Agri Info

Adding Green to your Life

August 10, 2022

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா..?

August 10, 2022 0

 பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது. இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.


இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய முக்கியமான 5 நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்...

 1.செரிமானத்தை மேம்படுத்தும்: வெந்தயத்தில் இயற்கையாகவே ஆன்டாக்சிட் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இதற்கு ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த தீர்வாக அமையும்.

2. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் மற்றொரு நம்பமுடியாத விஷயம் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுக்குள் வைப்பது தான். வெந்தயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள், நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையால் அவதிப்படுபவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீருடன் பருகுவது நல்ல பலன் கொடுக்கும்.

3. மாதவிடாய் வலிகளில் இருந்து விடுதலை: வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற தொந்தரவுகளை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் உள்ள ஆல்காலய்டுகள் மாதவிடாய் வலியை குறைக்கும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

4. எடை இழப்பு: வெந்தயம் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் தரக்கூடியது. வெந்தயத்தில் உள்ள காலக்டோமன் என்ற பொருள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரையை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, எளிதில் பசி எடுக்கவிடாமலும், அதிக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், இரவில் ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது எடை இழப்பில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர உதவும். இருப்பினும், தினசரி அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது

5. முடி மற்றும் சரும ஆரோக்கியம்: வெந்தயத்தில் உள்ள டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், சேதமடையாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.



 Click here to join whatsapp group for daily health tip

மூளை ஆரோக்கியமும் சமச்சீர் உணவும் - மருத்துவர் டிப்ஸ்

August 10, 2022 0

 மனித மூளையின் செயல்பாட்டிற்குச் சரியான உணவும் ஊட்டச்சத்தும் அவசியம். இன்றைய நவீன வாழ்க்கை முறை, அதிக வேலை நேரம் போன்ற காரணங்களால் மக்கள் ஆரோக்கியமான உணவைப் பெரும்பாலும் புறக்கணிக்கிறார்கள்.



நாள் முழுவதும் ஒருவரது கவனக் குவிப்பை சீராகப் பராமரிக்க, உடலில் இருக்கும் கலோரிகளை மூளை பயன்படுத்திக்கொள்கிறது. அதற்கு நாள் முழுவதும் போதுமான எரிபொருள் மூளைக்கு கிடைக்க வேண்டும்.

மீன் எண்ணெய்: இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை மூளைக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் செல்களைச் சுற்றியுள்ள மென்சவ்வுகளை உருவாக்க உதவுகின்றன. மூளை செல்கள் எனப்படும் நியூரான்கள் உருவாகவும் இவை உதவுகின்றன.

முழுத் தானியங்கள்: உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் செயல்பட ஆற்றல் தேவை. இதேபோல், மனித மூளைக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் வடிவில் ஆற்றல் தேவைப்படுகிறது, இது கவனக்குவிப்பையும் அறிதல் உணர்வையும் மேம்படுத்துகிறது. அந்த வகையில் முழுத் தானியங்கள் சிறந்த உணவுப் பொருட்கள்.

மூளையின் ஆரோக்கியம் முக்கியம்: மூளை என்பது மனித உடலின் ஒரு முக்கிய உறுப்பு. மற்ற உறுப்புகளைப் போல அதற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் எரிபொருள் தேவை. மூளையைக் கூர்மையாக்கவும், அறிதல் உணர்வைச் சரியான வகையிலும் வைத்திருக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது அவசியம். வைட்டமின்-கே, துத்தநாகம், வைட்டமின்-சி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு ஊட்டமளிக்கத் தேவைப்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களான மீன் எண்ணெய், புரோக்கோலி, கொட்டைப் பருப்புகள், பரங்கி விதைகள், காலிஃபிளவர், பழுப்பு அரிசி, முழுத் தானியங்கள், வெண்ணெய், முட்டை, முட்டைக் கோஸ், சோயா பொருட்கள் உள்ளிட்டவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கப் பயன்படும்.

வயதாகும்போது மூளை சுறுசுறுப்பான செயல்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து நினைவாற்றல் இழப்பும் அறிதல் உணர்வும் குறையும். எனவே, மூளையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கச் சமச்சீர், ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது அவசியம்!


 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

August 10, 2022 0

நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட உட்காரும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் இல்லாமல் இருக்க மாட்டோம். சாப்பிடும் போது காரம் எடுப்பது உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு சில வாய் தண்ணீர் குடிப்பது பரவாயில்லை..

ஆனால் உணவின் போது அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமல்ல என்று நம்பப்படுகிறது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட்ட 30 நிமிடங்களுக்கு பின் ஒரு கிளாஸ் அல்லது சற்று கூடுதல் தண்ணீர் அருந்துவது நல்லது என்கின்றன ஆய்வுகள். ஆனால் உணவின் போது தண்ணீர் குடிப்பது சரியா..?

உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லையா என்பது குறித்து பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தண்ணீர் மற்றும் பிற திரவங்கள் அருந்தும் போது செரிமான சக்தியை சிறிது நேரம் குறைக்கின்றன அதாவது செரிமானத்தை கடினமாக்குகின்றன. உணவின் போது தண்ணீர் குடிப்பது வாயில் உமிழ்நீரின் அளவைக் குறைப்பதில் இருந்து செரிமானத்தை பாதிக்க தொடங்குகிறது. குறைவான உமிழ்நீர் வயிற்றுக்கு பலவீனமான சிக்கனல்களை அனுப்புகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவும் இரைப்பை சாறுகள் (gastric juices) மற்றும் என்சைம்களின் வெளியீட்டை பாதிக்கிறது.

தவிர சாப்பிடும் போது தண்ணீர் அல்லது பிற திரவங்களை குடிப்பதால் மென்று சாப்பிடும் பழக்கத்தில் எதிர்மறை மாற்றம் ஏற்படுகிறது. சாப்பிடும் போது ஒரு கிளாஸ் தண்ணீரைர் பருகுவது உங்களை மெதுவாக்குவதுடன் உணவை மென்று திங்காமல் முழுவதுமாக விழுங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. திடப்பொருட்களுடன் எந்த திரவத்தையும் கலக்க கூடாது என்பது ஒரு பொது விதி. ஏனென்றால் திரவமானது நேரடியாக குடலுக்குள் சென்று, அனைத்து செரிமான நொதிகளையும் (digestive enzymes) நீக்கி, செரிமான சக்தியை பாதிக்க செய்கிறது.

சாப்பிடும் போது இடையில் ஏன் எதையும் குடிக்க கூடாது?

எடை அதிகரிக்கும்..

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாக கூறப்படுவது உடல் எடை அதிகரிப்பு. உணவின் போது பருகும் தண்ணீர் அல்லது திரவத்தால் இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பு உருவாகி, பின் அது உடலில் சேமிக்கப்படுகிறது. உடலால் உணவு நன்றாக ஜீரணிக்க முடியாமல் போனால் அது கொழுப்பாக மாறி உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்கும், இதற்கு உணவின் போது குடிக்கப்படும் தண்ணீர் காரணமாக அமையும் என கூறப்படுகிறது.

இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும்..

சாப்பிடும் போது அதிக தண்ணீர் குடிப்பது அசிடிட்டியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதிக தண்ணீர் அல்லது திரவம் gastric juices-களை நீர்த்து போக செய்து, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நமது உடலில் செரிமானமாகாத உணவுகள் இருக்கும் போது ஆசிட் ரிஃப்லெக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.


இன்சுலின் அளவு கூடுகிறது..

ரத்த சர்க்கரை அளவையும், உடலில் கொழுப்பு சேமிப்பையும் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் ஆகும். எனவே உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இதனால் உடல் எடை அதிகரிக்கும். இது தண்ணீருக்கு மட்டுமல்ல, உணவோடு ஜூஸ் அல்லது சோடா குடிப்பதும் இன்சுலின் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உமிழ்நீர் அளவில் மாற்றம்..

செரிமானத்தின் இன்றியமையாத அங்கம் உமிழ்நீர். இது உணவாயு உடைத்து மென்மையாக்க உதவுகிறது. இருப்பினும், உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது. 




 Click here to join whatsapp group for daily health tip

உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?

August 10, 2022 0

 ‘இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. முன்பெல்லாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்து தான் சென்று வந்தோம், 60, 70 வயது பாட்டிகள் கூட வயல் வேலைக்கு பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று வந்தனர்.

அதனால் தான் அப்போது நோய்கள் குறைவாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை பக்கத்து கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ‘ஓடிப்போய் பைக்கை தான் எடுக்கிறோம்’. இதனால் தான் 30 வயதை தொடுவதற்கு முன்பே பலருக்கும் சர்க்கரை நோய் வருகிறது.

மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயில் இருந்து மட்டுமல்ல உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. குறிப்பாக சாப்பாட்டுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என ஆய்வு ஒன்றின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கும் இடையிலான இதய ஆரோக்கியம், இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உணவுக்கு பிறகு உடனடியாக உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட, சிறிது நேரம் நடப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டியது:

தற்போதைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயமாகும். அப்படிப்பட்ட வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே இல்லாமல், அவ்வப்போது சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளலாம். காபி மெஷின் வரை எழுந்து சென்று காபி பிடித்து வரலாம், தண்ணீர் பாட்டிலை நிரப்பலாம், சில படிக்கட்டுக்கள் ஏறி இறங்கலாம். இதுபோன்ற செயல்முறைகள் 2-h பிளாஸ்மா குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்றவற்றில் ஆரோக்கியமான தாக்கங்களை உருவாக்குவது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

சேரில் இருந்து எழுந்திருக்காமல் தொடர்ந்து பணியாற்றுவதை விட, அடிக்கடி சிறிது நடைப்பயிற்சி செய்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (SBP), HDL கொழுப்பு, இன்சுலின், குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதற்கு பதிலாக, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் எழுந்து நிற்பது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவே மதிய உணவுக்குப் பிந்தைய வாக்கிங் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?

இந்த ஆய்வின் மூலமாக பிசியாக பல மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள், மதிய உணவுக்குப் பிறகு ஒரு சின்ன வாக்கிங் சென்று வருவது அவர்களது உடலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அறிய உதவியுள்ளது. ‘நேரம் இல்லை’, ‘வேலை நேரத்தில் நடக்க முடியாது’, ‘வாக்கிங் எல்லாம் காலையில் தான் போக வேண்டும்” என காரணங்களை வைத்துக் கொண்டு நடப்பதையே குறைத்துக்கொண்ட நபர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் உள்ள லிமெரிக் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவரும் கட்டுரையின் ஆசிரியருமான ஐடன் பஃபே, கூறுகையில் "வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தை விட்டு எழுந்து டிரெட்மில்லில் ஓடவோ, அலுவலகத்தை சுற்றி வாக்கிங் செல்லவோ நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக எழுந்து போய் காபி சாப்பிடுவது, அலுவலகத்திற்குள்ளேயே ஒரு சின்ன வாக்கிங் போவது போன்ற சிறிய விஷயங்களைத் தான் பரிந்துரைக்கிறோம். இதுவே உங்களுடைய ரத்தத்தில் உள்ள உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க உதவும்” என தெரிவித்துள்ளார்.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்..

August 10, 2022 0

 மிக அதிகமாக மது அருந்துவது, துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, தவிர்க்க முடியாத மன அழுத்தம் மற்றும் பல்முனை வேலைப்பளு உள்பட நமது உடல் மற்றும் மனதின் அதிகப்படியான சுமையை ஏற்றுக் கொண்டு மிகவும் அமைதியாக வேலை செய்யக்கூடிய ஒரு உறுப்பு கல்லீரல் ஆகும். நமது உடல் ஆரோக்கியத்தை பேணி காத்து தொடர்ந்து நிலையாக இயங்க வைப்பதற்கும், செல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் கல்லீரல் அயராது பாடுபடுகிறது.


உடலின் மிகச் சிறிய உறுப்பாக கல்லீரல் அறியப்பட்டாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் தேவை என்பது மிக, மிக பெரியதாகும். பைல் திரவத்தை உற்பத்தி செய்வது, புரதம் மற்றும் கொழுப்புகளை உற்பத்தி செய்து அதன் மூலமாக மாவுச்சத்து, விட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை சேமிப்பது, உணவில் உள்ள நச்சுக்களை உடைப்பது, மது, மருந்துகள் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை உடைத்து வெளியேற்றுவது என இன்றியமையாத பணிகளை செய்து வரும் கல்லீரல், நமது மூளையின் நலனுக்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிறது. இத்தகைய கல்லீரலின் நலனை காக்கும் வகையிலான உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.


தேநீர் : ஆம், டீ அருந்துவது கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் செல்களை மீட்டுருவாக்கம் செய்யும். குறிப்பாக பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவற்றை தினசரி அருந்தி வந்தால் கல்லீரலில் சுரக்கும் நொதிகளின் சுரப்பு ஊக்குவிக்கப்படும். இதனால் கல்லீரலில் கொழுப்பின் அளவு குறையும். டீயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் நமது உடலில் தேவையற்ற ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும், பல்வேறு விதமான புற்றுநோய்களை தடுக்கவும் உதவும்.

திராட்சை பழம் : இயற்கையாகவே ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்த திராட்சை பழங்கள் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கல்லீரலில் பாதிப்படைந்த செல்களை சீரமைக்கவும், புதிய செல்களை உருவாக்கவும் இது உதவுகிறது. திராட்சைப்பழம் சாப்பிடுவதன் மூலமாக கல்லீரலில் ஏற்படும் நீண்ட கால அழற்சி மற்றும் வலி போன்றவை கட்டுப்படுத்தப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கொழுப்பு நிறைந்த மீன் : ஒமேகா 3 பேட்டி ஆசிட் வகை கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்வதன் மூலமாக கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகளை நீக்குவதுடன், கல்லீரலில் உள்ள அலற்சியை போக்கவும் முடியும். தினசரி கொழுப்பு உள்ள மீன்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகை கொழுப்புகளை கரைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பீட்ரூட் ஜூஸ் : நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மற்றொரு வழி தினசரி உணவில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்துக் கொள்வதாகும். இதில் நைட்ரேட்ஸ் மற்றும் ஆண்டிஆக்சிடண்ட் போன்றவை நிறைந்துள்ளன. இவை கல்லீரல் மற்றும் இதய நலனுக்கு உகந்ததாகும். உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் அளவை குறைக்கவும் செல்களை உருவாக்கவும் பீட்ரூட் ஜூஸ் பயனுள்ளதாக இருக்கிறது.


பெர்ரி பழங்கள் : புதிய பெர்ரி பழங்கள் அல்லது உலர வைக்கப்பட்ட பெர்ரி பழங்களை எடுத்துக் கொண்டால் கல்லீரல் நலன் மேம்படும். இதில் உள்ள ஆந்தோசயனின்ஸ் என்ற ஆண்டிஆக்சிடண்ட் நமது நோய் எதிர்ப்பு செல்களை ஊக்குவிக்கிறது. இதனால் ஸ்ட்ரெஸ் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் பெர்ரி பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் கட்டிகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது.





 Click here to join whatsapp group for daily health tip

இந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதாம்... மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

August 10, 2022 0

 தோராயமாக ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்பாக வசதி படைத்தவர்கள் மற்றும் நகர்ப்புற மக்களின் வீடுகளில் மட்டுமே இடம் பிடித்திருந்த ஃபிரிட்ஜ் என்னும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அனேகமாக அனைத்து வீடுகளிலும் இடம்பெற்றுள்ளது. நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஃபிரிட்ஜ் என்றால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைப்பதற்கான இடம் ஆகும். அதில் வைக்கும் பொருட்களின் தரம் குறையாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.


ஆனால், ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கப்படும் சில உணவுப் பொருளின் நிறம், சுவை, மனம் ஆகியவை மாறி விடுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து அளவு குறைந்துவிடுகிறது. சில உணவுப் பொருட்களை மாத கணக்கில் ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அது கெட்டுப் போகும் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆகவே, ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருட்களின் பட்டியல் இதோ…

மாங்காய் : பழுக்காத மாங்காய்களை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதன் பழுக்கும் தன்மையை இது குறைத்துவிடுகிறது. பழுத்த மாம்பலங்களை மட்டுமே ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அது திடமாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்.

ஃபிரெட் : நாம் எல்லோருமே ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். ஆனால், ஓரிரு நாட்கள் தாண்டி ஃபிரெட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

எண்ணெய் : எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் அதன் இயற்கை தன்மை மற்றும் நிறம் ஆகியவை மாறிவிடும். மேலும் எண்ணெய்யின் மனம் மாறிவிடும்.

சமைக்கப்பட்ட இறைச்சி : சமைத்த கோழி அல்லது ஆட்டிறைச்சி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். ஒன்றிரண்டு நாட்களை தாண்டி வைத்திருக்கும் பட்சத்தில் உணவு கெட்டுப்போய் விஷமாக மாறக் கூடும். இது செரிமானக் கோளாறுகள் மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளை கொண்டு வரும்.

தேன் : சாதாரணமாக அறையின் வெப்ப அளவிலேயே வெகு காலத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கக் கூடிய பொருள் தேன் ஆகும். ஆனால், இதனை ஃபிரிட்ஜில் வைக்கும்போது அது கிறிஸ்டலாக மாறி விடுகிறது. மீண்டும் பயன்படுத்துவதற்கு கடினமானதாக மாறிவிடும்.

மசாலா பொருட்கள் : புதினா, கொத்தமல்லி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஃபிரிட்ஜில் இருக்கும்போது அதில் உள்ள ஈரப்பதம் வெளியாகி, வாடி வதங்கிவிடும். புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சாதாரணமாக காகிதப் பையில் போட்டு வைப்பதன் மூலமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.


 Click here to join whatsapp group for daily health tip

August 8, 2022

உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா.? இந்த உணவுகளை முயற்சித்து பாருங்கள்.!

August 08, 2022 0

 


சிலருக்கு கண்கள் வறண்டு போவது என்பது மிகவும் பொதுவான மற்றும் சங்கடமான நிலை. சிலருக்கு மற்றவர்களை விட கண் வறட்சி அதிகமாக இருக்கும். டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின், அலர்ஜி, முந்தைய கண் அறுவை சிகிச்சை, நீண்ட நேரம் கண் சிமிட்டாமல் இருப்பது, சில மருந்துகள் அல்லது வயது உள்ளிட்ட காரணிகளால் கண்கள் வறட்சி ஏற்படுகின்றன.
 அடிக்கடி கண்கள் சிவந்து போதல், கண்கள் அரிப்பு, கண்கள் வீக்கம், கண் எரிச்சல், ஒளி உணர்திறன், நீண்ட நேரம் ஸ்கிரீனை பார்ப்பதில் சிரமம் உள்ளிட்டவை வறண்ட கண் பிரச்சனையின் சில பொதுவான அறிகுறிகளாகும். வயது போன்ற சில காரணிகள் தவிர ஹார்மோன் மாற்றங்கள் கண் வறட்சியை தூண்டும். எனினும் கடுமையான உலர் கண் அறிகுறிகளை தடுக்க மற்றும் சிகிச்சையளிக்க சில வழிகள் உள்ளன.

கண்களை உயவூட்டுவதற்கு போதுமான கண்ணீரை உடல் உற்பத்தி செய்யாத போது இந்த நாள்பட்ட நிலை ஏற்படுகிறது. கண் மருத்துவர்களின் கூற்றுப்படி, சத்தான உணவைப் பின்பற்றுவது கண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது. கண் வறட்சியுடன் நீங்கள் போராடி வந்தால் உங்களுக்காக நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்...
மீன்: கண்கள் வறட்சியடையும் சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று மீன். ஏனெனில் பெரும்பாலான மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது கண்ணில், குறிப்பாக கண்ணீர் நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கண்ணீரின் அளவு மற்றும் தரத்திற்கு உதவுகிறது. சால்மன், ஹாலிபுட், ஹெர்ரிங், டுனா போன்றவை அதிக சத்துக்களை கொண்ட மீன்கள்.

பச்சை இலை கீரைகள்: சில கீரைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கண் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் மற்றொரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது வயதாவதால் ஏற்படும் கண் பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிறந்த வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் நிறைந்த கீரைகள் முட்டைக்கோஸ், காலார்ட்ஸ் மற்றும் பசலை கீரை உள்ளிட்டவை.

சீட்ஸ்: நாள்பட்ட கண்கள் வறட்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா மற்றும் ஆளி விதைகள் போன்றவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மற்றொரு சிறந்த மூலமாக இருக்கின்றன. மீன்களை திங்க முடியாத சைவ உணவு உண்பவர்களுக்கு உண்மையில், ஆளிவிதை எண்ணெய் ஒமேகா-3 சப்ளிமெண்ட்களுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.

நட்ஸ்: வைட்டமின் ஈ என்பது வைட்டமின் சி போன்றே ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கண்ணீர் உற்பத்தியில் ஏற்படும் சேதம் உட்பட வயது தொடர்பான காரணத்தால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய முக்கிய இரண்டும் நிறைந்துள்ளன. வால்நட்ஸ், பீனட்ஸ், முந்திரிகள். பிரேசில் நட்ஸ் போன்றவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த நட்ஸ்கள்.

பீன்ஸ்: பீன்ஸில் ஃபோலேட் மற்றும் ஜிங்க் உள்ளது. மெலனின் உற்பத்திக்கு உடலில் போதுமான ஜிங்க் இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்கள் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வறண்ட கண்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது, குறிப்பாக சூரியனால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

தண்ணீர்: நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. உடலில் போதுமான நீர்சத்து இல்லாவிட்டால் கண்கள் வறண்டு போகும். குறிப்பாக நீங்கள் வெப்பமான, வறண்ட சூழலில் வாழ்ந்தால் சீரான இடைவெளியில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது கண்கள் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.
 Click here to join whatsapp group for daily health tip

டாய்லெட் பயன்படுத்தும் முறையினாலும் குடல் புற்று நோய் வர வாய்ப்பு? அதிர்ச்சி தகவல்.!

August 08, 2022 0


குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் புற்றுநோயையும் குறிக்கிறது. இந்த நோய் பொதுவாக குடலின் உட்புறத்தில் தோன்றி பெருங்குடல் முழுவதும் பரவி மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நோய் 60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களிடையே அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும், நாள்பட்ட மலச்சிக்கல் குடல் புற்றுநோய்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது. மோசமான அல்லது பொருத்தமற்ற கழிப்பறை பழக்கங்களும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. மலம் கழிக்க நாம் உட்காரும் முறைகள் கூட மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.

எப்படி உட்காருவது சிறந்தது.? இயற்கையான முறையில் மலம் கழிக்காமல், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை பயன்படுத்தி காலை கடன்களை கழிப்பது மலச்சிக்கல் மற்றும் குடல் புற்றுநோயை உருவாக்கும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியன் மாடல் கழிப்பறையில் இரண்டு கால்களையும் அழுத்தி வைத்து உட்காரும் போது, இயற்கையாகவே அழுத்தம் உருவாகி கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. ஆனால் மேற்கத்திய கழிப்பறைகளில் அமரும் போது, நாற்காலி போல் அமர்வதால் குடல் பகுதிகளில் ஏற்படும் முடிச்சுக்கள் செரிமான பாதையை சேதப்படுத்துகின்றன. மேலும் குந்துதல் முறையில் சிறு குடலுக்கும் பெரிய குடலுக்கும் இடையே உள்ள இலியோகேகல் வால்வு தானாகவே அடைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்த முறையில் புபோரெக்டலிஸ், அந்தரங்க எலும்புடன் இணைக்கப்பட்ட தசை, ஆகிய அனைத்தும் அதிக முயற்சி இல்லாமல், எளிதாக குடல் இயக்கத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.


வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும்.? மேற்கத்திய கழிப்பறைகளில் அமர்ந்த நிலையில் மலம் கழிக்கும் போது, அது இலியோகேகல் வால்வு இயற்கையாக மூடுவதை தடை செய்கிறது. இதனால் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கான சரியான அழுத்தம் கிடைக்காமல், புபோரெக்டலிஸ் தசையும் இறுக்கமடைவதால் கழிவை வெளியேற்ற நீங்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

குடல் புற்றுநோய்க்கான பிற காரணங்கள்: டாய்லெட்டை பயன்படுத்தும் முறையைத் தவிர உணவு முறையும் குடல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. ரெட் மீட் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிக அளவில் உட்கொள்வதும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதும் குடல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது, அதிக எடை, மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையும் குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே குடல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்: குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் தங்கள் குடல் இயக்கங்களில் மாற்றங்களை அனுபவிக்கின்றனர். அடிக்கடி மலம் கழிப்பது, ரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, வீக்கம் , சாப்பிட்ட பிறகு அசெளகரியமான உணர்வு, பசியின்மை , திடீர் எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.

குடல் புற்றுநோயை தடுக்கும் முறைகள்: குடல் புற்றுநோய் உருவாக மலச்சிக்கல் தான் பிரதான காரணம் என்பதால், தினமும் அதிகளவிலான தண்ணீர் குடிக்கும் வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவும். குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும் கிவி போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளவும். தினந்தோறும் ஜாக்கிங் உள்ளிட்ட வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.



 Click here to join whatsapp group for daily health tip

அதிகாலை நடைப்பயிற்சி ஏன் அவசியம்?

August 08, 2022 0

 காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாக ஏராளமான நன்மைகளை பெறலாம். பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்தும் விலகி இருக்கலாம். 



அதிகாலை வேளையில் ஏன் நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம். சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும். உடலின் ஆற்றல் அளவை அதிகப் படுத்தவும் உதவும். நடைப்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். 

அதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் 10 நிமிடங்கள் நடப்பது, நடைப்பயிற்சியில் சேராது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவிலோ, தெருவிலோ குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதாகும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் 10 நிமிடங்கள் படிக்கட்டுகளில் நடப்பது அதிக ஆற்றலை தரும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை ஒவ்வொரு நாளும் பின்பற்றுவதும் மனச்சோர்வடையச் செய்யலாம். 

காலையில் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தக்கூடியது. ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நேர்மறையான மன நிலையை உண்டாக்குகிறது.

 சுய மரியாதையை மேம்படுத்துதல், பதற்றத்தை குறைத்தல், மனச்சோர்வை குறைத்தல், நேர்மறை எண்ணத்தை உருவாக்குதல், மனநலப் பிரச்சினைகளை குறைத்தல் போன்ற சிறப்பம்சங்களும் நடைப்பயிற்சிக்கு உண்டு. தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.


காலையில் நடைப்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளில் பெரும் பகுதியை ஈடு செய்துவிடும். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் குறையும். 

ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும், வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

காலையில் நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். காலை பொழுதில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், சுமார் 400 கலோரிகளை எரிக்கலாம். இது நடையின் வேகத்தைப் பொறுத்ததும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும், அந்த சமயத்தில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுவதாலும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகாலை நடைப்பயிற்சி சிறந்தது. 

இது பல்வேறு வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சுவாச திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம். உடலில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும். நீண்ட நேரம் காலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது சில வகையான புற்றுநோய் களின் அபாயத்தில் இருந்தும் காக்கும்.


நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய தூண்டும் ஆற்றலும் கொண்டது. இதன் மூலம் தசை ஆரோக்கியம் பலப்படும். கால் தசைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம். அல்லது சாய் தள பரப்பில் நடந்து பயிற்சி செய்யலாம். காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களின் தூக்க திறன் மேம்படு வதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை நேர உடற்பயிற்சியின் காரணமாக இரவில் நன்றாக தூங்கி எழுவது தெரியவந்துள்ளது. 

தூக்கமின்மை பிரச் சினையை எதிர்கொண்டவர்கள் காலை நேர உடற்பயிற்சிக்கு பிறகு நன்றாக தூங்கி எழுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேர பயிற்சிகளை விட காலை நேர பயிற்சியே சிறந்தது. மாலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடல் சோர்வு மற்றும் தசைகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


Click here to join whatsapp group for daily health tip

August 7, 2022

சைனஸ் பிரச்சனை இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்...

August 07, 2022 0

 அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். பொதுவாக சைனஸ் பிரச்சனை என்று இது குறிப்பிடப்பட்டாலும் புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி என்றும் இந்த சிக்கல் குறிப்பிடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சைனஸ் பிரச்சனை வரலாம். குளிர் மற்றும் பனிக்காலம் வந்தாலே சிலர் தொடர் தலைவலி மற்றும் தும்மலால் கடுமையாக அவதிப்படுவார்கள். அதே போல தூசுக்கள் இருக்கும் ஏரியாவிற்கு சென்றால் விடாமல் தும்மி கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் சைனஸ் பிரச்னையாக தான் இருக்கும்.

சைனஸ்கள் (Sinuses) என்பது மூக்கின் பின்புறம், கன்னத்து எலும்புகள், கண்கள் மற்றும் நெற்றிக்கு இடையில் இருக்கும் ஏர் பாக்கெட்ஸ்கள் (air pockets) ஆகும். நமது மூக்கை சுற்றி மொத்தம் 4 காற்று பைகள் இருக்கிறது. இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. இந்த ஏர் பாக்கெட்ஸ்களே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த சைனஸின் புறணி (lining) சளியை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கின்றன. இந்த மெல்லிய திரவம் நாசி குழி வழியாக நம் உடலுக்குள் நுழையும் வெளி துகள்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.

இந்த புறணியில் ஏற்படும் அழற்சியானது நாசிப் பாதைகளில் அதிகப்படியான சளியை உருவாக்கலாம், இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த நிலை சைனசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஜலதோஷத்தின் மற்றொரு ஆபத்தான பக்கம் தான் இந்த சைனஸ் பிரச்சனை. ஜலதோஷம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 2 வாரங்களுக்குள் சரியாகி விட வேண்டும். ஆனால் 2 வாரங்கள் கடந்தும் ஜலதோஷம் சரியாகவில்லை என்றால் ஒருவேளை அது சைனஸ் கோளாறாக இருக்க கூடும்.

சைனஸ்கள் பிரச்சனை அல்ல. நம் குரலின் ஆழம் மற்றும் தொனிக்கு சைனஸ்களும் பொறுப்பு ஆகும். அவை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 4 ஏர் பாக்கெட்ஸ்கள் ஆகும். இவற்றில் உருவாகும் சளி அல்லது மெல்லிய திரவம் நம் மூக்கின் உட்புறத்தை ஈரமாக வைத்திருக்கும். மேலும் இது தூசி, அலர்ஜி மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆனால் நம்மை பாதுகாக்கும் சைனஸில் திரவம் தேங்குவதால் கிருமிகள் வளர்ச்சியடைந்து, சைனஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ஏன் திரவம் தேங்கும்..?

நம்முடைய சைனஸால் உற்பத்தி செய்யப்படும் சளி பொதுவாக சிறிய சேனல்கள் (small channels) மூலம் நம் மூக்கில் ட்ரெயின் ஆகிறது. ஆனால் சைனசிடிஸில், சைனஸ் லைனிங் வீக்கமடைவதால் இந்த சேனல்கள் தடுக்கப்படுகின்றன. சைனசிடிஸ் என்பது பொதுவாக சளி அல்லது காய்ச்சல் வைரஸ் மேல் சுவாசக் குழாயிலிருந்து சைனஸ்களுக்கு பரவுவதன் விளைவாகும். ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே சைனஸில் பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றன.

சில நேரங்களில் பாதிக்கப்பட்ட அல்லது சொத்தை பல் அல்லது பூஞ்சை தொற்று சில நேரங்களில் சைனஸ் வீக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு மூக்கு துவார தடுப்பு தண்டு, பிறந்ததில் இருந்து வளைந்தே இருக்கும். இதனால் ஒரு துவாரம் பெரிதாகவும், மற்றொரு துவாரம் சிறிதாக இருக்கும். இதனால் சைனஸ் தாக்கும் போது இவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும். ஒவ்வாமை, சளி அல்லது சுற்றுச்சூழல் மாசு காரணமாக மூக்கில் உள்ள திசுக்களில் ஏதாவது வீக்கம் ஏற்பட்டால், அது சைனஸின் பாதைகளை தடுக்கலாம். இதனால் சைனஸ்கள் வெளியேற முடியாது போவதால் ஒருவர் வலியை உணரலாம்.

சைனஸின் அறிகுறிகள்:

பெரும்பாலும் ஜலதோஷத்திலிருந்து பிரித்தறிய முடியாதவையாக இருக்கின்றன சைனஸின் அறிகுறிகள். 1-2 வாரங்களில் ஜலதோஷ அறிகுறிகள் சரியாகவில்லை என்றால், தொற்று மோசமடையாமல் இருக்க உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம். சளி போன்ற மேல் சுவாசக் குழாய் தொற்றுக்கு பிறகு பொதுவாக சைனஸ் ஏற்படும்.ஒருவருக்கு தொடர்ந்து சளி இருந்தால் மற்றும் கீழே உள்ள அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அவருக்கு சைனஸ் இருக்கலாம். இதன் அறிகுறிகள் பெரும்பாலும் சளி அறிகுறிகளை ஒத்திருக்கும் என்றாலும் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு: முகத்தில் ஏற்படும் வலி அல்லது உணரப்படும் அழுத்தம், மூக்கடைப்பு, கடும் தலைவலி, அதிக காய்ச்சல், தொடர் இருமல் அல்லது தும்மல், வாசனை உணர்வு குறைவது உள்ளிட்டவை.

கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி ஏற்படும். தலையை கீழ் நோக்கி கவிழ்த்தால், தாங்க முடியாத தலைவலி உண்டாகும். அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறும், சிலர் சளியை சிந்தி வெளியேற்றும் போது கூடவே ரத்தமும் சேர்ந்து வரும். சில நேரங்களில் வெளிவரும் சளி கடும் துர்நாற்றத்துடன் இருக்கும். தீவிர சைனஸ் பிரச்னை இருந்தால் மூக்கை தொட்டாலே கடுமையாக வலிக்கும். சிலருக்கு இரவு நேரத்தில் இருமலும், காலையில் எழுந்தவுடன் தொடர்ச்சியாக தும்மலும் வரும். மேல் தாடை மற்றும் பற்களில் வலி, பல் வலியோடு சேர்ந்து காதுகளிலும் வலி உருவாகும். இங்கே அறிகுறிகள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

தொண்டை எரிச்சல் மற்றும் இருமல்

சைனஸில் இருந்து வெளியேறும் திரவம் தொண்டையின் பின்பகுதியில் வெளியேறுவதால், அது எரிச்சலை ஏற்படுத்தும், குறிப்பாக நீண்ட காலத்திற்கு. இது ஒரு தொடர்ச்சியான மற்றும் எரிச்சலூட்டும் இருமலுக்கு வழிவகுக்கும். தூங்கும் போது இது இன்னும் மோசமாக இருக்கும் அல்லது படுக்கையில் இருந்து எழுந்த பிறகு காலையில் இதனால் அவதி ஏற்படும். நிமிர்ந்து தூங்குவது அல்லது உங்கள் தலையை உயர்த்தி படுப்பது இருமலின் தீவிரத்தை குறைக்க உதவும்.

தொண்டை வலி..

சைனஸின் விளைவாக தீவிர தொண்டை வலி ஏற்படலாம் மற்றும் குரல் கரகரப்பானதாக மாறலாம். அடிக்கடி இருமல் மற்றும் தொண்டையை செருமி சளியை துப்புவது கரகரப்பான குரலை மோசமாக்கும்.

வாய் துர்நாற்றம்..

பாதிக்கப்பட்ட சைனஸால் ஒருவர் உடலில் உற்பத்தி செய்யப்படும் சளி துர்நாற்றம் வீசும் மற்றும் தொண்டை வழியே வாய்க்குள் செல்லும். இதனால் வாய் துர்நாற்றமடிக்கும். அடிக்கடி வாயை கொப்பளிப்பது, நாக்கை க்ளீன் செய்வது, நிறைய தண்ணீர் குடிப்பது இந்த அறிகுறியைக் குறைக்க உதவும்.

காது அடைப்பு..

சைனஸ் பிரச்சனை உள்ளவர்களு காது பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. காது மடல்களில் இருந்து ஆரம்பிக்கும் வலி பின் காதுகளுக்குள் தீவிர வலியாக உருவெடுக்கும் திடீரென காதுகளில் அடைப்பு ஏற்படலாம்.

அழுத்தம்..

முகத்தில் மென்மை அல்லது அழுத்தம் இருக்கலாம். நோய் தொற்று முன்பக்க சைனஸில் இருந்தால் தவிர, பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக முக வலியை அனுபவிப்பதில்லை..


August 4, 2022

Junior Research Fellow Vacancy - TNAU, Coimbatore - Check now

August 04, 2022 0

Junior Research Fellow  Vacancy - TNAU, Coimbatore - Check now

Name of the Employer: The Dean, Agricultural Engineering College and Research Institute, Coimbatore.

Qualification: B.Sc. (Hons.) Agriculture/ Horticulture/ Home Science/ Food Science Nutrition, B.Tech. (Food Technology / Food Processing Engineering)

Name of the Post:  Junior Research Fellow

Number of Post:1 (One Only)

Pay (Rs.):Rs. 20,000/- P.M.

 Place, Date and Time of Interview: The Dean Agrl. Engg. Coll. & Res. Instit., Coimbatore.

11.08.2022,10.00 a.m.

Name of the Scheme/Project: Development of potentially viable coconut value added product – Coconut Board Scheme.

Place of Posting: Development of potentially viable coconut value added product – Coconut Board Scheme


Official Website


August 1, 2022

Filter Water VS HotWater எந்த தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்லது?

August 01, 2022 0

 மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக தண்ணீர் இருக்கிறது, நீரை அமிர்தமாகவும் கருதுகின்றனர் அந்தளவுக்கு நீர் ஒரு மனிதனின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது.  ஆனால் இன்றைய காலகட்டத்தில்  மக்கள் தொகைச் சுமை, சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வளங்கள் குறைதல் போன்ற காரணங்களால் சுத்தமான குடிநீர் கிடைப்பது சவாலாக உள்ளது. 

 அசுத்த நீரை பருகுவதால் ஜலதோஷம், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பல வியாதிகள் வருகிறது.  சிலர் பில்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றனர், சிலர் சூடு தண்ணீரை பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்த இரண்டு தண்ணீரில் எது நமக்கு நனமையளிக்கிறது என்பதை பற்றி இங்கே காண்போம்.

  வீடுகளில் அல்லது தெருக்களில் உள்ள குழாய்களில் வரும் நீரை குடிப்பதில் நிறைந்துள்ள ஆபத்தை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  இதிலிருந்து வரும் நீரில் பாக்டீரியா நிறைந்த அசுத்தமான நீராக வருவதாக கருதப்படுகிறது.  

மேலும் இந்த நீரில் பாக்டீரியாவைக் கொல்ல குளோரின் மற்றும் ஃப்ளூரைடைப் பயன்படுத்தபடுகின்றன. இருப்பினும் நம் வீட்டிலுள்ள குழாய்களுக்கு உள்பக்கம் சுத்தம் இல்லாமல் இருக்கும் வாய்ப்புண்டு, மேலும் நீரை சேமித்து வைக்கும் இடங்களில் ஏதேனும் அசுத்தங்கள் கலக்க வாய்ப்புள்ளது.  

பண்டைய காலத்திலிருந்து சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான முறையாக கருதப்படுவது நீரை கொதிக்கவைக்கவும் செயல்முறைதான். 

 நீரை கொதிக்க வைக்கும்பொழுது அதிலுள்ள நச்சு பயக்கும் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன.  தண்ணீர் லேசான சூடு வந்தாலே அந்த ஆரோக்கியமானது என்று கருதுவது தவறு, அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத நீரில் பரவும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கிருமி நீக்கம் செய்ய, குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு தண்ணீரை தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டும். அதை விட குறைவாக வேகவைத்தால், தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல.

சூடு தண்ணீருடன் ஒப்பிடும்போது, ​​ஃபில்டர் செய்யப்பட்ட தண்ணீர் குடிப்பது பாதுகாப்பான செயல்முறையாக  கருதப்படுகிறது. 

 அசுத்தமான அல்லது குழாய் நீரிலிருந்து அசுத்தங்கள், இரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்றி, நோய்க்கிருமி இல்லாததாக மாற்றுவதற்கு நீர் சுத்திகரிப்பு உதவும். 

 ஆர்ஓ முதல் யூவி நீர் சுத்திகரிப்பான்கள் வரை, தண்ணீரைச் சுத்திகரித்து குடிக்கக்கூடியதாக மாற்ற உதவும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன.

Click here to join whatsapp group for daily health tip

முடி உதிர்வு, அடிக்கடி தலைவலி... வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமாம்..!

August 01, 2022 0

நம் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களையும், ரத்தத்தில் உள்ள செல்களையும் ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வைட்டமின் பி12 மிகவும் அவசியமானதாகும். நம் உடலின் அனைத்து செல்களில் மரபுக் கூறுகளான டிஎன்ஏ-வை உருவாக்கவும் இதுதான் உதவிகரமாக அமைகிறது. ஆகவே, நாம் அருந்தும் பானங்கள் மற்றும் உண்ணும் உணவுகள் மூலமாக வைட்டமின் பி12 சத்தை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

விலங்கு இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது. விட்டமின் பி12 இல்லை என்றால் நம் உடலில் ரத்தசோகை ஏற்படக் கூடும். நரம்பியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் உண்டாகுவதற்கு அது காரணமாக அமையும்.

பி12 பற்றாக்குறை இருப்பதை அறிவது எப்படி?

தொடக்க காலத்தில் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது எந்தவித அறிகுறியும் இருக்காது. இது மிக தீவிரமாக மாறிய பின்னர் ரத்தசோகையாக உருவெடுக்கிறது என்றாலும், அதற்கு முன்னரே இந்த கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். சில அறிகுறிகளைக் கொண்டு இதை நாமே கணிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முடிகளில் அறிகுறி

நமது ரோம கால்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க வைட்டமின் பி12 உதவிகரமாக இருக்கிறது. இதில் பற்றாக்குறை ஏற்படும்போது நமது ரோமக் கால்கள் முறையாக வளர்ச்சி அடையாது. இதன் காரணமாக முடி உதிரக் கூடும். சிலருக்கு வாய்ப்புண் மற்றும் மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மற்ற பொதுவான அறிகுறி

முடி உதிர்வு, இளநரை போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் உடல்சோர்வு, மயக்கம், தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வெளிரிய நகங்களும் கூட வைட்டமின் பி12 பற்றாக்குறை அறிகுறிதான். கிருமித்தொற்று, மூச்சு இரைப்பு, தசை பலகீனம், வலி போன்றவையும் இதன் அறிகுறிகள் தான்.

மூளையை பாதிக்கும்

வைட்டமின் பி12 பற்றாக்குறையால் மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். நினைவாற்றல் பிரச்சனை, கவனத்திறன் குறைபாடு, மன அழுத்தம், திடீர் கோபம், எண்ணங்களில் தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்

வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக இந்த பற்றாக்குறையை நாம் போக்க முடியும். அதே சமயம், பற்றாக்குறை மிகுதியாக இருந்தால் பி12 சத்து மாத்திரைகள் அல்லது ஊசி போன்றவற்றை மருத்துவர் பரிந்துரை செய்வார்.

விலங்கு இறைச்சி, குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கானாங்கெளுத்தி, டுனா, சால்மன் போன்ற மீன்களில் பி12 சத்து மிகுதியாக இருக்கிறது. இதேபோன்று முட்டையிலும் பி வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றன. பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். 




Click here to join whatsapp group for daily health tip

சிற்றுண்டி பிரியரா நீங்கள்..? அப்போ இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்குதான்...

August 01, 2022 0

 நீங்கள் வீட்டில் இருந்து கொண்டோ அல்லது அலுவலகத்திற்கு சென்றோ வேலை செய்யும் போது நாள் முழுவதும் சிற்றுண்டி எடுத்துக்கொள்வது நமது தினசரி உணவில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்பதற்காக நாம் எளிதில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்களையும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளையும் பின்பற்றுவதால் பலரின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்காக, உங்கள் உணவை எடுத்துகொள்வதில் விழிப்புடன் இருப்பது முக்கியம்.

Snaqary ன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான Anchal Abrol ஊழியர்களுக்கான சில ஸ்மார்ட் சிற்றுண்டி குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

உடலின் நீர்சத்து அளவு:

நாள் முழுவதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலுக்கு சரியான அளவு நீர் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நம்மில் நிறையபேர் அதை எடுத்துக்கொள்வதில்லை. நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது நமது உடலுக்கு மிகவும் முக்கியம். நீங்கள் வீட்டிற்குள் இருந்தாலும் உடலில் நீர்ச்சத்து குறையும், ஆதலால் தண்ணீர் பாட்டிலை பக்கத்தில் வைத்துக்கொண்டு தண்ணீரை பருகும் பழக்கத்தை வளர்த்துகொள்வது நல்லது.

உங்கள் அன்றாட வாழ்க்கையில் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற ஆரோக்கியமான பானங்களை குடிப்பது ஆரோக்கியமான நீர்சத்துக்கு வழிவகுக்கும்.

சர்க்கரை அதிகமாக மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம், ஏனெனில் அவை ஆரோக்கியமானவை அல்ல, மேலும் இந்த வகை பானங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது.

உணவு தயாரிப்பு

வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்யும் போது நாம் அலுவலகத்தில் இருப்பதை விட சற்று குறைவாகவே உணவுகளை எடுத்துகொள்கிறோம். எனவே, வீட்டிலிருந்து வேலை செய்யும் நாட்களிலோ அல்லது பிஸியான அலுவலக நாட்களிலோ அதிகமான அளவு அல்லது எளிதில் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே செய்து வைக்கப்படும் இந்த உணவைத் திட்டமிட்டுத் தயாரிப்பது முக்கியம்.மேலும் உங்கள் வேலை நாட்களின் அட்டவணையுடன் ஒத்துப்போகும்படி இந்த உணவு அட்டவணையை உருவாக்குங்கள்.

சமையலறையில் ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சேர்க்கவும்

உங்கள் குளிர்சாதனப்பெட்டி அல்லது சமையலறையில் கெட்ட கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை சேமிக்க வேண்டாம்.

உங்கள் வீட்டிற்கு வெளியே சாப்பிடும் உணவை தவிர்க்க முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் நாம் எப்போதும் உண்ணும் உணவுகள் அதாவது வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சாலட்டில் விதைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவுகளுக்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை மாற்றவும்.

கக்ரா (khakhra), ஜாவர் அல்லது குயினோவா பஃப்ஸ், சோளம், வேகவைத்த பகர்வாடி, வறுத்த மக்கானாக்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டி உணவுகளை பின்பற்றலாம். இந்த தின்பண்டங்கள் பசியை போக்க சிறந்தவை. மேலும் உடனடி ஆற்றலை உறுதி செய்யும் புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவும்.


ஆரோக்கியமான உணவில் கவனமாக இருங்கள்

ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகள் நம்மை நீண்ட நேரம் வேலை செய்வதற்கும், கவனசிதைவு ஏற்படாமலிருப்பதற்கும் உதவுகிறது.ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உண்வுகளை பொருத்து அமையும், ஏனெனில் இந்த வகை உணவுகள் தூக்கமின்மையை போக்கி நம் மனநிலையை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.

அடுத்த முறை நீங்கள் பசியுடன் இருக்கும்போதும், ​​ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட விரும்பும்போது, அந்த ​​உணவு உங்கள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகளை கவனியுங்கள். அதற்கு பதிலாக, புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நீங்கள் கவனம் செலுத்துங்கள். முன்கூட்டியே திட்டமிடுவது, சுவையாக தோன்றும் என்பதையும், அலட்சியமாக நாம் இருப்பதை தவிர்க்கும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

உண்பதற்கு முன் சிற்றுண்டிகளை எடுத்து வைக்கவும்

வெளியே செல்லும்போது பை அல்லது டிபனில் சாப்பிட திண்பண்டங்களை எடுத்து வைக்க வேண்டாம். அதிகப்படியான ஆரோக்கியமான உணவுகள் கூட நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இதனால் சிற்றுண்டிகளுக்கான பகுதிகளை பிரிப்பது அவசியம். போதுமான அளவு சாப்பிடலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது நல்லது.

Click here to join whatsapp group for daily health tip

உடற்பயிற்சி, டயட்... இவை எதுவும் உடல் எடையை குறைக்க உதவலையா..? அப்போ இதை டிரை பண்ணி பாருங்க..

August 01, 2022 0

 ஆரோக்கியமான முறையில் எப்படி எடை குறைப்பது என்பது தற்போது பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை! எடை குறைக்க முடியாமல் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2012 ஆம் ஆண்டின் கணக்குப்படி ரெண்டரை கோடி மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 3.4 கோடியாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட இந்தியன் அடல்ட் மக்கள் தொகையில் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4% அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வெளியிட்ட அறிக்கை குறிக்கின்றது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலேயே உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதிலும் 67.5 கோடி மக்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சுறுத்தக்கூடிய தகவலும் வெளியாகியுள்ளது.

உடல் பருமன் என்றால் என்ன..?

மூத்த பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ராஜ் பழனியப்பன் உடல் பருமனை பற்றி கூறுகையில், ‘உடல் பருமன் என்பது உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை குறைக்கிறது. வழக்கமாக ஒரு உடலில் இந்த அளவுக்கு தான் கொழுப்பு இருக்க வேண்டும் என்பதை விட அதிகமாகவோ அல்லது அசாதாரணமான அளவிலோ கொழுப்பு சேர்வது உடல்பருமன் என்று கூறப்படுகிறது. இந்த நிலையால் உடல் ஆரோக்கியமும் உடல் நலமும் பெரிதாக பாதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

உடல் பருமனை பாடி மாஸ் இன்டெக்ஸ் என்ற அளவீட்டின்படி கணக்கிடலாம். அதுமட்டுமல்லாமல் ஒரு நபரின் பூர்வீகத்தின் அடிப்படையில் BMI கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, தெற்கு ரஷ்யர்கள், ஆப்பிரிக்கர்களின் பிஎம்ஐ 30 க்கு மேல் இருக்கலாம் ஆசிய மற்றும் அரேபிய நாடுகளில் காகசியர்களை விட 2.5 புள்ளி குறைவான BMI தான் சராசரி அளவாகக் கருதப்படுகிறது.

உடல்பருமனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன?

உடல் பருமன் என்பது சமீப காலமாக மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உடல் பருமன் என்பது ஒரு நேரடி நோய் அல்ல என்றாலும் உடல் பருமனால் பல விதமான தீவிரமான நோய்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை உட்பட இதய நோய் பாதிப்புகள் மற்றும் ஸ்லீப் அப்னியா எனப்படும் தூக்கம் சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் அனைத்துமே உடல் பருமனுடன் தொடர்புடையது. அது மட்டுமில்லாமல் எலும்பு தேய்மானம், எலும்பு உருக்குதல், கல்லீரல் கொழுப்பு நோய் ஆகியவையும் உடல் பருமனால் ஏற்படக்கூடிய நோயாகும். உடல் பருமன் ஒரு நபரின் ஆயுளை 10 % வரைக் குறைக்கிறது இன்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டில் இருந்தும் ஏன் எடை குறையவில்லை?

நமக்கு வயதாக வயதாக வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் குறைய துவங்கும். உடல் பருமன் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். எனவே தான் உடலின் மெட்டபாலிசத்தை சரியான அளவில் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு தான் உடல் உழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை தினமும் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் உடற்பயிற்சி மட்டும் செய்து உணவு கட்டுப்பாடு இல்லாமல் அல்லது டயட் பின்பற்றி உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் மெட்டபாலிசம் மாற்றம் அடையாமல் உடல் எடை குறையாது.

அது மட்டுமல்லாமல் பெண்களை பாதிக்கும் ஹார்மோன் இம்பேலன்ஸ், பிசிஓடி, தைராய்டு ஆகிய குறைபாடுகளால் உடல் எடை குறைப்பதில் சிரமம் ஏற்படலாம். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் ‘தூக்கமின்மை’ என்று மருத்துவர் தெரிவிக்கிறார். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் இவை இரண்டையும் சரி செய்யும் வரை எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், டயட் பின்பற்றினாலும் உடல் எடை குறையாது என்று அவர் தெரிவித்தார்.

உடல் பருமனுக்கு வேறு தீர்வு - எடை குறைப்பு அறுவை சிகிச்சை

என்ன செய்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு பேரியாட்ரிக் சர்ஜரி என்ற எடை குறைப்பு அறுவை சிகிச்சை உதவும். சராசரியான உடல் எடையை விட பெண்கள் 30 கிலோ எடை அதிகமாக இருந்தாலும், ஆண்கள் 40 கிலோ எடை அதிகமாக இருந்தாலும், உடல் பருமனால் அன்றாட வேலைகளை செய்ய முடியவில்லை என்றாலும் இந்த அறுவை சிகிச்சையை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளலாம்.

பாரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல முறைகள் உள்ளன. உங்களுடைய உடல் ஆரோக்கியம், நீங்கள் எவ்வளவு எடை குறைக்க வேண்டும் மற்றும் இணை நோய்கள் அபாயம் என்ற பல விதமான காரணிகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல மருத்துவர்கள் உங்களுக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைப்பார்.

Click here to join whatsapp group for daily health tip