என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் (Engineers India Limited) மேலாளர் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்த Metallurgical/Mechanical பொறியியலாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Deputy General,Assistant General மற்றும் Senior Manager பதவிகளுக்கு 5 பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சம் 47 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
Deputy General Manager | 1 | ரூ.1,20,000-2,80,000 | 47 |
Assistant General Manager | 2 | ரூ.1,00,000-2,60,000 | 44 |
Senior Manager | 2 | ரூ.90,000-2,40,000 | 40 |
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு Metallurgy/Mechanical பாடத்தில் B.E./B. Tech/B. Sc. (Engg.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 12 வருடத்தில் இருந்து 19 வருட அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://engineersindia.com/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://recruitment.eil.co.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.