Agri Info

Adding Green to your Life

January 13, 2023

திருச்சி சுகாதாரத் துறையில் 119 செவிலியர் பணியிடங்கள் அறிவிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்

January 13, 2023 0

  திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  திருச்சி மாவட்ட பொது சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர் : செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை) 

பணியிடங்களின் எண்ணிக்கை: 119 

கல்வித்தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council),

வயது வரம்பு: 12.01.2023 அன்று, 50 வயது பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/-

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 31ம் தேதி மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி 620 020. தொலைபேசி எண். 0431-2333112, மின்னஞ்சல் முகவரி dphtry@nic.in ஆகும்.


 Click here to join WhatsApp group for Daily employment news 

பணிச்சுமை ஏதுமில்லை.. பாலிசி பிடித்து கொடுத்தால் காசு.. சென்னை அஞ்சல் அலுவலகம் சூப்பர் அறிவிப்பு

January 13, 2023 0

 

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்கு புதிய நேரடி முகவர்களை  ஈடுபடுத்த விருப்பதாக  முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் தெரிவித்துள்ளது.   விருப்பமுள்ளவர்கள் வரும் ஜனவரி 23ம் தேதி அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

யார் விண்ணப்பிக்கலாம்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதேபோன்று,   இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

மேற்கண்ட தகுதியுடையவர்கள், வரும் ஜனவரி 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம்: எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம். 

தேவைப்படும் ஆவணங்கள்: மூன்று புகைப்படம்  (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று 

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை /கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news 

சுயதொழலில் தொடங்குவது உங்கள் கனவா..? இந்த செய்தி உங்களுக்கு தான்

January 13, 2023 0

 தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் நடத்தப்படும் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 19.01.2023 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களுக்கு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசுத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் இம்முகாம் மூலம் விளக்கப்படும்.

மேலும் இம்முகாம் குறித்த தகவல்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி மற்றும் கைப்பேசி எண்கள் 044-22252081, 22252082, 96771 52265, 8668102600 தொடர்பு கொள்ளலாம்.


 Click here to join WhatsApp group for Daily employment news 

அரசு தரும் மானியத்துடன் தொழில் தொடங்கி நீங்கள் ஜெயிக்கத் தயாரா? இதோ உங்களுக்கான திட்டங்கள்..

January 13, 2023 0

 ன்றைய தேதியில் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.

இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன.

தமிழ்நாடு தொழில் முனைவோர் நிறுவனம்

வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்!

இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார். இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம்.

அரசின் மானியத்துடன் தொழில் கடன் பெறுவதற்கு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பெரம்பலூரில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் அ.செந்தில்குமார்...

``மாவட்டத் தொழில் மையமானது சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மக்களுக்குத் தொழில் சம்பந்தமான சந்தேகங்கள், ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், துறை சார்ந்த வங்கிகளின் மூலம் எளிமையான முறையில் கடன் பெற்றுத் தருவதற்கும் வழிவகை செய்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

அ.செந்தில்குமார்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் இன்ஃபோசிஸ்!

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படும்.

தொழில் கடன் தருவதற்கான வங்கிகளின் வரம்பானது, விண்ணப்பிக்கும் நபரது வங்கிக்கணக்கின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும். விண்ணப்பிக்கும் நபர் தொழில் கடன் வாங்கும் தகுதி உடையவர் என உறுதி செய்யப்பட்டபின், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்தபின்னரே அவருக்குக் கடன் வழங்கப்படும். இவற்றில் அரசின் தொழில் கடனுக்கான மானியத் தொகை விண்ணப்பிக்கும் நபரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

உதாரணமாக, ரூ.10 லட்சம் மதிப்புக்கு ஒரு இ-சேவை மையம் ஒரு நபரால் தொடங்கப்படும்போது ரூ.3.5 லட்சம் மானியத் தொகையைக் கடன் பெறுபவரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடும். தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தொழில் கடன் பெற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. திட்டங்களைப் பொறுத்து கடனுக்கான வரம்புகளும் மாறுபடும் என்பதைக் கடன் பெறுபவர்கள் மறக்கக் கூடாது.

மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி இனி பார்ப்போம்...

படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme - UYEGP)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 18 வயது முடிவடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச 35 வயதுக்கு உட்பட்டவர் ஆகவும், சிறப்புப் பிரிவினரான அதாவது மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.


தொழில் துறைதொழில் செய்ய உகந்த மாநில பட்டியல்: தமிழகம் 14-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் அவர் விண்ணப் பிக்கும் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வசதி பெற வாய்ப்புள்ளது.

அரசின் மூலம் கிடைக்கும் மானியம் ஆனது திட்ட மதிப்பீட்டில் 25% என்றாலும், இதற்கான உச்சவரம்பு ரூ2.50 லட்சம்.

இந்தத் திட்டத்தின் விண்ணப்பத்தில் இரண்டு நகல்களாக இணைக்கப்பட வேண்டியவை... பள்ளி/கல்லூரி மாற்றுச்சான்று, குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், விலைப்பட்டியல் கொட்டேஷன் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் தர வேண்டும்!

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (New Entrepreneur cum Enterprise Development Scheme - NEEDS)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21-ஆகவும் அதிகபட்ச 35-ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்சம் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று வருடம் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும்.


தொழில் பழகுவோம்ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பு மையம். ஓசூர் தொழில் வளர்ச்சியில் ஒரு `மைல் ஸ்டோன்'...!

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்முனைவோரின் பங்குத் தொகையானது, பொதுப் பிரிவினருக்கு மொத்த திட்ட முதலீட்டில் 10 சதவிகிதமும், சிறப்புப் பிரிவினருக்கு மொத்த திட்ட முதலீட்டில் 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் மானியம் ஆனது திட்ட முதலீட்டில் 25% (உச்சவரம்பு ரூ.75 லட்சம்) பெறலாம். மேலும், 3% வட்டி மானியம் கடன் செலுத்தும் காலம் வரை பெறலாம். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளின் மூலம் இதற்கான முதலீட்டுத் தொகை வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Prime Minister's Employment Generation Programme - PMEGP)

இந்தத் திட்டத்தின் விண்ணப்ப மனுவை www.kviconline.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடாக உற்பத்திப் பிரிவுக்கு ரூ.50 லட்சமும், சேவைப் பிரிவுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்படுகிறது. உற்பத்திப் பிரிவு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும், சேவைப் பிரிவில் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலும் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும்.

வேலைவாய்ப்பு10 ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு! -தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு...

திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்குக் குறைவாகவோ, சேவைப் பிரிவில் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாகவோ இருந்தால் கல்வித் தகுதி தேவையில்லை. தேவைப்படும் நகல்களாகத் திட்ட அறிக்கை, ஜி.எஸ்.டி எண்ணுடன்கூடிய இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கான உத்தேச மதிப்பீடு, கட்டடம் கட்டுவதாக இருந்தால் கட்டட எஸ்டிமேட் ப்ளு பிரிண்ட், நிலப்பத்திர நகல்/குத்தகை பத்திரம்/ வாடகை ஒப்பந்தப் பத்திரம், படிப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் இரண்டு தேவை.

வங்கிக் கடன் தொகையாகத் திட்ட மதிப்பீட்டில் 90% - 95% தொகையை வங்கி அனுமதி செய்து வழங்கும்.

மேற்கண்ட திட்டத்தில் சொந்த முதலீடாக பொதுப் பிரிவில் உள்ள பயனாளிகள் 10 சதவிகிதமும், நலிவடைந்த பிரிவில் உள்ள பயனாளிகள் 5 சதவிகிதமும் செலுத்த வேண்டும்.

திட்ட முதலீட்டில் கிராமப்புற பொதுப் பிரிவினருக்கு 25% மானியமும், கிராமப்புற சிறப்பு பிரிவினருக்கு 35% மானியமும், நகர்ப்புறப் பொதுப் பிரிவினருக்கு 15% மானியமும், நகர்ப்புற சிறப்பு பிரிவினருக்கு 25% மானியமும் வழங்கப்படும்.

பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises Scheme - PMFME)

இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முடிந்தவர்களாக இருக்க வேண்டும். வருமானம் மற்றும் கல்வித் தகுதிக்கு நிர்ணயமும் எந்தப் பாகுபாடும் இந்தத் திட்டத்துக்கு இல்லை.


உணவு பதப்படுத்துதல் தொழில்`லேசான வெயில் அடிச்சாலே போதும்; மின்சாரம் கிடைக்கும்' பிரதமர் பாராட்டிய விவசாயியின் தோட்டம் விசிட்!

இந்தத் திட்டத்தின் மூலம் 35% மூலதன மானியம் (ரூ.30 லட்சம் வரை மூலதனக் கடனுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்) விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே அரசுத் திட்ட கடன் பெற்றவரும், விரிவாக்கத்துக்குத் தொழில் கடன் வாங்கி பயன் பெறலாம். நகல் ஆவணங்களாக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிப் புத்தகம், கல்விச் சான்று, இயந்திரங்களுக்கான கொட்டேஷன், போட்டோ ஆகியன தேவைப்படும்.

சிறிய அரிசி ஆலை, மாவு மில், எண்ணெய் பிழியும் செக்கு, சிறுதானியம்/ முந்திரியில் மதிப்புக்கூட்டும் பொருள்கள் தயாரித்தல், பேக்கரி, சத்து மாவு / மசாலா, கால்நடைத் தீவனம், கோழித் தீவனம், இதர உணவுப் பொருள்கள் தயாரிக்கும் தொழில் ஆகியன இந்தத் திட்டத்தின் மூலம் பயனுறும் உதாரணத் தொழில்கள் ஆகும்.


விண்ணப்பம் Application Formஅக்ரி சம்பந்தமான ஆப்களுக்கு நல்ல வாய்ப்பு! சுந்தர் பிச்சையை சந்தித்த கிருஷ்ணகிரி இளைஞர்!

எங்கு விண்ணப்பிப்பது?

www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின்கீழ் UYEGP மற்றும் NEEDS, PMFME திட்டத்துக்கான விண்ணப்ப மனுவை பதிவிறக்கம் செய்யலாம். தேவையான ஆவணங்களுடன் மாவட்டத் தொழில் மையத்தில் சமர்ப்பித்து வங்கியின் மூலம் கடன் பெற்று தொழில்முனைவோர் ஆகலாம். இதன்மூலம், வேலைவாய்ப்பு நாடுபவராக இல்லாமல், வேலைவாய்ப்பு வழங்குபவராக மாற முடியும். தொழில்முனைவோர் தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.

மஞ்சள் பற்களால் கூனி குறுக வேண்டாம்... பளிச்சிடும் வெள்ளைப் பற்கள் பெற சூப்பரான டிப்ஸ்

January 13, 2023 0

 

மஞ்சள் பற்களால் கூனி குறுக வேண்டாம்... பளிச்சிடும் வெள்ளைப் பற்கள் பெற சூப்பரான டிப்ஸ்

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதனால், தாழ்வு மனப்பான்மையும் மக்களிடையே வரத் தொடங்குகிறது. நாம் பற்களை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், அவை மஞ்சள் நிறமாக மாற அதிக நேரம் எடுக்காது. இதன் காரணமாக, பல் சிதைவு தொடங்குகிறது. நீங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் சங்கடத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய பிரச்சனையை தவிர்க்க 5 பயனுள்ள குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகள் உங்கள் பற்களை வெள்ளையாக மாற்றும்.

தேங்காய் எண்ணெய்

பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு தேங்காய் எண்ணெயை வாயில் போட்டு அங்கும் இங்கும் சுழற்றி கொப்பளிக்கவும். இதற்குப் பிறகு பற்களை சுத்தமாக துலக்க வேண்டும். இந்த தந்திரம் எண்ணெய் இழுத்தல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி செய்வதால், பற்களின் மூலையில் சிக்கியுள்ள அழுக்குகள் நீங்கி, பற்கள் மஞ்சள் நிறமாகாது.

சமையல் சோடா

பற்களை சுத்தமாக வைத்திருக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை இயற்கையான சுத்தப்படுத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்த, நீங்கள் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலக்க வேண்டும். இதற்குப் பிறகு, அதை பிரஷ் மீது வைத்து, பற்களை சுத்தம் செய்யவும். உங்கள் பற்கள் (Yellow Teeth Solution) முத்துக்கள் போல் ஜொலிக்கும், அவற்றின் மஞ்சள் நிறம் மறையும்.

அன்னாசி

பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்குவதில் அன்னாசிப்பழம் அற்புதமான பங்கு வகிக்கிறது. இது இயற்கையான கறை நீக்கியாக செயல்படுகிறது, இது பற்களில் குவிந்துள்ள மஞ்சள் மற்றும் பிளேக்கை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, அன்னாசிப்பழத்தின் சில துண்டுகளை ஒரு மிக்சரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு கலவையை வடிகட்டி சாறு பிரிக்கவும். பின்னர் அந்த சாற்றில் சிறிது சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். இதற்குப் பிறகு, அந்தக் கரைசலைக் கொண்டு பற்களை (Yellow Teeth Solution) சுத்தம் செய்யும் போது, உங்கள் பற்கள் மின்னுகின்றன.

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தோல் பற்களின் இயற்கையான நிறத்தை மீட்டெடுக்கவும் உதவும். இதைப் பயன்படுத்த, வாழைப்பழத் தோலை எடுத்து, அதன் உள்ளே இருந்து பற்களைத் தேய்க்கவும். இதற்குப் பிறகு, பிரஷ் மீது பற்பசையைப் பயன்படுத்தி பற்களை (மஞ்சள் பற்கள் தீர்வு) சுத்தம் செய்யுங்கள். உங்கள் பற்களின் மஞ்சள் நிறம் மறையும்.

Click here to join whatsapp group for daily health tip

தலைவலி, சோர்வு உங்களை ஆட்டிப்படைக்கிறதா? காரணம் இதுதான்

January 13, 2023 0

 

தலைவலி, சோர்வு உங்களை ஆட்டிப்படைக்கிறதா? காரணம் இதுதான்

Vitamin B 12 Deficiency Symptoms: நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல உடற்தகுதிக்கு, நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். நம் உடலில் வைட்டமின் குறைபாடு இருந்தால், உடல் பல நோய்களுக்கு ஆளாகும். நமது அன்றாட வாழ்வில் பல நேரங்களில், தலைவலி மற்றும் ஆரம்பகால சோர்வு போன்ற பிரச்சனைகளை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். ஆனால் அதை சாதாரணமாகக் கருதி புறக்கணிக்கிறோம். ஆனால் அது அவ்வாறு இல்லை. இது ஒரு பொதுவான பிரச்சனை அல்ல. உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் செய்திகளின்படி, வைட்டமின் பி 12 நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு வைட்டமின். அதன் குறைபாட்டால் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வைட்டமின் பி 12 நம் உடலை பல நோய்கள் மற்றும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. இதன் குறைபாடு நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. ஒரு சிறிய கடின வேலை செய்த பிறகு நீங்கள் சோர்வாக இருந்தால் அல்லது உங்களுக்கு அடிக்கடி தலைவலி இருந்தால், இதுவும் வைட்டமின் பி 12 குறைபாட்டின் பெரிய அறிகுறியாகும்.

நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்குவதில் வைட்டமின் பி-12 முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் அதன் அளவு குறைவாக இருந்தால், ஆற்றல் அளவு வேகமாக குறைந்து பலவீனமாக தொடங்குகிறது. சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்படும். இவை வைட்டமின் பி 12 குறைபாட்டின் முதன்மை அறிகுறிகளாகும். எனவே அவை தவறுதலாக கூட புறக்கணிக்கப்படக்கூடாது. உடனடியாக இது தொடர்பாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகள்

* தோல் மஞ்சள்
* நாக்கில் சொறி
* நாக்கு சிவத்தல்
* வாயில் புண்கள்
* பலவீனமான பார்வை
* மனச்சோர்வு, பலவீனமான உணர்வு
* மூச்சு திணறல்
* தொடர்ந்து தலைவலி
* மீண்டும் மீண்டும் காது சத்தம்
* பசியிழப்பு

வைட்டமின் பி 12 உள்ள உணவுகள்

* சோயாபீன் வைட்டமின் பி 12 இன் உயர் மூலமாகவும் உள்ளது. குறைபாட்டைச் சமாளிக்க, நீங்கள் அதை கிராம் உடன் பயன்படுத்தலாம்.

* தயிரிலும் வைட்டமின் பி12 உள்ளது. தயிர் வைட்டமின் பி12 குறைபாட்டைப் போக்குவதுடன், உங்கள் சருமத்தையும் மேம்படுத்துகிறது.



Click here to join whatsapp group for daily health tip

நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

January 13, 2023 0

 

நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படாதா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?

பெரும்பாலான இந்திய மக்களுக்கு மாரடைப்பு பிரச்சனை இருந்து வருகிறது, 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  

இதற்கு காரணம் இந்திய  மக்களிடையே பெரும்பாலும் உடல் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே என்று கூறப்பட்டுள்ளது.  நடைப்பயிற்சி போன்ற எளிய உடல் செயல்பாடுகளின் மூலம் மக்கள் மாரடைப்பு போன்ற பல ஆபத்தான நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் வரையிலும் நடப்பதன் மூலம் இதய நோய் (CVD) பாதிப்பை கணிசமாகக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.  

அமெரிக்கா மற்றும் 42 நாடுகளில் உள்ள 20,000 பேரை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நாளைக்கு 2,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுடன் ஒப்பிடும்போது, ​​தினமும் 6,000 முதல் 9,000 ஸ்டெப்ஸ் நடப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்க்கான ஆபத்து 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.


வேலைக்கு நடந்து செல்வது, அங்கு பெரும்பாலும் நடையை பயன்படுத்துவது போன்றவை செல்வதற்கும் பணிபுரியும் இந்தியர்களின் முக்கியமான உடல் செயல்பாடாக இருந்து வருகிறது.  பணிபுரியும் நேரத்தில் மக்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் ஆனால் பணிக்கு அதாவது ஓய்வுகாலத்தில் அவர்களின் உடற்செயல்பாடு கணிசமாக குறைந்து விடுகிறது.  ஓய்வுக்கு பிறகு தனிமை, கவனமின்மை, உடல் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவை எப்படி குறைகிறதோ அதேபோல நமது உடற் செயல்பாடுகளும் குறைந்து பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.  பெண்களுக்கு உடற்செயல்பாடுகள் குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது.  

பலரும் பெண்கள் வீட்டு வேலைகளின் மூலமாக உடற்செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று தவறாக கருதுகின்றனர்.  இது ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும், முழுமையாக இது உடற்செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கருதிவிட முடியாது.

இந்தியாவில் கரோனரி ஆர்டரி நோய் (சிஏடி), சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் இதயம் தொடர்புடைய நோய்களால் அதிகளவிலான இறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.  வயதான காலத்தில் உடல்நல குறைவை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினசரி உடற்செயல்பாடுகளை மெதுவாக அதிகரிக்கலாம்.  

இளையவர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு தான் அதிகளவில் இதயம் தொடர்பான நோய்கள் வருகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  சிவிடி எனப்படும் இதய தொடர்புடைய நோயானது வயது முதிர்வில் ஏற்படுகிறது.  இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது.


January 12, 2023

AO Agronomy Study Material | TNPSC Agricultural Officer Extension Study Material | Topic Wise Study Material For Agronomy : UNIT II Fundamentals of Crop Production Study Materials

January 12, 2023 0

AO Agronomy Study Material | TNPSC Agricultural Officer Extension Study Material |Topic Wise Study Material For Agronomy 


விமான நிலையத்தில் பணிபுரிவது உங்கள் கனவா? தாட்கோ நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு இதோ

January 12, 2023 0

 தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை தாட்கோ (தமிழ்நாடு ஆதி திராவடர் விட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் )நிறுவனம் வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.சி ஏவிஷேசன் அகடாமி நிறுவனம் (PTC Aviation Academy) மூலமாக விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை (Customer Service Executive Support) மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது.

18 முதல் 25 வயது நிரம்பிய, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியன் பாஸ்போர்ட்-ஐ கட்டயாம்  வைத்திருக்க வேண்டும்.

இப்பயிற்சி மூன்று மாதம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000-த்தை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு AASSC (AEROSPACE SKILL SECTOR COUNCIL) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go First, Vistra, Air India போன்ற புகழ் வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு... 93 காலி பணியிடங்கள் அறிவிப்பு

January 12, 2023 0

 வேளாண்மை அலுவலர், வேளாண்மை திட்ட இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service commission) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:  

வேளாண்மை அலுவலர்: 33 + 4 முன்கொணர்வு பணியிடங்கள்;

வேளாண்மை உதவி இயக்குநர்: 8;

தோட்டக்கலை அலுவலர்: 41 + 7 முன்கொணர்வு பணியிடங்கள்.

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 12.01.2023

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 10.02.2023

தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:- 20.5. 2023 மற்றும் 21.05.2023 

வயது தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது. வேளாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு அல்லது முனைவோர் பட்டம் பெற்றவர்கள் 34 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது.

கல்வித்தகுதி: 

வேளாண்மை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வேளாண்மை துறையில் இளங்கலை பட்டம் (B.Sc., Agriculture) பெற்றிருக்க வேண்டும்.

வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வேளாண்மை விரிவாக்க படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (A degree of M.Sc., in Agricultural Extension or

Agricultural Economics)

தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தோட்டக்கலை துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 10.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். 

TNPSC AGRICULTURAL OFFICER (EXTENSION), ASSISTANT DIRECTOR OF AGRICULTURE (EXTENSION) & HORTICULTURAL OFFICER  


 Click here to join WhatsApp group for Daily employment news

ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 மதிப்பூதியம்; போட்டித் தேர்வுகளுக்கு பாடம் எடுக்க பயிற்றுநர்களுக்கு அழைப்பு

January 12, 2023 0

 

திருவள்ளூர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பயிற்றுநர்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ளார்.

தன்னார்வ பயிலும் வட்டங்களில் மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது.  இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியமாக ஒருமணி நேரத்துக்கு சூ.800 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் பிபீடி, மதிப்பிட்டு வினாக்கள், மாதிரி தேர்வு வினாக்கள் தயார் செய்து தரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதிப்பூதியத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளைக் கையாளும் வகையில், தரமான பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்,விருப்பமுள்ள பயிற்றுநர்கள்,  https://bit.ly/facultyregistrationform இல் உள்ள படிவத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டும்.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி முன் அனுபவம் பெற்றவர்கள் தமிழ்,ஆங்கில வழிகளில் வகுப்புகள் நடத்துவதற்கு தகுதி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக் குறிப்புகள், மாதிரி வினா, தொடர்புடைய பாடத்தின் பிபிடி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்புடைய  பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாதிரி வருப்புகள் நடத்தப்பட  வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட்அளவு புகைப்படம், தன்குறிப்பு (Bio-Data), அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகி பயன் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

 Click here to join WhatsApp group for Daily employment news

20,000 பணி வாய்ப்புகள்: அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

January 12, 2023 0

 அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கோடு தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற்று வழங்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது.



வேலைவாய்ப்பு நடைபெறும் இடம்: மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயன்கொண்டம்.

நாள்: 28.01.2023, சனிக்கிழமை

நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, செவிலியர், மருந்தாளுநர், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான 20,000க்கும் மேற்பட்ட  பணியாட்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேர்வு செய்தவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளுகக்கு ஏற்ற வேலைவாய்ப்பு ஏற்பாடுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைதேடுபவர்கள்  https://www.tnprivatejobs.tn.gov.in/Home/jobs என்ற இணையதளத்தில் தங்கள் கல்வி தகுதியினை பதிவு செய்து பணிவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள்  இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக 20.01.2023-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04329-228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here to join WhatsApp group for Daily employment news

குறட்டை பிரச்சினைக்கு தீர்வு தரும் சித்த மருத்துவம்

January 12, 2023 0

 தூங்கும் போது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு இயல்பாகவே குறுகி விடுகிறது. இதன் கூடவே தொண்டையில் வளரும் சதை வளர்ச்சி (டான்சில்), மூக்கில் வளரும் சதை வளர்ச்சி (பாலிப்), தொப்பை வயிறு, வயிற்றில் ஏற்படுகின்ற காற்றின் அழுத்தம் அதிகப்படுவது, இதய நோய்கள், தைராய்டு பிரச்சினை, மூக்கு இடைச்சுவர் வளைவு போன்ற காரணங்களினால் பொதுவாக குறட்டை (ஸ்னோரிங்) ஏற்படுகிறது. மேலும், குறட்டை விடும் பொழுது திடீரென சத்தம் நின்று போவது, மூச்சு விட திணறுவது போல் இருப்பது 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' என்றழைக்கப்படும்.

ஆகவே குறட்டை சத்தம் அதிகமாக விடுபவர்கள் இதய நோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் இருக்கிறதா என்பதை மருத்துவர் மூலம் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

 குறட்டை நீங்க பழக்க வழக்கங்கள் மற்றும் சித்த மருத்துவ தீர்வுகள்:

 1) உடல் பருமன், தொப்பையை குறைத்துக்கொள்ள சீரான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இன்றியமையாதது. 

2) மல்லாந்து படுப்பதைத் தவிர்த்து ஒரு பக்கமாக தூங்கினால் தொண்டை சதைகளின் தளர்ச்சி சற்று குறைந்து குறட்டை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

3) மூக்கடைப்பு, சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தால் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மஞ்சள் தூள் வைத்து ஆவி பிடிக்கலாம். 

4) சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் எடுத்து பொடித்து காலை, இரவு டீ போல போட்டு குடிக்கலாம். 

5) லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு சேர்த்து டீ போட்டு குடிக்கலாம், இது தொண்டை சதைகளுக்கு சிறந்தது. 

6) பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) தினமும் செய்ய வேண்டும். 

7) புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிர்க்க வேண்டும். 

சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)



Click here to join whatsapp group for daily health tip

பெருங்காயத்தில் நிறைந்துள்ள மருத்துவப்பயன்கள்

January 12, 2023 0

 பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சைல குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். 

தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும். வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.


நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். '
இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.
 பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும். 
கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும். 

பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும் படி செய்தால் நோய் நீங்கும்.

Click here to join whatsapp group for daily health tip

January 11, 2023

பயிற்சியை முடி! வேலையை புடி! ..... அரசின் சூப்பர் திட்டம் இதோ

January 11, 2023 0

 தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation)  கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த, நிறுவனம்  இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் புதியதாக வேலைத்தேடும் இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெறலாம். பயிற்சியை  முடித்த 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுகிய கால திறன் பயிற்சி (Short Term Skill Training Courses):  இந்தியத் தொழிலாளர்களில் 62% பேர் 19-24 வயதுக்குட்பட்வர்கள் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால்,  இதில் 5%க்கும் குறைவானோர் மட்டுமே முறையான செய்தொழிற் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இளைஞர்களுக்கு தொழிற்நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை அளிப்பதற்காக  குறுகிய கால திறன் பயிற்சி திட்டம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் , கட்டுமானம், தோல், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழிற் துறைகளின் கீழ் 150 முதல் 300 மணி நேரங்கள் (3 மாதம் முதல் 6 மாதங்க வரையிலாலான) கால அளவு கொண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  தமிழ்நாட்டில்  2021-22ம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் கீழ் 79,304 பேர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.   

புதிதாக வேலைதேடும் இளைஞர்கள் தங்கள் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப தொழிற்  துறைகளில் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த பயிற்சி முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.  மேலும், பயிற்சியில் 80%  வருகைப்பதிவு வைத்திருக்கும் மாணவர்களுக்கு பயணப்படி, போக்குவரத்து செலவுகள்  வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வருக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?  

திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முகப்பு பக்கத்தில், 'Click Here to Register'  என்பதை கிளிக் செய்யவும்

தொலைபேசி எண் ( முதன்மையானது மற்றும்  இரண்டாவது ), ஆதார் எண், நிரந்தர முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை முதன்மையானதாக  சமரிப்பியுங்கள். ஆதார் எண் சரிபார்க்கப்படும். ஒரு முறை கடவுச் சொல்லை  சமர்ப்பிக்க வேண்டும். 

 உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பயணப்படி, போக்குவரத்து செலவுகள் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்)

இறுதி கட்டமாக, உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பைத் தேர்வு செய்வது எப்படி? 

பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர் தனது Dashboard-ன் மூலம், மாவட்டத்தில் தற்போது  செயல்பட்டு வரும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், வரவிருக்கும் பயிற்சி வகுப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்கள் , தொழிற்நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விண்ணப்பதாரர், தனக்கு விருப்பமான துறையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம்  ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் பயிற்சியைத் தொடரலாம். சில பயிற்சி நிலையங்கள், தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருகிறது. நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதற்கான செலவை, அரசு ஏற்றுக் கொள்ளும்

பயிற்சிக்குப் பிறகு, Assessment Agency -மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில்,  தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here to join WhatsApp group for Daily employment news