Agri Info

Adding Green to your Life

February 14, 2023

Google Pay-PhonePe-Paytm-ல் பணத்தை தவறாக அனுப்பிவிட்டீர்களா? எப்படி அந்த பணத்தை திரும்ப பெறுவது?

February 14, 2023 0

 யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பயன்பாடுகள் நாட்டில் மிகவும் விருப்பமான கட்டண முறைகளில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது, ஃபோன் எண்ணை தவறான UPI ஐடிக்கு பணத்தை மாற்ற நேரிடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் சேவைகள் மூலம் தவறான பரிவர்த்தனைகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பொதுவாக, UPI மூலம் மொத்த பரிவர்த்தனைகள் 88 சதவீதம் அதிகரித்து 19.65 பில்லியனாக உள்ளது. இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டின் Q3 உடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 71 சதவிகிதம் அதிகரித்து ரூ 32.5 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதில், நபர் டு நபர் (P2P)ஆனது அதிகம் உபயோகிக்கப்படும் கட்டண முறையாகும். இது மொத்த பரிவர்த்தனை அளவின் 42 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று வேர்ல்ட்லைன் இந்தியாவின் Q3 2022க்கான இந்தியா டிஜிட்டல் கொடுப்பனவு அறிக்கை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தவறாக அனுப்பப்பட்ட பரிவர்த்தனைகளுக்குப் பிறகு பணத்தைத் எப்படி திரும்பப்பெறலாம்.
1.ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட நபர் முதலில் பயன்படுத்தப்படும் கட்டண முறையில் புகார் அளிக்க வேண்டும். அந்த நபர் Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற UPI ஐடிகளை பயன்படுத்தி, தவறான நிறுவனத்திற்கு பணத்தைப் பரிமாற்றியிருந்தால், அந்தச் சம்பவத்தை அவர் முதலில் Paytm, Google Pay மற்றும் PhonePe போன்ற பயன்பாடுகளின் வாடிக்கையாளர் சேவைக்குத் தெரிவிக்க வேண்டும்.

2. அதேபோல், பாதிக்கப்பட்ட நபர் NPCI போர்ட்டலிலும் புகார் அளிக்கலாம். npci.org.in என்ற இணையதள பக்கத்தில், புகார்தாரர்கள் Dispute Redressal Mechanism tab மூலம் அங்கு பிரிவின் கீழ் ஆன்லைன் படிவத்தில் புகாரளிக்கலாம்.

3. அந்த படிவத்தில் UPI பரிவர்த்தனை ஐடி, மெய்நிகர் கட்டண முகவரி, பரிமாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.

4. இதுதவிர, புகார் அளிப்பவர்கள் வங்கி பரிவர்த்தனை குறித்து அறிக்கை பதிவேற்றம் செய்யும்படி அதில் கேட்கப்படும். இது பரிவர்த்தனைக்காக கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட தொகையைக் காண்பிக்க வேண்டும்.

5. இதனையடுத்து, புகார் அளிப்பவர் Incorrectly transferred to another account என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6. பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், புகார் அளிப்பவர், கட்டணச் சேவை வழங்குநர் (PSP) வங்கியிடம் புகாரளிக்கலாம். அப்போதும் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், இறுதியாக பயனர் வாடிக்கையாளர் வங்கி குறைதீர்ப்பாளரை (Banking Ombudsman) அல்லது டிஜிட்டல் புகார்களுக்கான (Ombudsman for Digital) குறைதீர்ப்பாளரை அணுகலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் என்றால் என்ன?
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஒம்புட்ஸ்மேன் என்பது, பிரிவு 8ன் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் உள்ள சில சேவைகளில் குறைபாடுகளுக்கு எதிரான வாடிக்கையாளர் புகார்களை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு மூத்த அதிகாரி ஆவார். இதன் கீழ், UPI, Bharat QR குறியீடு மற்றும் பிறவற்றின் மூலம் பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் தொடர்பான சிக்கலைத் தீர்க்க கூகுள் பே போன்பே போன்றவற்றில் அல்லது PSP வங்கிகள் தோல்வியடைந்தால் புகார் அளிப்பவர்கள் இதன் மூலம் கடைசியாக புகார்களை பதிவு செய்யலாம். இது, தவறாக அனுப்பப்பட்ட பணம் திரும்பு பெறப்படாமல் இருப்பது மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பெறப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக புகார்களை அளிக்கலாம்.


வங்கி லாக்கர் கவனிக்க வேண்டியவை 5 விஷயங்கள்

February 14, 2023 0

 வங்கி சேவையை பயன்படுத்தவர்களே இல்லை என கூறும் அளவுக்கு அந்த சேவை விரிவடைந்து உள்ளது. வங்கிகள் பல சேவைகளை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தாலும், அதில் முக்கியமான மற்றும் அவசியமான சேவையாக இருப்பது வங்கி லாக்கர் ஆகும்.

யாருக்கு லாக்கர் சேவை கிடைக்கும்


இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை வழங்குகிறது. லாக்கர் வசதி தேவைப்படுபவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும். லாக்கர் காலியாக இருந்தால், உனடியாக கிடைக்கும். இல்லையெனில் காத்திருக்க வேண்டியிருக்கும். வேறு வாடிக்கையாளர்கள் லாக்கரை காலி செய்யும் போது, வேறு வாடிக்கையாளர்களுக்கு அந்த வசதி கிடைக்கும்.

லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்

வங்கிகள் வழங்கும் லாக்கரில் வாடிக்கையாளர் அவர் விரும்பு அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். தங்கம், வைரம், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பல பொருட்களை வைக்கலாம். லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் விவரங்கள் எதையும் வங்கிகள் கேட்பதில்லை. ஆனால் இந்த லாக்கரில் ரொக்க பணத்தை வைக்கக்கூடாது என வங்கிகள் கட்டுப்பாடு வைத்துள்ளது.

லாக்கருக்கான புதிய விதிகள்

லாக்கர்கள் இருக்கும் அறைக்கு சிசிடிவி பொருத்த வேண்டுமென ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு லாக்கரை ஒதுக்கீடு செய்யும் போதே மூன்று ஆண்டுகளுக்கான வாடகையை வங்கிகள் வசூலித்து கொள்ளலாம்.

அதேபோல லாக்கர் அக்ரிமெண்டை ஆண்டுக்கு ஒரு முறை வாடிக்கையாளர்கள் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடகை செலுத்தாத வாடிக்கையாளரின் லாக்கரை உடைப்பது வங்கிக்கு அதிகாரம் உண்டு

ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் தங்களது லாக்கர்களைப் பயன்படுத்தும்போதும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் அனுப்ப வேண்டும். இதன்மூலம் வங்கி மோசடிகளை தவிர்க்க முடியும்

லாக்கர் வாடகை

வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவைக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த வாடகை ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும். அந்த வாடகை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும். இந்த வாடகை ஆண்டுக்கு 2,000 ரூபாய் வைத்து கொண்டால் கூட, பிற பராமரிப்பு கட்டணம் என அனைத்தும் சேர்த்து 6,000 ரூபாய்க்கு வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு யார் பொறுப்பு

வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வாடிக்கையாளர் மட்டுமே பொறுப்பு ஆவர். ஏனெனில் வங்கி லாக்கரில் பாதுகாப்படும் பொருட்களின் விவரங்கள் எதையும் வங்கி கேட்பதில்லை. மேலும் வங்கியை பொறுத்தவரை லாக்கர் என்பது வாடிக்கையாளர்களுக்கு இடம் கொடுப்பது மட்டுமே ஆகும். நீங்கள் லாக்கரை திறக்க போது கூட வங்கி அதிகாரிகள் உங்களுடன் வரமாட்டார்கள். லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள் திருட்டு, கொள்கை போன்ற சம்பவங்களால் இழப்பீடு ஏற்பட்டால் அதற்கு வங்கி பொறுப்பு ஏற்காது.

புதிய வருமான வரிவிதிப்பு... வரிகளைச் சேமிக்க இந்த விலக்குகள் உங்களை அனுமதிக்கிறது...!

February 14, 2023 0

 வரியைச் சேமிக்க எந்த வருமான வரி முறை சிறந்தது என்பதில் வரி செலுத்துவோர் மத்தியில் எப்போதும் குழப்பம் இருந்து கொண்டுதான் உள்ளது. சில சந்தர்ப்பங்களில், விலக்குகள் காரணமாக பழைய வரி முறை சிறப்பாக இருக்கும். மற்ற சந்தர்ப்பங்களில், புதிய வரி முறை தேர்வு செய்யப்பட வேண்டும். பழைய வரிவிதிப்பானது, 80C, 80D மற்றும் 80CCD போன்ற அதிக எண்ணிக்கையிலான விலக்குகளை வழங்கினாலும், புதிய வரி விதிப்பு வரி செலுத்துவோர் கோரக்கூடிய சில விலக்குகளையும் கொண்டுள்ளது.

நிலையான விலக்கு ரூ.50,000
இந்தாண்டு 2023 பட்ஜெட்டில், புதிய வரி முறைக்கு ரூ.50,000 நிலையான விலக்கின் பலனை அரசாங்கம் நீட்டித்துள்ளது. எந்தவொரு ஆவணத்தையும் முதலாளியிடம் சமர்ப்பிக்காமலேயே இந்த விலக்கு கோரப்படலாம். அதன்படி, ஒரு முதலாளி, சம்பளத்தின் மீதான வரிகளைக் கணக்கிடும் போது, நிலையான விலக்குகளை தானாகவே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.

நீங்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், புதிய வரி விதிப்பின் கீழ் நீங்கள் ரூ.15,000 நிலையான விலக்கு பெறலாம். குடும்ப ஓய்வூதியம் பெறுபவருக்கான வருமானம், ‘பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2023 பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சம்பளம் பெறும் தனிநபருக்கு ரூ. 50,000 நிலையான விலக்கு, மற்றும் ரூ.15,000 வரை குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம், தற்போது பழைய வரிவிதிப்புகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்புகளுக்கு கீழும் இந்த இரண்டு விலக்குகளையும் அனுமதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

உங்கள் NPS கணக்கில் உங்கள் முதலாளி பங்களித்தால், சம்பளம் பெறும் பணியாளராக, மொத்த வருவாயில் இருந்து செய்யப்பட்ட பங்களிப்பிற்கு விலக்கு கோர நீங்கள் தகுதியுடையவர் ஆவர். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD (2) இன் கீழ் இந்த விலக்கு கோரப்படுகிறது.

அக்னிவீர் கார்பஸ் நிதிக்கான பங்களிப்புகள்
பட்ஜெட் உரையில், புதிதாக முன்மொழியப்பட்ட வருமான வரிச் சட்டத்தின் 80CCH பிரிவின் கீழ் அக்னிவீர் கார்பஸ் ஃபண்டிற்குச் செலுத்தப்பட்ட, டெபாசிட் செய்யப்பட்ட எந்தத் தொகையும் அக்னிவீரனால் வருமானத்தில் இருந்து கழிவாகக் கோரப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இது கடந்த 2022 அக்னிபாத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அக்னிவீரர்களால் அக்னிவீர் கார்பஸ் நிதியிலிருந்து பெறப்பட்ட கட்டணம் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அக்னிவீரரோ அல்லது மத்திய அரசோ அவரது சேவா நிதிக் கணக்கில் அளித்த பங்களிப்பில் மொத்த வருமானத்தைக் கணக்கிடுவதில் விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பின்படி, அக்னிபாத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனிநபராக இருந்து, நவம்பர் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அக்னிவீர் கார்பஸ் நிதிக்கு சந்தா செலுத்தும் மதிப்பீட்டாளர், சட்டத்தில் 80CCH என்ற புதிய பிரிவைச் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. 2022, அவர் டெபாசிட் செய்த மொத்தத் தொகையையும், அக்னிவீர் கார்பஸ் ஃபண்டில் உள்ள அவரது கணக்கில் மத்திய அரசு செலுத்திய தொகையையும் அவரது மொத்த வருமானத்தில் கழிக்க அனுமதிக்கப்படும்.


ஃபிக்ஸட் டெபாசிட் - கவனிக்க 4 வேண்டியவை

February 14, 2023 0

 ரிஸ்க் இல்லாத நிரந்த வருமானம் தேவை நினைப்பவர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லாம். வழக்கமாக தனியார்கள் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்தான் டெபாசிட்டு அதிக வட்டி வழங்கும். ஆனால் தற்போது தனியார் வங்கிகள் மட்டும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகளும் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டு அதிக வட்டி வழங்க தொடங்கி உள்ளன. யார் அதிக வட்டி வழங்குவது என்ற போட்டில் வங்கி அல்லாத நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அதிக வட்டி வழங்குகின்றன. தினமும் டெபாசிட் வட்டி உயர்வு குறித்த தகவல்கள் அப்டேட் ஆகி கொண்டே இருக்கின்றன. டெபாசிட் செய்வதற்கு முன்பு என்னென் விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்


பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு எத்தனை ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப முதலீட்டு காலத்தை நிர்ணயித்து கொள்ளலாம். பிக்ஸ்ட் டெபாசிட்டுகள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முடியும். சிறப்பு டெபாசிட் திட்டங்களை அனைத்து வங்கிகளும் வைத்துள்ளன. இதில் டெபாசிட் செய்யும் போது கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

டெபாசிட் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்பதையும் கவனிப்பது அவசியம். முதலீட்டின் கால அளவுக்கு ஏற்ப வட்டி விகிதம் இருக்கும். வட்டி விகிதத்தை வைத்து மட்டும் இல்லாமல் அந்த வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். முதலீடு மீதான வட்டி எப்படி உங்களுக்கு தேவை என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். அதாவது காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் உங்கள் வங்கி கணக்கீல் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறையும் வட்டி விகிதம் கிடைக்கும். ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு அதிகமாக வட்டி வருமானம் கிடைக்கும் போது அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

டெபாசிட் முதலீட்டு காலம் முடிவதற்கு முன்பே டெபாசிட்டை திரும்ப பெறும் போது சில வங்கிகள் அதற்கு கட்டணம் விதிக்கின்றன. அதாவது தவிர்க்க முடியாத காரணத்தினால், ஃபிக்ஸட் டெபாசிட் காலம் முதிர்வடைதற்கு முன்பே எடுக்கும் போது அபாரதம் இருக்கும். இந்த அபாரதம் எவ்வளவு என்பதையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் முதலீடு செய்யும் போது அதற்கான ரேட்டிங் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். ஏஏஏ ரேட்டிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். கிரேடிட் ரேட்டிங் பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ICRA,CRISIL உள்ளிட்ட நிறுவனங்கள் ரேட்டிங் வழங்கி வருகின்றன.

தப்பித்தவறி கூட இந்த விஷயங்களை உங்க குழந்தை முன் பண்ணாதீங்க!

February 14, 2023 0

 குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். கண்ணாடியை போன்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே, அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும். அந்தவகையில், குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துதல் : உங்கள் குழந்தையின் முன் நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளின் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். எனவே, அதை அவர்கள் மற்றவர்களிடம் கூறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

குழந்தையின் முன் சண்டையிடுதல் : உங்கள் குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குழந்தையின் மன அமைதியை பாதிப்பதோடு, அவர்களை கடின உள்ளம் கொண்டவர்களாக மாற்றும். நாம் செய்யும் அனைத்து செயலையும் அவர்கள் அப்படியே வெளியுலகத்தில் பிரதிபலிக்கலாம்.

குழந்தையின் முன் மது / புகையிலை பழக்கம் : உங்கள் குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம். ஏனென்றால், நமது குழந்தைகள் பல விஷயங்களை நம்மை பார்த்து கற்றுக்கொள்வார்கள். அதுமட்டும் அல்ல, நாம் தந்தை செய்யும் பழக்கம் சரி தான் என நம்ப நேரிடும். எனவே, குழந்தைகளின் முன் தீய பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்.

மற்றவரை பற்றி இழிவாக பேசுதல் : குழந்தைகளின் முன், மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம். அப்படி செய்வதால், அந்த நபர் பற்றி, குழந்தைகள் தங்கள் மனதில் தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்ள இயலும்.

மற்றவர்களுடன் ஒப்பிடுதல் : மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். இவ்வாறு செய்வது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, உங்கள் குழந்தைகள் முன் அவன் அப்படி.. இவன் இப்படி என ஒப்பிட வேண்டாம். இது, குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

எலக்ட்ரானிக் கேஜெட் பயன்பாடு : ஸ்மார்ட்போன், மடிக்கணினி, ஹெட்போன், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பயன்படுத்துவது அவர்களை தனிமையாக உணர வைக்கும்.

மனைவியை துன்புறுத்தல் : குழந்தைகளின் முன் உங்கள் மனைவியை திட்டவோ அல்லது அடிக்கவோ வேண்டாம். ஏனென்றால், குழந்தைக்கு அவர் தாய். நீங்கள் அவரை அடிக்கடி திட்டினால், அவர் தனது தாயை கெட்டவராக நினைத்து விடுவார். இதனால், இவர்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும்.

கடன் கேட்பது அல்லது வாங்குவது : குடும்பத்தில் நிதிச்சுமை இருப்பது இயல்பான ஒன்று. இருப்பினும், நிதிச்சுமையை போக்க நாம் நமக்கு தெரிந்த அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அதை உங்கள் குழந்தையின் முன் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், அவர்கள் அது நல்ல விஷயம் என அவர்கள் நினைக்க நேரிடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகம் உணர்ச்சி வசப்படும் நபரா நீங்கள்..? உங்களை கன்ட்ரோல் செய்யும் வழிகள்..!

February 14, 2023 0

 உணர்ச்சி வசப்படுவது (Emotionally Reactive) என்பது நம்மில் பலருக்கு ஏற்படும் எதார்த்தமான ஒரு செயல் தான். சில சூழல்களில் அதிக உணர்ச்சி வசப்படுவதால் தேவையில்லாத சண்டைகள், வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. இதோடு மன அழுத்தமும் ஒருபுறம் ஏற்படுகிறது. சில நேரங்களில் அதிக கோபத்தில் எதிர்மறையான விஷயங்களையும் நாம் செய்துவிடுகிறோம். இதுப்போன்ற சூழலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், சுய கட்டுப்பாடு முக்கியம் என்கிறார் உளவியலாளர் நிக்கோல் லெபெராவ்..

இதுக்குறித்து அவர் தெரிவிக்கையில், வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் நாம் உணர்ச்சி வசப்படும்போது சற்று பொறுமைக்காத்து நாம் ஏன் இவ்வாறு செய்கிறோம்  என்பதை சற்று சிந்திக்க வேண்டும் என்கின்றனர். மேலும் தினமும் ஆழ்ந்த சுவாசப்பயிற்சிகளைக் கொண்டாலே உணர்ச்சிகளினால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் சந்திக்கும் போது நிதானமாக இருக்க முடியும் என்கிறார்.

உணர்ச்சி ரீதியாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்கும் வழிமுறைகள் : வாழ்க்கையில் எமோசனல் ரியாக்ஷன் என்பதை அனைவரும் சந்தித்திருப்போம். இந்த நேரத்தில் நமது மனதில் ஏதோ பதற்றம் மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பல்வேறு உடல் உணர்வுகளை நாம் அனுபவிக்க நேரிடும். இதுப்போன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்கிறோம்? ஏன் தேவையில்லாத கோபம் மற்றும் உணர்ச்சி ஏற்படுகிறது? என்பதை யோசிக்க வேண்டும். சில நிமிடங்களுக்கு நம்மை அமைதிப்படுத்த வேண்டும். இதோடு ஏதாவது ஒன்றிற்குப் பதிலளிப்பதற்கு முன்னதாக அமைதி காக்க வேண்டும்.

நம்மை அறியாமல் சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் போது, நரம்பு மண்டலத்தில் ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த சூழலில் நாம் அமைதிக்காக்க வேண்டும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நமது உடலை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.குறிப்பாக எந்தவொரு விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலும், நிதானம் தேவை. இது பல எதிர்மறையான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.ஓய்வு, அமைதிக்காத்தல், ஆழ்ந்த சுவாசப்பயிற்சி போன்றவைத் தான் எமோசனல் ரியாக்ஷனால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

எமோசனஸ் ரியாக்சனால் ( உணர்ச்சி வசப்படுதல்) ஏற்படும் பாதிப்புகள்: வாழ்க்கையில் நாம் சில நேரங்களில் மேற்கொள்ளும் தேவையில்லாத உணர்ச்சிகள் நம்முடைய மனதை மட்டும் பாதிக்காமல் பல உடல் நலப்பிரச்சனைகளையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இதனால் சிறுநீர் அமைப்பு, சுவாச உறுப்புகள், முழு இரைப்பை குடல் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் போன்ற பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

இதோடு மனச்சோர்வு, புற்றுநோயியல், ஆட்டோ இம்யூன் நோய்கள் போன்றவை நாம் மேற்கொள்ளும் மோசமான உணர்ச்சிகளால் நமக்கு ஏற்படுத்துவதோடு, மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்தும் வகையில் அமைகிறது.

ஒவ்வொருவரும் ஆத்திரத்தில் கோபம் அடைவது நம்முடைய மனதை மட்டும் இல்லாமல் உடலில் பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே தான் மனதை ஒருநிலைப்படுத்துவதற்குத் தியானம், ஆழ்ந்த சுவாசப்பயிற்சி, நிதானம் போன்றவை தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கேரியரை மாற்றிக்கொள்ளலாமா என குழப்பத்தில் இருக்கீங்களா.? உங்களுக்கான சில டிப்ஸ்!

February 14, 2023 0

 நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது பணிகளில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், புதிதாக ஒன்றை முயற்சி செய்யவதற்கு தயக்கம் தேவை இல்லை. மகிழ்ச்சியற்ற தொழில் வாழ்க்கையை தொடர்ந்து இருப்பது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் கடினமாக மாற்றுகிறது.



எனவே மக்கள் பல காரணங்களுக்காக தங்கள் தொழில் வாழ்க்கையை மாற்ற முற்படுகிறார்கள். இதற்கு குறிப்பிட்ட வேலையில் இணைத்துக் கொள்ள விரும்பும் புதிய ஆர்வங்களை ஒருவர் கண்டுபிடித்திருக்கலாம் அல்லது இப்போது இருக்கும் வேலையில் கிடைப்பதை விட இன்னும் அதிக பணம் சம்பாதிக்க விரும்புவது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். நீங்களும் பலரை போல இந்த ஆண்டில் உங்கள் தொழில் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறீர்களா.! இங்கே உங்களுக்கான சில முக்கிய டிப்ஸ்களை பார்க்கலாம்.



புதிய துறை பற்றி ஆராய்ச்சி : நீங்கள் மாற விரும்பும் புதிய ஃபீல்ட் பற்றி புரிந்து கொள்ள மற்றும் அந்த துறை அல்லது வேலையை பற்றிய அறிவை பெற ரிசர்ச் மிகவும் முக்கியம். எனவே நீங்கள் புதிதாக நுழைய விரும்பும் தொழில் துறையில் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்துங்கள். அந்த துறையில் இருக்கும் வேலை தேவைகள் மற்றும் அதில் நுழைய உங்களுக்குத் தேவையான திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளுங்கள்.

நெட்ஒர்க் : நெட்வொர்க்கிங் என்பது உங்களுக்கு தேவைப்படும் துறைகளில் அறிவு, திறனை பெற மற்றும் உங்கள் புதிய கேரியரை உருவாக்க உதவும் பயனுள்ள நபர்களை சந்திப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் நுழைய விரும்பும் துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களுடன் கனெக்ட்டாக இருங்கள் மற்றும் உங்கள் நெட்வொர்க்கை உருவாக்க ஈவன்ட்ஸ் மற்றும் ஒர்க்ஷாப்களில் கலந்து கொள்ளுங்கள்.

ரெஸ்யூமை அப்டேட் செய்யுங்கள் : உங்கள் பழைய ரெஸ்யூமை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் அது நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை தராது. எனவே அப்டேட் செய்யப்பட்ட ரெஸ்யூமை ரெடி செய்து கொள்ளுங்கள். உங்கள் லிங்க்ட்இன் ப்ரொஃபைலையும் சேர்த்து அப்டேட் செய்ய மறக்காதீர்கள். ஏனெனில் இது உங்கள் ப்ரொஃபஷ்னல் ப்ரொஃபைலை மதிப்பிட ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு உதவும். குறிப்பாக உங்கள் ரெஸ்யூமில் நீங்கள் நுழைய விரும்பும் புதிய துறைக்கு ஏற்ப உங்களிடம் இருக்கும் திறன்களை குறிப்பிட்டு பாயிண்ட்ஸ்களை சேர்த்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய எக்ஸ்பீரியன்ஸ் : நீங்கள் புதிய துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அந்த துறை சார்ந்து உங்கள் திறன்களை வளர்த்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட துறை சார்ந்த கோர்ஸ்களை எடுத்து படிப்பது, சான்றிதழ்களை பெறுவது அல்லது குறிப்பிட்ட புதிய துறையில் வாலன்டியரிங் செய்வது உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.

நெகிழ்வாக இருங்கள் : நீங்கள் புதிய துறை அதே சமயம் உங்களுக்கு மிகவும் ஆர்வமான துறையில் வேலைக்காக நுழைய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் உங்களது மைண்ட் செட்டை நெகிழ்வாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் நுழைய போகும் புதிய துறையில் உங்களது போஸ்ட்டிங் என்ட்ரி-லெவலாக இருக்கலாம் அல்லது நீங்கள் எதிர்பார்ப்பதை விட குறைந்த ஊதியம் கொடுக்கலாம். எனினும் நீங்கள் விரும்பி வேலைக்கு சேரும் குறிப்பிட்ட துறையில் சிறந்த அனுபவத்தை பெறவும் காலப்போக்கில் பெரிய அளவில் முன்னேறவும் உதவும். எனவே எதற்கும் தயாராக இருங்கள்.

நம்பிக்கை அவசியம் : உங்கள் கேரியரை மாற்றி கொள்ள விரும்பினால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான விஷயம் விடாமுயற்சியுடன் இருப்பது மற்றும் உங்கள் மீதும் உங்கள் திறன்கள் மீதும் முதலில் நம்பிக்கை கொள்வது. நெட்வொர்க்கிங்கில் கவனம் செலுத்துவது, கற்று கொள்வது மற்றும் உங்கள் புதிய துறையில் வாய்ப்புகளை தீவிரமாக தேடுவது உள்ளிட்டவையும் இருக்க வேண்டும். முயற்சிகளில் தோற்றால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிப்பது உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்.


அறிகுறிகளே வெளிப்படாவிட்டாலும் நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரியுமா?

February 14, 2023 0

 நம் உடலின் முக்கிய உள்ளுறுப்புகளாக கருதப்படும் சிறுநீரகங்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் நச்சுகளையும், அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டும் வேலையை செய்கின்றன.

இன்னும் பல முக்கிய நன்மைகளை அளிக்கும் சிறுநீரகங்கள் பிற உள்ளுறுப்புகளை போல பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று உலகம் முழுவதும் பொதுவாக காணப்படும் க்ரோனிக் கிட்னி டிசீஸ் (chronic kidney disease - CKD) அதாவது நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகும். இது பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக படிப்படியாக சிறுநீரகம் செயலிழந்து வரும் நிலையாகும். இதில் சிறுநீரகங்களில் சேதம் நீண்ட காலத்திற்கு மெதுவாக நிகழ்வதன் விளைவாக உறுப்புகள் தேவையான அளவு ரத்தத்தை வடிகட்ட முடியாமல் போகிறது.

நாள்பட்ட சிறுநீரக நோய் அறிகுறிகள்:

பொதுவாக CKD-யின் அறிகுறிகளில் கணுக்கால் வீக்கம், பாதம் அல்லது கைகள் வீங்குவது, சோர்வு அல்லது அதீத களைப்பு, மார்பில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரில் ரத்தம் வெளிவருவது உள்ளிட்ட அறிகுறிகள் அடங்கும். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்த சோகை, எலும்பு நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் ஏற்படலாம். எனினும் சிறுநீரகங்கள் விதிவிலக்கான உறுப்பாக இருந்தது பல நன்மைகளை செய்து வருவதால் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து அவை மெதுமெதுவாக சேதமடைய தொடங்கினாலும் அதற்கான அறிகுறிகள் குறிப்பிடும்படி இல்லை மற்றும் இந்த அறிகுறிகள் பொதுவாக ஆரம்ப கட்டத்தில் வெளிப்படுவதில்லை.

சிறுநீரகங்களில் பாதிப்புகள் அதிகமாகும் பட்சத்தில், மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிகுறிகளாக சில நேரங்களில் வெளிப்படும். எனவே CKD-யை பொறுத்தவரை அறிகுறிகள் என்பது பாதிப்புகள் தீவிரமான பிறகே வெளிப்படும் என்பதால் ஒருவர் தனக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதை முன்கூட்டியே முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் தான் அறிகுறிகளே இல்லாவிட்டாலும் கூட நாள்பட்ட சிறுநீரக நோயை தடுக்க ஒருவர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

முன்னெச்சரிக்கை:

ஒருவர் தனக்கு CKD அபாயம் ஏற்பட கூடாது என்று விரும்பினால் அவர் தனது உடலில் ஆரோக்கியமான அளவு கொலஸ்ட்ரால், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதை உறுதி செய்து அதனை தொடர்ந்து பராமரிப்பதே சிறந்த வழி என்கின்றனர் நிபுணர்கள். ஏனென்றால் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களை சிரமப்படுத்தலாம். அதே சமயம் அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய நாளங்களில் கொழுப்பு படிவுகள் (fatty deposit) உருவாகலாம். இரண்டுமே சிறுநீரகங்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கலாம். மறுபுறம் ரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருந்தால் அது சிறுநீரகங்களில் உள்ள சிறிய ஃபில்ட்டர்களை சேதப்படுத்தும்.

பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்:

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு ஆரோக்கியமற்ற முறையில் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே ஒருவர் ஆல்கஹாலின் மிதமான நுகர்வை பழகி கொள்ளலாம்.
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான மற்றும் சீரான டயட்டை கடைபிடிப்பது அவசியம்.
அதிகமான நான்-ஸ்டெராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID கள்) எடுத்து கொள்வது அல்லது நீண்ட காலத்திற்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வது சிறுநீரக ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம். NSAID-க்கான எடுத்துக்காட்டுகளில் Aspirin மற்றும் Ibuprofen அடங்கும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற இதய நோய்கள் இருந்தால் அவற்றை சரியாக நிர்வகிப்பதற்கும் சிறுநீரகங்கள் நன்கு செயல்படுவதற்கும்  சீரான உணவு முறை அவசியம்.

நீங்கதான் உங்களுக்கு பாஸ்..! மனநல நிபுணர் சொல்லும் தன்னம்பிக்கைக்கான மந்திரம்..!

February 14, 2023 0

 

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் விடா முயற்சி, தன்னம்பிக்கை போன்றவை அவசியம். அதே சமயம், நம் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால் வளர்ச்சியை நோக்கிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மனநல நிபுணர் கரோல் தேவக். “கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் பண்பு போன்றவற்றுடன் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்” என்கிறார் அவர். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஊக்குவிக்குமாம். இந்த வழிமுறையை பின்பற்றும்போது நமக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வளர்ச்சியை முன்னிறுத்திய தன்னம்பிக்கை நமக்குள் உருவாகி விட்டால், எளிமையாக கிடைக்கின்ற விஷயங்களை புறந்தள்ளிவிட்டு, புத்தம்புது சவால்களை ஏற்க மனம் தயாராகும். ஏதோ ஒரு விஷயம் கடினமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்து விடாமல், அதில் உள்ள சவாலை ஏற்று கொண்டு, தடைகளை தாண்டி அதை பூர்த்தி செய்ய மனம் விரும்பும்.

தோல்விகளை கண்டு உங்கள் மனம் உடைந்து போகாது. அதில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக கருதுவீர்கள். மேலும் தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். வளர்ச்சி மனநிலையை உருவாக்கிக் கொள்ளும்போது நம் மனம் நீண்டகால இலக்குகளை நோக்கி பயணிக்கும் மற்றும் மிகக் கடினமான சூழல்களை கூட எதிர்த்து நிற்கும் பக்குவத்தை வளர்க்கும்.

பலம், பலவீனங்களை உணர்ந்து கொள்வது  : நாம் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும், நம் மனதில் வளர்ச்சியை நோக்கிய பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், முதலில் நம்மிடையே உள்ள பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து கொள்ள பழக வேண்டும். நம்மை நாம் உணர்ந்தால்தான் பலவீனமான விஷயங்களை மேம்படுத்த முடியும்.

இலக்கு நிர்ணயம்  : எதார்த்த உலகில் சாத்தியமுள்ள இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணிப்பது புத்திசாலித்தனம் ஆகும். நடக்காத ஒன்றை கற்பனை செய்துவிட்டு, அப்படியே ஒதுங்கி விடுவதைக் காட்டிலும், இது நடக்கும், நடக்க வேண்டும் என்ற மன உறுதியோடு திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படலாம்.

தோல்வியை ஏற்க வேண்டும்  : வாழ்வின் அனைத்து தருணங்களிலும் வெற்றி கண்டுவிட முடியாது. ஏதோ சில தருணங்களில் சில தவறுகள் காரணமாக தோல்வி ஏற்படுவது இயல்பானதுதான். அதைக் கண்டு மனம் உடைந்து விடாமல் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும். எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பக்குவப்பட வேண்டும்.

பிறரின் கருத்தறிய வேண்டும் : நாம் மட்டுமே புத்திசாலி, நமக்கு எல்லாமே தெரியும் என்ற மமதையில் இருக்க முடியாது. ஒவ்வொரு சந்தர்பத்திலும் வெவ்வேறு மக்களிடம் இருந்து நாம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். கேட்டறிந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமானதாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் அனுபவஸ்தர்களின் கருத்து நமக்கு பேருதவியாக அமையும்.

புதிய சவால்களை ஏற்பது  : ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் அமர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிய சவால்களை ஏற்க பழக வேண்டும். புதிய சவாலுக்கு ஏற்ற வகையில் நமது நம்பிக்கை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, நம்மைச் சுற்றியிலும் எதிர்மறை சிந்தனை உள்ளவர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. நேர்மறை சிந்தனை கொண்டவர்களை வைத்துக் கொண்டால் வெற்றியை நோக்கிய ஊக்கம் கிடைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சின்ன சின்ன விஷயமும் உங்களை டிஸ்டர்ப் பண்ணுதா..? இதை கட்டாயம் படியுங்கள்..!

February 14, 2023 0

 நம்மில் அதிகம் பேர் உணர்வுபூர்வமாக செயல்படக்கூடியவர்களாகவும் பல விஷயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு மிகுந்த கவலைக்கு உள்ளாகும் தன்மையை கொண்டுள்ளவராகவும் இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்ட குணமுடையவர்கள் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத சில விஷயங்களை கூட மனதில் போட்டுக் கொண்டு அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவர். ஆனால் இப்படி வாழ்வது என்பது ஆரோக்கியமானது அல்ல. இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இவ்வாறு அனைத்து விஷயங்களையும் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு அடிப்படையாக பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

தன்னைப் பற்றி எதிர்மறையாக பேசுதல் : சிலர் தங்களைப் பற்றிய குறைவாக எடை போட்டுக் கொள்வதும், தங்களையே அடிக்கடி குற்றம் சொல்லும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள். எனவே வாழ்க்கையில் ஏதேனும் எதிர்மறையான செயல்கள் நிகழும்போது, அது உங்களால் தான் நிகழ்ந்தது என மிக எளிதாக நம்பி உங்கள் மீது பழியை போட்டுக்கொண்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவீர்கள்.

சிறுவயதில் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள்  : பலருக்கும் தன்னுடைய இளமைப் பருவத்தில் போதுமான அளவு பெற்றோர்களின் துணையோ அல்லது அடிக்கடி கேலி கிண்டல் போன்ற விஷயங்களினால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ இது போல அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

சுய மரியாதை குறைவு : உங்களிடம் சுயமரியாதையானது குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்போதுமே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். விஷயங்களை தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்வதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமையும்.

பரிபூரணமாக நினைத்துக் கொள்வது  : தாங்கள் முழுமையான ஒரு மனிதராகவும் எது செய்தாலும் குறையில்லாமல் செய்வதாகவும் நினைத்துக் கொள்பவர்களிடம் யாரேனும் சில விமர்சனங்களை கூறினால் இவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்

மன அழுத்தம் அல்லது மனசோர்வு : மன அழுத்தம் அல்லது மனசோர்வு இருக்கும் போது யாரேனும் உங்களிடம் எதையேனும் கூறினால் அதனை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதுவும் கூட விஷயங்களை நீங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்துக் கொள்ள ஒரு காரணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து வெளி வருவதற்கு சில குறிப்புகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் மற்றவர்கள் தங்கள் மனதினுள் இருப்பதைத்தான் பேசுவார்களே தவிர, உங்களைப் பற்றிய எண்ணங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதாவது சில நேரங்களில் மற்றவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளலாம். ஆனால் அது உண்மையாகவே அவர்களது தனிப்பட்ட குணத்தின் வெளிப்படாத தான் இருக்கும்.

அதுபோல சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஏமாற்றம் அடைபவர்கள் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் ஏற்படும் என்பதையும், அதில் தவிர்க்க முடியாது என்பதையும், அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பது பற்றி தான் யோசிக்க வேண்டும். மற்றவரோடு இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை எனில், அதற்கு உங்கள் மீது மட்டும் குறை இருப்பதாக கூற முடியாது. ஏனெனில் ஓர் உறவில் விரிசல் ஏற்படுவதற்கு இரண்டு புறமும்கூட பிரச்சனைகள் இருக்கலாம். எனவே உங்களது மனநிலைக்கு ஒத்துப் போகும் ஒருவரிடம் நெருக்கமாக இருப்பது நல்லது.

அனைவரிடமும் உதவிக்காக கையேந்துவதும் கூடாது. ஒருவேளை அவர்கள் உதவி செய்ய மறுக்கும் பட்சத்தில் அல்லது நமக்கு மரியாதை கொடுக்காமல் இருந்தாலும் நாம் ஏமாற்றம் அடைவோம். இவை அனைத்தையும் விட உங்களால் அனைவருக்கும் உதவ முடியாது என்பதையும் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே மன நிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளநீர் முதல் தக்காளி வரை... சிறந்த கண் பார்வைக்கு உதவும் 5 பானங்கள்.!

February 14, 2023 0

 தற்போதைய நவீன கால வாழ்க்கை முறையில் நம்மில் பெரும்பாலானோர் தினசரி கம்ப்யூட்டர்ஸ், டேப்லெட்ஸ், டிவி அல்லது மொபைல் என எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பல மணி நேரம் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் டிவைஸ் ஸ்கிரீன்களில் அதிக நேரம் செலவழிப்பது கண்புரை, குளுக்கோமா, கண்கள் உலர்தல், மோசமான நைட் விஷன் மற்றும் பிற கண் கோளாறுகளை ஏற்படுத்த கூடும்.

கண் சார்ந்த கடுமையான சிக்கல்களை தவிர்க்க விரும்பினால் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் , வைட்டமின்ஸ், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான டயட் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் கண் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும்.

நீங்கள் டயட்டில் இருப்பவர் அதிகம் மென்று திங்கும் உணவுகளை சேர்த்து கொள்ள விரும்பவில்லை என்றால் சத்தான பழங்கள், காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை சேர்த்து கொள்ளலாம். ஆரஞ்சு முதல் இளநீர் வரை உங்கள் பார்வையை மேம்படுத்த உதவும் 5 ஆரோக்கியமான பானங்கள் இங்கே.

ஆரஞ்சு ஜூஸ் : ஆரஞ்சு ஜூஸ் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானமாக இருக்கிறது. பழக்கடைகளில் எளிதில் கிடைக்க கூடியது. வைட்டமின் சி அதிகம் காணப்படும் பழங்களில் ஆரஞ்சு முக்கியமானது. இது கண்புரை உருவாவதற்கான அபாயத்தை குறைக்கிறது. கண்களின் ரத்த நாளங்களுடைய வலிமை மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்க ஆரஞ்சு ஜூஸ் உதவுகிறது. வயிற்றில் இருக்கும் கருவின் பார்வை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான பி வைட்டமினான ஃபோலேட் ஆரஞ்சு ஜூஸிலும் உள்ளது.

ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் : இது ABC ஜூஸ் என்று குறிப்பிடப்படுகிறது. கேரட்டில் காணப்படும் வைட்டமின் ஏ நைட் விஷனை ஷார்ப்பாக வைத்திருக்க மற்றும் பொதுவாக கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் காணப்படும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் உள்ளிட்ட சத்துக்கள் மாகுலர் மற்றும் விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மறுபுறம் ஆப்பிளில் நிறைந்திருக்கும் பயோஃப்ளவனாய்ட்ஸ் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பார்வையை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸை நீங்கள் தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த ABC ஜூஸ் சிறந்தது.

ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் : பச்சை இலை காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும் மற்றும் ஆரோக்கியமான பார்வை திறனை பராமரிக்க முக்கியமானவை. ப்ரோக்கோலி, கீரை மற்றும் காலே ஜூஸ் கலவையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் பார்வை திறனில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது.

தக்காளி ஜூஸ் : கண்களுக்கு தேவையான எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் தக்காளி ஜூஸில் உள்ளது. தக்காளியில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் பார்வை திறனை மேம்படுத்த உதவியாக இருக்கும். வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிட்டான லைகோபீன் தக்காளியில் உள்ளது.

இளநீர் : இளநீரில் வைட்டமின் சி மற்றும் பிற முக்கிய தாதுக்கள் மற்றும் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இவை கண்களின் பாதுகாப்பு திசுக்களை (protective tissues) மேம்படுத்த உதவுகிறது. அடிக்கடி இளநீர் குடிப்பது Glaucoma (கண் அழுத்த நோய்) அபாயத்தை குறைக்கிறது. Glaucoma என்பது கண்ணின் பார்வை நரம்பை சேதப்படுத்தும் ஒரு நிலைமை ஆகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆண்கள் சுய உதவிக் குழு: ரூ.10 லட்சம் வரை கடன்... நண்பர்களுடன் தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு

February 14, 2023 0

 பெரும்பாலும், சுய உதவிக் குழுக்கள் என்றாலே பெண்களின் அமைப்பு என்றளவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாட்டில் மொத்த 1.2 கோடி சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில், கிட்டத்தட்ட 12% குழுக்கள் ஆண்களால் நடத்தப்பட்டு வருகிறது.இருப்பினும் , இத்திட்டம் தொடர்பான போதிய விழிப்புணர்வு பலரிடத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுய உதவி குழு என்பது கிராம/நகர்ப்புற ஏழை மக்களுக்கான ஒரு சிறிய குழு. உறுப்பினர்கள் தங்களின் அரசியல்/சமுதாய/பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்வதற்காக தாமாக முன்வந்து அமைக்கப்படும் குழு ஆகும். குறைந்தது 20 உறுப்பினர்கள் தாமாக முன் வந்து இத்தகையதொரு குழுவை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய/மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக, தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கு ஆதார நிதியாக ரூ.10,000/- வீதம் மானிய நிதி வழங்கப்படுகிறது.

அதேபோன்று, சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் (Self Employment Program Individual) கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேற, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிக் கடனுக்கு எந்தவித அடமானங்களும் தேவையில்லை.

Self Employment Program Self Help Group (SEP - SHG) திட்டத்தின் கீழ், குறைந்தது 5 நபர்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி மூலம், வருவாய் தரும் திட்டங்களில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடலாம்.

தற்போது செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களை, அடுத்த கட்டமாக பெரிய உற்பத்தியாளர் கூட்டமைப்பாக வலுப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு கூட்டமைப்பும் பல ஆயிரம் உற்பத்தியாளர்களை கொண்டதாக இருக்கும். இந்த கூட்டமைப்புகள், பொருளாதாரங்களுக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஆதரவு வழங்கப்படும் என்றும் அறிவித்துளளது. எனவே, உங்கள்  பகுதியில் உள்ள ஒத்த கருத்துடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுய உதவி குழுவை அமைத்துக் கொள்ளுங்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தொழில் முனைவோர்களுக்கு குட் நியூஸ்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

February 14, 2023 0

சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 15.02.2023 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலையில் 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிறைவு செய்த அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். முதற்கட்ட முகாமில், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இறுதியில் பயிற்சியைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தொலைப்பேசி எண்கள் : 044 - 22252081, 22252082, 96771 52265, 8668102600.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IAS Exam Preparation: நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ் அதிகாரி! - அடிப்படை தகுதி முதல் தேர்வுமுறை வரை- முழு விபரம் இதோ!

February 14, 2023 0

 2023ம் ஆண்டு குடிமைப் பணி முதல்நிலைத்  தேர்வுக்கான (Civil Services (Preliminary) Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப செயல்முறை வரும் 21ம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில் குடிமைப் பணி தேர்வு என்றால் என்ன... இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன... தேர்வு முறை என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே காண்போம்.

அரசுத் துறைகளின் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவைகள் புரியும் அனைத்து பணிகளும் குடிமைப் பணிகள்தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4, 2, 1 தேர்வுகள் மூலம் பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது. அதேபோன்று, அகில இந்திய அளவில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்பி வருகிறது.

இந்த குடிமைப் பணிகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அனைத்திந்திய குடிமைப் பணிகள் (All Indian service), மற்றொன்று மத்தியப் பணிகள் (Central Service). அனைத்திந்திய பணிகளின் கீழ், ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய மூன்று பணிகள் உள்ளன. அதேபோன்று, மத்தியப் பணிகளின் கீழ், ஐஆர்எஸ், இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் வருகின்றன. ஐஏஎஸ் போன்ற அனைத்திந்திய அலுவலர்கள், மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் பணி செய்வதற்காக பணி அமர்த்தப்படுகின்றனர். பொதுவாக, ஐஏஎஸ் அதிகாரிகள் மாநில அரசுகளின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், Deputation மூலம் மத்திய அரசு பணிகளுக்கு அழைக்கப்படலாம். அதே சமயம், மத்தியப் பணிகளின் கீழ் பணியமர்த்தப்படுவர்கள் இந்திய அரசின் கீழ் மட்டுமே  பணி செய்கின்றனர். இவர்கள் எந்தவொரு மாநில அரசுகளையும் சேராதவர்கள்.  

அனைத்திந்திய பணிகள்Indian Administrative ServiceIndian Forest ServiceIndian Police Service
மத்திய பணிகள்1. Indian Foreign Service,2.Indian Audit and Accounts Service, Group ‘A’,3. Indian Civil Accounts Service, Group ‘A’,4. Indian Corporate Law Service, Group ‘A’,5. Indian Defence Accounts Service, Group ‘A’,6. Indian Defence Estates Service, Group ‘A’,7. Indian Information Service, Group ‘A’,8. Indian Postal Service, Group ‘A’,9. Indian P&T Accounts and Finance Service, Group ‘A’10. Indian Railway Protection Force Service, Group ‘A’11. Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’12. Indian Revenue Service (Income Tax) Group ‘A’13. Indian Trade Service, Group ‘A’ (Grade III)14. Indian Railway Management Service, Group ‘A’15. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)16. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’17. Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar HaveliPolice Service (DANIPS), Group ‘B’18. Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’19. Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’


மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் சேர்த்தே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் குடிமைப் பணி தேர்வுகளை நடத்தி வருகிறது. தரவரிசைப் பட்டியலில் முதல் இடங்களில் வரும் தேர்வர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப் பணியை தேர்வு செய்து வருகின்றனர். அதன், காரணமாக இந்த தேர்வு ஐஏஎஸ் தேர்வு என்று கூறப்படுகிறது.

இந்த தேர்வுக்கு கல்வித் தகுதி என்ன?  ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. இந்த பட்டத்தினை உயர்கல்வி நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது தொலைதூர கல்வி மூலமாகவோ பெற்றிருக்கலாம்.

வயது வரம்பு:  21 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை? 

இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வு (Prelims Examination) , முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு).

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர். இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.

முதல் நிலைத் தேர்வு: 

முதல்நிலைத்  தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் ஒன்று - பொதுஅறிவு, தாள்- ii ஆங்கிலம் மற்றும் கணித அறிவு.  கேள்விகள் Multiple Choice Questions தன்மையில் இருக்கும். இரண்டாம் தாள் தகுதித் தேர்வாகும். மொத்த மதிப்பெண்ணில் 33% பெற்றால் போதுமானது.

தேர்வுகள்பாடம்கேட்கப்படும் கேள்விகள்ஒரு கேள்விக்கான மதிப்பெண்மொத்த மதிப்பெண்
முதல் நிலைத் தேர்வுபொதுப் பாடம் (தாள்-I)1002200
குடிமை பணி உளச்சார்பு தேர்வு (தாள்-II)802.5200
முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண்400

முதன்மைத் தேர்வு: 

முதல் தாளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வு 9 தாள்களைக் கொண்டது. விரிவான  வகையில் விடையளிக்க வேண்டும்.

பாடம்மதிப்பெண்
1.தாய்மொழி300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
2.ஆங்கிலம்300 (தேர்ச்சி பெற்றால் போதுமானது)
3கட்டுரை250
4தாள் - I (இந்திய வரலாறு, உலக வரலாறு,  இந்திய பண்பாடு )250
5தாள் - II (ஆட்சி நிர்வாகம், இந்திய அரசியலமைப்பு )250
6தாள் - III (இந்திய பொருளாதாரம், சுற்றுச்சூழல் )250
7.தாள் - IV (ஒழுக்கம், தார்மீக பொறுப்பு)250
8.விருப்பப்பாடம் ( தாள் - I )250
9விருப்பப்பாடம் ( தாள் - II )250
மொத்தம்1750

நேர்காணல் :

முதன்மைத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் தேர்வு மதிப்பெண்  275 ஆகும்.

தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும்: தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்றால், மூன்று தேர்வு நிலைகளிலும் தொடர்ச்சியாக தேர்ச்சி பெற வேண்டும். உதாரணமாக, நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்தாண்டு இந்த மூன்று தேர்வுகளையும் மறுபடியும் முதலில் இருந்தே எழுத வேண்டும்.  இதுவே, இந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பலருக்கும் சவாலாக இருக்கிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Result: டிஎன்பிஎஸ்சி துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு! செக் செய்வது எப்படி?

February 14, 2023 0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 டிசம்பர்  பருவத்திற்கான துறைத் தேர்வு முடிவுகளை (Departmental Examination) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, டிசம்பர் 2022-ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. கிட்டத்தட்ட 197 துறைத் தேர்வுகளுக்கு 12/12/2022 முதல் 21.12.2022 வரை நடத்தப்பட்டது. சென்னை, புதுடெல்லி உள்ளிட்ட 39 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றன.

இந்நிலையில், இரண்டாம் நிலை மொழித் தேர்வுக்கான (SECOND CLASS LANG TEST PART-“ A”-WRITTEN EXAMINATION) முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  10ம் வகுப்பில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக படிக்காமல்,  தமிழ்நாடு  அரசுத் துறைகளில் பணி செய்து வரும் அரசு ஊழியர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அடுத்தக் கட்டமாக நடைபெறும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய தளத்திற்கு செல்லவும்.

முகப்புப் பக்கத்தில், துறைத் தேர்வுகள் தேர்வு முடிவுகள் கிளிக் செய்ய வேண்டும்.

'RESULTS OF DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்தவுடன், தேர்வு முடிவுகள் பட்டியல் தோன்றும்.

தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news