உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உப்பு மற்றும் இதய நோய் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது. இதில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உப்பின் அளவு மூலம் எப்படி குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின்படி, உப்புக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் 1 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை 4% மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6% வரை குறைக்கலாம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.