Agri Info

Adding Green to your Life

September 28, 2022

Indian Polity - Salient features of constitution PART 01 |இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள்

September 28, 2022 0

நீங்கள் இப்படியெல்லாம் மொபைல் ஃபோன் பார்த்தால் கண்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி..!

September 28, 2022 0

இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும் இலவசமாக சில உடல் நலப்பிரச்சனைகளையும் நாம் வாங்க நேரிடுகிறது. குறிப்பாக இன்றைக்கு குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் அனைவர்களிடம் மொபைல் மற்றும் லேப்டாப், கணினி பயன்பாடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தும் போது கண் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு கண் பார்வை இழப்பையும் நமக்கு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

குறிப்பாக வெயிலில் ஸ்மார்ட்போன்களை மக்கள் பயன்படுத்தும் போது, சூரிய ஒளிக்கதிர்களால் நேரடியாக இல்லாமல் போனின் திரை வழியாக பிரதிபலித்து கடுமையான விழித்திரை பாதிப்பு நமக்கு ஏற்படுத்துகிறது. மற்றும் கண்பார்வை முற்றிலும் தெரியாமல் போய்விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சமீபத்தில் இது தொடர்பாக மருத்துவர்கள் நடத்திய சோதனையில் வெயிலில் மொபைல் போன்களைப் பார்க்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்அனைவரையும் பாதித்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நேரம் வெயிலில் மொபைலைப் பயன்படுத்தும் போது சூரிய கதிர்களின் பிரதிபலிப்பால், விழித்திரையின் பின்புறத்தைப் பாதிக்கும் மாகுலர் டிஜெனரேஷன் என்றழைக்கப்படும் மாகுலோபதி என்ற நோய் பாதிப்பை அடைகின்றனர். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குருடர்களாக மாற மாட்டார்கள். அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழப்பைச் சந்திக்கின்றனர். பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை மொபைலிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியினால் ஆரம்பத்தில் தொலைவில் இருக்கும் பொருள்களின் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இப்பிரச்சனை 20 வயதாக இருந்தாலும் சரி 40 வயதாக இருந்தாலும் சரி அனைவரையும் பாதிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க மொபைல் போன்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் மற்றும் வெயிலில் அதிக நேரம் செல்போன்களை உபயோகிக்கக் கூடாது என அறிவுத்துகின்றனர் மருத்துவர்கள். இதோடு சூரிய கதிர்களை நேரடியாக பார்த்தால் தான் கண்பார்வை பிரச்சனை ஏற்படும் என்பதில்லை,. மொபைல் போன்களில் சூரிய ஒளி பிரதிபலித்து நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கண் பார்வையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

மொபைல் போன்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பார்க்கும் நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சற்று உங்களது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

செல்போன்களில் ஒளித்திரை நம் கண்களின் மட்டத்திற்கு மேல் இருக்கக்கூடாது. எப்போதும் கண்களுக்கு கீழே தான் இருக்க வேண்டும்.

பகல், இரவு என உங்களது சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் ஒளித்திரையின் பிரைட்னஸை மாற்றி அமைக்க வேண்டும். இது கண்களைப் பாதுகாக்க உதவும்.

மொபைல் போன்களில் வீடியோக்களை அல்லது செய்திகளை ஆர்வத்துடன் பார்க்கும் போது கண் சிமிட்ட மறந்துவிடுகிறோம். கண்களில் உள்ள திரவம் தான் நம்முடைய கண்களைப் பாதுகாக்கிறது. கண்கள் வறண்டு போகும் போது வலி, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்.

வெளியில் செல்லும் போது கண் நோய்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க பயனுள்ள சன்கிளாஸ்களை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயதானவர்கள் கண்களை ஆண்டிற்கு ஒருமுறையாவது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்

மேற்கண்ட முறைகளில் பாதுகாப்போடு உங்கள் மொபைல் போன்களை நீங்கள் உபயோகித்த பின்னரும் கண்பார்வை பிரச்சனை, கண்களில் வலி இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip 

 

பிளாஸ்டிக்களுக்கு மாற்றுப்பொருள்கள் தயாரிப்பில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு ஓர் அசத்தல் வாய்ப்பு!

September 28, 2022 0

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்டஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா? உங்கள் வணிகத்தில் குறைந்த விலையில் பிளாஸ்டிக்- அல்லாத மாற்றுப் பொருட்களை அடையாளம் காண வேண்டுமா?

அப்படியென்றால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

இன்று, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் தொடர்பான தேசிய கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். 150 அரங்குகள்  கொண்ட இந்த கண்காட்சியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார்/அரிசி- தவிடு/அரிசி- மட்டை/விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள், துணி/சணல் பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள்  தங்கள் தயாரிப்புகளையும், இயந்திரங்களையும் காட்சிப் படுத்தி வருகின்றனர். மேலும், இறுதி நாளை, தொழில்முனைவோருக்கான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும்,  தொழில் முனைவோர்களுக்கு நிதி ஆதாரங்களை பெறும் வகையில் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த தேசிய கண்காட்சிக்கு  அனுமதி முற்றிலும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில் முனைவோர்களும், ஹோட்டல், சினிமா, கல்யாண மண்டபம்  போன்ற வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில்  கலந்து கொண்டு பலனடையலாம்.

முன்னதாக, தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை 01.01.2019 முதல் பயன்படுத்த தடை விதித்தது. மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை" எனும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

Click here to join WhatsApp group for Daily employment news 

20,000 பணிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு: சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்!

September 28, 2022 0

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதார் நிலை தேர்வுக்கு (SSC- CGL) தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளதாவது:-

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Click here to join WhatsApp group for Daily employment news 

September 22, 2022

ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்...

September 22, 2022 0

 ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சோளத்தில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதில் பயனுள்ளதாக இருக்கும். இது செல் உருவாக்கத்தில் தொடங்கி உடலின் அனைத்து முக்கிய செயல்முறைகளையும் ஊக்குவிக்கிறது. ஸ்வீட் கார்னின் மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் தெரிந்து கொள்வோம்.

ஸ்வீட் கார்ன் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது. இனிப்பு சோளத்தில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் : StyleCraze.com படி, இனிப்பு சோளத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தை ஜெல் ஆக மாற்றுவதன் மூலம் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஸ்வீட் கார்னில் கரோட்டினாய்டுகள் மற்றும் பயோஃப்ளவனாய்டுகள் உள்ளன. அவை இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரிக்கின்றன.

சிறந்த செரிமானம் : ஸ்வீட் கார்னில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளிலும் ஸ்வீட் கார்ன் மிகவும் நன்மை பயக்கும்.

நீரிழிவு நோய் தடுப்பு : ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி புரதம், லிப்பிட், கார்போஹைட்ரேட், வளர்சிதை மாற்றம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. ஸ்வீட் கார்னில் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு. எனவே இது நீரிழிவு நோய்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கண் பார்வையை மேம்படுத்துகிறது : ஸ்வீட் கார்னில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வையை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கண்களில் உள்ள கரோட்டினாய்டுகள் மாகுலர் சிதைவையும் குறைக்கின்றன.

Click here to join whatsapp group for daily health tip 

சிறுநீர் இந்த நிறத்தில் இருந்தால் அலட்சியமாக இருக்காதீங்க..? எப்போது மருத்துவரை அனுக வேண்டும்..?

September 22, 2022 0

 

சிறுநீரின் நிறம் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பற்றிய பல தகவல்களை உணர்த்தும். எந்த ஒரு நோயின் தீவிரம் அதிகரித்தாலும், அதன் விளைவு சிறுநீர் அல்லது சிறுநீரின் நிறத்தில் தெரிய ஆரம்பிக்கும். சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் நிறம் மாறலாம். உடலில் ஒரு அன்க்ரோமிக் நிறமி உள்ளது. இதன் காரணமாக சிறுநீரின் நிறம் உருவாகிறது. இந்த நிறமி அதிகமாக செறிவூட்டப்பட்டால், சிறுநீரின் நிறம் மாறும்.

பொதுவாக சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் மற்றும் சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் உடலில் அதிக அளவு திரவம் இருந்தால் அது சிறுநீரின் நிறத்தை மாற்றுகிறது. மயோகிளினிக்கின் கூற்றுப்படி, சிறுநீரின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி சிறுநீர் எந்தெந்த நிறத்தில் இருந்தால் ஆபத்து என்று பார்க்கலாம்.

எந்த சூழ்நிலைகளில் ஆபத்து..?

சிவப்பு நிறம் - சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறினால், அது ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம். இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று காரணமாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் போது வலி இல்லாமல், சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக இருந்தால், அது மேலும் கவலைக்குரிய விஷயம். அத்தகைய சூழ்நிலையில், புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கும்.

அடர் மற்றும் ஆரஞ்சு நிறம் - சிறுநீரின் நிறம் அதிக கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ இருந்தால் அதுவும் நோயின் அறிகுறியாகும். குறிப்பாக மலத்தின் நிறமும் மாறியிருந்தால் கடுமையான கல்லீரல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.

எப்படி கண்டுபிடிப்பது..?

பொதுவாக, உடலில் உள்ள திரவத்தை பொறுத்து சிறுநீரின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. உடலில் திரவம் எவ்வளவு அதிகமாக செல்கிறதோ, அவ்வளவு அதிகமாக சிறுநீரில் மஞ்சள் நிறமியை நீர்த்துப்போகச் செய்யும். அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் தெளிவாகும். குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரின் நிறம் மஞ்சள் நிறத்துடன் சேர்ந்து கெட்டியாக மாறும். எனவே, சிறுநீரின் நிறம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களை பொறுத்தது. பீட்ரூட், ஜாமூன் அல்லது சில மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரின் நிறம் பச்சை, மஞ்சள், நீலம் போன்றவையாக இருக்கலாம்.

எனவே, ஒவ்வொரு முறையும் சிறுநீரின் நிறம் மாறும்போது ஏதாவது ஒரு நோய் வரும் அபாயம் உள்ளது. ஆம், நிறமி இல்லாத உணவை சாப்பிடாமலே அல்லது குடிக்காமலே சிறுநீரின் நிறம் அசாதாரணமாக மாறினால், அது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்..?

சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரகத்தில் கல் இருந்தாலோ, சிறுநீரின் நிறம் ரத்தத்தின் நிறம் போல் இருக்கும். பொதுவாக, சிறுநீர் கழிக்கும் போது வலி இருக்கும், ஆனால் வலி இல்லாமல் சிறுநீரின் நிறம் இரத்தமாக இருந்தால், அது ஆபத்தின் அறிகுறியாகும்.

சில நேரங்களில், சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று காரணமாக, சிறுநீரின் நிறமும் நீலமாக மாறும். இது ஹைபர்கால்சீமியா அல்லது நீல டயபர் ( blue diaper syndrome ) நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரின் நிறம் கருமையாகவோ அல்லது ஆரஞ்சு நிறமாகவோ மாறினாலும், அது ஒரு எச்சரிக்கை அறிகுறிதான். இது போன்ற சூழ்நிலைகளில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அனுகுவது அவசியம்.


Click here to join whatsapp group for daily health tip 

தினசரி வெந்நீர் குடிப்பதை உங்கள் பழக்கமாக்கிக்கொண்டால் இவ்வளவு நன்மைகளை பெறலாமா..? மிஸ் பண்ணாதீங்க..

September 22, 2022 0

 நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் தினசரி வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் பல நன்மைகளை பற்றிய தகவல்களை ஷேர் செய்து உள்ளார்.

இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டின் கேப்ஷனில் "நல்ல ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்! ஆனால் நீங்கள் உண்மையில் தண்ணீரின் நன்மைகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்பினால், சூடான நீர் நல்ல வழி" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் : குளிர் காலம் கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் மூக்கு அடைப்பது மிகவும் சங்கடமான ஒன்றாக இருக்கும். ஒரு கப் சூடான தண்ணீர் குடிப்பது மூக்கடைப்பை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் : மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று உடல் நீரிழப்பை சந்திப்பது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சுடு தண்ணீரைக் குடிப்பது குடல்களை மீண்டும் சாதாரணமாக இயக்க ஒரு சிறந்த வழி என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார்.

முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் : டாக்டர். நித்திகாவின் கூற்றுப்படி தினசரி வெந்நீரைக் குடிப்பது நம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் : மாதவிடாயின் போது சீரான இடைவெளியில் வெந்நீரைக் குடிப்பதன் மூலமும் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்கிறார் டாக்டர் நித்திகா.


சரும பராமரிப்பு : டாக்டர் நித்திகாவின் கூற்றுப்படி, தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது சருமம் வயதாவதை தடுக்கிறது மற்றும் முகப்பரு, தழும்புகளை நீக்குகிறது.

செரிமான மேம்பாடு : காலை நேரங்களில் உணவிற்கு முன் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது என்று டாக்டர் நித்திகா கூறி இருக்கிறார். இப்பழக்கம் வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது.

உடலை டீடாக்ஸ் செய்கிறது : சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் ஃபோர்ஜின் எலமென்ட்ஸ் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடல் அமைப்பை சுத்தப்படுத்துகிறது என்றும் கூறி இருக்கிறார் டாக்டர் நித்திகா.


Click here to join whatsapp group for daily health tip 

September 16, 2022

ரீஃபைண்ட் ஆயில் ஒரு நாளைக்கு எந்த அளவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? கட்டுப்படுத்தும் வழிகள்...

September 16, 2022 0

 சாட்-பக்கோடாக்கள், பூரி-கச்சோரிஸ் என வறுத்த காரமான உணவுகளை சாப்பிட மிகவும் சுவையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே என்னதான் எண்ணெய் உணவின் சுவையை அதிகரித்தாலும் உடல் நலம் கருதி குறிப்பிட்ட அளவில் பயன்படுத்துவது அவசியம்.

காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு எந்த உணவாக இருந்தாலும் எண்ணெய் இல்லாமல் அந்த உணவு சாத்தியமில்லை. சமையல் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, கொழுப்புகளின் களஞ்சியமாகவும் உள்ளது. இதனாலேயே உணவில் எண்ணெய்யின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் அளவு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் சரியான அளவு என்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணெயின் ஊட்டச்சத்தும் முக்கியமானது. ஏனெனில் இது ஆரோக்கியமான தோல், முடி மற்றும் எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. Harzindagi.com குறிப்பிட்டுள்ள அளவுபடி, ஆரோக்கியமான உடலுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை உட்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் எண்ணெயின் அளவைக் குறைக்கலாம். அதேபோல் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

எப்படியெல்லாம் எண்ணெய் உபயோகத்தை குறைக்கலாம்..?

- எண்ணெயில் நன்கு வறுத்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

- ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் காய்கறிகளை சமைக்க முயற்சி செய்யுங்கள்.

- வேகவைத்த உணவை உண்ணும் மாற்று வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

- சாலட்டின் சுவையை அதிகரிக்க ஆயில் டிரஸ்ஸிங் செய்வதை தவிர்க்கலாம்.

- சரியான எண்ணெய் பிராண்டுகளை தேர்வு செய்து பயன்படுத்தவும்.

Click here to join whatsapp group for daily health tip 

ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சரிதான்.. ஆனால் இப்படி நடந்தால் பலன் இல்லை - விளக்கும் மருத்துவர்...

September 16, 2022 0

 ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் எப்படியாவது 10,000 அடிகளை நடந்து விட வேண்டும் என்பதுதான் அன்றைய இலக்காக இருக்கும். ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. 10,000 அடிகள் நடப்பது பெரிய விஷயமில்லை. எப்படி நடக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறது ஆய்வு.

JAMA Internal Medicine and JAMA Neurology, இதழில் வெளியான ஆய்வில் 78 முதல் 500 பேரை நடக்க வைத்து அவர்கள் அணிந்திருந்த டிராக்கர்கள் மூலம் சோதனை செய்துள்ளது. ஆய்வில் சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கிழக்கு டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் இனைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்கள்தான் தினம் 10,000 அடிகள் நடந்தால் மறதி நோய், இதய நோய் , புற்றுநோய் மற்றும் இறப்புக் காரணமாக இருக்கும் அத்தனை நோய்களின் தாக்கத்தையும் குறைக்கும் என்று கண்டறிந்தனர். ஆனால் அந்த 10,000 அடிகளானது சுருசுருப்பாகவும், வேகமாகவும் இருந்தால் மட்டுமே அந்த நன்மைகளை பெற முடியும் என்று அடிக்கோடிட்டு விளக்கியுள்ளனர்.

”இன்றைய டெக்னாலஜி யுகத்தில் நம் ஃபிட்னஸ் டிராக்கர்கள், ஆப்ஸ் மூலமாக தினசரி எவ்வளவு அடிகள் நடந்திருக்கிறோம், எவ்வளவு கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறோம் என்பதை எளிதாக கண்டறிய முடிகிறது. அதை வைத்தே 10,000 அடிகளை நடந்துவிட்டால் அன்றைய இலக்கை முடித்து விட்ட திருப்தியை கொள்கின்றனர். ஆனால் அந்த 10,000 அடிகளை வேகமாக நடக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை” என்கிறார் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் இம்மானுவேல் ஸ்டாமடாகிஸ்.

இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு 3800 அடிகளை ஆக்டிவாக நடந்தால் 25% மறந்தி நோயை தவிர்க்கலாம் என்கிறார் கிழக்கு டென்மார்க் பல்கலைக்கழக பேராசிரியர் போர்ஜா டெல் போசோ குரூஸ்

மேலும் அந்த ஆய்விலிருந்து சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில் சில....

  • ஒவ்வொரு 2000 அடிகளுக்கும் சீக்கிரமே இறக்கும் அபாயத்தை குறைக்க முடியும். அப்படி 10,000 அடிகளுக்கு 8 முதல் 11 சதவீதமாக குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்திற்கும் பொருந்தும்.
  • ஒரு நாளைக்கு அதிக அளவிலான ஸ்டெப்ஸ் நடப்பது அனைத்து வகையான மறதி நோய் அபாயங்களையும் குறைக்க உதவும்.
  • 9800 அடிகள் நடப்பது 50 சதவீதம் டைமென்ஷியா என்னும் மறதி நோய் அபாயத்தை குறைக்கலாம். 3800 அடிகளாக இருந்தால் 25% குறைக்கலாம்.

பொதுவாகவே கார்டியோ ஆக்டிவிடி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சமநிலை செய்யவும், கெட்ட கொழுப்பை குறைப்பதும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், பதட்டத்தை குறைக்கவும் , இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடைப்பயிற்சி என்பது சிறந்த உடற்பயிற்சி என்கிறார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் வாழ்க்கை முறை நிபுணர் கரிஷ்மா சாவ்லா.

எவ்வளவு தூரம் நடப்பது சிறந்தது..?

ஆக்டிவாக நடந்தா ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது போதுமானது என நிதி பஜாஜ் குப்தா கூறியுள்ளார். இவர் ஃபிசியோதெரபிஸ்ட். இதுவே நீங்கள் சைக்ளிங் செல்கிறீர்கள் எனில் நடைப்பயிற்சியை காட்டிலும் கூடுதல் நன்மைகளை பெறலாம் என்கிறார். அதாவது இதயத்தின் தசைகள் சீராகும், எலும்புகளின் உறுதி நிலையாக இருக்கும் என்கிறார்.

நொய்டா உடல் அறிவியலாளட் வருண் ரத்தன் 5.8 உயரம் கொண்ட ஒரு ஆண் 75 கிலோ எடை இருக்கிறார் எனில் ஒரு நிமிடத்திற்கு 3 கலோரிகள் குறைக்கலாம் என்கிறார். ஆனால் அவர் ஒரு மணி நேரத்திற்கு 3.2 கிலோமீட்டர் வேகத்திற்கு நடக்க வேண்டும் என்கிறார். 5 கலோரிகள் குறைக்க வேண்டுமெனில் ஒரு மணி நேரத்திற்கு 5.6 கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டும். 30 நிமிடத்திற்கு 3.2 கிலோமீட்டர் நடந்தால் ஒரு மணி நேரத்திற்கு 90 கிலோரிகள் வரை குறைக்கலாம். ஆனால் 1 மணி நேரத்திற்கு 5.6 கி.மீ எனில் 150 வரை குறைக்கலாம் என்கிறார்.

எனவே நீங்கள் நடக்க ஆரம்பிக்கிறீர்கள் எனில் உடனே வேகத்தை அதிகப்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். அதேசமயம் உங்கள் உடலை வருத்திக்கொண்டும் நடக்கக் கூடாது. உங்களுக்கு சௌகரியமான வேகத்தில் நடப்பதும் அவசியம் என்கிறார் வருண்.


Click here to join whatsapp group for daily health tip 

வெயிலில் கூட விடாமல் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்? - உங்களுக்கான எச்சரிக்கை இங்கே!

September 16, 2022 0

 இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கேஜெட்களில் ஒன்றாக இருக்கிறது ஸ்மார்ட்போன். இவை இல்லாமல் போனால் நம் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் என்று சொல்வது மிகையாகாது.

எனினும் இந்த டிஜிட்டல் உலகில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் போன்ற டிவைஸ்கள் நம் கண் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து வருகின்றன. குறிப்பாக நீண்ட நேரம் தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரால் கடைபிடிக்கப்பட்டு வரும் மோசமான பழக்கமாக மாறி இருக்கிறது.

மொபைலை வெயிலில் வைத்து பயன்படுத்தினால் பகுதியளவு குருட்டுத்தன்மை ஏற்பட கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வெயிலில் மொபைல்களை பயன்படுத்தியதால் பார்வை குறைபாட்டை எதிர்கொண்ட 2 பாதிக்கப்பட்ட நபர்கள் பற்றிய அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் கடும் வெயிலில் இருந்த போதும் தனது மொபைலை தொடர்ந்து பயன்படுத்தியதால் இயல்பான பார்வை திறனில் குறைபாட்டை ஒரு பெண் எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெயில் நேரங்களில் வெளியே செல்லும் போது மொபைலை பயன்படுத்துவதில் மும்முரம் காட்டினால் கண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

பாதிக்கப்பட்ட பெண் வெயிலில் வைத்து மொபைலை பயன்படுத்திய போது அந்த ஃபோனின் ஸ்கிரீனில் சூரியனின் சக்தி வாய்ந்த பிரதிபலிப்பு வெளிப்பட்டதை தொடர்ந்து சில தீவிர விழித்திரை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணிற்கு பகுதியளவு குருட்டுத்தன்மை ஏற்பட்டது என நம்பப்படுகிறது. இதே காரணத்தால் ஆண் ஒருவருக்கும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் solar maculopathy-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இளவயதினரும் பாதிக்க கூடும்..

பாதிக்கப்பட்ட இருவரில் பெண்ணுக்கு 20 வயது, ஆணுக்கு 30 வயது என கூறப்பட்டுள்ளது. இதில் பெண் கடற்கரையில் மொபைல் போனை பயன்படுத்தினார் என்றும், ஆண் ஒரு ஸ்கை ரிசார்ட் மொட்டை மாடியில் அமர்ந்து மணிக்கணக்கில் டேப்லெட் பயன்படுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே இள வயதினருக்கும் கூட இந்த கண் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.

சோலார் மாகுலோபதி.?

மாகுலோபதி என்பது நம்முடைய ரெட்டினாவின் (விழித்திரை) பின்புறத்தை பாதிக்க கூடிய ஒரு நோயாகும். கண்ணில் உள்ள விழித்திரையின் மையத்திற்கு அருகில் உள்ள ஃபோவாவைச் சுற்றியுள்ள ஒரு ஓவல் மஞ்சள் நிற பகுதி மாக்குலா (macula) என்று அழைக்கப்படுகிறது. இது கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி ஆகும். மாகுலோபதியால் பாதிக்கப்படுபவர்கள் முற்றிலும் பார்வையை இழக்க மாட்டார்கள் என்றாலும் விழித்திரையில் பார்வை மிக கூர்மையாக இருக்கும் சென்ட்ரல் விஷனை இழக்கிறார்கள்.

சோலார் மாகுலோபதியின் போது, சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படுவதால் விழித்திரை மற்றும் மாகுலாவில் பாதிப்பு ஏற்படலாம். தற்போது solar maculopathy-ஆல் பாதிக்கப்பட்டுள்ள பெண் துவக்கத்தில் தொலைவில் இருக்கும் வடிவங்களை வேறுபடுத்துவதில் சிரமத்தை சந்தித்துள்ளார். பரிசோதனைக்கு பின் பார்வையின் மையத்தில் ஏற்படும் permanent central scotoma பாதிப்பு என்று கண்டறியப்பட்டது.

முன்னெச்சரிக்கை..

சோலார் மாகுலோபதி பொதுவாக சூரியனை நேராக பார்ப்பதால் ஏற்படுவது என்றாலும் பாதிக்கப்பட்ட இருவருமே அப்படி செய்யவில்லை. எனவே டிவைஸ்களின் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும் கடுமையான சூரிய கதிர்வீச்சு அடுத்த சாத்தியமான ஆபத்து காரணியாக இருக்கிறது தெரிகிறது. எனவே சூரிய கதிர்வீச்சு அதிகம் இருப்பதை உணரும் பகுதியில் டிவைஸை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் அல்லது பொருத்தமான ஃபில்ட்டருடன் கூடிய சன்கிளாஸை பயன்படுத்தலாம்.

சூரிய கதிர்களில் வெளிப்படும் UVA மற்றும் UVB கதிர்வீச்சு கண்புரை அல்லது மாகுலர் சிதைவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். இறுதியில் பார்வை குறைவதற்கும் வழிவகுக்கும். எனவே கண்களைப் பாதுகாக்க வெயிலில் செல்லும் போது தரமான சன்கிளாஸ்களை அணிய நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Click here to join whatsapp group for daily health tip 

September 15, 2022

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் வேலை: செப்.23ல் நேர்காணல்

September 15, 2022 0

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனை அனுபவம் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளலாம். ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 60 வரை

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீடு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்கவை: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / உள்ளூரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

ஊதியம்: இத்தகைய முகவர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது. முகவர்களின் செயல்பாடு அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களின் தன்விவரக் குறிப்பு, வயது / கல்வி ஆதாரத்திற்கான மூலச் சான்றிதழ் காப்பீட்டுத்துறையில் அனுபவத்திற்கான சான்றிதழ் ஏதாவது இருந்தால், அதன் நகல் ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு வரவேண்டும் என அரக்கோணம் கோட்ட அஞ்சலகங்களின் மேற்பார்வையாளர் கே சிவசங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 


Click here to join WhatsApp group for Daily employment news 

எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழக அரசு

September 15, 2022 0

 எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பதவிகளுக்கு விண்ணப்பித்தோருக்காக தமிழ்நாடு வேலைவாய்ப்பு மாற்று பயிற்சித் துறை இலவச பயிற்சியை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்: தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் ( Staff Selection Commission) Combined Graduate Level தேர்விற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடயுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (Professional Employment and Career Guidance Centre, Chennai) பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் Combine  Graduate level தேர்விற்கான பயிற்சி வகுப்புகள்  21.09.2022 அன்று தொடங்கப்படவுள்ளது.

இத்தேர்விற்கான கல்வி தகுதியாக "ஏதாவது ஒரு பட்டப்படிப்பு (Any Degree)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தின் படி  General Intelligence & Reasoning, General Awareness, Numerical Aptitude, English Comprehension ஆகியவற்றிற்கான வகுப்புகளும், வார்ந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமும், விருப்பமும் உள்ள தேர்வர்கள்9597557913 என்ற  வாட்ஸ் அப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர், முகவரி, கல்வித்தகுதி ஆகியற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news 

September 14, 2022

கரூர் வைசியா வங்கியில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை - விவரம்

September 14, 2022 0

 கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / அமைப்பின் பெயர்கரூர் வைசியா வங்கி ( Karur Vysya Bank Limited)
பதவியின் பெயர்INSPECTING OFFICIAL
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கைபல்வேறு இடங்கள் காலியாக உள்ளது.
வேலை வகைதனியார் வங்கி வேலை
பணியிடம்கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி / விசாகம் / மும்பை
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி30.09.2022
அறிவிப்பு வெளியான தேதி09.09.2022
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். (Online)
கல்வித் தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற பட்டதாரிகளோ அல்லது முதுகலை பட்டதாரிகளோ மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
அதிகாரப்பூர்வ தளம்https://www.karurvysyabank.co.in/
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

அறிவிப்பினை காண

https://www.karurvysyabank.co.in/Careers/Instruction-IO.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்... TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு

September 14, 2022 0

 TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில்  கணினி வழித் தேர்விற்கு 13.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள் :

பதவியின் பெயர்சிறை அலுவலர் (ஆண்கள்) 
மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்)
பணியின் பெயர் மற்றும்
பணிக்குறியீட்டு எண்
தமிழ்நாடு சிறைப்பணிகள்
காலிப்பணியிட எண்ணிக்கைசிறை அலுவலர் (ஆண்கள்)  - 06
மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) - 02
சம்பள ஏற்ற முறைரூ. 36,900 -ரூ. 1,35,100

முக்கியமான நாட்கள் மற்றும் நேரம் :-

அறிவிக்கை நாள்: 14.09.2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் :  13.10.2022

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் :

18.10.2022 நள்ளிரவு 12.01 வரை

20.10.2022 இரவு 11.59 வரை

கணினி வழித்தேர்வு  நடைபெறும்  நாட்கள் மற்றும் நேரம்:-

தாள் -1 பாடத்தாள்  பட்டயப்படிப்புத்தரம்22.12.2022 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.
தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள் ) பகுதி -அ பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)22.12.2022 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

வயதுத் தகுதி :

32 வயது நிறைவடைந்திருக்க கூடாது.

ஆதி திராவிடர் , ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : (14.09.2022 அன்றுள்ளபடி) சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகமானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

  • Educational Qualification
ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாவது,Any Degree awarded by any University recognised by theUniversity Grants Commission.Provided that other things being equal, preference shallbe given to the candidates possessing a Master’s degreein Criminology and Criminal Justice Administration andnext preference shall be given to the candidatespossessing Master’s degree in Social Work என கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம் : 

பதிவுக் கட்டணம் : ரூ.150/-

தேர்வுக் கட்டணம் : ரூ 200/

விண்ணப்பம் சமர்பிப்பதற்கான இறுதி நாள் :

இணையவழி விண்ணப்பத்தை 13.10.2022அன்று இரவு 1.59 மணி வரை திருத்த /விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இணையவழி விண்ணப்பத்தை 18.10.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் 20.10.2022 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் சான்றிதழ்கள் மாற்ற/ பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய 10.12.2022 அன்று இரவு 11.59 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு

https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx

https://www.tnpsc.gov.in/Document/tamil/Jailor%20Tamil.pdf

இந்த பக்கத்தை அணுகவும்.

Click here to join WhatsApp group for Daily employment news 

TNPSC: தலைமை செயலகத்தில் நிருபர் பணி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. யார் விண்ணப்பிக்கலாம்?

September 14, 2022 0

 தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகப் பணிகளில் ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 12.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.

பதவியின் பெயர்ஆங்கில நிருபர்,  தமிழ் நிருபர்
பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண்தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலக பணிகள்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைஆங்கில நிருபர் - 6தமிழ் நிருபர் - 3
சம்பள ஏற்ற முறைரூ. 56,100 - 2,05,700 (நிலை-22)

முக்கியமான நாட்கள் மற்றும் நேரம் :-

அறிவிக்கை நாள்: 13.09.2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் :  12.10.2022

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் :

17/10/2022 நள்ளிரவு 12.01 வரை

19/10/2022 இரவு 11.59 வரை

கணினி வழித்தேர்வு  நடைபெறும்  நாட்கள் மற்றும் நேரம்:-

தாள் -1 பாடத்தாள் (சுருக்கெழுத்து) பட்டயப்படிப்புத்தரம் ஆங்கிலம் (அ) தமிழ்21.12.2022 முற்பகல் 09.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை.
தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)21.12.2022 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

கல்வித்தகுதி : (13.09 2022 அன்றுள்ளபடி) விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

ஆங்கில நிருபர் - 6i) Must hold a bachelor’s degree. (டிகிரி போதும் )ii) A pass in the Government technical examination in shorthand inEnglish by 180 words per minute high speed test.iii) A pass in the Government technical examination intypewriting in English by the senior grade.Others things being equal preference shall be given to personswho are qualified to report in Tamil also.
தமிழ் நிருபர் - 3i) Must hold a bachelor’s degree. (டிகிரி போதும் )ii) A pass in the Government technical examination in shorthand inTamil by 120 words per minute high speed test.iii) A pass in the Government technical examination in typewriting inTamil by the senior grade.Others things being equal preference shall be given to personswho are qualified to report in English also.

கட்டணம் : 

பதிவுக் கட்டணம் : ரூ.150/-

தேர்வுக் கட்டணம் : ரூ 200/

விண்ணப்பம் சமர்பிப்பதற்கான இறுதி நாள் :

இணையவழி விண்ணப்பத்தை 12.10.2022 அன்று இரவு 1.59 மணி வரை திருத்த /விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இணையவழி விண்ணப்பத்தை 17.10.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் 19.10.2022 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் சான்றிதழ்கள் மாற்ற/ பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய 09.12..2022 அன்று இரவு 11.59 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு

https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx

https://www.tnpsc.gov.in/Document/tamil/REPORTER%20TAMIL.pdf

இந்த பக்கத்தை அணுகவும்.

Click here to join WhatsApp group for Daily employment news