Agri Info

Adding Green to your Life

March 15, 2023

ஒரு கிளாஸ் பெருங்காய தண்ணீரில் 7 பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கிறதா..? ட்ரை பண்ணி பாருங்க..!

March 15, 2023 0


பெருங்காயம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஈரான் , ஆஃப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில் கூட பெருங்காயம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி பெருங்காயத்தால் கிடைக்கும் நன்மைகள் காரணமாக அதன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதை இறக்குமதி செய்வதில் பல சிரமங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.

எனவேதான் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம் (CSIR) பெருங்காயத்தை இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயிரிட திட்டமிட்டுள்ளது. இது வெற்றிகரமாக நல்ல விளைச்சலை அளித்தது எனில் இதனால் பெருங்காய இறக்குமதிக்கு இந்தியா செலவு செய்யும் 900 கோடி (வருடத்திற்கு) சேமிக்க முடியுமாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்.. பெருங்காயம் இந்திய சமையலறையை ஆக்கிரமித்ததற்கு அதன் மணம் மட்டுமல்ல நன்மைகளும்தான் காரணம். குறிப்பாக அதில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலும், நோய் அழற்சியை எதிர்த்து போராடும் குணமும் அதிகமாக உள்ளன.

பெருங்காயத் தண்ணீர் எப்படி உருவாக்க வேண்டும்..? ஒரு கிளாஸ் வெதுவெதுப்பாக தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் அதை பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இப்படி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? ( குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு தண்ணீர் கலந்து குடிக்க பிடிக்கவில்லை எனில் மோரில் கலந்து குடிக்கலாம்.)

செரிமானத்தை தூண்டுகிறது : உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருப்பின் பெருங்காயத் தண்ணீர் பலன் தரும். இது உடலின் செரிமானத்தை பாதிக்கும் நச்சுக்கள் இருப்பின் அதை நீக்கி செரிமான அமைப்பை சீராக செயலாற்ற உதவுகிறது. அதோடு வயிற்றின் பிஹெச் அளவை சமன் செய்வதால் குடல் இயக்கமும் சீராக இருக்கும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது : பெருங்காய தண்ணீர் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எனவே தேவையற்ற கொழுப்பு படிவதை தடுத்து உடல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது.

சளிக்கு நல்லது : உங்களுக்கு சளி இருப்பின் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடிப்பது உங்கள் மூச்சுக்குழாயில் உள்ள தொந்தரவுகளை சரி செய்து சளியை விரட்டுகிறது. இதனால் மூக்கடைப்பு , இருமல் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தலைவலியை குறைக்கும் : அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்காயத்தில் இருப்பதால் உங்கள் தலைவலி பிரச்சனைக்கு பலன் தரும். அதாவது இரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து தலைவலி தூண்டுதலை தடுக்கிறது.

மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் : நீங்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் ஒரு முறை மாதவிடாய் சமயத்தில் வெதுவெதுப்பான பெருங்காயத்தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்துப்பாருங்கள். இது மாதவிடாயின் போது ஏற்படும் அடி வயிற்று வலிக்கு நல்ல ரிலீஃப் தரும்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது : பெருங்காயம் கணைய செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்ததில் சர்க்கரை அளவை தானாகவே குறைத்துவிடும்.

உயர் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்துகிறது : இரத்த உறைதல் பிரச்சனைக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக இருக்கும். அதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கும். இவை சரியாக நிகழ்ந்தாலே இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 14, 2023

ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம்: தூத்துக்குடி மாவட்ட அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

March 14, 2023 0

 தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நியமனம் நடைபெறும்.

காலியிட விவரங்கள்: 

ஜீப் ஓட்டுநர்: 3

அலுவலக உதவியாளர்: 10

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனங்களை ஓட்டியதற்க்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள நிலை: ஜீப் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை சம்பளம் வழங்கப்படும். அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை நேரடியாக அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளம் thoothukudi.nic.inவாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை , மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாம் தளம் - கோரம்பள்ளம், தூத்துக்குடி. 628 101, தொலைபேசி எண் - (0461 - 2340579)  என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் மாலை 5.45 மணி வரை அனுப்பி வைக்க வேண்டும்.

March 11, 2023

தேர்வு பயத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி..?

March 11, 2023 0

 

மாணவர்கள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சமயத்தில் தேர்வுகளை நினைத்து பல்வேறு மாணவர்களும் அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பதும் சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பதும் நம் உடலுக்கு பல்வேறுவது பாதிப்புகளை உண்டாக்கும். முக்கியமாக இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் அவை நமது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன. இதைப் பற்றி வல்லுனர்கள் கூறுகையில், தேர்வுகளின் போது உண்டாகும் “எக்ஸாம் ஸ்டிரஸ்” என்பது நம் அனைவருக்கும் உண்டாகக்கூடிய ஒரு விதமான மன அழுத்தம் தான். நம்மில் அனைவருமே இதனை கடந்து தான் வந்திருக்கிறோம்.

இந்த தேர்வு பயத்தையும், தேர்வினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.

எளிதான திட்டமிடல்: நம் என்னென்ன பாடங்களை எப்போது படிக்க வேண்டும் என்பதை பற்றி திட்டங்களை முன்கூட்டியே வகுத்து அதன்படி நேர அட்டவனையை அமைக்க வேண்டும். முக்கியமாக மிகக் கடினமான பாடங்களை கடைசியாக படிக்கலாம் என்று நினைப்பதற்கு பதிலாக முதலிலேயே அவற்றை படித்து முடித்து விடுவதன் மூலம் கடைசி நேரத்தில் எளிதான பாடங்களை விரைவாக நாம் படித்து முடித்து விடலாம்.

இடைவெளி எடுத்துக் கொள்வது: நீண்ட நேரம் படிக்கும்போது அவ்வபோது தேவையான அளவு இடைவேளை எடுத்துக் கொள்வது நமது உடலையும் உடலையும் ரிலாக்சாக வைத்திருக்க உதவும். இந்த இடைவேளை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்ற மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும் செயல்களை செய்யலாம்.

உதவியை நாடுவது: மாணவர்கள் தங்களைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை உடன் வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் வெறுமனே உங்களை குறை கூறுபவர்களாக மட்டுமே அல்லாமல், உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள உதவுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் உங்களிடம் உள்ள குறைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கு உதவும்.

பாட புத்தகங்களை சரியாக வைப்பது: உங்களது படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் அடுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் எந்தெந்த பாடத்திற்கான புத்தகங்கள் எங்கெங்கு உள்ளன என்பதும், கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்க இது உதவும்.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்: முடிந்த அளவு உடல் இயக்கத்தை அதிகரிக்க கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவர்களது மனதையும் உடலையும் மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

இவை அனைத்திற்கும் மேல் மாணவர்கள தங்களுக்கு தேர்வினால் உண்டாகும் இந்த மன அழுத்தமானது மிக சாதாரணமானது என்பதை உணர வேண்டும். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை தவறாமல் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

March 11, 2023 0

 பலரும் மதியம் நன்கு சாப்பிட்டாலே உடனே தூக்கம் வந்துவிடும். சற்று அப்படியே படுத்து எழுந்தால் நன்றாக இருக்குமே என உடல் ஏங்கும். இதனால் சிலர் தலைக்கு மேல் வேலை இருந்தாலும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு கூட மற்ற வேலைகளை பார்ப்பார்கள். அப்படி சாப்பிட்டவுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தூக்கம் வர என்ன காரணம்..? இதற்கு வல்லுநர்கள் ’food coma’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு என்ன பொருள், இதை சரி செய்ய என்ன வழிகள் என்று பார்க்கலாம்.

ஃபுட் கோமா என்றால் என்ன..?

ஃபுட் கோமாவின் மருத்துவ பெயர் postprandial somnolence என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதற்கு சாப்பிட்ட பிறகு உறக்கம் என்று பொருள். இந்த ஃபுட் கோமாவின் அறிகுறிகள் சாப்பிட்டதும் தூக்கமாக வரும், குட்டி தூக்கம் போடலாமா என்று தோன்றும், எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் மந்தமாக இருக்கும். இந்த சமயத்தில் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். எழுந்து சுருசுருப்பாக வேலை செய்ய நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது ஃபுட் கோமா என்கின்றனர்.

எதனால் இந்த ஃபுட் கோமா வருகிறது..?

இதற்கு மருத்துவர்கள் இரண்டு காரணங்களை வகுத்துள்ளனர்.

காரணம் 1 : அதிக கார்போஹட்ரேட் கொண்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கும். இதனால் உங்களுக்கு ஃபுட் கோமா உண்டாகும். எனவே நீங்கள் சாப்பிடும் உணவின் அளவையும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதே உணவை நீங்கள் அளவாக சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது. அதேசமயம் கார்போஹட்ரேட் கொண்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் நீங்கள் ஃபுட் கோமாவிற்கு செல்ல நேரிடும்.

Have You Been Overeating Lately? Here are 6 Simple Yet Effective Ways to Stop! - NDTV Food

காரணம் 2 : நீங்கள் வயிற்றுக்கு நிறைவாக மதிய உணவை சாப்பிட்டவுடன் உடலானது அதை செரிமானிக்க ரெஸ்ட் மோடிற்கு செல்லும். இந்த சமயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வேகஸ் நரம்பு (vagus nerve) தூண்டப்படுகிறது. இது நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு தனது பங்களிப்பை தருகிறது. இதனால் உங்களுக்கு தூக்கம் வருகிறது.

இந்த ஃபுட் கோமாவிலிருந்து விடுபட என்ன வழி..?

இப்போது உங்களுக்கு ஏன் ஃபுட் கோமா உண்டாகிறது என்ற காரணம் புரிந்திருக்கக் கூடும். இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது. இப்போது பலரும் இயல்பு நிலைக்கு திரும்பி அலுவலக வேலைக்கு சென்று வருவதால் இன்னும் ஒர்க் ஃபிரம் ஹோம் வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு வர சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இதிலிருந்து நீங்கள் விடுபட செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக...

Is It Bad to Eat Most of Your Meals in Bed?

தூக்க முறையை பின்பற்றுகள் : தினசரி தூங்கும் நேரத்தை வரையறுத்து அதற்குள் தூங்கி எழ முயற்சி செய்யுகள். இரவு 8 மணி நேர தூக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.

குறைவான உணவு : ஃபுட் கோமாவிற்கு முக்கிய காரணமே அதிகமான உணவுதான். எனவே உங்கள் உணவின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஹெவி மீல்ஸ் அல்லாமல் மிதமான உணவு வகைகளை சாப்பிடுங்கள். பின் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

ஆக்டிவாக இருங்கள் : சாப்பிட்டவுடனே இருக்கையில் அமர்ந்துவிடாதீர்கள். அங்கும் இங்கும் நடக்கும் வேலைகள், உங்களை சுருசுருப்பாக வைத்துக்கொள்ளும் வேலைகளை திட்டமிடுங்கள்.

உணவுச் சமநிலை : உணவு சமநிலையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதற்காக கார்போஹைட்ரேட்டை தவிர்க்காதீர்கள். ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் அவசியம். அதோடு புரோட்டீன், ஹெல்தி ஃபேட் மற்றும் காய்கறிகள் இருக்குமாறு உணவை உட்கொள்ளுகள்.

உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் : மூன்று வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுங்கள். குறிப்பாக இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிடுங்கள். 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, சாப்பிட்ட உடனே தூங்கிவிடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுங்கள். இந்த பழக்கம் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீர்ழிவு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த 20 உணவுகளை இரவில் சாப்பிடக் கூடாதாம்.. ஏன் தெரியுமா..?

March 11, 2023 0

 பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இரவு நேரத்தில் நாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும். இல்லையெனில், அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இரவில் சாப்பிடக் கூடாத 20 உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

தக்காளி : தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது.

ஐஸ்கிரீம் : நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

காபி மற்றும் டீ : இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு எட்டு முதல் பதினான்கு மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது.

மது : இரவில் மது அருந்துவது அதிக சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் அடிக்கடி எழுந்துகொள்ள நேரும்.  இதனால், உங்கள் தூக்கம் கெடும்.

சாக்லேட் : இரவு உணவிற்குப் பிறகு சிறிது இனிப்புகளை சாப்பிட விரும்பினால், டார்க் சாக்லேட்டை உண்ண வேண்டாம். ஏனென்றால், இதில் சிறிது அளவு காஃபினும் உள்ளது.

புரதம் நிறைந்த உணவுகள் : புரதம் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் போது, உடலில் குறைவான டிரிப்டோபான் சுரக்கிறது. இதனால், செரோடோனின் சுரப்பும் குறையும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.

உலர் பழங்கள் : இரவில் அதிகமாக உலர் பழங்களை சாப்பிடுவதால் இரவில் வயிற்று வலி மற்றும் மூச்சு பிடிப்புகள் ஏற்படலாம்.

பீட்ஸா : பீட்ஸாவில் மைதா, சீஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கை கெட்ட அமிலங்களை உருவாக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம்.

அதிகமாக தண்ணீர் குடிப்பது : நாம் இயல்பாக பகலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நுகர்வை குறைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இரவில் அதிகமாக நீர் பருகினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியது இருக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.

புதினா மிட்டாய் : உணவுக்கு பின் புதினா மிட்டாய்களை உண்ணும் உங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள். புதினா புத்துணர்ச்சி அளிக்கும் என்பதால் நல்ல தூக்கம் வருவதையும் தடுக்கும்.

வயிறு நிறைய சாப்பிடுவது : நீங்கள் நன்றாக தூங்க நினைக்கும் போது வயிறு நிறைய சாப்பிடுவது சிறந்த யோசனை அல்ல. தூங்க செல்வதற்கு முன் வயிறு நிறைய மூச்சு முட்டும் அளவுக்கு சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தும். செரிமானம் , வயிற்று கோளாறு காரணமாக தூக்கமும் தடைபடும்.

காரமான உணவுகள் : உணவில் அதிகப்படியான காரம் சேர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எனவே, இவை தூங்கும் திறனைக் குறைக்கும்.

அதிக இனிப்பான உணவுகள் : அதிக சர்க்கரை உள்ள உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, உங்களின் தூக்கத்தையும் குறைக்கும்.

சிட்ரஸ் நிறைந்த பழங்கள் : ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

வெங்காயம் : வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிஃப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.

க்ரீன் டீ : க்ரீன் டீயில் காஃபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, க்ரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது.

சீஸ் : இரவு நேரத்தில் சீஸ் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை குறைப்பதுடன், விழிப்புணர்வை அதிகரிக்கும்.

பொரித்த உணவு மற்றும் கெட்ச் அப் : பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் கெட்ச்அப் -யில் அதிக அமிலம் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக இரவு நேரத்தில் சாப்பிடுவது பல உபாதைகளை ஏற்படுத்தும்.

ஒயின் : நீங்கள் ஒயின் குடிக்கும் போது உங்கள் உடலால் அதன் REM சுழற்சியில் முழுமையாக ஈடுபட முடியாது. எனவே, இரவு நேரங்களில் இதை தவிர்ப்பது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 10, 2023

தர்பூசணி விதையில் கூட இத்தனை நன்மைகள் இருக்கா..? இனி வேஸ்ட் பண்ணாதீங்க..!

March 10, 2023 0

 கோடைக்காலம் தொடங்கினாலே மூலை முடுக்குகள் எங்கும் தர்பூசணிக் கடைகள் களைகட்டும். அதுவும் தற்போது அடிக்கும் வெயில் தாகத்தைத் தவிரிக்க தர்பூசணியின் தேவையை இன்னும் அதிகரித்துவிட்டது. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை ஊர் பக்கங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள்.

உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவோம். அப்படியே தெரியாத்தனமாக சாப்பிட்டு விட்டாலும் வயிற்றுக்குள் செடி வளரும் என 90ஸ் கிட் பரிதாபங்கள் வேறு..! ஆனால் உண்மையில் அது பல மருத்துவகுணங்களை உள்ளடக்கியது என்பது தெரியுமா..?

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

இந்த ஒட்டுமொத்த மினரல் சத்துக்களின் ஆற்றல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது. தர்பூசணி சாப்பிட்டதும் அது வெளியிடும் ஆசிட் உடலின் செயல்பாடுகளை சீராக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

தர்பூசணி விதைகளை வெயிலி காய வைத்து வறுத்து சாப்பிடலாம். தர்பூசனி விதைகளில் பர்பி செய்யலாம். வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். பொடியாக்கி சாப்பிடலாம். விதைகளை அரைத்து watermelon seed shake, watermelon seed butter செய்து சாப்பிடலாம்.

தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும். தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


தினமும் 10 நிமிடங்கள் குளித்தால்...

March 10, 2023 0

 தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.


எத்தனை முறை குளிக்கலாம்? 
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம். அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்? பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

குளிக்கும் நேரத்தை குறையுங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும். சூடான நீரை தவிருங்கள்: அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்: குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும். உடலை உலர வையுங்கள்: குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கால்சியம் சத்து குறைபாடு இருக்கலாம் என சந்தேகமா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

March 10, 2023 0

 உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம், 4 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

கால்சியம் குறைப்பாட்டை ஹைபோகால்சீமியா என்று குறிப்பிடுவர். கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக, கால்சியம் சத்து என்றாலே பால் பொருட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என நினைப்பவர்கள் உண்டு. பால் பொருட்கள் அல்லாத காய்கறி, பழங்களிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

குறிப்பாக, பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் நிறைந்துள்ளது.

பழங்களில் உள்ள கால்சியத்தின் அளவு

பீன்ஸ் 100 கிராமில் 140 மில்லி கிராம் கால்சியம் இருக்கும். பாதாம் 100 கிராம் - 260 மி.கி கால்சியம், 8 அத்தி பழங்கள் - 241 மி.கி, 100 கிராம் டோஃபு - 680 மி.கி, 30 கிராம் எள் - 300 மி.கி கால்சியம் உள்ளது. 45 கிராம் சியா விதைகள் - 300 மி.கி, ஒரு கிண்ணம் அளவுள்ள அடர் பச்சை காய்கறிகளில் - 300 மில்லி கிராம், ராகி மாவு 100 கிராம் - 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

உலர்ந்த முருங்கை தூளில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதேபோல், ப்ரோக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள், வெண்டைக்காய், ஆரஞ்சு பழங்களிலும் அதிகளவிலான கால்சியம் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

கால்சியம் குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படி..?
கால்சியம் குறைப்பாட்டை ஆரம்பக் காலங்களிலேயே கண்டுபிடிக்க முடியும். உடலில் தோன்றும் சில அறிகுறிகள் கால்சியம் குறைப்பாட்டை உணர்த்தும். கால் வலி, தசைப்பிடிப்பு ஆகியவை தொடர்ந்து இருந்தால் கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வலிகளுக்கும் கால்சியம் குறைப்பாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.

இதேபோல், அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரம்ப நிலையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 9, 2023

EPFO நிறுவனத்தில் 577 காலியிடங்கள் அறிவிப்பு : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 09, 2023 0

 மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (Employment Provident Fund Organisation) காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் : மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்

வயது வரம்பு: Enforcement Officer/Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வுக்கு 25 சதவிகித விழுக்காட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு: பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட கேள்களைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு இருக்கும். தேர்வு நேரம் : இரண்டு மணி நேரம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

பாடத்திட்டம்: ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், கணக்கு பதிவியல் கோட்பாடு( General Accounting Principles), தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் (Industrial Relations & Labour Laws) பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். கணக்கு பதிவியல் கோட்பாடு தவிர்த்து பார்த்தால், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும், ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC போன்ற தேர்வுகளோடு அதிகம் ஒத்து போகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் செய்வது எப்படிwww.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விளம்பர அறிவிக்கையை மேற்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 8, 2023

இரவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள்..!

March 08, 2023 0

 சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தும் எடை குறையவில்லையே என கவலைப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் சில தவறுகளை செய்வார்கள். அந்த வகையில் இரவில் நீங்கள் செய்யும் இந்த பழக்கங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

தாமதமாக உண்பது : இரவு தாமதமாக உண்பது அதிகமாக சாப்பிடத் தூண்டும். அதேபோல் செரிமானமும் பாதிக்கப்படும். இதனால் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமான உணவுக்கு சீக்கிரம் சாப்பிடுவதே நல்லது.

சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

சரியான ஊட்டச்சத்தின்மை : நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு என அனைத்தையும் சம அளவில் உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும்.

சாப்பிட்டதும் உறக்கம் : சாப்பிட்ட உடனேயே படுக்கச் செல்வது உடல் எடையை அதிகரிக்கும். எனவே குறைந்தது 20 - 30 நிமிட இடைவேளை இருக்க வேண்டும். அந்த இடைவேளையில் அப்படியே உட்காராமல் நடப்பது போன்ற எளிய பயிற்சி மேற்கொள்ளலாம். இதை வீட்டிற்குள்ளேயும் செய்யலாம்.

இனிப்பு உண்பது : சாப்பிட்ட பின்பு சாக்லெட், பிஸ்கெட் , ஸ்வீட் என ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடைக்கு வழி வகுக்கும். இரவு உணவுக்குப் பின் பசித்தால் பாதாம், முந்திரி போன்ற ஊட்டச்சத்தான ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடலாம்.

குளிர்ச்சி : உடல் குளுமைக்கும் செரிமானத்திற்குமே தொடர்பு உண்டு. எனவே இரவு தூங்கும்போது உடலைக் குளுமைப்படுத்துவதாலும் எடை அதிகரிப்பைக் குறைக்கலாம். ஏ.சி இருந்தால் உடல் சூட்டை தனிக்க அளவைக் குறைத்து வையுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரத்த சோகையை அதிகரிக்கும் வைட்டமின் K குறைபாடு : சரி செய்யும் வழிகள் என்ன..?

March 08, 2023 0

 ஒவ்வொரு வகை ஊட்டமின்களும் உடலுக்கு ஒவ்வொரு விஷயத்திற்கு தேவையானது. உடலில் ஏற்படும் விட்டமின் குறைபாடு நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். அதே போல விட்டமின்கள் அதிகரித்தாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அந்தவகையில், இன்று வைட்டமின் கே அதிகம் இருக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திராட்சை பழம் : 1/2 கப் திராட்சை பழத்தில் 6.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. திராட்சை பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பாலிபினால்கள் காணப்படுகிறது.

ஆலிவ் ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 8.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி விட்டமின் கே அளவில் 9% தேவையை பூர்த்தி செய்கிறது. ஆலிவ் ஆயிலில் நிறைய விட்டமின் ஈ சத்தும் காணப்படுகிறது.

ப்ளூ பெர்ரி : ப்ளூ பெர்ரியில் 13.1 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. ப்ளூ பெர்ரியில் நார்ச்சத்துக்கள், விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்களும் ஏராளமாக காணப்படுகிறது.

கேரட் : கேரட்டில் விட்டமின் கே யும் காணப்படுகிறது. எனவே விட்டமின் கே சத்தை பெற கேரட்டை நீங்கள் சாலட் இவற்றில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். கேரட் உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

முந்திரி : முந்திரியில் 9.7 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. தினசரி விட்டமின் கே அளவில் 10% தேவையை முந்திரி பூர்த்தி செய்கிறது. முந்திரியில் உடலுக்கு தேவையான இதர சத்துக்களும் காணப்படுகிறது.

முட்டை கோஸ் : முட்டைக்கோஸில் 13.7 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. எனவே விட்டமின் கே பற்றாக்குறையை போக்க இந்த முட்டை கோஸை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வரலாம்.

நட்ஸ் : நட்ஸ் வகைகளில் 15.3 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பைன் நட்ஸை சாலட், சூப் மற்றும் இதர உணவுகளில் சேர்த்து வரலாம். இதில் தாதுக்கள், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது.

பூசணிக்காய் : பூசணிக்காயில் 19.6 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இந்த பூசணிக்காய் பழத்தை ஸ்மூத்திகள், சூப்கள் மற்றும் சாஸ்களில் பயன்படுத்தி வரலாம். இதன் மூலம் நல்ல விட்டமின் கே ஆதாரத்தை நாம் பெறலாம்.

மாதுளை ஜூஸ் : மாதுளை பழ ஜூஸில் 19.4 மைக்ரோகிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது தினசரி தேவையில் 21.5% தேவையை பூர்த்தி செய்கிறது. மாதுளை பழம் ஜூஸில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வளரும் இளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்களும்.. அதனை எதிர்கொள்ளும் வழிகளும்.!

March 08, 2023 0

 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இளமை பருவம் என்பது மிகவும் முக்கியமான அதேசமயம் அதிக கவனத்துடன் கடக்க வேண்டிய ஒரு பருவமாகும். இந்த காலத்தில் தான் உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு வித மாற்றங்கள் உண்டாகக்கூடும். இளமைப் பருவத்தினருக்கு அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் இது ஒரு சவாலான காலகட்டமாகத்தான் இருக்கும்.

மன அழுத்தம் : இன்றைய காலத்தில் இளம் பருவத்தினர் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதுதான் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகிறது. பல்வேறு இளம் வயதினரும் மிக எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர். மேலும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதமும் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், கல்வியில் ஏற்படும் மன அழுத்தம், உளவியல் ரீதியான பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இவற்றில் இருந்து வெளிவருவதற்கு கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது.

போதை பழக்கம் : இளம் பருவத்தினர் இடையே போதை பொருள் பழக்கமானது மற்றொரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மது அருந்த ஆரம்பித்து விட்டாலே சுய ஒழுக்கம் சீர்குலைவது மட்டுமல்லாமல் அவர்களின் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் உண்டாகும்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற பல்வேறு விதமான ஆபத்தான செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். இவை உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே முடிந்த அளவு இடம் பெறுவதற்கு மது அருந்துவதன் தீய விளைவுகளை பற்றியும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு தேவையான அறிவுரைகளை வழங்கியும் அவர்களின் வாழ்க்கையை சீர்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

பாலுறவு பற்றிய சரியான ஒரு புரிதலை இளம் வயதிலேயே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு பாதுகாப்பாக உடலுறவு கொள்வது என்பதை பற்றியும் எச்ஐவி போன்ற நோய் தொற்றுக்களை பற்றியும் இளம் வயதிலேயே அவர்களுக்கு புரிய வைப்பதின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும்.

உடற்பயிற்சி : தினசரி உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமானது. ஏதேனும் ஒரு விளையாட்டுப் போட்டிகளில் அவர்களை ஈடுபட வைக்க வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை பற்றியும் எவ்வாறு நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதை பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். உடற்பயிச்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

உணர்சிவசப்படுதல் : இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எவ்வாறு உணர்வுகளை சரிவர வெளிப்படுத்துவது என்பதை பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். மேலும் அவர்கள் மனதளவில் சோர்வாக இருக்கும் சமயத்தில், அவர்களின் சவாலான காலகட்டங்களை கடப்பதற்கு பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் அவர்களுக்கு உதவி செய்வது அவசியமாகும்.

மேலே கூறிய இந்த மன ஆரோக்கியம் போதை பொருள் பழக்கத்தை பற்றி விழிப்புணர்வு உடல் இயக்கம் மற்றும் சுகாதாரங்கள் பற்றிய கல்வி பாலுறவு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை பற்றி நிலம் பருவத்தினர் சரியாக புரிந்து கொண்டாலே அவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் அறிவாற்றலுடனும் வளருவார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 7, 2023

தேனி மாவட்ட பெண்களுக்கு அருமையான வாய்ப்பு.. தொழில்முனைவோராக்கும் இலவச பயிற்சி மையம் பற்றி தெரியுமா?

March 07, 2023 0

 தேனி தாலுகா அலுவலகம் எதிர்ப்புறம் அமைந்துள்ள கனரா வங்கி தேனி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற பொதுமக்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு பல்வேறு இலவச தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக்கும் நோக்கத்தோடு 30 நாட்கள் நடைபெறும் இலவச தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் தேனி அரண்மனை புதூர், திம்மரச நாயக்கனூர் , அல்லிநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு இலவச பயிற்சியை கற்று வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி, எம்ராய்டரி, ஆரி ஒர்க், ஓவியம், துணிகளில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பெண்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

RSETI ( RURAL SELF EMPLOYMENT TRAINING INSTITUTE )-ல் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் தரமான முறையில் பயிற்சி அளிக்கப்படுவதாக பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வரும் பெண்கள் கூறினர். தற்போது தையல் தொழில் அதிகமாக வளர்ந்து வரும் நேரத்தில் பெண்கள் தையல் மற்றும் எம்பிராய்டிங் தொழில் பயிற்சியை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும், பயிற்சி வகுப்பின் நிறைவு நாளில் பயிற்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என பயிற்சியாளர் துர்கா பாரதி கூறினார்.

மேலும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சிகள் உதவும் எனவும், தொழில் தொடங்குவதற்கு ஆர்வம் காட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் கடன் உதவி வாங்குவதற்கும் உதவிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 95856 68811 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

March 6, 2023

பெண்கள்... திருமணத்திற்கு பிறகும் வேலை தேடலாம்..! வாழ்க்கையில் ஜெயிக்கலாம்...!

March 06, 2023 0

 திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்த இணையதளம் முழுக்க, முழுக்க பெண்களுக்கானது. 

கடந்த 7 ஆண்டுகளாக இலவச சேவையை மேற்கொண்டு வரும் நேஹாவிடம் பேசினோம். ''நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் இருக்கிறார்கள். நான் பென்சில்வேனியா நாட்டில் பார்மசுட்டிகல் படித்ததோடு, மனிதவள மேம்பாட்டு துறையிலும் பட்டம் பெற்றேன். பின்பு மருத்துவ துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன். 

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் அலுவலக வேலையில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய மகன்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தவுடன், எனக்கான ஓய்வு நேரம் அதிகரித்தது. அதனால் மீண்டும் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால் பழைய வேகமும், புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மையும் குறைந்திருந்தது. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப என்னை நானே புதுப்பிக்க (அப்டேட்) வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னை போன்று சிறு இடைவேளைக்கு பின்பு பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ஜாப்ஸ் பார் ஹெர்'' என்றவர், பிரத்யேக இணைய தளத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார். ''இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. குறிப்பாக திருமணம், இல்லற வாழ்க்கை, குழந்தைகள் என குடும்ப பந்தம் ஏற்படுத்திய இடைவேளைக்கு பின்பு வேலை தேடும் குடும்ப தலைவிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடியது. மேலும் புதிதாக வேலைத்தேடும் கல்லூரி மாணவிகளுக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், தொழில்துறை நிறுவனங்களும் இந்த இணையதளத்தோடு இணைந்து செயல்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. கடந்த வருட கணக்கின்படி, 50 ஆயிரம் பெண்கள் 'ஜாப்ஸ் பார் ஹெர்' இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 

7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் எங்கள் இணையதளத்தோடு கைகோர்த்திருப்பதால், பெண்கள் விரும்பும் வேலையை, அவர்கள் விரும்பும் பகுதிகளிலேயே பெற முடிகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு பெண்கள் அதிகமாக பயன்பெறுகிறார்கள்'' என்றதோடு, இணையதளம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறார். அதை அவரே விவரிக்கிறார். 

'வழக்கமான வேலை தேடல் இணையதளங்களை போன்றே, எங்கள் இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கி, தங்களை பதிவு செய்து கொண்டால் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் சுயவிவர பட்டியல் (ரெஸ்யூம்) உருவாக்குவதில் தொடங்கி, பணிக்கான அழைப்பாணை பெற்றுத் தருவது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். 

எல்லா பெண்களும், எல்லா துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் அவர்களது ஆங்கில எழுத்து நடையில் நிறைய தவறுகள் இருக்கும்.

சில பெண்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும், ஆனால் அவர்களால் திறம்பட பேச முடியாது. இதில் இரண்டிலும் சிறப்பானவர்களுக்கு, தேர்வாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கின்றன. அதை தீர்த்து வைப்பதும் எங்களுடைய வேலை தான். 

வேலைதேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், நேர்காணலில் சொதப்புபவர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழங்குகிறோம். 2015-ம் ஆண்டின் பெண்கள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள சேவையில் வேலைவாய்ப்புடன், அது சம்பந்தமான எழுத்துத்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, மென்பொருள் பயிற்சி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றவர், 'இணையதள சேவையில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன' என்ற கேள்விக்கும் பதிலளித்தார். 

''ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இருமுறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் இணையதள பக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த வகுப்பில் பங்கேற்று, திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். அதேசமயம் இணையதள இணைப்பில் இருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் தனிப்பட்ட முறையில் கேட்கலாம். இது ஒரு ரகம் என்றால், ஆப்-லைன் வகுப்புகள் அடுத்த ரகம். 

இந்த வகுப்புகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம். குடும்ப தேவைகளுக்காக சில பெண்கள் வேலை தேடுகிறார்கள். சிலர் சமூக அடையாளத்திற்காக பணியாற்றுகிறார்கள். சிலர் மன நிறைவிற்காக பணியாற்றுகிறார்கள். 

இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் ஒருவிதமான தேவையிருப்பதால் குடும்ப தலைவிகளின் அலுவலக பணி, மன நிறைவான பணியாகவே அமைகிறது. 

* திருமணமான பெண்கள், அலுவலக வாழ்க்கையை விரும்புகிறார்களா?, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமா? 

பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மென்பொருள் பொறியாளர், டீம் லீடர்... போன்ற முக்கிய பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ஓரளவிற்கு செட்டில் ஆகியதும், மீண்டும் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை தேடுகிறார்கள். குறிப்பாக பிள்ளைகளுக்கு பள்ளிகளை தேடும்போதே, தங்களுக்கான புது அலுவலகத்தையும் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். மனைவியாக, தாயாக... 6 அல்லது 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, அந்த பணியோடு புதிதாக கிடைத்திருக்கும் அலுவலக பணியையும் தொடருகிறார்கள்.