Agri Info

Adding Green to your Life

February 25, 2023

Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக | TNPSC General Tamil Notes

February 25, 2023 0

 

பிரித்தெழுதுக – தமிழ் இலக்கணம்

பள்ளி மாணவர்களுக்கும், TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.

  1. அமுதென்று -அமுது +என்று
  2. செம்பயிர் -செம்மை +பயிர்
  3. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  4. பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
  5. இடப்புறம் -இடது +புறம்
  6. சீரிளமை -சீர்+இளமை
  7. வெண்குடை -வெண்மை + குடை
  8. பொற்கோட்டு-பொன் + கோட்டு
  9. நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
  10. நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
  11. தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
  12. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
  13. கண்டறி -கண்டு +அறி
  14. ஓய்வற-ஓய்வு +அற
  15. ஆழக்கடல்- ஆழம் + கடல்
  16. விண்வெளி- விண் + வளி
  17. நின்றிருந்த -நின்று + இருந்த
  18. அவ்வுருவம் -அ + உருவம்
  19. இடமெல்லாம் -இடம் +எல்லாம்
  20. மாசற -மாசு +அற
  21. கைப்பொருள் -கை +பொருள்
  22. பசியின்றி -பசி +இன்றி
  23. படிப்பறிவு -படிப்பு +அறிவு
  24. நன்றியறிதல் -நன்றி +அறிதல்
  25. பொறையுடைமை -பொறை +உடைமை
  26. பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
  27. கண்ணுறங்கு -கண்+உறங்கு
  28. போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
  29. பொருளுடைமை -பொருள் +உடைமை
  30. கல்லெடுத்து -கல் +எடுத்து
  31. நானிலம் -நான்கு +நிலம்
  32. 32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
  33. மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
  34. வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
  35. விரிவடைந்த -விரிவு +அடைந்த
  36. நூலாடை -நூல் +ஆடை
  37. தானென்று -தான் +என்று
  38. எளிதாகும் -எளிது +ஆகும்
  39. பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
  40. குரலாகும்-குரல் + ஆகும்
  41. இரண்டல்ல-இரண்டு + அல்ல
  42. தந்துதவும்-தந்து +உதவும்
  43. காடெல்லாம்-காடு + எல்லாம்
  44. பெயரறியா-பெயர் + அறியா
  45. மனமில்லை- மனம் + இல்லை
  46. காட்டாறு- காடு + ஆறு
  47. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
  48. யாதெனின் -யாது +எனின்
  49. யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
  50. பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
  51. தோரணமேடை -தோரணம் +மேடை
  52. பெருங்கடல் -பெரிய +கடல்
  53. ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
  54. துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
  55. வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
  56. கேடியில்லை -கேடு +இல்லை
  57. உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
  58. வனப்பில்லை -வனப்பு +இல்லை
  59. வண்கீரை -வளம் +கீரை
  60. கோட்டோவியம் -கோடு +ஓவியம்
  61. செப்பேடு -செப்பு +ஏடு
  62. எழுத்தென்ப-எழுத்து +என்ப
  63. கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
  64. நீருலையில் -நீர் +உலையில்
  65. தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
  66. ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
  67. இன்சொல்- இனிய +சொல்
  68. நாடென்ப -நாடு +எ ன்ப
  69. மலையளவு -மலை +அளவு
  70. தன்னாடு -தன் + நாடு
  71. தானொரு -தான் +ஒரு
  72. எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
  73. என்றெ ன்றும்-என்று + என்றும்
  74. வானமளந்து -வானம் +அளந்து
  75. இருதிணை -இரண்டு +திணை
  76. ஐம்பால் -ஐந்து +பால்
  77. நன்செய் -நன்மை +செய்
  78. நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
  79. செத்திறந்த-செத் து + இறந்த
  80. விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
  81. இன் னோசை -இனிமை + ஓசை
  82. வல்லுருவம்-வன்மை + உருவம்
  83. இவையுண்டார் -இவை +உண்டார்
  84. நலமெல்லாம் -நலம் +எல்லாம்
  85. கலனல்லால் -கலன் +அல்லால்
  86. கனகச் சுனை -கனகம் +சுனை
  87. பாடறிந்து -பாடு+அறிந்து
  88. மட்டுமல்ல -மட்டும் +அல்ல
  89. கண்ணோடாது -கண் +ஓடாது
  90. கசடற -கசடு +அற
  91. அக்களத்து -அ+களத்து
  92. வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
  93. பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
  94. வெங்கரி’-வெம்மை+கரி
  95. என்றிருள்’-என்று +இருள்
  96. சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
  97. விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
  98. நமனில்லை -நமன் +இல்லை
  99. ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
  100. பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
  101. ஊராண்மை -ஊர் +ஆண்மை
  102. இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
  103. விழித்தெழும்- விழித்து + எழும்
  104. போவதில்லை-போவது +இல்லை
  105. படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
  106. கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
  107. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
  108. அருந்துணை-அருமை +துணை
  109. திரைப்படம் -திரை +படம்
  110. மரக்கலம் -மரம் +கலம்
  111. பூக்கொடி -பூ +கொடி
  112. பூத்தொட்டி -பூ +தொட்டி
  113. பூச்சோலை -பூ +சோலை
  114. பூப்பந்து -பூ +பந்து
  115. வாயொலி -வாய் +ஒலி
  116. மண்மகள் -மண் +மகள்
  117. கல்லதர் -கல் +அதர்
  118. பாடவேளை -பாடம் +வேளை
  119. கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
  120. பழத்தோல் -பழம் +தோல்
  121. பெருவழி -பெருமை +வழி
  122. பெரியன் -பெருமை +அன்
  123. மூதூர் -முதுமை +ஊர்
  124. பைந்தமிழ் -பசுமை +தமிழ்
  125. நெட்டிலை -நெடுமை +இலை
  126. வெற்றிலை -வெறுமை +இலை
  127. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  128. கருங்கடல் -கருமை +கடல்
  129. பசுந்தளிர் -பசுமை +தளிர்
  130. சிறுகோல் -சிறுமை +கோல்
  131. பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
  132. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
  133. முறையறிந்து -முறை +அறிந்து
  134. அரும்பொருள் -அருமை +பொருள்
  135. மனையென -மனை +என
  136. பயமில்லை-பயம்+இல்லை
  137. கற்பொடி -கல் +பொடி
  138. உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
  139. திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
  140. சிற்றூர் -சிறுமை +ஊர்
  141. கற்பிளந்து -கல் +பிளந்து
  142. மணிக்குளம் -மணி+குளம்
  143. அமுதென்று -அமுது +என்று
  144. புவியாட்சி -புவி +ஆட்சி
  145. மண்ணுடை -மண் +உடை
  146. புறந்தருதல் -புறம் +தருதல்
  147. வீட்டுக்காரன் -வீடு +காரன்
  148. தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
  149. உறவுக்காரர் -உறவு +காரர்
  150. தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
  151. தடந்தேர் -தடம்+ தேர்
  152. கலத்தச்சன் -காலம் +தச்சன்
  153. உழுதுழுது – உழுது +உழுது
  154. பேரழகு – பெருமை+அழகு
  155. செம்பருதி -செம்மை +பருதி
  156. வனமெல்லாம் – வானம் +எல்லாம்
  157. உன்னையல்லால் -உன்னை +அல்லால்
  158. செந்தமிழே -செம்மை +தமிழே
  159. ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
  160. தனியாழி -தனி +ஆழி
  161. 162.வெங்கதிர் -வெம்மை +கதிர்
  162. கற்சிலை -கல் +சிலை
  163. கடற்கரை -கடல் +கரை
  164. பன்முகம் -பல் +முகம்
  165. மக்கட்பேறு -மக்கள் +பேறு
  166. நாண்மீன் -நாள் +மீன்
  167. சொற்றுணை -சொல் +துணை
  168. பன்னூல் -பல் +நூல்
  169. இனநிரை -இனம் +நிரை
  170. புதுப்பெயல் -புதுமை +பெயல்
  171. அருங்கானம் -அருமை +கானம்
  172. எத்திசை -எ +திசை
  173. உள்ளொன்று -உள் +ஒன்று
  174. ஒருமையுடன் -ஒருமை +உடன்
  175. பூம்பாவாய் -பூ +வாய்
  176. தலைக்கோல் -தலை +கோல்
  177. முன்னுடை -முன் +உடை
  178. ஏழையென -ஏழை +என
  179. நன்மொழி -நன்மை +மொழி
  180. உரனுடை -உரன் +உடை
  181. அகநானூறு- அகம்+நானூறு
  182. அகந்தூய்மை - அகம்+துய்மை
  183. அங்கயற்கண் - அம்+கயல்+கண்
  184. அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
  185. அலகிலா - அலகு + இலா
  186. அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
  187. அழகாடை - அழகு+ஆடை
  188. அறிவுண்டாக- அறிவு + உண்டாக
  189. அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
  190. அன்பீனும் - அன்பு + ஈனும்
  191. ஆட்டம் - ஆடு + அம்
  192. ஆயிடை - ஆ+இடை
  193. ஆருயிர்-அருமை+உயிர்
  194. இங்கேயிரு - இங்கே+இரு
  195. இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
  196. இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
  197. இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
  198. இலரெனினும் - இலர்+எனினும்
  199. இல்லதணின் - இல்+அதனின்
  200. இவனிறைவன் - இவன் +இறைவன்
  201. இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
  202. இளங்கனி = இளமை + கனி
  203. இளிவன்று - இளிவு+அன்று
  204. இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
  205. இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
  206. இன்னிசை - இனிமை+இசை
  207. ஈண்டிவரே - ஈண்டு+இவரே
  208. ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
  209. ஈதலிசைபட- ஈதல்+இசைபட
  210. ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
  211. ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
  212. உடைத்தன்று - உடைத்து+அன்று
  213. உடையதுடையாரை - உடையது+உடையாரை
  214. உணர்ச்சி - உணர் + சி
  215. உண்டென்று - உண்டு + என்று
  216. உரையதனை - உரை+அதனை
  217. உலகறிய - உலகு+அறிய
  218. ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
  219. ஊர்புறம் - ஊர்+புறம்
  220. எமதென்று- எமது + என்று
  221. எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
  222. எனக்கிடர் - எனக்கு + இடர்
  223. எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
  224. என்டிசை - எட்டு+திசை
  225. ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
  226. ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
  227. ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
  228. கண்ணருவி = கண் + அருவி
  229. கடலலை - கடல்+அலை
  230. கடலோரம் - கடல்+ஒரம்
  231. கடும்பசி - கடும்+பசி
  232. கணக்கிழந்த - கணக்கு+இழந்த
  233. கயற்கண்ணி - கயல்+கண்ணி
  234. கரவிலா - கரவு+இலா
  235. கருமுகில்- கருமை + முகில்
  236. கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
  237. கவியரசர் - கவி+அரசர்
  238. காட்டிலழும் - காட்டில்+அழும்
  239. காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
  240. காடிதனை- காடு + இதனை
  241. காண்டகு- காண் + தகு
  242. காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
  243. காரிருள் - கார்+இருள்
  244. காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
  245. குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
  246. குலவுமெழில் - குலவும்+எழில்
  247. குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
  248. குறுங்காவியம் - குறுமை+காவியம்
  249. குறுந்தொகை - குறுமை+தொகை
  250. குறைவிலை - குறைவு+இல்லை
  251. குற்றேவல் - குறுமை+ஏவல்
  252. கேளானை - கேள் + ஆனை
  253. கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
  254. கோட்பாடு - கோள் + பாடு
  255. கொட்பின்றி - கொட்பு+இன்றி
  256. கொலை - கொல் + ஐ
  257. கோயில் - கோ+இல்
  258. கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
  259. கோடல் - கோடு + அல்
  260. கோலையூன்றி - கோலை+ஊன்றி
  261. கோற்பாகர் - கோல்+பாகர்
  262. சரணல்லால் - சரண்+அல்லால்
  263. சாக்காடு - சா + காடு
  264. சிற்றோர் - சிறுமை+ஊர்
  265. சீறடி - சிறுமை+அடி
  266. சுவையுணரா - சுவை + உணரா
  267. செங்கோலம் - செம்மை+கோலம்
  268. செய்யுள் - செய் + உள்
  269. செற்றன்று - செற்று+அன்று
  270. சேணுறைதல் - சேண்+உறைதல்
  271. சேவடி- செம்மை + அடி
  272. சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
  273. சோர்விலான் - சோர்வு+இலன்
  274. தங்கால் - தம்+கால்
  275. தந்தம் - தம்+தம்
  276. தமக்குரியர் - தமக்கு + உரியர்
  277. தவமிரண்டும் - தவம்+இரண்டும்
  278. தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
  279. தாமுள -தாம் + உள
  280. தாப்பிசை - தாம்பு + இசை
  281. தாயுள்ளம் - தாய்+உள்ளம்
  282. தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
  283. தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
  284. திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
  285. திறனறிந்த - திறன்+அறிந்து
  286. தீந்தமிழ் - தீம்+தமிழ்
  287. தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
  288. தொழிற்கல்வி - தொழில்+கல்வி
  289. தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
  290. தோற்றரவு - தோற்று + அரவு
  291. நடவாமை - நட+ ஆ + மை
  292. நல்லறம்- நன்மை + அறம்
  293. நறுஞ்சுவை - நறுமை+சுவை
  294. நன்கணியர் - நன்கு + அணியர்
  295. நன்மொழி - நன்மை + மொழி
  296. நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
  297. நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
  298. நிழலருமை - நிழல் + அருமை
  299. நீரவர் - நீர்+அவர்
  300. நீர்த்தவளை - நீர்+தவளை
  301. நூற்றாண்டு - நூறு+ஆண்டு
  302. நெடுமரம் - நெடுமை+மரம்
  303. பணமாயிரம் - பணம்+ஆயிரம்
  304. பண்பிலுயர் - பண்பில்+உயர்
  305. பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
  306. பறவை - பற + வை
  307. பாடுன்றும் - பாடு+ஊன்றும்
  308. பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
  309. பாவினம் - பா+இனம்
  310. பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
  311. புலவி - புல + வி
  312. புளிப்பு - புளி + பு
  313. புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
  314. பூட்டுமின்- பூட்டு + மின்
  315. பூம்பினல் - பூ+பினல்
  316. பெறுதல் - பெறு + தல்
  317. பேரண்டம் - பெருமை+அண்டம்
  318. பேரூர் - பெருமை+ஊர்
  319. பைங்கிளி - பசுமை+கிளி
  320. பொருளுமைமை - பொருள்+உமைமை
  321. பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
  322. போக்கு - போ + கு
  323. போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
  324. மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
  325. மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
  326. மரவேர்- மரம்+வேர்
  327. மருப்பூசி- மருப்பு + ஊசி
  328. மலர்ச்சோலை- மலர்+சோலை
  329. மறதி - மற + தி
  330. மார்போலை- மார்பு + ஓலை
  331. மொய்யிலை- மொய் + இலை
  332. வன்பாற்கன் - வன்பால் + கண்
  333. வாயினராதல் - வாயினர்+ஆதல்
  334. வாயினீர்- வாயின் + நீர்
  335. வரவு - வர + உ
  336. வாயுணர்வு - வாய் + உணர்வு
  337. வாழ்க்கை - வாழ் + கை
  338. வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
  339. விரைந்தசையும் - விரைந்து+அசையும்
  340. விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
  341. விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
  342. வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
  343. வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
  344. வெண்மதி- வெண்மை + மதி
  345. வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
  346. வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
  347. வெவ்விறகு - வெம்மை+விறகு
  348. வெள்வாய் - வெண்மை+வாய்
  349. வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
  350. வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்

TNPSC Tamil Notes – Kalai Sorkal /கலைச்சொற்கள் | TNPSC Tamil Grammar – Kalai Sorkal

February 25, 2023 0

 6ஆம் வகுப்பு

  1. வலஞ்சுழி – Clock wise
  2. இடஞ்சுழி – Anti Clock wise
  3. இணையம் – Internet
  4. குரல்தேடல் – Voice Search
  5. தேடுபொறி – Search engine
  6. தொடுதிரை – Touch Screen
  7. கண்டம் – Continent
  8. தட்பவெப்பநிலை – Climate
  9. வானிலை – Weather
  10. வலசை  – Migration
  11. புகலிடம்  – Sanctuary
  12. புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field
  13. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
  14. ஆய்வு – Research
  15. மீத்திறன் கணினி – Super Computer
  16. கோள் – Planet
  17. ஔடதம் – Medicine
  18. எந்திர மனிதன்  – Robot
  19. செயற்கைக் கோள் – Satellite
  20. நுண்ணறிவு – Intelligence
  21. கல்வி – Education
  22. அஞ்சல் – Mail
  23. ஆரம்ப பள்ளி- Primary school
  24. குறுந்தகடு – Compact disk(CD)
  25. மேல்நிலைப்பள்ளி – Higher Secondary School
  26. மின் – E-Library
  27. நூலகம் – Library
  28. மின் புத்தகம் – E-Book
  29. மின்படிக்கட்டு – Escalator
  30. மின் இதழ்கள் – E-Magazine
  31. மின்தூக்கி – Lift
  32. நல்வரவு – Welcome
  33. ஆயத்த ஆடை – Readymade Dress
  34. சிற்பங்கள் – Sculptures
  35. ஒப்பனை – Makeup
  36. சில்லுகள் – Chips
  37. சிற்றுண்டி – Tiffin
  38. பண்டம் – Commodity
  39. கடற்பயணம் – Voyage
  40. பயணப்படகுகள் – Ferries
  41. தொழில்முனைவோர் – Entrepreneur
  42. பாரம்பரியம் – Heritage
  43. கலப்படம் – Adulteration
  44. நுகர்வோர் – Consumer
  45. வணிகர் – Merchant
  46. நட்டுப்பற்று – Patriotism
  47. இலக்கியம் – Literature
  48. கலைக்கூடம் – Art Gallery
  49. மெய்யுணர்வு – Knowledge of Reality
  50. அறக்கட்டளை – Trust
  51. தன்னார்வலர் – Volunteer
  52. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
  53. சாரண சாரணியர் – Scouts & Guides
  54. சமூகப்பணியாளர் – Social Worker
  55. மனிதநேயம் – Humanity
  56. கருணை – Mercy
  57. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
  58. நாேபல் பரிசு – Nobel Prize
  59. சரக்குந்து – Lorry

7ஆம் வகுப்பு

  1. ஊடகம் – Media
  2. பருவ இதழ் – Magazine
  3. மொழியியல் – Linguistics
  4. பொம்மலாட்டம் – Puppetry
  5. ஒலியியல் – Phonology
  6. எழுத்திலக்கணம் – Orthography
  7. இதழியல் – Journalism
  8. உரையாடல் – Dialogue
  9. தீவு – Island
  10. உவமை – Parable
  11. இயற்கை வளம் – Natural Resource
  12. காடு – Jungle
  13. வன விலங்குகள் – Wild Animals
  14. வனவியல் – Forestry
  15. வனப் பாதுகாவலர் – Forest Conservator
  16. பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
  17. கதைப்பாடல் – Ballad
  18. பேச்சாற்றல் – Elocution
  19. துணிவு – Courage
  20. ஒற்றுமை – Unity
  21. தியாகம் – Sacrifice
  22. முழக்கம் – Slogan
  23. அரசியல் மேதை – Political Genius
  24. சமத்துவம் – Equality
  25. கலங்கரை விளக்கம் – Light house
  26. துறைமுகம் – Harbour
  27. பெருங்கடல் – Ocean
  28. புயல் – Storm
  29. கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
  30. மாலுமி – Sailor
  31. கடல்வாழ் உயிரினம் – Marine creature
  32. நங்கூரம் – Anchor
  33. நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
  34. கப்பல்தளம் – Shipyard
  35. கோடை விடுமுறை – Summer Vacation
  36. நீதி – Moral
  37. குழந்தைத்தொழிலாளர் – Child Labour
  38. சீருடை – Uniform
  39. பட்டம் – Degree
  40. வழிகாட்டுதல் – Guidance
  41. கல்வியறிவு – Literacy
  42. ஒழுக்கம் – Discipline
  43. படைப்பாளர் – Creator
  44. அழகியல் – Aesthetics
  45. சிற்பம் – Sculpture
  46. தூரிகை – Brush
  47. கலைஞர் – Artist
  48. கருத்துப்படம் – Cartoon
  49. கல்வெட்டு – Inscriptions
  50. குகை ஓவியங்கள் – Cave paintings
  51. கையெழுத்துப்படி – Manuscripts
  52. நவீன ஓவியம் – Modern Art
  53. நாகரிகம் – Civilization
  54. வேளாண்மை – Agriculture
  55. நாட்டுப்புறவியல் – Folklore
  56. கவிஞர் – Poet
  57. அறுவடை – Harvest
  58. அயல்நாட்டினர் – Foreigner
  59. நெற்பயிர் – Paddy
  60. நீர்ப்பாசனம் – Irrigation
  61. பயிரிடுதல் – Cultivation
  62. உழவியல் – Agronomy
  63. குறிக்கோள் – Objective
  64. வறுமை – Poverty
  65. செல்வம் – Wealth
  66. கடமை – Responsiblity
  67. ஒப்புரவுநெறி – Reciprocity
  68. லட்சியம் – Ambition
  69. அயலவர் – Neighbour
  70. நற்பண்பு – Courtesy
  71. பொதுவுடைமை – Communism
  72. சமயம் – Religion
  73. தத்துவம் – Philosophy
  74. எளிமை – Simplicity
  75. நேர்மை – Integrity
  76. ஈகை – Charity
  77. வாய்மை – Sincerity
  78. கண்ணியம் – Dignity
  79. உபதேசம் – Preaching
  80. கொள்கை – Doctrine
  81. வானியல் – Astronomy

8ஆம் வகுப்பு

  1. ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
  2. உயிரொலி – Vowel
  3. மெய்யொலி – Consonant
  4. கல்வெட்டு – Epigraph
  5. மூக்கொலி – Nasal consonant sound
  6. அகராதியியல் – Lexicography
  7. சித்திர எழுத்து – Pictograph
  8. ஒலியன் – Phoneme
  9. பழங்குடியினர் – Tribes
  10. மலைமுகடு – Ridge
  11. சமவெளி – Plain
  12. வெட்டுக்கிளி – Locust
  13. பள்ளத்தாக்கு – Valley
  14. சிறுத்தை – Leopard
  15. புதர் – Thicket
  16. மொட்டு – Bud
  17. நோய் – Disease
  18. பக்கவிளைவு – Side Effect
  19. நுண்ணுயிர் முறி – Antibiotic
  20. மூலிகை – Herbs
  21. சிறுதானியங்கள் – Millets
  22. மரபணு – Gene
  23. பட்டயக் கணக்கர் – Auditor
  24. ஒவ்வாமை – Allergy
  25. நிறுத்தக்குறி – Punctuation
  26. திறமை – Talent
  27. மொழிபெயர்ப்பு – Translation
  28. அணிகலன் – Ornament
  29. விழிப்புணர்வு – Awareness
  30. சீர்திருத்தம் – Reform
  31. கைவினைப் பொருள்கள் – Crafts
  32. பின்னுதல் – Knitting
  33. புல்லாங்குழல் – Flute
  34. கொம்பு – Horn
  35. முரசு – Drum
  36. கைவினைஞர் – Artisan
  37. கூடைமுடைதல் – Basketry
  38. சடங்கு – Rite
  39. நூல் – Thread
  40. பால்பண்ணை – Dairy farm
  41. தறி – Loom
  42. சாயம் ஏற்றுதல் – Dyeing
  43. தையல் – Stitch
  44. தோல் பதனிடுதல் – Tanning
  45. ஆலை – Factory
  46. ஆயத்த ஆடை – Readymade Dress
  47. குதிரையேற்றம் – Equestrian
  48. முதலமைச்சர் – Chief Minister
  49. ஆதரவு – Support
  50. தலைமைப்பண்பு – Leadership
  51. கதாநாயகன் – The Hero
  52. வெற்றி – Victory
  53. வரி – Tax
  54. சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
  55. தொண்டு – Charity
  56. பகுத்தறிவு – Rational
  57. நேர்மை – Integrity
  58. தத்துவம் – Philosophy
  59. ஞானி – Saint
  60. சீர்திருத்தம் – Reform
  61. குறிக்கோள் – Objective
  62. முனைவர் பட்டம் – Doctorate
  63. பல்கலைக்கழகம் – University
  64. அரசியலமைப்பு – Constitution
  65. நம்பிக்கை – Confidence
  66. இரட்டை வாக்குரிமை – Double voting
  67. ஒப்பந்தம் – Agreement
  68. வட்ட மேசை மாநாடு – Round Table Conference

9ஆம் வகுப்பு

  1. உருபன் – Morpheme
  2. ஒலியன் – Phoneme
  3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
  4. பேரகராதி – Lexicon
  5. குமிழிக் கல் – Conical Stone
  6. நீர் மேலாண்மை – Water Management
  7. பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  8. வெப்ப மண்டலம் – Tropical Zone
  9. ஏவு ஊர்தி – Launch Vehicle
  10. பதிவிறக்கம் – Download
  11. ஏவுகணை – Missile
  12. மின்னணுக் கருவிகள் – Electronic devices
  13. கடல்மைல் – Nautical Mile
  14. காணொலிக் கூட்டம் – Video Conference
  15. பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
  16. சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
  17. களர்நிலம் – Saline Soil
  18. தன்னார்வலர் – Volunteer
  19. சொற்றொடர் – Sentence
  20. குடைவரைக் கோவில் – Cave temple
  21. கருவூலம் – Treasury
  22. மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
  23. மெல்லிசை – Melody
  24. ஆவணக் குறும்படம் – Document short film
  25. புணர்ச்சி – Combination
  26. செவ்வியல் இலக்கியம் – Classical Literature
  27. கரும்புச் சாறு – Sugarcane Juice
  28. பண்டமாற்று முறை – Commodity Exchange
  29. காய்கறி வடிசாறு – Vegetable Soup
  30. இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
  31. எழுத்துரு – Font
  32. மெய்யியல் (தத்துவம்) – Philosophy
  33. அசை – Syllable
  34. இயைபுத் தொடை – Rhyme
  35. எழுத்துச் சீர்திருத்தம் – Reforming the letters
  36. மனிதம் – Humane
  37. கட்டிலாக் கவிதை 9 Free verse
  38. ஆளுமை – Personality
  39. உருவக அணி – Metaphor
  40. பண்பாட்டுக் கழகம் – Cultural Academy
  41. உவமையணி – Simile


10ஆம் வகுப்பு

  1. Vowel – உயிரெழுத்து
  2. Consonant – மெய்யெழுத்து
  3. Homograph – ஒப்பெழுத்து
  4. Monolingual – ஒரு மொழி
  5. Conversation – உரையாடல்
  6. Discussion – கலந்துரையாடல்
  7. Storm – புயல் Land
  8. Breeze – நிலக்காற்று
  9. Tornado – சூறாவளி
  10. Sea Breeze – கடற்காற்று
  11. Tempest – பெருங்காற்று
  12. Whirlwind – சுழல்காற்று
  13. classical literature – செவ்விலக்கியம்
  14. Epic literature – காப்பிய இலக்கியம்
  15. Devotional literature – பக்தி இலக்கியம்
  16. Ancient literature – பண்டைய இலக்கியம்
  17. Regional literature வட்டார இலக்கியம்
  18. Folk literature – நாட்டுப்புற இலக்கியம்
  19. Modern literature நவீன இலக்கியம்
  20. Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
  21. Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  22. Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
  23. Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
  24. Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
  25. Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
  26. Emblem – சின்னம்
  27. Intellectual – அறிவாளர்
  28. Thesis – ஆய்வேடு
  29. Symbolism – குறியீட்டியல்
  30. Aesthetics – அழகியல், முருகியல்
  31. Terminology – கலைச்சொல்
  32. Artifacts -கலைப் படைப்புகள்
  33. Myth – தொன்மம்
  34. Consulate – துணைத்தூதரகம்
  35. Patent – காப்புரிமை
  36. Document – ஆவணம்
  37. Guild – வணிகக் குழு
  38. Irrigation – பாசனம்
  39. Territory – நிலப்பகுதி
  40. Belief – நம்பிக்கை
  41. Philosopher – மெய்யியலாளர்
  42. Renaissance – மறுமலர்ச்சி
  43. Revivalism – மீட்டுருவாக்கம்
  44. Humanism – மனிதநேயம்
  45. Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
  46. Cabinet – அமைச்சரவை
  47. Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்


11ஆம் வகுப்பு

  1. அழகியல் – Aesthetics
  2. இதழாளர் – Journalist
  3. கலை விமர்சகர் – Art Critic
  4. புத்தக மதிப்புரை – Book Review
  5. புலம்பெயர்தல் – Migration
  6. மெய்யியலாளர் – Philosopher
  7. இயற்கை வேளாண்மை – Organic Farming
  8. ஒட்டு விதை – Shell Seeds
  9. மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
  10. அறுவடை – Harvesting
  11. வேதி உரங்கள் – Chemical Fertilizers
  12. தூக்கணாங்குருவி – Weaver Bird
  13. வேர் முடிச்சுகள் – Root Nodes
  14. தொழு உரம் – Farmyard Manure
  15. இனக்குழு – Ethnic Group
  16. பின்னொட்டு – Suffix
  17. முன்னொட்டு – Prefix
  18. வேர்ச்சொல் அகராதி – Rootword Dictionary
  19. புவிச்சூழல் – Earth Environment
  20. பண்பாட்டு கூறுகள் – Cultural Elements
  21. கல்விக்குழு – Education Committee
  22. மூதாதையர் – Ancestor
  23. உள்கட்டமைப்பு – Infrastructure
  24. மதிப்புக் கல்வி – Value Education
  25. செம்மொழி – Classical
  26. Language மனஆற்றல் – Mental Ability
  27. ஆவணம் – Document
  28. உப்பங்கழி – Backwater
  29. ஒப்பந்தம் – Agreement
  30. படையெடுப்பு – Invasion
  31. பண்பாடு – Culture
  32. மாலுமி – Sailor
  33. நுண்கலை – Fine Arts
  34. தானியக் கிடங்கு – Grain Warehouse
  35. ஆவணப்படம் – Documentary
  36. பேரழிவு – Disaster
  37. கல்வெட்டு – Inscription / Epigraph
  38. தொன்மம் – Myth
  39. உத்திகள் – Strategies
  40. பட்டிமன்றம் – Debate
  41. சமத்துவம் – Equality
  42. பன்முக ஆளுமை – Multiple Personality
  43. தொழிற்சங்கம் – Trade Union
  44. புனைபெயர் – Pseudonym
  45. நாங்கூழ்ப்புழு – Earthworm
  46. உலகமயமாக்கல் – Globalisation
  47. முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
  48. கடவுச்சீட்டு – Passport
  49. விழிப்புணர்வு – Awareness
  50. பொருள் முதல் வாதம் – Materialism


12ஆம் வகுப்பு

  1. Subscription – உறுப்பினர் கட்டணம்
  2. Archive – காப்பகம்
  3. Fiction – புனைவு
  4. Manuscript – கையெழுத்துப் பிரதி
  5. Biography – வாழ்க்கை வரலாறு
  6. Bibliography – நூல் நிரல்
  7. Platform – நடைமேடை
  8. Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
  9. Train Track – இருப்புப்பாதை
  10. Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
  11. Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
  12. Metro Train – மாநகரத் தொடர்வண்டி
  13. Lobby – ஓய்வறை
  14. Checkout – வெளியேறுதல்
  15. Tips – சிற்றீகை
  16. Mini meals – சிற்றுணவு
  17. Arrival – வருகை
  18. Visa – நுழைவு இசைவு
  19. Passport – கடவுச்சீட்டு
  20. Conveyor Belt – ஊர்திப்பட்டை
  21. Departure – புறப்பாடு
  22. Take Off – வானூர்தி கிளம்புதல்
  23. Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
  24. Affidavit – ஆணையுறுதி ஆவணம்
  25. Allegation – சாட்டுரை
  26. Jurisdiction – அதிகார எல்லை
  27. Conviction – தண்டனை
  28. Plaintiff – வாதி
  29. Artist – கவின்கலைஞர்
  30. Cinematography – ஒளிப்பதிவு
  31. Animation – இயங்குபடம்
  32. Sound Effect – ஒலிவிளைவு
  33. Newsreel – செய்திப்படம்
  34. Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
  35. Debit Card – பற்று அட்டை
  36. Demand Draft – கேட்பு வரைவோலை
  37. Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
  38. Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
  39. Internet Banking – இணையவங்கி முறை
  40. Teller – விரைவுக் காசாளர்
  41. Stamp pad – மை பொதி
  42. Eraser – அழிப்பான்
  43. Folder – மடிப்புத்தாள்
  44. Rubber Stamp – இழுவை முத்திரை
  45. File – கோப்பு
  46. Stapler – கம்பி தைப்புக் கருவி

February 24, 2023

இட்லி, தோசை மாவு தயாரிக்கும் தொழில் தொடங்குவது எப்படி? - முழுமையான வழிகாட்டல்!

February 24, 2023 0

 தொழில்களில் எப்போது சரிவே காணாத தொழில்கள் என்றால் அது உணவு தொடர்பான தொழில்தான். தற்போதையக் காலகட்டத்தில் பிரபலமான உணவுப் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில் சிறிய அளவில் தொடங்கிப் போராடி உலகளவில் சாதனைப் படைத்தவர்கள்தான். அந்த அளவிற்கு உணவு தொழில்களுக்கான சந்தை அதிகமாக இருக்கிறது.

அதில் நீங்களும் இணைய எளிய தொழிலே இட்லி தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்வது. முதல் கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். சிறிய முதலீட்டில் குறுகிய காலத்தில் நல்ல லாபம் தரும் தொழில் இது. செலவிடும் நேரம், முதலீடு மற்றும் உழைப்புக்கு ஏற்ற லாபம் பெறலாம். குறிப்பாக தற்போதைய வேகமான காலத்தில் தினமும் மாவை ஊரவைத்து முறையாகச் செய்ய யாருக்கும் நேரமில்லை. இதில் உங்களுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் மட்டும் இல்லாமல் உணவகங்கள் கூட வாடிக்கையாளர்களாகக் கிடைப்பார்கள். அதனால் உங்கள் வேலை தடைப்படாமல் தினமும் லாபம் பார்க்கலாம். இட்லி தோசை மாவு தொழில் தொடங்க தேவையான விவரங்களைப் பார்க்கலாம்.

இட்லி தோசை மாவு தொழில் தொடங்குவது எப்படி? நீங்கள் வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலைத் தொடங்கலாம். உங்கள் ஏரியாவில் சிறிய அளவில் தொடங்க வேண்டும் என்றால் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இட்லி தோசை மாவு அரைத்து கடைகளில் சப்ளை செய்ய அல்லது பெரிய சூப்பர்மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் கண்டிப்பாக இந்த தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலீடு : குறைந்தளவு முதலீடு என்றால் சுமார் 2 இருந்து 3 லட்சம் வரை ஆகும். வியாபாரம் என்றால் அதற்கு ஏற்ற வேகம் தேவை. அதற்காக மாவு அரைக்க Instant Wet Grinder என்ற இயந்திரத்தை வாங்க வேண்டும். இந்த இயந்திரம் சுமார் ரூ.20,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை வரும். அதனைத் தொடர்ந்து, சில பாத்திரங்கள் வாங்க வேண்டும். இது இல்லாமல் தின அரிசி, உளுந்து போன்ற பொருட்கள் வாங்க வேண்டும். மாவு தாயார் செய்ய 10க்கு 10 அடி இடம் இருந்தால் போதுமானது.

தொழிலைப் பதிவு செய்வது எப்படி? இட்லி தோசை மாவு அரைக்கும் தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்குவதால் சிறுதொழில்களில் இடம்பெறும். எந்த வித உணவு தாயரிப்பு தொழில்களாக இருந்தாலும் அதற்குக் கண்டிப்பாக Fssai பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 கீழ் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அடிப்படையில் வழங்கப்படும் Udyog Aadhar சான்றிதழைப் பதிவு செய்து பெற வேண்டும். தொடர்ந்து, உங்கள் பகுதி மாவட்ட அலுவலகத்தில் இருந்து கைத்தொழில்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப்படும் லைசென்ஸ் பெறவேண்டும். மேலும் தொழில் வரி செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.இது எல்லாம் இல்லாமல் GST வரிக்குப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அது உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க உதவும்.

வங்கிக் கடன் வாங்குவது எப்படி? MSME பதிவாக நீங்கள் வாங்கும் Udyog Aadhar சான்றிதழ் இருப்பதால் வங்கிக் கடன் வாங்குவது மிகவும் எளிமையானது. தொழில்முனைவோர்களுக்கான வங்கிக் கடன்களில் இருக்கின்ற சலுகைகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் மேல் குறிப்பிட்ட அனைத்து சான்றிதழ்களையும் பெற்று உள்ளீர்கள் என்றால் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தி பெரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.

இட்லி தோசை மாவு தாயார் செய்வது எப்படி? வீட்டு உபயோகத்திற்கு என்று இல்லாமல் வியாபாரத்திற்கு என்றால் தினசரி வியாபாரத்திற்கு என்று ஏற்றவாறு மாவு அரைக்க வேண்டும். 1 கிலோ அரிசி என்றால் அதற்கு 200 கிராம் வரை உளுந்து போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரத்திற்குத் தரமும் மிகவும் முக்கியம். அதனால் தரமான இட்லி அரிசி, உளுந்தைப் பயன்படுத்தவும்.

 தேவையான பொருட்கள் : அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம். 

அரைக்கும் முறை : 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்க்க வேண்டும். சிறிதளவு வெந்தயம் உளுந்துடன் சேர்த்து ஊரவைக்க வேண்டும். இரண்டையும் சுமார் 4 -5 மணி நேரம் வரை ஊரவைக்க வேண்டும். அதற்குப் பின்னர் தனித் தனியாக அரைத்து பின்னர் ஒன்றாகச் சேர்த்து உப்புடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரமாவது மாவு தாயார் ஆக தேவை. அதனால் அடுத்த நாள் காலை மாவுக்கு இரவே அரைத்து வைக்க வேண்டும்.

பேக்கிங் முறை : அரைந்த மாவை பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. தரமான அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கவர்களை பயன்படுத்த வேண்டும். உணவு காலாவதியாகும் நேரம், உற்பத்தி செய்யப்பட்ட நேரம் போன்றவற்றை பேக்கிங் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சாதாரண Sealing Machine இயந்திரத்தை பேக்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

விநியோக்கிக்கும் முறை : தாயாராக உள்ள மாவு பாக்கெட்களை வாடிக்கையாக சில கடைகளில் விற்பனைக்குக் கொடுக்கலாம். பெரிய அளவிலான சூப்பர் மார்கெட் போன்ற கடைகளில் ஆர்டர் பெறும் வகையில் வியாபாரம் செய்தால் நாள் ஒன்றுக்கு சுமார் 2000 பாக்கெட் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். 

லாபம் : ஒரு நாளைக்கு 2,000 ஆயிரம் வரை செலவு செய்தால் சுமார் 4,000 முதல் 5,000 வரை லாபம் பெறலாம். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.50,000 வரை தனி நபராக லாபம் பெறலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

வயிறு உப்பசமாக இருக்கும்போது இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க... உடனே பலன் தரும்.!

February 24, 2023 0

 வயிறு உப்புசம் மிகவும் பொதுவானது மற்றும் நம்மில் பலர் பல சந்தர்ப்பங்களில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் வாயு மற்றும் வலியுடன் ஏற்படும் ஒரு அசௌகரிய நிலை வயிறு உப்புசம் எனப்படுகிறது. நம் வயிற்றில் அதிகமான வாயு அல்லது நீர் இருக்கும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதோடு அடிக்கடி இதுபோன்று வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவது அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளின் அடையாளமாக இருக்கலாம். உப்புசமானது நமது உணவுப் பழக்கவழக்கங்களுடன் நேரடி தொடர்புடையது மற்றும் நாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்தது.

பால், ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர் போன்ற பல உணவுகள் வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நாம் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். உப்புசத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று குடல் வீக்கம். காற்று மாசுபாடு, புகைபழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இது முடிவில் உப்புசம் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் வயிறு உப்புசத்தை தவிர்க்க விரும்பினால் உங்கள் டயட்டில் பின்வரும் உணவுகள் மற்றும் பானங்களை சேர்த்து கொள்ளுங்கள்.

வெள்ளரி : ஒரு பச்சை வெள்ளரியில் சுமார் 95% தண்ணீர் அடங்கி இருக்கிறது மற்றும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஒரு சிறந்த உணவாகும். வெள்ளரிகள் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. தவிர மலச்சிக்கலை தடுக்கும் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவும் நார்ச்சத்தும் வெள்ளரிகளில் அடங்கி இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் வெள்ளரித் துண்டுகளைச் சேர்த்து கொள்ளுங்கள்.

அன்னாசி பழம் : அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பி வைட்டமின்ஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசியில் புரோமிலைன் என்ற நொதி உள்ளது, இது சரியான செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் வயிறு உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் அன்னாசி வயிற்றில் உள்ள புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவும் இயற்கையான செரிமான நொதியை கொண்ட நீர் அடர்த்தி மிகுந்த பழமாகும்.

பெருஞ்சீரக விதைகள் : சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் விதைகளில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை குடல் தசைகளை தளர்த்தவும், வாயுவை வெளியேற்றவும் உதவுகின்றன. தவிர செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து விதைகளை வடிகட்டி, உங்கள் உணவுக்கு இடையில் இந்த தண்ணீரை பருகவும்.

கிரீன் டீ : வழக்கமாக குடிக்கும் காபி அல்லது டீ-க்கு பதில் கிரீன் டீ-யை குடிப்பது உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மற்றும் உடலில் நீர் தேங்குவதை தடுக்க உதவுகிறது. கிரீன் டீ-யில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடுகிறது மற்றும் உப்புசத்திற்கு எதிராக வேலை செய்கிறது. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் மூலப்பொருள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தின் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.

அவகடோ: பட்டர் ஃப்ரூட் என்று குறிப்பிடப்படும் அவகடோ பழத்தில் என்னற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த பழங்கள் ஃபோலேட் (வைட்டமின் பி9), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த பழத்தில் நிறைந்திருக்கும் அதிக பொட்டாசியம் உடலில் சோடியம் சமநிலையை ஒழுங்குபடுத்தி வயிற்றில் தண்ணீர் தேங்குவதை தடுக்கிறது. அவகடோவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் உப்புசத்தை தடுக்க உதவுகிறது. மதிய உணவில் இந்தப் பழத்தின் ஒரு பீஸ் சாப்பிட்டால் கூட நன்மை அளிக்கும்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை... எதில் ஆரோக்கியம் அதிகம்..?

February 24, 2023 0

 கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை இரண்டின் உலர வைத்த பதம்தான் உலர் திராட்சை என்கிறோம். கருப்பு உலர் திராட்சை , தங்க நிற அல்லது மஞ்சள் நிற உலர் திராட்சை என இரண்டு உள்ளது. இதில் மஞ்சள் நிற உலர் திராட்சை விசேஷ நாட்களில் இனிப்பு வகைகளில் சேர்ப்பதுண்டு. கருப்பு திராட்சை ஊட்டச்சத்திற்காக சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டில் எதை ஆரோக்கியத்திற்காக சாப்பிடுவது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. உங்களை தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

எது சிறந்தது..? : பொதுவாக இரண்டு திராட்சையிலும் ஆரோக்கியம் , ஊட்டச்சத்து என்பது சம அளவிலேயே உள்ளது. ஆனால் கலோரியில் மட்டுமே இரண்டும் வித்தியாசப்படுகிறது. அதாவது கால் கப் மஞ்சள் நிற திராட்சையில் 130 கலோரிகள் அடங்கியுள்ளது. கருப்பு திராட்சையில் 120 கலோரிகள் அடங்கியுள்ளது. இரண்டிலும் இனிப்பு சுவை அதாவது சர்க்கரை 29 கிராம் அடங்கியுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது.

இந்த இரண்டு திராட்சைகளையும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, இரத்த சோகை, காய்ச்சல் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் என பல பிரச்னைகளுக்கு உதவுகிறது.

இருப்பினும் கருப்பு திராட்சையையே வல்லுநர்கள் , மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் ஆரோக்கியமான வழியில் எடை அதிகரிக்க கருப்பு திராட்சை உதவுகிறது. அத்துடன் கண் ஆரோக்கியம், பல் பராமரிப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் கருப்பு திராட்சையை சாப்பிடலாம். கருப்பு திராட்சையை நேரடியாக அல்லாமல் இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சாப்பிட்டால் அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறலாம்.

உலர் திராட்சையில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும், இதயத்தின் செயல்பாடுகளுக்கும் நல்ல பலன் தருகிறது. அதோடு நார்ச்சத்து நிறைந்திருப்பது கூடுதல் சிறப்பு..

2013 ஆண்டு Journal of Food Science-இல் வெளியான தகவலில் திராட்சை நீரிழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயங்களை தவிர்க்க உதவுகிறது என்று கூறியுள்ளது. இருப்பினும், திராட்சையில் அதிக கலோரிகள் இருப்பதால், நீங்கள் ஆரோக்கியமான எடையை அடைய அல்லது பராமரிக்க விரும்பினால் அவற்றை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip



ஒரு கையளவு பூசணி விதையில் இத்தனை பிரச்சனைகளை சரி செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

February 24, 2023 0

 பெப்டஸ் என்றும் அழைக்கப்படும் பூசணி விதைகள், பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதீத ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. தினசரி உங்கள் உணவில் பூசணி விதைகளை சேர்ப்பதன் மூலம், நீங்கள் நீண்டகால ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். பூசணி விதைகளில் இரும்பு, கால்சியம், பி 2, ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது.

பூசணி விதைகளில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இரத்த நாளங்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கேட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பூசணி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். மேலும், இது இதயத்தின் இயக்கம், இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல, பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை கீல்வாதம் வலியைக் குறைக்க உதவுகின்றன. மூட்டு வலிக்கு இந்த விதை, ஒரு நல்ல மருந்து.

பூசணி விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கல் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரவு நல்ல தூக்கம் வரும்.

பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டால் மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கிறது. இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளின் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது.

உடல் எடையை குறைப்பதில் பெரும்பாலான கவனம் செலுத்துகின்றனர். பூசணி விதைகள் உடல் எடையையை குறைப்பதற்கு உதவும் நல்ல மூலமாக உள்ளது. பூசணி விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்தி கேட்ட கொழுப்பை குறைக்கிறது.

பூசணி விதைகளில் கர்டிவைட்டாசின் உள்ளது. இது ஒரு தனித்துவமான அமினோ அமிலமாகும், இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சிக்கு உதவும். பூசணி விதை எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வு குறைந்து, அடர்த்தி அதிகரிக்கும்.

பூசணி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன மற்றும் தீங்கு விளைவிக்கும் செல்களை அளிக்கிறது. இதனால், உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நோயெதிர்ப்பு சக்த்தி அதிகரிக்கும்.

பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சிறிய விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை மோசமான கொழுப்பைக் குறைக்கவும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.

விந்தணு தரம் மேம்படும் : உடலில் துத்தநாகம் குறைவாக உள்ளதால், விந்தணு தரம் குறைவு மற்றும் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படுகிறது. பூசணி விதைகள் துத்தநாகம் நிறைந்தவை என்பதால், அதை நாம் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து நிறைந்த 7 காய்கறிகள்..!

February 24, 2023 0

 மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் உடல் இயக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் உதவக்கூடியதாக இருக்கும். இருந்தப் போதும் குடல் ஆரோக்கியம் என்பது மற்ற பாகங்களை விட கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது என்று கூறலாம். ஆம் மனித உடலில் சுமார் 40 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருந்தாலும், பெரும்பாலான பாக்டீரியாக்கள் குடலில் தான் காணப்படுகின்றன. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் காப்பாற்றுவதற்கும் கெட்ட பாக்டீரியாக்களை ஒழிப்பதற்கு குடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது.

ஒருவேளை உங்களது குடல் சீராக இயக்கவில்லை என்றால், நோய் எதிர்ப்பு அமைப்பு குறைதல், மூளை ஆரோக்கியமின்மை மற்றும் தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின் படி, நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது ஒரு நபரின் குடல் நுண்ணுயிரியை மாற்றுவதற்கு கணிசமாக உதவும். மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபது முதல் குடல் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நாம் நார்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ என்னென்ன காய்கறிகள் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இலை காய்கறிகள் : நம்முடை உணவுமுறையில் காணப்படும் முக்கிய பச்சை இலை காய்கறிகளில் ஒன்று கீரை. இதில் ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.

கேரட் : கேரட்டில் உள்ள அதிக நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது. பச்சையாக கேரட்டை சாப்பிடுவது, பல உடல்நலப் பிரச்சனையை சீராக்க உதவும். இது தவிர, எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் பிரச்சனைகளுக்கும் கேரட் உதவுகிறது. இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் உங்களது உணவு முறையில் நீங்கள் கேரட்டை மறக்காமல் சேர்த்துக்கொள்ளவும்.

பீட்ரூட் : பீட்ரூட் அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளில் ஒன்று. இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதோடு இது செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் குடலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அஸ்பாரகஸ் : நாம் அனைத்து காய்கறிக் கடைகளிலும் இதைப் பார்க்க முடியாது. மிகவும் அரிதானக் காய்கறிகளில் ஒன்று. ஆனால் இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது. குறிப்பாக நல்ல வளமான நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள், வைட்டமின் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நல்ல செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் இன்சுலின் எனும் கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது உணவுப்பொருள்களில் உள்ள சத்துக்களை முழுவதுமாக உறிஞ்சுவதோடு, குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

பாகற்காய் : கசப்பான சுவையுடைய பாகற்காய் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் காயாகும்.  அவை நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகளை உடையது மேலும் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகிப்பது மட்டுமல்லாமல் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதை சாப்பிடுகையில் குடல் ஆரோக்கியம்  மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல குடல் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள் : இதில் ஆன்டிஆக்ஸிடன்கள், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்களோடு அதிகளவு நார்ச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. எனவே செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலியில் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளன. இவை இரண்டும் ஆரோக்கியமான குடல் செயல்பாடு மற்றும் செரிமான பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள காய்கறிகளி ஒன்று. எனவே உங்களது உணவு முறையில் இந்த காய்கறிகளை நீங்கள் பயன்படுத்தும்போது, இதில் நார்ச்சத்துக்களால் மலச்சிக்கல் பிரச்சனைக்குத் தீர்வாக அமைவதோடு, செரிமானப் பாதையும் பராமரிக்க உதவுகிறது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip