோ, ஊறவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். அவற்றை எப்போதும் வீட்டில் சேமித்து வைக்க முடியும். சந்தேகத்திற்கு இடமின்றி, ஜங்க் ஃபுட்டுக்கு பதிலாக பாதாம் ஒரு ஆரோக்கியமான நொறுக்குத்தீனி என்பதில் சந்தேகமில்லை.

- பாதாமில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது மற்றும் நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

- வைட்டமின் ஈ (ஆல்ஃபா-டோகோபெரோல்) தோல் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் மற்றும் வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

லீட்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில், பாதாம் சாப்பிடுவது மற்ற கொழுப்பு நிறந்த உணவுகளை உட்கொள்வதற்கான மறைமுக விருப்பத்தை கட்டுப்படுத்த வழிவகை செய்வதாகவும், எடை மேலாண்மைக்கு சிறந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


2. பழங்கள்:

வாழைப்பழங்களில் ஆரம்பித்து சீசனுக்கு கிடைக்கும் தர்பூசணி பழங்கள் வரை பலவகையும் மனிதனின் ஜங்க் ஃபுட் ஆசைக்கு கடிவாளம் போடும் அளவிற்கு கலர்ஃபுல்லாகவும், சுவையாகவும் இருக்க கூடியவை. மேலும் பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிரம்பியுள்ளன.

பெர்ரிகளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் குறைந்த சர்க்கரை உள்ளது. மறுபுறம், வாழைப்பழம் வைட்டமின் பி6, வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக செயல்படுகிறது. ஆப்பிள்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும். வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கும் பாலிஃபீனால்களும் உள்ளன.

3. யோகர்ட் (தயிர்):

சாதாரண தயிர் நமது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு நன்மை பயக்கும் புரதம் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது தவிர, புரோபயாடிக் பாக்டீரியா உள்ளடக்கம் இருப்பதால், யோகர்ட் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தயிர் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் அதன் மூலம் திருப்தியான உணர்வை வழங்குகிறது, இது நமது ஜங்க் ஃபுட் சாப்பிட வேண்டும் என்ற ஆசைக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.


Click here to join whatsapp group for daily health tip 

66 நாட்களுக்கு இந்த 12 விஷயங்களை பின்பற்றினால் நோயின்றி நீண்ட காலம் ஜம்முனு வாழலாம்...

July 04, 2022 0

 நம் உடல்நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நம் வாழ்வியல் பழக்க, வழக்கங்களை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வதே எளிய மற்றும் சக்தி வாய்ந்த உத்தியாகும். தினசரி நீங்கள் கடைப்பிடிக்கும் சில தவறான வாழ்வியல் பழக்கங்களால் உங்கள் உடல் நலன் மட்டுமல்லாது மனதில் கவலை அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் மற்றும் உணவு சாப்பிடுவதில் மாற்றங்கள் போன்றவை உண்டாகும்.

நம்மிடம் உள்ள தவறான பழக்க, வழக்கங்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் மாற்றிவிட இயலாது என்றாலும்கூட சிறுக, சிறுக நமது பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்வதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு படிநிலையாக அமையும்.

தூங்கி எழுந்த பிறகு..

ஒரு நாள் பொழுதை நீங்கள் எப்படி செலவிடப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் காலையிலேயே தெரிய தொடங்கி விடும். காலையில் நாம் கடைப்பிடிக்கும் புதிய பழக்க, வழக்கங்கள் நம் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும்.

நீல வானம் மற்றும் உயர்வான எண்ணம் :

நாம் தூங்கி எழுந்த உடனேயே சற்று புதுமையான காற்றை சுவாசிக்க வேண்டும். மிக தீங்கான மொபைல் ரேடியேஷனில் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் வெளியே சென்று சூரிய ஒளியில் வலம் வரலாம். காலை நேர சூரிய ஒளி நம் மீது வீசும்போது வைட்டமின் டி உற்பத்தி ஆகிறது.


ஆயில் புல்லிங் :

தூங்கி எழுந்த நிலையில் நம் வாயில் ஏராளமான பாக்டீரியா மற்றும் ஜெம் தொற்றுகள் இருக்கும். அவற்றை வெளியேற்றுவதற்கு மிக சிறந்த ஆயுர்வேத வழிமுறை ஆயில் புல்லிங் செய்வதாகும். வாய் சுத்தம் மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் இது நன்மை பயக்கும்.

செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்யலாம்.

முதலில் தண்ணீர் அருந்துங்கள் :

அதிகாலையில் வெறும் வயிற்றில் வேறெந்த உணவோ, பானங்களோ எடுத்துக் கொள்ளும் முன்பாக தண்ணீர் அருந்தவும். நமது உடலில் 60 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அது குறையும்போது நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதன் விளைவாக தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே, நாள் முழுவதும் நீர்ச்சத்து அவசியமானதாகும்.


ஃபோனுக்கு முன்பாக உங்களுக்கு ரீசார்ஜ் :

நம் வாழ்க்கையை பெரும்பகுதி ஆக்கிரமித்துள்ள மொபைல் ஃபோனுக்கு சார்ஜ் செய்வதே அதிகாலையில் நாம் முதன்மையான பணியாக மேற்கொள்வோம். அது ஒரு பக்கம் முக்கியம் தான் என்றாலும், அதைவிட முக்கியமானது நம் உடலுக்கு நாம் ரீசார்ஜ் செய்து கொள்வது.

நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நமது உடலுக்கு எளிமையான உடற்பயிற்சிகள் அவசியம். முடிந்த வரையிலும் நம் உடல் இயக்கத்தை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வேம்பு தண்ணீரில் குழியல் :

வேம்பின் பலன்கள் என்ன என்பதை இந்தியர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. பல நூற்றாண்டுகளாக நாம் அதை ஒரு மருந்து பொருளாக பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக சரும பிரச்சனைகள், அலர்ஜி போன்றவற்றுக்கு சிறப்பானது. வேம்பு கலந்த தண்ணீரில் குளித்தால் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

தூங்குவதற்கு முன்பாக..

இரவில் நாம் செய்யத் தவறும் சில விஷயங்கள், அடுத்த நாளில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றன. ஆகவே, இரவில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க, வழக்கங்களையும் இங்கு பார்க்கலாம்.

உணவுக்கு பிறகு வஜ்ராசனம் :

வயிறு உப்புசம், ஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இது தீர்வளிக்கும். இது மிக எளிமையான பயிற்சி என்றாலும் கூட, புதியவர்களுக்கு சற்று கடினமாக தோன்றும்.



நாளைய தினத்துக்கு தயாராவது :

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களுக்கு மிகுந்த குழப்பங்கள் உண்டாகிறது என்றால், முதல் நாளே 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்கி அடுத்த நாளுக்கு திட்டமிடுங்கள். குறிப்பாக தூக்கமின்மையை தவிர்க்க இது உதவும்.

சருமத்தை சுத்தம் செய்வது :

நீங்கள் எண்ணெய் வழியும் முகத்தை கொண்டவர் என்றால், உறங்க செல்வதற்கு முன்பாக நம் முகத்தை கழுவுவது நல்லது. இது செல்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.

பாதங்களுக்கு மசாஜ் :

நாள் முழுவதும் நடந்து அல்லது அலைந்து திரிந்து சோர்ந்து போன பாதங்களுக்கு மசாஜ் செய்து விடுங்கள். தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம்.

மைண்ட் பிரெஷிங் :

ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் பல் துலக்குவதைப் போலவே நமது மனதையும் சுத்தம் செய்து கொள்வது அவசியமானது. இது கவலை, மனா அழுத்தம் போன்றவற்றை குறைக்க உதவும்.


Click here to join whatsapp group for daily health tip 

குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்கிறார்களா..? இன்னைக்கே முடிவுகட்ட இதை டிரை பண்ணுங்க...

July 04, 2022 0

 ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாத நிலையை நீங்கள் பார்க்க இயலுமா? ஒற்றுமையாக விளையாடுவது என்றாலும் கூட எந்த நேரமும் சத்தமிட்டபடி கல, கலவென விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதிலும் சண்டை என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வீடே இரண்டாகிவிடும். அந்த அளவுக்கு சண்டையும் களைகட்டும். டிவி ரிமோட் யார் வைத்துக் கொள்வது, மொபைலில் யார் கேம் விளையாடுவது, ஸ்நாக்ஸ் எப்படி பகிர்ந்து கொள்வது என பல காரணங்களுக்காக சண்டை நடக்கும்.

ஆனால் குழந்தைகளிடம் வஞ்சகமும், பழி உணர்ச்சியும் இருக்காது. எந்த சண்டையானாலும் உடனுக்குடன் அதை முடித்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவார்கள். இருந்தாலும், குழந்தைகள் மத்தியில் சண்டை சச்சரவுகள், வீண் வாதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கலாம்.

குழந்தைகளின் சண்டை பொதுவானதே

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டில், சண்டையை எப்படி நிறுத்துவது, அவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்வது, எப்படி அமைதியை நிலைநாட்டுவது என்பது குழப்பத்திற்கு உரிய விஷயமாக இருக்கும். ஆனால், இது இயல்பான விஷயம் தான்.


விதிமுறைகளை உருவாக்க வேண்டும்

சண்டைகளை தவிர்க்க முடியாது என்றாலும், குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை நாம் உருவாக்கி விட வேண்டும். எதை செய்யலாம், எதை செய்யக் கூடாது என்று குழந்தைகளுக்கு தெரிந்து விட்டால், அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்கள்.

குழந்தைகளை சமமாக பார்க்க வேண்டும்

குழந்தைகளிடையே நீங்கள் பாகுபாடு காட்டக் கூடாது. அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டும். அனைத்து குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவும்.

தேவையில்லாமல் குறுக்கிட வேண்டாம்

குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளுக்கு தாங்களாகவே தீர்வு கண்டு கொள்வார்கள். கட்டுக்கடங்காமல் செல்லும்போது மட்டும் நீங்கள் தலையிட்டால் போதுமானது.

எப்போது வழிகாட்டலாம்

பெற்றோராக நீங்கள் எப்போதுமே உங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டலாம். ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவது, எப்படி தீர்வு காண்பது என்பதை சொல்லிக் கொடுக்கலாம்.

தகவல் தொடர்பு முக்கியம்

பிறரிடம் எப்படி பேச வேண்டும் என்பதே முக்கியமான விஷயம். உங்கள் செல்லக் குழந்தைக்கு இதுகுறித்து தெரியாமல் இருப்பின், நீங்கள் அதை கற்றுக் கொடுக்கலாம்.

நியாயமான தீர்வு தருவது

தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் குழந்தைகள் தடுமாறும்போது நீங்கள் தலையிட்டு முடிவு சொல்லலாம். ஆனால், அது நியாயமானதாக இருக்க வேண்டும்.

நல்ல உதாரணமாக இருக்கவும்

பெற்றோராகிய நீங்கள் அடுத்தவரிடம் சண்டையிடாமல், வீண் வாதம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களை பார்த்து குழந்தைகள் நற்பண்புகளை கற்றுக் கொள்ளும். நீங்கள் சண்டையிட்டால் அதே பழக்கம் குழந்தைகளிடமும் தொற்றிக் கொள்ளும்.


Click here to join whatsapp group for daily health tip 




July 3, 2022

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள்

July 03, 2022 0

 



மனித உடலின் அனைத்து பகுதிகளையும் எலும்புகள்தான் ஒருங்கிணைக்கின்றன. எலும்புகளை எந்த அளவிற்கு வலுவாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்குதான் ஆரோக்கியமும் மேம்படும். எலும்பு புரை, எலும்பு தேய்மானம், எலும்பு நொறுங்குதல் போன்ற பிரச்சினைகளையும் தவிர்க்கலாம். 

முதுமையில் எலும்பு குறைபாடு சார்ந்த பிரச்சினைகள் இன்றி நிம்மதியாக இருக்கலாம். எலும்புகளின் உறுதி தன்மைக்கு ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

கால்சியம்: எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியத்தின் பங்களிப்பு முதன்மையானது. சாப்பிடும் உணவுகளின் மூலம்தான் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் உறிஞ்சப்படும். அதனால் பால், சோயா, ஓட்ஸ், முட்டை, புரோக்கோலி, பச்சைக் காய்கறிகள், பாதாம் போன்ற கால்சியம் அதிகம் உள்ளடங்கிய உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி: எலும்புகளை பாதுகாக்க உதவும் கொலோஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி இன்றியமையாதது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருக்கும் என்பதால் ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். 

வைட்டமின் டி: காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்றவை வைட்டமின் டி உள்ளடங்கிய உணவு பொருட்கள். இவற்றை சாப்பிடுவதோடு காலை வேளையில் சூரிய ஒளி உடலில் படும்படியான செயல்பாடுகளில் சிறிது நேரம் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியும் செய்து வரலாம். 

சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்தும் உடலுக்கு போதுமானது. 

வைட்டமின் கே: இது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக எலும்பு தேய்மானம், விபத்தில் எலும்பு நொறுங்குதல் போன்ற பாதிப்பு கொண்டவர்கள் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டைகோஸ், காலிபிளவர், துளசி, கொத்தமல்லி, லெட்டூஸ் கீரை ஆகியவை சாப்பிடலாம். 

இவை எலும்பு பாதிப்பை சரி செய்ய உதவும். புரதம்: இதுவும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணக்கூடியது. குறிப்பாக எலும்புகள் தேய்ந்து, மெலிந்து போவதை தடுக்கக்கூடியது. பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, ஓட்ஸ், இறைச்சி போன்ற புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம். 

மக்னீசியம்: எலும்புகளின் ஆரோக்கியத்தை சீராக பேணவும், அதன் உறுதித் தன்மையை பாதுகாக்கவும் மக்னீசியம் உதவும். 35 வயதை கடந்தவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்னீசியம் அதிகம் கொண்ட பச்சைக் காய்கறிகள், பூசணி விதைகள், வாழைப்பழம் போன்றவை அடிக்கடி சாப்பிடலாம்.

பாஸ்பரஸ்: எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை அதிகரிக்க பாஸ்பரஸ் உதவும். மீன், பால் பொருட்கள், பழங்கள், அவகொடோ, திராட்சை, அத்திப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் பாஸ்பரஸ் நிரம்பி இருக்கிறது.


Click here to join whatsapp group for daily health tip 

வீட்டுக்குள் காற்று மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்தலாம்

July 03, 2022 0


 

ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டில்தான் செலவிடுகிறோம். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தால் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு முன்பை விட அதிக அக்கறை செலுத்துகிறார்கள்.

 அழுக்குகள், தூசுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள், மாசு விளைவிக்கும் வாயுக்கள், நுண் துகள்கள், ஒவ்வாமை போன்றவை மூலம் காற்று மாசுபாடு ஏற்படக்கூடும். 

குளியல் அறை, சமையல் அறைகளில் இருந்து வெளிப்படும் வாசமும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இத்தகைய மாசுக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். 

1. துப்புரவு பொருட்கள்: 

சமையலறை, குளியலறை, ஜன்னல்கள், தரைத்தளங்கள் போன்றவற்றில் காணப்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் துப்புரவு பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மூலம் கூட மீண்டும் மாசுக்கள் உருவாகக்கூடும். எனவே இயற்கையான துப்புரவு பொருட்களை பயன்படுத்துவது, மாசுபாட்டுக்கு வழிவகுக்காத பொருட்களை உபயோகிப்பது என மாற்று வழிமுறையை பின்பற்றுவது வீட்டின் உட்புற மாசுபாட்டை குறைக்க உதவும்.

 2. வெற்றிடம்: 

வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கரப்பான் பூச்சி மற்றும் நாய் மூலம் உருவாகும் அலர்ஜி போன்றவை நாம் உட்காரும், விளையாடும், தூங்கும் இடங்களில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தரை விரிப்புகள், தரை தளங்களில் செல்லப்பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடப்பது, அவற்றின் அழுக்குகள் படிந்திருப்பது மூலமாகவும் மாசுக்கள் அதிகரிக்கலாம். ஷோபாவை தூசு தட்டும்போதோ, குஷனில் அமர்ந்து விளையாடும்போதோ காற்றில் தூசு பறப்பதை காண முடியும். அவற்றில் தங்கி இருந்த தூசுவை நாம் சுவாசிக்க நேரிடும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும். 

எந்தவொரு பொருளையும் சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தால் அவற்றில் தூசுக்கள் படிந்திருப்பதை காணலாம். வீட்டுக்குள் தூசுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, வெற்றிடமாக வைத்திருப்பதுதான். அதாவது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதிக வெற்றிடங்களை உருவாக்க வேண்டும். 

3. வாசனை திரவியங்கள்: 

நிறைய பேர் அறைக்குள் நிலவும் கெட்ட வாசத்தை போக்குவதற்கு 'ரூம் பிரஷ்னர்களை' உபயோகிப்பார்கள். அவை நல்ல வாசத்தை கொடுக்கும் என்றாலும் அதனை நுகர்வதை தவிர்க்க வேண்டும். 

அறை முழுவதும் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்துவிட்டு உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதன் வாசம் நீங்கிய பிறகு அறைக்குள் நுழையலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் காற்றிலும், மாசுக்களிலும் கலப்பதை நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். 

4. சமையல்:

 சமைக்கும்போது கையாளும் சில வழிமுறைகள் கூட மாசுபாட்டை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கும்போது அவற்றில் இருந்து வெளிப்படும் துகள்கள் மாசுபாட்டை உருவாக்கும். சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும். ஆதலால் சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

வெளிப்புற காற்று மாசுபாடு பிரச்சினை இல்லாவிட்டால் ஜன்னலை திறந்துவைத்துக்கொள்ளலாம். சுத்திகரிப்பானையும் நிறுவலாம். சமையல் அறை மட்டுமின்றி மற்ற அறைகளிலும் காற்று சுத்திகரிப்பானை நிறுவுவது மாசு பிரச்சினையை கட்டுப்படுத்தும்.


Click here to join whatsapp group for daily health tip