Agri Info

Adding Green to your Life

January 15, 2023

முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்

January 15, 2023 0

காலப்போக்கில் ஏராளமான விஷயங்களை நாம் மறந்துவிட்டோம்.

வயது அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களின் பெயர்கள், நேற்று என்ன செய்தோம், எதற்காக சமையலறைக்கு வந்தோம் ஆகியவை நினைவில் இல்லாததை உணரத் தொடங்குகிறோம். மேலும், இது குறித்து கவலைப்படவும் செய்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் முன்பே நம் உணர்விற்கே எட்டாமல் உடல் தோரணை குறித்த நினைவுகளை நாம் இழந்து விட்டோம்.

குழந்தைகளை நீங்கள் கவனித்தால், அவர்களின் முதுகில் அழகான 'S' வளைவு இருப்பதையும், அவர்களின் அசைவுகள் எளிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.

மோசமான தோரணையால் ஏற்படும் சிக்கல்கள் பல உள்ளன. அவை வலி மிகுந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அவற்றை மேம்படுத்தலாம்.

பிரிட்டிஷ் ஹெல்த் சர்வீஸ் இணையதளத்தில் நம்மிடம் பரவலாக உள்ள சில தவறான தோரணைகள் குறித்து பிசியோதெரபிஸ்ட் நிக் சின்ஃபீல்ட் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றைப் பார்ப்போம்.

தலையையும் தோள்களையும் தொய்வாக வைத்திருத்தல்

தலையைதொய்வாக வைத்திருத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில் அமர்வது பெரும்பாலும் பலருக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் காலப்போக்கில் இந்த நிலை, தசைகள் மீது அழுத்தம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

எனவே சரியாக அமரும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

முதலில், உங்கள் தசைகளால் உங்களை நீண்ட நேரம் சரியான நிலையில் வைத்திருக்க முடியாது என்பதால் நீங்கள் அசௌகரியமாக உணரலாம். ஆனால் விரைவில் அதற்குப் பழக்கப்படுவீர்கள்.

தோள்பட்டைகளை வளைக்காதீர்கள்

தோள்பட்டைகளை வளைக்காதீர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேசையில் அமர்ந்து கணினியில் வேலை செய்யும் போது, உங்கள் தலை முன்னோக்கி சாய்வது கைபோசிஸ் எனும் முதுகெலும்பு கோளாறுக்கு வழிவகுக்கும்.

மேலும், உங்கள் கைபேசியைப் பயன்படுத்தும் போதும் கழுத்து வலி, விறைப்பு, முதுகு வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உங்கள் தோரணையை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுடன், மேல் முதுகு, கழுத்து, தோள்களின் பின்புறம், மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

நாடியை வெளியே கொண்டு வராதீர்கள்

நீங்கள் வேலை செய்ய அமரும்போது உங்கள் தலை முன்னோக்கி சாய்வது போல, உங்கள் கழுத்து எதிர் திசையில் வளையலாம்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

உங்கள் நாடியை உள்ளிழுக்கும் போது உங்கள் கழுத்தை மெதுவாக உயர்த்தவும்.

தோள்பட்டைகளை கீழே மற்றும் முதுகெலும்பை நோக்கி இழுக்கவும்.

கீழ் முதுகில் உள்ள இயற்கையான வளைவை பராமரிக்க அடிவயிற்றின் தசைகளை சுருக்கவும்.

உங்கள் நாற்காலியின் உயரம் குறைவாக இல்லை என்பதையும் உங்கள் கணிணி திரையின் உயரம் அதிகமாக இல்லை என்பதையும் உறுதிசெய்யவும்

ஒரு காலில் சாய்ந்து நிற்பதை தவிர்க்கவும்

ஒரு காலில் சாய்ந்து நிற்பதை தவிர்க்கவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீண்ட நேரம் அசையாமல் நிற்கும் போது சற்று ஓய்வெடுப்பதற்காக நாம் இவ்வாறு செய்வதுண்டு.

ஆனால், இவ்வாறு செய்யும் போது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்பின் ஒரு பக்கத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

அது காலப்போக்கில் உங்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றி தசை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாம்.

எப்போதும் உங்கள் எடையை இரு கால்களிலும் சமமாகப் பரப்பி நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பிட்டத்தை வெளியே கொண்டுவராதீர்கள்


பிட்டத்தை வெளியே கொண்டுவராதீர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கீல்ஸ் எனப்படும் குதிகால் காலணி அணிவது மற்றும் வயிற்றில் அதிக எடையை சுமப்பது ‘டொனால்ட் டக்’ எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் தோரணையை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதை சரிசெய்ய, உங்கள் தலையில் ஒரு கயிறு கட்டி, அதை மேலே இழுப்பது போல என்று கற்பனை செய்து பாருங்கள்.

இது, முதுகெலும்பின் இயற்கையான வளைவு, நேரான கழுத்து மற்றும் இடுப்புக்கு இணையாக தோள்பட்டையுடன் உங்கள் உடலை சரியான அமைப்பில் வைத்திருக்க உதவும்.

எளிய பயிற்சிகள் கைகொடுக்கும்

உங்கள் இடுப்பு முன்னோக்கி இழுக்கப்படும் போதும், உங்கள் முதுகு தட்டையாக இருக்கும் போதும் உங்கள் உடல் முன்னோக்கி சாய்கிறது.

இந்த தோரணை பெரும்பாலும் தசை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தட்டையான முதுகு ஏற்பட காரணமாகும்.

இதை மேம்படுத்த, முதுகெலும்பு அல்லது இடுப்புடன் இணைக்கப்பட்டுள்ள அடிவயிற்று மற்றும் பின்புறத்தில் உள்ள தசைகள், கழுத்து மற்றும் தோள்களின் பின்புறம் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை சின்ஃபீல்ட் பரிந்துரைக்கிறார்.

நேராக நிற்பதற்கான வழிகள்

உங்கள் தோள்களை பின்னோக்கி தளர்வாக வைத்திருங்கள் உங்கள் வயிறு வெளியே தள்ளாமல் இருக்க வேண்டும் உங்கள் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்திருங்கள் உங்கள் எடையை இரு கால்களிலும் சமநிலைப்படுத்துங்கள் உங்கள் தலையை முன்னோக்கி, பின்னோக்கி அல்லது பக்கவாட்டில் சாய்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள உங்கள் கால்களை நேராக வைத்திருங்கள். ஆனால் உங்கள் முழங்கால்கள் தளர்வாக இருக்க வேண்டும்.

திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 126 செவிலியர் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்!

January 15, 2023 0

திருப்பூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 126 செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
செவிலியர்கள்12650 வயது வரை

கல்வித்தகுதி:

இப்பணிக்கு இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்ற மாவட்ட இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர்

சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்,

147 - பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,

திருப்பூர் - 641 602.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.


ரூ.60,000 வரை சம்பளம்... பொது சுகாதார துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள்!

January 15, 2023 0


செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் உள்ள பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர், இடைநிலை சுகாதார பணியாளர், மருந்தாளுநர், தரவு உள்ளிட்டாளர், நகர்ப்புற சுகாதார செவிலியர் என்று மொத்தம் 55 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்குச் சம்பளம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் வரை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:


பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Medical Officer10ரூ.60,000
Staff Nurse10ரூ.18,000
MPHW (HI GrII)10ரூ.14,000
Support Staff10ரூ.8,500
RBSK Pharmacist1ரூ.15,000
Data Entry Operator1ரூ.13,500
Data Entry Operator (National programme for Blindness control)1ரூ.13,500
MLHP4ரூ.18,000
Urban Health Nurse/ANM8ரூ.14,000


கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Medical OfficerMBBS.,
Staff NurseGNM / B.Sc (Nursing)
MPHW (HI GrII)அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் கண்டிப்பாகத் தமிழ் மொழி தேர்ச்சி, Multipurpose Health Worker (Male) / HealthInspector / Sanitary Inspector Course ஆகிய பாடங்களில் 2 வருட சான்றிதழ்
Support Staffஎழுதப் படிக்கத் தெரிய வேண்டும்
RBSK PharmacistPharmacy பாடத்தில் டிகிரி/டிப்ளமோ/ Pharm. D
Data Entry Operatorகணிதத்தில் டிகிரி மற்றும் Computer applications பாடத்தில் 1 வருட முதுகலை டிப்ளமோ. தட்டச்சு
Data Entry Operator (National programme for Blindness control)கணினி பாடத்தில் டிகிரி அல்லது ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் Computer applications டிப்ளமோ
MLHPDGNM / B.Sc Nursing / B.Sc Nursing
Urban Health Nurse/ANMANM சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://chengalpattu.nic.in/notice

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நல வாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

செங்கல்பட்டு மாவட்டம் - 603 001.

தொலைப்பேசி எண் : 044-29540261.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 Click here to join WhatsApp group for Daily employment news

நேர்காணல் மூலம் தேர்வு : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி திட்டத்தில் சேர அரிய வாய்ப்பு!

January 15, 2023 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சி திட்டத்தில் AI Trainer & Project Fellow இடங்களில் தற்காலிகமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இவ்விடங்களுக்கு ரூ.16,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். நேரடி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்கல்விபணியிடம்
Project FellowComputerScience/Computer Application/ComputerScience and Engineering பாடங்களில் முதுகலைப் பட்டம்4
Project FellowLinguistics பாடத்தில் முதுகலைப் பட்டம்1
Project FellowM.Sc.,/M.C.A/M.Tech1
AI TrainerComputer Science/ComputerApplication/Computer Science andEngineering பாடங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம்1

நேர்காணல் விவரங்கள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கல்வி மற்றும் இதர அசல் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம் & நாள்:

RUSA-MKU OFFICE, MADURAI KAMARAJ UNIVERSITY. PALKALAI NAGAR,

MADURAI-625021. 19.01.2023 காலை 9.30 மணி.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

DRDO JRF வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!

January 15, 2023 0

 

DRDO JRF வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67000/- || தேர்வு கிடையாது!

DRDO நிறுவனத்தில் இருந்து Fellowships (JRF) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO காலிப்பணியிடங்கள்:

Fellowships (JRF) பதவிக்கு என 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DRDO வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டிக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஓபிசி வேட்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate degree in a professional course (BE/ B. Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

JRF – ரூ.31,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 06.02.2023, 08.02.2023 மற்றும் 10.02.2023 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf



Click here to join WhatsApp group for Daily employment news

FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – டிகிரி படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

January 15, 2023 0

 

FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – டிகிரி படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Grade III (General) பணியிடங்களை நிரப்ப டிகிரி படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 07.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FCI காலிப்பணியிடங்கள்:

Assistant Grade III (General) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Grade III (General) வயது வரம்பு:

01.08.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், ஓய்வூதிய ஆணைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் போன்றவற்றுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 07.02.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here to join WhatsApp group for Daily employment news

NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.39100/-

January 15, 2023 0

 

NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.39100/-

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) General Manager (Legal) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15/01/2023 முதல் 15/02/2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NHAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் General Manager (Legal) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

GM கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சட்டத்தில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

NHAI சம்பளம் விவரம்:

General Manager (Legal) – ரூ.15600-39100/-

Manager (Legal) தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 15/02/2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


Click here to join WhatsApp group for Daily employment news

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு – மத்திய அரசின் அறிவிப்பு!

January 15, 2023 0

 

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு – மத்திய அரசின் அறிவிப்பு!

ஜனவரி 23ஆம் தேதி அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி மத்திய அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை அறிவித்துள்ளது. இதற்கான பரிசுகள் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது.

கலை இலக்கிய போட்டிகள்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் முக்கிய தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினங்களை சிறப்பிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பலவகையான போட்டிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜனவரி 23ஆம் தேதி அன்று வரவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்க ‘பராக்கிரம் திவாஸ்’ என்ற கலை இலக்கிய போட்டிகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.

அதன்படி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை மற்றும் செல்பி போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மை கவர்மெண்ட் இணையதளம் மூலமாக நடைபெற இருக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் 25 மாணவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 5000 பரிசுத் தொகையை அளிக்க உள்ளதோடு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.

மேலும் மாணவர்கள் தங்கள் ஊரிலிருந்து டெல்லிக்கு வந்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் அனைவரும் தங்களின் கவிதை, கட்டுரை மற்றும் செல்பி புகைப்படங்களை ஜனவரி 20ஆம் தேதிக்குள் அரசு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இணையதளங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சுவரொட்டி வடிவமைப்பு போட்டி:
https://www.mygov.in/task/draw-portrait-netaji-subhas-chandra-bose/

கவிதை போட்டி:
https://www.mygov.in/task/compose-poem-netaji-subhas-chandra-bose/



உங்கள் ஏரியாவில் கடும் குளிரா.! அவஸ்தையை சமாளிக்க நிபுணர் கூறும் டிப்ஸ்கள் இதோ.!

January 15, 2023 0

 

குளிர்காலம் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே என்றாலும் புதுடெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள் உட்பட இன்னும் பல பகுதிகளில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மக்களை குளிர் வாட்டி வதைக்கும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே போல இந்த மாநிலங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க பல நிறுவனங்கள் அனுமதித்துள்ளன. அண்டை மாநிலமான பெங்களூருவில் கூட சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்திலும் கூட பல பகுதிகளில் அவ்வப்போது குளிர் அதிகரித்து காணப்படுகிறது. எனவே நீங்கள் எங்கு வசித்தாலும் கடும் குளிர் அலையை எதிர்த்து போராடுவதற்கான டிப்ஸ்களை தெரிந்து கொள்வது அவசியம்.


டெல்லி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சீனியர் கன்சல்ட்டன்டாக இருக்கும் டாக்டர் முக்தா தப்டியா இதுபற்றி பேசுகையில், பெரும்பாலான நேரங்களில் சரியான உடல் வெப்பநிலையை பராமரிக்க முக்கிய உறுப்புகளுக்கு ரத்த விநியோகம் உடலில் செல்கிறது. ஆனால் உடலின் முக்கிய உறுப்புகள் சோர்வடைந்து, வெப்பநிலை குறைவாக இருக்கும் போது சில நேரங்களில் மூளைக்கு கூட போதுமான ரத்தம் கிடைக்காது. இதனால் ஹைபோக்ஸியா, ஆக்ஸிஜன் குறைவு, தலைசுற்றல், பேச்சில் தெளிவின்மை, ஹைப்போதெர்மியா, ரத்த நாளங்கள் சுருங்குவது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

குளிர் அதிகமாக இருக்கும் காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது உடல் குறிப்பாக காது பகுதி நன்றாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பல லேயர் ஆடைகள், கிளவுஸ், ஹேட் அல்லது வார்ம் கேப் மற்றும் ஷூக்களை அணிந்து கொள்வது குளிரிலிருந்து பாதுகாக்கும். குளிர்காலத்தில் மற்றும் குறிப்பாக குளிர் அலைகள் அதிகம் இருக்கும் போது சருமத்தை கூடுதலாக கவனித்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே உடலை ஹைட்ரேட்டாக மற்றும் எப்போதும் மாய்ஸ்ரைசிங்காக வைத்திருப்பது குளிர்காலத்தில் நல்ல சருமத்தை பெற முக்கியம். டாக்டர் முக்தா தப்டியா பேசுகையில் குளிர்காலத்தில் ஹை-புரோட்டின் டயட்டை பராமரிக்க வேண்டும்.

மேலும் குளிர்காலத்தில் வெயிலில் அதிகம் இருக்காது வைட்டமின் டி குறைபாட்டிலிருந்து தப்பிக்க வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த ஃபிரெஷ்ஷான பழங்கள் மற்றும் சத்தான காய்கறிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வழக்கம் போல தினமும் தவறாமல் ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட வலியுறுத்துகிறார் தப்டியா. கடும் குளிரில் எப்படி ஒர்கவுட்ஸ் செய்வது என்று யோசிக்காதீர்கள்.! குளிரில் விறைத்து கிடைக்கும் உடலை இயல்பாக்க மற்றும் வெப்பமாக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 30-45 நிமிடங்களாவது வழக்கம் போல ஒர்கவுட்ஸில் ஈடுபட வேண்டும். ஜிம் அல்லது அவுட் டோர் ரன்னிங் போக முடியவில்லை என்றால் தாக்கத்தை ஏற்படுத்தும் வீட்டிலிருந்தே செய்ய கூடிய உடற்பயிற்சிகளை முயற்சிக்க வேண்டும்.

நாட்டில் குளிர் அலை அதிகரித்து காணப்படுவதற்கு மத்தியில் ஒருவர் செய்ய கூடாத ஒன்று, சிங்கிள் லேயர் ஆடைகளை அணிந்து செல்வது. நாம் மல்டிபிள் லேயர்களை அணியும் போது காற்று வெளியே பயணிக்க முயற்சிக்கிறது. ஆனால் காற்று வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி கொள்கிறது. இதனால் பல ஏர் பாக்கெட்ஸ் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்று ஒரு மோசமான கடத்தி என்பதால் வெளிப்புறக் குளிரால் பாதிக்கப்படாது. எனவே நீங்கள் மல்டிபிள் லேயர்களை அணிந்திருக்கும் போது உற்பத்தியாகி இருக்கும் பல ஏர் பாக்கெட்ஸ் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. குளிருக்கு இதமாக ஒரு தடிமனான ஜாக்கெட்டை அணிவதை விட, மல்டிபிள் லேயர் அணிவது ஏர் ட்ராப்பிங் காரணமாக உடலை சூடாக வைத்திருக்க உதவும் என்கிறார் டாக்டர் முக்தா தப்டியா.


 Click here to join whatsapp group for daily health tip