Agri Info

Adding Green to your Life

January 18, 2023

21 மாவட்டங்களில் 1720 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

January 18, 2023 0

 


தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1720 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணியின் விவரங்கள்:

மாவட்டத்தின் பெயர்பணியிடம்கடைசி நாள்
தென்காசி1027.01.2023
இராமநாதபுரம்5728.01.2023
சிவகங்கை4127.01.2023
தூத்துக்குடி4231.01.2023
விருதுநகர்1325.01.2023
நாமக்கல்21025.01.2023
மதுரை8827.01.2023
கிருஷ்ணகிரி17231.01.2023
திருப்பூர்12630.01.2023
கன்னியாகுமரி4027.01.2023
புதுக்கோட்டை11427.01.2023
தஞ்சாவூர்14030.01.2023
திருச்சி11931.01.2023
கோயம்புத்தூர்11930.01.2023
பெரம்பலூர்6127.01.2023
செங்கல்பட்டு3527.01.2023
திருப்பத்தூர்3125.01.2023
மாயிலாடுதுறை10127.01.2023
திருவள்ளுர்7831.01.2023
கள்ளக்குறிச்சி5425.01.2023
நாகப்பட்டினம்6928.01.2023
மொத்தம்1720

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்குச் செவிலியர்கள் அந்தந்த மாவட்டங்களின் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

January 17, 2023

குளிர்காலத்தில் அதிகமாக டீ, காஃபி குடிக்கக் கூடாது : மீறினால் இந்த குறைபாடு ஏற்படலாம்..!

January 17, 2023 0

 


இயல்பை காட்டிலும் பனி அதிகமாகவே நிலவுகிறது. தாங்க முடியாத குளிரால் பலரும் படுக்கையை விட்டு எழுவதற்கு கூட சோம்பேறித்தனமாக உணரலாம். உளவியல் காரணமாக குளிர்காலத்தில் நல்ல சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்குமாம். அந்த பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவது டீ மற்றும் காபிதான். அதேசமயம் குளிர்காலத்தில், டீ மற்றும் காபி அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது, குளிர்காலத்தில் டீ மற்றும் காபியை அதிகமாக உட்கொள்வதால் நீரிழப்பு அதிகரிக்கும். இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இரும்புச்சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது என்பது மிகப்பெரிய பிரச்சனை. இதன் காரணமாக ஒரு நபர் இரத்த சோகைக்கு ஆளாகலாம். அதாவது, உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படலாம். இதன் காரணமாக உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதில் சிரமம் இருக்கும்.


McGill வலைத்தளத்தின்படி, காபி மற்றும் காஃபின் இரண்டிலும் பாலிஃபீனால் இரசாயனங்கள் உள்ளன. பாலிஃபீனால் இரும்பு போன்ற அதே கலவை ஆகும். பாலிபினால்கள் அவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக அறியப்படுகின்றன. ஆனால் பாலிஃபீனால் இரும்புச் சத்தையும் உள்ளடக்கியதாகும்.

அதாவது, குடலில் உள்ள உணவில் இருந்து இரும்பு உறிஞ்சப்படும் போது, ​​காபி அல்லது தேநீர் உட்கொண்டால், அதில் உள்ள பாலிபினால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்த காரணத்திற்காக குளிர்காலத்தில் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்க அறிவுறுத்தப்படுவதில்லை.

ஹெல்த்லைன் அறிக்கையின்படி, ஒரு நாளைக்கு 710 மில்லி காபிக்கு மேல் உட்கொள்வது இரத்த சோகையை ஏற்படுத்தும். காஃபின் செரிமான செயல்முறையை பாதிக்கிறது என்பதால், உடலில் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆபத்து அதிகரிக்கிறது. இரத்த சோகை, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கிறது. ஒரு கப் தேநீரில் 11 முதல் 61 மில்லிகிராம் காஃபின் உள்ளது. இதுவே பதற்றத்தை அதிகரிக்க காரணம்.

இதனுடன், டீ அல்லது காபி அதிகமாக உட்கொள்வதும் தலைவலியை அதிகரிக்கிறது. ஒரு ஆய்வின் படி, காஃபின் தூக்க ஹார்மோன் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கிறது. இதன் காரணமாக தூங்குவதில் சிரமம் உள்ளது. எனவே இது தூக்க முறையையும் பாதிக்கிறது.


 Click here to join whatsapp group for daily health tip

பாசிட்டிவ் எண்ணங்கள்.. மனதளவில் உறுதியா மாற இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

January 17, 2023 0

 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உயர்வு, தாழ்வு என்பது ஒரு சாதாரண விஷயம் தான். நாம் உயர்ந்தவர்களாக இல்லை என்று யாரும் வாழ்க்கையில் வருத்தப்படத் தேவையில்லை. அதே சமயம் உங்களை எப்போதும் மற்றவர்களிடத்தில் உயர்ந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்றால், முதலில் நீங்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் எந்த கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம். வாழ்க்கையில் சில குணங்களை மட்டும் பாலோ பண்ணினால் போதும் மனதளவில் நீங்கள் எப்போதும் உயர்ந்தவர்களாக  மாற்றும்  சில குணங்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.



சமநிலை : ஒருவர் மனதளவில் நம்பிக்கையுடனும், உயர்ந்தவர்களுடன் இருந்தால் மட்டும் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். எனவே நீங்கள் எந்த சூழலிம், உங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபம், சந்தோஷம் என எந்த சூழலிலும் உங்களின் மனதை சமநிலைப்படுத்த வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் செய்து முடித்தல் : ஒரு வேலையை நீங்கள் செய்து முடிக்க என்று நினைத்து விட்டால் தாமதிக்கக்கூடாது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்ய முடியாது என்ற எண்ணத்தை விட்டு விடவும். இல்லையென்றால் நம்மால் செய்ய முடியுமோ? என்ற எண்ணமே உங்களின் மனதைப் பாதிக்கும்.

பொறுமைக் காத்தல் :வாழ்க்கையில் எந்த சூழல் வந்தாலும் பொறுமையுடன் கையாளவும். அவசரத்தில் கத்துவது, சண்டையிடுவது போன்ற விஷயங்களை மேற்கொள்வதை நிறுத்தி விட்டு பொறுமையுடன் யோசித்து பிரச்சனைக்குத் தீர்வு காணவும். தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் இது சிறந்த வழியாக அமையும்.

பயத்தைத் தவிர்த்தல் : பயம் தான் மனிதனுக்கு மிகப்பெரிய எதிரியாக அமையும். பயத்தை விட்டுவிட்டீர்கள் என்றால் எந்த இடத்திலும், எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும். இதோடு பயம் ஒருவரின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்து தலைகுனியத் தான் வைக்கும். எனவே எந்த சூழலிலும் பயத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக இருந்தாலே உங்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.



தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல் : மனிதராக பிறந்த யாராக இருந்தாலும் தவறு செய்யாதவர்கள் இருக்க முடியாது. இதிலிருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம். எனவே தவறுகள் இருந்தாலும் எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது என்பதைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல் உங்களின் மனநிலை மாற்றிக்கொள்ளவும். தவறுகளைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிவுடன் எதிர்க்கொள்ளவும்.

ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை : வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை துணிவுடன் ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். இறந்த காலத்தை யோசித்து நிகழ்காலத்தை இழந்துவிடக்கூடாது. யதார்த்தைப் புரிந்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும்.

பொறாமையைத் தவிர்த்தல் : வாழ்க்கையில் உங்களது நண்பர்களோ? அல்லது உறவினர்களோ? யாரும் வெற்றிப்பெற்றிருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டுங்கள். உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொண்டு வெளி உலகத்திற்காக எதையும் பேச வேண்டாம். குறிப்பாக பொறாமையைத் தவிர்த்து மனதாரப் பாராட்டினாலே போதும் மனதளில் நீங்கள் உயர்ந்த குணம் கொண்டவர்களாக மாறிவிடுவீர்கள். இதே போன்று உங்களின் திறமையை அறிந்து செயல்படுவது மற்றும் பொய்களும், வஞ்சகமும் நிறைந்த வாழ்க்கையைத் தவிர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் போதும். நீங்கள் எப்போதுமே உயர்ந்தக் குணம் கொண்டவர்களாக விளங்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


 Click here to join whatsapp group for daily health tip


சென்னை சுகாதாரத் துறையில் பல்வேறு காலி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

January 17, 2023 0

 சென்னை, மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), பல்வேறு காலியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது.

விவரங்கள் பின்வருமாறு: 

பதவியின் பெயர்காலி இடங்கள்சம்பளம்கல்வித் தகுதி
மாவட்ட PPM ஒருக்கிணைப்பாளர்01ரூ.26,500MSW/M.Sc உளவியம் -முதுநிலை பட்டம்தொடர்புதுறை/ACSM/பொது மற்றும் தனியார் பங்களிப்பு/சுகாதார திட்டங்களில் ஒரு வருடம் பணி ஆற்றிய அனுபவம்3 நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்
புள்ளிவிவர உதவியாளர் - DEO (நோடல் DRTB மையம்) 01ரூ.26,000புள்ளியியலில் இளங்கலை பட்டம் மற்றும் அரசு தொழில் நுட்ப கல்வி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினி பயன்பாட்டில் பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையானது,தமிழ் (ம)ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சுசெய்யும் ஆற்றல்MS Word, Excel, கணக்கியல் மென்பொருள் பயன்படுத்துதலை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்
முதுநிலை சிகிச்சை மேற்பார்கையாளர்04ரூ.19,800அறிவியலில் இளங்கலை அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்டசுகாதார ஆய்வாளர் படிப்புMS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்
கணினி இயக்குபவர்01ரூ.13,50010+2, (ம)தொழில் நுட்பகல்வி உரிமம் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட கணினியன்பாட்டில் பட்டயம் (DCA)தமிழ் (ம) ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 40 வார்த்தைகள் தட்டச்சுசெய்யும் ஆற்றல் 
ஆய்வக தொழில் நுட்ப  வல்லுனர்52ரூ. 13,00010, +2 தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 வருட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவல்லுனர் பட்டயம்
TB சுகாதாரப் பார்வையாளர். (TBHV)08ரூ.13,300அறிவியலில் இளங்கலைஅல்லது அறிவியல் பாடத்துடன் (10,+2) தேர்ச்சி மற்றும்2 வருட BO MPHW/LHV/ANM/ சுகாதார பணியாளர் பிடிப்பு  அல்லதுஅரசு அங்கீகரிக்கப்பட்ட காசநோய் சுகாதார பார்வையாளர் படிப்புMS Office பயன்படுத்துததில் கணிணி சான்றிதழ்
மருத்துவ அலுவலர் (DTC)03ரூ.60,000இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில்எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
மருத்துவ அலுவலர் (மருத்துவக் கல்லூரி)01ரூ.60,000இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 
முதுநிலை மருத்துவ  அலுவலர் Center)(DRTB)01ரூ.60,000இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள்.தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். 
ஆற்றுப்படுத்துநர்2ரூ. 13,000சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல் இளங்கலை பட்டம்அடிப்படை கணினி அறிவு

இந்தப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர் ஒப்பந்த அடிப்படையில்  11 மாதங்களுக்கு பணியமர்த்தப்படுவர். இந்த பணியிடங்கள் இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும்.

விண்ணப்பங்கள் தகுதி மற்றும் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்படுவர் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்த காலி பணியிடங்கள் இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும். நேர்காணலில் கலந்துக்கொள்வதற்கு TA/DA வழங்கப்பட மாட்டாது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு தேவையான ஆவணங்களின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் திட்ட அலுவகர், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), மாவட்ட காசநோய் மையம் எண் 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 23.01.2023 அன்று பிற்பகல் 5 மணிக்குள்  வரை அனுப்பலாம். கடைசி தேதி மற்றும் நேரத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

போட்டித் தேர்வுகள் இல்லை... டிகிரி தகுதி போதும் - பயிற்சியுடன் தனியார் வங்கிகளில் கொட்டிக் கிடக்கும் வேலை!

January 17, 2023 0

 தனியார் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான இலவச பயிற்சியை தாட்கோ நிறுவனம்  (தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கு கழகம்) அறிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சியை  முடித்தவர்கள் HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களில் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் (Banking Financial service and Insurance)  ஆதிதிராவிட இளைஞர்கள் பணிபுரிய ஏதுவாக   ACCOUNTS ASSITANTS (கணக்கு நிர்வாகி) திறன் பயிற்சியை தாட்கோ அறிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்? 21 வயது முதல் 33 வயதுக்குள் உள்ள   ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். BA, B.com, BSc Maths என ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி:  சென்னையில் 20 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்க வசதி என  இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.20,000-த்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தேர்வுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு (BFSI) ஆல் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

100% வேலைவாய்ப்பு:  மேலும், தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக (Account Executive) பணியில் சேர 100%  வழிவகை செய்யப்படும். இப்பணியில் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.25,000/-முதல் ரூ.30,000/- வரை பெறலாம். இப்பயிற்சியினை தாட்கோ, இணையதளமான http://www.tahdco.com/  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

50,000க்கும் மேற்பட்ட வேலை: மாநிலம் முழுவதும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அறிவிப்பு

January 17, 2023 0

 மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள்  வேலைவாய்ப்பினை பெற  வழிவகை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

இதன், விவரங்கள் பின்வருமாறு :

மாவட்டம்பணி வாய்ப்புகள்இடம் நாள்
தருமபுரி10,000நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி21.01.2023
அரியலூர்20,000மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயங்கொண்டம், அரியலூர்28.01.2023
விருதுநகர்5,000 +சைவ பானு சத்ரியா கல்லூரி, அருப்புக்கோட்டை , விருதுநகர் மாவட்டம்28.01.2023
கரூர்5000+அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கரூர்தாந்தோணிமலை, கரூர் - 639005.22.01.2023
ஈரோடு10,000+ நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு,ஈரோடு மாவட்டம்22..01.2023

தரவுகள்: www.tnprivatejobs.tn.gov.in

இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பல நூறுக்கும்  மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான  பணியாட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம்களில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில், 68,829 காலியிடங்களுக்கு 327 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. 1,29,758 பேர் கலந்து கொண்ட நிலையில், 53, 257 பேர் முதல் சுற்றை முடித்துளள்னர். இவர்களில், இறுதியாக வேலைவாய்ப்பு கடிதம் பெற்றவர்கள் எண்ணிக்கை 37,782 ஆகும். அதாவது, வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டவர்களில் தோராயமாக 30% பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெறும் 18% ஆகும். எனவே,  வேலைதேடுபவர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், விவரங்களைப் பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசின் நிறுவனத்தில் வேலை.. ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்.. விவரம் இதோ!

January 17, 2023 0

 மத்திய அரசின் NHPC நிறுவனத்தில் பொறியியல்/CA/Management படித்தவர்களுக்கு ரூ.1.6 லட்சம் வரை சம்பளத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mechanical/Electrical/Civil பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள், CA, Management பிரிவுகளில் சட்டம் படித்தவர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
Trainee Engineer(Civil)13630
Trainee Engineer(Electrical)4130
Trainee Engineer(Mechanical)10830
Trainee Officer(Finance)9930
Trainee Officer(Hr)1430
Trainee Officer(law)330

சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

Civil/Electrical/Mechanical பிரிவுகளில் Trainee Engineer பணிகளுக்கு ஏற்ற பாடங்களில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Trainee Officer(Finance) பணிக்கு டிகிரியுடன் CA முடித்திருக்க வேண்டும்.

Trainee Officer(Hr) பணிக்கு Management சார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம் /முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

Trainee Officer(law) பணிக்குச் சட்டத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பொறியியல் பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுந்தவர்கள் GATE 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Trainee Officer(Finance) பணிக்கு CA தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் விதம் தேர்வு செய்யப்படுவர்.Trainee Officer(Hr) பணிக்கு UGC NET 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

Trainee Officer(law) பணிக்கு CLAT 2022 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

GATE,CA,UGC NET,CLAT தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும். தகுந்தவர்கள் http://www.nhpcindia.com/என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://intranet.nhpc.in/tr_rectt/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி: புதிய திட்டத்தின் விவரம் இதோ!

January 17, 2023 0

 பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் (New Swarnima Scheme For women) சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பெயர்:    பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம் (New Swarnima Scheme For women)

இத்திட்டத்தின் கீழ், உயர்ந்தபட்ச தொகையாக ரூ. 2 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், ஆண்டொன்றுக்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் தரப்படுகிறது.

அடிப்படைத் தகுதிகள்:   தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பெறுவதற்கான  பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமான ரூ. 3 லட்சத்துக்குள் கீழ் இருக்க வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்:  இந்த கடன் திட்டத்தில் , பயனாளிகள் பங்களிப்பு எதுவும் செலுத்த தேவையில்லை. ஒட்டு மொத்த கடன் தொகையும் வழங்கப்படுகிறது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகளின் குறைந்தது 5 முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகை ஏதும் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ், ரூ 2 லட்சம், வெறும் 5% வட்டியில் வழங்கப்படுகிறது. இது, ஏனைய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும்.

கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்:   சாதிச் சான்றிதழ் (ம) வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, சிறு  வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை மற்றும் இதர வங்கி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்:  அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

Click here for latest employment news

Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.1.6 லட்சம் வரை சம்பளம்.. பி.இ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தின் அசத்தலான அறிவிப்பு

January 17, 2023 0

 சிவில்/எலெக்டிரிகல்/எலெக்ரானிக்ஸ்/கணினி அறிவியல் போன்ற பாடங்களில் கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல் பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான POWERGRID அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் ரூ.40,000 மற்றும் இதர தேவைகளுக்கு இணைத்து சம்பளமாக வழங்கப்படும். பணி நியமனத்திற்குப் பின்பு மாதத்திற்குச் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்கேட் தாள்
Engineer Trainee (Electrical)EE
Engineer Trainee (Electronics)EC
Engineer Trainee (Civil)CE
Engineer Trainee (Computer Science)CS

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 படி 28 வயது இருக்க வேண்டும்.

சம்பளம்:

ஒரு வருடப் பயிற்சி காலத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். பயிற்சி காலம் முடிவடைந்த பின் பணிநியமனம் செய்யப்படும். பணிக் காலத்தில் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பதவிக்கு ஏற்ற B.E./ B.Tech/B.Sc (Engg.) டிகிரி பெற்றிருக்க வேண்டும். 14.08.2023 இறுதி தேர்வு முடிவுகள் பெறும் இறுதி ஆண்டு படிக்கு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

கேட்-2023 இல் எடுக்கும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கேட் 2023 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :

முழுமையான வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, இதர தகவல் விரைவில் https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பக்கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்செய்யவும்.

Click here for latest employment news

Click here to join WhatsApp group for Daily employment news

நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை

January 17, 2023 0

 யுஜிசி நெட் டிசம்பர் 2022 தேர்வு மூலம் POWERGRID,CTUIL,Damodar Valley Corporation போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் HR Trainees ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் 2022 நெட் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறுபவர்கள் இந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று வேலையில் சேரலாம். ASSISTANT OFFICER TRAINEE (HR) / MANAGEMENT TRAINEE (HR) என்று இரண்டு பணிகளுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார்.

பணியின் விவரங்கள்:

பதவிபணியிடம்நிறுவனம்
AOT (HR)27POWERGRID
AOT (HR)03CTUIL
MT (HR)5DVC

நெட் தேர்வு பாடங்கள்:

Labour Welfare/ Personnel Management/

Industrial Relations/ Labour & Social Welfare/ Human Resources Management பாடங்களில் நெட் தேர்ச்சி பெற வேண்டும். தாள் குறியீடு 55.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.12.2022 நாள் வரை வயது 28 ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

MBA in HR மற்றும் Personnel Management &

Industrial Relations/ Social Work/ HRM and Labour Relations/ Labour and Social Welfare ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நெட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்டத்திற்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்குக் குழு தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.powergrid.in/ என்ற இணையத்தளத்தில் 11.02.2023 ஆம் நாளில் இருந்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதியாக 05.03.2023 உத்தேச அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

Click here to join WhatsApp group for Daily employment news

தினமும் அதிகாலை வெந்நீர், ஆஹா பலன்கள் கிடைக்கும்

January 17, 2023 0

 வெந்நீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: சுடுநீரைக் குடிப்பதற்கோ அல்லது உங்கள் எந்த வேலைக்காகப் பயன்படுத்தினாலும், அதன் நன்மைகள் அளப்பரியவை. உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், வெந்நீரைக் குடிப்பது அல்லது பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் வெந்நீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது எடையைக் குறைக்கவும், உணவை ஜீரணிக்கவும், செரிமானத்தை வலுப்படுத்தவும், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. மறுபுறம், வெந்நீரில் குளிப்பது, வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவுவது, மேக்கப்பை அகற்றுவது, வலியிலிருந்து விடுபடுவது என எத்தனை பலன்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே இப்போது நாம் வெந்நீரின் 10 நன்மைகள் என்னவென்ற தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைக்க வெந்நீர் உதவாதா? அதிர்ச்சியூட்டும் தகவல்

வெந்நீரின் 10 அற்புத நன்மைகள்

1. எண்ணெய் அல்லது காரமான உணவுகளை சாப்பிட்ட பின் வெந்நீர் குடிப்பதால் உடலில் கொழுப்பு சேராது.
2. ஏதாவது சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு முறையும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், உணவை விரைவாகச் செரித்து, அமிலத்தன்மையில் நிவாரணம் கிடைக்கும்.
3. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிறு நன்கு சுத்தமாகி மலச்சிக்கலைத் தடுக்கிறது.
4. தொடர்ந்து வெந்நீர் குடிப்பதால் தொப்பை குறைகிறது மற்றும் உடலை நச்சுத்தன்மை நீக்குகிறது.
5. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், உடலை நீர்ச்சத்துடன் வைத்திருப்பதுடன், மூக்கடைப்பு நீங்கும்.
6. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சோர்வு நீங்கி இரத்த ஓட்டம் மேம்படும்.
7. வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் சுத்தமாகி, துளைகளைத் திறந்து, கண்களின் வீக்கத்தைக் குறைக்கிறது.
8. வெதுவெதுப்பான நீர் மேக்கப் ரிமூவராக செயல்படுகிறது மற்றும் கிரீம் அல்லது லைட் மேக்கப் லேயர்களை சுத்தம் செய்கிறது.
9. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு ஷாம்பு மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு கால்களை வைத்தால் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான சிகிச்சை கிடைக்கும்.
10. வெதுவெதுப்பான நீரில் தலையை அலசுவது உச்சந்தலையை சுத்தம் செய்து முடிக்கு நீராவியை கொடுக்கிறது.

 Click here to join whatsapp group for daily health tip

என்ன பண்ணாலும் தொப்பையை குறையலையா.. ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!

January 17, 2023 0

 உடல் எடையை குறைக்க பின்பற்றும் பல வழிமுறைகளில் யோகா சிறப்பான ஒன்று. குறிப்பிட்ட சில யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் உடலில் கூடுதல் எடை கொண்ட பகுதிகளில் உள்ள கொழுப்புகளை கரைக்கலாம். எவ்வளவு முயன்றாலும் உடலில் கொழுப்பு குறையாமல் பாடாய படுத்துவது தொப்பை. வயிற்று பகுதியில் இருக்கும் அதிக கொழுப்பை எரிக்க உதவும் சில யோகாசனங்கள் மிகவும் சிறப்பான, வியக்கத்தக்க பலன்களக் கொடுக்கும்.

நம்மை ஆரோக்கியமாக வைத்திர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு தொடர்ந்து யோகா செய்வதால் மன அமைதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்கும்  ஆசனத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உத்தன் பதாசனம்

உத்தன் பதாசனம், தொப்பை  குறைக்க பெரிதும்  உதவுகிறது.

உத்தன் பதாசனம் செய்யும் முறை

முதலில் சமதளமான இடத்தில் படுத்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு கால்களையும் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு காலை மேலே தூக்கவும். கால்கள் இரண்டையும் சேர்த்து 30 டிகிரி வரை உயர்த்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இப்போது இப்படியே சிறிது நேரம் கால்களை உயர்த்தி வைத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். 30 வினாடிகளுக்குப் பிறகு, ஆழமாக மூச்சை வெளியேற்றிக் கொண்டே, கால்களை மீண்டும் கீழே கொண்டு வாருங்கள். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் இந்த ஆசனத்தை முயல வேண்டும். 

இம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான இருக்கும். நன்கு செங்குத்தாக 90 டிகிரி கோணத்தில் தூக்குவது எளிது. ஆனால், அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து 30 டிகிரி கோணத்தில், அதாவது ஒன்றரை அடிக்கு மேல் தூக்கி, அதே நிலையில் சில நொடிகள் வைத்திருப்பதும் எளிதல்ல.  அவ்வாறு செய்யும் போது அடி வயிற்றில் நடுக்கம் வருதைப் போல் உணரலாம்.

உத்தன் பாதாசனத்தின் பலன்கள்

இந்த ஆசனம் செய்வதன் மூலம் தொப்பை குறையும். அதனை தொடர்ந்து பயிற்சி  செய்வது வயிற்று வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். தொப்புளை சமநிலைப்படுத்துவதில் இந்த ஆசனம் மிகவும் முக்கியமானது. மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குகிறது. இந்த ஆசனத்தின் மூலம் முதுகுவலியும் நீங்கும்.

உத்தான பதாசனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

இந்த ஆசனத்தை எப்போதும் வெறும் வயிற்றில் செய்யுங்கள். முதுகு வலி இருந்தால் இதை ஒருபோதும் செய்யாதீர்கள். வயிற்று அறுவை சிகிச்சை செய்தாலும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

 Click here to join whatsapp group for daily health tip

January 16, 2023

8ம் வகுப்பு தேர்ச்சியா? திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை ... உடனே விண்ணப்பியுங்கள்

January 16, 2023 0

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரவுக்காவலர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST மற்றும் SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.  விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023 மாலை 5.45 மணிக்குள். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் (பின்புறம்) திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news