Agri Info

Adding Green to your Life

February 6, 2023

ரூ.60 ஆயிரம் சம்பளம்... கோவை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 100க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிப்பு

February 06, 2023 0

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் (Urban Health and wellness centre) காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில்/ தற்காலிகமானதாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2023 மாலை 5.00 மணி.

வரிசை எண்பணியிட வகைகாலி பணியிடம்வயதுசம்பளம்
1மருத்துவ அலுவலர்4945 வயது வரைரூ.60,000
2பல்நோக்குசுகாதாரப் பணியாளர்(சுகாதாரஆய்வாளர் நிலை–II )4935 வயது வரைரூ.14,0000
3சுகாதாரப் பணியாளர்4945 வயது வரைரூ.8500 

மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பல்நோக்குசுகாதாரப் பணியாளர் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட  சுகாதாரப் பணியாளர்/சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பப் படிவத்தை, கோயம்பத்தூர் மாவட்ட https://coimbatore.nic.in/  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

219, பந்தய சாலை

கோயம்புத்தூர் – 641018.

தொலைபேசி எண்: 0422-2220351 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

February 06, 2023 0

 

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Chief Risk Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TMB வங்கி வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:
  • Chief Risk Officer பதவிக்கு என மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உலகளாவிய ஆபத்து வல்லுநர்கள் சங்கத்திலிருந்து நிதி இடர் மேலாண்மையில் நிபுணத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • 30.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 2, 2023

நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்க வேண்டுமா? இந்த 5 டிப்ஸ் உங்களுக்குத்தான்!

February 02, 2023 0

 இன்றைய உலகில் நாம் பணத்துக்காக ஒரு பக்கம் ஓடியாடி உழைத்துக்கொண்டிருந்தாலும், நாம் ஏற்கெனவே உழைத்த பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நம் பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருப்பதை பேசிவ் இன்கம் (Passive Income) என்று சொல்லலாம். உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் வாரன் பஃபெட் இதை இரண்டாவது வருமானம் எனக் குறிப்பிடுவார். அவர், `உங்கள் பணம், நீங்கள் தூங்கும்போதும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் சாகும் வரைக்கும் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்று சொல்லியிருப்பது, மிகவும் அர்த்தமுள்ளதாகும்.

செயல் சார்ந்த வருமானம்

நாம் தொழில், வணிகம் செய்து அல்லது வேலை பார்த்துச் சம்பாதிப்பது. அதாவது தொடர்ந்து ஒரு செயலை செய்து சம்பாதிப்பது ஆக்டிவ் இன்கம் (Active Income). அதாவது செயல் சார்ந்த வருமானம் ஆகும். நம் உடல் நிலை மற்றும் மனநிலை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை. வயதாக வயதாக அதன் செயல்பாடு மற்றும் திறன் குறைய ஆரம்பிக்கும், அப்போது நாம் ஏற்கெனவே செயல் மூலம் உருவாக்கியது, செயலற்ற வருமானம் என்கிற பேசிவ் இன்கம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

பொதுவாக, செயலற்ற வருமானத்தைக் கீழ்க்கண்ட ஐந்து முக்கிய வழிகளில் உருவாக்க முடியும்.

1. வட்டி வருமானம், பென்ஷன்

இருப்பதிலேயே அதிக ரிஸ்க் இல்லாமல், சுலபமாகச் செயலற்ற வருமானத்தை உருவாக்க உங்களிடம் இருக்கும் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பென்ஷன் திட்டங்களில் போட்டு வைப்பதாகும். இப்படிப் போட்டு வைப்பதில் இரு பாதக அம்சங்கள் உள்ளன.

ஒன்று இவற்றின் மூலமான வருமானம் பணவீக்க விகிதம் அதாவது, விலைவாசி உயர்வு அளவுக்கு அல்லது அதை விடக் குறைவாக இருப்பதாகும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு சுமார் 5% வட்டிதான் கிடைக்கிறது. பென்ஷன் பிளான்கள் மூலமான வருமானம் 5 - 6.5% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் சில்லறை பணவீக்க விகிதம் சுமார் 6% ஆக உள்ளது.

அடுத்து எஃப்.டி வட்டி வருமானம் மற்றும் பென்ஷன் தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அதிக வரி வரம்பில் அதாவது 20%, 30%-ல் இருப்பவர்களுக்கு வரிக்கு பிந்தைய வருமானம் விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக சுமார் 4 - 5% ஆக இருக்கும். எனவே, பேசிக் இன்கம் உருவாக்க இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பேசிவ் இன்கம்மில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இவற்றைக் கவனிக்கலாம்.

2. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலமும் பேசிவ் இன்கமை உருவாக்கலாம். இதில் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடன் ஃபண்டுகள், கலப்பின ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்தப் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம். அல்லது முதலீட்டுத் தொகையை ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பிரித்து இந்த மூன்று வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம், வருமானத்துக்கு எக்காரணம் கொண்டும், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யக் கூடாது. காரணம், தற்போதைய நிலையில், டிவிடெண்டுக்கு முதலீட்டாளர் அவரின் வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

சிறிது காலம் காத்திருந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் பணத்தை எடுத்துப் பயன்படுத்தினால் அதிக வருமானம் கிடைப்பதோடு (காத்திருக்கும் காலத்தில் மூலதன ஆதாயம் அதிகரிக்க வாய்ப்பு), குறைவான வரி அல்லது வரி கட்ட வேண்டி இருக்காது.

கடன் ஃபண்ட் என்கிறபோது முதலீடு செய்து மூன்றாண்டு கழித்து எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுக்கும்போது லாபத்துக்குப் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும்.

இதுவே, ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது ஓராண்டு கழித்து யூனிட்களை விற்று லாபம் பார்க்கும்போது, லாபத்தில் ரூ. 1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.

இங்கே ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் கடன் ஃபண்டுகள் மூலமும் ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் ஈக்விட்டி ஃபண்ட் மூலமும் பேசிவ் இன்கம் பெறத் திட்டமிடலாம்.

கடன் ஃபண்டுகள் மூலமான வருமானம் மூன்றாண்டு கழித்த நிலையில் வரிக்கு பிந்தைய நிலையில் எஃப்.டி வட்டியைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மூலமான வருமானம் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாகவும், குறைவான வரி கட்டுவதாகவும் இருக்கும்.

3. பங்குச் சந்தை முதலீடு:

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படையில் வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் அதிக பேசிவ் இன்கம் கிடைக்கக் கூடும். நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் வருமானம் மற்றும் பங்கின் விலை உயர்வு லாபமாக இருக்கும்.

ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் பங்குகளை விற்றால், லாபத்துக்கு முதல் ரூ. 1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டி வரும், நிறுவனங்கள் வழங்கும் டிவிடெண்டுக்கும் முதலீட்டாளரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

இந்த வரியைத் தவிர்க்கும் விதமாக அதிக விலை கொடுத்து நிறுவனங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்கிக்கொள்வது அடிக்கடி நடக்கிறது. பேசிவ் இன்கம் தொடர்ந்து எதிர்பார்ப்பவர்கள், நிறுவனத்திடம் பங்கைக் கொடுத்துவிட்டு, குறைவான விலையில் சந்தையில் அந்தப் பங்கை வாங்கிக்கொள்வது லாபகரமாக அமையும்.

நீண்ட காலத்தில் பங்குச் சந்தை மூலமான வருமானம், பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருப்பதோடு, குறைவான வருமான வரி கட்டும் அனுகூலத்துடன் உள்ளது. இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிறுவனப் பங்குகளை ஓராண்டுக்கு மேல் விற்று லாபம் பார்க்கும்போது இவை அனைத்தும் சேர்ந்துதான் நிதி ஆண்டில் ரூ. 1 லட்சத்துக்கு வரி இல்லை.

4.ராயல்டி வருமானம்:

ஏதாவது ஒரு துறை குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள். இந்த விவரங்களை அனுபவத்தின் மூலம் அறிந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். அவர்கள் புத்தகங்கள் எழுதுவது, பிளாக் எழுதுவது, கோடிங் தெரிந்திருக்கும்பட்சத்தில் மொபைல் போன் ஆப் உருவாக்கி எழுதிக் கொடுப்பது மூலம் ஆண்டுதோறும் வருமானம் கிடைத்து வருமானம். யூடியூப் நடத்துவது மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம். இதில், ஒரு முறை உழைப்பைக் கொடுத்தால் போதும்.

ஆண்டாண்டுக்கு வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, புத்தகம் விற்க விற்க ராயல்டி என்கிற சன்மானம் கிடைத்து வரும். இதே போல் யூடியூப் வீடியோவை பார்க்கப் பார்க்க வருமானம் வந்துகொண்டிருக்கும்.

இந்த வருமானத்தை எஃப்.டி, கடன் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரண்டாவதாகக் கூடுதல் பேசிவ் இன்கம் பெற முடியும்.

5.வாடகை வருமானம்:

ஏற்கெனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் தங்கள் தேவைக்குப் போக கூடுதலாக இருக்கும் பகுதியை வாடகைக்கு விடலாம். அல்லது கூடுதல் அறைகளை கட்டி வாடகைக்கு விடலாம். இதன் மூலம் தொடர்ந்து பேசிவ் இன்கம் வந்துகொண்டிருக்கும்.

வணிக கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விடுவது மூலமும் வாடகைக்கு விட்டு பேசிவ் இன்கம் பெற முடியும். இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு தேவைப்படும்.

ஊட்டி, கொடைக்கானல், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் சுற்றுலா நோக்கில் பலர் வீடுகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவர்கள் தாங்கள் பயன்படுத்தாத காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடகைக்கு விடுவது மூலம் பேசிவ் இன்கம் ஈட்ட முடியும். பயன்படுத்தாத கார் பார்க்கிங், அதிகம் பயன்படுத்தாத காரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்காலம்.

வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டது. கணவன், மனைவி இருவரும் வாடகை வருமானம் பெறுவது போல் இருந்தால் வரி கட்ட வேண்டி இருக்காது. அல்லது குறைவான வரி கட்ட வேண்டி இருக்காது. மேலும், வேறு வருமானம் இல்லை என்றாலும் அடிப்படை வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்றால் வரி கட்ட வேண்டி இருக்காது.

இந்த பேசிவ் வருமானத்துக்கு முதலீடு செய்யும்போது ஒருவரின் வயதுக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப அசெட் அலோகேஷன்படி முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது மூலம் ரிஸ்கை கணிசமாகக் குறைத்து அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது. வாடகை வருமானம், ராயல்டி வருமானம் என்பது எல்லோருக்கும் கிடைப்பது கடினம். ஆனால், முதலீடு மூலமான பேசிவ் இன்கம் பெறுவது அனைவருக்கும் எளிதாக இருக்கும். அதற்கு இன்றே திட்டமிடலாமே..!

வேலை பழகும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 நிதியுதவி : பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு

February 02, 2023 0

 

அடுத்த 3 ஆண்டுகளில், நாடு முழுவதும் வேலை பழகும்  இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதம் ரூ. 1500/- வரை உதவித்தொகையின் வழங்கப்படும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு,  தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. தொழிற்சாலைகளில் வேலை பழகுநர்கள் (Apprentice) சேர்க்கையை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் நபர் ஒன்றுக்கு ரூ.1500க்கு மிகாமல் (அல்லது வழங்கப்டும் ஊதியத்தில் 25%)  பங்கிட்டுத் தொகையாக மத்திய அரசு அளித்து வந்ததது. மாதத்திற்கு ரூ.7,500க்கு மிகாமல் ஊதியம் வழங்கும்  நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம், இந்த திட்டத்தை  நேரடி பயனாளிகள் பரிமாற்ற திட்டத்தின் (Direct Beneficiary Transfer (DBT) scheme) ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியது. இந்த புதிய முறையின் மூலம், மத்திய அரசு தனது பங்களிப்பு நிதியான ரூ.1500 உதவித் தொகையை,  வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு பதிலாக,  வேலை பழகுநர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்தது. முன்னோடியாக, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் செயல்படுத்தி வந்த புதிய நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதன், மூலம் நாடு முழுவதும் 47 லட்சம் வேலை பழகும் இளைஞர்கள் பலனடைய உள்ளனர் என்றும் தெரிவித்தார்.   


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

UPSC: இந்திய வனப் பணி தேர்வு - யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியீடு..!

February 02, 2023 0

 இந்தியக் குடிமைப் பணிகளில் அடங்கிய இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தோராயமாக 150 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 21 ஆம் நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

இத்தேர்வை எழுத வயது வரம்பாக 21 நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிரிவினருக்கு ஏற்ற வயது தளர்வுகள் உண்டு. கல்வித்தகுதியாக Animal Husbandry & Veterinary Science,Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology/ Agriculture, Forestry/Engineering போன்ற பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். முதல் நிலை தேர்வுகள் 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 1, 2023

சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

February 01, 2023 0

 மனிதர்கள் தங்கள் நாளை இனிமையாக்க காலையில் எழுந்ததும் குடிக்கும் காஃபி முதல் இரவு படுக்கும் வரை எல்லா விஷயங்களுக்கும் சர்க்கரை (Sugar ) பயன்படுத்துகிறார்கள். அப்படி, நாம் இனிப்புக்காக எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நமது வாழ்நாளை குறைக்கும் தெரியுமா? காலையில் காஃபியில் ஆரம்பித்து, சாக்லேட், பிஸ்கட், கூல் டிரிங்க்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட அனைத்து உணவுகளிலும் சர்க்கரை இயற்கையாகவே காணப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.

எந்த அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? தெரிந்துகொள்ளுங்கள்..!

February 01, 2023 0

 உலகின் பல பகுதிகளிலும் அரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆசிய மக்களின் பிரதான உணவாக அரிசி சாதம் இருக்கிறது. அதிலும் தென்னிந்திய மக்களை பற்றி சொல்லத் தேவையில்லை. அரிசி சாப்பாடு இல்லாத நாள் இருக்கவே முடியாது.

நம் தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள அரிசி என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது வெள்ளை நிற அரிசி தான். ஆனால், அரிசி பல நிறங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளான பிரவுண் அரிசி, சிவப்பரிசி, கருப்பு அரிசி போன்றவற்றை நம் மக்கள் மீண்டும் உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். பல நிறங்களில் அரிசி இருந்தாலும், உங்களுக்கு எது ஒத்து வரும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.,

வெள்ளை அரிசி : உலகெங்கிலும் மிக அதிகமாக உட்கொள்ளப்படும் அரிசி வகை இதுதான். இதுகுறித்து கரிமா கோயல் கூறுகையில், ‘மற்ற அரிசி வகைகளை ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் மாவுச்சத்து மிக, மிக அதிகம். குறைவான கலோரி கொண்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இதனை எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளவும். வெள்ளை அரிசியின் தோற்றம் பாலிஷ் செய்யப்பட்டதை போல இருக்கும். இதில் நார்ச்சத்து குறைவு’’ என்று தெரிவித்தார்.

பிரவுண் அரிசி : வெளிப்புற தவிடு லேயர் மட்டுமே இதில் நீக்கப்பட்டிருக்கும். உட்புற பிரான் மற்றும் ஜெர்ம் போன்ற லேயர்கள் அப்படியே இருக்கும். இதுகுறித்து கரிமா கோயல் குறிப்பிடுகையில், “இந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டதைப் போல இருக்காது. இதில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம், செலீனியம், தியமைன், நியசின், வைட்டமின் பி6 போன்ற மினரல்கள் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது’’ என்றார்.

சிவப்பு அரிசி : இதனை ஹிமாலயன் அரிசி அல்லது பூட்டான் அரிசி என்று குறிப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை கட்டுப்படுத்தி, எலும்புகளை பலப்படுத்தக் கூடியது என்று கரிமா கோயல் கூறினார். இரும்புச்சத்து நிறைந்த இந்த அரிசி மிக ஆரோக்கியமானது என்றும் அவர் கூறினார்.

கருப்பு அரிசி : இது மண் வாசனை நிரம்பியதாக இருக்கும். இதுகுறித்து கரிமா கோயல் கூறுகையில், “கருப்பு அரிசியில் வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை மிகுதியாக இருக்கும். விட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் தான் இது கருப்பு நிறத்தில் உள்ளது. இருப்பதிலேயே மிக அதிகமான நார்ச்சத்து, புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த கருப்பு அரிசி மற்ற எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது’’ என்று தெரிவித்தார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வேலைக்கு செல்லும் இளம் வயதினர் இந்த தவறை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்!

February 01, 2023 0

 இன்றைய நிலையில் சரியான வேலை கிடைப்பது என்பது அனைவருக்கும் மிகவும் கடினமான காரியமாக இருந்து வருகிறது. அப்படியே வேலை கிடைத்தாலும் அவை நமக்கு பிடித்தமானதாக உள்ளதா, அதில் போதுமான அளவு வருமானம் வருகிறதா என்பது போன்ற பல பிரச்சனைகள் நம் மனதை போட்டு குடைந்து கொண்டிருக்கும். முக்கியமாக இளம் வயதினர் பலரும் வேலை கிடைத்த பின்னரும் கூட பல விஷயங்களை தவறாக செய்து பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள். எனவே வேலை தேடும் பொழுதும் வேலைக்கு செல்லும் போதும் இளம் வயதினர் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

போதுமான அளவு தொடர்புகளை வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல் : வேலை தேடும் அல்லது வேலைக்குச் செல்லும் அனைவரும் தனக்கென ஒரு நெட்வொர்க்கை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். நீங்களே முயற்சி செய்து பல்வேறு துறைகளில் உள்ள நபர்களுடன் தொடர்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்திலும் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கக்கூடும்.

வேலையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பது :
இளம் வயதினர் பலரும் தங்களது வேலை பற்றி மிகவும் கடினமான கொள்கைகளை பின்பற்றுகின்றனர். தாங்கள் படித்த படிப்புக்கு தான் வேலை வேண்டும். இந்த துறையில் மட்டும் தான் வேலை செய்வேன் என்பது போன்ற பல்வேறு விதமான எல்லைகளை வகுத்துக் கொண்டு அதன் வழியே நடக்க முயற்சி செய்கின்றனர். உண்மையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் வேலையை சரியாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் நாம் ஆசைப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அதிகம் கற்று கொள்ளாமல் இருத்தல் : எப்போதுமே புதிய புதிய திறமைகளை கற்றுக் கொண்டும், தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொண்டும் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் புதிய சவால்களையும் பல்வேறு வித சூழ்நிலைகளையும் சந்திக்க நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

போதுமான அளவு சேமிக்காமல் இருப்பது : 20-களின் துவக்கத்தில் தான் நாம் நமது எதிர்காலத்திற்கான சேமிப்புகளை மேற்கொள்ள மிகவும் சரியான நேரம் ஆகும். மேலும் நம்முடைய ஓய்வு காலங்களின் போது நமக்கு போதுமான அளவு சேமிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. இதனைத் தவிர உங்களுக்கென புது வங்கி கணக்கு துவங்கி அவசர காலத்திற்கும் நிதியை சேமித்து வைக்க வேண்டும். இதை தவிர காப்பீடுகள் போன்ற மற்ற விஷயங்களிலும் சேமிப்புகளை மேற்கொள்வது அவசியம்.

குறுகிய கால இலக்குகளில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது : குறுகிய கால இலக்குகளை உண்டாக்கிக் கொண்டு அதனை நோக்கி செயல்படுவது முக்கியமானது என்றாலும் எப்போதுமே அதில் முழு கவனத்தையும் கொண்டு செயல்படுவது என்பது சரியாக வராது. நீண்ட கால இலக்குகளை மனதில் வைத்து அதற்கான செயல்களை செய்து நகரும் போது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் :
அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறக் கூடாது. மேலும் உங்களது இலக்குகளை மனதில் வைத்து அதற்கு ஏற்ப செயல்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி அதன் மூலம் உங்களது திறமைகளையும் உங்களது மதிப்பையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகாலை சீக்கிரம் எழ முயற்சிப்பவரா நீங்கள்..? இதை டிரை பண்ணுங்க!

February 01, 2023 0

அதிகாலையில் எழுந்திருப்பது பல நன்மைகளை வழங்கினாலும், அதிகாலையில் எழுவது நம்மில் பலரால் முடியாத ஒன்று. இன்றைக்காவது சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைத்து அதை அணைத்துவிட்டு தூங்குபவர்கள் இன்றைய இளைஞர்கள். அதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் நாளை நோக்கத்துடன் தொடங்க உதவும். சீக்கிரம் எழுவது உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அதிக நேரத்தை வழங்கும்.

நம்மில் பலர் காலையில் எழுந்திருக்க நிறைய சிரமப்படுவார்கள். ஏனெனில், அவர்கள் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். இந்த சோர்வுக்கு உடலின் சர்க்காடியன் ரிதம் தான் காரணம். இது 24 மணி நேர சுழற்சியாகும், இது நம் உடல் எப்போது தூங்க வேண்டும், எப்போது விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) மூளையில் உள்ள சுப்ராச்சியாஸ்மாடிக் நியூக்ளியஸால் (SCN) கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒளிச்சேர்க்கை எனப்படும் செயல்முறை மூலம் ஒளியால் பாதிக்கப்படுகிறது. பகல் வெளிச்சம் நம் கண்களைத் தாக்கும் போது, எப்போது எழுந்திருக்க வேண்டும் என்று SCN உடலுக்குச் சொல்கிறது. எனவே, சூரியனிடமிருந்து வரும் இந்த சமிக்ஞை இல்லாமல், காலையில் எழுந்திருப்பதில் சிக்கல் இருக்கும். பின்வரும் குறிப்புகள் நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க உதவும்.

குறிப்பு ஒன்று : நீங்கள் வேலை செய்யாத நாட்களில் கூட, தினமும் ஒரே நேரத்தில் அலாரத்தை அமைக்கவும். ஒவ்வொரு இரவும் (ஓய்வு நாட்களில் கூட) அதே நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கப் பழகிவிடும். இதே போல விரைவாக எழுவதற்கும் முயற்சிக்கலாம்.

குறிப்பு இரண்டு : நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது (கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள்) அல்லது இன்றைய நிகழ்வுகளை ஒரு குறிப்பேட்டில் எழுதுவது போன்றவற்றை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும் புத்துணர்வுடன் நாளைத் தொடங்கத் தயாராக இருப்பீர்கள்.

குறிப்பு மூன்று : நீங்கள் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிக்கவும். அது உங்களுக்கு உற்சாகமாகவும், வரவிருக்கும் நாளுக்கு தயாராகவும் உதவுகிறது. உதாரணமாக, குளிர்ந்த நீரில் குளிப்பது, உடற்பயிற்சி அல்லது ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யவும்.

குறிப்பு நான்கு : ஒரு வாரம் சீக்கிரம் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். பின்னர், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று பாருங்கள். உங்களால் இன்னும் பழக முடியாவிட்டால், உங்களுக்கு எது சிறந்தது என்பதைப் பொறுத்து நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரத்தை சரிசெய்யவும்.

குறிப்பு ஐந்து : சரியான நேரத்திற்கு படுக்கைக்கு சென்று தூங்க முயற்சிக்கவும். படுக்கைக்கு சென்ற பின் படிப்பது TV பார்ப்பதை தவிர்க்கவும். 20 நிமிடங்களுக்குள் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், தூக்கம் வரும் வரை எழுந்து ஏதாவது படிக்கவும்.

குறிப்பு ஆறு : நீங்கள் தினமும் பின்பற்றுவதற்கு ஒரு அட்டவணையை உருவாக்கவும். இதனால், காலையில் நேரத்தை வீணடிக்க உங்களுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.

குறிப்பு ஏழு : படுக்கைக்குச் செல்வதற்கு முன் தியானம் அல்லது சில சுவாசப் பயிற்சிகளை செய்யவும். இதனால் நீங்கள் எழுந்ததும், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

குறிப்பு எட்டு : நீங்கள் எழுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் அலாரம் வைக்கவும். அந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். இந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, தியானம் செய்தால், படித்தல், சுவாசப் பயிற்சி ஆகியவற்றை செய்யலாம்.

நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்க பழகியதும், உங்கள் உடல் புதிய அட்டவணைக்கு பழகி, சரியான நேரத்தில் தூங்க பழகிவிடும். வழக்கத்தை விட 15 - 30 நிமிடங்கள் முன்னதாகவே படுக்கைக்குச் செல்ல முயற்சிக்கவும்.

குறிப்பு ஒன்பது : அதிகாலையில் எழுந்திருப்பதை ஒரு வேலையாக நினைக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, மாலை அல்லது வார இறுதி நாட்களில் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவும்.

குறிப்பு பத்து : காலையில் எழுந்திருப்பதில் உங்களுக்கு சிக்கல் இருந்தால், உங்கள் அலாரம் சத்தத்தை அதிகமாக வைக்கவும் (உதாரணமாக, உற்சாகமான பாடல் அல்லது உரத்த சத்தம்). அது உங்களை வேகமாக எழுப்பும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவு உணவை தவிர்த்தால் எடை குறையுமா? பாதிப்பு வருமா?

February 01, 2023 0

 இரவு உணவைத் தவிர்ப்பதன் தீமைகள்: இன்று பலர் எடை அதிகரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, மக்கள் புதிய முறைகளை கையாள்கிறார்கள். சிலர் ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். சிலரோ உணவை முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தால் இரவு உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால், இது சரியா?

குறைவான உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது. உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கும். இரவு உணவு உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனினும், இரவு உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை. இரவு உணவு குறித்த சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம். 
 
இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்
 
1. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சனை

இரவு உணவைத் தவிர்ப்பதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும். இரவு உணவைத் தவிர்ப்பது உங்கள் உணவு வழக்கத்தை கெடுத்துவிடும், இது உங்கள் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
 
2. பலவீனம் தொடங்குகிறது

நீங்கள் இரவு உணவை உட்கொள்ளாமல் இருந்தால், ​​அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை சென்றடையாது. இதனால் உங்கள் உடல் பலவீனமடைகிறது. பலவீனத்தால் எளிதில் சோர்வடைகிறீர்கள்.

3. தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது

இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் தூங்குவதால், உங்கள் தூக்கச் சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் இரவில் தூக்கம் வராமல், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது. இதனால், எப்போதும் எரிச்சலான மனநிலை இருக்கும். 
 
4. உடலின் இரத்த சர்க்கரை அளவு மீது தாக்கம் ஏற்படும் 

நேரத்துக்குச் சாப்பிடாமலோ, இரவில் சாப்பிடாமலோ இருந்தால், அதன் விளைவு உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்ப்படுபவர்கள் இரவு உணவை கண்டிப்பாக தவிர்க்கக்கூடாது. 
 
5. எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம்

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவும் அதை உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியமானது. காலை உணவு கனமாகவும், மதிய உணவு சிறிது இலகுவாகவும், இரவு உணவு மிகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும். ஆனால் இரவு உணவைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருந்து இரவு உணவைத் தவிர்த்தால், அதுவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். 

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Heart Health: இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சில’ பழங்கள்!

February 01, 2023 0


இளம் வயதிலேயே மாரடைப்புக்கு பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக கொலஸ்ட்ரால் இதற்கு மிகப்பெரிய காரணமாகி வருகிறது. கொழுப்பு இரத்தத்தின் வழியாக இதய தமனிகளை அடைகிறது. இதன் காரணமாக தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, இரத்தம் இதயத்தை எளிதில் சென்றடையாத போது, ​​​​இதயத்தின் மீது அழுத்தம் தொடங்குகிறது. எனவே, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால் உடலின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகிறது. மேலும், உடலின் பல்வேறு செயல்பாடுகளைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு செரிமானம், ஹார்மோன்கள் உற்பத்தி போன்றவற்றில் கொல்ஸ்டிராலின் பங்கு காணப்படுகிறது. கொலஸ்ட்ரால் இரண்டு வகைப்படும். HDL (உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்) நல்ல கொலஸ்ட்ரால் என்று அறியப்படுகிறது மற்றும் உடலின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம்.

HDL கொழுப்பு அனைத்து கழிவுகளையும் நச்சுகளையும் கல்லீரலுக்கு மீண்டும் கொண்டு செல்கிறது. LDL (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்), கெட்ட கொலஸ்ட்ரால் என அறியப்படுகிறது. இது கொழுப்புப்புரதங்களின் ஐந்து முக்கிய குழுக்களில் ஒன்றாகும். இது உடல் முழுவதும் அனைத்து கொழுப்பு மூலக்கூறுகளையும் கொண்டு செல்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் கொழுப்பின் அடுக்கை உருவாக்கத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதையொட்டி உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.

ஆனால் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், LDL கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் குறைக்கலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றி இங்கு சொல்கிறோம். இவை இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிப்பதில் வல்லவை.

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில பழங்கள்

1. தக்காளி:

வைட்டமின் ஏ, பி, கே மற்றும் சி போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த தக்காளி உங்கள் கண்கள், தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தில் மாயங்கள் செய்யும். பொட்டாசியம் நிறைந்த தக்காளி இதயத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
 
2. பப்பாளி:

நார்ச்சத்து நிறைந்த பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள "ஆரோக்கியமற்ற" (LDL) கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்சலின் (USDA) மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒரு பெரிய பழத்தில் (சுமார் 780 கிராம்) 13 முதல் 14 கிராம் நார்ச்சத்து உள்ளது என்பது தெரியவந்துள்ளது. நார்ச்சத்துகள் செரிமானத்தை எளிதாக்குகின்றன. குடல் இயக்கத்தை எளிதாக்குகின்றன. பப்பாளி பப்பாளி நார்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

3. ஆப்பிள்:

ஆரோக்கியமான சருமம் முதல் செரிமானம் வரை, ஆப்பிள் அனைத்திற்கு ஆரோக்கிய பயன்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த பழங்கள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்த உதவும். டிகே பப்ளிஷிங் ஹவுஸின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தின்படி, ஆப்பிளில் உள்ள பெக்டின் ஃபைபர், ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிஃபீனால்கள் போன்ற பிற கூறுகளுடன் சேர்ந்து, ஆரோக்கியமற்ற எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கும் மருந்தாகிறது. இது மட்டுமின்றி, இதயத்திற்கு உகந்த பாலிபினால்கள் இதய தசைகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தாமல் ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்கிறது.

4. சிட்ரஸ் பழங்கள்:

எலுமிச்சை, எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களும் உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அதிசயங்களைச் செய்யும். 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தின்படி, "சிட்ரஸ் பழங்களில் ஹெஸ்பெரிடின் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது, மேலும் பெக்டின் (ஃபைபர்) மற்றும் லிமோனாய்டு கலவைகள், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை (தமனிகளின் கடினப்படுத்துதல்) மெதுவாக்கி கெட்ட கொலஸ்டிரால் (LDL) அளவை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவோன்கள் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும்.

5. அவகேடோ:

இரத்த அழுத்தம் முதல் அதிக கொழுப்பு வரை உள்ள நோயாளிகளுக்கு அவகேடோ பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின்கள் K, C, B5, B6, E மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இப்பழம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. வெண்ணெய் பழம் எல்டிஎல்லைக் குறைப்பதன் மூலம் எச்டிஎல்லை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ட்ரைகிளிசரைடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், இயற்கையாகவே கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையத் தொடங்கும்


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 01, 2023 0

 

தமிழக அரசில் ரூ.12,000/- சம்பளத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கன்னியாகுமரி மாவட்டம்‌, மகளிர்‌ திட்டம்‌ // மாவட்ட இயக்க மேலாண்மை அலகின்‌ கீழ்‌ வாழ்வாதார திட்டப்‌ பணிகள்‌ மேற்கொள்வதற்கு அகஸ்தீஸ்வரம்‌-1, குருந்தன்கோடு-1, (ம) முஞ்சிறை-1 ஆகிய வட்டாரங்களில்‌ காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ தகுதியான பெண்‌ விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வட்டார ஒருங்கிணைப்பாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ms Office ல்‌ 3 மாத காலம்‌ பயின்றதற்கான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

TNSRLM Kanyakumari தேர்வு செயல் முறை:
  • எழுத்து தேர்வு : 75 %
  • நேர்முக தேர்வு : 25 %
  • எழுத்து தேர்வில்‌ 60% (45 மதிப்பெண்கள்)-க்கு அதிகமாக பெறும்‌ நபர்கள்‌ மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்‌.
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பங்களை கல்வித்தகுதி, வயது, முன்‌ அனுபவச்சான்று ஆகியவற்றின்‌ நகல்களுடன்‌ இணைத்து மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல்‌ மூலமோ 10.02.2023-க்குள்‌ அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Download Notification 2023 Pdf

தமிழகத்தில் பிப். 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!!

February 01, 2023 0

 

தமிழகத்தில் பிப். 11ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அப்டேட்!!

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற பிப்.11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் வருகிற பிப். 11 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

அதில் 150க்கு அதிகமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர்கள் 20,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த முகாம் சாணக்யா பள்ளியில் வருகிற 11 ஆம் தேதி காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை முதுகலை படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ, பொறியியல் படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/162301310011 என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

February 01, 2023 0

 

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Transaction Banking Group – CMS Operations / SCF Operations / TReDS Operations, Business Process Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கரூர் வைஸ்யா வங்கி (KVB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

KVB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Transaction Banking Group – CMS Operations / SCF Operations / TReDS Operations, Business Process Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduates or Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

KVB முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 மற்றும் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

KVB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கி தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Personal Interview மற்றும் Medicals மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1
Download Notification PDF 2
Official Site

SSC MTS தேர்வு : அடுத்த 60 நாட்களுக்கு 100க்கும் மேற்பட்ட பயிற்சி வீடியோக்கள் - தமிழ்நாடு அரசு திட்டம்

February 01, 2023 0

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு நாளை அண்மையில் அறிவுத்துள்ளது. ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை.

இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான நேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத் துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சித் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள தனது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தற்போது இந்தச் சீரிய முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அது தனது AIM TN என்ற யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்காக நடத்திய போட்டித் தேர்வுகளுக்கும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A மெயின்ஸ் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து அதன் யூடியூப் சேனல் பதிவேற்றம் செய்து வருகிறது. இம்முயற்சிக்கு மாணவர்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்தவுள்ளது.

தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளிலெல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவிட்டுப்பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டித் தேர்வில் போட்டி போட்டு, வெற்றி பெற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது ATM TN என்ற காணொலிப்பாதையில் (YouTube) பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்யவுள்ளது.

தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news