Agri Info

Adding Green to your Life

January 23, 2023

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு

January 23, 2023 0

 தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பவுள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
புறத்தொடர்பு பணியாளர் ( Out Reach Worker)1ரூ.10,592

வயது வரம்பு:

விண்ணப்பதார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

தகுதிகள்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது

தகுதிகள்:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் இருக்க வேண்டும். பணி அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

176, முத்துச் சுரபு பில்டிங்,

மணிநகர் 2 வது தெரு, பாளை ரோடு,

தூத்துக்குடி 628 003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.01.2023

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு : தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்

January 23, 2023 0

 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்சாலை ஆய்வாளர்
காலியிடங்கள்760
ஊதியயம்ரூ.19,500 - 71500
வயதுபொதுப் பிரிவினர்,  1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.ஏனைய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது
கல்வித் தகுதிஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்;சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத்தாரக்ளுக்கு முன்னுரிமைMust possess an I.T.I. Certificate in Civil Draughtsmenship from a Government recognized institute:Provided that preference shall be given to the persons possessing a Diploma in Civil Engineering.
தேர்வு முறைஎழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்எழுத்துத் தேர்வுதாள் 1: பாடத்தாள் (தொழிற்பிரிவு தரம்)தாள் 2: பகுதி அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வுபகுதி ஆ : பொது அறிவு
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்11.02.2023

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள  மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -யில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகுதியில்லாத, காலம் கடந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சிதெரிவித்துள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

LIC Recruitment: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்... 1,516 காலியிடங்களை அறிவித்த எல்ஐசி நிறுவனம்!

January 23, 2023 0

 Recruitment of Apprentice Development Officer 22-23: அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ப ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ந்த ஆட்சேர்ப்பின் மூலம், 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு நிலையான உதவித் தொகையாக (Stipend) மாதத்திற்கு சுமார் ரூ.51,500/- வழங்கப்படும்.

எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான/-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.02.2023 ஆகும்.

Recruitment of Apprentice Development Officer 22-23


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் வேலைகள்...!

January 23, 2023 0

 ஒவ்வொரு மாற்றத்திற்கும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகுக்கிறது. அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போகலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இரண்டு நபர், ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை தொழில்நுட்பத்தின் உதவியால் 3 மணிநேரத்தில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி சாதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் சில சேவைகளுக்கான அழிவையும் குறிக்கிறது. அந்த வகையில், அடுத்த 20 ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக உள்ள சில வேலைகளை பற்றி இங்கே காணலாம். இந்தத் துறைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பணியாற்றினால், பீதி அடையத் தேவையில்லை. தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைவதை போல, நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் உங்கள் எதிர்கலாம் வளமாக இருக்கும்.

பயண முகவர்கள் (Travel agents) : தொழில்நுட்ப வளர்ச்சி, ட்ராவெல் ஏஜென்ட் வேலையை ஆபத்தில் தள்ளியுள்ளது. முன்பெல்லாம், நாம் எங்கும் சென்றாலும் பயண முகவர்களின் உதவியை நாடுவோம். அவர்கள் நமக்கு தங்கும் இடம், பார்க்க வேண்டிய இடங்களை ஆகியவற்றை பரிந்துரைப்பார்கள். ஆனால், தற்போதைய இளைஞர்களின் கையிலிருக்கும் ஸ்மார்ட் போன் ஒன்றே போதுமானதாக இருக்கிறது.

உங்களிடம் ஒரு கார் அல்லது பைக்கும், மொபைலும் இருந்தால் போதும் உலகையே யாருடைய உதவியும் இல்லாமல் சுற்றி வந்துவிடலாம். ஏனென்றால், கூகிள் அனைவரின் வாழ்க்கையையும் எளிமையாக்கிவிட்டது. எங்கு விடுமுறைக்கு செல்லலாம், எப்படி செல்லலாம், விமான டிக்கெட், ஹோட்டல் புக்கிங் என அனைத்தையும் உட்காந்த இடத்தில் இருந்து ஆன்லைன் வழியாக செய்துவிடலாம். இதனால், பயண முகவர்களின் தேவை முழுமையாக குறையும்.

காசாளர்கள் (Cashiers) : கிட்டத்தட்ட சுமார் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாளராக பணிபுரிவதால், இந்த வேலை ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என கூறமுடியாது. ஆனால், இந்த பதவிகளுக்கான தேவை குறையலாம். அதாவது, யு.எஸ். பியூரோ ஆஃப் லேபர் ஸ்டாடிஸ்டிக்ஸ் தகவலின்படி, 2031-க்குள் இந்த வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் ஆட்டோமேஷன். கொரோன தொற்று துவங்கியதில் இருந்து மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையையே அதிகம் விரும்புகிறார்கள். எனவே, இவர்களுக்கான தேவை குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.

வங்கி கேஷியர் (Bank Cashier) : BLS தகவலின்படி, 2031 ஆம் ஆண்டில் வங்கி கேஷியர்களுக்கான தேவை குறையும் என்று கணித்துள்ளது. ஏனென்றால், ஆன்லைன் ஷாப்பிங்கை போலவே, ஆன்லைன் பேங்கிங் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தங்களின் சொந்த வாழ்க்கையை பார்க்க கூட நேரம் இல்லாமல் ஓடும் மக்களுக்கு வங்கி செல்வதற்கு எப்படி நேரம் இருக்கும். அதுவும், தற்போது எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இவர்கள் வங்கி செல்வதற்கான தேவையும் குறைகிறது. அப்படியே பணம் தேவைப்பட்டாலும், அருகில் இருக்கும் ATM-க்கு செல்லலாம்.

ஓட்டுனர் (driver job) : ஓட்டுனர்களுக்கான தேவை இந்த நிமிடம் வரை இருந்து கொண்டுதான் உள்ளது. எனவே, இது முற்றிலும் மறைவதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும், இந்த வேலையில் இருப்பவர்கள் கடினமான இன்னல்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையில், தானியங்கி வாகனங்களின் வருகையும் அதிகரிக்கும். எனவே, வரும் காலங்களில் ஓட்டுனர்களின் தேவை குறையலாம்.

செய்தித்தாள் (Print media Jobs) : பல காலமாக செய்தித்தாள்கள் இருந்து வந்தாலும், அதற்கான தேவை என்னவோ குறைவாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், வீட்டில் இருப்பவர்கள் அன்றைய செய்திகளை அன்றே தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்கிறார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு தங்களின் சொந்த வேலைகளை கவனிக்கவே நேரம் இல்லாதபோது, எப்படி செய்தித்தாள் வாசிக்க நேரம் கிடைக்கும்.

டிஜிட்டல் மீடியாவின் எழுச்சி செய்தித்தாள்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துள்ளது. செய்தித்தாள்களுக்கு நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவை இருந்தாலும் அதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.

டெலிமார்கெட்டிங் (Telemarketing) : டெலிமார்கெட்டிங் என்பது வணிகம் சார்ந்த தொழில். இந்த பதவிக்கான தேவை எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம். ஏனென்றால், இதற்கான பெரிய காரணம் டிஜிட்டல் எழுச்சி மற்றும் விளம்பரம். டிஜிட்டல் விளம்பரங்கள் உலகில் எல்லா மூளை முடுக்கிலும் உள்ள மக்களை சென்றடைகின்றன. மக்கள் அவர்களின் தொலைபேசியில் என்ன தேடுகிறார்களோ, அது குறித்த விளம்பரங்கள் பார்க்கும் அனைத்து பக்கங்களிலும் காண்பிக்கப்படும். எனவே, டெலிமார்க்கெட்டிங் வேலைக்கான தேவை குறையும்.

கிடங்கு தொழிலாளர்கள் (Warehouse workers) : தற்போது பிரபல நிறுவனங்கள் அனைத்தும் பெருவாரியாக கிடங்குகளில் ரோபோக்களை பயன்படுத்துகின்றன. ரோபோக்கள் பொறுப்பேற்றவுடன் கிடங்கு வேலைகள் முதலில் செல்லும். மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் & கோ தகவலின் படி, கிடங்குகளில் குறைந்தபட்சம் 70% வேலைவாய்ப்புகள் ஆட்டோமேஷன் மூலம் இழக்கப்படலாம் என கூறியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் கிடங்கு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முற்றிலும் மறைந்து விடலாம்.

கணக்காளர்கள் (Accountants) : அக்கவுண்டன் பணிகளை செய்ய பல மென்பொருள்கள் உள்ளது. ஒரு மனிதன் இதை செய்தால் அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், இந்த வேலைகளை செய்ய மென்பொருட்களை பயன்படுத்தும்போது நேரமும் செலவும் குறைகிறது. குறிப்பாக, இந்த வேலைகளை எக்செல் இன்னும் எளிமையாக்குகிறது. எதிர்க்காலத்தில், கணக்காளர்களுக்கான தேவை குறையலாம்.

டைபிஸ்ட் (Typing Jobs) : டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிஸ்ட் வேலைகள் இன்னும் உள்ளன. ஆனால், அதன் தேவை நீண்ட காலத்திற்கு இருக்காது. குரல் அங்கீகாரம் மற்றும் டிக்டேஷன் மென்பொருள் இருப்பதால், டைபிஸ்ட் பதவிக்கான முக்கியத்துவம் குறையலாம். எனவே, இந்த பதவியில் நீங்கள் இருந்தால், உங்களை நீங்கள் மேம்படுத்துக்கொள்வது நல்லது.

இயந்திர தொழிலாளர்கள் (Machine workers)

உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெட்டி அதை தேவையான பொருட்களாக உருவாக்கும் தொழிலாளர்களுக்கான தேவை குறையலாம். இந்த தொழிலாளர்களின் பணிகளுக்கு ரோபோக்கள் மாற்றப்படலாம். இயந்திரத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு 2031-க்குள் கிட்டத்தட்ட 46,000 ஆகக் குறையும் என்று BLS கணித்துள்ளது.

தபால் ஊழியர்கள் (Postal workers) : உண்மையை கூறவேண்டும் என்றால், தபால் வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், ஆட்டோமேஷன் தபால் துறையில் சில பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில், தபால் துறையில் குறைந்த பணியாளர்கள் தேவைப்படுவார்கள். அதாவது, தபால் சேவையில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பும் 6% குறைவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனென்றால், நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்த துவங்கிவிட்டோம்; மெயில், முகநூல் என அனைவரும் புதிய தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

January 22, 2023

கடலோர காவல்படையில் மாலுமியாக வேண்டுமா? - 255 பணியிடங்கள்... 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்!

January 22, 2023 0

இந்திய கடலோரக் காவல் படையில்  255 மாலுமிகள் (Posts of Navik (General Duty) and Navik (Domestic Branch)  ஆள் சேர்க்கை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை உள்ள  திருமணமாகாத ஆண்கள்  இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்:

Navik (General Duty) : 225

Navik (Domestic Branch) : 30

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18-22 க்குள் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி:  Navik ( General Duty ) பதவிக்கு இந்த பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

Navik ( Domestic Branch) பதவிக்கு 10ம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?  https://joinindiancoastguard.cdac.in என்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 16.02.2023 மாலை 5.30 மணி வரை ஆகும். 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

January 22, 2023 0

 அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் திருக்கோயில் விளங்குகிறது. இத்திருக்கோயில் நிர்வாகம்,      நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி, உதவி அர்ச்சகர், இலை விபூதிபோத்தி உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை திருச்செந்தூர் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 6    

நாதஸ்வரம் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ.  19500 – 62000
தாளம் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
தவில் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
 தவில் (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ.18500 – 58600
சுருதி (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளியில் இது தொடர்புடையத் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்:  ரூ.18500 – 58600
உதவி அர்ச்சகர் (கீழ்சாந்தி போந்தி)ஒரு காலியிடம்தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்றும், அகமப்பள்ளி மற்றும் வேதப் பாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொணடதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்சம்பளம்: ரூ. 15900 – 50400 வரை 
இலை விபூதிபோத்தி (ஒரு காலியிடம்)தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.ரூ.15900 – 50400

 பொது நிபந்தனைகள்:

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தண்டணை அடைந்தார்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள் பொது ஸ்தாபணங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிறிந்து தண்டணை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவத்தை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவார். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்- 62016, தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி எண்: 04836-242221

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்று அலுவர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும் அசல் சான்றிதழ்கள் அனுப்பகூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் வேலை : 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

January 22, 2023 0

 நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது.  இது, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், குறைவு காலிப்பணியிடமாக (Shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பட  உள்ளது.

பதவியின் பெயர்ஜீப்பு ஓட்டுநர்
மொத்தப் பணியிடங்கள்1
இடஒதுக்கீடு விவரங்கள்பழங்குடியினர் மட்டும்
வயது18 - 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சிறப்புத் தகுதிதகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் .
சம்பளம்ரூ. 19500 - 62,000 வரை
விண்ணப்பப் படிவம்மாதிரி விண்ணப்பப் படிவத்தினை https://namakkal.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்30.01.2023 பிற்பகல் 5.45 மணி வரை

நிபந்தனைகள்: 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://namakkal.nic.in/ என்ற  இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி செய்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 வாகளம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபபம் பெற்றிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.01.2023 முதல் 31.01.2023 அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிக்குள்  அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண். 06, முன்றாவதுதளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு) மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெண்கள் சிறந்த தொழிலை தேர்வு செய்வது எப்படி?

January 22, 2023 0

 செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். 

மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

 தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. 

உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். 

தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும். 

சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். 

ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது. 


முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

இரவில் தாமதமாக சாப்பிட்டால்..

January 22, 2023 0

 உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியமானது. அதுபோலவே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது.

 நிறைய பேர் 9 மணிக்குள்ளோ, அதற்கு பிறகோ தான் இரவு உணவை சாப்பிடுகிறார்கள். 10 மணி, 11 மணியை கடந்த பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அந்த நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். 

இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். முன்னோர்கள் அத்தகைய வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தார்கள். அவர்களின் ஆரோக்கியத்திற்கு அதுவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். 

இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு நன்றாக ஜீரணமாகாது. இரவு உணவிற்கும், தூங்க செல்லும் நேரத்திற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். 

தாமதமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது அது தூக்க சுழற்சிக்கும் இடையூறு விளைவிக்கும். 

இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு மேல் தூங்க செல்வது சிறந்தது. அது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.

 காலையில் எழும்போது சோர்வும் தோன்றாது. உடலில் புத்துணர்ச்சி வெளிப்படும். காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடை குறைவதற்கும் உதவும்.

 இரவு 7 மணிக்குள் சாப்பிடும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இரவு உணவிற்கும், மறுநாள் காலை உணவிற்கும் இடையே 10 மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. 

இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு நேரமில்லாமல் போய்விடும். மேலும் இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். நீரிழிவு, தைராய்டு, இதயம் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் '10 உணவுகள்'

January 22, 2023 0

 சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. பழங்கள் : பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை மிகவும் சிறந்த பழங்களாகும். 

2. பால் : பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

3. தயிர் : கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது. 

4. முட்டை : முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்ைடயில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். 

5. பசலைக் கீரை : பசலைக் கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

6. முட்டைக்கோஸ் : குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே தின்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம். 


7. முழு தானியங்கள் : முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

8. ஓட்ஸ் : எந்த குழந்தைகள் ஓட்ஸ் சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஓட்ஸ் மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும். 

9. நட்ஸ் : நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம். அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நட்ஸில் பேரீச்சம்பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். 

10. அக்ரூட் : அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.

சாதாரண உடல் பருமன் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கும்?

January 22, 2023 0

 உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதேசமயம் கொரோனாவிற்கு முன்புவரை, இந்த பாதிப்புகள் குறைவாகத்தான் இருந்தன. ஆனால் கொரோனா பொதுமுடக்க காலங்களில், செல்போன் உலகிற்குள் சிக்கிக்கொண்டவர்களால் இன்றுவரை அதிலிருந்து வெளிவர இயலவில்லை. 

மக்களின் இயல்பான வெளியுலக செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அவர்கள், ஒரே இடத்தில் படிக்கவும், வேலை செய்யவும், வீட்டிற்குள்ளேயே விளையாடவும் கற்றுக்கொண்டதால், உடல் பருமன் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இயல்பான குழந்தைகளை விட, இவர்கள் மிக எளிதாகவே சோர்ந்து விடுவார்கள். 

குறிப்பாக, அன்றாட வேலைகளை செய்வதே இவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். உடல் பருமன் காரணத்தால், நிறைய குழந்தைகள் கவன சிதைவிற்கு உள்ளாவதாக நிறைய ஆய்வுகள் விளக்குகின்றன. பலர் இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பிற்கும் உள்ளாகிறார்கள்.


'ஒபிசிட்டி' எனப்படும் உடல் பருமன் பிரச்சினைகள், இப்போது சிறு குழந்தைகள் வரை வந்துவிட்டது. ஒரு வகுப்பில், 50 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அதில் 5 குழந்தைகள் உடல் பருமனாக இருப்பது சகஜமாகிவிட்டது. இவர்களால் மற்ற குழந்தைகளைப் போல வேகமாக நடக்க முடியாது. 
மாடிப் படிகளில் ஏறி, இறங்க முடியாது. உடற்கல்வி வகுப்புகளில், இயல்பான குழந்தைகளைப் போல துள்ளிக் குதித்து விளையாட முடியாது. இத்தகைய காரணங்களால், அவர்கள் இயல்பான குழந்தைகளிடமிருந்து வேறுபடுகிறார்கள். கூடவே பருமனான குழந்தைகள் அணியக்கூடிய பெரிய சைஸ் உடை நாகரிகமும், அவர்களை மற்ற குழந்தைகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும். இதனால் அவர்கள், தனிமை நிறைந்த தனி உலகிற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். இது அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும்.


இந்த முறையில் தூங்கினால் உடலில் பல பிரச்சனைகள் வரும்...

January 22, 2023 0

 உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் அடிப்படையானது. இரவில் போதுமான தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் உங்களின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும். 

சீரான தூக்கம் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பராமரிப்பது முதல் பல நன்மைகளை உண்டாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும்போது, குப்புறப்படுத்தல், மல்லாந்துப் படுத்தல், ஒருக்களித்துப் படுத்தல் என்ற மூன்று முறைகளில் தூங்குபவர்களே அதிகம். 

இது தவிர, குழந்தை போல உடலைச் சுருக்கிக் கொள்வது, ஒரு புறம் சாய்ந்து அருகில் இருப்பவர்கள் அல்லது தலையணையை அணைத்துக்கொள்வது, கால்களுக்கு மட்டும் தலையணை வைத்துப் படுப்பது, மல்லாந்து படுத்துக் கொண்டு கை, கால்களை அகற்றி வைத்தவாறு தூங்குவது, நாற்காலியில் அமர்ந்தவாறு மேசையில் சாய்ந்து தூங்குவது, கட்டில் அல்லது சோபாவில் ஒரு காலை மட்டும் கீழே தொங்கவிட்டபடி தூங்குவது என பல விதங்களிலும் தூங்குகிறோம்.

 எத்தகைய நிலையில் தூங்குகிறோம் என்பதும், உடல் நலத்தில் பாதிப்புகளை உண்டாக்கும். தூக்கத்தின்போது உடல் உறுப்புக்கள் தன்னைத் தானே சீர்படுத்திக்கொள்ளும். 

தூங்கும் முறை முதுகுத் தண்டு மற்றும் முக்கிய உறுப்புகளில் எவ்வித தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதைப் பொறுத்து, நன்மை-தீமைகள் ஏற்படலாம். இரவில் தூங்கி காலையில் எழுந்திருக்கும்போது சிலருக்கு அதிக உடல் வலி இருக்கும். தூங்கும் முறை சரியில்லாததே இதற்கு காரணம். 

குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும். 

உட்கார்ந்தபடி தூங்குவது, உடலைச் சுருக்கிக் கொண்டு தூங்குவது, கை, கால்களை தொங்கவிட்ட நிலையில் தூங்குவது உடலின் சீரான ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும். இதனால், உடலில் குறிப்பிட்ட பகுதியில் வலி, உணர்வின்மை உண்டாகும். 

வலது பக்கமாக சாய்ந்து படுக்கும்போது சுவாசத்தின் அளவு குறையும். ஆகையால், உடல் எளிதில் குளிர்ச்சி அடைந்துவிடும். இரைப்பையில் உள்ள உணவு செரிக்காமல், வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை அதிகரிக்கும். 


சரியான உறங்கும் முறை: இடது கை கீழாகவும், வலது கை மேலாகவும் இருக்கும்படி, இடது புறம் ஒருக்களித்தபடி, கால்களை நீட்டி படுக்கலாம். அல்லது தலையணையில் சரியாக தலையை வைத்து மல்லாந்து கால்களை ஒட்டியபடி நீட்டியும், கைகளை உடல் மேல் வைத்தும் படுக்கலாம். இம்முறையில் தூங்கும்போது உடல் முழுவதும் சீராக ரத்த ஓட்டம் பாயும். உடலுக்குத் தேவையான பிராண வாயு கிடைத்து உணவு எளிதில் செரிக்கும். கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி தூங்கும் முறைகளை பின்பற்றுவது அவசியம்.

குடும்பத்துடன் ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்?

January 22, 2023 0

பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம். 

அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.


அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. 

குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

 குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்.

குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

மன அழுத்தத்தை குறைக்கும் 
பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

 குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். 

மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம். 

உற்சாகத்தை தூண்டும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். 

மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

உடல் பாகங்களை ஒத்திருக்கும் உணவுப்பொருட்கள்...

January 22, 2023 0

 உடல் உறுப்புகளுக்கும், சாப்பிடும் சில உணவு பொருட்களுக்கும் இடையே நெருக்கமான ஒற்றுமை இருக்கின்றன. அவை ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகின்றன. அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு மேலும் நன்மை பயக்கும். உடல் பாகங்களை ஒத்திருக்கும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.


1. கண்-கேரட் 

வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 

கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். 

கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர ரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. 


2. இதயம்-தக்காளி 

இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்ட தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. 

தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம். 

3. அல்வியோலி-திராட்சை 

நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வியோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை ரத்த ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்கின்றன.

 திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதைகளில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும்.

4. சிறுநீரகம்-கிட்னி பீன்ஸ் 

பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும். 

5. கருப்பை-அவகொடா 

கருப்பையின் வடிவத்தை போலவே அவகொடா பழத்தின் உள் பகுதியும், விதையும் அமைந்திருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவகொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும்.

6. மூளை-வால்நட் 

வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தவும் செய்யும். 

7. கணையம்-சர்க்கரைவள்ளிக் கிழங்கு 

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது.

8. வயிறு-இஞ்சி 

இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல்வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். 

9. காது-காளான் 

காளானை இரண்டாக வெட்டினால் காதுகளை போலவே காட்சியளிக்கும். காளான்கள் செவிப்புலன் திறனை மேம்படுத்த உதவுகின்றன. அவற்றில் இருக்கும் வைட்டமின் டி, செவிப்புலன் இழப்பை தடுக்க உதவும். எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். 

10. புற்றுநோய் செல்கள்-புரோக்கோலி 

புரோக்கோலியின் தலைப்பகுதி புற்றுநோய் செல்களின் தோற்றத்தை ஒத்திருக்கும். புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை 45 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்கவும் புரோக்கோலி சாப்பிடலாம்.