Agri Info

Adding Green to your Life

November 16, 2022

2,748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள்: எழுத்துத் தேர்வுக்கு தயாராவது எப்படி?

November 16, 2022 0

மாநிலம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை  கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 19ம் தேதிக்குள் நேர்காணல்  நடத்தி முடித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று முன்னதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. எனவே, குறைந்த நாட்களே இருப்பதால், கிராம உதவியாளர் பதவிகளுக்கு  விண்ணப்பித்த தேர்வர்கள், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு  தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அடுத்தக்கட்டம் என்ன?

அடுத்தக் கட்டமாக விண்ணப்பத்தார்கள் திறனறிதல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வு, வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இருக்கும். எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள்  அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வு:  எழுத்துத் தேர்வுக்கு பாடத்திட்டங்கள்  எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்கத்தில் வருவாய் நிர்வாக கட்டமைப்புகள் குறித்த பொது விவரங்களை  தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் தற்போது 38  மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் இயங்கி வருகிறது. நிர்வாக  வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் கோட்ட நிர்வாகம் (Sub Divisional Level), வருவாய்  வட்ட நிர்வாகம் (Taluk Level), குறுவட்ட நிர்வாகம் (Firka), வருவாய் கிராம நிர்வாகம் (Revenue Village) என பிரிக்கப்பட்டுளளது.       

மாநிலத்தின் இருக்கும் 94 வருவாய் கோட்டங்கள்  சார் வட்டாச்சியர் தலைமையிலும்,  313 வருவாய்  வட்டங்கள் தாசில்தார் தலைமையிலும், 1195 குறுவட்டங்கள் வருவாய் அலுவலர் தலைமையிலும்,  16,000க்கும் மேற்பட்ட வருவாய்  கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தலைமையிலும்  இயங்கி வருகிறது.

தமிழ்நாடு நிர்வாகத் துறை - பணியிடங்கள் விவரம்

வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்த, கிராம நிர்வாக அலுவலர்களின் கீழ் கிராம உதவியாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

1995க்கு முன்பு வரை, கிராம உதவியாளர்கள்     தற்காலிக, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்று வந்தனர். 1995ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண்.625 கீழ் இவர்கள் முழு நேரப் பணியாளராக மாற்றப்பட்டனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான வேலை உள்ளிட்டவைகளும் சிறப்பு ஊதிய விதியின் கீழ் வழங்கப்படுகிறது.

கிராம நிர்வாகப் பணிகள்:  கிராமக் கணக்குகளைப் பராமரிப்பது,  சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று  ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புவது,  இயற்கை பேரிடரின் போது மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புவது,  கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பது, முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனிப்பது, பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டைப் பராமரிப்பது ,வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிராம நிர்வாகத்தின் கீழ் வருகிறது வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள விஏஓ-விற்கு கிராம உதவியாளர்கள் உதவ வேண்டும்.

எனவே, கிராம உதவியாளர் பதவியின் கடமைகளை முதலில் தெரிந்து கொண்டு, இதுதொடர்பான புத்தகம், கட்டுரைகளை படிக்கத் தொடங்குகள். உங்கள் அருகில் உள்ள கிராம நூலகத்தை பயன்படுத்தத் தொடங்குங்கள். கல்வி சான்றிதழ் , சாதி சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ்   தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருங்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news  

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு

November 16, 2022 0

 டாடா குழுமத்தில் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி படித்த இளைஞர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான தகுதிகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பணி விபரம்
Cabin Crewவிமான பயணத்தில் பாதுகாப்பு மற்றும் சேவையை உறுதி செய்தல்
Duty Manager(Ground Handling Services)ஏர் இந்தியா பயணிகளுக்கு தரமான சேவை வழங்குவதை உறுதி செய்தல்
Service Assurance Officerவிமான பயணிகளில் தேவையை சந்திப்பது.
Ramp Operations Supervisorதுரிதமான ramp handling services கொடுப்பது
Customer Service Manager – Non–Voice and Voiceஇமெயில் மற்றும் தொலைப்பேசி மூலம் நல்ல வாடிக்கையாளர் சேவையை வழங்குவது

இப்பணிக்கு  தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

பணியின் பெயர்கல்வித்தகுதிஅனுபவம்
Cabin Crew12 ஆம் வகுப்பு 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்
Duty Manager(Ground Handling Services)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5 -12 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Service Assurance Officerஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.3 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Ramp Operations Supervisorஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5-12 ஆண்டுகள் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
Customer Service Manager – Non–Voice and Voiceஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். எம்.பி.ஏ இருந்தால் நல்லது.5 -12 வருடம் அனுபவம் எதிர்ப்பார்க்கப்படுகிறது

வயது :

ஏர் இந்தியா Cabin Crew-வில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம். புதியவர்களுக்கான வயது வரம்பு 18-22 வரை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். நேர்காணல் விவரங்கள் அவர்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஏர் இந்தியா பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.11.2022.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் முகவரி:

பணியின் பெயர்ஆன்லைன் முகவரி
Cabin Crewhttps://content.airindia.in/careers
Duty Manager(Ground Handling Services)https://content.airindia.in/careers
Service Assurance Officerhttps://content.airindia.in/careers
Ramp Operations Supervisorhttps://content.airindia.in/careers
Customer Service Manager – Non–Voice and Voicehttps://content.airindia.in/careers

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click here to join WhatsApp group for Daily employment news  

November 14, 2022

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா..?

November 14, 2022 0

 இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறோம். மண் பானை சமையல், வாழை இலை விருந்து, ஆர்கானிக் உணவு வகைகள், மர சீப்புகள், பனை ஓலைப் பாய் போன்றவற்றின் வரிசையில் செப்பு பாத்திரங்களும் இடம் பிடித்துள்ளது. ஆர்கானிக் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் விதவிதமாகக் கிடைக்கும் செப்பு பாட்டில்களில் நீரை அருந்துவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

செப்பு பாத்திரங்களில் நீரையோ அல்லது உணவையோ சாப்பிடுவதால் ஏற்படும் முழு நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் அசந்தேபோய் விடுவீர்கள். செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது மற்றும் உணவு அருந்துவது என்பது உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு, செரிமானமானத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.மேலும் புற்றுநோயின் ஆபத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை நமக்கு கொடுக்கிறது.செம்பு பாத்திரத்தால் ஏற்படும் நன்மைகளை இங்கே காண்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : கொரோனவால் இன்று உலகமே மாறியுள்ளது. ஒருவருக்கு கொரோனா ஏற்படாமல் இருக்க அவரிடம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். உங்கள் உடலில் தாமிர/செம்பு சத்து குறைவாக உள்ளதென்றால் உங்கள் இரத்த ஓட்டத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் குறையும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் உணவில் செப்பை நேரடியாகவோ அல்லது உட்செலுத்துதல் மூலமாகவோ எடுத்துக்கொண்டால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக மிக குறைவு. அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்களுக்கும் காப்பர்/ செப்பு சத்து பயனுள்ளதாக இருக்கும். செப்பு உணவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்கிறது, பாக்டீரியாவை கொன்று நமக்கு நன்மைகளை அளிக்கிறது.

வலுவான எலும்புகள் : கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருப்பது புதிய வாழ்க்கை முறையாக நமக்கு மாறியிருந்தாலும், இது நம் எலும்புகளுக்கு ஆரோக்கியமானதல்ல. நமது எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின் D போதுமான அளவு கிடைப்பதற்கு சூரிய ஒளி முக்கியமானது. செப்பு தாது ஒருவருக்கு குறைவாக இருந்தால் அவரின் எலும்பு பாதிப்படையக்கூடும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும்.

இதய ஆரோக்கியம் : இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த செப்பு நமக்கு உதவுகிறது, இதனால் இதய சிக்கல்கள் ஏற்படுவது குறைகிறது. ஆயுர்வேதத்தின் படி, செம்பானது அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல், சளி போன்றவை குறைக்க பயனளிக்கிறது. குறைந்த அளவு தாமிரம்/செப்பு சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை கொண்டுவரும்.

செப்பின் பிற நன்மைகள் : செப்புத் தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செப்பு பாத்திரம் அல்லது செப்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செப்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவில் செப்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

செப்பு தாதுவானது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான செம்பு தாதுவிற்கான தடயங்கள் இல்லை என்றால், நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளால் அவதிப்படுவீர்கள்.செப்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு ஆகும். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செப்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது.

செப்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செப்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும்.செப்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடித்தால் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் சமப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த நீர், உடலில் புதிய மற்றும்ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணைபுரிகிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இ-கோலி (E.coli), சால்மோனெல்லா (Salmonella) போன்ற பொதுவான பாக்டீரியாக்களை செப்பு அழிக்கிறது. இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செப்பு பாத்திரங்கள்தான் சிறந்தவையாகும். பெண்கள் திருமணம் செய்துக்கொண்டு செல்லும் போது செப்பு பாத்திரங்களை சீராக கொடுக்கப்படும். புதுமணத்தம்பதிகள் செப்பு பாத்திரத்தை பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறை கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 Click here to join whatsapp group for daily health tip

சர்க்கரை நோய் இருக்கா? இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க..

November 14, 2022 0

 நோய்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டிருப்பது, அவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் உதவும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், நோய் குறித்த தகவல்களை முறையான மருத்துவரின் ஆலோசனைகள் அல்லது மருத்துவ ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, வருவோர், போவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால், மனம்போன போக்கில் ஒவ்வொருவரும் நோய் குறித்த தங்களுடைய தனிப்பட்ட புரிதல்களை உங்களிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில், சர்க்கரை நோய் குறித்த பொதுவான வதந்திகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

பெரியவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் : பொதுவாக உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்றாலும் கூட, அதற்காக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு இந்த நோய் வரவே வராது என்பது உண்மை அல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்கமின்மை போன்ற காரணங்களால் இளம் வயதில் கூட இந்த நோய் வரக்கூடும்.

நீரிழிவுக்காண பிரத்யேக உணவுகளை சாப்பிட வேண்டும் : நீரிழிவுக்கான பிரத்யேக உணவுகள் விலை உயர்ந்தவை என்பது மட்டுமல்லாமல், அதனால் சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படுவது உண்டு. ஆகவே, நீரிழிவு நோய்க்கானது என்று லேபிள் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. முழு தானிய உணவுகள், நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை இந்த லேபிள் செய்யப்பட்ட உணவுகளை காட்டிலும் சிறப்பானதாகும்

உடல் பருமன் நிறைந்த மக்களை மட்டுமே நீரிழி நோய் தாக்கும் : உடல் எடை மிகுதியாக இருந்தால் சர்க்கரை வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம் என்பது உண்மைதான். ஆனால், உடல் பருமனாக காட்சியளிக்க கூடிய ஒவ்வொரு நபருக்கும் இது கட்டாயம் வந்தே தீரும் என்று அர்த்தம் அல்ல. சில சமயம், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக உள்ளவர்களையும் கூட இது தாக்குகிறது.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பான எதையும் சாப்பிட கூடாது : இது முற்றிலும் உண்மை கிடையாது. ஏனென்றால், நம் உடலுக்கு ஆற்றலை வழங்கக் கூடியதாக சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகிய சத்துகள்தான் இருக்கின்றன. சர்க்கரை நோயுடன் உள்ள நோயாளிகள் அதிக இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே சமயம், சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ரத்த சர்க்கரை எந்த அளவுக்கு உள்ளது என்பதை பொருத்து, எந்த அளவுக்கு இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவரை ஆலோசிக்கலாம்.

கண் பார்வை இழப்பு மற்றும் கால் இழப்பு ஏற்படும் : சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள அனைவருக்குமே கண் பார்வை இழப்பு ஏற்படும் மற்றும் கால் இழப்பு ஏற்படும் என்ற கருத்து உங்களை அச்சுறுத்தக்கூடிய தகவலாகும். நிச்சயமாக இது எல்லோரையும் பாதிக்க கூடியது அல்ல. உங்கள் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படாத அளவில் இருந்தால் மட்டுமே இது போன்ற பெரிய இழப்புகள் ஏற்பட சாத்தியம் உண்டு. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிட்டு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்றவை இந்த அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவும்.

 Click here to join whatsapp group for daily health tip

November 11, 2022

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூட நுட்புநர் பணி.. முழு விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

November 11, 2022 0

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட விளம்பரத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் பணியில் காலியாக உள்ள 32 இடங்களைத் தற்காலிக பணி அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

ஆய்வுக்கூட நுட்புநர் பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 (Lab Technician Grade-II)
பணியிடங்கள்31
சம்பளம்ரூ.15,000/-
வயது18 வயது முதல் 59 வயது வரை.

ஆய்வுக்கூட நுட்புநர் கல்வித்தகுதி: 

மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் படிப்பு : DMLT (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று பெற்று கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் சுயவிவர படிவத்துடன் தகுந்த சான்றிதழ்கள் வைத்து நேரிலும், தபால் மூகமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் படிவங்கள் நேரிலும் அளிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்பப்படும் முகவரி:

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி,

திருப்பூர் மாவட்டம் - 641 608.

Click here to join WhatsApp group for Daily employment news  

ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள், மொழிபெயர்ப்பாளருக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்..!

November 11, 2022 0

 தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ரெப்கோ வங்கியில் ஓய்வு பெற்றவர்கள்,மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர் போன்றவர்களுக்கான தற்காலிகப்பணி அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Officer on Special Duty (OSD)- Credit2
Officer on Special Duty (OSD) – Inspection3
Officer on Special Duty (OSD) – IR & Vigilance1
Temporary Translator/Typist – Hindi1
Temporary Typist – Tamil1

வயது வரம்பு:

Officer on Special Duty பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.09.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 62 க்குள் இருக்க வேண்டும்.

Temporary Translator/Typist பணிக்கான வயதானது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணியின் பெயர்சம்பளம்
Officer on Special Dutyரூ.40,000/-  + ஒரு நாளைக்கு உணவு ரூ.220/-
Translator / Typist Hindiரூ.20,000/-
Translator / Typist Tamilரூ.11,000/- + ஒரு நாளைக்கு உணவு ரூ.140/-

பணிக்கான தகுதி:

Officer on Special Duty பணிகளுக்கு வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது விஆர்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

Translator / Typist பணிக்குப் பட்டப்படிப்பு தேர்ச்சி  மற்றும் தட்டச்சு உயர் கிரேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்குத் தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Translator / Typist பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் ரெப்கோ வங்கியின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயவிவரங்களுடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்துத் தபால் மூலம் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.11.2022.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய : https://www.repcobank.com/uploads/career/Application_OSD.pdf

அறிவிப்பை பார்க்க : Notification 1  / Notification 2

Click here to join WhatsApp group for Daily employment news  

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு.. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

November 11, 2022 0

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் அமைக்கும் பிரிவில் தொழிற்பயிற்சி( Apprentices)பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்Apprentices
பணியிடங்கள்465
வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 24 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Mechanicalமெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
Electricalஎலக்டிரிக்கல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ.
Telecommunication & Instrumentationஎலக்டிரிக்கல்,கமுனிகேசன்,ரேடியோ கமுனிகேசன் அல்லது போன்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ.
Assistant Human Resourceபட்டப்படிப்பு தேர்ச்சி
Accountantபட்டப்படிப்பு தேர்ச்சி
Data Entry Operator12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Domestic Data Entry Operator12 ஆம் வகுப்பு தேர்ச்சி

உதவித்தொகை விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Apprentices Act,1961/1973/ Apprentices Rules 1992 விதியின் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://plapps.indianoil.in/PLApprentice/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2022.

தேர்வு நடைபெறும் என்று கருதப்படும் நாள் : 18.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news  


10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

November 11, 2022 0

 சென்னையில், வரும் 25ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வுக்கு நவம்பர் 25-ல் நேர்காணல் நடைபெறுகிறது.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் - வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில்,. விருப்பமுள்ளவர்கள் மேற்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 25.11.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news  

அதிகப்படியான மன அழுத்தத்தினால் உடல் எடை கூடுமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

November 11, 2022 0

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட உடல் எடை அதிகரிக்கலாம். இவ்வாறு உடல் எடை கூடிய பிறகு, அதனை குறைப்பதற்கு அனைவரும் என்னென்னவோ செய்து வருகின்றனர். ஆனால் அந்த பிரச்சனை அப்படியே தான் உள்ளது.

ஆனால் இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கு மேலே கூறிய காரணங்கள் தவிர அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு காரணம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகப்படியான மன அழுத்தத்தினால் என்னென்ன வழிகளில் உடல் எடை கூடுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

அதிகமான பசி : மன அழுத்தத்தில் இருக்கும் போது இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கிறது. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் குறைத்து உடல் எடை வேகமாக கூடுகிறது.

இன்சுலின் குறைபாடு : ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் செலுத்துவது இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது இன்சுலின் செயல் திறன் பாதிக்கப்பட்டு இரத்தத்திற்கு சர்க்கரை கொண்டு செல்லப்படுவது வெகுவாக குறைகிறது. இதனால் செல்களில் உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழி செய்கிறது.

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தல் : பசியிலிருக்கும் போது வரைமுறையின்றி உணவு வகைகளை உட்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவ்வாறு அதிகபடியான உணவுகளை உட்கொள்ளும்போது உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது. இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக சர்க்கரை உடலில் சேரும்போது அது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.

தைராய்டு குறைபாடு: அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமான கோளாறு ஆகியவை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.

புரோஜெஸ்டிரோன் குறைபாடு : அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது புரோஜெஸ்டிரோன் எனப்படும் செக்ஸ் ஹார்மோனின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் மற்றொரு ஹார்மோனின சுரப்பது அதிகமாகிறது. இயற்கையாகவே உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரக்கும் போது உடல் எடை கூடும். எனவே நீங்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு உட்படும்போது இவை நேரடியாக உடலில் ஹார்மோன் சமநிலையை பாதித்து உடல் எடை கூடுவதற்கு வழி வகை செய்கிறது.

 Click here to join whatsapp group for daily health tip 

10 நிமிடம் சூரிய நமஸ்காரம் செய்தாலே இவ்வளவு கலோரிகளை குறைக்கலாமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

November 11, 2022 0

 பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகாவும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உடலை இலகுவாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி நீண்ட ஆயுளுக்கும் வழி வகுப்பதாக ஆய்வுகளே கூறுகின்றன.

அதேபோல் மனித உடல் செயல்பாட்டுக்கு விட்டமின் டி- யை அள்ளிக்கொடுக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். ஆனால் ஏ.சி சூழ்ந்த உலகில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படி யோகாவும், சூரிய வெளிச்சமும் ஒன்று சேர அமைய வேண்டுமெனில் அதற்கு சூரிய நமஸ்காரம் சிறந்த வழியாக இருக்கும்.

சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை உணர முடியும் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது சூரிய நமஸ்காரம் வெறும் பயிற்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. அது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இது சுவாசத்தை ஒருங்கிணைப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஒருவித அமைதியை தரும் பயிற்சியாகும்.

அதுமட்டுமன்றி தசைகளை தூண்டி நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நிமிர்ந்து நேராக அமர்வதால் முதுகெலும்பு வலு பெறுகிறது. நம் தோற்ற நிலையும் சீராகிறது. அமைதியான சூழலில் இதை செய்யும்போது கெட்ட எண்ணங்கள் நீங்கி மனதளவில் அமைதி நிலவுகிறது.

அக்ஷர் யோகா நிறுவனங்களின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு அளித்த பேட்டியில் “ சூரிய நமஸ்காரம் சரியான முறையில் செய்தால் 5-10 நிமிடங்களில் சுமார் 20-30 கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இது நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் , எந்த மாதிரியான சுவாச முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்து குறையும். அதாவது கலோரி உங்கள் வேகத்தின் அளவை பொறுத்து குறையும். எனவே சூரிய நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும், சீரான நிலை என்ன என்பதை தெரிந்துகொண்டால் கலோரிகள் எரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் சராசரியாக 40 முதல் 50 கலோரிகள் வரை குறைக்கலாம். இதற்கு சரியான சுவாச நுட்பத்தை பின்பற்றினால் கலோரிகளின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனவே சுவாச நுட்பத்தை பொறுத்து கலோரி எரியும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. எனவே 108 சூரிய நமஸ்காரங்களுக்கு பதிலாக 10 நிமிடங்கள் முழு கவனத்துடன் செய்தாலே போதுமானது. இதற்கு யோகா பயிற்சியாளரின் உதவியையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் திரிவேதி.

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா..? சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என தகவல்..!

November 11, 2022 0

 காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அந்த நாள் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்த உடனேயே காபி அல்லது தேநீரை குடித்து, ஃபிரெஷாக்கிக் கொள்கிறார்கள். அதேபோல காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து நிறைந்த உடனடி ஆற்றல் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகள் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சீக்கிரமே பசி எடுப்பதால் அடுத்தடுத்து பானம், தின்பண்டம் என்று மதிய உணவுக்கு முன்பேவே அதிகமாக பசி எடுக்க துவங்கிவிடும்.

காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு இல்லாதவர்களுக்கு கூட ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்கும். எனவே, எல்லோருக்குமே சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றால் அனைவருமே காலையில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

காலையில் பசிக்கிறது என்று ஒரு வாழைப்பழம் அல்லது பேரீச்சையை சாப்பிட்டால் அது உடனடியாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடனே பசியைத் தூண்டி விடும். எனவே காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது எந்த மாயாஜாலமும் செய்து உங்களுக்கு ஆற்றல் தராது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொழுப்பும் கூட உடலில் ஆற்றலாக மாறும் தன்மை கொண்டது. உடலில் கார்ப்ஸ் இல்லாத பொழுது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு ஆற்றலாக மாறும்.

காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும்?

காலையில் நீங்கள் சாப்பிட்ட பின்பு ஆற்றல் குறையாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் புரதம் மற்றும் கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.
கொழுப்பு என்பது நம் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் ஒரு ஊட்டச்சத்து. எனவே உடலுக்கு மட்டுமல்லாமல், கொழுப்பு நிறைந்த உணவுகள் மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கும். நீங்கள் வழக்கத்தை விட துரிதமாக தெளிவாக சந்திப்பீர்கள். வேலையை சுறுசுறுப்பாகவும் செய்ய முடியும். அது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பும் குறையும்.
நல்ல கொழுப்பு என்பது இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் என்ற செரிமான கோளாறு மற்றும் நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மிகச் சிறந்த நிவாரணமாக அமையும். எனவே காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு இருக்கும் பட்சத்தில், காலையில் கொழுப்பு நிறைந்த மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரியாகி மாதவிடாய் சுழற்சி சீராகும். வழக்கமாக மாவு சத்து நிறைந்த உணவுகளுக்கு பதிலாக, காய்கறிகள், புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளுடன் ஒமேகா சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டால் முறையற்ற மாதவிடாய் சீராக அமையும்.

November 8, 2022

ரூ.85,570/- சம்பளம்.. மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!

November 08, 2022 0

 மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவன பணிக்கான விவரங்கள்:

பணியின் பெயர்Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level
காலியிடங்கள்Engraver - 2   / Junior Office Assistant - 1
வயது வரம்பு18 இல் இருந்து 28 வயது வரை இருக்க வேண்டும்.

பணிக்கான கல்வித்தகுதி:

Engraver பணிக்காக Fine Arts பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Junior Office Assistant பணிக்காக இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவு.

சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engraverரூ. 23,910/- முதல் ரூ.85,570/- வரை
Junior Office Assistantரூ.21,540/- முதல் ரூ.77,160/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

Junior Office Assistant பணிக்குத் தட்டச்சு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கணினி முறையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.

Engraver பணிக்கு எழுதித் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனின் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://igmmumbai.spmcil.com/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2022.

விண்ணப்பிக்க கட்டணம் :

ஆன்லைனின் விண்ணப்பிக்க UR/OBC/EWS - ரூ.600/-

SC/ST/PWD - ரூ.200/-

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news