பெப்டஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதீத ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. தினசரி உங்கள் உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதன் மூலம், நீங்கள் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். பூசணி விதைகளில் இரும்பு, கால்சியம், பி 2, ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.
பூசணி விதைகளில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கேட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பூசணி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், இது இதயத்தின் இயக்கம், இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.
பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கீல்வாதம் வலியைக் குறைக்க உதவுகின்றன. மூட்டு வலிக்கு இந்த விதை, ஒரு நல்ல மருந்து.
பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரவு நல்ல தூக்கம் வரும்.
பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.
உடல் எடையை குறைப்பதில் பெரும்பாலான கவனம் செலுத்துகின்றனர். பூசணி விதைகள் உடல் எடையையை குறைப்பதற்கு உதவும் நல்ல மூலமாக உள்ளது. பூசணி விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி கேட்ட கொழுப்பை குறைக்கிறது.
பூசணி விதைகளில் கர்டிவைட்டாசின் உள்ளது. இது ஒரு தனித்துவமான அமினோ அமிலமாகும், இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும். பூசணி விதை எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வு குறைந்து, அடர்த்தி அதிகரிக்கும்.
பூசணி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் தீங்கு விளைவிக்கும் செல்களை அளிக்கிறது. இதனால், உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நோயெதிர்ப்பு சக்த்தி அதிகரிக்கும்.
பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சிறிய விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை மோசமான கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
விந்தணு தரம் மேம்படும் : உடலில் துத்தநாகம் குறைவாக உள்ளதால், விந்தணு தரம் குறைவு மற்றும் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது. பூசணி விதைகள் துத்தநாகம் நிறைந்தவை என்பதால், அதை நாம் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip