Agri Info

Adding Green to your Life

January 16, 2023

UPSC வேலைவாய்ப்பு : பல்வேறு துறைகளில் தகுதிக்கேற்ற வேலை... உடனே விண்ணப்பியுங்கள்

January 16, 2023 0

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் தகுந்த கல்வித் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்துறைபணியிடம்வயது
Deputy Commissioner(Horticulture)விவசாயம் மற்றும் விவசாயி மேம்பாட்டுத் துறை150
Assistant Director (Toxicology)விவசாயம் மற்றும் விவசாயி மேம்பாட்டுத் துறை135
Rubber Production Commissionerவணிகத் துறை150
Scientist ‘B’ (NonDestructive)நுகர்வோர் பாதுகாப்புத்துறை135
Scientific Officer (Electrical)நுகர்வோர் பாதுகாப்புத்துறை1 33
Fisheries Research Investigation Officerமீன்வளத்துறை140
Assistant Director of Census Operations (Technical)உள்துறை635
Assistant Director (IT)உள்துறை435
Scientist ‘B’ (Toxicology)உள்துறை135
Scientist ‘B’ (Civil Engineering)ஜல் சக்தி அமைச்சகம்935
Junior Translation Officerவேலைவாய்ப்பு துறை7630
Deputy Legislative Counselசட்டத்துறை350
Assistant Engineer Grade-Iசுங்கத்துறை430
Senior Scientific Officerசுற்றுச்சூழல் துறை240


கல்வித்தகுதி & சம்பளம்

பதவியின் பெயர்கல்விசம்பளம்
Deputy Commissioner(Horticulture)Horticulture/Agriculture/Botany முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான பட்டம் மற்றும் 10 வருட அனுபவம்ரூ.78,800 - 2,09,200
Assistant Director (Toxicology)Veterinary Science பட்டப்படிப்பு/Pharmacology/Toxicology முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Rubber Production CommissionerBotany/Agriculture முதுகலைப் பட்டம் மற்றும் 12 வருட அனுபவம்ரூ.1,23,100 - 2,15,900
Scientist ‘B’ (NonDestructive)இயற்பியலில் முதுகலைப் பட்டம்/ Engineering/Technology in Electrical Engineering / Mechanical Engineering / Metallurgy இளங்கலைப் பட்டம் மற்றும் தேவையான அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Scientific Officer (Electrical)இயற்பியலில் முதுகலைப் பட்டம்/Electrical Engineering/Electrical and ElectronicsEngineering/Electronics and Telecommunication Engineering டிகிரிரூ.47,600 - 1,51,100
Fisheries Research Investigation Officer Zoology/M.F.Sc/Marine Biology/ Industrial Fisheries/Aquaculture/Fisheries Science முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Assistant Director of Census Operations (Technical)Statistics/Operational Research/PopulationSciences/Demography/Mathematical Statistics/Applied Statistics முதுகலைப் பட்டம்ரூ.56,100 - 1,77,500
Assistant Director (IT)Computer Applications/Information Technology/Computer Science or Software Engineering முதுகலை, Engineering/Technology in Computer Engineering/ComputerScience/Computer Technology/Computer Science and Engineering/Software Engineering/Information Technology/Electronics Engineering/Electronics andCommunication Engineering இளங்கலை பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Scientist ‘B’ (Toxicology)Chemistry/Biochemistry/Pharmacology/ Pharmacy/Forensic Science முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Scientist ‘B’ (Civil Engineering)Civil Engineering இளங்கலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம்ரூ.56,100 - 1,77,500
Junior Translation Officerஹிந்தி மற்றும் ஆங்கிலம் பிரிவில் முதுகலைப் பட்டம்ரூ.35,400 - 1,12,400
Deputy Legislative Counselசட்டத்தில் முதுகலைப் பட்டம்/LLBரூ.78,800 - 2,09,200
Assistant Engineer Grade-Iமைனிங் பிரிவு சார்ந்த பட்டப்படிப்புரூ.47,600 - 1,51,100
Senior Scientific OfficerEnvironmental Engineering முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம்ரூ.67,700 - 2,08,700

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள்https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் நேரடியான ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.02.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NCS பள்ளியில் ஆசிரியர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இதோ

January 16, 2023 0

 அரக்கோணத்தில் உள்ள NCS (Navy Children School) பள்ளியில் முதுகலைப் பட்டதாரி,தொடக்கக்கல்வி ஆசிரியர், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆய்வுக்கூட நிபுணர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், அறிவியல் ,ஹிந்தி போன்ற பாடங்களுக்குத் தொடக்கக்கல்வி பாடங்களுக்கு ஆசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் ஆசிரியர் பணி தவிர, ஆய்வுக்கூட நிபுணர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

ஆசிரியர் பணி:

பதவியின் பெயர்பாடங்கள்வயது
Post Graduate Teacherஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல்23-40
Trained Graduate Teacherசமூக அறிவியல்.அறிவியல் மற்றும் ஹிந்தி23-40
Primary teacherதொடக்கக்கல்வி23-40

கல்வித்தகுதி:

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட பாடங்களில் B.A / B.Sc மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி ஆசிரியர் பணிக்கு BA / B.Sc. / B.Com / B.Tech / B.B.A பட்டம் மற்றும் B.Ed பெற்றிருக்க வேண்டும்.

இதர பணிகள்:

பதவியின் பெயர்வயதுகல்வி
Lab Assistant21-40அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு
Office Assistant21-40ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 5 வருட அனுபவம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.ncsarakkonam.edu.in/ என்ற பள்ளியின் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Headmistress

Navy Children School

INS Rajali, Arakkonam - 631 006

தொலைப்பேசி எண் : 9061752717 / 9488758004

மின்னஞ்சல் முகவரி: ncsarakkonam@yahoo.co.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.01.2023. எழுத்துத் தேர்வு 28.01.2023 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன்... நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவது எப்படி?

January 16, 2023 0

 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 50% பேர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம், ஒட்டு மொத்த நகர மக்கள் தொகையில் (3.5 கோடி), கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் நகரத்தின் குடிசைப் பகுதிகளில் (Slum Dwellers) வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நகர்ப்புற வாசிகளில், பெரும்பாலானவர்கள், தரமில்லாத உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு இல்லாத வேளைகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், கட்டுமானம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலத்த  அடியைச் சந்தித்தன. இந்த துறைகள் தான் நகர்ப்புறங்களில் வாழும் அடிதட்டு மக்களுக்கு வருவாய் தரும் துறைகளாகவும், அதிகம் வேலைவாய்ப்பும் உருவாக்கும் துறைகளாகவும் இருந்து வந்தன. எனவே, தற்போது நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக,  வேலைவாய்ப்பு  குறைந்து மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியளவில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு ஊதியம் வழங்கும் திட்டம் இதுநாள் வரை கொண்டு வரப்பட வில்லை. தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்  தற்போது இத்திட்டங்களை சோதனை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நகர்ப்புற வேலைவாய்ப்பு: 

100 நாள் வேலைவாய்ப்பு போன்ற திட்டத்தை நகர்புறங்களிலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் ஏற்கனவே நகர்ப்புற ஏழைகளுக்கு சில வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும்,  இத்தகைய திட்டங்கள், 100 நாள் வேலைத் திட்டத்தைப் போன்று , ஏழைகளின் உழைப்பு ஊதியத்தை  சட்டப்பூர்வ  தேவையாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, சில குறிப்பிட்ட பயனாளர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் /மகளிர் திட்டம்: 

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக 1997 ஆம் ஆண்டு Swarna Jayanti Shahari Rozgar Yojan என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் கடந்த 2013ம் ஆண்டு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் (National Urban Livelihood Mission) கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த புதுப்பிக்கபட்ட திட்டம், தனிமனித ஊதிய வேலைவாய்ப்புக்குப் பதிலாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு ரூ.10,000/- வீதம் மானிய நிதி வழங்கப்படுகிறது. அதேபோன்று, சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் (Self Employment Program Individual (SEP I) ) கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேறிய நபர் ஒருவருக்கு  அதிகபட்சமாக  ரூ.50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிக் கடனுக்கு எந்தவித அடமானங்களும் தேவையில்லை.

அதேபோன்று,  சுய  வேலைவாய்ப்பு சுய உதவிக் குழு திட்டத்தின் கீழ் (சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் கீழ்  (Self Employment Program Self Help Group (SEP - SHG)) குறைந்தது 5 நபர்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக  ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி மூலம், வருவாய் தரும் திட்டங்களில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடலாம்.

மேலும், நகரப்புற சுய உதவிக்குழுக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ள விதமாக ,  நிதி   நேரடி வங்கி கடன் இணைப்பு   திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் கீழ், சுய உதவிக்குழுக்களுக்கு பிணையம் இல்லா அதிகபட்ச கடன் தொகை ரூ.20 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நகர்ப்புறப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்கள் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக விண்ணப்பித்து பயனடையலாம். அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20  உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயன்பெற தொடங்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை, மாவட்ட நகர்ப்புற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்த இயக்கத்தை  செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தையும் அணுகலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC புதிய வேலைவாய்ப்பு : ரூ.71,000 வரை சம்பளம்... 761 காலிப்பணியிடங்கள்

January 16, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கீழ் சாலை ஆய்வாளர் பணி இடம்பெறுகிறது. இப்பணிக்கான அரசாங்க குறியீடு எண் 3245. இப்பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
சாலை ஆய்வாளர்761ரூ.19,500-71,900/-

வயது வரம்பு:

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

Civil Draughtsmenship பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். Civil Engineering பிரிவில் டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apply.tnpscexams.in/

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்நாட்கள்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்11.02.2023
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்ய16.02.2023-18.02.2023
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்07.05.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னையில் ஆசிரியர் வேலை - இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை..!

January 16, 2023 0

 சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள இடைநிலை/ பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாணமைக்குழுவின் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

பதவிபள்ளிபணியிடம்
இடைநிலை ஆசிரியர்அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி,வெங்கடேசபுரம்.2
பட்டதாரி ஆசிரியர்அரசு ஆதிதிராவிடர் நல   உயர்நிலைப்பள்ளி,திருமங்கலம்(அறிவியல்),மதுரவாயல்(ஆங்கிலம்) மற்றும் சென்னை(அறிவியல்)3
முதுகலைப்பட்டதாரிஅரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கன்னிகாபுரம்(இயற்பியல்),(வரலாறு)7

சம்பளம்:

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.10,000 மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.12,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருவபர்கள் அல்லது டெட் தகுதித் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் . பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது பள்ளி அமைந்துள்ள ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆசிரியர் பணிக்குத் தகுதியும் ஆர்வமுள்ள உள்ளவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2 ஆம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ 18.01.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

January 15, 2023

முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்

January 15, 2023 0

காலப்போக்கில் ஏராளமான விஷயங்களை நாம் மறந்துவிட்டோம்.

வயது அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்களின் பெயர்கள், நேற்று என்ன செய்தோம், எதற்காக சமையலறைக்கு வந்தோம் ஆகியவை நினைவில் இல்லாததை உணரத் தொடங்குகிறோம். மேலும், இது குறித்து கவலைப்படவும் செய்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் முன்பே நம் உணர்விற்கே எட்டாமல் உடல் தோரணை குறித்த நினைவுகளை நாம் இழந்து விட்டோம்.

குழந்தைகளை நீங்கள் கவனித்தால், அவர்களின் முதுகில் அழகான 'S' வளைவு இருப்பதையும், அவர்களின் அசைவுகள் எளிமையாக இருப்பதையும் பார்க்கலாம்.

மோசமான தோரணையால் ஏற்படும் சிக்கல்கள் பல உள்ளன. அவை வலி மிகுந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அவற்றை மேம்படுத்தலாம்.

பிரிட்டிஷ் ஹெல்த் சர்வீஸ் இணையதளத்தில் நம்மிடம் பரவலாக உள்ள சில தவறான தோரணைகள் குறித்து பிசியோதெரபிஸ்ட் நிக் சின்ஃபீல்ட் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றைப் பார்ப்போம்.

தலையையும் தோள்களையும் தொய்வாக வைத்திருத்தல்

தலையைதொய்வாக வைத்திருத்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில் அமர்வது பெரும்பாலும் பலருக்கு வசதியாக இருக்கும்.

ஆனால் காலப்போக்கில் இந்த நிலை, தசைகள் மீது அழுத்தம் மற்றும் வலியை ஏற்படுத்தும்.

எனவே சரியாக அமரும் பழக்கத்தை உருவாக்குங்கள்.

முதலில், உங்கள் தசைகளால் உங்களை நீண்ட நேரம் சரியான நிலையில் வைத்திருக்க முடியாது என்பதால் நீங்கள் அசௌகரியமாக உணரலாம். ஆனால் விரைவில் அதற்குப் பழக்கப்படுவீர்கள்.

தோள்பட்டைகளை வளைக்காதீர்கள்

தோள்பட்டைகளை வளைக்காதீர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேசையில் அமர்ந்து கணினியில் வேலை செய்யும் போது, உங்கள் தலை முன்னோக்கி சாய்வது கைபோசிஸ் எனும் முதுகெலும்பு கோளாறுக்கு வழிவகுக்கும்.

மேலும், உங்கள் கைபேசியைப் பயன்படுத்தும் போதும் கழுத்து வலி, விறைப்பு, முதுகு வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

உங்கள் தோரணையை சரிசெய்வதில் கவனம் செலுத்துவதுடன், மேல் முதுகு, கழுத்து, தோள்களின் பின்புறம், மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் செய்யலாம்.

நாடியை வெளியே கொண்டு வராதீர்கள்

நீங்கள் வேலை செய்ய அமரும்போது உங்கள் தலை முன்னோக்கி சாய்வது போல, உங்கள் கழுத்து எதிர் திசையில் வளையலாம்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

உங்கள் நாடியை உள்ளிழுக்கும் போது உங்கள் கழுத்தை மெதுவாக உயர்த்தவும்.

தோள்பட்டைகளை கீழே மற்றும் முதுகெலும்பை நோக்கி இழுக்கவும்.

கீழ் முதுகில் உள்ள இயற்கையான வளைவை பராமரிக்க அடிவயிற்றின் தசைகளை சுருக்கவும்.

உங்கள் நாற்காலியின் உயரம் குறைவாக இல்லை என்பதையும் உங்கள் கணிணி திரையின் உயரம் அதிகமாக இல்லை என்பதையும் உறுதிசெய்யவும்

ஒரு காலில் சாய்ந்து நிற்பதை தவிர்க்கவும்

ஒரு காலில் சாய்ந்து நிற்பதை தவிர்க்கவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீண்ட நேரம் அசையாமல் நிற்கும் போது சற்று ஓய்வெடுப்பதற்காக நாம் இவ்வாறு செய்வதுண்டு.

ஆனால், இவ்வாறு செய்யும் போது உங்கள் கீழ் முதுகு மற்றும் இடுப்பின் ஒரு பக்கத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

அது காலப்போக்கில் உங்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றி தசை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாம்.

எப்போதும் உங்கள் எடையை இரு கால்களிலும் சமமாகப் பரப்பி நிற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பிட்டத்தை வெளியே கொண்டுவராதீர்கள்


பிட்டத்தை வெளியே கொண்டுவராதீர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கீல்ஸ் எனப்படும் குதிகால் காலணி அணிவது மற்றும் வயிற்றில் அதிக எடையை சுமப்பது ‘டொனால்ட் டக்’ எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் தோரணையை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதை சரிசெய்ய, உங்கள் தலையில் ஒரு கயிறு கட்டி, அதை மேலே இழுப்பது போல என்று கற்பனை செய்து பாருங்கள்.

இது, முதுகெலும்பின் இயற்கையான வளைவு, நேரான கழுத்து மற்றும் இடுப்புக்கு இணையாக தோள்பட்டையுடன் உங்கள் உடலை சரியான அமைப்பில் வைத்திருக்க உதவும்.

எளிய பயிற்சிகள் கைகொடுக்கும்

உங்கள் இடுப்பு முன்னோக்கி இழுக்கப்படும் போதும், உங்கள் முதுகு தட்டையாக இருக்கும் போதும் உங்கள் உடல் முன்னோக்கி சாய்கிறது.

இந்த தோரணை பெரும்பாலும் தசை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தட்டையான முதுகு ஏற்பட காரணமாகும்.

இதை மேம்படுத்த, முதுகெலும்பு அல்லது இடுப்புடன் இணைக்கப்பட்டுள்ள அடிவயிற்று மற்றும் பின்புறத்தில் உள்ள தசைகள், கழுத்து மற்றும் தோள்களின் பின்புறம் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை சின்ஃபீல்ட் பரிந்துரைக்கிறார்.

நேராக நிற்பதற்கான வழிகள்

உங்கள் தோள்களை பின்னோக்கி தளர்வாக வைத்திருங்கள் உங்கள் வயிறு வெளியே தள்ளாமல் இருக்க வேண்டும் உங்கள் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்திருங்கள் உங்கள் எடையை இரு கால்களிலும் சமநிலைப்படுத்துங்கள் உங்கள் தலையை முன்னோக்கி, பின்னோக்கி அல்லது பக்கவாட்டில் சாய்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள உங்கள் கால்களை நேராக வைத்திருங்கள். ஆனால் உங்கள் முழங்கால்கள் தளர்வாக இருக்க வேண்டும்.

திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 126 செவிலியர் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க 30-ம் தேதி கடைசி நாள்!

January 15, 2023 0

திருப்பூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 126 செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
செவிலியர்கள்12650 வயது வரை

கல்வித்தகுதி:

இப்பணிக்கு இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் https://tiruppur.nic.in/ என்ற மாவட்ட இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர்

சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்,

147 - பூலுவபட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை,

திருப்பூர் - 641 602.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023 மாலை 5 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.