Agri Info

Adding Green to your Life

February 14, 2023

சின்ன சின்ன விஷயமும் உங்களை டிஸ்டர்ப் பண்ணுதா..? இதை கட்டாயம் படியுங்கள்..!

February 14, 2023 0

 நம்மில் அதிகம் பேர் உணர்வுபூர்வமாக செயல்படக்கூடியவர்களாகவும் பல விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு மிகுந்த கவலைக்கு உள்ளாகும் தன்மையை கொண்டுள்ளவராகவும் இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்ட குணமுடையவர்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத சில விஷயங்களை கூட மனதில் போட்டுக் கொண்டு அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவர். ஆனால் இப்படி வாழ்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இவ்வாறு அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு அடிப்படையாக பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

தன்னைப் பற்றி எதிர்மறையாக பேசுதல் : சிலர் தங்களைப் பற்றிய குறைவாக எடை போட்டுக் கொள்வதும், தங்களையே அடிக்கடி குற்றம் சொல்லும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். எனவே வாழ்க்கையில் ஏதேனும் எதிர்மறையான செயல்கள் நிகழும்போது, அது உங்களால் தான் நிகழ்ந்தது என மிக எளிதாக நம்பி உங்கள் மீது பழியை போட்டுக்கொண்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்.

சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள்  : பலருக்கும் தன்னுடைய இளமைப் பருவத்தில் போதுமான அளவு பெற்றோர்களின் துணையோ அல்லது அடிக்கடி கேலி கிண்டல் போன்ற விஷயங்களினால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ இது போல அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

சுய மரியாதை குறைவு : உங்களிடம் சுயமரியாதையானது குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்போதுமே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். விஷயங்களை தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமையும்.

பரிபூரணமாக நினைத்துக் கொள்வது  : தாங்கள் முழுமையான ஒரு மனிதராகவும் எது செய்தாலும் குறையில்லாமல் செய்வதாகவும் நினைத்துக் கொள்பவர்களிடம் யாரேனும் சில விமர்சனங்களை கூறினால் இவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

மன அழுத்தம் அல்லது மனசோர்வு : மன அழுத்தம் அல்லது மனசோர்வு இருக்கும் போது யாரேனும் உங்களிடம் எதையேனும் கூறினால் அதனை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதுவும் கூட விஷயங்களை நீங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்ள ஒரு காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து வெளி வருவதற்கு சில குறிப்புகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் மற்றவர்கள் தங்கள் மனதினுள் இருப்பதைத்தான் பேசுவார்களே தவிர, உங்களைப் பற்றிய எண்ணங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதாவது சில நேரங்களில் மற்றவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஆனால் அது உண்மையாகவே அவர்களது தனிப்பட்ட குணத்தின் வெளிப்படாத தான் இருக்கும்.

அதுபோல சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஏமாற்றம் அடைபவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதையும், அதில் தவிர்க்க முடியாது என்பதையும், அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது பற்றி தான் யோசிக்க வேண்டும். மற்றவரோடு இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனில், அதற்கு உங்கள் மீது மட்டும் குறை இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் ஓர் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு புறமும்கூட பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உங்களது மனநிலைக்கு ஒத்துப் போகும் ஒருவரிடம் நெருக்கமாக இருப்பது நல்லது.

அனைவரிடமும் உதவிக்காக கையேந்துவதும் கூடாது. ஒருவேளை அவர்கள் உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில் அல்லது நமக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தாலும் நாம் ஏமாற்றம் அடைவோம். இவை அனைத்தையும் விட உங்களால் அனைவருக்கும் உதவ முடியாது என்பதையும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே மன நிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளநீர் முதல் தக்காளி வரை... சிறந்த கண் பார்வைக்கு உதவும் 5 பானங்கள்.!

February 14, 2023 0

 தற்போதைய நவீன கால வாழ்க்கை முறையில் நம்மில் பெரும்பாலானோர் தினசரி கம்ப்யூட்டர்ஸ், டேப்லெட்ஸ், டிவி அல்லது மொபைல் என எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பல மணி நேரம் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் டிவைஸ் ஸ்கிரீன்களில் அதிக நேரம் செலவழிப்பது கண்புரை, குளுக்கோமா, கண்கள் உலர்தல், மோசமான நைட் விஷன் மற்றும் பிற கண் கோளாறுகளை ஏற்படுத்த கூடும்.

கண் சார்ந்த கடுமையான சிக்கல்களை தவிர்க்க விரும்பினால் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் , வைட்டமின்ஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் கண் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும்.

நீங்கள் டயட்டில் இருப்பவர் அதிகம் மென்று திங்கும் உணவுகளை சேர்த்து கொள்ள விரும்பவில்லை என்றால் சத்தான பழங்கள், காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை சேர்த்து கொள்ளலாம். ஆரஞ்சு முதல் இளநீர் வரை உங்கள் பார்வையை மேம்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான பானங்கள் இங்கே.

ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சு ஜூஸ் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாக இருக்கிறது. பழக்கடைகளில் எளிதில் கிடைக்க கூடியது. வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது கண்புரை உருவாவதற்கான அபாயத்தை குறைக்கிறது. கண்களின் ரத்த நாளங்களுடைய வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க ஆரஞ்சு ஜூஸ் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் கருவின் பார்வை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பி வைட்டமினான ஃபோலேட் ஆரஞ்சு ஜூஸிலும் உள்ளது.

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் : இது ABC ஜூஸ் என்று குறிப்பிடப்படுகிறது. கேரட்டில் காணப்படும் வைட்டமின் ஏ நைட் விஷனை ஷார்ப்பாக வைத்திருக்க மற்றும் பொதுவாக கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் காணப்படும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட சத்துக்கள் மாகுலர் மற்றும் விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மறுபுறம் ஆப்பிளில் நிறைந்திருக்கும் பயோஃப்ளவனாய்ட்ஸ் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பார்வையை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸை நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த ABC ஜூஸ் சிறந்தது.

ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் : பச்சை இலை காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும் மற்றும் ஆரோக்கியமான பார்வை திறனை பராமரிக்க முக்கியமானவை. ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் கலவையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பார்வை திறனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது.

தக்காளி ஜூஸ் : கண்களுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் தக்காளி ஜூஸில் உள்ளது. தக்காளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பார்வை திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிட்டான லைகோபீன் தக்காளியில் உள்ளது.

இளநீர் : இளநீரில் வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய தாதுக்கள் மற்றும் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இவை கண்களின் பாதுகாப்பு திசுக்களை (protective tissues) மேம்படுத்த உதவுகிறது. அடிக்கடி இளநீர் குடிப்பது Glaucoma (கண் அழுத்த நோய்) அபாயத்தை குறைக்கிறது. Glaucoma என்பது கண்ணின் பார்வை நரம்பை சேதப்படுத்தும் ஒரு நிலைமை ஆகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆண்கள் சுய உதவிக் குழு: ரூ.10 லட்சம் வரை கடன்... நண்பர்களுடன் தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு

February 14, 2023 0

 பெரும்பாலும், சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றளவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், கிட்டத்தட்ட 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் , இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுய உதவி குழு என்பது கிராம/நகர்ப்புற ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு. உறுப்பினர்கள் தங்களின் அரசியல்/சமுதாய/பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் குழு ஆகும். குறைந்தது 20 உறுப்பினர்கள் தாமாக முன் வந்து இத்தகையதொரு குழுவை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய/மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கு ஆதார நிதியாக ரூ.10,000/- வீதம் மானிய நிதி வழங்கப்படுகிறது.

அதேபோன்று, சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் (Self Employment Program Individual) கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேற, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிக் கடனுக்கு எந்தவித அடமானங்களும் தேவையில்லை.

Self Employment Program Self Help Group (SEP - SHG) திட்டத்தின் கீழ், குறைந்தது 5 நபர்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி மூலம், வருவாய் தரும் திட்டங்களில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடலாம்.

தற்போது செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களை, அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக வலுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு கூட்டமைப்பும் பல ஆயிரம் உற்பத்தியாளர்களை கொண்டதாக இருக்கும். இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவித்துளளது. எனவே, உங்கள்  பகுதியில் உள்ள ஒத்த கருத்துடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுய உதவி குழுவை அமைத்துக் கொள்ளுங்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தொழில் முனைவோர்களுக்கு குட் நியூஸ்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

February 14, 2023 0

சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 15.02.2023 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலையில் 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிறைவு செய்த அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். முதற்கட்ட முகாமில், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இறுதியில் பயிற்சியைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தொலைப்பேசி எண்கள் : 044 - 22252081, 22252082, 96771 52265, 8668102600.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IAS Exam Preparation: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் அதிகாரி! - அடிப்படை தகுதி முதல் தேர்வுமுறை வரை- முழு விபரம் இதோ!

February 14, 2023 0

 2023ம் ஆண்டு குடிமைப் பணி முதல்நிலைத்  தேர்வுக்கான (Civil Services (Preliminary) Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 21ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் குடிமைப் பணி தேர்வு என்றால் என்ன... இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன... தேர்வு முறை என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே காண்போம்.

அரசுத் துறைகளின் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவைகள் புரியும் அனைத்து பணிகளும் குடிமைப் பணிகள்தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, 2, 1 தேர்வுகள் மூலம் பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது. அதேபோன்று, அகில இந்திய அளவில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது.

இந்த குடிமைப் பணிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அனைத்திந்திய குடிமைப் பணிகள் (All Indian service), மற்றொன்று மத்தியப் பணிகள் (Central Service). அனைத்திந்திய பணிகளின் கீழ், ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய மூன்று பணிகள் உள்ளன. அதேபோன்று, மத்தியப் பணிகளின் கீழ், ஐஆர்எஸ், இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வருகின்றன. ஐஏஎஸ் போன்ற அனைத்திந்திய அலுவலர்கள், மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் பணி செய்வதற்காக பணி அமர்த்தப்படுகின்றனர். பொதுவாக, ஐஏஎஸ் அதிகாரிகள் மாநில அரசுகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், Deputation மூலம் மத்திய அரசு பணிகளுக்கு அழைக்கப்படலாம். அதே சமயம், மத்தியப் பணிகளின் கீழ் பணியமர்த்தப்படுவர்கள் இந்திய அரசின் கீழ் மட்டுமே  பணி செய்கின்றனர். இவர்கள் எந்தவொரு மாநில அரசுகளையும் சேராதவர்கள்.  

அனைத்திந்திய பணிகள்Indian Administrative ServiceIndian Forest ServiceIndian Police Service
மத்திய பணிகள்1. Indian Foreign Service,2.Indian Audit and Accounts Service, Group ‘A’,3. Indian Civil Accounts Service, Group ‘A’,4. Indian Corporate Law Service, Group ‘A’,5. Indian Defence Accounts Service, Group ‘A’,6. Indian Defence Estates Service, Group ‘A’,7. Indian Information Service, Group ‘A’,8. Indian Postal Service, Group ‘A’,9. Indian P&T Accounts and Finance Service, Group ‘A’10. Indian Railway Protection Force Service, Group ‘A’11. Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’12. Indian Revenue Service (Income Tax) Group ‘A’13. Indian Trade Service, Group ‘A’ (Grade III)14. Indian Railway Management Service, Group ‘A’15. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)16. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’17. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar HaveliPolice Service (DANIPS), Group ‘B’18. Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’19. Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’


மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் சேர்த்தே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது. தரவரிசைப் பட்டியலில் முதல் இடங்களில் வரும் தேர்வர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணியை தேர்வு செய்து வருகின்றனர். அதன், காரணமாக இந்த தேர்வு ஐஏஎஸ் தேர்வு என்று கூறப்படுகிறது.

இந்த தேர்வுக்கு கல்வித் தகுதி என்ன?  ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. இந்த பட்டத்தினை உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தொலைதூர கல்வி மூலமாகவோ பெற்றிருக்கலாம்.

வயது வரம்பு:  21 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை? 

இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

முதல் நிலைத் தேர்வு: 

முதல்நிலைத்  தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் ஒன்று - பொதுஅறிவு, தாள்- ii ஆங்கிலம் மற்றும் கணித அறிவு.  கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். இரண்டாம் தாள் தகுதித் தேர்வாகும். மொத்த மதிப்பெண்ணில் 33% பெற்றால் போதுமானது.

தேர்வுகள்பாடம்கேட்கப்படும் கேள்விகள்ஒரு கேள்விக்கான மதிப்பெண்மொத்த மதிப்பெண்
முதல் நிலைத் தேர்வுபொதுப் பாடம் (தாள்-I)1002200
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II)802.5200
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண்400

முதன்மைத் தேர்வு: 

முதல் தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வு 9 தாள்களைக் கொண்டது. விரிவான  வகையில் விடையளிக்க வேண்டும்.

பாடம்மதிப்பெண்
1.தாய்மொழி300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
2.ஆங்கிலம்300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
3கட்டுரை250
4தாள் - I (இந்திய வரலாறு, உலக வரலாறு,  இந்திய பண்பாடு )250
5தாள் - II (ஆட்சி நிர்வாகம், இந்திய அரசியலமைப்பு )250
6தாள் - III (இந்திய பொருளாதாரம், சுற்றுச்சூழல் )250
7.தாள் - IV (ஒழுக்கம், தார்மீக பொறுப்பு)250
8.விருப்பப்பாடம் ( தாள் - I )250
9விருப்பப்பாடம் ( தாள் - II )250
மொத்தம்1750

நேர்காணல் :

முதன்மைத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் தேர்வு மதிப்பெண்  275 ஆகும்.

தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும்: தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்றால், மூன்று தேர்வு நிலைகளிலும் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும். உதாரணமாக, நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்தாண்டு இந்த மூன்று தேர்வுகளையும் மறுபடியும் முதலில் இருந்தே எழுத வேண்டும்.  இதுவே, இந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பலருக்கும் சவாலாக இருக்கிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Result: டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு! செக் செய்வது எப்படி?

February 14, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 டிசம்பர்  பருவத்திற்கான துறைத் தேர்வு முடிவுகளை (Departmental Examination) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, டிசம்பர் 2022-ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. கிட்டத்தட்ட 197 துறைத் தேர்வுகளுக்கு 12/12/2022 முதல் 21.12.2022 வரை நடத்தப்பட்டது. சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட 39 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றன.

இந்நிலையில், இரண்டாம் நிலை மொழித் தேர்வுக்கான (SECOND CLASS LANG TEST PART-“ A”-WRITTEN EXAMINATION) முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  10ம் வகுப்பில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படிக்காமல்,  தமிழ்நாடு  அரசுத் துறைகளில் பணி செய்து வரும் அரசு ஊழியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அடுத்தக் கட்டமாக நடைபெறும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய தளத்திற்கு செல்லவும்.

முகப்புப் பக்கத்தில், துறைத் தேர்வுகள் தேர்வு முடிவுகள் கிளிக் செய்ய வேண்டும்.

'RESULTS OF DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்தவுடன், தேர்வு முடிவுகள் பட்டியல் தோன்றும்.

தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


February 12, 2023

11 ஆயிரம் காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே இந்த வாய்ப்பை விட்றாதீங்க!

February 12, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணையில் குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், குரூப் 4  குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பை பெறத் துடிக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஆண்டில் நல்ல அரசு வேலையில் அமர்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குரூப் 2, 2ஏ,4 தேர்வர்கள் கொஞ்சம் மனது வைத்தால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வெற்றி பெறலாம். இதுநாள் வரையில், நீங்கள் பெற்றிராத நல்லதொரு வாய்ப்புகள் தற்போது உருவாகியிருக்கிறது.

என்ன வாய்ப்பு: 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination, 2022 ) பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான, விண்ணப்ப செயல்முறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (17ம் தேதி) நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெருமாபாலான தேர்வர்களுக்கு இந்தத் தேர்வு பற்றிய பெரிய விழிப்புணர்வு இருப்பதாய் தெரியவில்லை. குறைவானவர்கள் மட்டுமே மத்திய அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இதற்கு, முக்கிய காரணம் இந்தி மற்றும் ஆங்கில மொழில்களில் மட்டுமே இந்த தேர்வு இதுநாள் வரை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு அரசும், மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தைஅடுத்து, தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு, வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற் திறன் தேர்வில்  (Physical Efficiency Test) கலந்து கொள்ள வேண்டும்.

ஆங்கில மொழித் திறனுக்கு முன்னுரிமை கொடுங்கள்: பொது விழிப்புணர்வு (General Awareness), கணித அறிவு (Numerical and Mathematical Ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.  ஆங்கில மொழித்திறன் பகுதிக்கு மட்டும் சற்று அதிகபட்ச முன்னுரிமை தந்தால், இந்த தேர்வை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலவச பயிற்சி உண்டு: 

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி, இந்த SSC பணியிடத்திற்கு Youtube (aimtn)காணொலி வகுப்புகளை அறிவித்துள்ளது. தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படவுள்ளன. நாளொன்றுக்கு மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி மாவட்டத்தில் இலவச வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் பயிற்சி..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

February 12, 2023 0

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் (Agricultural Machinery-Repair and Maintenance Service) பயிற்சிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமார்   தெரிவித்தாா்.

இதுகுறித்து,அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் “வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர்" என்ற பயிற்சி திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளதுஇந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மை பொறியியல் துறை, எண் : 20 வ.உ.சி சாலை, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 620001 என்ற முகவரிக்கு வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ். வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

மேலும் தொடர்புக்கு 97915-40901, 98424-76576, 80568-41434. என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 11, 2023

இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிடுவதால் கிடைக்கும் சூப்பர் நன்மைகள்..!

February 11, 2023 0

 முந்திரி பருப்புகளில் நார்ச்சத்து, புரதம் மற்றும் மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், ஜிங்க் மற்றும் காப்பர் போன்ற பல அத்தியாவசிய மினரல்ஸ் நிறைந்திருப்பதால் அவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. தவிர முந்திரியில் வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் தியாமின் (thiamine) நிறைந்திருப்பதால் தினமும் இவற்றை சாப்பிட ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பொதுவாகவே முந்திரியை இனிப்புகளில் சேர்த்துக்கொள்வார்கள்.  சில சமயங்களில் கிரேவிக்களிலும் சேர்த்து கொள்கிறார்கள். இதுவரை அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம்களை ஊறவைத்து சாப்பிடுவதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முந்திரியையும் ஊற வைத்தது சாப்பிடலாம் என்பது தெரியுமா..? பாலில் ஊற வைத்த முந்திரியை சாப்பிடுவது எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே நேரம் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

முதல் நாள் இரவு ஒரு கிளாஸ் பாலில் 3 - 5 முந்திரிகளை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை முந்திரியை பாலில் நன்கு வேக வைக்கவும். வேக வைத்த பின் அடுப்பை அணைத்து விட்டு பாலில் இருக்கும் முந்திரியை மென்று சாப்பிட்டு பாலையும் குடித்து விடுங்கள். அதிகபட்சம் 5 முந்திரிகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம். பால், முந்திரி இரண்டிலுமே கலோரிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருப்பதால் எடையை அதிகரிக்க கூடும். எனவே மிதமான அளவு முந்திரி எடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

உறுதியான எலும்புகள்  : இரவு முழுவதும் பாலில் ஊறவைத்த முந்திரி பருப்புகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலுவடையும். பாலில் கால்சியம் சத்து அதிகம் என்பது நமக்கு தெரிந்ததே. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அனைத்தும் எலும்புகளை வலுவாக்கும், மேலும் மூட்டு வலிகளுக்கு நிவாரணம் தரும். வயதானவர்கள் தங்களுக்கு மூட்டு மற்றும் எலும்பு வலி வராமல் இருக்க முந்திரிகளை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மலச்சிக்கலை போக்குகிறது  : தற்போதைய காலகட்டத்தில் மலச்சிக்கல் மிக பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் பாலில் ஊறவைத்த முந்திரிகளை சாப்பிடலாம். முந்திரியில் காணப்படும் ஃபைபர் சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும். இரவில் முந்திரிகளை பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து சாப்பிட்டு வந்தால் வயிறு எளிதில் சுத்தமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது  : பாலில் ஊறவைத்த முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எப்படி என்றால் பால் மற்றும் முந்திரி என இரண்டிலுமே ஏராளமான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவற்றை சேர்த்து சாப்பிடும் போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாலில் ஊறவைத்த முந்திரி சாப்பிடுவது நோய்களை எளிதில் அண்டாமல் பார்த்து கொள்ளும்.

ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து பாதுகாப்பு  : முந்திரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் காணப்படுகின்றன. எனவே பாலில் ஊறவைத்த முந்திரிகளை தினசரி சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அழிக்கும். இதனால் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதங்களிலிருந்தும் நம் உடல் காப்பாற்றப்படும். உடலையும், சருமத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் பாலில் ஊற வைத்த முந்திரியை தினசரி உட்கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நரம்புகள் சுருட்டிக்கொள்ளும் ’வெரிகோஸ் வெயின்’ பாதிப்பு ஏன் உண்டாகிறது..? தவிர்க்கும் வழிகள் என்ன..?

February 11, 2023 0

 நரம்புகளின் சுவர்கள் சேதமடையும் போது நரம்பு நோய் ஏற்படுகிறது மற்றும் இரத்த ஓட்ட அமைப்பில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உங்கள் கால் தொடைக்கு கீழ் பகுதியிலோ, முட்டி காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சி போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

2/ 7

இதனால், கால் பகுதியில் கால் வலி, முழங்கால் குடைச்சல் போன்ற உணர்வு ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். எனவே, கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.


வெரிகொஸ் வெயின்ஸ் : தோலில் உட்புறத்தில், ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதை காண முடியும், கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல், பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் வெரிகோஸ் வெயின்ஸ் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல, அவை வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.


வெரிகொஸ் வெயின்ஸ் ஏற்பட காரணம் : அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்து கொண்டிருப்பது, அசைவற்று ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் இரத்தம் உங்கள் கால்களில் தேங்கி நிற்கும். இது உங்கள் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.


வெரிகோஸ் வெயின்ஸ் சிக்கல்களை ஏற்படுத்துமா? : வெரிகோஸ் வெயின்ஸ் ஒரு தீவிர மருத்துவ நிலையாக கருதப்படவில்லை என்றாலும், கடுமையான, தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கத்துடன் இருந்தால் அவை சிக்கல்களை ஏற்படுத்தும். நரம்புகளுக்கு அருகில் தோலில் உருவாகும் புண்கள், இரத்த உறைவு மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை கடுமையான சிக்கல்களாக இருக்கலாம். எப்போதாவது, தோலுக்கு அருகில் உள்ள நரம்புகள் வெடிக்கும். இது பொதுவாக சிறிய இரத்தப்போக்கு மட்டுமே ஏற்படுத்துகிறது என்றாலும், அதற்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது.


வெரிகோஸ் வெயின்ஸ் வலியை எவ்வாறு சமாளிப்பது? : உடற்பயிற்சி, உட்கார்ந்து அல்லது படுக்கும்போது கால்களை உயர்த்துவது போன்ற செயல்களால் வெரிகோஸ் வெயின்ஸ் வலியை சமாளிக்கலாம். காலுறைகளைப் பயன்படுத்துவது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும். கோடை காலத்தில் இந்த காலுறைகளை ஒருவர் பயன்படுத்தினால், அவை அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும். ஆனால், குளிர்ச்சியான நாட்களில், காலுறைகளால் காணப்படும் வெப்பம் சங்கடமானதாகவோ அல்லது தாங்க முடியாததாகவோ இருக்காது.

பிற பொதுவான காரணங்கள் : வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் இந்நோய் வர அதிக வாய்ப்புண்டு. கருவுற்று இருக்கும் பெண்களுக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே பெரும்பாலான தாய்மார்களுக்கு இந்நோய் வருகிறது. பொதுவாக மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களை விட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடல் பருமன் போன்ற காரணங்களாலும் இந்த நோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உட்கார்ந்து எழுந்தாலே முட்டி வலிக்குதா..? நிவாரணம் தரும் இந்த பயிற்சிகளை முயற்சி செய்யுங்கள்..!

February 11, 2023 0

 

சமீப காலமாக பலரையும் கீல்வாதம் என்று கூறப்படும் ஆர்த்தரைடிஸ் நோய் பாதித்து வருகிறது. மூட்டுகளில் வீக்கம், தேய்மானம், வலி, தசை பலவீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆர்த்தரைடிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு கிடையாது. நோய் என்று கூறுவதை விட, இதை குறைபாடு என்று கூறலாம். முழங்கால் வாதம், வீக்கம் என்று வந்தாலே, அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

குறிப்பாக, வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்த்தரைடிஸ், அவர்கள் உட்கார்ந்து எழுந்தால் கூட தீவிரமான வலியை ஏற்படுத்தும். எனவே, ஆர்த்தரைட்டிஸ் வந்தாலே, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரவலாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குறைபாட்டுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. உணவுக் கட்டுப்பாடு, ஃபிசிகல் தெரபி முதல் வாழ்க்கை முறை மாற்றங்கள் வரை பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல், ஆர்த்தரைடிஸ் குறைபாட்டை எவ்வாறு சரி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பு மற்றும் கட்டுப்பாடு  : அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கால்கள், கால் மூட்டுகள் மீது அதிக அழுத்தம் கொடுக்கும், அது கீல்வாதத்தை தீவிரமாக்கும். எனவே, ஆர்த்தரைடிசால் பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும், எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

கன்சர்வேட்டிவ் சிகிச்சைகள்  : ஃபிசிக்கல் தெரபி : முழங்கால் மூட்டுவலி சிகிச்சைக்கு லேசர் சிகிச்சை, காந்தவியல் சிகிச்சை மற்றும் வைப்ரேஷனல் எனர்ஜி சிகிச்சை உள்ளிட்ட பல விதமான சிகிச்சைகள் வலி நிவாரணம் அளிக்கிறது.

உடற்பயிற்சி : முழங்கால் வலி, மூட்டு வலி இருப்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வீட்டிலேயே கூட செய்யக்கூடிய தெரப்யூடிக் உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

மனம் மற்றும் உடல் ஒருங்கிணையும் பயிற்சிகள்  : மூட்டு கீல்வாதம் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு, மனம் மற்றும் உடல் ஒருங்கிணைந்து செய்யும் பயிற்சிகளான யோகா, லேசான ஏரோபிக்ஸ், தியானம் ஆகியவற்றையும் சிகிச்சையாக மேற்கொள்ளலாம்.

ஏரோபிக் உடற்பயிற்சிகள் : வலியைக் குறைப்பதற்கும், முழங்கால் கீல்வாதம் உள்ளவர்களின் உடல் ரீதியாக செயல்படவும், சாதாரணமாக இயங்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஏரோபிக் பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

Hydrokinesitherapy ஹைட்ரோ-கெனிசிஸ் மற்றும் பால்னியோதெரபி உள்ளிட்ட தேரபிகள் வலி நிவாரணம், வலிமையாக்குவது, அழற்சியைக் குறைப்பது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள்: முறையான பயிற்றுனரிடம் அல்லது ஃபிசியோதெரபிஸ்ட் இடம், தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளை பெறலாம். ஒவ்வொரு நபரின் பாதிப்புக்கு ஏற்ற அளவுக்கு பயிற்சிகள் மாறுபடும்.

உள்-மூட்டு ஊசிகள்: ஹையலூரோனிக் அமிலம், கார்டிகோஸ்டீராய்டுகள் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா ஆகியவற்றை மூட்டுக்குள் செலுத்துவது மாற்று சிகிச்சையாகக் கருதப்படுகிறது.குருத்தெலும்பு சேதத்தை குறைக்கும் மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையில் உட்கொள்ளலாம்.

அக்குபஞ்சர்:, முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், உடனடியாக வலியில் இருந்து நிவாரணம் பெற அக்குபஞ்சர் பயன்படுத்தலாம். ஆனால், இது எவ்வளவு நாட்களுக்கு பலன் அளிக்கும், எந்த அளவுக்கு நம்பகமானது என்பதற்கு சான்றுகள் இல்லை.

அறுவை சிகிச்சையை தவிர்க்க வேண்டும் ஆனால் தீவிரமான பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணியாக ஓபியாய்டுகள், வலி குறைக்க மூட்டுகளில் பூசப்படும் கிரீம், ஜெல் போன்றவை பரிந்துரைக்கப்படும்.நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக், ஊன்றுகோல், மூட்டுகளுக்கான பிரேஸ்கள் ஆகியவை சப்போர்ட்டாக இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இட்லி, தோசை மாவு தயாரிக்கும் தொழில்... பதிவு முதல் விற்பனை வரை - முழுமையான வழிகாட்டல்!

February 11, 2023 0

 தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான். தற்போதையக் காலகட்டத்தில் பிரபலமான உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய அளவில் தொடங்கிப் போராடி உலகளவில் சாதனைப் படைத்தவர்கள் தான். அந்த அளவிற்கு உணவு தொழில்களுக்கான சந்தை அதிகமாக இருக்கிறது.

அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது. முதல் கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். சிறிய முதலீட்டில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் தரும் தொழில் இது. செலவிடும் நேரம், முதலீடு மற்றும் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறலாம். குறிப்பாக தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படாமல் தினமும் லாபம் பார்க்கலாம். இட்லி தோசை மாவு தொழில் தொடங்க தேவையான விவரங்களைப் பார்க்கலாம்.

இட்லி தோசை மாவு தொழில் தொடங்குவது எப்படி?

நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். உங்கள் ஏரியாவில் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இட்லி தோசை மாவு அரைத்து கடைகளில் சம்பளை செய்ய அல்லது பெரிய சூப்பர்மார்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு :

குறைந்தளவு முதலீடு என்றால் சுமார் 2 இருந்து 3 லட்சம் வரை ஆகும். வியாபாரம் என்றால் அதற்கு ஏற்ற வேகம் தேவை. அதற்காக மாவு அரைக்க Instant Wet Grinder என்ற இயந்திரத்தை வாங்க வேண்டும். இந்த இயந்திரம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை வரும். அதனைத் தொடர்ந்து, சில பாத்திரங்கள் வாங்க வேண்டும். இது இல்லாமல் தின அரிசி, உளுந்து போன்ற பொருட்கள் வாங்க வேண்டும். மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.

தொழிலைப் பதிவு செய்வது எப்படி?

இட்லி தோசை மாவு அரைக்கும் தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்குவதால் சிறுதொழில்களில் இடம்பெறும். எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அடிப்படையில் வழங்கப்படும் Udyog Aadhar சான்றிதழைப் பதிவு செய்து பெற வேண்டும். தொடர்ந்து, உங்கள் பகுதி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கைத்தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் லைசென்ஸ் பெறவேண்டும். மேலும் தொழில் வரி செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இல்லாமல் GST வரிக்குப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க உதவும்.

வங்கிக் கடன் வாங்குவது எப்படி?

MSME பதிவாக நீங்கள் வாங்கும் Udyog Aadhar சான்றிதழ் இருப்பதால் வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிமையானது. தொழில்முனைவோர்களுக்கான வங்கிக் கடன்களில் இருக்கின்ற சலுகைகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மேல் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்று உள்ளீர்கள் என்றால் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தி பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

இட்லி தோசை மாவு தாயார் செய்வது எப்படி?

வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்குத் தரமும் மிகவும் முக்கியம். அதனால் தரமான இட்லி அரிசி, உளுந்தைப் பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம்.

அரைக்கும் முறை : 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும். அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.

பேக்கிங் முறை :

அரைந்த மாவை பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. தரமான அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கவர்களை பயன்படுத்த வேண்டும். உணவு காலாவதியாகும் நேரம், உற்பத்தி செய்யப்பட்ட நேரம் போன்றவற்றை பேக்கிங் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண Sealing Machine இயந்திரத்தை பேக்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

விநோக்கிக்கும் முறை:

தாயாராக உள்ள மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம். பெரிய அளவிலான சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

லாபம்:

ஒரு நாளைக்கு 2,000 ஆயிரம் வரை செலவு செய்தால் சுமார் 4,000 முதல் 5,000 வரை லாபம் பெறலாம். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

February 11, 2023 0

 Anganwadi Jobs updates: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட  அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில்  1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி சேவைகள்  : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940  குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம்  54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள்12.7.2018  அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள்30.06.2022 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள்
அங்கன்வாடி பணியாளர் - 54,43949,10944,628
அங்கன்வாடி உதவியாளர்  49,49943, 95440,036

கடந்த 2019ம் ஆண்டு, இதேபோன்று எழுப்பப்பட்ட போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில்  49,109 அங்கன்வாடி பணியாளர்கள்  பணியிடங்களும், 43, 954 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்.


முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பொது மாறுதல் மூலம் கலந்தாய்வு நடத்திட வேண்டும், பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி  வருவதும் குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news