Agri Info

Adding Green to your Life

February 7, 2023

வங்கி வேலை தேடுபவரா நீங்கள்? Advisor, Consultant பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு! நம்ம தமிழகத்திலே வேலை செய்யலாம்! உடனே இமெயிலில் அப்ளை பண்ணுங்க!

February 07, 2023 0

 SIDBI Recruitment 2023: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E, B.Tech, ICAI, Master Degree படித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அதன் அதிகாரபூர்வ https://www.sidbi.in/en என்ற இணையதளத்திலிருந்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். SIDBI Bank Jobs 2023 வேலைக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 12/02/2023 என்ற இறுதி தேதி முடிவதற்குள் SIDBI Bank Vacancy 2023-க்கு ஆன்லைன் அப்ளை பண்ணலாம்.

நிறுவனத்தின் பெயர்Small Industries Development Bank of India (SIDBI)
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.sidbi.in/
வேலைவாய்ப்பு வகைBank Jobs 2023
பதவிAdvisor, Consultant
கல்வித்தகுதிB.E, B.Tech, ICAI, Master Degree
பணியிடங்கள்Bengaluru, Chennai, Lucknow, Mumbai, New Delhi

SIDBI காலி பணியிடங்கள்:

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் Advisor, Consultant பதவிக்கு 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SIDBI JOBS-க்கான வயது வரம்பு:

SIDBI Vacancyக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35 முதல் 57 வயது வரை இருக்க வேண்டும்.

SIDBI RECRUITMENT 2023 பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ SIDBI இணையதளத்திற்குச் செல்லவும் https://www.sidbi.in
  • தொழில்/விளம்பர (Career/ Advertisement) மெனுவைத் தேடுங்கள்
  • Advisor, Consultant Job Notification என்று தேடி அதில் கிளிக் செய்யவும்
  • SIDBI ஆலோசகர் வேலை அறிவிப்பைப் பதிவிறக்கி பார்க்கவும்
  • உங்கள் தகுதியைச் சரிபார்த்து மேலும் செல்லவும்
  • அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
  • பிறகு ஆவணங்களையும் ஸ்கேன் செய்யவும்
  • விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை 12/02/2023 க்கு முன் recruitment@sidbi.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

SIDBI JOB VACANCY 2023 தேர்வு செய்யப்படும் முறை:

வங்கியில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்பணிக்கு பணியாளர்கள் நேர்க்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

SIDBI RECRUITMENT 2023 IMPORTANT DATES:

SIDBI Bank-ல் பணியாற்ற ஆர்வமுள்ளவங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்க தேதி06-02-2023
கடைசி தேதி12-02-2023

SIDBI JOBS 2023 NOTIFICATION IMPORTANT LINKS:

SIDBI Recruitment 2023 Notification pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆயுஷ் மருத்துவமனைகளில் டாக்டர் வேலை: விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதியே கடைசி நாள்!

February 07, 2023 0

 Govt Jobs: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் [South India Multi-State Agriculture Co-operative Society Ltd -SIMCO] இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இம்மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்19
பணியிட வகைஹோமியோபதி மருத்துவர் -6ஆயுர்வேத மருத்துவர் - 6யுனானி மருத்துவர் - 1யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் - 6
கல்வித் தகுதிB.H.M.S - Bachelor of Homeopathy and Surgery
வயது வரம்பு23 -35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
சம்பளம்15800 - 35500
விண்ணப்ப படிவம்விண்ணப்ப படிவங்களை www.simcoagri.com என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
கடைசி நாள்28.02.2023 மாலை 4.30 PM மணி வரை

விண்ணப்பம் செய்வது எப்படி?  

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்பத்தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTHSTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD. [SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Jobs in Chennai: சென்னையில் அதிகம் வேலைவாய்ப்புகள் தரும் துறைகள் என்னென்ன தெரியுமா?

February 07, 2023 0

 சென்னையில் 2025ம் ஆண்டு  வாக்கில், திறன்வாய்ந்த  (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8  லட்சமாக இருக்கும் என்று (1,84,327) மதிப்படப்படுகிறது. ஆனால், வெறும்  83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வறிக்கை கணிக்கிறது.

சென்னையில் அதிகம் வேலை தரும் துறைகள் என்ன.... இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து இங்கு விளக்கமாக பாப்போம்

சென்னையின் பொருளாதாரம் என்ன?  சென்னை மிகவும் தொழிற்வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் ஒன்று. மாநிலத்தின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 4.8% ஆகும்.

சென்னையின் பொருளாதாரம், பெரிதும் சேவைத் துறையைச் சார்ந்தது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், சேவைத் துறையின் பங்களிப்பு 85% ஆகும். தொழிற்துறையின் பங்களிப்பு 14% ஆகவும்,  வேளாண் துறையின் பங்களிப்பு சற்றேரக்குறைய 1% ஆகவும் உள்ளன.  சென்னை பொருளாதார கட்டமைப்பில் சேவைத் துறையில் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்

துறை வாரியான பங்களிப்பு: வங்கிகள், வணிகப் பணிகள், காப்பீட்டுத் துறை ஆகிய மூன்று துறைகள் மட்டும் சென்னை பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 31% பங்களிப்பை அளிக்கின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளின் பங்களிப்பு 26% ஆக உள்ளன. 


அதிகம் வேலை தரும் துறைகள் என்ன?  மொத்த பணியாளர்களில் கிட்டத்தட்ட 37% பேர் வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை மற்றும் பழுது பார்க்கும் (Transportation, Trade, Repair services) வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்துறையில் 18% பேரும், வங்கிகள், வணிகப் பணிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் 18% பேரும் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாக அமைப்பில் 11% பெரும், கட்டுமானத் துறையில் 7% பெரும் பணி செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

எனவே, சென்னையைப் பொறுத்த வரையில்,  வாகனம் ஓட்டுவது, வியாபாரத் துறை, மற்றும் பழுது பார்க்கும் துறை (Transportation, Trade, Repair services), வங்கிகள் துறை (Banking), தொழிற்துறை ( Manufacturing) ஆகியவை இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் துறைகளாக உள்ளன.

இளைஞர்கள் பற்றாக்குறை:

தமிழ்நாடு அரசின், 2018 திறன் இடைவெளி மதிப்பீடு ஆய்வறிக்கையின் படி, 2025ம் ஆண்டின்  வாக்கில், சென்னையில் திறன்வாய்ந்த  (Skilled/Semi Skilled) பணியாளர்களின் தேவை 1.8  லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வெறும்  83,657 திறன் வாய்ந்த மனித வளங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமான பணிகளுக்கு பணி அமர்த்தப்பட முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2025ல் சென்னையில்,  தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையில் மட்டுமே கிட்டத்தட்ட  48,524 திறன் வாய்ந்த இளைஞர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி துறையில் 23,543 இளைஞர்களும், ரியல் எஸ்டேட் துறையில் 18,013 இளைஞர்களும் தேவைப்படுகின்றனர். எனவே, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களும், புதிய நல்ல வேலைக்கு செல்ல வேண்டி போராடும் இளைஞர்களும் சென்னையின் தொழில் சந்தையின் தன்மை அறிந்து திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

புகைப்பழக்கம் நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் அதிகம் பாதிக்கும் - எச்சரிக்கும் நிபுணர்கள்!

February 07, 2023 0

 புகைப்பழக்கம் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்த தீய பழக்கம் மூளை ஆரோக்கியத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

நமது உடல் உடலை போலவே நமது மூளைக்கும் இயற்கையாகவே வயதாகும் மற்றும் முதுமை அடையும். அதே வேளையில் இது ஒரு குறிப்பிட்ட வயது வரை நடக்க தொடங்குவதில்லை. ஒருவரின் மரபணு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளை பொறுத்து மூளை முதுமையடையும். ஆனால் புகைபழக்கம் என்பது ஒருவரின் மூளையை இயல்பை விட வேகமாக வயதாக்கும் ஒரு சுற்றுச்சூழல் காரணியாக இருக்க கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆபத்தான பழக்கம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான மூளையை பல வழிகளில் பாதிக்கிறது.

பிரெயின் வால்யூம் இழப்பு:

மூளையின் சைஸ் மற்றும் வால்யூம் உள்ளிட்டவை அதிக நுண்ணறிவு மற்றும் சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. புகைப்பிடித்தல் மூளையின் சப்கார்டிகல் பகுதிகளை (subcortical brain region) பாதிக்கிறது. மூளையின் சப்கார்டிகல் பகுதிகள் இன்பம், ஹார்மோன் உற்பத்தி, உணர்ச்சி மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடையவை. புகைப்பிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான மூளை வால்யூம் லாஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.

டிமென்ஷியாவிற்கு காரணமாகும் புகைப்பழக்கம்:

புகைப்பழக்கம் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதற்கு வலுவான சான்றுகள் இருப்பதாக அல்சைமர்ஸ் சொசைட்டி தெரிவித்துள்ளது. புகைப்பிடிக்கும் அனைவருக்கும் டிமென்ஷியா வரும் என்பதில்லை. எனினும் நிகோடின் நுகர்வை படிப்படியாக குறைப்பதன் மூலமும், முழுவதுமாக புகைப்பழக்கத்தை நிறுத்துவதன் மூலமும் டிமென்ஷியா ஆபத்தை ஒருவர் குறைத்து கொள்ளலாம்.

பக்கவாதம் ஏற்படும் அபாயம்:

அதிகமாக புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துகளை World Stroke Organization சுட்டிக்காட்டி இருக்கிறது. புகைப்பழக்கத்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாக அதிகரிப்பதாக இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 20 சிகரெட் பிடிப்பவருக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு புகை பிடிக்காதவர்களை விட 6 மடங்கு அதிகம். ஆயிரக்கணக்கான கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் Tobacco smoke-ல் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்களின் நுரையீரலில் இருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன இந்த கேடு விளைவிக்கும் கெமிக்கல்கள். கெமிக்கல்ஸ் ரத்த ஓட்டத்தில் கலப்பது செல்களை சேதப்படுத்துவதோடு மற்றும் உடல் செயல்படும் விதங்களிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறத்து. இதனால் ரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.

அறிவாற்றலில் பாதிப்புகள்:

டிமென்ஷியா என்பது சிந்திக்கும் திறன், நினைவாற்றல், இயல்பான நடத்தை ஆகியவற்றைப் பாதிக்கும் நிலையாகும். முன்னரே கூறியபடி புகைப்பழக்கம் ஒருவரின் மூளை வயதை துரிதப்படுத்தலாம். இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. தவிர உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற வாஸ்குலர் கண்டிஷன்ஸ் டிமென்ஷியா ஏற்படுவதற்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தூக்கமின்மை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் சிக்கல் உள்ளிட்ட அபாயங்களும் புகைப்பழக்கத்துடன் தொடர்புடையவை. இந்த நிலைமைகளும் டிமென்ஷியா உண்டாகும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிரெயின் கேன்சர்:

புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோய்க்கு மட்டுமல்ல மூளை புற்றுநோய்க்கும் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேக் ஃபாரஸ்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நிகோடின் நுரையீரல் புற்றுநோய் செல்களை மூளைக்குள் மாற்றுவதை ஊக்குவிப்பதை கண்டறிந்துள்ளனர். இவர்கள் தங்கள் ஆய்விற்காக 281 நுரையீரல் கேன்சர் நோயாளிகளை பரிசோதித்தனர். ஆய்வின் முடிவில் புகைப்பிடிப்பவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

மன உறுதியை அதிகரிப்பது எப்படி? - மிக எளிமையான வழிகள்

February 07, 2023 0

 மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன.

முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம்.

இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் மன உறுதியை நீங்கள் நம்பியிருப்பீர்கள். குறுகிய கால தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்கும், தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள் அல்லது தூண்டுதல்களில் சிக்காமல் இருப்பதற்கான திறனை மன உறுதி என உளவியலாளர்கள் வரையறுக்கின்றனர்.

சிலர் மற்றவர்களை விட அதிக மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனி மற்றும் தொலைக்காட்சியின் தூண்டுதல் காரணமாக உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நீங்கள் கைவிடும் சூழலில், பணியில் எவ்வளவு கடினமான சூழல் இருந்தாலும் தவறாமல் உடற்பயிற்சி செய்யக் கூடிய சில அதிர்ஷ்டசாலிகளை நீங்கள் காணலாம்.

சுயக்கட்டுப்பாடு மற்றும் மனக்கவனம் ஆகியவை மனநிலையால் தீர்மானிக்கப்படும் நிலையில், ஆரோக்கியம், திறனாற்றல் மற்றும் மகிழ்ச்சியுடன் அதிக மன உறுதியை உருவாக்குவதற்கான சில சிறந்த உத்திகளை புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

சுயக்கட்டுப்பாடு குறைதல்

சமீபகாலம் வரை நடைமுறையில் இருந்த உளவியல் கோட்பாடு, மன உறுதியை பேட்டரியுடன் ஒப்பிட்டது. நீங்கள் முழு மன உறுதியுடன் ஒரு நாளைத் தொடங்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தையைக் கட்டுப்படுத்தும் போது, அந்த பேட்டரியின் ஆற்றல் குறைகிறது. ஓய்வெடுக்கவோ அல்லது உங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ வாய்ப்பில்லாத போது குறைவான பேட்டரி ஆற்றலிலேயே நீங்கள் இயங்குகிறீகள். இதனால் உங்கள் பொறுமை மற்றும் கவனத்தை பேணுவதும், நீங்கள் தூண்டுதப்படுதலைத் தடுப்பதும் மிகவும் கடினம்.

இது தொடர்பான ஆய்வில் பங்கேற்வர்களிடம் அவர்களைத் தூண்டும் விதமாக மேஜையில் பிஸ்கட்களை வைத்துவிட்டு, அதைச் சாப்பிடாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஒரு சிக்கலான கணிதத்தைத் தீர்க்கும் போது அவர்கள் குறைவான விடாமுயற்சியைக் காட்டினார்கள். ஏனெனில் அவர்களின் மன உறுதி அளவு தீர்ந்து விட்டது. இது சுயக்கட்டுப்பாடு குறைதல் என்று அறியப்படுகிறது. அதிக சுயகட்டுப்பாடு கொண்டவர்கள் ஆரம்பத்தில் அதிக மன உறுதியைக் கொண்டிருக்கலாம். ஆனால் அழுத்தமான சூழலில் இருக்கும் போது அவர்களும் சோர்வடைவார்கள்.

ஆனால், 2010ஆம் ஆண்டு உளவியலாளர் வெரோனிகா ஜாப் இந்த கோட்பாட்டினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டார். சுயக்கட்டுப்பாடு குறைதல் மக்களின் நம்பிக்கைகளை சார்ந்தது என்பது அவரது வாதம்.

வியன்னா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ஜாப், சில கேள்விகள் கொண்ட ஒரு கேள்வித்தாளை வடிவமைத்து, ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அதற்கான பதிலாக 1 (வலுவாக ஒப்புக்கொள்கிறார்கள்) முதல் 6 (கடுமையாக உடன்படவில்லை) என்ற அளவில் மதிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ச்சியான தூண்டுதலை எதிர்கொள்ளும் போது, அதை எதிர்கொள்வது மேலும் கடினமாகிறது.

தீவிரமான மனச் செயல்பாடு உங்கள் ஆற்றலை தீர்ந்துவிடும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் உங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு வலுவான தூண்டுதலை நிராகரித்தால், நீங்கள் பலமடைவீர்கள். மேலும் புதிய தூண்டுதலையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியும்.

உங்கள் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. கடுமையான மன ஆற்றல் செலவழிப்பிற்குப் பிறகும், நீங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

மேற்கண்ட நான்கு கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுடன் ஒத்துப்போனால் வரையறுக்கப்பட்ட அளவில் மன உறுதி உள்ளவராக நீங்கள் கருதப்படுவீர்கள். பிந்தைய இரண்டு கேள்விகளுடன் ஒத்துப்போனால் அளவற்ற மன உறுதி உடையவராகக் கருதப்படுவீர்கள்.

அடுத்ததாக பங்கேற்பாளர்களை மனதின் கவனத்தை பரிசோதிக்கும் சில நிலையான ஆய்வக சோதனைகளில் ஜாப் ஈடுபடுத்தினார். வரம்புக்குட்பட்ட மன உறுதி கொண்டவர்களிடம் சுயக்கட்டுப்பாடு குறைவதை ஜாப் கண்டறிந்தார். அதிக ஆற்றல் தேவைப்படும் ஒரு பணியைச் செய்த பிறகு அடுத்தடுத்த செயல்பாட்டில் கவனம் செலுத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனினும், அளவற்ற மன உறுதி கொண்டவர்களிடம் சுயக் கட்டுப்பாடு குறைவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

மன உறுதி எளிதில் குறைந்துவிடும் என்று அவர்கள் நம்பினால், தூண்டுதலையும் கவனச்சிதறலையும் எதிர்கொள்ளும் திறன் விரைவில் குறைந்துவிடும். ஆனால் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்பும்போது மேலே கூறியது நடந்தது.

சமீபத்திய ஆண்டுகளில் சில விஞ்ஞானிகள் சுயக்கட்டுப்பாடு குறைதல் தொடர்பான ஆய்வக சோதனைகளின் நம்பகத்தன்மையை விவாதத்திற்கு உள்ளாக்கினர். ஆனால் மக்களின் மன உறுதி மனப்பான்மை நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதை ஜாப் நிரூபித்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு வார கால இடைவெளியில் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்வித்தாளுக்கு தினசரி இருமுறை பதிலளிக்குமாறு ஜாப் கேட்டுக் கொண்டார்.

சில நாட்களில் அதிக தேவைகள் இருந்ததால் அவை மாணவர்களைச் சோர்வடைய வழிவகுத்தன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒரே இரவில் அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டனர். ஆனால் வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் கூடுதல் அழுத்தத்தால் உற்சாகமடைந்தது போல, மறுநாள் அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்தது. இது மீண்டும் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் என்ற அவர்களின் நம்பிக்கை யதார்த்தமாகிவிட்டது போல தோன்றியது.

கூடுதல் ஆய்வுகள், தேர்வுகளுக்கு முன்னதாக மாணவர்களின் காலங்கடத்தும் நிலைகளை மன உறுதி மூலம் கணிக்க முடியும் என்று காட்டியது. வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் குறைவான நேரத்தை வீணடித்தனர். தங்கள் கல்வி தொடர்பாக அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வரம்பற்ற மன உறுதி கொண்ட மாணவர்களால் வாழ்க்கையின் பிற பகுதிகளில் தங்கள் சுயக்கட்டுப்பாட்டை சிறப்பாக பராமரிக்க முடிந்தது.

மன உறுதி, உடற்பயிற்சி போன்ற மற்ற விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழக சுகாதார அறிவியல் உதவிப் பேராசிரியர் நவீன் கௌஷல் மற்றும் அவரது சக பணியாளர்கள், உடற்பயிற்சிப் பழக்கத்தை மன உறுதியால் பாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அளவற்ற மன உறுதியை கொண்டவர்களாகக் கருதப்படுபவர்களிடம் உடற்பயிற்சி செய்வதற்கான உந்துதல் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது.

ஃப்ரேசர் வேலி பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ஜோ பிரான்சிஸ் மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க வகையில் இதே மாதிரியான முடிவுகள் கிடைத்தன. 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் மூன்று வாரங்கள் நடந்த ஆய்வில் வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் வரம்புடைய மன உறுதி கொண்டவர்களைவிட உடற்பயிற்சி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதையும், நொறுக்குத்தீனி சாப்பிட குறைந்த ஆர்வம் காட்டுவதையும் அவர் கண்டறிந்தார்.

மன உறுதியை அதிகரித்தல்

நீங்கள் ஏற்கனவே மன உறுதி குறித்த வரம்பற்ற மனநிலை கொண்டிருந்தால், இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு சுய திருப்தியைத் தரலாம். ஆனால், சுயக்கட்டுப்பாடு எளிதில் குறைந்துவிடும் என்ற அனுமானத்தின் கீழ் வாழ்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

இது குறித்து அறிவதன் மூலம் குறைந்த பட்சம் குறுகிய காலத்திலாவது மக்களின் நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று ஜாப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், இந்தக் கட்டுரையை வெறுமனே படிப்பது ஏற்கனவே உங்கள் மன உறுதியை அதிகரிக்கத் தொடங்கியிருக்கலாம். நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் இதை மேலும் மேம்படுத்தலாம்.

மன உறுதியின் வரம்பற்ற தன்மை தொடர்பான பாடங்களை இளம் வயதிலேயே பயிற்றுவிக்கலாம். உடற்பயிற்சி செய்வது சோர்வடைய வைப்பதற்குப் பதிலாக மன உறுதியை அதிகரிக்க உதவும் என்று குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் வகையில் ஸ்டான்போர்ட் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு கதைப் புத்தகத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கதையைக் கேட்ட குழந்தைகள், மனநிறைவை தாமதிக்கும் சோதனையில் மற்ற குழந்தைகளைவிட அதிக சுயக்கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த சோதனையில் பெரிய விருந்தைப் பெறுவதற்கு முன்பாக குழந்தைகள் சிறிய விருந்தைத் துறக்க வைக்கப்பட்டனர்.

முழு மனநிறைவுடன் நீங்கள் செயல்பட்ட நேரத்தை நினைவில் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான ஒரு பயனுள்ள உத்தி. உதாரணமாக அது உங்களது அலுவலகப் பணியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு கடினமாக தெரிந்தது உங்களுக்கு திருப்தி தரக் கூடியதாக இருக்கலாம். அல்லது, இது உங்களுக்குப் பிடித்த ஏதேனும் பொழுதுபோக்காகவும் இருக்கலாம்.

இந்த வகையான நினைவூட்டலில் ஈடுபடுவது மக்களின் நம்பிக்கைகளை இயற்கையாகவே வரம்பற்ற மனநிலைக்கு மாற்றுவதாக ஒரு சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது.

உங்கள் வாழ்க்கையில் விரும்பிய மாற்றத்தை கொண்டு வரும் சிறிய சுயக்கட்டுப்பாட்டு சோதனையுடன் இதை நீங்கள் தொடங்கலாம். சில வாரங்களுக்கு நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்ப்பது, நீங்கள் வேலை செய்யும் போது சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருப்பது அல்லது எரிச்சலூட்டும் உங்கள் அன்புக்குரியவருடன் பொறுமையைக் கடைபிடிப்பது போன்ற சுயக்கட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் தொடங்கலாம்.

மன உறுதி அதிகரிக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்தவுடன், மற்ற வகையான தூண்டுதல்கள் அல்லது கவனச்சிதறல்களை நீங்கள் எளிதாக எதிர்கொள்வதைக் காண முடியும்.

உடனடியாக அற்புதங்கள் நிகழ வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. விடாமுயற்சியுடன் உங்கள் மனநிலை மாறுவதை நீங்கள் காண வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் யோகா செய்ய கஷ்டமா இருக்கா? இவற்றை முயற்சி செய்து பாருங்களேன்!

February 07, 2023 0

 ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, யோகா என்பது நம் நாட்டின் பாரம்பரியமாக, அறிவியலாக மற்றும் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. நமது உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை மேம்படுத்தும் வழிமுறைகளை கொண்டதாக இருக்கும் யோகா உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

யோகா என்பது முழு உடல் பயிற்சியாக செயல்படுகிறது. யோகா ஒரு சக்திவாய்ந்த பாரம்பரிய கருவியாகும், இது நெகிழ்ச்சியை உருவாக்கி, மனதை சமநிலை படுத்த உதவுகிறது மேலும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இத்தகைய யோகா கலையை அனைவரும் கடைபிடிக்கிறோமா என்றால் அது இல்லை காரணம், மாறிப்போன நம் அன்றாட வாழ்க்கை முறை. கூடுதல் பணிச்சுமை, இரவுப்பணி, வேலைக்கு அதிக தூரம் சென்றுவருவது போன்ற காரணங்களால் நம்மில் பலர் யோகா போன்ற உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்க மறுத்து, இன்றைய கால சூழலில் வயது வித்தியாசம் இன்றி வரும் பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறோம். எனவே உங்கள் தினசரி வழக்கத்தில் யோகாவைச் சேர்ப்பது சில நேரங்களில் கடினமாக இருந்தால், அதை தொடர்ந்து செய்ய உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முறையான யோகா வகுப்பில் சேரலாம் : யோகா வகுப்புக்கு செல்ல நீங்கள் பதிவுசெய்தவுடன், உங்கள் யோகா பயிற்சிகளில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். உங்கள் யோகா பயிற்றுவிப்பாளரிடம் உங்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு வகுப்பின் நேரத்தை மாற்றியமைக்க கேட்கலாம். இதனால் நீங்கள் எந்த வகுப்பையும் தவறவிடாது தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முன்கூட்டியே திட்டமிடுதல் : உங்கள் வேலை நேர அட்டவணை மற்றும் பிற பொறுப்புகளுக்கு ஏற்றவாறு, உங்கள் யோகா அமர்வுகளை காலை அல்லது மாலையில் செய்ய திட்டமிடுங்கள். நீங்கள் ஏற்கனவே செய்யும் உடற்பயிற்சியில் யோகா செய்வதற்கான நேரத்தை சேர்க்க முயற்சிக்கவும். உங்கள் நாளில் எப்போது யோகா பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக ஒன்றைத் தொடங்கும்போது, ​​முன்கூட்டியே உங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது முக்கியம்.

யோகா செய்ய நேரம் ஒதுக்குங்கள் : ஒரு பழக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையானது நிலைத்தன்மையே. எனவே, இரண்டு வாரங்கள் தொடர்ந்து யோகாவிற்கு நேரம் கிடைத்தால், அது நாளடைவில் நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறும். எனவே யோகாசனங்களைப் பயிற்சி செய்ய ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். காலையிலோ, மதிய உணவு இடைவேளையிலோ அல்லது மாலையிலோ தொடங்கலாம்.

அமர்ந்தவாறு வேலை செய்பவர்கள் : நீங்கள் நாள் முழுவதும் ஒரு மேசையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தாலும் சரி உங்கள் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் வேலையை பார்த்துகொண்டே நீங்கள் யோகா செய்ய பல்வேறு போஸ்கள் உள்ளன. யோகாவில், பூனை போல் அமர்ந்து செய்யும் யோகா முதுகெலும்புகளை வலுவாக்கும் மேலும் இது உங்கள் முதுகில் தோன்றும் வலியை கட்டுப்படுத்துகிறது. நின்று கொண்டு எளிதாக செய்யக்கூடிய யோகா போஸ்களையும் நீங்கள் முயற்சி செய்து, பணியில் இருந்தவாறு கூட யோகா பயிற்சிகளை தொடங்கலாம்.

சந்தோஷமாகவும் ஈடுபாட்டுடன் செய்வது : யோகா செய்வதை சுவாரஸ்யமாக மாற்றுவது சிறந்தது. நீங்கள் யோகாவை மிகவும் வேடிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் செய்தால், அது உங்களுக்கு ஒரு கட்டாயப்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தாது. யோகா பயிற்சியை அனுபவித்து, உங்கள் உடல் மற்றும் மனநிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிலைகளில் யோகாவை செய்வதன் மூலம் சளிப்படையமாட்டீர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

February 6, 2023

காஃபி குடித்துவிட்டு மாத்திரை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?

February 06, 2023 0

 ஒரு குவளை காஃபி இல்லாமல் ஒரு நாளைத் தொடங்குவது என்பது நம்மில் பலராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால், சில மருந்துகளை காஃபின் கொண்ட திரவங்களுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காஃபினுடன் எதிர்வினையாற்றக் கூடிய வகையில் ஏறக்குறைய 60 மருந்துகள் இருப்பதாகக் கூறுகிறார் மாட்ரிட்டின் தன்னாட்சி பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியரான அன்டோனியோ ஜேவியர் கார்காஸ் சான்சுவான். எனினும், இந்த எதிர்வினைகள் மிதமானவை என்றும் அவர் கூறுகிறார்.

நாம் உட்கொள்ளும் மருந்து உடலுக்குள் பயணித்து வயிறு மற்றும் குடலை அடைகிறது. அங்கிருந்து ரத்தத்தில் கலந்து முழு உடலுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.

"ஒரு மருந்து எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைய உரிய இடத்திற்கு செல்ல வேண்டும்" என்கிறார் நவர்ரா பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியரான எலினா புஏர்டா ரூயிஸ் டி அசுவா.

ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புள்ளியாக அந்த இலக்கை நினைத்துப் பாருங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து அந்தப் புள்ளியில் அதன் விளைவை ஏற்படுத்தும்.

அதற்கு அந்த மருந்து முழுமையாக உறிஞ்சப்பட்டு உடல் முழுவதும் திறம்பட விநியோகிக்கப்பட வேண்டும். மருந்தின் இந்தப் பயணத்தோடு காஃபின் கலந்தால் என்ன நடக்கும் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் அதன் பயன்பாடைப் பொறுத்தது.

மூளையில் ஏற்படும் விளைவு

காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது. மயக்கம் அல்லது அமைதிப்படுத்தும் தன்மை கொண்ட மருந்தோடு காபி அல்லது காஃபின் கொண்ட பானம் கலப்பது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இவை இரண்டும் எதிர்விளைவுகள் கொண்டவை. உதாரணமாக, கவலை மற்றும் தூக்கமின்மைக்கு பயன்படுத்தும் பென்சோடியாசெபைன்கள் வகை மருந்துகளை காஃபியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது. "மருந்து மூளையைச் சென்றடையும் அதே நேரத்தில் காஃபினும் மூளையை அடையும்" என்கிறார் புஏர்டா. பின்னர் நீங்கள் ஒருபுறம் காஃபினின் தூண்டலையும், மறுபுறம் மருந்தின் செயலையும் பெறுவீர்கள் எனக் கூறும் புஏர்டா, காபி அல்லது கோலாவில் உள்ள மூலக்கூறுகள் மருந்துகள் என்ன செய்ய முயல்கின்றனவோ அதற்கு நேர்மாறாக செயல்படும் என்கிறார்.

கல்லீரலில் ஏற்படும் விளைவு.

கல்லீரலில் காஃபின் சிதைவடைய என்ன நொதியைப் பயன்படுத்துமோ அதே நொதியை சில மருந்துகள் பயன்படுத்தும். இதனால் கல்லீரல் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்பட்டு உடலில் தேவையான அளவைவிட அதிக அளவில் மருந்துகள் சேர வாய்ப்புகள் உள்ளன. "சில மருந்துகளுக்கு பிளாஸ்மா செறிவு அதிகரிப்பு பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஸ்கிசோஃப்ரினியா போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மருந்தின் செறிவு சரியாக இருப்பது அவசியம். இந்த மாற்றம் ஆபத்தை ஏற்படுத்தும்" என எச்சரிக்கிறார் புஏர்டா. மருந்தின் வீரியத்தை அதிகரித்தோ அல்லது குறைத்தோ மருந்தின் செயல்பாட்டில் காஃபினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் பேராசிரியர் கார்காஸ். இந்த செயல்முறைக்கு காரணமான நொதியின் செயல்பாட்டைத் தடுத்து காஃபினின் வளர்சிதை மாற்றத்தை தடுக்கும் சில மருந்துகளும் உள்ளன.

குயினோலோன்ஸ் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பு (antibiotics ) மருந்துகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ’’இத்தகைய மருந்துகளை காஃபினின் வளர்சிதை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதால் உடலில் இருக்கும் காஃபினின் அளவு அதிகரிக்கிறது. இதனால் காஃபினின் விளைவுகள் அதிகமாக இருக்கும்’’ என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.

உறிஞ்சப்படுதலில் சிக்கல்

ஹைப்போ தைராய்டிற்கான மருந்து போன்ற சில மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. "உணவு அல்லது காஃபி உட்கொள்ளாமல் தைராக்ஸினை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது அவசியம். குடலில் மருந்து முழுமையாக உறிஞ்சப்படுவதற்கு ஏதுவாக காலை உணவை தள்ளிவைக்க வேண்டும். அதன் மூலம் நம் உடலில் ஹார்மோன்கள் உரிய அளவை எட்டுகின்றன’’என்கிறார் புஏர்டா. வயிறு மற்றும் குடலில் உணவு இருப்பது சில மருந்துகள் உறிஞ்சப்படுவதற்கு தடங்கலாக இருக்கலாம். ’’பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்தாலும் நம் உடல் முழுமையாக அவற்றை உறிஞ்சவில்லை என்றால் உரிய பலன் கிடைக்காது’’ என்கிறார் புஏர்டா.

காஃபியில் பால் பொருட்கள்

நீங்கள் அருந்தும் காஃபியில் காஃபின் குறைவு, பால்தான் அதிகம் என்று நினைக்காதீர்கள். ஆன்டிபயாடிக் டெட்ராசைக்ளின் பாலுடன் சிக்கலாக வினைபுரிந்து, பால் உறிஞ்சப்படுதலைத் தடுப்பதாகக் கூறுகிறார் புவேர்டா. இந்த சிக்கல், இரைப்பை மற்றும் ரத்தத்தில் மருந்து உறிஞ்சப்படாமல் மலமாக வெளியேறும் வரை முழு செரிமான மண்டலத்திலும் நீடிப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளை பால் பொருட்களுடன் உட்கொண்டால், அவை கால்சியத்துடன் கலந்து செலேட்டுகள் எனும் கலவையை உருவாக்குகிறது. செலேட்டுகள் குடலில் உறிஞ்சப்படாது. எனவே உட்கொண்ட மருந்தால் உடலுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. சில மருந்துகளின் உறிஞ்சுதலை கோலா பானங்களும் பாதிக்கலாம் என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.

வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்

மத்திய நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால் காஃபி அருந்துவது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுறையைப் பின்பற்றுவது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம் எனக் கூறும் புஏர்டா, வீட்டில் உருவாக்கப்படும் மருந்துகளை மறந்துவிடுங்கள், ஒரு மருந்தை தண்ணீரில் கரைக்க வேண்டும் என்றால் தண்ணீரில் மட்டுமே கரைக்க வேண்டும், அதை பழச்சாறு அல்லது பிற திரவத்தில் கரைக்கக் கூடாது என்கிறார். காஃபியுடன் எடுத்துக் கொள்வதால் எந்தப் பிரச்னையும் இல்லாத மருந்துகளும் உள்ளன. எனவே ஒவ்வொரு மருந்தை எடுத்துக் கொள்ளும் போதும் அது குறித்து மருத்துவர்களிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ’’பொதுவாகவே, காஃபியை மிதமான அளவில் அருந்துவது முக்கியம்’’ என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

February 06, 2023 0

 

இரவில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

ஏதேனும் சில வேலைகள் காரணமாக நாம் இரவில் தாமதாக உறங்க செல்லலாம், அப்படி தாமதாக தூங்கி அடுத்த நாள் நாம் எழும்போது தலைவலி அல்லது உடல்சோர்வுடன் காணப்படுவோம்.  சரியான அளவு நாம் தூங்காவிட்டால் பலவிதமான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.  போதுமான தூக்கம் இல்லாவிட்டால் டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உருவாகும்.  மேலும் தூக்கமின்மை காரணமாக, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை பெற வேண்டியது அவசியம். போதுமான அளவு தூங்குவதால் மறுநாள் நீங்கள் புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள் மற்றும் உங்கள் மனநிலை மேம்படும்.  தினசரி நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டுமானால் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.   

1) இரவில் நல்ல தூக்கத்தை பெற சில உடற்பயிற்சிகள் உதவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது.  ஒரு நபர் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அல்லது 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

2) நீங்கள் அதிக எடையுடன் இருப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும், உங்கள் எடையை 10 சதவிகிதம் மட்டுமே குறைப்பது உங்கள் இரத்த சர்க்கரையின் நிர்வாகத்தை மேம்படுத்தும், அத்துடன் மனச்சோர்வு மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும். 

3) புரதம் நிறைந்த வேறு எந்த சப்ளிமெண்ட்களையும் சேர்க்காமல் இயற்கையிலேயே புரதசத்து நிறைந்த கோழி, முட்டை, கடல் உணவுகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.  நாள் முழுவதும் புரதத்தை தவறாமல் உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். 

4) தொலைக்காட்சிகள், தொலைபேசிகள், டேப்லெட்டுகள், ரேடியோக்கள் மற்றும் கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து அதிக வெளிச்சம் உங்களைத் தூங்கவிடாமல் தடுக்கலாம்.  எனவே உங்கள் மொபைலை படுக்கைக்கு அருகில் வைத்திருந்தால், அவசர அழைப்புகளுக்கு மட்டுமே அதனை பயன்படுத்துங்கள். 

5) சைரன் ஒலி, நாய் குரைக்கும் சத்தம் அல்லது மிகவும் சத்தமாக இருக்கும் தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் ஒருவரின் தூக்கம் பாதிக்கும்.  இரைச்சல் இல்லாமல் அமைதியான இடத்தில் தூங்க வேண்டியது அவசியம். 

6) 75 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் அல்லது 54 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்குக் கீழே வெப்பநிலை உள்ள அறையில் உறங்குவது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும்.  நிபுணர்களின் கூற்றுப்படி, 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் (சுமார் 20 டிகிரி செல்சியஸ்) வரை இருக்கும், அறை தான் தூங்குவதற்கான சரியான வெப்பநிலை என்று கூறப்படுகிறது, அதேசமயம் சற்று குளிரான சூழல் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது. 

7)  நிம்மதியான உறக்கத்தை பெற ஒரு நல்ல தலையணை மற்றும் மெத்தையை எடுத்துக் கொள்ளுங்கள். உட்புற வெப்பநிலை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கக்கூடாது.  மேலும் இயற்கை மற்றும் செயற்கை ஒளி அளவை குறைந்தபட்சமாக வைத்திருங்கள். 

8) 71% சதவீதம் பேர் புதிதாக சலவை செய்யப்பட்ட துணிகளில் நன்றாக தூங்குவதாக தெரிவிக்கின்றனர், நீங்கள் இரவில் நல்ல தூக்கத்தை பெற ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் மற்றும் லாவெண்டர் அல்லது கெமோமில் போன்ற அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை நிரப்பி, படுக்கையில் தெளிக்கவும்.  அந்த நறுமணங்கள் உங்களுக்கு நல்ல தரமான தூக்கத்தை கொடுக்கும்.
 
9) கழுத்து மற்றும் முதுகுவலியைத் தவிர்க்க, முழங்கால்களுக்குக் கீழே கூடுதல் தலையணையையும், கீழ் முதுகின் கீழ் ஒரு சிறிய தலையணையை வைக்க பரிந்துரைக்கப்படுகிறது,  அதே சமயம் பக்கவாட்டில் தூங்குபவர்கள் தங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஒரு தட்டையான குஷனை வைக்க வேண்டும்.  இப்படி சில சௌகரியமான ஏற்பாடுகளை செய்து தூங்குவது நிம்மதியான தூக்கத்தை பெற உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் வரும் ஏப்பம்... குணப்படுத்துவது எப்படி?

February 06, 2023 0

 வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும். 

வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடும்போது செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் மற்றும் சித்த மருந்துகள் பற்றி பார்ப்போம்.

1) மோருடன் பெருங்காயம், சீரகம், சேர்த்து குடிக்க வேண்டும், 
2) காலை-இரவு நேரத்தில் சீரகத்தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும், 
3) சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும். 

காலை, மதியம் வேளைகளில் சாப்பிட்ட உடன் ஒரு குறுநடை நடந்த பின்னர் தான் உட்கார வேண்டும். இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சினைகளுக்கு சிறந்தது. உணவில் மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.