Agri Info

Adding Green to your Life

March 6, 2023

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

March 06, 2023 0

 கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer – Rs.27,804/-) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator – Rs.13,240/-) பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) முடித்திருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641 018 ஆகும்.

மாவட்ட பாதுகாப்பு அலகு (சங்கம் ): 

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு/சங்கம்  செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களோடு இணைந்து நல்ல முறையில் செயல்படுத்துதல் இந்த அலகின் முக்கிய நோக்கமாகும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் தலைமையில் 11 பணியாளர்களுடன் இந்த சங்கம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 4, 2023

ரூ. 1 லட்சம் வரை சம்பளம்: பரதநாட்டிய பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

March 04, 2023 0

 இந்திய பாராளுமன்றத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட கலாசேத்திரா அறக்கட்டளையின் ருக்மிணி தேவி கவின் கல்லூரியில் காலியாக உள்ள பரதநாட்டியம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் பயிற்றுநர் இடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்: 

பரதநாட்டியம்  பயிற்றுநர்: 1 காலியிடம்.

விண்ணப்பதாரர் 10ம்  வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நிகழ்ச்சியில் குறைந்தது 2  மணி நேரம் நாட்டியம் அரங்கேற்றும் செய்யும் திறன் வேண்டும்.  நாட்டுவங்கம்  செய்ய தெரிந்திருக்க வேண்டும்.   தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் இசை/நடன விதிகளை எழுத தெரிந்தால் கூடுதல் நன்மையாகும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் வயது வரம்பு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு, ஆரம்பகட்ட ஊதியமாக ரூ.53252 கொடுக்கப்படும். சம்பள நிலை: 35,400 - 1,12,400 ஆகும்.

இசை பயிற்றுனர்: 1 காலியிடம் விண்ணப்பதாரர் 10ம்  வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். கர்னாடிக் இசையில் பட்டயம் அல்லது முதுநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். கலாசேத்திரா நடன  நிகழ்ச்சியில் பங்கேற்கும் வேண்டும்.  நாட்டுவங்கம்  செய்ய தெரிந்திருக்க வேண்டும். இசை விதிகளை எழுதவும்/படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்திய மொழிகள் தெரிந்திருப்பது கூடுதல் நன்மையாகும். சம்பள நிலை: 35,400 - 1,12,400. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.53252 வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தை,  Director, kalakshetra Foundatation, Thiruvanmiyur,chennai - 600 041என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க  வேண்டும். விண்ணப்ப அறிவிப்பு வெளியான (மார்ச் 3ம் தேதி) 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது .


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: 84 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

March 04, 2023 0

 சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது, ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணியிடங்களாகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர்காலியிடங்கள் எண்ணிக்கைவயதுகல்வித் தகுதி
மருத்துவர்கள்2840 வயது வரைகுறைந்தது எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதார பணியாளர்2850பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க  வேண்டும்
உதவியாளர்கள்28508ம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

 தொகுப்பூதியம்: மருத்துவர் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 60,000 வழங்கப்படும், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பதவிக்கு மாதம் ரூ. 14,0000ம், உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ . 8,500ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, விண்ணப்பப் படிவங்களை, சேலம் மாவட்ட salem.nic.inஇணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,பழைய நாட்டாண்மை கட்டட அலுவலகம், சேலம் மாவட்டம் - 636 001 ஆகும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் மார்ச் 10ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு தேசிய நல்வாழ்வு குழுமம் (http://nhm.tn.gov.in/en) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அலுவலக நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்... தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு - புதுக்கோட்டை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

March 04, 2023 0

 புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் MARCH , 11ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,  தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11.03.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மேலும், வேலைதேடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்' (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

March 04, 2023 0

 தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட இருக்கின்றன. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிட விவரம்: 

காலியிடங்கள் எண்ணிக்கை2
கல்வித் தகுதி8ம் வகுப்புத் தேர்ச்சி
சம்பள நிலைரூ. 15,700 முதல் 50,000 வரை (நிலை-1)
இனசுழற்சி மற்றும் முன்னுரிமைபிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாம் அல்லாதோர்) முன்னுரிமை பிரிவு;பொது பிரிவினர் ஆதரவற்றோர் விதவை
வயது வரம்புகுறைந்தபட்ச வயது - 18அதிபட்ச வயது: பொதுப்பிரிவினர் - 32, பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 34, பட்டியல் கண்ட பிரிவினர்/பழங்குடியினர்/ ஆதரவற்ற விதவை பிரிவினர் - 37.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 6ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி மாலை 5.45க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மணிமண்டபம் எதிரில், தஞ்சாவூர் என்ற முகவரியில் உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மார்ச் 21 மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத அல்லது உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பர அறிக்கையை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ உதவி இயக்குநருக்கு முழு அதிகாரம் உண்டு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் 281 பணியிடங்கள்!

March 04, 2023 0

 

தமிழ்நாட்டில் மிக முக்கிய திருக்கோயில்களில் ஒன்றாக விளங்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைவாய்ப்பு தேடி இளைஞர்கள் இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்: 

வெளித்துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள்

தட்டச்சர்6
நூலகர்1
கூர்க்கா2
அலுவலக உதவியாளர்65
உபகோவில் பல வேலை26
சமையல் உதவியாளர்2
ஆயா பணி3
பூஜை காவல்10
காவல்9
பாத்திர சுத்தி50

மேற்காணும் பணியிடங்களில், பெரும்பாலான பதவிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

அதேபோன்று, கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் போன்ற தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 காலிப்பணியிடங்களும்;  ஆசிரியை, ஆய்வக உதவியாளர் போன்ற ஆசிரியர் பிரிவின் கீழ் 19 காலியிடங்களும்; நாதல்ஸ்வரம், தவில் போன்ற உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அதனை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்.

பொது நிபந்தனைகள்:

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.inஎன்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். செலுத்தி அலுவலக நேரத்தில் நேரில்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சுய தொழில் தொடங்க விருப்பமா? இந்த வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க!

March 04, 2023 0

 இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், Unemployed Youth Employment Generation Programme (UYEGP) என்ற திட்டம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்கும்,  புதிய வேலைவாய்ப்புகளை உருவாகுவதற்கம் உதவக்கூடிய திட்டமாக திகழ்கிறது.

இந்த திட்டத்தின் கீழ்,  இந்த நிதியாண்டில் மட்டும் 2,500க்கு மேற்பட்டோருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்புதல் அளிக்கப்பட்டவர்களில், சுமார் 20 கோடி ரூபாய் மானிய நிதியாக விடுவிக்கப்படித்திருக்கிறது. எனவே, வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஏதேனும் சுய தொழில் தொடங்க விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

யார் விண்ணப்பிக்க முடியும்: 

திட்டம்வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme)
யார் விண்ணப்பிக்கலாம்குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்புபொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 18 -35 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஏனையோர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம்சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்களுக்காக இந்த திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. எனவே, குடும்ப  ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதற்கு தகுதி பெறுவர்
 என்ன திட்டம் இது?இளைஞர்கள் சுயமாக தொழில் தொகை கடனுதவி வழங்கப்படுகிறது.உற்பத்தித் துறையின் (Manufacturing) கீழ் ரூ. 15 லட்சமும், சேவைகள் (Service) மற்றும் வணிகப் பிரிவில் (Trading) ரூ. 5 லட்சமும்   கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
கடன் வழங்குவது யார்?வங்கி மற்றும்  நிதி நிறுவனங்கள்
என்ன சலுகை?திட்ட மதிப்பீட்டில் 25% (அதிக பட்சம் ரூ 2.5 லட்சம்) அரசு  மானியமாக வழங்குகிறது.
சொத்து ஜாமீன் தேவையாஆர்பிஐ வங்கியின் வழிகாட்டுதல் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டத்திற்கு சொத்து அடமான வைக்கத் தேவையில்லை.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம், தமிழ்நாடு அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  கோரப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து இணைய வழியில் அனுப்பி வைக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பங்களை  UYEGP திட்ட நேர்காணல் குழு தேர்வு செய்யும். அந்தந்த மாவட்ட தொழில் மைய மண்டல இயக்குனர் இந்த குழுவின் தலைவராக இருப்பார்.  இந்த தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள், வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியால் லோன் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பித்தார்களுக்கு, அரசு மானியம் ரூ. 2.5 லட்சம்  (அதிகபட்சம்மாக) விடுவிக்கப்படும். இந்த திட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள, உங்கள் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை அணுகலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அஞ்சல் துறை அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

March 04, 2023 0

 தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் உள்ள அலுவலங்கங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (Staff Car Driver -General Central Service, Group-C, Non- Gazetted, Non - Ministerial) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலிப்பணியிட விவரம்:

சென்னை நகர மண்டலம் (Chennai City Region)6
மத்திய மண்டலம்9
அஞ்சல் ஊர்தி சேவை, சென்னை (MMS, Chennai)25
தெற்கு மண்டலம் (Southern Region)3
மேற்கு மண்டலம் (Western Region)15
மொத்தம்58

அடிப்படை தகுதிகள்: இந்த  ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம்  இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின்  வயதுவரம்பு  31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல்  சாதிகள்/ பட்டியல்  பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

சம்பள நிலை: 19,900 முதல் 63,200 வரை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட படிகள்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


வீடுகளில் மூலிகை வளர்த்து சம்பாத்திக்கலாம்... தமிழக அரசின் சூப்பர் திட்டம் இதோ

March 04, 2023 0

 வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ. 1500க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும்  பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

பண்டைய காலத் தமிழர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாழ்வினைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வியலை மீள் உருவாக்கம் செய்யவும், தமிழ் மருத்துவத்தை பொது சன மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு கடந்த 2022-23 நிதியாண்டில், வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுதவிர, செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தேங்காய் நார் கட்டிகள், மண்புழு உரம், தொழில் நுட்ப கையேடு, போக்குவரத்து மற்றும் ஆவணப்படுத்துதல் என மொத்தம் ரூ. 1500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மொத்த தொகையில், அரசு மானியமாக ரூ. 750 வழங்கும். விண்ணப்பதாரர் தனது பங்களிப்புத் தொகையாக ரூ. 750 செலுத்த வேண்டும்.

இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். வீட்டு மூலிகைத் தோட்டத்தளைகளை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் / Application Form பக்கத்தில் தேவைப்படும் விவரங்கள் அளித்து, வீட்டு முகவரி சான்று/ஆதார் அட்டை (அல்லது ஏதாவது ஒரு அடையாள ஆவணம்) மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து  விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

March 04, 2023 0

 சமுதாயத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ' இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை' செயல்படுத்தி வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள்  பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூபாய். 1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி  தெரிவித்துள்ளார்.

20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்குள் கீழ் இருக்க வேண்டும். 

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம்.  விண்ணப்பப் படிவத்தை பூரித்தி செய்து  இருப்பிடச் சான்று, ஆதார அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகள் இணைக்கப்பட்டு வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 3, 2023

ஆபீஸ் டென்ஷனை குறைப்பது எப்படி?

March 03, 2023 0

 சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்வது எப்படி? என்பதை இந்த கட்டுரையில் விளக்கியிருக்கிறோம். 


1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள் தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் இல்லாமல் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

 2. 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் 'ஸ்டெப்ஸ்' என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். உங்கள் வீட்டு மாடிப்படி ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேன்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள் தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

4. ஒரு நாவல் எழுதுங்கள் ஒரு நாளில் உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை 1500 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள். 30-வது நாள் 50 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும். 

5. காதலிக்க பழகுங்கள் உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

வீட்டுக்கடன் வாங்க எந்த வட்டிவிகிதம் சிறந்தது

March 03, 2023 0

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் பல ஆண்டுகள் வீட்டுக் கடன்களைக் கட்டும் போது நிலையான வட்டி விகிதத்தால் அதிக வட்டியுடன் நாம் பணம் கட்ட நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 

இன்றைக்கு வீடு கட்ட வேண்டும் என்று யோசித்தால் எந்த இடத்தில் என்று பெரும்பாலும் யோசிப்பதை விட நமக்கு எந்த வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியுடன் கடன் கிடைக்கும் என்று தான் நினைப்போம். சிறிய வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வங்கிகளில் வீட்டுக்கடன்களைப் பெற்றுத் தான் வேலையை ஆரம்பிக்கிறார்கள். 

இவர்களுக்காகவே நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபட்ட விகிதம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதிதாகக் கடன் வாங்குபவராக இருந்தால் நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது, எதிர்காலத்தில் வட்டி விகிதங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். கார் அல்லது தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எது சிறந்தது? நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன்களை வாங்கினால் போதும் என்று நினைப்போம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து யோசிக்க மாட்டோம். எனவே முதலில் நீங்கள் வட்டி விகிதம் என்ன? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் போது, மாறும் வட்டி விகித கடனில் கடன் வாங்கியவர்களுக்கு தவணைக்காலம் (இ.எம்.ஐ.) குறையக்கூடும். ஆனால் நிலையான வட்டி விகிதங்களில் இந்த வசதிகள் இருக்காது. ஒருவேளை சில வங்கிகள் உங்களுக்கு ஆரம்பத்திலேயே வட்டி விகிதங்களைக் குறைத்து கடன் வழங்கும் பட்சத்தில், எவ்வித தயக்கமும் இன்றி நிலையான வட்டிக்கடனை வாங்கலாம். இல்லையென்றால் சற்று யோசித்து வாங்குவது நல்லது.

 கடன் வழங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கக்கூடும். ஆனால் நிலையான விகிதக் கடன் வாங்கும் போது நம்மிடம் முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிப்பார்கள். ஆனால் மாறும் வட்டி விகித கடனில் இந்த நடைமுறை இல்லை. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியவர்களாக இருந்தால், கூடுதல் கட்டணங்கள் ஏதுவுமின்றி குறைந்த வட்டியுடன் உங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே நிலையான வட்டி விகித கடனை மாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்களுடைய மாதாந்திர வருமானம், உங்களது பொருளாதார நிலை குறித்து யோசித்து எந்த வழியில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.


வரிச்சலுகைக்காக வீட்டுக்கடன் வாங்கலாமா?

March 03, 2023 0

 நடுத்தர மக்களின் வாழ்நாள் சாதனையே சொந்த வீடு வாங்குவதுதான். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது. மேலும், யாரும் மொத்த பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு வீடு வாங்க முடியாது. பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் வீடு வாங்குகிறார்கள். ஆனாலும், அந்த கடன் வாங்குவதற்கும் நம்மிடம் ஒரு அடிப்படைத் தொகை இருக்க வேண்டும். உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவீதத்தொகை நம்மிடம் இருக்க வேண்டும். 

இதை டவுன்பேமென்ட் என்று சொல்லுவார்கள். உதாரணத்துக்கு 50 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குகிறீர்கள் என்றால், சுமார் 10 லட்ச ரூபாயாவது நீங்கள் செலுத்தும் முன்பணமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வங்கிகள் கடன் தரும். வீடு வாங்கும்போதே இத்தனை வருடத்துக்குள் வாங்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டால், அதற்கு ஏற்ப முதலீட்டை செய்துகொள்ளலாம். மூன்று வருடங்களுக்கு பிறகு எனும்பட்சத்தில் கொஞ்சம் மிதமான ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யலாம்.

வங்கி மற்றும் தபால்நிலைய சேமிப்புகளில் கிடைக்கும் தொகையைவிட பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் (இதில் நாம் முதலீடு செய்யும் தொகையை பங்குச்சந்தை மற்றும் கடன்சந்தையில் முதலீடு செய்வார்கள்) முதலீடு செய்து, இந்தத் தொகையைத் திரட்டலாம். இதிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
 உதாரணத்துக்கு மாதம் 10,000 ரூபாய் சேமிக்கிறீர்கள் என்றால் 5,000 ரூபாய்க்கு மேல் இதுபோன்ற பேலன்ஸ்டு மியுச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பொருளாதாரா நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு வேளை மூன்று வருடத்துக்கும் குறைவாகவே வாங்கத் திட்டமிட்டு இருக்கிறீர்கள் என்றால், பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களை தவிர்த்துவிட்டு வங்கி, தபால்நிலைய சேமிப்பு அல்லது கடன் சார்ந்த பங்குச்சந்தை முதலீடு மட்டுமே போதும்.

குறுகிய காலத்தில் பேலன்ஸ்டு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க்கானது. இந்த தொகையை சேமிப்பதற்கு முன்பாக உங்களுக்கு வேறு எதாவது கடன் இருந்தால், அந்த கடனை அடைத்தபிறகு வீடு வாங்குவதற்கு சேமிக்கலாம். டவுன்பேமென்ட் தொகையைத் திரட்ட கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் உள்ளிட்ட வகைகளில் பணத்தைத் திரட்ட வேண்டாம். 
இந்த வகைகளில் வட்டி அதிகம். மேலும் இந்த வகையில் பணத்தை திரட்டி பணம் கடன் வாங்கும்போது, உங்களது மாதாந்திர வருமானத்தில் பெருமளவு கடனை திருப்பி அடைப்பதற்குப் போய்விடும். 

பொதுவாக ஒருவரது மாத வருமானத்தில் 40 சதவீதத்துக்கு மேல் கடனுக்கு செல்வது ஆரோக்கியமானது கிடையாது. திடீரென வருமானம் பாதிக்கப்பட்டால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும். ஆனால், அதேநேரம் பெற்றோர் மற்றும் நண்பர்களிடமிருந்து வட்டி இல்லாமல் கடனைத் திரட்ட முடிந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வைத்திருக்கும் பிக்சட் டெபாசிட், பி.எப். தொகையில் இருந்து பணத்தை எடுக்க முடிந்தால், அதையும் பயன்படுத்திகொள்ளலாம். 

வீட்டுக்கடன் வாங்கும் போது வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வரிச்சலுகை வேண்டும் என்பதற்காக வீட்டுக்கடனை வாங்கவேண்டாம் என்பதே நிதி ஆலோசகர்களின் கருத்தாகும்.

சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

March 03, 2023 0

 உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், தசைகளை வலுப்படுத்தவும் இப்போதெல்லாம் சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை உட்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தடகள வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இதுபோன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாக கிடைப்பதில்லை என்ற மனக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சத்து மாத்திரைகளால் நம் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதை எடுத்துக் கொள்ளும் முன்பாக பின்வரும் விஷயங்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் : என்னுடைய நண்பன் எடுத்துக் கொள்கிறான், விளம்பரத்தில் சொல்கிறார்கள் என்ற காரணங்களுக்காக சத்து மாத்திரை எடுத்துக் கொள்வது தவறு. உங்கள் உடலில் எது பற்றாக்குறையாக இருக்கிறது, எவ்வளவு தேவை உள்ளது என்பதை பரிசீலனை செய்து, அதற்கு தகுந்தவாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மிகுதியாக எடுத்துக் கொண்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகக் கூடும்.

தரம் மற்றும் அளவு : அனைத்து சத்து மாத்திரைகளிலும் மூல பொருள் ஒரே மாதிரியாக சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொன்றிலும் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து வெவ்வேறாக இருக்கிறது. ஆக தரமான மருந்து நிறுவனத்தை தேர்வு செய்து வாங்குவது முக்கியம். அதிலும் உங்கள் உடலுக்கு எவ்வளவு டோஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும்.

இயற்கையானது என்பதை நம்ப வேண்டாம் : ஊக்க மருந்துகள் மற்றும் சத்துணவுகள் மீது இயற்கையானது என்று அச்சிடப்பட்ட லேபிள்களை பார்த்து ஏமாற வேண்டாம். அதே சமயம், ஊக்க மருந்துகள் இயற்கையானதாகவே இருந்தாலும் கூட, அதன் மூலமாக எதிர்மறை விளைவுகள் உண்டாகக் கூடும். ஊக்கமருந்துகளை வாங்கும்போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனமாக படித்துப் பார்த்து வாங்கவும்.

ஆரோக்கியமான உணவுக்கு ஈடானது அல்ல : உங்கள் உடலுக்கு அனைத்து விதமான சத்துக்களும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வெவ்வேறு வகையான கீரைகள், வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுழற்சி அடிப்படையில் சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மருந்துகள் இதற்கு மாற்றாக அமையாது. சத்துமாத்திரைகள், ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் சத்தான உணவு தேவையில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது.

எல்லோருக்கும் உகந்தது அல்ல : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல நண்பர்களை பார்த்து ஊக்க மருந்துகளை உபயோகிக்க தொடங்க வேண்டாம். உங்களின் மரபணு, வாழ்வியல், உணவுப் பழக்கம் போன்றவற்றை பார்க்கும்போது உங்களுக்கான தேவைகள் வேறு மாதிரியாக இருக்கலாம். சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்பாக ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை : ஏன் தெரியுமா..?

March 03, 2023 0

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான ஒன்று. தினசரி இரவில் போதுமான அளவு உறங்கினால் தான் அடுத்த நாள் வேலைகளை செய்வதற்கு உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும். மேலும் போதுமான அளவு உறங்கினால் மட்டுமே உடல் மற்றும் மனம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் உறங்குவதில் பிரச்சனை ஏற்படும் போது அவை உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

வளர்ந்த ஆரோக்கியமான ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7 – 9 மணி நேரம் வரையிலான உறக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் வயது, பாலினம், வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து இந்த நேரம் மாறுபடலாம். பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிலக்கு காலம், பருவமடைதல், கர்ப்பம் தரித்தல் போன்ற பல்வேறு காரணிகளை பொருத்து அவர்கள் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கலாம்.

இதில் முக்கியமாக ஆண் பெண் என இரு பாலினத்தவருக்குமே அவரவர் உறங்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. முக்கியமாக இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர ரெஸ்ட்லஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் மற்றும் அப்ஸ்ட்ராக்டிவ் ஸ்லீப் அப்னியா போன்ற நோய்களும் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது.

பருவமடைந்த பின் தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உறங்கும் கால அட்டவணையில் அதிக அளவு மாறுதல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிடைத்துள்ள தரவுகளின் படி கர்ப்பமாக இருக்கும் பெண்களில் 30 சதவீதம் பேர் இரவில் சரிவர தூங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்கள். இதுவே பிரசவத்திற்கு பின் 45 சதவீத பெண்கள் சரிவர தூங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள். இதைத் தவிர மெனோபாஸ் காலத்தை கடந்த பெண்களில் 40 சதவீதம் பேர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். மெனோபாஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் 45 சதவீதம் பேரும், பருவமடைந்த பெண்களில் 41% பேரும் உறக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவே ஆண்களைப் பொறுத்தவரை உறங்கும் போது ஏற்படும் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கிளெயின்-லெவின் சிண்ட்ரோம் ஆகிய நோய்களால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் பெண்களில் பலரும், அதனை ஈடு செய்ய பகல் நேரங்களில் அதிக அளவு தூங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடல் சோர்வு, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை மற்றும் அதிக அளவு காபி உட்கொள்ள விரும்புவது போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனைவருமே இன்சோமனியா நோய் அல்லது வேறுபல உறக்கம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Click here for more Health Tip

Click here to join whatsapp group for daily health tip