கார்னியாவின் சுற்றளவைச் சுற்றி ஒரு வெள்ளை வளையத்தை தோன்றுவதை கார்னியல் ஆர்கஸ் என்று அழைக்கிறோம். இந்த வெள்ளை வளையம் இயற்கையாகவே வயதானவர்களிடத்தில் காணப்படுகிறது என்றாலும் இது அதிக கொலஸ்ட்ரால் அளவுகளின் விளைவாக எந்த வயதிலும் ஏற்படலாம். கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு இது உருவாகிறது, அதேசமயம் கார்னியல் ஆர்கஸ் பார்வையை பாதிக்காது, இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.
3) விழித்திரை நரம்பு அடைப்பு:
கண்ணின் பின்புறத்தில் ஒளியை உணரக்கூடிய விழித்திரை எனும் திசு உள்ளது, விழித்திரைக்கு தமனி மற்றும் நரம்பு வழியாக இரத்தம் அனுப்பப்படுகிறது. நரம்புகளில் பிளாக் ஏற்படும்போது விழித்திரை நரம்பு அடைப்பு ஏற்படுகிறது, விழித்திரை தமனி அடைப்பு பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தமனி பிளாக் ஆவதால் ஏற்படுகிறது. நரம்பு பிளாக் ஆகும்போது இரத்தமும் திரவமும் கலந்து விழித்திரையில் கசியும், அப்போது வீக்கம் காரணமாக உங்கள் மையப் பார்வை பலவீனமடையும். மங்கலான பார்வை, பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது கோடுகள், கண்ணில் வலி மற்றும் பார்வையில் மாற்றம் போன்றவை இவற்றிற்கான அறிகுறியாகும். இதற்கு சிகிச்சை கொழுப்பைக் குறைப்பது தான்.