கடலைப்பருப்பு, பொரிகடலை, சுண்டல், பயறு வகைகள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம்மில் பலர் இதை நம்முடைய உணவுமுறைகளில் சாப்பிட்டு வந்தோம். இந்த வரிசையில் பலர் அக்ரூட் பழங்கள் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.
ஆனாலும் பாதாமைத் தோலுடன் சாப்பிட வேண்டுமா? அல்லது ஊற வைத்து தோலை அகற்றி சாப்பிட வேண்டுமா? என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இதோடு பாதாமில் அதிக கொழுப்புகள் இருப்பதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்னென்ன நன்மைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்..
பாதாமில் ஆரோக்கிய நன்மைகள்:
நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாமில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பாதாமில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவைக்குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கலோரிகள்: பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள். அளவுக்கு அதிமாக சாப்பிட்டால் தான் அதிக கலோரிகள் உடலில் சேரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உடல் எடையைக்குறைக்க விரும்பும் நபர்கள் பாதாமை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறைந்தது தினமும் பாதாம் பருப்பு 25 அல்லது 30 கிராம் அளவிற்கு நீங்கள் சாப்பிடும் போது, இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கேடு விளைவிக்கும் கொலஸ்ட்ராலைக்குறைக்கவும் உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளதால் சில நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவியாக உள்ளது.
இதோடு பாதாம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. சுவாசக்கோளாறுகள், இருமல், ஆண்மைக்குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கவும் உறுதுணையாக உள்ளது.
ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:
பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடும் போது ஆன்டிஆக்ஸிடன்ட்டின்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் போலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எனவே உங்களுடை அன்றாட உணவு முறையில் பாதாமை நீங்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.