Agri Info

Education News, Employment News in tamil

October 6, 2022

நார்மலாக உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? இதய நோயை உண்டாக்கு அளவு என்ன..?

October 06, 2022 0

 

நாம் உயிர் வாழ கொலஸ்ட்ரால் மிக மிக அவசியம். ஏனெனில் கொலஸ்ட்ரால் என்பது உடலில் பல ஹார்மோன்களை உருவாக்கும் கொழுப்பு ஆகும். கொலஸ்ட்ரால் உடலில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. அதேசமயம் அது அளவுக்கு அதிகமாக சேர்ந்தாலும் ஆபத்து.

கொலஸ்ட்ராலின் வேலை :

கொலஸ்ட்ரால் டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளிட்ட பல ஹார்மோன்களை உடலில் உருவாக்குகிறது. இது தவிர, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது செரிமானத்திற்கு தேவையான இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. கல்லீரல் மற்றும் குடலின் சரியான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்தாலும், கொலஸ்ட்ரால் சில வழிகளில் வில்லனாகவும் கருதப்படுகிறது.

கொலஸ்ட்ரால் என்பது லிப்போபுரோட்டீன் எனப்படும் கொழுப்பு வகையாகும். இதில் இரண்டு வகையான லிப்போபுரோட்டீன்கள் உள்ளன - குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) மற்றும் அதிக அடர்த்தி கொழுப்புப்புரதம் (எச்டிஎல்) எச்டிஎல். ஒருபுறம், எல்டிஎல் அதிகரிப்பது நல்லது என்று கருதப்படுகிறது, மறுபுறம் எச்டிஎல் அதிகரிப்பது நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.


HDL கெட்ட கொலஸ்ட்ராலாக கருதப்படுகிறது. எல்.டி.எல் அதிகமாக இருக்கும்போது, ​​அது இரத்தத்தின் தமனிகளில் சேரத் தொடங்குகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே ஒரு நபருக்கு எவ்வளவு HDL அல்லது LDL இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

20 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால்

MyClevelandClinic இன் படி, கொழுப்பு அளவுகள் வயது மற்றும் பாலினத்துடன் மாறுபடும். 19 வயதுக்கு குறைவான ஒரு சாதாரண நபரின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 170க்கு குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அத்தகைய நபரின் HD 120 க்கும் குறைவாகவும், LDL 110 க்கும் குறைவாகவும், HDL 45 க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர் என்றால், மொத்த கொலஸ்ட்ரால் 125 முதல் 200 வரையிலும், எச்.டி.எல் 120க்கும் குறைவாகவும், எல்.டி.எல் 100க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். HDL 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். பிறக்கும் போது, ​​ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு நல்ல கொலஸ்ட்ராலின் தேவை அதிகமாக இருக்கும். ஆண் குழந்தைக்கு 40க்கு மேல் எச்டிஎல் தேவைப்படுகிறது, பெண் குழந்தைக்கு 50க்கு மேல் நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவு டெசிலிட்டருக்கு மில்லிகிராமில் அளவிடப்படுகிறது.

கொலஸ்ட்ரால் எப்போது ஆபத்தானது?

ஒரு சாதாரண மனிதனின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 240 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அதேசமயம் நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL ஆண்களில் 40க்கும் குறைவாகவும், பெண்களில் 50க்கு குறைவாகவும் இருந்தால், அது மிகவும் ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 முதல் 239 வரை இருந்தால், அது ஆபத்தான அறிகுறியாகும். அதே சமயம் எல்.டி.எல் அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 முதல் 159 வரை இருந்தால், அது ஏதோ ஒரு நோய்க்கான அபாய மணி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL அளவு சாதாரண ஆணுக்கு 40 முதல் 59 வரையிலும், பெண்களில் 50 முதல் 59 வரையிலும் இருந்தால் அதுவும் ஆபத்தானது. அதாவது நீங்கள் அதிக ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில் ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

Click here to join whatsapp group for daily health tip 

October 2, 2022

தலைமுடி அடர்த்தியாக வளர சில எளிய குறிப்புக்கள் !!

October 02, 2022 0

லைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.

குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும்.

நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.

வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தலை முடி கொட்டுவது நின்று நன்கு பளப்பாக மாறும்.

தேங்காய் எண்ணெய், விளகெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும். பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.

கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்து வர வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி உறுதியாகும். தலை முடிக்கு குளிர்ச்சி உண்டாகும். தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை கட்டுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கும். 



Click here to join whatsapp group for daily health tip

எளிதினில் கிடைக்கும் எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

October 02, 2022 0

 லுமிச்சை சாறு நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது. காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

மேலும் செரிமானம் நன்றாக செயல்படும்.










எலுமிச்சம் பழம் சாற்றில் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை அதிகமுள்ளது. சிறிய அளவிலான ரத்த காயங்களில் எலுமிச்சை சாற்றை சிறிது எடுத்து தடவுவதால் அக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தம் விரைவில் உறையவும் உதவுகிறது.

தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு எலுமிச்சை சாற்றை நன்கு தடவ வேண்டும். சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குகிறது. தலைமுடிக்கும் இயற்கையான பளபளப்பை உண்டாக்குகிறது. அதிக அளவில் முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள், இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி ஒட்டுமொத்தமான வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும்.

காலையில் வெந்நீரில் 10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.


Click here to join whatsapp group for daily health tip


தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

October 02, 2022 0

தென்னிந்தியாவில் அன்றாட சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒர் பொதுவான பொருள் தான் கறிவேப்பிலை.

இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இத்தகைய கறிவேப்பிலை ஆரோக்கியமானது என்பதை அனைவருமே அறிவோம். இருப்பினும், அதை மென்று சாப்பிட பிடிக்காது. எனவே சமையலில் சேர்க்கும் இந்த கறிவேப்பிலையை பெரும்பாலானோர் தூக்கி எறிவதுண்டு.

கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? ஆம், முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம். உங்களுக்கு அந்த கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை டீயின் செய்முறை மற்றும் கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.


கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி?

* முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

புற்றுநோய் அபாயம் குறையும்

உடலில் ப்ரீ-ராடிக்கல்கள் அதிகம் இருந்தால், அது புற்றுநோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே கறிவேப்பிலை டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதமடைமடைவதைத் தடுக்கின்றன.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கறிவேப்பிலையினது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டிவிட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.

மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் மேம்படும்

கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள செரிமான நொதிகள், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் கறிவேப்பிலையில் மலமிளக்கி பண்புகள் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கும். மேலும் இந்த டீயைக் குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லை பிரச்சனை நீங்கும்.

காலை சோர்வு

கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் காலைச் சோர்வு அல்லது காலை சுகவீனம். ஆனால் கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், கர்ப்பிணிகள் வாந்தி, குமட்டல் மற்றும் காலைச் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைமுடி பிரச்சனைகள்

கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் மற்றும் புரோட்டீன் உள்ளது. இவை இரண்டுமே தலைமுடிக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். எனவே கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இது பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, முடி ஒல்லியாவது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.

கொழுப்புக்களைக் குறைக்கும்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவே கறிவேப்பிலை டீயை தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் சுத்தமாக இருப்பதோடு, தொப்பையும் குறைவதைக் காணலாம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

கறிவேப்பிலையின் மணம் ஒரு நல்ல மன அழுத்த நிவாரணியாக செயல்படுகிறது. தற்போது மன அழுத்தம் தான் மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக உள்ளது. ஆகவே கறிவேப்பிலை டீயை தினசரி குடிப்பதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.


 


Click here to join whatsapp group for daily health tip

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும்

October 02, 2022 0

 சாப்பிட வேண்டியவை, கூடாதவை!

'எக்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்' என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப் போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

``வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்
களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை.

உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை.

உடற்பயிற்சிக்கு முன்னர்...

சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே...

ஆப்பிள் ஆரஞ்சு பேரிக்காய் பப்பாளி பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி ஓட்ஸ் தயிர் கிரீன் டீ நட்ஸ்.

உடற்பயிற்சிக்குப் பின்னர்...

உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவர்கள், அவற்றுக்குப் பதிலாக தண்ணீர் இளநீர் வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

நேரத்தில் கவனம்!

செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 - 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும். உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும்.

உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம்.
தண்ணீர் அவசியம்! உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 - 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

ஃபிட்னெஸுக்கான பொது அறிவுரைகள்...

சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.
முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.
அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம். முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்துவிடுவதுமுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது'' என்கிறார் சுதர்சனா.


Click here to join whatsapp group for daily health tip

வலிப்பு நோய் தீர்வு என்ன?

October 02, 2022 0

திடீரென கை கால்களை வெட்டி வெட்டி இழுத்து வாயில் நுரை தள்ளி, கண்கள் மேலே சொருகி, நாக்கு பற்களுக்கிடையே கடிபட்டு வாயில் ரத்தம் வழிய, தன் சுய நினைவின்றி சாலைஓரத்தில் பரிதாபமாக யாரோ ஒருவர் விழுந்துகிடப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம்.

இது காக்காய் வலிப்புநோய் என்று கூறப்படுகிறது. இப்படி திடீரென பாதிக்கக்கூடிய இந்த நோய் பற்றிய சில தகவல்களையும், இது குறித்து நம்மிடையே இருக்கும் சில தவறான எண்ணங்களைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறாா் நரம்பியல் மருத்துவர். ஜெ.பாஸ்கரன்.

வலிப்பு நோய் என்பது என்ன..

வலிப்பு என்பது எபிலெப்சி என்று ஆங்கிலத்திலும், காக்காய் வலிப்பு என்று தமிழிலும் அறியப்படும் நரம்பு மண்டல நோய். சிறிது நேரமே இருக்கக் கூடிய ( சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை) நினைவை இழக்கச் செய்யக்கூடிய, கை ,கால் வெட்டி இழுக்கக் கூடிய செயல்களை உள்ளடக்கிய ஒரு சம்பவம் அல்லது நிகழ்வு என்றளவிலேயே இதனை பார்க்கிறோம். பொதுவாக எந்த காரணமும் இல்லாமல் ஏற்படும் வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். இவையே எபிலெப்சி அல்லது காக்காய் வலிப்பு என்றழைக்கப்படுகிறது.

இதைத் தவிர, மூளைக்கு வெளியே ஏற்படும் மாற்றங்களால் , மூளை பாதிக்கப்படுவதனால் வலிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, சாலை விபத்துக்களால் தலையில் ஏற்படும் காயங்கள், உயரத்திலிருந்து விழுதல், மூளைக் கட்டிகள், ரத்த ஓட்ட பாதிப்புகள், நோய்த் தொற்றுகள், மூளைக் காய்ச்சல், மெனிஞ்ஜைடிஸ் போன்றவற்றினால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. மேலும், பொதுவான நோய்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றாலும் சிலநேரம் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக ஏற்படுவது காரண வலிப்பு (Secondary Seizures) என்றழைக்கப்படுகிறது.

வலிப்பு எதனால் ஏற்படுகிறது.

நரம்பு மண்டலம் என்பது நியூரான் எனப்படும். சிறிய நரம்பு செல்களால் பின்னப்பட்ட ஒரு வலை போன்றது. மூளை, தண்டுவடம், நரம்புகள் எல்லாம் அடங்கியதுதான் இந்த நரம்பு மண்டலம். இதன் முக்கியமான பணி, தசை அசைவுகள், தொடு உணர்ச்சிகள், பல்வேறு உறுப்புகளின் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும். நியூரான்களின் மின் அதிர்வுகள் சில காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சமநிலையில் இயங்குகின்றன. ஆனால், வலிப்பின் போது, இந்தச் சமநிலை பாதிக்கப்பட்டு, மின் அதிர்வுகள் அளவுக்கு அதிகமாக உருவாக, அருகருகே உள்ள நரம்புகளுக்குப் பரவுவதால், மூளைக்குள் ஒரு மின்புயல் உருவாகிறது அதுவே வலிப்பு வரக் காரணமாகிறது.

வலிப்புகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று மேற்கூறியபடி மூளையிலேயே உருவாவது, இன்னொன்று விபத்துகளால் ஏற்படுவது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்றால், இந்த வலிப்பு எப்போது வரும், என்ன செய்தால் வரும் என்பது போன்ற முன்னெச்சரிக்கை ஏதுமின்றி வருமாகையால், இந்த நோயாளிகளுக்கு எப்போதும் மனதில் ஒரு வித பய உணர்ச்சி இருந்துகொண்டேயிருக்கும். அதுபோன்று யாருக்கு வரும் என்பதும் முன்கூட்டியே கணிக்க முடியாது..

வலிப்பு நோய்க்கான பரிசோதனைகள் என்னென்ன..

பொதுவாக வலிப்பு நோயாளிகளின் வலிப்பின் வகையறிதலே சவாலானது. வலிப்பு நேரும்போது நோயாளி தன் சுயநினைவை இழந்துவிடுவதால் அவருக்கு என்ன செய்தது என்பது அவருக்கே தெரியாது. இதனால் அவரால் முழு சம்பவத்தையும் விவரிக்க இயலாது. எனவே, அவருக்கு என்ன வகை வலிப்பு என்பதை அறிவதில் சிரமம் உண்டு. மேலும், ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அதனை நேரில் கண்டவர்களோ, அருகில் இருப்பவர்களோதான் அவருக்கு என்ன நேர்ந்தது என்று விவரிக்க முடியும். அவர்கள் கூறுவதை வைத்துதான் வந்தது வலிப்பு
தானா,, எந்த வகை வலிப்பு.. என்ன காரணங்களால் ஏற்பட்டது என்று கண்டறிய வேண்டும். அதைக் கொண்டு பரிசோதனைகள் தொடங்க வேண்டும்.

இதற்கு ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி,எக்கோகார்டியோகிராம் போன்ற பரிசோதனைகள் வலிப்புக்கான காரணங்களை கண்டறிய உதவுகிறது.ஒருவேளை வலிப்புக்குத் தொற்று நோய், மூளைக்காய்ச்சல் காரணமா என்பதை கண்டறிய முதுகில் தண்டுவடத்தைச்சுற்றியுள்ள நீரை எடுத்து (LUMBAR PUNCTURE) போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும். மேலும், வலிப்பு நோயறிதலில் மிக முக்கியமான , எளிமையான, மலிவான, பயம் இல்லாத ஒரு பரிசோதனை ஈஈஜி (Electro ENCEPHALOGRAM) ஆகும். இதன் மூலம், மூளையின் மின்அதிர்வுகளைப் பதிவு செய்து, வலிப்பு நோய் பற்றி அறிய முடியும். நோயாளி அமர்ந்திருக்கும் போதும், தினசரி வேலைகளைச் செய்யும் போதும் அம்புலேடரி போர்டபிள் மெஷின் மூலமாகவும் ஈஈஜியை பதிவு செய்யமுடியும்.

வீடியோ ஈஈஜி டெலிமெட்ரி மூலம் ஒரு நாள் முழுதும் நோயாளியையும், மூளை மின்னதிர்வுகளையும் பதிவு செய்து, வலிப்பு மற்றும் வலிப்பு போன்றே வரும் மற்ற நோய்களையும் பிரித்தறிய முடியும். வலிப்பு நோய்களையும் அதன் காரணங்களையும், மன உளைச்சலால் வரக்கூடிய பொய் வலிப்புகளையும் (PSEUDOSEIZURES), பிறந்த குழந்தைக்கு வரும் வலிப்பு ( Neonatal) வலிப்புகளையும் கண்டறிய ஈஈஜி முக்கியமானது.

அதுபோன்று சிடி ஸ்கேன். மூளையில் இருக்கும் கட்டிகள், ரத்தக் கசிவு, ரத்த ஓட்டம் அடைபடுவதால் வரும் இன்ஃபார்க்ஷன் போன்ற பல நோய்களைத் தெளிவாக அறிய உதவுகிறது. இதுதவிர, எம்.ஆர்.ஐ. இவ்வகை ஸ்கேன் மிகவும் சக்தி வாய்ந்த காந்தப் புலத்தைப் (Magnetic Field) பயன்படுத்தி மூளை மற்றும் வேறு திசுக்களின் அதிர்வலைகளை கம்ப்யூட்டர் மூலம் முப்பரிமாண பிம்பங்களாகப் பதிவு செய்ய முடியும்.

வலிப்புநோயைப் பொறுத்தவரை எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன்களைவிட, அதிக விவரங்களை அளிக்க வல்லது அதிலும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை. மூளையின் எந்தப் பகுதியிலிருந்து வலிப்பு உருவாகிறதோ, அந்தப் பகுதியின் ரத்த ஓட்டத்தை ( அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதை) என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றது. இம்மாதிரியான பரிசோதனைகள் மூலம் மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளமுடியும்.

வலிப்புநோய்க்கான தீர்வு..

வலிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர, மருந்துகளை அவசியம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். சில கட்டுக்கடங்கா வலிப்புகளுக்கு , வாழ்நாள் முழுவதும் கூட மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான்.
ஒருவருக்கு வலிப்பு வரும்போது செய்ய வேண்டியவை..

ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டால், கூச்சலிடாமல் அமைதியாகஅவரைக் கையாள வேண்டும். முதலில் அவரைப் படுக்கவைக்க வேண்டும். பின்னர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தால், அதை கழற்றிவிட வேண்டும். பின்னர், உடைகளை சற்று தளர்த்திவிட வேண்டும். ஒருகளித்து பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். இப்படி செய்யும்போது அவரது வாயில் இருந்து வெளியேறும் எச்சில், நுரை போன்றவை வெளியேற சுலபமாகும். நோயாளி முட்டி மோதி அடிபடுவதை தவிர்க்க அருகில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

சிறிய தலையணை அல்லது துணி முடிப்புகளை தலைக்கு அடியில் வைக்கலாம். அடிபட்டிருந்தாலோ, ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு நீடித்தாலோ அல்லது நிற்காமல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தாலோ, வலிப்பு நின்ற பிறகும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டாலோ உடனடியாக மருத்துவர்களையோ, ஆம்புலன்ஸையோ உதவிக்கு அழைக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை:

நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது. ஏனென்றால் நோயாளிக்கு காற்றோட்டமான சூழல் மிகவும் அவசியம். வாயில், பற்களுக்கிடையில், எந்த ஒரு பொருளையும் (ஸ்பூன், கட்டை, கை ) வைக்கக்கூடாது. இரும்புக் கம்பிகள், சாவிக்கொத்து போன்ற கூர்மையான பொருளை நிச்சயமாக கொடுக்கக்கூடாது. வெட்டி இழுக்கும்போது இது போன்ற ஆயுதங்கள் நோயாளியின் கண்களையோ, வேறு பகுதியையோ குத்தி ஆபத்தை விளைவிக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக இரும்பு போன்ற உலோகங்கள் வலிப்புகளைக் கட்டுப்படுத்தும் என்பது மிகவும் தவறானது.

வெட்டி இழுக்கும் கை , கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பை நிறுத்த முயற்சிக்கக்கூடாது. முழு சுய நினைவு வரும் வரை, நோயாளிக்கு எதுவும் குடிக்கவோ, சாப்பிடவோ கொடுக்கக் கூடாது. மூளை நரம்புகளின் மாறிய அதிர்வுகள் அல்லது மாற்றி செலுத்தப்படும் மின்அதிர்வுகளே வலிப்புக்கான காரணம் என்பது ஆராய்ச்சிப் பூர்வமாக உணர்த்தப்பட்டுள்ள உண்மை ஆகும். மற்றபடி வலிப்புநோய் ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சாதனையாளர்களும் இங்கு உண்டு.



 Click here to join whatsapp group for daily health tip

இருமல் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் !!

October 02, 2022 0

 சித்த மருத்துவத்தில் முக்கியமான ஒரு மருந்துப் பொருளாக ஓமம் பயன்படுத்தப்படுகிறது.

ஓமம் ஏராளமான ஊட்டச் சத்துகளை கொண்டுள்ளது. ஓமத்தில் புரோட்டின், பைபர், சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் B1, B3, கொழுப்பு, மினரல், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் இடம்பெற்றுள்ளன.











மலச்சிக்ககல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல், வயிறு, உணவுக்குழாய் பகுதிகளில் உள்ள புண்களை குணப்படுத்தும் ஆற்றலையும் ஓமம் கொண்டுள்ளது.

சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. இதனால் இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. இதன் மூலம் மூக்கடைப்பு தொல்லையில் இருந்தும் நமக்கு நிவாரணம் கிடைக்கிறது.

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.

வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும். அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்று கூறப்படுகிறது.


Click here to join whatsapp group for daily health tip

தீக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டவையா மூலிகைகள்?

October 02, 2022 0

 சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்... எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா?

இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி...

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தச் செடியில் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மையும், காயத்தை ஆற்றும் தன்மையும் உண்டு. ஒரு புண் ஆற வேண்டுமென்றால் அதைச் சுற்றி ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்தத் தன்மையும் இந்தச் செடியில் உண்டு என்பதால் விரைவாக புண்ணை ஆற்றுகிறது. காயம் ஏற்பட்டால் அதிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுத்து, புண்ணை சீக்கிரம் ஆற்றுவதற்கான செயலைச் செய்கிறது.

மிக முக்கியமாக காயம் ஆறினாலும் அந்த இடத்தில் வடுவோ, தழும்போ ஏற்படாதபடி பார்த்துக்கொள்வதிலும் இந்த மூலிகைக்குப் பங்கு உண்டு. வெட்டுக்காயமே ரத்த நாளங்களை பாதிக்கும் அளவுக்கு ஆழமாக இருப்பின் மூலிகை வைத்தியமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. உடனே அவசர சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ரத்தப்போக்கு அதிகம் வெளியேறும். பிளேடு, கத்தி போன்றவை வெட்டி ஏற்படும் லேசான காயங்களுக்கும், கீழே விழுவதால் ஏற்படும் சிராய்ப்புக்காயங்களுக்கும் மட்டுமே மூலிகை சிகிச்சை உதவும்.

நீங்கள் கேட்டுள்ள தீக்காயத்துக்கு உடனடியாக எமர்ஜென்சி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அந்தக் காயம் ஆறிவரும்போது, வெட்டுக்காய்ப் பூண்டின் இலைகளை அரைத்துப் பற்றுப்போட்டால் காயத்தால் ஏற்படும் தழும்பைத் தவிர்க்கலாம். புண்ணை சீக்கிரம் ஆற்றவும் உதவும்.


Click here to join whatsapp group for daily health tip

பற்களில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா..? பல் சுகாதாரத்தைப் பேணி காக்க இத மட்டும் செய்யுங்க போதும்!

October 02, 2022 0

 நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து பில்லியன் கணக்கான பாக்டீரியக்களால் பல் சிதைவு ஏற்படுகிறது. எனவே பற்களைப் பராமரிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

“பல் போனால் சொல் போகும்“ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.. நம்முடைய குரல் வெளிப்படுவதற்கு மற்றும் முகத்தை அழகாகக் காண்பிப்பதற்கும் உதவியாக உள்ளது பற்கள் தான். இதோடு மட்டுமில்லை இதய நோய்கள், இரத்தச்சோகை, சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகள் போன்ற உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகளை பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில் தான் முதலில் தெரியவரும். இதற்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்கள் தான்.

பல் சிதைவு ஏற்படக்காரணம்?… நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களிலிருந்து மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் பல் தகடு எனப்படும் பயோஃபில்ம் வடிவத்தில் கழிவுகளை விடுகின்றன. இந்த பல் தகடுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் பற்களில் ஒட்டிக்கொண்டிருந்து இறுதியில் அமிலங்களை உருவாக்குகிறது. இது பற்களின் பற்களின் தன்மையைக்குறைப்பதோடு, பல் இடுக்குகள் மற்றும் பற்சிதைவை ஏற்படுத்துகிறது. எனவே நம்முடைய பற்களை எப்போதும் பாதுகாப்பாக வைக்காவிடில் எண்ணற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இந்நிலையில் தான் வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் பல் பராமரிப்பு பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நம்ரதா ரூபானி..

பல் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதற்கான வழிமுறைகள்:

பல்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு எப்போதும் நீங்கள் ஆரோக்கிய உணவைச் சாப்பிட வேண்டும். அதிகளவு சர்க்கரை உட்கொள்ளுதல் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

ஃவுளூரைடு பற்பசை மற்றும் மென்மையான பல் துலக்குதலைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பல்களில் முட்கள் அணிந்திருந்தால் அதை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பற்களின் ஆரோக்கியத்தைப் பேணிகாக்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று, வழக்கமான பல் பரிசோதனைகள் மற்றும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

நாம் தினமும் அதிகப்படியான உணவுப்பொருள்களை உட்கொள்ளுவதால் நாக்கில் பாக்டீரியாக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஒவ்வொரு நாளும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பற்களைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுமுறைகள்:

பால்: பால் சம்பந்தப்பட்ட பொருள்களில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உள்ளது. மேலும் கேசீன் என்ற புரதம் அதிகளவில் உள்ளதால் பல் பற்சிப்பியைப் பாதுகாப்பதோடு பல் சிதைவையும் தடுக்க உதவுகிறது.

இலை காய்கறிகள்: முட்டைகோஸ், கீரை, ப்ரோக்கோலி, போன்ற இலை காய்கறிகளில் இரும்பு, கால்சியம், ஃபோலிக் அமிலம், துத்தநாகம், மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அனைத்தும் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை நோய் மற்றும் காயங்களிலிருந்து பாதுகாக்கிறது.

நார்ச்சத்துள்ள பழங்கள் : ஆப்பிள் போன்ற நார்ச்சத்துள்ள பழங்கள் உங்கள் பற்களைப் பாதுகாப்பதற்கு சிறந்தது. இவற்றை உணவில் எடுத்துக்கொள்ளும் போது உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது.

இதோடு வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிடும் போது பற்களைப் பாதுகாக்க உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு, ஈறுகளில் இரத்தம் வலிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்...

Click here to join whatsapp group for daily health tip 

காஃபியில் இத்தனை வகைகளா..? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்..!

October 02, 2022 0

 

சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் உற்சாகம் தரக் கூடிய பானமாக காஃபி இருக்கிறது. சோர்வாக உணரும் தருணங்களில் சூடான காஃபி அருந்துவதற்கு ஈடான தருணம் வேறெதுவும் இல்லை. குறிப்பாக மன இறுக்கத்தை போக்குவதற்கு காஃபி உதவியாக இருக்கிறது.

காலை எழுந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காஃபி மற்றும் நீண்ட நேர பணிச் சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காஃபி ஆகியவை நம் உடலில் புத்துணர்ச்சி செல்களை தூண்டுவதாக அமையும். காஃபி லேசாக கசப்பு சுவை கொண்டது என்றாலும் கூட, அதை யார் தான் வேண்டாம் சொல்கின்றனர்? காஃபி லவ்வர் என்றால் இன்னும் சொல்லவே தேவையில்லை. வித, விதமான காஃபிகளை அருந்த வேண்டும் என்று விரும்புவார்கள். ஆக, சர்வதேச காஃபி தினத்தில், நாமே தயார் செய்து கொள்ளக் கூடிய 5 விதமான காஃபிக்கள் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

ஃபிராப்பே : நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காஃபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காஃபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த ஃபிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.


திராமிசு : காஃபி என்றால், எப்போதுமே அதை பானமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவுப் பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையைச் சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காஃபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காஃபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

சாக்கலேட் காஃபி ட்ரஃபிள் : சாக்கலேட் சாப்பிட அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மனம் மிகவும் பிடிக்கும். ஆக, நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காஃபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.

டல்கோனா காஃபி : தென் கொரியாவைச் சேர்ந்த டோஃபி என்ற பான வகை தான் டல்கோனா காஃபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காஃபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாஸின் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காஃபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.

ஃபில்டர் காஃபி : நீங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர் என்றால் அல்லது பெரும் ரெஸ்டாரண்டுகளுக்கு செல்கிறீர்கள் என்றால் இந்த ஃபில்டர் காஃபி என்ற வார்த்தையை பார்க்காமல் இருக்க முடியாது. கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மனத்தை தரும்.


Click here to join whatsapp group for daily health tip 

காஃபி குடிப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..?

October 02, 2022 0

  பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் குடிக்க விரும்பும் காபி, நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதை தவிர வேறு பல நன்மைகளையும் காபி கொண்டிருக்கிறது. காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நேரத்தில் தினசரி காபியை விரும்பி பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது. சிறிய அளவிலான காஃபின் கூட நம்மை உற்சகமாக மற்றும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது... தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்கும். காபியில் உள்ள மெக்னீசியம் மற்றும் குரோமியம் போன்ற மற்ற தாதுக்களும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.


பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்கும்.. பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.

டிப்ரெஷனை குறைக்கிறது.. காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையிலான வழக்கமான காபி நுகர்வு இன்பம், பாசம், நட்பு, மனஅமைதி மற்றும் அதிக மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.

பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.. காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கல்லீரல் பாதுகாப்பு: நம் உடல் காஃபினை ஜீரணிக்கும்போது, ​​அது பராக்சாந்தைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது ஃபைப்ரோஸிஸில் உள்ள வடு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. மேலும் இது கல்லீரல் புற்றுநோய், ஆல்கஹால் தொடர்பான சிரோசிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும். மொத்தத்தில் தினசரி மிதமான காபி நுகர்வு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.. நாளொன்றுக்கு 2 - 3 கப் காபி குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்பழக்கம் இதய நோய் உட்பட இறக்கும் அபாயத்தை 10-15% குறைத்து உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் இருக்கட்டும், மேற்சொன்னபடி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே தினமும் குடிக்கலாம்.


Click here to join whatsapp group for daily health tip 

October 1, 2022

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் C

October 01, 2022 0

 CHAPTER - 1 - வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியா

CHAPTER - 2 - வேத காலப் பண்பாடு, சங்க காலம்

CHAPTER - 3 - மௌரியப் பேரரசு

CHAPTER - 4 - சமண, புத்த சமயங்கள் E

CHAPTER - 5 - குப்தப் பேரரசு

CHAPTER - 6 - விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

CHAPTER - 7 - தென்னிந்திய வரலாறு 

CHAPTER - 8 - ஐரோப்பியர்கள் வருகை,வளர்ச்சி

CHAPTER - 9 - சமூக சீர்திருத்தங்கள்

CHAPTER - 10 - விடுதலை இந்தியா

CHAPTER - 11 - இந்தியா கலாச்சாரம் மற்றும் பண்பாடு

CHAPTER - 12 - இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு

CHAPTER - 13 - திராவிட கழகம் 

CHAPTER - 14 - அரசியல் கட்சிகளும்,அதன் தொண்டுகளும் 

CHAPTER - 15 - கலை,அறிவியல்,இலக்கியம் மற்றும் தத்துவ அறிஞர்கள்


வெறும் தண்ணீர் தானேன்னு நினைக்காதீங்க... அதனால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குது..!

October 01, 2022 0

 அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் தண்ணீரே குடிக்காமல் இருப்பதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். முக்கியமாக சரியான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ளாத போது நம்முடைய மனதில் குழப்பங்களும் தேவையற்ற கோபங்களும் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. எமோஷனலின் நிறுவனத்தின் துணை நிறுவனரும் முதன்மை மனநல மருத்துவரான டாக்டர் ரோமா குமார் என்பவர் உணவு பொருட்கள் எவ்வாறு மனிதர்களுடைய மனதிலும் உடலிலும் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது என்பதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.


September 29, 2022

ரேஷன் கடைகளில் 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!!

September 29, 2022 0

 நியாயவிலைக் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை   மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள்  மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிபடி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராகவுள்ளதால், அலுவலர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சரிபார்ப்புக் குழுவின் பணிகளில் முழுமனதோடு ஈடுபட்டு ஒத்துழைக்க எதுவாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னரான இத்தெரிவு நடவடிக்கைக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால்,  தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துவதற்கு எதுவாக மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுத்துறைகளும் ஒத்துழைப்பும் உதவிகளும் நல்கிட வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் நேர்முகத் தேர்வு மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த சான்றாவணங்களுடன் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்குமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும், தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள்  ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடம் ஏற்பட்ட நாளிலிருந்து பதிணைந்து நாட்களுக்குள்ளும் பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அத்தகைய காலிப்பணியிடம் ஏற்படக் கூடும் நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்கு முன்னரும் காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை எழுத்து மூலமாக சங்கங்களிலிருந்து பெற வேண்டும்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையமானது அரசு பணியிடங்களுக்கு பின்பற்றப்படும் 200 புள்ளி இனச்சுழற்சி, இடஒதுக்கீட்டு விதிகள், முன்னுரிமை மற்றும் இதர நெறிமுறைகள் தொடர்பானநடைமுறையில் உள்ள அரசாணைகள், சட்டப் பிரிவுகள், விதிகள்ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நியாய விலைக்கடை விற்பனையாளர்  பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும்  இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் கட்டுநர் பணியிடத்திற்கு பள்ளி இறுதி வகுப்பு (SSLC) தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news