Agri Info

Adding Green to your Life

September 12, 2022

சென்னையில் ரூ.1,00,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க விவரம் காண்க

September 12, 2022 0

 தேசிய தொற்று நோயியல் நிறுவனம் காலியாக உள்ள 56 பணிகளுக்கான காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  Consultant , Project Technician, Project Research Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர்.

வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண்NIE/PE/Advt/September/2022/26
நிறுவனம் / அமைப்பின் பெயர்National Institute of Epidemiology Chennai
பதவிகளின் பெயர் Consultant , Project Technician, Project Research Assistant
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை56 காலியிடங்கள்
வேலை வகைமத்திய அரசு வேலை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி16/09/2022
அறிவிப்பு வெளியான தேதி01/09/2022
பணியிடம்சென்னை
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை Email முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிEmail ID : nieprojectcell@nieicmr.org.in
சம்பள விவரம்ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் வேறுபடுகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வயது விவரம் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்https://nie.icmr.org.in/
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

மொத்த  காலியிடங்கள் எண்ணிக்கை : 

Consultant (Scientific/Technical- Medical/ Non-medical)03 காலியிடங்கள் (UR)
Project Scientist – B (Non-medical)01 காலியிடங்கள் (ST)
Project Research Assistant10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1)
Project Technician II10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1)
Consultant (-Scientific Technical /-Medical)02 காலியிடங்கள்  (UR)
Project Research Assistant30  காலியிடங்கள்  (UR – 12, EWS – 3, OBC – 8, SC – 5, ST – 2)

சம்பள விவரம் :

Consultant (Scientific/Technical- Medical/ Non-medical)Medical ரூ. 1,00,000/- மாதம்Non-medical ரூ. 70,000/-மாதம்
Project Scientist – B (Non-medical)ரூ. 48,000/- மாதம்
Project Research Assistantரூ. 31,000/- மாதம்
Project Technician IIரூ. 17,000/- மாதம்
Consultant (-Scientific Technical /-Medical)ரூ. 1,00,000/- மாதம்
Project Research Assistantரூ. 31,000/- மாதம்

கல்வித் தகுதி : 

Consultant
Medical1. MBBS professionals withMD (Community Medicine / PSM) ORDNB (Epidemiology) ORPhD (Epidemiology / Public Health / OperationalResearch) ORMasters (Epidemiology / Public Health)2. Published Papers.
Non-medical1. MPH/ PhD (Epidemiology/Public Health) with relevant R&DExperience.2. Published Papers.
Project Scientist – B (Non-medical)1st class master’s degree in Statistics/Biostatistics from a

recognized university with two years’ experience in Health

research.(OR)2nd class master’s degree with Ph.D. in

Statistics/Biostatistics from a recognized university

Project Research AssistantGraduate in Sociology / Social Work / Social Sciences / Life

Sciences from a recognized University with three years

work experience in public health project / health care

management from a recognized institution with three years

work experience in relevant field from a recognized

institution.(OR)Master’s degree in Sociology / Social Work / Social

Sciences / Life Sciences / Public Health / Epidemiology

from a recognized university.

Project Technician IIஉயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு சமமான ஐந்தாண்டு அனுபவத்துடன்

அரசு நிறுவனத்திலிருந்து தொடர்புடைய துறை அல்லது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது ஒரு வருட பயிற்சிக்கான சான்றிதழ்

அல்லது ITI அல்லது National Trade Certificate,

National Council for Vocational Training and ATS முடித்தல்

Consultant (-Scientific Technical /-Medical)MBBS Professionals with

MD (Community Medicine / PSM) or DNB (Epidemiology) or

PhD (Epidemiology / Public Health / Operational Research) or

Masters (Epidemiology / Public Health)

AND

Published Papers in relevant areas- In peer-reviewed scientific

journals

Project Research AssistantGraduate in Sociology / Social Work / Social Sciences /

Statistics / Biostatistics / Life Sciences from a recognized

University with three years work experience in public health

project / health care management from a recognized

institution

(OR)

Masters degree in Sociology / Social Work / Social

Sciences / Statistics / Biostatistics / Life Sciences /

Public Health / Epidemiology from a recognized

university.

காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

படி 1 : அறிவிப்பினை முழுமையாகப் படிக்கவும்.

படி 2 : அறிவிப்பின் கீழே விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

படி 3 : விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

படி 4 : தேவையான ஆவணங்களை நகல் எடுத்து இணைக்கவும்.

படி 5 : ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை nieprojectcell@nieicmr.org.in என்ற மின்அஞ்சல் முகவரிக்கு 16.09.2022 தேதி மாலை 05:00 மணிக்குள் அனுப்பவும்.

அறிவிப்பினை காண

https://nie.icmr.org.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-26.pdf

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 


ஆசிரியர் வேலை தேடுறீங்களா? வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு - முழுவிவரம்

September 12, 2022 0

 நாகர்கோவிலில் வருகின்ற  18.09 .2022  (ஞாயிற்று கிழமை)  ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஇருக்கின்றது . இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம் உள்ள இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் . இந்த வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது. இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

BEd ,Med, Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வுக்கு வரும் போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டு வரவும். அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன.

மேலும் நீங்களே ஏதாவதுஒரு topic தேர்ந்தெடுத்து படித்துவரவும் . DEMO CLASS எடுக்க தயாராகவரவும் . நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு 18.09.2022 ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்குள் மேற்கண்ட விலாசத்திற்கு நேரில் வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு :

முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்துவிட்டு 18.09 .2022 ஞாயிற்று கிழமை அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில்வரவும்.

ஏற்கனவே நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் முன்பதிவு செய்தவர்கள் மீண்டும் முன்பதிவு செய்ய தேவை இல்லை.

முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரில் வந்து பதிவு செய்து விட்டு நேர்முகத் முகத்தேர்வில் நேரடியாககலந்து கொள்ளலாம் .

முன்பதிவுசெய்யும்வழிமுறைகள்

www.tnschoolteachers.com என்றஇணையத்தளத்தில் FOR TEACHERS ---- SIGNUP --- CLICK செய்து பதிவு செய்யவும்.

மீண்டும் TEACHERS LOGIN கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணையும், நீங்கள் கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

FILL YOUR COMPLETE DETAILS என்ற MENUவை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

மேற்குறிப்பிட்ட ( www.tnschoolteachers.com ) இணையத்தளத்தில் பதிவு செய்துவிட்டு 18.09.2022 ஞாயிற்று கிழமை அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் .

நேர்முகத்  தேர்வுக்கு எடுத்து வரவேண்டியவை :

1) நேர்முகத்தேர்வுக்குவரும்போதுஉண்மைசான்றிதழ்கள் அல்லது நகல்சான்றிதழ்கள் ,

2) PASSPORT SIZE PHOTO-1 மற்றும்

3) விண்ணப்ப கட்டணம் 50/-

தவறான தகவல்களை பதிவுசெய்பவர்கள் விண்ணப்பங்கள்நிராகரிக்கப்படும்.

இடம்: DUTHIE HR SEC SCHOOL FOR GIRLS,COURT ROAD NEAR POTHYS, NAGARKOIL-1

நாள் : 18.09.2022 (ஞாயிற்று கிழமை)

நேரம் : காலை 9 மணிமுதல்மலை 4 மணிவரை

VENUE ON GOOGLE MAP:

https://goo.gl/maps/1QDuvxsttmKv6Rzh8

மேலும் விவரங்களுக்கு

www.tnschoolteachers.com

9788829179

9442568675

தொடர்புகொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

September 11, 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

September 11, 2022 0

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருநெல்வேலி மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டியல் எழுத்தர்/உதவுபவர் பணிக்கு மட்டும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்Tamil Nadu Civil Supplies Corporation
பதவிகளின் பெயர்பருவகால பட்டியல் எழுத்தர் ,பருவகால உதவுபவர் ,
பருவகால காவலர்
மொத்த காலியிடங்கள் எண்ணிக்க
பருவகால பட்டியல் எழுத்தர்59
பருவகால உதவுபவர்54
பருவகால காவலர்52

வேலை வகைதமிழக அரசு வேலைகள்
பணியிடம்திருநெல்வேலி
அறிவிப்பு வெளியான தேதி26.08.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி12.09.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்அஞ்சல் முறையில் (Offline)இந்த வேலைக்கு
விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
சம்பள விவரம்பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.8784/-

பருவகால உதவுபவர் – ரூ.8717/-

பருவகால காவலர் – ரூ.8717/-

கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து
12வது/8வது/பிஎஸ்சி தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது விவரம்01-07-2022 தேதியின்படி SC/SCA/ST – 37,
 MBC/BC/BCM/MBC (V) – 34, OC -32 வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க
கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முகவரியில் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 9F, St தாமஸ் ரோடு மகாராஜா நகர் பாளையங்கோட்டை – 627011

Click here to join WhatsApp group for Daily employment news 


ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு ... ரூ.15,000/- சம்பளம்

September 11, 2022 0

தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16/09/2022 அன்று மாலை 05 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரம் : 

பதவியின் பெயர்மருந்தாளுநர் (Pharmacist),  வாகன
உதவியாளர் (Attender cum Cleaner)
பதவியிடங்களின் எண்ணிக்ககை2
கல்வித்தகுதிPharmacist - D.Pharm. (OR) 
B.Pharm.Attender cum Cleaner - Able to Read & Write.
வயது32 வயது வரை
சம்பள விவரம்ரூ.15,000/-ரூ.8,500/-

செயலாளர், மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.

1.விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட ( https://tenkasi.nic.in/notice category/recruitment/) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவுதபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090991.pdf

https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090932.pdf

Click here to join WhatsApp group for Daily employment news 

September 10, 2022

Pre-Incubation Mentoring Program by MANAGE, Hyderabad

September 10, 2022 0

  Pre-Incubation Mentoring Program by MANAGE, Hyderabad

MANAGE-CIA Organizing an online 22-Day Mentoring Program (Pre-Incubation Program) for aspiring Agripreneurs and Startups to guide them in idea generation, understanding the Agri startup ecosystem and setting up their business.

The program enables the Agripreneurs to move from idea to Minimum Viable Product (MVP Stage) while developing a sound understanding of the business, skills, challenges, and opportunities.

Applications for the Fourth Batch are open now. Last date to apply for the program is September 30, 2022. Interested Participants are requested to register themselves.

The program fee is ₹ 2500/- (Rupees Two thousand five hundred only).

Eligible Participants 

 Agri-Startups 

 Idea stage/Pre-Idea Stage Entrepreneurs 

 Aspiring Entrepreneurs 

 Student & Youth Interested in Agripreneurship 

 Professionals in Agri-Startup Ecosystem 

 Agricultural Extension Professionals




Banking Details -
Beneficiary Name - National Institute of Agricultural Extension Management (MANAGE)
Name of the Bank - State Bank of India
Branch Name- SBI, Rajendranagar, Hyderabad
SB Account No - 52032275803
IFSC Code - SBIN0020074
MICR Code - 500002348

You may contact us at 9642337827 for any further information on the mentoring Program.


Dr. Saravanan Raj
Director (Agricultural Extension)
National Institute of Agricultural Extension Management (MANAGE)
(An Organization of Ministry of Agriculture & Farmers Welfare, Government of India)
Rajendranagar, Hyderabad- 500 030, INDIA
saravananraj.manage@gmail.com


Official Website

Official Notification

Click here to Apply

செயற்கை இனிப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்குமா..? ஆய்வு

September 10, 2022 0

சர்க்கரையில் அதிக கலோரிகள் இருக்கின்றது. சர்க்கரை நிறைய சாப்பிட்டால் அது உடலுக்கு பாதிப்பாக இருக்கும். சர்க்கரையை சாப்பிடக்கூடாது. சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தினால் சர்க்கரை அளவு மற்றும் கலோரிகளும் அதிகரிக்காது என்ற பலரும் சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் பல மடங்கு ஆபத்தானவை என்பது பலருக்கும் தெரியவில்லை. நீங்கள் காபி அல்லது தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்புகளை பயன்படுத்தினால் அது உங்கள் இதயத்தை பாதிக்கலாம் என்பதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

ஃபிரான்சில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சம் பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் விவரம் BMJ என்ற ஜர்னலில் வெளியானது. செயற்கை இனிப்புகள் பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகரிக்கிறதா என்பதை பற்றிய இந்த ஆய்வை சோர்போன் பாரீஸ் நார்ட் பல்கலைக்கழகம் நடத்தியது.

ஆய்வில் பங்கேற்றவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆய்வின் கணக்கிடப்பட்டன. பானங்கள், டேபிள் டாப் இனிப்புகள் மற்றும் பால் பொருட்கள் என்று அனைத்து உணவுப் பொருட்களுமே இந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டது. என்ன சாப்பிடுகிறார்கள் என்பதன் அடிப்படையில் இதய நோய் பாதிப்பு அல்லது நோய்கள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களின் தோராயமான வயது 42 மற்றும் இவர்களில் ஐந்தில் நான்கு பங்கேற்பாளர்கள் பெண்கள்.

இந்த ஆய்வு 9 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரையுமே ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இவர்களில் 1502 பங்கேற்பாளர்களுக்கு கார்டியோவாஸ்குள்ளார் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதில் மாரடைப்பு, பக்கவாதம், இஸ்கேமிக் அட்டாக், ஆன்ஜைனா ஆகியவை அடங்கும்.

செயற்கை இனிப்பை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஒன்பது சதவீதம் அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மற்ற உடல்நல பாதிப்புகளை கணக்கிடாமல், செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதை மட்டும் எடுத்துக் கொண்டால், செரிப்ரோ வாஸ்குலர் நோய்கள் உண்டாவதற்கான அபாயம் 18 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சுக்ரலோஸ், ஏஸ்ஸல்ஃபேம் பொட்டாசியம், அஸ்பார்டெம் ஆகிய செயற்கை இனிப்புகள் செரிப்ரோ வாஸ்குலர் மற்றும் கொரோனரி ஆர்ட்டரி நோய்கள் உண்டாவதற்கான அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

செயற்கை சுவை மணம் மற்றும் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்களால் உணவு வழியாக பானங்கள் வழியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இவற்றை சர்க்கரைக்கு மாற்றான ஆரோக்கியமான மாற்றாக எப்பொழுதுமே கருதக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் இந்தியாவின் இதய நோய் நிபுணர் மற்றும் பிரசிடெண்ட் ஆன மருத்துவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி ‘செயற்கையான சரிவூட்டப்பட்ட உணவுகள், ரசாயனங்கள் ஆகியவை எப்பொழுதுமே இதயத்துக்கு மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். டிரான்ஸ்ஃபாட் என்பவை உணவின் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மையை அதிகரிக்கும். எனவே, டிரான்ஸ்ஃபாட் பயன்படுத்தப்பட்ட உணவுகள் மனிதர்களின் ஆயுளை குறைக்கும்; இதேபோலத்தான் செயற்கை இனிப்புகளும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளபடி செயற்கை இனிப்புகள் சாப்பிடுவதால் ரத்த நாளங்கள் சுருங்கி சரியாக செயல்படாமல் போகும் அபாயம் இருக்கிறது.

உடல் பருமன், கார்டியோவாஸ்குலர் நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை தவிர்க்க செயற்கை இனிப்புகளை பயன்படுத்தாலாம் என்பது தவறான கண்ணோட்டம். அதிகப்படியான செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவது இயற்கையான சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக அமையாது’ என்று தெரிவித்தார்.


Click here to join whatsapp group for daily health tip 

நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...

September 10, 2022 0

 இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக இந்த முதுகு வலி உள்ளது. இது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதுடன், சின்ன சின்ன விஷயங்களையும் செய்ய முடியாமல் தடுத்து மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அவ்வாறு நீங்கள் நாள்பட்ட முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்தலோ அல்லது முதுகு வலி வருவதற்கான ஏதாவது அறிகுறிகள் ஆகியவை தென்பட்டாலோ அதை எவ்வாறு கண்டறிவது என்றும், அவ்வாறு கண்டறிந்த பின்பு அதற்கு எவ்வாறு சிகிச்சை மேற்கொள்வது என்பதை பற்றியும் இங்கு நாம் பார்க்கலாம்.

இதை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறார் எலும்பியல் நிபுணரான டாக்டர். ஹிமான்ஷு பெண்ட்ரே.

முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்:

இது பொதுவாக வயதாகும்போது இயற்கையாகவே ஏற்படும் ஒன்று தான். நம்முடைய முதுகுத்தண்டின் கீழ் பக்கத்தில் உள்ள குருத்தெலும்பானது அதன் வலிமையை இழக்கும் போது அல்லது அதன் தடிமன் ஆனது ஊட்டச்சத்து குறைபாடினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலோ அதன் மீது அதிகபடியான அழுத்தம் ஏற்படும்போது அது முதுகுத்தண்டில் வலியை ஏற்படுத்துகிறது.

மேலும் முதுகு வட்டெலும்பு, தன்னுடைய இடத்திலிருந்து சற்று விலகி செல்வதினாலும், அந்த எலும்பு பகுதியில் ஏற்படும் வீக்கத்தினாலும் மையோபேசியல் பெயின் சிண்ட்ரோம்(Myofascial pain syndrome) எனப்படும் நோய் ஏற்பட்டு அது தசைகளில் வலியை உண்டாக்கும். இதனாலும் நமக்கு முதுகு வலி ஏற்படும்.

பெரும்பாலான மக்களுக்கு முதுகுப் பகுதியில் ஏற்படும் எதிர்பாராதவிதமான காயங்களினாலும் அல்லது சில நேரங்களில் கீழே விழுவதினாலும் எலும்பு முறிவுகள் மற்றும் தசை பிடிப்புகளினாலும் அவர்கள் முதுகு வலியை அனுபவிக்கலாம். அதிக கனமான பொருளைத் தூக்கும் போதும் முறையற்ற கோணத்தில் சாய்ந்து நீண்ட நேரத்திற்கு அமர்வது அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்யும்போது அவை நேரடியாக முதுகுத்தண்டில் தாக்கத்தை ஏற்படுத்தி தாங்க முடியாத வழியை உண்டாக்கலாம்.

அறிகுறிகள்:

ஆரம்பத்தில் முதுகு பகுதியில் லேசான வலி ஏற்படுவது உடல் எடை குறைதல் காய்ச்சல், முதுகு பகுதியில் வீக்கம் ஆகியவையும் ஏற்படலாம். இது நாளடைவில் தாங்க முடியாத முதுகு வலியையும், காலுக்கு கீழே வலியையும் ஏற்படுத்தும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது அசவுகரியத்தையும் உண்டாக்குவதோடு உடல் சோர்வையும் அதிகமாக ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

சிகிச்சை முறை:

மருந்து மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் நாம் இதை குணப்படுத்தலாம். பல நேரங்களில் மருந்துகளோடு சரியான முறையில் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதும் இதனை பெரும் அளவில் குணப்படுத்தும். கை கால்களை நீட்டி தசைகளுக்கு பயிற்சி அளிப்பதும் உடற்பயிற்சி செய்வதும் நம்முடைய உடலின் நரம்பு மண்டலங்களையும் தசைப்பகுதிகளையும் வலுவாக்கும் உடற்பயிற்சிகளை செய்வதும், எப்போதும் சரியான ஒரு உடல் தோரணையில் நடப்பதும், யோகாசனம் ஆகியவையும் முதுகு வலியை பெரும் அளவில் குணப்படுத்தும்.

உணவில் சரியான அளவு கால்சியம் மற்றும் இதர சத்துக்களையும் உடைய உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் புகை பிடிக்கும் நபராக இருந்தால் அதை இப்போதே கைவிடுங்கள். ஏனெனில் புகை பிடிப்பது அடிப்பக்கம் முதுகு வலியை மிக அதிக அளவில் ஏற்படுத்தும். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்படுத்தும் போது சூடான ஒத்தடம் கொடுப்பது அல்லது சில நேரங்களில் ஐஸ்கட்டிகளை துணியில் சுற்றி அதன் மூலம் ஒத்தடம் கொடுப்பதும் நல்ல பயனை கொடுக்கும்.

Click here to join whatsapp group for daily health tip

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டாப் 7 உணவுகள்

September 10, 2022 0

 நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதன் பயன் தான் கண்பார்வை குறைபாடு பிரச்சனை என்பது அவர்களுக்கு வயதாகும் போது தான் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு மாறி வரும் உணவு முறையால் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் பணிக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என பலருக்கும் கண்பார்வை குறைபாடு பிரச்சனை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சிறு வயதில் இருந்தே கண்ணாடி போட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கண்கள் இல்லை என்றால் எதுவுமே நம்மால் செய்ய முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு கண்களின் ஆரோக்கியத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எத்தனை தான் கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வைத்தியம் இருந்தாலும் அதெல்லாம் தற்காலிகத் தீர்வு தான். நிரந்த பலன்களைப் பெற வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே கண்பார்வை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இந்நேரத்தில் கண்களின் பார்வை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப்பொருள்களின் லிஸ்ட் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.

 கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப்பொருள்கள் :

கீரைகள்: கண் நல்லா தெரியனும்னா கீரையை சாப்பிட வேண்டும் என்ற வார்த்தையை சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்தளவிற்கு கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.

கீரைகள்: கண் நல்லா தெரியனும்னா கீரையை சாப்பிட வேண்டும் என்ற வார்த்தையை சிறு வயதில் இருந்தே பெற்றோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். அந்தளவிற்கு கீரையில் கண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்க்கும் போது கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும்.

சர்க்கரை வள்ளக்கிழங்கு : இதில் கண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஒருவரின் கண்பார்வை குறைபாடுகளை சரி செய்ய மற்றும் மேம்படுத்துவதற்கு உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.

September 8, 2022

தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..? நீங்கள் தூங்கும் பொசிஷன் கூட காரணமாக இருக்கலாம்..!

September 08, 2022 0

தூக்கமின்மை என்பது பிரச்சனையாக இருந்தது போய் இப்போது நீண்டகால நோய் என்றே அழைக்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் தூக்கமின்மை பிரச்சனை அதிகரித்துவிட்டதாக ஆய்வுகளும் கூறுகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவிய பிரச்சனையாகவும் மாறியுள்ளது. இதை சரி செய்வது மருந்து மாத்திரைகளால் மட்டும் சாத்தியமல்ல. நம் வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு தூக்கமின்மைக்கு நாம் எப்படி தூங்குகிறோம் என்பதும் அவசியம்.

ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை என்கிறார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு பேட்டியளித்த எலும்பியல் நோய் மருத்துவர் செந்தில் குமார். இதை மூத்த எலும்பியல் நோய் அலோசகர் யோகேஷ் குமாரும் உறுதி செய்துள்ளார்.

அவர் பேசியதில் “ நாம் தூங்கும் பொசிஷன் தவறாக இருந்தால் அது தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. அதோடு போதுமான தூக்கமின்மை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

சரியான தூக்க நிலைதான் என்ன..?

சரியான தூக்க நிலை என்பது நம் தலையிலிருந்து இடுப்பு எலும்பு வரை சீரான தோற்றத்தில் இருக்க வேண்டும். அதாவது முதுகெலும்பு நடுநிலையான தோற்றத்தில் இருக்க வேண்டும்.

National Library of Medicine வெளியிட்டுள்ள ஆய்வின் படி குழந்தைகள் விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்தவாறு தூங்குதல் மற்றும் பக்கவாட்டில் சாய்ந்து தூங்குதல், கவிழ்ந்து படுத்த என அனைத்து நிலைகளிலும் மாறி மாறி தூங்குவார்கள். பெரியவர்களாக இருக்கும் பட்சத்தில் பக்கவாட்டில் சாய்ந்தபடி தூங்குதல் அல்லது நிமிர்ந்தபடி முதுக்குப்புறம் தூங்குதலை விரும்புவார்கள்.

பக்கவாட்டில் தூங்கும் நிலை : பெரும்பாலும் பெரியவர்கள் பக்கவாட்டில் சாய்ந்தபடி தூங்குவதையே அதிகமாக விரும்புவார்கள். காரணம் இதுதான் இருப்பதிலேயே மிகவும் சௌகரியமான நிலை என்கிறார் மருத்துவர் செந்தில். ஏனெனில் இந்த நிலையில்தான் நம் முதுகெலும்பு நடுநிலையில் சீரான தோற்றத்தில் இருக்கும் என்கிறார். நம் மெத்தையும் சீரான நிலையில் இருக்க வேண்டும் இல்லையெனில் கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி வரும் என்கிறார்.

விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்து தூங்கும் நிலை : பலரும் விட்டத்தை பார்த்தபடி நிமிர்ந்து படுப்பார்கள். இதுவும் பொதுவான தூங்கும் நிலைதான். இப்படி தூங்கும்போதும் உங்கள் முதுகுத் தண்டுவடம் நடுநிலையான தோற்றத்தில் இருக்கும். உங்களுக்கு மற்ற காரணங்களால் கழுத்து, தோள்பட்டை வலி இருந்தாலும் இந்த பொசிஷனில் தூங்கும்போது சரியாகும் என்கிறார். அதோடு தலையணையால் தலையை உயர்த்தி படுக்கும்போது ஆசிட் ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சனைகளைக் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்கிறார்.

தவறான தூங்கும் நிலைகள் :

மருத்துவர் செந்தில் ”வயிறும் , மார்பும் தரையில் படும்படி குப்புற கவிழ்ந்து படுப்பது கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்கிறார். ஏனெனில் கவிழுந்து படுக்கும்போது நுரையீரலுக்கு அதிகமான அழுத்தம் உண்டாகும். இதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். இதனால் தூக்கம் தடைபடும்” என்கிறார்.

அதேபோல் தலையணையால் தலை உயரும்போது முதுகுத்தண்டு வடம் சீரான நிலையில் இருக்காது. இதனால் முதுகுக்கு தேவையற்ற தொந்தரவாக இருக்கும். இதனால் முதுகுவலி, அடி முதுகு வலி , கழுத்து வலி உண்டாகும். இந்த நிலையில் இரத்த ஓட்டமும் குறையும் என்பதால் அடிக்கடி நீங்கள் எழுந்துகொள்ள நேரிடும். தூங்கினாலும் அது நிம்மதியான உறக்கமாக இருக்காது.

அடுத்ததாக இரண்டாது மோசமான நிலை கருவில் குழந்தை தூங்கும் நிலை போல் தூங்குதல். இது முதுகு தண்டு வடத்திற்கு ஆபத்தான நிலை என எச்சரிக்கிறார் மருத்துவர். இது பல வகையான முதுகு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்.

கர்ப்பிணிகள் தூங்க சரியான நிலை எது..?

கர்ப்பிணிகள் பக்கவாட்டில் சாய்ந்தவாறு படுப்பதே சரியான நிலையாகும். விட்டத்தை பார்த்தபடி தூங்குதல் மிகவும் தவறான நிலை என்கிறார் மருத்துவர் செந்தில்.

காரணம் இது வயிற்றில் அசௌகரியத்தை உண்டாக்கும். அதேபோல் அவ்வாறு தூங்கும்போது மயக்க உணர்வு, தலை சுற்றுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு கருவில் உள்ள குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதோடு முதுகு வலி, மூச்சுவிடுவதில் சிரமம், செரிமானப் பிரச்சனை, குறை இரத்த அழுத்தம் மற்றும் குழந்தைக்கும் , உங்களுக்கும் மோசமான இரத்த ஓட்டம் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார்.

Click here to join whatsapp group for daily health tip

புறக்கணிக்க கூடாத எலும்பு புற்றுநோயின் முக்கியமான 10 அறிகுறிகள்

September 08, 2022 0

 உடலில் இருக்கும் செல்கள் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வளரும் போது புற்றுநோய் ஏற்பட துவங்குகிறது. உடலின் எந்த பகுதியிலும் உள்ள செல்கள் புற்றுநோயாக மாறி பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவ கூடும்.

இந்நிலையில் புற்றுநோய்களில் மிகவும் அசாதாரண வகைகளில் ஒன்று எலும்பு புற்றுநோய். கட்டுப்பாட்டை மீறி எலும்பில் அசாதாரண செல்கள் வளரும் போது, எலும்பு புற்றுநோய் ஏற்படுகிறது.

எலும்புகளில் துவங்கும் புற்றுநோய்கள் பிரைமரி எலும்பு புற்றுநோய்கள் எனப்படும். ஆனால், இவ்வகையான புற்றுநோய்கள் எளிதில் ஏற்படக்கூடியவை அல்ல. அதே போல, பெரும்பாலான நேரங்களில் எலும்பில் காணப்படும் புற்றுநோய் உடலில் வேறு எங்காவது தொடங்கி பின் எலும்புகளுக்கு பரவுகிறது. இவை செகன்டரி எலும்பு புற்றுநோய்கள் என்று அழைக்கப்படுகிறது.

எலும்பு புற்றுநோய்கள் தீங்கற்றவை அதாவது பரவாதவை மற்றும் வீரியம் மிக்கவை (வெவ்வேறு உடல் பாகங்களுக்கு பரவக்கூடியவை) என்றும் வகைப்படுத்தலாம். எனினும் எலும்பு புற்றுநோய் இருக்கிறது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை மற்றும் அறிகுறிகளை ஒருவர் அறிந்து கொள்வது அவசியம்.

வலி மற்றும் வீக்கம்:

புற்றுநோய் கட்டி இருக்கும் பகுதியில் வலி என்பது மிகவும் பொதுவான அறிகுறி. ஆனால் ஸ்டார்ட்டிங் ஸ்டேஜில் எல்லா நேரத்திலும் வலி இருக்காது. இரவு நேரங்களில் அல்லது பாதிக்கப்பட்ட எலும்பை பயன்படுத்தும் போது, வாக்கிங் போகும் போது வலி மோசமாகலாம். ஆனால் ஒருகட்டத்தில் வலி நிலையானதாக மாறும். சில எலும்பு கட்டிகள் அந்த குதியில் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

நடப்பதில் சிரமம்:

பிறந்ததில் இருந்து ஒரு சிக்கலும் இன்றி நன்றாக நடக்கும் ஒருவர், காரணமேயின்றி திடீரென்று நடப்பதில் சிரமத்தை சந்தித்தால் எலும்பு புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். ஏனென்றால் எலும்பு புற்று நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று இதுவாகும்.

அதீத சோர்வு:

ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்ந்தாலோ, இதுநாள் வரை செய்து வந்த அன்றாட வேலைகளை செய்ய கடினமாக உணர்ந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாதது போல அடிக்கடி உணர்ந்தாலோ முழுமையான சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதீத சோர்வு எலும்பு புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம்.

எலும்பின் மீது கட்டி:

எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளில் கட்டியும் ஒன்றாகும். சில எலும்பு கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் புற்றுநோய் செல்களை உடல் முழுவதும் பரவ செய்யலாம்.

பலவீனமான எலும்புகள்:

எலும்பு புற்றுநோய் எலும்புகளை வலுவிழக்க செய்யலாம். எனவே எளிதில் உடைந்து போகும் வகையில் எலும்புகள் மிகவும் பலவீனமடைவது எலும்பு எலும்பு புற்றுநோய் இருப்பதை குறிக்கலாம்.

மூட்டு விறைப்பு:

மூட்டு விறைப்பு காரணமாக ஒருவர் தனது அன்றாட நடவடிக்கைகளை செய்வதற்கு கஷ்டப்பட்டால், அது எலும்பு புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

முற்றிலும் நகர முடியாமல் போனால்..

ஒருவரால் சுத்தமாக நடக்கவோ அல்லது உட்காரவோ முடியாமல் போனால் உடனடியாக அவர் மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டு எலும்பு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

காய்ச்சல்:

எலும்பு புற்றுநோய் வெள்ளை ரத்த அணுக்களை அழித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்த கூடும். எனவே காய்ச்சல் இதன் அறிகுறியாக இருக்கலாம். தொடர் காய்ச்சல் இருப்பின் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

திடீர் எடை இழப்பு..

பல வகை புற்றுநோய்களை போலவே, எலும்பு புற்றுநோய் சில நேரங்களில் திடீர் எடை இழப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தும். புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான செல்களை விட அதிக ஆற்றலை கோரும் என்பதால், பாதிக்கப்படுபவர்களின் உடல் அதிக கலோரிகளை எரிக்கலாம். இது எடை இழப்பை ஏற்படுத்தும்.

அதிகம் வியர்ப்பது

உடல் புற்றுநோயை எதிர்த்து போராட முயற்சிப்பதாலோ, ஹார்மோன் மாற்றத்தாலோ அல்லது புற்றுநோய் காய்ச்சலை ஏற்படுத்தும் போது உடல் தன்னை தானே குளிர்விக்க முயற்சிக்கும் போதோ அதிக வியர்வை ஏற்படலாம் குறிப்பாக இரவில்.


Click here to join whatsapp group for daily health tip

9-5 மணி வரை ஆபிஸ் ஓர்க்கா.? அப்ப இந்த உணவுப்பழக்கங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க

September 08, 2022 0

 காலை 9 மணி முதல் மாலை 5 வரை அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலே பணிபுரிபவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலையில் எழுந்து அவசர அவசரமாக காலை டிபன் மற்றும் மதிய உணவு இரண்டையும் தயார் செய்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது என சுறுசுறுப்பாகப் பணிகள் செய்யும் நாம் நம்முடைய உணவுபழக்கவழங்கங்களை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் தான் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது.

குறிப்பாக எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தான். இந்த நேரங்களில் உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரியும் சூழலில் ( A 9-to-5 Job) உள்ள நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதோடு பல உடல் உபாதைகளும் ஏற்படும். எனவே சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இத்தகைய பரப்பான சூழலில் பணிக்கு கிளம்பினாலும் காலை, மதியம், சிற்றுண்டி என அனைத்தையும் சரியான விகிதத்திலும் ஊட்டச்சத்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் தான் 9-5 மணி வரை பணியில் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்கம் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான Nmami Agarwal.. இதோ அவை என்ன? என நாமும் அறிந்துக்கொள்வோம்..

இரவு தூங்கி எழும் நாம் காலை உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு கையளவு ஊட்டச்சத்து நிறைய ஏதாவதொரு பருப்புகளை உட்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து காலை உணவை உட்கொள்ள வேண்டும். இட்லி – சாம்பார், தோசை, ஆம்லெட், சப்பாத்தி போன்றவற்றுடன் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப்பொருள்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

இதுப்போன்று மதிய உணவிற்கு ரொட்டி, பருப்பு, சப்ஜி, சாப்பாடு சிறந்ததாகக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர் இதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார். இதோடு ஒரு கிளாஸ் மோர், இளநீர் அல்லது ஏதாவது பழம் சாப்பிடும் போது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிந்தாலும் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக வறுத்த சுண்டல், ஹம்முஸ் போன்றவற்றை சிறிதளவு உட்கொள்ளலாம். இதோடு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது ஏதாவது ஒரு பழங்களை உட்கொள்ளலாம்.

இவ்வாறு நம்முடைய உணவு முறையை சரியான நேரத்தில், சரியான அளவில் உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எந்தவிதமான நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இதனால் காலை 9 மணி முதல் 5 வரை உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிந்தாலும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. இதோடு மட்டுமின்றி உடற்பயிற்சி நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது தூரம் நடக்கலாம் அல்லது பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் இருந்து நடந்தே வர முயற்சிக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். இந்த நடைமுறை நிச்சயம் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

Click here to join whatsapp group for daily health tip

August 23, 2022

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்பீங்க..? இந்த அளவை தாண்டினால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகலாம்...

August 23, 2022 0

உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.


இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

உங்கள் உடலின் இயற்கையான செயல்முறையை பாதிக்கலாம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. இது 96 மில்லிகிராம் கஃபின் கொண்ட ஒரு கப் காபியுடன் ஒப்பிடும்போது குறைவு தான் என்றாலும், தினசரி டீ குடிக்கும் போது அதில் உள்ள கஃபின் நம் உடலின் இயற்கையான சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நாம் விழித்திருக்கும் மற்றும் தூங்கும் நேரம் உட்பட 24 மணி நேர காலப்பகுதியில் நம் உடல்கள் பின்பற்றும் வழிமுறைகளை நமது சர்க்காடியன் அமைப்பு சமநிலைபடுத்துகிறது. ஒளி, மன அழுத்தம், வேலை மற்றும் காஃபின் போன்றவை நம் சர்க்காடியன் ரிதத்தை சமநிலையிலிருந்து மாற்றும்.

நமது இயற்கையான ரிதத்தை பராமரிப்பது மிக முக்கியம். ஏனென்றால் இது பகலில் அதிக எச்சரிக்கையை உணரவும், இரவில் நன்றாக தூங்கவும், ஒட்டுமொத்த சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் நாம் அதிகப்படியான கஃபின் கொண்ட தேநீரை அருந்தினால், அது நம் தூக்கத்தை சீர்குலைக்கும். இது நமது சர்க்காடியன் ரிதத்தையும் சீர்குலைக்கும். 


தொடர்ச்சியாக சீர்குலைந்த சர்க்காடியன் அமைப்பு இருதய பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த முறை நீங்கள் இரவுநேர தேநீர் குடிக்கும்போது கிரீன் டீ க்கு பதிலாக மூலகை டீயை பருகலாம்.

உணவுக்குழாயில் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கலாம்: சூடான தேநீர் குடிப்பது உண்மையில் உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் அல்லது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வடக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வில், உணவுக்குழாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதிக அளவு சூடான பிளாக் டீ குடிப்பது என கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்துள்ளன.

 சூடான காபி மற்றும் சூடான தேநீர் இரண்டும் உணவுக்குழாயில் நீடித்த சேதத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது.
இதற்கான சரியான விளக்கத்தை பெற ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள் இது நமது உணவுக்குழாயின் உள் வெப்பநிலையுடன் தொடர்புடையது என்று நம்புகின்றன. உதாரணமாக, ஒரு கப் டீ 150 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்தால், நமது உணவுக்குழாய் 127 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே கோடையில் ஐஸ் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

உடலில் இரும்புச்சத்து அளவை குறைக்கலாம்: டீ ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரத்த சோகை அல்லது வேறு எந்த வகையான இரும்பு தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் டீ குடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என சில ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளது. புட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிசன் நடத்திய ஆய்வில், பிளாக் மற்றும் கிரீன் டீ ஆகியவை உடலில் இரும்பு சத்து கிடைப்பதை 94% வரை கட்டுப்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் உட்கொள்ளும் ஒரு பொருளின் உயிர் கிடைக்கும் தன்மை முக்கியமானது. ஏனெனில் இது நம் உடலால் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு உறிஞ்சப்படுகிறது என்பதற்கான அளவீடாகும்.

தேயிலையில் காணப்படும் டானின்கள் உடலில் இரும்பு உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று நியூட்ரிசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டானின்கள் தேயிலை, ஒயின் மற்றும் சாக்லேட் ஆகியவற்றில் காணப்படும் ஒரு இயற்கை கலவை ஆகும். மேலும் அவை நிலையான நுகர்வுக்குப் பிறகு இரும்பின் உயிர் கிடைக்கும் தன்மையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்போது, நீங்கள் ​​சோர்வு, அமைதியின்மை, வறண்ட சருமம், தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம் : பிளாக் மற்றும் கிரீன் டீ இரண்டும் டையூரிடிக்ஸ் என்று கருதப்படுகிறது. இவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். டையூரிடிக்ஸ் இயற்கையாகவே சிறுநீரகங்களில் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உடலில் சோடியம் இயற்கையாகவே தண்ணீருடன் வெளியேறும். டீ சில நேரங்களில் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும், இது பெரும்பாலும் நீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிரமப்படாத ஒருவரில் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.

தி பார்மா இன்னோவேஷன் இதழில் வெளியான அறிக்கையின்படி, கிரீன் மற்றும் பிளாக் டீ-யில் உள்ள டையூரிடிக் தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு மற்றும் நீரிழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இது சோம்பல், அதிகரித்த அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கடுமையான தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்: டீயில் காணப்படும் பல இயற்கை சேர்மங்களில், தியோபிலின் கவனிக்க வேண்டிய பொதுவான ஒன்றாகும். இந்த கலவை காபி மற்றும் டீ இரண்டிலும் காணப்படுகிறது. மேலும் சில நேரங்களில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு காற்றுப்பாதை தசைகளை மென்மையாக்க பயன்படுகிறது. இது அதன் சுவாச நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இது சில லேசான மற்றும் எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். புற்றுநோய் ஆராய்ச்சிக்கான இன்டெர்னல் ஏஜென்சி அமைப்பின் அறிக்கையின்படி, தியோபிலினை உட்கொள்வது இரைப்பை குடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். பிற ஆதாரங்களும் தியோபிலின் மலச்சிக்கல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கனவே வயிற்றுப் பிரச்சினைகளை அனுபவிக்கும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு பிடித்த ஒரு கப் டீ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.


Click here to join whatsapp group for daily health tip