Agri Info

Adding Green to your Life

February 28, 2023

நடைபயிற்சி முடிந்தவுடன் வடை போன்ற பலகாரங்கள் சாப்பிடலாமா?

February 28, 2023 0

 உடற்பயிற்சி செய்வது நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதுடன், ஆயுளையும் அதிகப்படுத்தும் என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நடை பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா, ஜிம்மில் உடற்பயிற்சி என எந்த வடிவத்திலாவது தினந்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. உடல் உழைப்பு குறைந்து வரும் இந்த காலத்தில் தினமும் காலையில் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்வது மிகச் சிறந்தது. ஆனால் நம்முடைய உடல் பலத்திற்கு மேலாக ஒருபோதும் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது. உடற்பயிற்சியின் போது பெருமூச்சு, உடல் சோர்வு இவை தோன்றினால் உடற்பயிற்சியை நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும்.


நடைப்பயிற்சியின் போது அல்லது நடைப்பயிற்சி முடிந்தவுடன் எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத்தீனிகள், வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லை என்றால் நடைப்பயிற்சியினால் நன்மைகள் கிடைக்காமல் போய்விடும். எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக முளைகட்டிய பாசிப்பயறு, வேக வைத்த கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. உடற்பயிற்சிக்கு பின் நமக்கு நீர்ச்சத்து குறைந்தாலும்கூட, பசிப்பதுபோல் தோன்றும். அதனால், உடற்பயிற்சிக்கு முன்னும், உடற்பயிற்சி செய்யும்போதும், உடற்பயிற்சிக்கு பின்னும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், உடற்பயிற்சிக்கு பிறகு அதிகம் பசி ஏற்படுவதை தவிர்க்கலாம்.


தண்டுவட பிரச்சினைக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு

February 28, 2023 0

 பொதுவாக மக்களுக்கு கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டு வட வலி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரண வலி என்று விட்டு விடக்கூடாது. இவைகள் தண்டு வட நரம்புகள் பாதிப்படைய (Radiculopathy generation) காரணமாகி விடும். நோய்க்கு காரணத்தை கண்டு பிடித்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். 

முதலில் பத்தியத்துடன் மருந்துகள் கொடுத்து வீக்கம், வலி குறைந்து இளக்கம் கண்டபின் எளிய பயிற்சிகள் கொடுப்பதோடு தண்டு வட புற சிகிச்சை முறைகள், தண்டு வடம் சீராகவும், ஜவ்வுகளின் அழுத்தங்களை குறைத்து வலுப்பெற செய்கிறது. மேலும் எலும்பு மூட்டுக்கள் உறுதி பெற மூட்டுக்களில் எண்ணெய் பசை சீராவதற்கான ரசாயனங்கள், லேகியங்கள், பஸ்பங்கள் முதலிய சக்தி வாய்ந்த மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

உட்கொள்ளும் மருந்துகள் மட்டுமல்லாமல் புற மருத்துவ சிகிச்சைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. சித்த மருத்துவத்தில் 32 வகையான புற சிகிச்சை முறைகள் உள்ளன. இவற்றுள் ஒன்று தான் 'மசாஜ்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் புற சிகிச்சை முறை. இதற்கு சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்று பெயர். தொக்கண முறைகள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசையில் தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தரும். உடல் முழுவதும் நிணநீர் ஓட்டத்தை சீராக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடலின் மென்தசைகள், மூட்டுகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு வலிமை தரும். நெடுந்தூரம் தினமும் மோட்டார் சைக்கிள் அல்லது பஸ்களில் பயணம் செய்பவர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் தொக்கணம் செய்தால் உடல் சோர்வு மாறும்.

இவ்வாறு நரம்பு சம்பந்தமான நோய்கள், மூட்டுகளில் ஏற்படும் நோய்கள், ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தசைகளில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கு தொக்கணம் எனப்படும் புற சிகிச்சை மிகவும் அவசியம். குமரி மண்ணில் 7-வது தலைமுறையில் சித்த மருத்துவ சேவையாற்றி வருகிறோம் என டாக்டர்கள் குணசிங்க வேதநாயகம், பிரசாந்த் சிங் தெரிவித்தனர். ஆனக்குழி ஆசான், டாக்டர் குணம் மருத்துவமனை, ஆனக்குழி, பாலப்பள்ளம் அஞ்சல்-629159. தொடர்புக்கு: 04651 226354. 227827 செல் எண்: 91 97867 77828.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

February 27, 2023

வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் குறையாத உடல் எடை... காரணமென்ன?

February 27, 2023 0

 வாக்கிங் செய்தால் உடல் எடை குறையும் என்கிறார்கள் பலரும். நான் பல வருடங்களாக வாக்கிங் செய்து வருகிறேன்.

என் உடல் எடையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை. இதற்கு என்ன காரணம்?

பதிலளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா.

ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா சென்னை

ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்வதைவிடவும் பலரும் எடையைக் குறைக்க வாக்கிங் செய்வதையே விரும்புகிறார்கள். வாக்கிங் மட்டுமே எடைக்குறைப்புக்குப் போதுமானதுதான். அரைமணி நேர நடைப்பயிற்சியிலேயே ஒருவர் 150 கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் மெதுவாக நடக்காமல், வேகமான நடையாக இருக்க வேண்டியது முக்கியம். அப்படி நடந்தாலே உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஒரு மருத்துவராக நான் எல்லோருக்கும் சொல்ல விரும்புகிற மெசேஜ் ஒன்று இருக்கிறது. அதாவது நம்முடைய இலக்கு வெறும் எடைக்குறைப்பாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்ட முயற்சியாக இருக்க வேண்டும்.

அதனால் வாழ்நாள் முழுவதும் உடல்திறனை மேம்படுத்துவதும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடைப்பயிற்சி மட்டுமன்றி வேறு சில பயிற்சிகளையும் செய்வது சிறந்தது.

வாழ்க்கையில் இப்போதுதான் முதல்முறையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கப் போகிறவர் என்றால் முதலில் வாக்கிங் மட்டும் செய்தாலே போதுமானது. சில நாள்களுக்கு வாக்கிங் செய்து உடலின் ஏரோபிக் தன்மை வளர்ந்தபிறகு மற்ற பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம்.

எடைக்குறைப்பு என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. வெறும் வாக்கிங் மட்டும் செய்வேன், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன், தூக்கத்தை முறைப்படுத்த மாட்டேன் என்பது பலன் தராது.


வாக்கிங்

எடைக்குறைப்புக்காக வாக்கிங் செல்வது என முடிவெடுத்துவிட்டால், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைச் சந்தித்து அவரின் ஆலோசனைகளோடு சேர்த்து இரண்டையும் பின்பற்றும்போது நிச்சயம் பலன் தரும். வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம். மெதுவாக நடப்பவராக இருக்கலாம். இப்படி ஏதோ ஓரிடத்தில் தவறு நடந்திருக்கலாம். அதைத் தெரிந்து கொண்டு சரிசெய்யப் பாருங்கள்.

தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?

February 27, 2023 0

 தினமும் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்த பலரும் விரும்புவார்கள்.

அதுவும் குளிர் காலத்தில் காலை வேளையில் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால்தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.வெந்நீர்க் குளியல் உடலுக்கும் மனத்துக்கும் சுகம் அளிக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள். மிகச் சூடான வெந்நீரில் சிறிதளவு யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து குளித்தால் உடல் வலி நீங்குவதுடன் சளி இருமல் பிரச்னைகள் இருந்தால் சரியாகும் என்று நினைப்பார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்:

உண்மையில் வெந்நீர்க் குளியல் உடலுக்கு நன்மை செய்வதை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. உங்கள் சருமம் மென்மையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். வெந்நீரில் குளிக்கும்போது சருமத்தின் ஈரத்தன்மை குறைந்துவிடும். உங்களுடைய சரும வகை சென்சிட்டிவ்வாக இருந்தால் நிச்சயம் வெந்நீரில் குளிக்கக் கூடாது. அரிப்பு, அலர்ஜி போன்றவை இலவச இணைப்பாக வந்து சேரும்.

தூக்கத்தைக் கலைக்க வெந்நீர்க் குளியல்தான் சிறப்பு என்று நினைப்பது தவறு. குளிக்கும்போது சுகமாக இருக்கும். ஆனால், நாளடைவில் உடல் மனம் எல்லாம் தளர்ச்சி அடைந்துவிடும். தொடர்ந்து வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இளமைத் தோற்றம் மாறி விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும்.

சுடச்சுட தண்ணீரைத் தலையில் கொட்டிக் குளிப்பதால் தலைமுடியின் வேர்கள் பலமிழந்து அதிக அளவில் முடி கொட்டும். ஆண்களுக்குத் தலையில் வழுக்கை விழுந்துவிடும். மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் சுடுதண்ணீர் குளியல் சுகமாகத் தான் இருக்கும். அப்படியே பழகிவிட்டால் உடல் அதற்கு அடிமையாகிவிடும். அதன்பின் வரும் வெயில் காலத்தில் கூட பலர் வெந்நீரில்தான் குளிப்பார்கள். பழக்கம் காரணமாக இதைச் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. குளிர் காலத்தில் வெந்நீர் குளியல் என்றால் வெயில் காலத்தில் குளிர்ந்த நீர்க் குளியல் என மாறிக்கொள்ளலாம்.

நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளும்போது இரண்டு சொம்பு குளிர்ந்த நீரில் முதலில் குளியுங்கள். அதன்பின் அந்த குளிர்ச்சி உடலுக்குப் பழகிவிடும். முழுக் குளியலையும் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியாகும். சருமமும் பொலிவாகும். தலைமுடி உதிர்வும் இருக்காது.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

ஐடிபிஐ வங்கியில் 600 உதவி மேலாளர் காலிப் பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

February 27, 2023 0

 ஐடிபிஐ வங்கியில், 600 உதவி மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் (Feb. 28 ) முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப் பணியிட விவரம்: 600. இவற்றில், பொதுப் பிரிவினருக்கு 244 இடங்களும், பட்டியல் கண்ட பிரிவினருக்கு 190 இடங்களும், பழங்குடியினர் இனத்தவருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 89 இடங்களும், பொருளதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 60 இடங்களும், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 32 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி : பிப்ரவரி, 28.

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு  பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: வங்கி நிதி மேலாண்மை மற்றும் காப்பீடுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01/01/2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 21- 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: இணைய வழி எடுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தேர்வு, ஆட் சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை (Pre- Recruitment Medical Test) ஆகிய படிகளை கொண்டுள்ளது. எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் கண்ட பிரிவினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.200 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Recruitment of Assistant Manager (Grade "A") - 2023-24, Apply Online என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.             

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TANSEED : ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் மானிய நிதியளிக்கும் தமிழக அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

February 27, 2023 0

 தமிழ்நாடு புத்தெழில் மற்றும் புத்தாக்க இயக்கம், TANSEED ஆதார  நிதி மானியத் திட்டத்தின் 5வது பதிப்பிற்கான (5th Edition) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் (START UPS) ரூ.10 லட்சம் வரை மானிய நிதி வழங்கப்பட்டு வந்தது.

 TANSEED ஆதார  நிதி மானியத் திட்டம்:  தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக வடிவமைக்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் நடைபெற்றுள்ளது. தற்போது 5ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது.

டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 84 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள. தற்போதைய, 5ம்  பதிப்பு முதல் இத்திட்டம் 3% அளவிலான சிறு பங்கை (equity model for 3% stake) தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பின் மூலமாக மேலும் 50 ஸ்டார்ட்அப்  நிறுவனங்கள் பயன்பெற தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

5வது பதிப்பில் சிறப்பு சலுகைத் தொகுப்பு:

இதற்கிடையேகடந்த டிசம்பர் மாதம்  TANSEED திட்டத்தின் கீழ் பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்கள் முதன்மையாகக் கொண்ட ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, மேற்கண்ட துறைகள் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மானிய நிதி ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த சிறப்பு சலுகை தொகுப்பு, 5வது பதிப்பின் கீழ் நடைமுறைக்கு வர இருக்கிறது. எனவே,  பெண்கள் முதன்மையாகக் கொண்ட ஸ்டார்-அப் நிறுவனங்கள் ரூ.15 லட்சம் வரை மானியம் பெறலாம்.

பொது நிபந்தனைகள்:  பல்வேறு தேவைகளுக்கான  தீர்வுகளை வடிவமைத்து பெரும் சந்தை மதிப்பீடுகளை உருவாக்கக்கூடிய மற்றும் வருங்காலங்களில் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளுடன் சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற  விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்திய அரசின் DPIIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் www.startuptn.in என்ற  இணையதளத்தின் வழியே, மார்ச் 5, 2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள tanseed@startuptn.in என்ற மின்னஞ்சல் முகவரியை  அணுகலாம். 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலிப்பணியிடங்கள்.. நெல்லை கலெக்டர் வெளியிட்ட செம்ம அப்டேட்..

February 27, 2023 0

 திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் அலுவலர்கள் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (சுகாதார ஆய்வாளர் நிலை II) ஆகிய பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.

இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ வேறு முன்னுரிமையோ சலுகைகளோ, பிற்காலத்தில் கோர இயலாது இதற்கான விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் http://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றுகளுடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். விண்ணப்பங்களை இணையதளத்தில் 06.03.2023 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அலுவலகத்தில் நேரிலோ தபால் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” என தெரிவித்துள்ளார்.











அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச கோச்சிங்: தாட்கோ அறிவிப்பு

February 27, 2023 0

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2023 ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு (SSC MTC - 2023), 2023 ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (SSC CGL), 2023 ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) (CHSL (10+2) Examination, இளநிலை பொறியாளர் (SSC JE) உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான போட்டித்  தேர்வுகளை மத்திய அரசுப்  பணியாளர் நடப்பு ஆண்டில் அறிவிக்க வருகிறது.

எஸ்எஸ்சி வெளியிட்ட தேர்வு திட்ட அட்டவணையின் படி, 2023 Multi Tasking non technical staff தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிடப்படும். ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நிலை - I தேர்வு நடைபெறும்.

TAHDCO Exam training courses
தாட்கோ தேர்வு பயிற்சித் திட்டம்

மேலும், SSC CGL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக மே 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலை - I தேர்வு ஜூன்/ஜுலை மாதங்களில் நடைபெற இருக்கிறது.

அதே போன்று, SSC CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜுலை/ஆகஸ்ட் மாதங்களில் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கிறது.

எனவே, இந்த தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தயாராகும் வகையில் தேர்வு பயிற்சித் திட்டத்தை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பயிற்சிக்கான மொத்த செலவுகளையும் தாட்கோ நிறுவனம் ஏற்கும். ஆர்வமுள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சியில் அக்னிபத் வேலைவாய்ப்பு முகாம்: எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?

February 27, 2023 0

 2023 -24ம் ஆண்டுக்கான அக்னிவீரர் தேர்வுக்கான அறிவிப்பை ராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி,  மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீர் ஜெனரல், அக்னீவீர் தொழில்நுட்பம் (agniveer Technical), அக்னிவீர் கிளர்க்/ஸ்டார் கீப்பர் தொழில்நுட்பம், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன், அக்னீவீரர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Selection Procedure: ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு (Recruitment Rally) அழைக்கப்படுவர்கள்

ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மார்ச் 15ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பை இணைப்பில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


விளையாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்கள்: உடற்தகுதித் திறன் தேர்வு தேதி அறிவிப்பு

February 27, 2023 0

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் திறன் தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி காலை 7 மணி முதல் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம். வில்வித்தை,கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வலைகோல்பந்து, ஜுடோ, கபடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுக்களுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த டிசம்பரி 2022 மாதத்தில் நாளிதழ்களிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலும் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளது. அவற்றில் முதல் நிலையாக அனைத்து இனங்களிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டம் நிலை தேர்வுகள் கடந்த 29.01.2023 அன்று நடைபெற்றது. முதன் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 169 விண்ணப்பதாரர்களுக்கு மூன்றாம் நிலை தேர்வாக 02.03.2023 அன்று நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலமும், அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் மார்ச் 2தேதியன்று காலை 7.00 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். மேற்படி தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு யாதொரு மறு வாய்ப்பும் வழங்கப்பட இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

February 26, 2023

நீண்ட நாள் உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

February 26, 2023 0

 உடலில் சேரும் அழுக்குகளை நீக்க நாம் தினமும் குளிக்கிறோம். ஆனால், அடிக்கடி நாம் தலைக்கு குளிப்பதில்லை. சிலர் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பார்கள். இன்னும் சிலர், நேரமின்மை காரணமாக சிலர் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பார்கள். தினமும் தலைக்கு குளிப்பது, கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

அடிக்கடி தலைக்கு குளித்தால், தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்  நீங்கி, கூந்தல் வறட்சியாகவும் கரடு முரடாகவும் காணப்படும். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் நாம் தலைக்கு குளிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என, நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?. இதற்கான பதிலை நாங்க கூறுகிறோம். அத்துடன் எவ்வளவு நாட்களுக்கு நாம் நமது தலைமுடியை வாஷ் செய்யாமல் வைத்திருக்கலாம் என பார்க்கலாம்.

தலைமுடியை கழுவாமல் இருந்தால் என்ன ஆகும்?

நீண்ட நாட்களுக்கு உங்கள் தலைமுடியை வாஷ் செய்யாமல் வைத்திருந்தால், முடி வளர்ச்சி தடைபடும். அத்துடன், முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நாம் வெளியில் சென்று வரும் போது தலை முதல் கால் வரை தூசி படிந்திருக்கும். நாம் அதை குறிப்பிட்ட நாட்களில் சுத்தம் செய்யவில்லை என்றால், உச்சந்தலையில் அது அழுக்காக படிந்து விடும். அந்த அழுக்குகள், முடியின் வேர் துவாரங்களை முற்றிலும் முடிவொடுவதால், ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

தலைமுடியை குறிப்பிட்ட நாட்களுக்கு கழுவவில்லை என்றால், உங்கள் தலையில் எண்ணெய் படிந்துவிடும். இதனால், தலையிலும் முடியிலும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை, நீங்கள் எண்ணெய்க்கு பதில் கூந்தல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தினால், அவை அப்படியே உங்கள் கூந்தலில் தங்கிவிடும். இதனால், முடிகள் வறட்சியடையும்.

முடியில் உள்ள அழுக்குகள் பொடுகை ஏற்படுத்தாது. இருப்பினும், உங்கள் தலைமுடியை நீண்ட நாட்களுக்கு கழுவாத போது, தலையில் படிந்துள்ள எண்ணெய் செதில் செதிலாக உருவாகலாம்.

உச்சந்தலை அரிப்புக்கான காரணம்?

உச்சந்தலையில் அரிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில், சிலவற்றை இங்கே காணலாம் :

- பொடுகு பிரச்சனை

- நாம் உபயோகிக்கும் ஹேர் கேர் தயாரிப்புகளின் எதிர்வினை.

- தயாரிக்குகளில் சேர்க்கப்படும் அமிலங்கள்.

- தலை பேன்.

- தலையில் ஏற்படும் தடிப்புத் தோல் அழற்சி.

முடி வளர்ச்சி அதிகரிக்க இதை செய்யுங்கள் :

- ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யுங்கள்.

- ஒரு மென்மையான பிரெஷ் கொண்டு தலைமுடியை ஸ்க்ரப்பிங் செய்யவும்.

- ஒரு சிறந்த ஆண்டிசெப்டிக் ஷாம்பூவை கொண்டு, உங்கள் தலை முடியை 2 நாட்களுக்கு ஒருமுறை வாஷ் செய்யவும். உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருங்கள்.

- தலையை துணிகளால் கட்டி வைப்பதை தவிர்க்கவும்.

- தலைமுடியை எப்போதும் மென்மையாக கையாள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, குளித்து முடித்துவிட்டு தலையில் உள்ள ஈரத்தை உலர்த்தும் போது, தலையில் சிக்கு எடுக்கும் போது, ஹேர் ட்ரையராய் பயன்படுத்தாமல் ஈரத்தலையில் சிக்கு எடுப்பது போன்ற சமயங்களில் தலைமுடியை மென்மையாக கையாள வேண்டும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரக செயலிழப்பால் அடிக்கடி டயாலிசிஸ் செய்கிறீர்களா..? இந்த குறிப்புகள் உங்களுக்குத்தான்.!

February 26, 2023 0

 சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களை குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இது விலங்குகளின் உடலில் நிகழும் பல முதன்மையான தொழிற்பாடுகளை ஒழுங்காக்குவதில் பங்களிக்கின்றது. மனிதர்களில், சிறுநீரகம், வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகின்றது. சிறுநீரகங்கள் உடலில் உள்ள pH, உப்பு மற்றும் பொட்டாசியம் அளவையும் கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கின்றன, அதே போல் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியையும் செய்கின்றன.

புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படத் தவறினால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

டயாலிசிஸ் என்றால் என்ன?

இயற்கையாக சிறுநீரகம் ரத்தத்தை சுத்திகரித்து செய்யும் வேலையை செயற்கை முறையில் இயந்திரம் மூலம் சிறுநீரகத்தின் வேலையை செய்ய வைப்பதுதான் டயாலிசிஸ். இரத்தத்திலிருந்து கழிவுகளையும் கூடுதல் நீரையும் பிரித்தெடுக்கும் ஓர் செயல்பாடாகும். சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறுநீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளிகளுக்கு செயற்கை முறையில் வழங்குவதற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. டயாலிசிஸ் செய்வது விலை உயர்ந்தது மட்டுமல்ல, நோயாளியின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

ஒரு மனிதனின் இரண்டு சிறுநீரகங்களும் நிரந்தரமாக செயலிழந்து போனாலும், அந்த சிறுநீரகங்கள் உடலில் தினமும் செய்யும் வேலைகளை இந்த கருவி மூலம் செய்ய வைத்து 30 முதல் 35 வருடங்களுக்கு மேலாகவும் அந்த நோயாளியை வாழ வைக்க முடியும். இந்த சிகிச்சையை மேற்கொள்ள பணம் செலவாகக் கூடும் எனவே டயாலிசிஸ் நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதைக் குறைத்துக்கொள்வதன் மூலம் அத்தகைய செலவுகளை குறைத்துக்கொள்ளலாம். இங்கு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் அதனை குறைத்துக்கொள்ளும் விதமாக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

வைட்டமின் டி

டயாலிசிஸ் செய்யும் நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு பொதுவானது. வைட்டமின் டி உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சூரிய ஒளி வெளிப்பாடு தவிர, இனம், பாலினம், வயது, உடல் பருமன் மற்றும் குறைபாடுள்ள வைட்டமின் டி தொகுப்பு மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற காரணிகள் வைட்டமின் டி குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.வைட்டமின் டி குறைபாட்டைத் தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, மீன் எண்ணெய், சிவப்பு இறைச்சி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.

ஹீமோகுளோபின் கண்காணிப்பு

நீண்டகாலத்திற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அது தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி பலவித நோய்களை ஏற்படுத்தும் காரணியாக மாறிவிடும். நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஹீமோகுளோபின் அளவுகளுக்கும் இறப்பு விகிதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. டயாலிசிஸ் நோயாளிகள் தங்கள் ஹீமோகுளோபின் அளவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிகிச்சையை தவறவிடாதீர்கள்

இதனுடன், டயாலிசிஸ் நோயாளிகள் மருத்துவமனைகள் மற்றும் டயாலிசிஸ் வழங்குநர்களுடன் சிறந்த தொடர்பை பேணுவது அவசியம். இரத்த சோகையை நிர்வகிப்பதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும், மருந்துகளை உள்ளடக்கிய மருத்துவ பராமரிப்பு வழங்குநரால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவமனையில் சேர்வதைத் தவிர்க்க, திட்டமிடப்பட்ட அனைத்து டயாலிசிஸ் அமர்வுகளிலும் கலந்துகொள்வது முக்கியம் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் எந்த சிகிச்சையையும் தவறவிடாதீர்கள். நீங்கள் டயாலிசிஸைத் தவிர்க்கும்போது, ​​அது உடலில் கழிவுகள் மற்றும் நச்சுகளை உருவாக்குகிறது, இது கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பாய் இருத்தல்

தொற்றுநோய் கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடிதொடர்பு (physical contact), காற்றின் வழியாக, நீரின் வழியாக, உணவினால், தொடும் பொருட்களினால் தொற்றுநோயானது பரவலாம். எனவே நீங்கள் டயாலிசிஸ் செய்யும் போது, ​​பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றை மூக்கு அல்லது வாய் வழியாக உள்ளிழுப்பதன் மூலமாகவோ அல்லது தொடுதல் போன்ற காரணங்களால் உடலுக்குள் நுழையும் போது ஏற்படும் தொற்றுநோய்களைத் தவிர்ப்பது முக்கியம்.


தொண்டை சளி.. காது வலி.. கேன்சராகவும் இருக்கலாம்.. தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள் இதுதான்!

February 26, 2023 0




தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்:

WHO (உலக சுகாதார அமைப்பு) படி, 2020 ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் மரணத்திற்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தோமேயானால் ஒவ்வொரு 6 இறப்புகளில் ஒன்று புற்றுநோயால் ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது ஒரு கொடிய வகை நோய் என்ற எண்ணமும் அதனை பற்றிய பயமும் மக்கள் மனதில் தொடந்து இருந்து வருகிறது. குறிப்பாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக சில சமயங்களில் நமது வாழ்க்கை முறையே காரணமாக அமைந்து வருகிறது.

புற்றுநோயின் அறிகுறிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டால், அதை எளிதாக குணப்படுத்த முடியும். அந்த வகையில் தொண்டை புற்றுநோய் என்பதின் பாதிப்பு என்பதும் பயம் தரக்கூடியதாகவே இருக்கிறது. அதன் அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றத் தொடங்குகின்றன. சிகரெட், மது, புகையிலை, குட்கா போன்றவை தொண்டை புற்றுநோய்க்கு முக்கியமாக காரணமாகின்றன. எனவே, தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், இந்த கொடிய நோயைத் தவிர்க்கலாம்.

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகள் :  1. சளி - தொண்டையில் ஏற்படும் சளி அப்படியே இருக்கும். நீண்ட நாட்களாக சளி இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்.

2. குரலில் மாற்றம்  - கனமாக இருப்பது அல்லது குரலில் மாற்றம் ஏற்படுவது தொண்டை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். குரல் மாற்றம் இரண்டு வாரங்களுக்கு குணமடையவில்லை என்றால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

3. விழுங்குவதில் சிரமம் - உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது, ​​உணவு தொண்டையிலேயே சிக்கி இருப்பது போல் தோன்றும், இது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

4-எடை இழப்பு - எந்த வகையான புற்றுநோய் ஏற்பட்டாலும் எடை குறைதல் உள்ளது. எனவே, காரணமின்றி திடீரென உடல் எடை குறைந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

5. காதில் வலி - காதுகளுக்கும் கழுத்திற்கும் தொடர்பு இருக்கும். எனவே, காதில் தொடர்ந்து வலி இருந்தும், இந்த வலி விரைவில் நீங்காமல் இருந்தால், அது தொண்டை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

6. கழுத்துக்குக் கீழே வீக்கம் - கழுத்தின் கீழ் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை என்றால், அது புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம். இந்த வழக்கில், உடனடியாக மருத்துவரை அணுகவும்.


Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip 

காய்ச்சல் இருக்கா..? நிமோனியாவா இருக்கலாம்.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

February 26, 2023 0

 இன்றைக்கு மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு நோய்களையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்றான நிமோனியா என்பது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

 உலக சுகாதார நிறுவன தகவலின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட 7,40,000 குழந்தைகள் நிமோனியாவில் உயரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நோயின் தாக்கம் மற்றும் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 ஆம் ஆண்டு உலக நிமோனியா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைக்கு நாம் நிமோனியா பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…



நிமோனியா என்றால் என்ன? 
நுரையிரல் செல்களில் ஏற்படும் அழற்சி தான் நிமோனியா என்றழைக்கப்படுகிறது. பொதுவாக நம்முடைய நுரையீரலில் அல்வியோலி என்றழைக்கப்படும் மிகவும் சிறிய காற்றுப்பைகள் உள்ளன. இவை பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகும் போது நிமோனியா உண்டாகிறது.

நிமோனியாவின் அறிகுறிகள்: 
காய்ச்சல், குளிர், மூச்சுத்திணறல், சுவாசிக்கும் போது மார்பு வலி, அதிகப்படியான இதய துடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல், இருமல், வயிறு எரிச்சல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன.இதுப்போன்ற அறிகுறிகள் நிமோனியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகளாக அமைகிறது என்றாலும், கீழ்வரும் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதோ அதன் விபரம்..

சளியுடன் கூடிய காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவை நீங்கள் சந்திக்க நேரிடும்.நாம் தினமும் செய்யக்கூடிய பணிகளை செய்யும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டவுன் மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சு விடும் போது நெஞ்சு வலி, சளி அல்லது காய்ச்சல் குணமடைந்த பின்னரும் திடீரென உடல் நிலை மோசமடைதல், இதய நோய், நீரழிவு அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற உடல் நல பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நோய் கண்டறிதல் விதம் : மேற்கூறியுள்ள அறிகுறிகள் எதுவும் இருந்தால், உடனடியாக உடல் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே மூலம் கண்டறிப்படுகிறது. மேலும் இரத்த பரிசோதனை, சளி பரிசோதனையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதோடு சில நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் மற்றும் ப்ரான்கோஸ்கோபியும் தேவைப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

சிகிச்சை : நிமோனியா பாதிப்பு உங்களது ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் மருத்து பரிசோதனை மூலம் கண்டறிந்து விட்டீர்கள் என்றால்? வீட்டிலேயே நீங்கள் வாழ்வழி நுண்ணுயிர் எதிரப்பிகளுடன் கூடிய சிகிச்சைகளை நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும் ஆண்டிபயாடிக் சிகிச்சையின் மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் மேம்படத் தொடங்குகிறார்கள்.ஒருவேளை நோயின் தாக்கம் தீவிரமாகும் பட்சத்தில், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள் : நிமோனியா மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க தடுப்பூசி ஒரு முக்கியமான வழியாகும். நிமோகாக்கல் தடுப்பூசி மற்றும் காய்ச்சல் அல்லது காய்ச்சல் தடுப்பூசி ஆகியவை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரிந்துரைக்கப்படும் மிகவும் பொதுவாக கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் ஆகும்.புகைபிடிப்பதை நிறுத்துவது நிமோனியாவைத் தடுக்க ஒரு முக்கியமான படியாகும். தொற்றுகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். மேலும் நிமோனியா அறிகுறி உள்ளவர்கள் இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.


HAL நிறுவனத்தில் ரூ.4,52,400/- ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 26, 2023 0

 Hindustan Aeronautics Limited (HAL) ஆனது Physician, Pathologist மற்றும் GDMO பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.4,52,400/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HAL காலிப்பணியிடங்கள்:

Physician, Pathologist மற்றும் GDMO பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Physician கல்வி தகுதி:

MBBS, Postgraduate Degree/Diploma in General Medicine, Pathology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HAL வயது வரம்பு:

17.03.2023ம் தேதியின் படி 65 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Physician ஊதிய விவரம்:

Physician, Pathologist – பணிக்கும் தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,86,000/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

GDMO – பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.4,52,400/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடத்தப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.03.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF