Agri Info

Adding Green to your Life

February 21, 2023

ஜிங்க் சத்து நிறைந்த டாப் 10 உணவுகள்.. மறக்காமல் தினமும் சேர்த்துக்கோங்க..!

February 21, 2023 0

 தினசரி உணவில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியம் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஏனென்றால், இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துகளில் ஒன்று ஜிங்க். இது நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் காய்கறிகள் மற்றும் அசைவத்திலிருந்தே உடலுக்குக் கிடைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க், சரும ஆரோக்யம், காயங்களை ஆற்றுதல் மற்றும் அலர்ஜி போன்றவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. முட்டை, மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் ஜிங்க் நிறைந்திருப்பது தெரிந்த பலருக்கும் காய்கறிகளிலேயே இந்த ஊட்டச்சத்து நிறைந்திருப்பது தெரிவதில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம். இது உடல், தோல், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் வலுவான தசைகளில் உள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகத்தின் தேவை அவசியமாகிறது. ஒரு நாளில் பெண்களுக்கு 8 மில்லி கிராம் ஜிங்க்கும், கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க்கும் தேவைப்படுகிறது. ஜிங்க் நிறைந்த உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கொண்டைக் கடலை : நாம் இயல்பாக உணவில் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று கொண்டைக் கடலை. இதில், அதிகமாக ஜிங்க் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அசைவ உணவு சாப்பிடாதவர்கள் தங்களது உடலுக்கான துத்தநாகத் தேவையை பூர்த்தி செய்ய விரும்பினால், கொண்டைக் கடலை எடுத்துக்கொள்ளலாம். இதில், துத்தநாகம் மட்டுமின்றி இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகளும் அடங்கி உள்ளன. ஒரு கப் வேக வைத்த கொண்டைக்கடலையில் அதிக அளவு ஃபைபர், புரதங்கள் மற்றும் 2.5 மி.கி துத்தநாகம் உள்ளது.

பயறு வகைகள் : பயறு வகைகள் துத்தநாகத்தின் சிறந்த மூலம். இதில், கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், புரதங்கள் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஒரு கப் பயறு வகைகளில் கிட்டத்தட்ட 4.7 மி.கி துத்தநாகம் உள்ளது. கறி வடிவில் வழக்கமான உணவில் அவற்றைப் பயன்படுத்துங்கள்.

பூசணி விதைகள் : பூசணி விதைகள் எண்ணற்ற உணவுகளில் சேர்க்கப்படும். ஒரு கப் பூசணி விதையில் 2.2 மி.கி அளவு துத்தநாக சத்து மற்றும் 8.5 மி.கி தாவர அடிப்படையிலான புரதங்கள் அடங்கி உள்ளன. பூசணி விதைகள் நிறைந்த உணவை உட்கொள்வது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. துத்தநாக குறைபாடு இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதைகள் எடுத்து கொள்ளலாம்.

தர்பூசணி விதைகள் : தர்பூசணி விதைகள் பழத்தை விட மிகவும் சத்தானவை. இதில், துத்தநாகம் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன. ஒரு சில தர்பூசணி விதைகளில் 4 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. நீங்கள் அவற்றை உலர்த்தி தினசரி ஸ்னாக்ஸாக கூட சாப்பிடலாம். தர்பூசணி விதைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

சணல் விதைகள் : சணல் விதைகள் ஊட்டச்சத்துக்களின் வளமான மூலம். இதில், நிறைவுறா கொழுப்புகள் மற்றும் துத்தநாகம் காணப்படுகின்றன. சுமார் 3 டேபிள்ஸ்பூன் சணல் விதைகளில் 3 மி.கி வரை துத்தநாகம் உள்ளது. இதில், அமினோ ஆசிட்ஸ் அர்ஜினைன் (amino acids arginine) நிறைந்துள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தயிர் அல்லது சாலட்களில் இந்த விதைகளை தூவி சாப்பிடலாம்.

பீன்ஸ் : கிட்னி மற்றும் கருப்பு பீன்சஸில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. இதில், ஃபைபர், புரதங்கள், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. ஒரு கப் சமைத்த கருப்பு பீன்ஸ்-யில் 2 மி.கி துத்தநாகமும், அரை கப் சமைத்த கிட்னி பீன்ஸ்-யில் 0.9 மி.கி துத்தநாகமும் உள்ளது.

ஓட்ஸ் : நம்மில் பலர் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது உண்டு. ஏனென்றால், அதில் எக்கச் சக்க ஊட்டச்சத்து உள்ளது. இதில், துத்தநாகம், ஃபைபர், ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் பீட்டா-குளுக்கன் ஆகியவை உள்ளன. அரை கப் ஓட்ஸில் 1.3 மி.கி துத்தநாகம் உள்ளது.

முந்திரி : இயற்கையான, தாவர அடிப்படையிலான துத்தநாக சத்தை பெற முந்திரி உதவுகிறது. முந்திரியை நீங்கள் அப்படியே அல்லது வறுத்து சாப்பிட்டால், உடலுக்கு சுமார் 1.5 மி.கி துத்தநாகம் கிடைக்கும். ஆரோக்கியமான கொழுப்பை ஊக்குவிக்கும் முந்திரியை சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் குறையும்.

தயிர் : குறைந்த கொழுப்புள்ள தயிர் அல்லது யோகர்ட் ஆரோக்கியமான குடலுக்கு நல்ல பாக்டீரியாவை தருகிறது. மேலும், போதுமான அளவு துத்தநாகத்தையும் வழங்குகிறது. ஒரு கப் தயிர் அல்லது யோகார்ட்டில் 1.5 மி.கி துத்தநாகம் உள்ளது.

டார்க் சாக்லேட் : 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 3.3 மி.கி துத்தநாகம் உள்ளது. ஆனால் டார்க் சாக்லேட்டில் கலோரிகள் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. எனவே துத்தநாக சத்தை மட்டும் பெற விரும்பினால் இனிப்பு இல்லாத டார்க் சாக்லெட்யை தேர்வு செய்யவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

February 21, 2023 0

 வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாகக் கூறப்படுகிறது. மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

 வைட்டமின் 'டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் 'டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம். நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. 

வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். 

அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும். நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் 'டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். 

மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் 'டி' தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் 'டி'யை பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் இருப்பதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? - தூங்குவதற்கு முன் இவற்றைச் சாப்பிடுங்க போதும்!

February 21, 2023 0


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ரூ.62,000 சம்பளம் வரை சம்பளம்... செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் டிரைவர் வேலை

February 21, 2023 0

 செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத்தலைப்பில் உள்ள 4 ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடத்திற்கு ரூ.19,500 முதல் தொடங்கி ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
ஈப்பு ஓட்டுநர்4ரூ.19,500 - 62,000

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 34 ஆகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) -ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கவும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)

நூலக கட்டிடம் 2 வது தளம்,

மருத்துவக் கல்லூரி வளாகம்,

செங்கல்பட்டு - 603 001.

விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023 மாலை 5.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெறும் திட்டம்: மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க காலக்கெடு

February 21, 2023 0

 பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணியாளர்களுக்கு அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வருங்கால வைப்பு  நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிப் பிடித்தம் கட்டாயம் பிடிக்கப்படுவது நடைமுறையில் இருந்தது.

அதாவது ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary), அகவிலைப்படியில்(Allowances) 12% தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும். அதே அளவு தொகையை நிறுவனமும் வழங்கும். தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக்கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12%, தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.65% வட்டி தரப்படுகிறது.

இந்நிலையில் ,ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கடந்த 2014ல்  சில திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.  அதன்படி,  இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகையை ரூ. 6500-ல் இருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தியது. மேலும், 01.09.2014 க்கு முன்னர் பணியில் சேர்ந்த தகுதியான பணியாளர்கள் அனைவரும்  தங்களது ஊதியத் தொகையில் 8.33 சதவீதத் தொகை பணியாளர் பங்காக செலுத்தி பயனடைய முடியும். மேலும், 2014க்கு முந்தைய  EPFO பயனாளர்கள் இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்த 6 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட பணியாளர்களும் தனியார்  நிறுவனமும் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி  ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியத்திற்கு பணியாளர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறையை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த புதிய நடைமுறைகள் குறித்தும் காலக் கெடுகளும் இருந்தும் தொழிலாளர்களுக்கு தெரியாத காரணத்தினால்,பெரும்பாலானோர் விண்ணப்பிக்கமால் இருந்து வந்ததனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சில முக்கிய உத்தரவுகளையும்  பிறப்பித்தது. அதன்படி, 2014க்கு முந்தைய  EPFO பயனாளர்கள் புதிய திட்டத்தின் கீழ் பயனடைய மார்ச்- 3 வரை காலக்கெடு கொடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்ததது.

இந்நிலையில், புதிய திட்டத்தின் கீழ் சேர்வதற்கான வழிகாட்டு நெறிமுறியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும், மார்ச் 3-ம் தேதிக்குள் இவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே,  2014க்கு முன்பு சேர்ந்த விண்ணப்பதாரர்கள், தங்கள் ஊதியத்  தொகையில் 8.33 சதவீதத் தொகை பணியாளர் பங்காக செலுத்தி கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு, பணியாளர்களும் தனியார்  நிறுவனமும் இணைந்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்கள் அறிய Pension on Higher Salary - online application for validation of joint option   இந்த இணைப்பக் கிளிக் செய்யலாம். 

மாதம் ரூ.60,000 சம்பளம்.. திருப்பூர் அரசு மருத்துவமனையில் வேலை

February 21, 2023 0

 திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் பணிக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.60,000 ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 08.03.2023 ஆம் நாள் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் கீழ் வருமாறு.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
மருத்துவமனை தர மேலாளர்145ரூ.60,000

கல்வித்தகுதி:

Hospital Administration பிரிவில் முதுகலைப் பட்டம் / Health Management பிரிவில் முதுகலைப் பட்டம் / Public Health பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் https://tiruppur.nic.in/என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் deangmctpr@gamil.comஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருப்பூர் - 641 604.

இப்பணிக்கு 15.03.2023 அன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. திருவாரூர் ஊராட்சி வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை

February 21, 2023 0

 திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஒன்றிய தலைப்பில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
அலுவலக உதவியாளர்2ரூ.15,700-50,000

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தது 18 வயது நிறைந்திருந்திருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்சம் 34 வயது ஆக உள்ளது. ஆதிதிராவிடர் பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயதாக உள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10.03.2023 மாலை 5.45 மணிக்குள் சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 20, 2023

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை

February 20, 2023 0

 நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இயங்கிவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை தொகுப்புதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது 40 ஆக உள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
புறத்தொடர்பு பணியாளர்1அதிகபட்சம் 40ரூ.10,592/-

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் களப்பணியில் அனுபவமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://www.nagapattinam.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து உரியச் சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

நாகப்பட்டினம் - 611003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023 மாலை 5.45 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


2 நாள் அரசின் இலவச இணையவழி பயிற்சி..! - தொழில்முனைவோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

February 20, 2023 0

 இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றன. எனவே ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் பந்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் (2 நாட்கள்) பயிற்சியினை வரும் 23.02-2023 தேதி முதல் 24.02.2023-ம் தேதி வரை (மதியம் 2:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் முறைகள், பல்வேறு வகையான போக்குவரத்துக்கள், பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரி அமைப்புக்கள், குறித்த அறிமுகங்கள், சுங்கத்துறை முகவர்களின் பணிகள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் முகவர்கள், விமான சரக்கு முகவர்கள், கப்பல் அல்லாத சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், கொள்கலன் சரக்கு நிலையம், உள்நாட்டு கொள்கலன் டிப்போக்கள் நடத்துபவர்கள், சரக்கு வகைகள், தட்டுப்படுத்தல், கொள்கலன்மயமாக்கல் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து, முழு கொள்கலத்தினை / குறைந்த கொள்கலன் ஏற்றுமதி, கப்பல் மற்றும் விமான சரக்கு செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து வகைகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் 2020, கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு, விமான வழி ரசீது மற்றும் முக்கிய சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் செயல்முறை சுங்க அனுமதி நடைமுறை அறிமுகம், சுங்க பிணைக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் போன்ற ஏற்றுமதிக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் http://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு முன்பதிவு செய்வது அவசியமாக உள்ளது.

தொடர்புக்கு :

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.

தொலைப்பேசி எண்கள் : 44-22252081/22252082 9677152265, 866810260.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


February 19, 2023

நைட் ஊற வச்சி காலையில் வெறும் வயித்துல இந்த 5 உலர் பழங்களை சாப்பிட்டால்...உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

February 19, 2023 0

 ட்ஸ்கள் மற்றும் உலர் பழங்கள் நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிக அவசியம். பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, அக்ரூட் பருப்புகள் போன்ற இந்த உலர் பழங்கள் ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும்.

நாம் அனைவரும் சிறிய வயதிலிருந்து உலர் பழங்களை சாப்பிட்டு வளர்ந்துள்ளோம். தினமும் ஓரிரு பாதாம் பருப்புகளை சாப்பிடும்படி நம் அம்மா எப்படி வற்புறுத்துவார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது நாம் வளர்ந்துவிட்டோம். உலர் பழங்களை சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஊட்டச்சத்துக்களின் புதையலாக இருக்கும் உலர் பழங்கள் ஒரு சுவையான சிற்றுண்டி விருப்பத்தை உருவாக்குகின்றன. உண்மையில், அவை உணவுக்கு இடையில் அல்லது நீங்கள் சிறிது பசியாக உணரும் போதெல்லாம் விரைவாக சாப்பிட சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.

சாதாரண பழங்களுடன் ஒப்பிடுகையில், உலர் பழங்கள் சேமிப்பது எளிதானது மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்டது. அவை முழு அளவிலான பழங்கள் என்பதால், குறைந்த அளவுகளில் அதிக செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. உலர் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் முதலில் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உலர் பழங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள். அபப்டி சாபபிடும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இது செரிமான அமைப்பை மேம்படுத்தும் மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவும். ஒரே இரவில் ஊறவைத்த பேரீச்சம்பழம் பக்கவாதம் மற்றும் பிற இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்தை குறைக்க உதவுகிறது. ஆல்கஹால் போதை மற்றும் ஹேங்கொவர் ஆகியவற்றைக் குறைக்கவும் அவை உதவியாக இருக்கும்.

பாதாம்

பாதாமை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தோலை நீக்கி சாப்பிடுவது நல்லது. இது அவற்றின் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பாதம் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. ஊறவைத்த பாதாம் வைட்டமின்கள், தாதுக்கள்,இரும்பு, பாஸ்பரஸ், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். அவை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உட்பட ஆரோக்கியமான கொழுப்புகளையும் கொண்டிருக்கின்றன. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மனதைக் கூர்மைப்படுத்துவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும்.

அத்திப்பழம்

இரவில் ஊறவைத்த அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. ஒரே இரவில் ஊறவைப்பதன் மூலம், அத்திப்பழங்கள் மிகவும் மென்மையாக மாறும். இதன் காரணமாக அவை எளிதில் ஜீரணமாகும். அத்திப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் பலவீனத்தை போக்க உதவும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையுடன் போராடினால், இந்த உலர் பழங்கள் உங்களுக்கான விருப்பமாக இருக்கும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையை சாப்பிடுவதற்கு முன் ஊறவைப்பது, பச்சையாக சாப்பிடுவதற்கு மாறாக ஆரோக்கியமான மாற்றாகும். வெளிப்புற தோலில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் கரைந்துவிடும். இதனால் உடலால் உறிஞ்சப்படும் சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. இது சோர்வைப் போக்கவும், உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தை சீராகச் சீரமைக்கவும், உங்கள் நாளுக்கு ஆரோக்கியமான தொடக்கத்தை அளிக்கவும் உதவும். உடலில் வெப்பத்தை உண்டாக்கும் விளைவைக் குறைக்கவும், ஊட்டச்சத்துக்களின் உயிர் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், அவற்றை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள்.

அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் பருப்புகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும். அவை வைட்டமின் ஈ, ஃபோலிக் அமிலம், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றையும் வழங்குகின்றன. வால்நட்ஸ் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும், அவை கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சுகரை குறைக்கும் கொள்ளு..! இதை உணவில் எப்படி சேர்த்துகனும் தெரியுமா..?

February 19, 2023 0

 கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

சர்க்கரைநோய் தடுக்கும்: நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்' எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்; உடல் வலுவாகும்.

உடல் எடையை குறைக்கும்: சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

புரதம் நிறைந்தது: அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பல் தேய்க்கும்போது இரத்தக் கசிவு இருக்கா..? அப்போ இந்த ஈறுகள் பராபரிப்பில் கவனம் செலுத்துங்க..!

February 19, 2023 0

 ஒவ்வொருவருக்கும் பற்கள் என்பது மிகவும் முக்கியமானவை ஆகும். உணவை நன்றாக அரைத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், நாம் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை உட்கொள்வதற்கு பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் முடியும். பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது ஈறுகள். ஈறுகள் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக நாம் பாதுகாக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே முதலில் நம்முடைய ஈறுகளின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஆரோக்கியமான ஈறுகள் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும். மேலும் நாம் பற் துலக்கும் போது அதிலிருந்து ரத்தம் வராமல் இருந்தால் மட்டுமே உங்களது ஈறுகள் ஆரோக்கியமாக உள்ளன என்று பொருள். ஆனால் உணவு பழக்கம், வயது, போன்ற பல்வேறு காரணிகள் நம்முடைய ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. ஈறுகளை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பதை பற்றிய சில குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

  • சரியான முறையில் தினசரி பற்களை சுத்தம் செய்ய வேண்டும்
  • தினசரி சரியாக பற்களை சுத்தம் செய்தால் தான் வாய் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மென்மையான டூத் பிரஷ் கொண்டு நமது பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நமது டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
  • பல் இடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்:

    நம்முடைய ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தினசரி உணவு உண்ட பிறகு பற்களின் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதன் மூலம் பிளேக் எனப்படும் பற்களில் உண்டாகும் கெட்டியான மாசு படிவங்களையும் சுத்தம் செய்ய இது உதவுகிறது.

    ஒருவேளை நாம் உண்ட உணவு பொருட்கள் மற்றும் பிளேக் ஆகியவை பற்களில் நீண்ட நாட்களுக்கு இருந்தால் அவை நாளடைவில் கெட்டியாகி டார்டார் எனப்படும் கெட்டியான ஒரு படிவமாக மாறி பாக்டீரியாக்கள் வளர்வதற்கு வழி செய்து விடும். இது உண்டானால் உங்களால் சாதாரணமாக பல் துலக்குவத்தின் மூலம் அவற்றை நீக்க முடியாது. ஒரு பல் மருத்துவரை அணுகி தான் உங்கள் பற்களை சுத்தம் செய்ய வேண்டி இருக்கும்.

    புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும்:

    புகைப்பிடிப்பது, பார்மசாலா, குட்கா போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை ஈறுகளில் ரத்த ஓட்டத்தை குறைத்து பல்வேறு நோய் தொற்றுகள் உருவாக வழிவகை செய்கிறது. உங்கள் ஈறுகளில் ரத்தம் வடிவதை நீங்கள் கண்டறிந்தால் உடனடியாக புகை பிடிப்பது போன்ற அனைத்து பழக்கங்களையும் நிறுத்த வேண்டும்.

    உணவில் கவனம் தேவை:

    நாம் என்ன விதமான உணவை உட்கொள்கிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிக சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை நாம் உட்கொள்ளும்போது அவை பல் சொத்தை ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பச்சை காய்கறிகளை நாம் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை ஈறுகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    சீரான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது:

    நாம் அவ்வப்போது சீரான இடைவெளியில் பல் மருத்துவரிடம் சென்று நமது பற்களை சோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை டார்டார் எனப்படும் பிரச்சனையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பல் மருத்துவரிடம் சென்று மட்டுமே நான் அதனை நீக்கிக் கொள்ள முடியும். எனவே சீரான இடைவெளியில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு ஈறுகளில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

தூங்கி எழுந்தவுடன் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? இது கூட காரணமாக இருக்கலாம்.!

February 19, 2023 0

 ஆரோக்கியமான உடலையும், மனதையும் பராமரிக்க மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். சிலர் வெறும் தரையில் படுத்து உறங்கிவிடுவார்கள். ஆனால் தரையின் வெப்பநிலை நம் தூக்கத்தை தடுத்து விடக்கூடும். அதற்காக பாய், தரைவிரிப்பு பயன்படுத்துவார்கள். மெத்தையில் தூங்கினால் அருமையான தூக்கம் வரும். ஆனாலும் சிலருக்கு அதனால் உடல் வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் வசதியான உயர்தர மெத்தைகள் பயன்படுத்துபவர்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஏனெனில் உயர்தர மெத்தைகளை  10 முதல்  12 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம். ஆனால் தரமற்ற மெத்தைகளை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். அவை மாற்றப்படாவிட்டால், அது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அப்படி தரமற்ற மெத்தைகளை பயன்படுத்துவதால் என்னென்ன உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன? அவற்றை தடுக்க என்னமாதிரியான மெத்தைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதுகு, கழுத்து மற்றும் உடல் வலி : சிலருக்கு உடலில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் காலை எழுந்தவுடன் முதுகுவலியால் அவதிப்படுவர். இதற்கான காரணம் அவர்கள் தூங்கும் மெத்தையுடன் அவர்கள் தொடர்புப்படுத்த மாட்டார்கள். காலையில் இதுபோன்ற வலிகள் உங்களுக்கு அடிக்கடி இருந்தால், உங்கள் மெத்தை தவறாக இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட நல்ல மெத்தையை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால் எடைக் குறைவான memory foam mattress-களை பயன்படுத்தலாம். இது வலிகள் ஏற்படாமல் தடுக்கும். இதனால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கலாம்.

ஒவ்வாமை பிரச்சினைகள் : உங்கள் மெத்தையில் dust mites எனப்படும் தூசிப் பூச்சிகள் இருந்தால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் தோல் மற்றும் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படலாம். மெத்தையில் ஏற்படும் துர்நாற்றங்களாலும் இதுபோன்ற அலர்ஜி பிரச்சினைகள் ஏற்படும். எனவே ஒரு தரமான மெத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை குறைக்கும், ஏனெனில் இதில் உள்ள நச்சுத்தன்மையற்ற Foam-கள் சுவாசிக்கக்கூடிய hypoallergenic இருப்பதால் அவை உண்மையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

அதிக வியர்வை : தரமற்ற மெத்தைகளில் காற்று உட்புகாமல் இருப்பதால் அவை வெப்பமடைகிறது. இதனால் மெத்தையை பயன்படுத்துபவருக்கு அதிகமாக வியர்வை ஏற்பட வைக்கிறது. தரமான மெத்தையில் பயன்படுத்தப்படும் open-cell அமைப்பு, மெத்தையின் காற்று உட்புகுதலை மேம்படுத்தி, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

தரமற்ற மெத்தைகள் : தரமற்ற மெத்தைகள் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியவையாக உள்ளன. மேலும் அத்தகைய மெத்தைகளில் தூங்குவது முதுகுவலி, கழுத்து வலி, தூக்கமின்மை போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, அத்தகைய மெத்தைகள் போதுமான உங்களுக்கு சவுகரியமாக இல்லாதபோது அவற்றை மாற்றுவது முக்கியம் என்கிறார் Magniflex India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த் நிச்சானி.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இந்த 10 பழங்களை டயட்டில் சேர்த்துக்கோங்க.. சீக்கிரமே உடல் எடையை குறைக்கலாம்..!

February 19, 2023 0

 எடை இழப்புக்கான டயட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள்முக்கியமானவை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இவற்றில் அடங்கி இருக்கின்றன.குறிப்பாக பழங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் நீரேற்றத்தை பராமரிக்கவும், நிறைவாக உணர உதவுகின்றன.

பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடாமல் பச்சையாக சாப்பிடுவது அதிக சத்தானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் தண்ணீர் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை நீர்த்துப்போக செய்கிறது. நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய பழங்களின் பட்டியல் இங்கே..

தக்காளி : தக்காளி காய்கறி அல்ல பழங்களின் பட்டியலில் இருக்க வேண்டியவை. இந்த சிவப்பு நிற பழங்களில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. Leptin எனப்படும் புரதம் உடல் எடை குறைவதற்கு தடையாக இருக்கிறது. ஆனால் தக்காளி இந்த புரதத்தை எதிர்த்து போராடுகிறது. எடையை வேகமாக குறைக்க விரும்புவோருக்கு தக்காளி மிகவும் உதவுகிறது. கேன்ட் தக்காளி மற்றும் கெட்ச்அப் உள்ளிட்டவை உண்மையான தக்காளி அல்ல, அவை ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் சர்க்கரைகள் நிறைந்தவை. இவை கொழுப்பை எரிப்பதற்கு பதிலாக கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

அவகேடோ (பட்டர் ஃப்ரூட்) : உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் ஃப்ரூட்டாக இருக்கும் அவகேடோவில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ளன. எடை இழப்பு டயட்டில் அவகேடோ முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஹெல்தி ஃபேட்ஸ்களை பெறுவதில்லை. ஹெல்தி ஃபேட்ஸ்கள் உடலின் மெட்டபாலிசம் ரேட்டை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. எடை இழப்புடன் தொடர்புடைய முக்கிய ஹார்மோன்களில் ஒன்றான டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கிய கொழுப்புகள் அதிகரிக்கின்றன

ஆரஞ்சு : சுவையான மற்றும் சத்தான பழங்களாக இருக்கும் ஆரஞ்சுகள் உடல் எடையை குறைக்க பயனுள்ள பழங்களாகும். இவை குறைந்த கலோரிகள் கொண்டவை. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் இவற்றில் நிறைந்துள்ளன. சருமம், குருத்தெலும்பு, தசைநாண்கள், ரத்த நாளங்கள் உள்ளிட்டவற்றின் முக்கிய திசுக்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

தர்பூசணி : எடை இழப்பு என்று வரும் போது தர்பூசணி ஒரு அற்புத பழம். இது குறைந்த கலோரி மற்றும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்டது. பழத்தின் எடையில் சுமார் 90% நீர்ச்சத்து ஆகும். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது`. இந்த பழத்தில் தொப்பையை கரைக்க உதவும் Arginine எனப்படும் ஃபேட்-பர்னிங் அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இதில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் இதயம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமானது.

ஸ்ட்ராபெர்ரி : சுவையான மற்றும் சத்தான பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL-ன் லெவலை அதிகரிக்க உதவுகின்றன. கொழுப்பைக் குறைக்க உதவும் சூப்பர் பழமான ஸ்ட்ராபெர்ரியிடமிருந்து அதிக நன்மைகளை பெற அவற்றை ஃப்ரூட் ஸ்மூத்திகளுடன் கலக்கலாம். தவிர தயிர் அல்லது ஓட்ஸ் கஞ்சியில் ஸ்ட்ராபெர்ரிக்களை சேர்க்கலாம்.

கொய்யாப்பழம் : ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வு. இவற்றில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தடுக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் கொய்யாவில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் தடுப்பு மற்றும் தோல் அழற்சிக்கு உதவுகின்றன.

லைம் : லைம் (Lime ), லெமன் (Lemom ) ஆகிய இரண்டும் வெவ்வேறு ரக செடி இனங்கள் என்றாலும் நாம் இவற்றை எலுமிச்சை என்ற பொதுவான பெயரில் தான் அழைக்கிறோம். லைம் பழத்தில் ஃபிளாவனாய்ட்ஸ், லிமோனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. எடை இழப்புக்கு உதவும் டிடாக்ஸ் ட்ரிங்ஸ்களுக்கு லைம் சிறந்த மூலப்பொருளாக உள்ளது. உகந்த வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளது.

லெமன் : லைமின் மூத்த சகோதரர் என்று லெமனை குறிப்பிடலாம். இது எடை இழப்புக்கு உதவும் சிறந்த பழமாகும். ஒரு லெமன் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி முழுவதையும் பூர்த்தி செய்ய கூடியது. வளர்சிதை மாற்ற விகிதத்தை சிறந்த விகிதத்தில் பராமரிக்க உதவுகிறது. இவற்றில் நிறைந்திருக்கும் சிட்ரஸ் லிமோனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

பேரிக்காய் : ஒரு பேரிக்காயானது உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 24%-ஐ பூர்த்தி செய்யும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேரிக்காய் சாப்பிடும் பெண்களுக்கு தேவையற்ற கலோரிகள் குவியும் வாய்ப்பு குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன. இது கொலஸ்ட்ரால் இல்லாதது, இதில் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. மீடியம் சைஸ் பேரிக்காய் 100 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.

கிரேப் ஃப்ரூட் : பைட்டோ கெமிக்கல்ஸ், வைட்டமின் சி நிறைந்துள்ளது கிரேப் ஃப்ரூட் நோய்களை எதிர்த்துப் போராட உதவுவதோடு தொப்பையில் இருக்கும் கொழுப்பை எரிக்கின்றன. தொடர்ச்சியாக 6 வாரங்களுக்கு உணவுக்கு முன் ஒரு கிரேப் ஃப்ரூட் சாப்பிட்டவர்கள் ஒரு அங்குல தொப்பையை இழந்துள்ளதாக சொல்கிறது ஒரு ஆய்வு.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip