Agri Info

Adding Green to your Life

February 12, 2023

11 ஆயிரம் காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க!

February 12, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், குரூப் 4  குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பை பெறத் துடிக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டில் நல்ல அரசு வேலையில் அமர்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குரூப் 2, 2ஏ,4 தேர்வர்கள் கொஞ்சம் மனது வைத்தால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வெற்றி பெறலாம். இதுநாள் வரையில், நீங்கள் பெற்றிராத நல்லதொரு வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது.

என்ன வாய்ப்பு: 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான, விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (17ம் தேதி) நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெருமாபாலான தேர்வர்களுக்கு இந்தத் தேர்வு பற்றிய பெரிய விழிப்புணர்வு இருப்பதாய் தெரியவில்லை. குறைவானவர்கள் மட்டுமே மத்திய அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இதற்கு, முக்கிய காரணம் இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில் மட்டுமே இந்த தேர்வு இதுநாள் வரை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு அரசும், மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தைஅடுத்து, தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற் திறன் தேர்வில்  (Physical Efficiency Test) கலந்து கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழித் திறனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: பொது விழிப்புணர்வு (General Awareness), கணித அறிவு (Numerical and Mathematical Ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.  ஆங்கில மொழித்திறன் பகுதிக்கு மட்டும் சற்று அதிகபட்ச முன்னுரிமை தந்தால், இந்த தேர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலவச பயிற்சி உண்டு: 

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, இந்த SSC பணியிடத்திற்கு Youtube (aimtn)காணொலி வகுப்புகளை அறிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி மாவட்டத்தில் இலவச வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சி..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

February 12, 2023 0

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் (Agricultural Machinery-Repair and Maintenance Service) பயிற்சிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமார்   தெரிவித்தாா்.

இதுகுறித்து,அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் “வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர்" என்ற பயிற்சி திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளதுஇந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மை பொறியியல் துறை, எண் : 20 வ.உ.சி சாலை, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 620001 என்ற முகவரிக்கு வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ். வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

மேலும் தொடர்புக்கு 97915-40901, 98424-76576, 80568-41434. என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 11, 2023

இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்..!

February 11, 2023 0

 முந்திரி பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் காப்பர் போன்ற பல அத்தியாவசிய மினரல்ஸ் நிறைந்திருப்பதால் அவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. தவிர முந்திரியில் வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் தியாமின் (thiamine) நிறைந்திருப்பதால் தினமும் இவற்றை சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பொதுவாகவே முந்திரியை இனிப்புகளில் சேர்த்துக்கொள்வார்கள்.  சில சமயங்களில் கிரேவிக்களிலும் சேர்த்து கொள்கிறார்கள். இதுவரை அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம்களை ஊறவைத்து சாப்பிடுவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முந்திரியையும் ஊற வைத்தது சாப்பிடலாம் என்பது தெரியுமா..? பாலில் ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

முதல் நாள் இரவு ஒரு கிளாஸ் பாலில் 3 - 5 முந்திரிகளை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை முந்திரியை பாலில் நன்கு வேக வைக்கவும். வேக வைத்த பின் அடுப்பை அணைத்து விட்டு பாலில் இருக்கும் முந்திரியை மென்று சாப்பிட்டு பாலையும் குடித்து விடுங்கள். அதிகபட்சம் 5 முந்திரிகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். பால், முந்திரி இரண்டிலுமே கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதால் எடையை அதிகரிக்க கூடும். எனவே மிதமான அளவு முந்திரி எடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

உறுதியான எலும்புகள்  : இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரி பருப்புகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலுவடையும். பாலில் கால்சியம் சத்து அதிகம் என்பது நமக்கு தெரிந்ததே. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அனைத்தும் எலும்புகளை வலுவாக்கும், மேலும் மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரும். வயதானவர்கள் தங்களுக்கு மூட்டு மற்றும் எலும்பு வலி வராமல் இருக்க முந்திரிகளை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மலச்சிக்கலை போக்குகிறது  : தற்போதைய காலகட்டத்தில் மலச்சிக்கல் மிக பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடலாம். முந்திரியில் காணப்படும் ஃபைபர் சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும். இரவில் முந்திரிகளை பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் வயிறு எளிதில் சுத்தமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது  : பாலில் ஊறவைத்த முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எப்படி என்றால் பால் மற்றும் முந்திரி என இரண்டிலுமே ஏராளமான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவற்றை சேர்த்து சாப்பிடும் போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாலில் ஊறவைத்த முந்திரி சாப்பிடுவது நோய்களை எளிதில் அண்டாமல் பார்த்து கொள்ளும்.

ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து பாதுகாப்பு  : முந்திரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் காணப்படுகின்றன. எனவே பாலில் ஊறவைத்த முந்திரிகளை தினசரி சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அழிக்கும். இதனால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் நம் உடல் காப்பாற்றப்படும். உடலையும், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் பாலில் ஊற வைத்த முந்திரியை தினசரி உட்கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நரம்புகள் சுருட்டிக்கொள்ளும் ’வெரிகோஸ் வெயின்’ பாதிப்பு ஏன் உண்டாகிறது..? தவிர்க்கும் வழிகள் என்ன..?

February 11, 2023 0

 நரம்புகளின் சுவர்கள் சேதமடையும் போது நரம்பு நோய் ஏற்படுகிறது மற்றும் இரத்த ஓட்ட அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உங்கள் கால் தொடைக்கு கீழ் பகுதியிலோ, முட்டி காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சி போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

2/ 7

இதனால், கால் பகுதியில் கால் வலி, முழங்கால் குடைச்சல் போன்ற உணர்வு ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். எனவே, கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.


வெரிகொஸ் வெயின்ஸ் : தோலில் உட்புறத்தில், ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதை காண முடியும், கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல், பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் வெரிகோஸ் வெயின்ஸ் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல, அவை வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.


வெரிகொஸ் வெயின்ஸ் ஏற்பட காரணம் : அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்து கொண்டிருப்பது, அசைவற்று ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இரத்தம் உங்கள் கால்களில் தேங்கி நிற்கும். இது உங்கள் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


வெரிகோஸ் வெயின்ஸ் சிக்கல்களை ஏற்படுத்துமா? : வெரிகோஸ் வெயின்ஸ் ஒரு தீவிர மருத்துவ நிலையாக கருதப்படவில்லை என்றாலும், கடுமையான, தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கத்துடன் இருந்தால் அவை சிக்கல்களை ஏற்படுத்தும். நரம்புகளுக்கு அருகில் தோலில் உருவாகும் புண்கள், இரத்த உறைவு மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை கடுமையான சிக்கல்களாக இருக்கலாம். எப்போதாவது, தோலுக்கு அருகில் உள்ள நரம்புகள் வெடிக்கும். இது பொதுவாக சிறிய இரத்தப்போக்கு மட்டுமே ஏற்படுத்துகிறது என்றாலும், அதற்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.


வெரிகோஸ் வெயின்ஸ் வலியை எவ்வாறு சமாளிப்பது? : உடற்பயிற்சி, உட்கார்ந்து அல்லது படுக்கும்போது கால்களை உயர்த்துவது போன்ற செயல்களால் வெரிகோஸ் வெயின்ஸ் வலியை சமாளிக்கலாம். காலுறைகளைப் பயன்படுத்துவது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். கோடை காலத்தில் இந்த காலுறைகளை ஒருவர் பயன்படுத்தினால், அவை அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும். ஆனால், குளிர்ச்சியான நாட்களில், காலுறைகளால் காணப்படும் வெப்பம் சங்கடமானதாகவோ அல்லது தாங்க முடியாததாகவோ இருக்காது.

பிற பொதுவான காரணங்கள் : வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் இந்நோய் வர அதிக வாய்ப்புண்டு. கருவுற்று இருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே பெரும்பாலான தாய்மார்களுக்கு இந்நோய் வருகிறது. பொதுவாக மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடல் பருமன் போன்ற காரணங்களாலும் இந்த நோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உட்கார்ந்து எழுந்தாலே முட்டி வலிக்குதா..? நிவாரணம் தரும் இந்த பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள்..!

February 11, 2023 0

 

சமீப காலமாக பலரையும் கீல்வாதம் என்று கூறப்படும் ஆர்த்தரைடிஸ் நோய் பாதித்து வருகிறது. மூட்டுகளில் வீக்கம், தேய்மானம், வலி, தசை பலவீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆர்த்தரைடிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. நோய் என்று கூறுவதை விட, இதை குறைபாடு என்று கூறலாம். முழங்கால் வாதம், வீக்கம் என்று வந்தாலே, அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்த்தரைடிஸ், அவர்கள் உட்கார்ந்து எழுந்தால் கூட தீவிரமான வலியை ஏற்படுத்தும். எனவே, ஆர்த்தரைட்டிஸ் வந்தாலே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குறைபாட்டுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. உணவுக் கட்டுப்பாடு, ஃபிசிகல் தெரபி முதல் வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல், ஆர்த்தரைடிஸ் குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பு மற்றும் கட்டுப்பாடு  : அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கால்கள், கால் மூட்டுகள் மீது அதிக அழுத்தம் கொடுக்கும், அது கீல்வாதத்தை தீவிரமாக்கும். எனவே, ஆர்த்தரைடிசால் பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கன்சர்வேட்டிவ் சிகிச்சைகள்  : ஃபிசிக்கல் தெரபி : முழங்கால் மூட்டுவலி சிகிச்சைக்கு லேசர் சிகிச்சை, காந்தவியல் சிகிச்சை மற்றும் வைப்ரேஷனல் எனர்ஜி சிகிச்சை உள்ளிட்ட பல விதமான சிகிச்சைகள் வலி நிவாரணம் அளிக்கிறது.

உடற்பயிற்சி : முழங்கால் வலி, மூட்டு வலி இருப்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வீட்டிலேயே கூட செய்யக்கூடிய தெரப்யூடிக் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

மனம் மற்றும் உடல் ஒருங்கிணையும் பயிற்சிகள்  : மூட்டு கீல்வாதம் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, மனம் மற்றும் உடல் ஒருங்கிணைந்து செய்யும் பயிற்சிகளான யோகா, லேசான ஏரோபிக்ஸ், தியானம் ஆகியவற்றையும் சிகிச்சையாக மேற்கொள்ளலாம்.

ஏரோபிக் உடற்பயிற்சிகள் : வலியைக் குறைப்பதற்கும், முழங்கால் கீல்வாதம் உள்ளவர்களின் உடல் ரீதியாக செயல்படவும், சாதாரணமாக இயங்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏரோபிக் பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

Hydrokinesitherapy ஹைட்ரோ-கெனிசிஸ் மற்றும் பால்னியோதெரபி உள்ளிட்ட தேரபிகள் வலி நிவாரணம், வலிமையாக்குவது, அழற்சியைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள்: முறையான பயிற்றுனரிடம் அல்லது ஃபிசியோதெரபிஸ்ட் இடம், தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளை பெறலாம். ஒவ்வொரு நபரின் பாதிப்புக்கு ஏற்ற அளவுக்கு பயிற்சிகள் மாறுபடும்.

உள்-மூட்டு ஊசிகள்: ஹையலூரோனிக் அமிலம், கார்டிகோஸ்டீராய்டுகள் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா ஆகியவற்றை மூட்டுக்குள் செலுத்துவது மாற்று சிகிச்சையாகக் கருதப்படுகிறது.குருத்தெலும்பு சேதத்தை குறைக்கும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையில் உட்கொள்ளலாம்.

அக்குபஞ்சர்:, முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உடனடியாக வலியில் இருந்து நிவாரணம் பெற அக்குபஞ்சர் பயன்படுத்தலாம். ஆனால், இது எவ்வளவு நாட்களுக்கு பலன் அளிக்கும், எந்த அளவுக்கு நம்பகமானது என்பதற்கு சான்றுகள் இல்லை.

அறுவை சிகிச்சையை தவிர்க்க வேண்டும் ஆனால் தீவிரமான பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணியாக ஓபியாய்டுகள், வலி குறைக்க மூட்டுகளில் பூசப்படும் கிரீம், ஜெல் போன்றவை பரிந்துரைக்கப்படும்.நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக், ஊன்றுகோல், மூட்டுகளுக்கான பிரேஸ்கள் ஆகியவை சப்போர்ட்டாக இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இட்லி, தோசை மாவு தயாரிக்கும் தொழில்... பதிவு முதல் விற்பனை வரை - முழுமையான வழிகாட்டல்!

February 11, 2023 0

 தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான். தற்போதையக் காலகட்டத்தில் பிரபலமான உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய அளவில் தொடங்கிப் போராடி உலகளவில் சாதனைப் படைத்தவர்கள் தான். அந்த அளவிற்கு உணவு தொழில்களுக்கான சந்தை அதிகமாக இருக்கிறது.

அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது. முதல் கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். சிறிய முதலீட்டில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் தரும் தொழில் இது. செலவிடும் நேரம், முதலீடு மற்றும் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறலாம். குறிப்பாக தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படாமல் தினமும் லாபம் பார்க்கலாம். இட்லி தோசை மாவு தொழில் தொடங்க தேவையான விவரங்களைப் பார்க்கலாம்.

இட்லி தோசை மாவு தொழில் தொடங்குவது எப்படி?

நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். உங்கள் ஏரியாவில் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இட்லி தோசை மாவு அரைத்து கடைகளில் சம்பளை செய்ய அல்லது பெரிய சூப்பர்மார்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு :

குறைந்தளவு முதலீடு என்றால் சுமார் 2 இருந்து 3 லட்சம் வரை ஆகும். வியாபாரம் என்றால் அதற்கு ஏற்ற வேகம் தேவை. அதற்காக மாவு அரைக்க Instant Wet Grinder என்ற இயந்திரத்தை வாங்க வேண்டும். இந்த இயந்திரம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை வரும். அதனைத் தொடர்ந்து, சில பாத்திரங்கள் வாங்க வேண்டும். இது இல்லாமல் தின அரிசி, உளுந்து போன்ற பொருட்கள் வாங்க வேண்டும். மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.

தொழிலைப் பதிவு செய்வது எப்படி?

இட்லி தோசை மாவு அரைக்கும் தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்குவதால் சிறுதொழில்களில் இடம்பெறும். எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அடிப்படையில் வழங்கப்படும் Udyog Aadhar சான்றிதழைப் பதிவு செய்து பெற வேண்டும். தொடர்ந்து, உங்கள் பகுதி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கைத்தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் லைசென்ஸ் பெறவேண்டும். மேலும் தொழில் வரி செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இல்லாமல் GST வரிக்குப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க உதவும்.

வங்கிக் கடன் வாங்குவது எப்படி?

MSME பதிவாக நீங்கள் வாங்கும் Udyog Aadhar சான்றிதழ் இருப்பதால் வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிமையானது. தொழில்முனைவோர்களுக்கான வங்கிக் கடன்களில் இருக்கின்ற சலுகைகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மேல் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்று உள்ளீர்கள் என்றால் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தி பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

இட்லி தோசை மாவு தாயார் செய்வது எப்படி?

வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்குத் தரமும் மிகவும் முக்கியம். அதனால் தரமான இட்லி அரிசி, உளுந்தைப் பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம்.

அரைக்கும் முறை : 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும். அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.

பேக்கிங் முறை :

அரைந்த மாவை பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. தரமான அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கவர்களை பயன்படுத்த வேண்டும். உணவு காலாவதியாகும் நேரம், உற்பத்தி செய்யப்பட்ட நேரம் போன்றவற்றை பேக்கிங் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண Sealing Machine இயந்திரத்தை பேக்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

விநோக்கிக்கும் முறை:

தாயாராக உள்ள மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம். பெரிய அளவிலான சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

லாபம்:

ஒரு நாளைக்கு 2,000 ஆயிரம் வரை செலவு செய்தால் சுமார் 4,000 முதல் 5,000 வரை லாபம் பெறலாம். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

February 11, 2023 0

 Anganwadi Jobs updates: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில்  1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி சேவைகள்  : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940  குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம்  54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள்12.7.2018  அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள்30.06.2022 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள்
அங்கன்வாடி பணியாளர் - 54,43949,10944,628
அங்கன்வாடி உதவியாளர்  49,49943, 95440,036

கடந்த 2019ம் ஆண்டு, இதேபோன்று எழுப்பப்பட்ட போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில்  49,109 அங்கன்வாடி பணியாளர்கள்  பணியிடங்களும், 43, 954 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்.


முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பொது மாறுதல் மூலம் கலந்தாய்வு நடத்திட வேண்டும், பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.75,000 வரை சம்பளம்.. மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் 54 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

February 11, 2023 0

 தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தின் புதிய திட்டத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகள் தற்காலிக அடிப்படையில் 12 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 23.02.2023 தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Program Officer –Community Mobilization1ரூ.75,000
Program Officer –Information, Education andCommunication(IEC)1ரூ.75,000
Program OfficerPartnership Development1ரூ.75,000
Program Officer –Accessibility1ரூ.75,000
Data Analyst1ரூ.30,000
Senior Accountant1ரூ.30,000
District Program Officer –Community Services12ரூ.40,000
District Program Officer –Partnership Development and Convergence10ரூ.40,000
District Program Officer –Training10ரூ.40,000
Accountant15ரூ.25,000

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Program Officer –Community Mobilizationsocial policy/work,rural development,development studies,public policy,public administration பிரிவுகளில் முதுகலைப் பட்டம்/இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்/ Rehabilitation Sciences பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் / Community Based Rehabilitation பிரிவு அல்லது அதற்கு நிகரான பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 3-5 வருட அனுபவம் தேவை.
Program Officer –Information, Education andCommunication(IEC)social research/economics/ rural management/ development studies/ public policy/public administration பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Program OfficerPartnership Developmentsocial work/ research/economics/ rural management/development studies/ public policy/ publicadministration பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை
Program Officer –AccessibilitySocial sciences அல்லது அதற்கு நிகரான architecture, civil, urban design, urban studies போன்ற பாடங்களில் முதுகலை அல்லது இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3-4 வருட அனுபவம் தேவை.
Data AnalystComputer Science, Information Technology பாடங்களில் இளங்கலைப் பட்டம். கணினி அறிவியல் அல்லாத பிரிவுகளை பட்டதாரிகளும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 2 வருட அனுபவம் தேவை
Senior Accountantaccounting/ financial management/ publicfinance பிரிவுகளில் இளங்கலைப் பட்டம். மேலும் 5 வருட அனுபவம் தேவை.
District Program Officer –Community Servicessocial work, rural development,development studies, public policy, public administration பிரிவுகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Community Based Rehabilitation அல்லது அதற்கு நிகரான பிரிவில் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3-5 வருட அனுபவம் தேவை.
District Program Officer –Partnership Development and Convergencesocial work/economics/ rural management/ development studies/ public policy/ public administration பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3- 5 வருட அனுபவம் தேவை.
District Program Officer –Trainingsocial policy/work, rural development,development studies, public policy, public administration அல்லது அதற்கு நிகரான பிரிவுகளில் இளங்கலை / முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3-5 வருட அனுபவம் தேவை.
Accountantaccounting/ financial management/ publicfinance அல்லது அதற்கு நிகரான பிரிவுகளில் இளங்கலைப் பட்டம். மேலும் 2-3 வருட அனுபவம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய CV மற்றும் Cover letter உடன் இமெயில் மூலமாகவும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் https://scd.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Google Forms மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மதுரையில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

February 11, 2023 0

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும், பராமரிப்பு சேவை வழங்குநா் பயிற்சி, மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில் (Government Tractor Workshop) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி 15 நாள்கள் நடைபெறும். ஒரு பயிற்சி வகுப்பில் 20 பேர் வீதம், 5 பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

தகுதிகள் என்னென்ன?

குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. தோச்சி பெற்ற, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் வைத்திருப்பவா்கள், முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோந்தவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயணப்படி :

பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100 போக்குவரத்துப் படியாக, பயிற்சியாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விருப்பமுள்ளவா்கள், தங்களின் கல்வித் தகுதிச் சான்று, ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மதுரை, ஒத்தடையில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள் :

கூடுதல் விவரங்களுக்கு 0452 - 2422953, 94459 48994 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ராசிபுரத்தில் பிப்.18-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 10,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

February 11, 2023 0

 நாமக்கல்: ராசிபுரத்தில் வரும் 18-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

முகாமில், 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், கணினி பயிற்சி, தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். முகாமில், பங்கேற்கும் அனைத்து வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

முகாம் முற்றிலும் இலவசமானது. முகாமில், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்குத் தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங் களுடைய சுய விவரம், உரிய கல்விச் சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் முகாம் தொடர்பான விவரங்களை அறிய 04286 222260 என்ற தொலைபேசி எண் மற்றும் 63822 92645 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 8, 2023

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்நீர் குடித்தால் போதுமா? உண்மை என்ன?

February 08, 2023 0

 நமது ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரித்து விடுகிறது.  பரபரப்பான வாழ்க்கை சூழலின் காரணமாக, நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை.  

தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து விடுகிறது.  கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவை தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.  

கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது நரம்புகளில் குவிந்து, இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன.  கொலஸ்ட்ரால் படிவத்தின் காரணமாக இதயம் தொடர்பான பலவித நோய்கள் உங்களை பாதிக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது ​​மாரடைப்பு ஏற்படலாம்.  வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். 

 கொலஸ்ட்ராலை குறைக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து மருந்துகளை உட்கொள்ளலாம் மற்றும் எளிமையான வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே உடல் எடையை குறைக்கலாம்.  அனைவரது வீடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய தண்ணீரை வைத்தே கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.  

தண்ணீரை சுட வைத்து வெந்நீராக அருந்துவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.  இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு சேர்வதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது, இந்த பிரச்சனைக்கு வெந்நீர் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.  தொடர்ந்து சூடான நீரை உட்கொள்வது லிப்பிட் ப்ரோபைலை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.

சூடான நீர் இரத்த திரவத்தை விரைவாக அதிகரிக்கிறது, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இரத்தம் மெலிந்து இரத்த ஓட்டம் மேம்படும்.  எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.  இதனை சாப்பிடுவதால் உடலில் ட்ரைகிளிசரைடு அதிகரிக்கிறது, நீங்கள் வெந்நீரை குடிக்கும்போது ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வது தடுக்கப்படுகிறது.  

பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பரங்கிக்காய்: பல வித ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷம்

February 08, 2023 0

பூசணி ஆரோக்கிய நன்மைகள்: காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. அவற்றை உட்கொள்வதால், உடலுக்குத் தேவையான பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. அப்படி பல  வித நற்பயன்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு காயை பற்றி இந்த பதிவில் காணலாம். சொல்லப்போனால், இதை ஒரு பழம் என்றும் கூறலாம். 

பூசணிக்காய்

இந்த பதிவில் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூசணிக்காயின் உள்ள நன்மைகளை பற்றி காணலாம். சிவப்பு பூசணிக்காய் பரங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகின்றது. இது குக்குர்பிடேசி எனப்படும் பூக்கும் தாவரங்களின் பூச்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் சுமார் 975 வகையான உணவு மற்றும் அலங்கார தாவரங்கள் உள்ளன. இந்த தாவரத்தில் பல வகைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும், வெள்ளை பூசணி மற்றும் சிவப்பு பூசணி ஆகியவை மிகவும் பிரபலமான வகைகளாக உள்ளன. 

பூசணி ஆரோக்கியமானதா?

பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது. இது பார்வைத் திறனை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டின் வளமான மூலமாகும். பரங்கிக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், இது எடை இழப்புக்கும் உதவுகிறது. பரங்கிக்காய் உயிரணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆல்ஃபா கரோட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நிறைந்துள்ளது.

பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

பரங்கிக்காயின் பிற குறிப்பிடத்தக்க நன்மைகள்:

- இதில் வைட்டமின்கள் பி, சி ஆகியவை உள்ளன.

- உடம்பில் உஷ்ணம் நீங்க இதை சாப்பிடலாம். 

- இது சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு பயனளிக்கும்.

- பித்தத்தை போக்க பரங்கிக்காய் உகந்தது.

- பரங்கிக்காய் பசியைத் தூண்டும்.

- இதனால் வயிற்று பிரச்சனைகள் சரியாகும். 

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

போஸ்ட் ஆபீஸ் வேலை.. தமிழக மாணவர்களுக்கு மகிழ்வான செய்தி.. 3167 அஞ்சல்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

February 08, 2023 0

 அஞ்சல் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க பொருத்தமான மாற்றங்களை உடனடியாக  மேற்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மூன்று நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் அஞ்சல்துறை அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசிசர்மா தொலைபேசியில் தெரிவித்தாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்றாலும் அதைச் செய்ய முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறைமையில் 10 ஆம் வகுப்பு தேறிய தேர்வர்கள் தவித்து வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் (GDS) காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ளவுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் 3167.

10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த நியமனங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது மற்ற மாநிலங்களில் இது இருக்கிறது. ஆகையால் பிற மாநில தேர்வர்களுக்கு பிரச்சினை இல்லை. 6 வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்கள் பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஆன்லைன் முறைமை விடவில்லை.

நான் அஞ்சல் துறை செயலாளர் வினீத் பாண்டே தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு இது குறித்து கடிதங்களை எழுதி இருந்தேன். இன்று என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குனர் ராசி சர்மா அவர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், 6 வதாக உள்ள "தெரிவு மொழி" பகுதி தமிழ்நாடு தேர்வர்களுக்கு தடையாக இல்லாத வகையில் மாற்றப்படும் என்றும், விண்ணப்ப கடைசி தேதி நான்கு நாட்கள் நீட்டிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

8ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.17 லட்சம் வரை அரசு மானியம்.... ஈசியாக தொழில் தொடங்கலாம்

February 08, 2023 0

 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் அளிக்கிறது. 2017ல் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் உள்ள 28,789 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.50 லட்சம் வரையும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சம் வரையும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை.  இருப்பினும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5 இலட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மானியம்: ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) மானியமாக வழங்கப்படும். அதவாது, 50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட 17.5 லட்சம் ரூபாயை மானியமாக அரசு செலுத்தும், இதர தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.