Agri Info

Adding Green to your Life

March 18, 2023

தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்.. உறக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கு!

March 18, 2023 0

 

குழந்தைகள் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், பட்டிருப்போம். தூக்கத்திற்கு ஒரு தினம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எது! தூக்கத்துக்கு எல்லாம் தனியாக நாள் இருக்கா என்று யோசிக்கிறீர்களா? உண்மையில் இருக்குங்க.

உலக உறக்க தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உரக்க தினம் மார்ச் 17 ஆன இன்று வந்துள்ளது. தூரோகம் என்பதன் முக்கியத்துவத்தை பெரும்பாலான இன்றைய சமூகம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு நல்ல தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆரோக்கியமான தூக்க பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் தான் இன்று

சரியான உறக்கம் எது?

எந்த நேரத்திலும் தூங்குவது தூக்கம் அல்ல. அதே போல எப்போதும் தூங்கி வழிவதும் தூக்கம் அல்ல. சரியான உறக்கம் என்பது இரவில் படுத்து அதிகாலையில் எழுவதாகும். இரவில் நீங்கள் தூங்கும்போது பினியல் சுரப்பியால் மெலடோனின் வெளியிடப்படும். இரவு நேரத்தில் இதன் அளவு அதிகரிக்கும். அதன் பின்னர் ​​உங்கள் பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது, இது உங்கள் உடல் வளரவும், தன்னைத்தானே சரிசெய்யவும் உதவுகிறது.

இது நீங்கள் பகலில் தூங்கும் போது ஏற்படாது. உடல் தன்னை தயார்படுத்தாத போது அடுத்த நாளை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் உடல் சோர்வுறும். நோய் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் தூக்கத்தின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், உலகின் பல பகுதிகள் அதை ஒரு அடிப்படை தேவைக்கு பதிலாக ஆடம்பரமாக கருதுகின்றனர். ஓய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த உறக்க நாள் தொடங்கப்பட்டது

உறக்க நாள் வரலாறு:

தூக்க மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைப்பான உலக தூக்க சங்கத்தால் உறக்க நாள் 2008 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

உறக்க நாளின் முக்கியத்துவம்:

இந்த தினத்தின் முதன்மை நோக்கம் உலகளவில் தூக்கக் கோளாறுகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும், அதை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்புவதும், தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார வழங்குநர்களை ஒன்றிணைப்பதாகும். அதே போல மக்களை சரியான நேரத்தில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதாகும்.

உலக தூக்க நாள் 2023: தீம்

இந்த ஆண்டு உலக தூக்க தினத்தின் கருப்பொருள் 'உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்' என்பதாகும். நன்றாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய நடத்தையாக தூக்கம் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதை கொண்டு வரும் முயற்சி தான் இது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? - இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக விடுபடலாம்!

March 18, 2023 0

 கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னதாக பெரும்பாலானவர்கள் ஒர்க் ப்ரம் ஹோம் என வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் சரிசமமாக உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போதே நமக்கு கழுத்து மற்றும் முதுகு வலி அதிகளவில் ஏற்படும். இந்நிலையில் வீட்டில் நினைத்த இடத்தில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகரிக்கிறது. இதனால் தான் spinal எனப்படும் முதுகெலும்பில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது என்பதால் அதிக வலி ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களுக்குத் தான் அதிகளவில் முதுகு வலி ஏற்படுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் பல சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். இனி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணமுடியும். குறிப்பாக ஹெர்னியேட்டட் டிஸ்க், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் அல்லது தசைப்பிடிப்பு போன்ற பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் முதுகு வலி வராமல் பராமரிக்க உதவும் வழிமுறைகள்: உடற்பயிற்சி செய்தல் : ஆரோக்கியமான முறையில் முதுகு வலியை சரிசெய்ய வேண்டும் என்றால், தினமும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் உடற்பயிற்சியைச் செய்யும் போது முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு உடல் சீராக இயங்க உதவியாக உள்ளது. எனவே நடைபயிற்சி, நீச்சல் மற்றும் யோகா போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டாலே முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

நேராக அமர்ந்திருத்தல் : நாம் எப்போதும்,எங்கு உட்கார்ந்திருந்தாலும் நேராக உட்கார வேண்டும். இதோடு தூங்கும் போதும் எவ்வித இடையூறு இல்லாமல் தூங்கவேண்டும். இல்லையென்றால் நமது முதுகுத்தண்டிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதோடு முதுகுவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே தான் நாம் எந்த செயல்பாடுகள் செய்தாலும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நிச்சயம் வலி ஏற்படும். இருந்தப் போதும் இதைத் தொடர்ச்சியாக செய்ய முயலுங்கள்.

முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்

முதுகெலும்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தூங்கும் போது, முதுகில் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைக்க முயற்சி செய்யவும். கழுத்து வலி அதிகமாக இருந்தால் கழுத்து குஷன் பயன்படுத்துங்கள். இதோடு உங்களது கழுத்து வலிக்காமல் இருக்கும அளவிற்கு தலையணைகளை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

தரமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் : சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தூக்கமின்மை முதுகு வலி மற்றும் அதிக கழுத்து வலியையும் நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-9 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு உங்களது தசைகளில் பதற்றத்தைக் குறைத்து முதுகுவலியையும் குணப்படுத்துகிறது. எனவே நல்ல தூக்கத்தை நீங்கள் கடைப்பிடிப்பதோடு,மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 17, 2023

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

March 17, 2023 0

 

Post Office Recruitment Jobs: தமிழ்நாடு அஞ்சல்துறை துறையின் பல்வேறு  வட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (staff car Driver) பணியிடங்களுக்கான அறிவிப்பை  அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது. இதற்கான சம்பள நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அறிவிக்கை எண்No.MSE/B9-2/XV/202127-02-2023
பதவிகார் ஓட்டுநர்-  staff car Drivergeneral central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts
காலியிடங்கள் எண்ணிக்கை58
கல்வித் தகுதிஇந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் நிபந்தனைகள்இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்புவயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test)  பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வானவர்கள் செய்ய வேண்டியது என்ன?

March 17, 2023 0

 

India post gds result 2023:  நாடு  முழுவதும் உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் IndiaPost GDS Online என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதிகாரிகளின் எந்தவித நேரடித் தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி? 

தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்;

short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதனை , பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள Divisional head முன்னிலையில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்: பெண்கள் சேவை மையத்தில் பல்நோக்கு உதவியாளர் பணி

March 17, 2023 0

  அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் ( Multipurpose Helper), பாதுகாவலர் (Security Guard) நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

காலியட விவரங்கள்:

பதவி - 2 பல்நோக்கு உதவியாளர்( Multipurpose Helper) மற்றும் 1 பாதுகாவலர் (Security Guard)


கல்வித் தகுதி: 8 வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி


வயது வரம்பு:  21- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்


தகுதி: நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராகவும்/சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்; 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்; உள்ளூரை சார்ந்தவராக இருக்க வேண்டும்; பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


சம்பளம்: பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக  ரூ. 6400 வரை வழங்கப்படும், பாதுகாவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ. 10, 000 வரை வழங்கப்படும்.



யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில் https://ariyalur.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: " சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவமனை எதிரில், அரியலூர் - 621704 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Published

March 17, 2023 0

 


2023-ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையினை தமிழக அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC - Updated Tentative Annual Recruitment Planner - 2023 Pdf - Download here


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 16, 2023

இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?

March 16, 2023 0

 காய்ச்சல் அல்லது தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்தால் அதை பற்றிய வதந்திகளும் பொய்யான சிகிச்சை முறைகளும் பரவுவதை கட்டுப்படுத்த முடியாது தற்போது பரவி வரும் இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து மக்களிடையே தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது தற்போது பரவி வரும் இன்ஃபுளூவன்சா A H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வுடன் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இன்ஃபுளூவன்சா தொற்று காய்ச்சல் சாதாரண பருவகால தொற்று தான் என்றாலும் சற்று வீரியத்துடன் இந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முறையற்ற மருத்துவ குறிப்புகளும் வாட்சப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக தொற்றுநோய் தடுப்பு மருத்துவரான மதுமிதா அவர்கள் கூறியதாவது,

இந்த இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றது . ஆனால் சிலர் நோய் தொற்று தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட வதந்தியால் வைரஸ் தொற்று மருந்திற்கு மாற்றாக மருத்துவ ஆலோசனை இல்லாமல் நோய் தொற்றிற்கு தொடர்பில்லாத ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துவருகின்றனர்.

மேலும் மருத்துவ ஆலோசனை இன்றி ஆன்டிபயோடிக் மற்றும் காய்ச்சல் மருந்துகளை உட்கொண்டால் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்.

அதுமட்டுமின்றி தற்போது பரவிவரும் இன்ஃபுளுவன்சா தொற்று மிக சாதாரணமான தொற்று என்றுகூறும் மருத்துவத்துறை அதிகாரிகள் முககவசம் அணிவது தனிநபர் இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை களை கடைபிடித்தாலே இந்த தொற்றில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சமீபத்தில் வேகமாக பரவும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோயக்கான காரணங்களும், அறிகுறிகளும் இது தான்.!

March 16, 2023 0

 சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாக பல இடங்களில் மர்ம காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2020 ல் வைரஸ் நோயின் தாக்கம் மக்களைப் பாடாய் படுத்திய நிலையில், இதுபோன்ற ஒரு வகை வைரஸ் தான் தற்போது மக்களைப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்ற அச்சம் அதிகளவில் எழுந்தது. இந்நிலையில் இது பருவக்காலங்களில ஏற்படும் ஒரு வகை வைரஸ் எனவும், H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்கின்றனர் மருத்துவர்கள். எனவே இவ்வகையான காய்ச்சல் வந்தால் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் போதும் எனவும் கூறப்படுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?

இன்றைக்கு அதிகளவில் பலரையும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் வரும் போது, அதன் நீர்த்துளிகள் காற்றில் ஒரு மீட்டர் வரை பரவக்கூடியது. எனவே தான் அந்த இடத்தில் மற்றொரு நபர் சுவாசிக்கும் போது, இந்த நீர்த்துளிகள் அவரது உடலுக்குள் சென்று அவரைப் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் காலக்கட்டத்திலும் இந்த நிலைத் தான் ஏற்பட்டது. இருந்தப்போதும் இதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை என்கின்றனர் மருத்துவர்கள். வைரஸ் நிபுணர்களின் கூற்றுப்படி, காற்று மாசுபாடு H3N2 வைரஸை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. காற்று மாசுபாட்டால் மோசமாக இருக்கலாம். இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வலி, உடல்வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை கூடுதல் பொதுவான அறிகுறிகளாகும்.

Nausea and Vomiting - Causes, Treatment and Prevention

H3N2 காய்ச்சலின் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?

சாதாரண காய்ச்சல் போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான் இது. இருந்தப்போதும் ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், கடுமையான சுவாசக் கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா அத்தியாயங்களைத் தூண்டும் என்பதால், அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். H3N2 மட்டுமல்ல, H1N1 மற்றும் அடினோ வைரஸ்கள் உட்பட பிற வைரஸ்களும் தற்போது மக்களிடம் பரவியுள்ளதால், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் நெரிசலான இடங்களுக்கு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

H3N2 காய்ச்சலின் அறிகுறிகள்:

இந்த நோய்த்தொற்றுகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற சுவாச அறிகுறிகள் மற்றும் உடல் வலிகள், குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டிவைரல் மருந்துகள் H3N2 விவகாரத்திற்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Shaking with chills, muscle pain: New symptoms of coronavirus identified by US Medical Body | Shaking News – India TV

குழந்தைகளைப் பொறுத்தவரை 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வரக்கூடும். மேலும் குழந்தைகளின் உடல் மற்றும் முகம் நீல நிறமாக மாறக்கூடும். மார்பு, தசை வலி மற்றும் நீர்ப்போக்கு ஏற்படலாம்.

H3N2 காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்கள்:

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தவரை நிறைய தண்ணீர் உட்கொள்ளுங்கள் மற்றும் வெளி இடங்களுக்குச் சென்றால் மக்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை உங்களின் உடல் நலத்தில் மேம்பாடு ஏற்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்கள் மிகவும் தீவிரமான நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆன்டிபாடிக் மருத்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 15, 2023

பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? இந்த சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!

March 15, 2023 0


வெயில் காலம் தொடங்கியுள்ளதையடுத்து நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ளவும், தாகம் தணித்துக் கொள்ளவும் நாம் வெவ்வேறு விதமான ஜூஸ்களை தினந்தோறும் அருந்தி வருகிறோம். சாதாரணமாக கோடை காலங்களில் சாலையோரக் கடைகளில் கிடைக்க கூடிய கரும்பு ஜூஸ், இளநீர், நுங்கு பதநீர், தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் போன்றவை தான் நம்முடைய முதன்மையான தேர்வுகளாக இருக்கும். 


ஆனால், நிச்சயமாக நீங்கள் சாலையோரக் கடைகளில் அல்லது ஜூஸ் கடைகளிலும் கூட பீட்ரூட் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆக, பீட்ரூட்டிலும் கூட ஜூஸ் அடித்து குடிக்க முடியும் என்பதோ, அதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தோ நமக்கு தெரிந்திருக்காது. வெளியிடங்களில் கிடைக்காவிட்டாலும் நம் வீட்டிலேயே பீட்ரூட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். இதன் மூலமாக என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் இப்போது பார்க்கலாம்.

சருமத்திற்கு நல்லது : நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து, விட்டமின் சி போன்றவை பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது சரும பாதிப்பை தடுத்து, முடி உதிர்வை நிறுத்தும். பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்.

நம் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செல்களை பீட்ரூட்டின் விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் தடுத்து நிறுத்தும். சருமத்தில் ஏற்படக் கூடிய சுருக்கம், கரு வளையங்கள் மற்றும் இதர வயது முதிர்வு அறிகுறிகள் ஆகியவற்றை பீட்ரூட் சாறு முறியடிக்கும். பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் நமது சருமத்திற்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் வழக்கத்தைக் காட்டிலும் பிரகாசமாக காட்சியளிக்கும்.

தலைமுடி ஆரோக்கியம் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் சத்து, விட்டமின் சி ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியவை மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் அனைத்து அழற்சிகளுக்கும் இது தீர்வை கொடுக்கும்.

கழிவுகளை வெளியேற்றும் : நம் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நச்சுக்கள் வெளியேறினால் சருமம் தெளிவானதாக காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத் திறன் மேம்படும்.

உயர் ரத்த அழுத்தம் குறையும் : உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கக் கூடிய நபர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினந்தோறும் காலை பொழுதில் பீட்ரூட் சாறு அரை கிளாஸ் அளவு குடித்து வர ரத்த அழுத்தம் வெகுவிரைவில் கட்டுக்குள் வரும். இது மட்டுமல்லாமல் பீட்ரூட் நமது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

பச்சை, கருப்பு அல்லது சிவப்பு திராட்சை... இந்த மூன்றில் எது ஆரோக்கியம் நிறைந்தது..?

March 15, 2023 0

 



அன்றாடம் சாப்பிடும் பழ வகைகளில் திராட்சையும் கட்டாயம் இடம் பெறும். இதில் நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படும் ஆற்றல் என பல நன்மைகளை கொண்டுள்ளதால் அன்றாடம் ஒரு கப் சாப்பிடுவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆய்வுகளிலும் ஒரு நாளைக்கு 3 கப் திராட்சையை ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும் என்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்... திராட்சை வாங்கலாம் என கடைக்கு சென்றால் அங்கு மூன்று வித திராட்சையும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் விலை மலிவானது எது என்பதை விட எது ஆரோக்கியமானது என்பதே முக்கியம். அந்தவகையில் நீங்களும் கடைக்கு திராட்சை வாங்கும்போது குழம்புகிறீர்கள் எனில் உங்களுக்காகவே இந்த கட்டுரை.

பச்சை திராட்சை : பச்சை திராட்சை அதிகமாக கிடைக்கக் கூடியது மற்றும் மலிவு விலையில் கிடைக்கும். இது அதிக சுவை கொண்டது என்பதால் குழந்தைகள் கூட விரும்பொ சாப்பிடுவார்கள். ஆய்வுகளின் படி பச்சை திராட்சையில் 104 கலோரிகள் உள்ளன. 1.4 கிராம் புரோட்டீன், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இந்த பச்சை திராட்சை விட்டமின் சி , விட்டமின் கே மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சிறந்தது. விட்டமின் கே இருப்பதால் இரத்தம் உறைதல் பிரச்சனை, எலும்பு பிரச்சனைகளுக்கு பலனளிக்கிறது. பொட்டசியம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கருப்பு திராட்சை : கருப்பு அல்லது ஊதா நிறம் கொண்ட இந்த திராட்சை ஜூஸ் வகைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும். குறிப்பாக ஒயின் தயாரிக்க இந்த திராட்சைதான் பயன்படுத்தப்படுகிறது. இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது என்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஒரு கப் கருப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுவும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே -வுக்கு சிறந்த மூலமாக உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சில வகையான புற்றுநோய்களுக்கும் பலனளிக்கிறது.

சிவப்பு திராட்சை : இது இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவை கொண்டது. இது ஃபுரூட் சாலட், ஜாம் , ஜெல்லி தயாரிப்புகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ரெட் ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கப் சிவப்பு திராட்சையில் 104 கலோரி, 1.1 கிராம் புரோட்டீன் , 02 கிராம் கொழுப்பு மற்றும் 27.3 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. பச்சை மற்றும் கருப்பு திராட்சையை போல் இதிலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே உள்ளன .

கருப்பு, சிவப்பு, பச்சை... எந்த திராட்சை சிறந்தது..? 

இந்த மூன்று நிற திராட்சையிலும் நன்மைகள் என்பது ஒரே பண்புகளை கொண்டுள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் மட்டும் ரெஸ்வெராட்ரோல் (resveratrol) என்னும் பண்பு உள்ளது. இது எலும்பு ஆரோக்கியம் , இதய ஆரோக்கியம் மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது. எதுவாயினும் மூன்றுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதால் மூன்றையும் கூட சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு இதில் பிடித்த சுவை எதுவோ அதையே சாப்பிடலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்.. முதலில் இதை தெரிந்து கொள்வோம்..!

March 15, 2023 0

 

பண்டைய கால மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உறுதுணையாக இருந்தது சிறு தானியங்கள் தான். காலம் மாற மாற மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரமும் மாற ஆரம்பித்ததினால் சிறு தானியங்களின் மவுசு குறைந்து மக்கள் அரிசி,கோதுமையை மிக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிட்டது. இதன் விளைவு தான் இன்றைக்கு பண்டைய கால உணவுமுறைக்கு மக்கள் மாறத் தொடங்கி விட்டனர்.

அதற்கேற்றால் போல் தான் 2023-யை ஐக்கிய நாடுகள் சபை சிறுதானியங்களின் சர்வதேச ஆண்டாக அறிவித்த நிலையில், இந்தியாவும் இதை முன்மொழிந்தது. இந்நிலையில் தான் மக்கள் இந்த தனித்துவமான சிறுதானியங்களால் என்னென்ன நன்மைகள் மற்றும் எப்படியெல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது என்பது குறித்து பரவலாக ஆராய தொடங்கி விட்டனர். சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே நாமும் அறிந்து கொள்வோம்.

கம்பு, வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு,சோளம், கொள்ளு போன்றவை சிறுதானியங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் மற்றும் வறட்சி நேரத்தில் வளரக்கூடியது. இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிகளவில் உள்ளது. இதோடு பல நோய்களுக்கும் மருந்தாக இவை அமைகிறது.

சிறுதானியங்களில் உள்ள புரோபயாடிக்குள் : பொதுவாக புரோபயாடிக்குள் என்பது செரிமான அமைப்பை திறம்பட வேலை செய்ய உதவும் ஒருவகை புரதம் ஆகும். இது சிறுதானியங்களில் அதிகளவில் உள்ளதால், நமது குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமான பிரச்சனையின்றி வாழவும் உதவியாக உள்ளது. எடை இழப்பிற்கும் உறுதுணையாக உள்ளது.

நீரழிவு பிரச்சனைக்குத் தீர்வு : நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் திணை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுதானியத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை இருப்பதால், ரத்த குழாய்களில் கொழுப்புகள் சேராது. மேலும் ஒற்றை தலைவலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

உடல் பருமன் : சிறுதானியங்களில் நார்சத்து, கொழுப்பை கரைக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி3 இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொலாஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. இதோடு சிறுதானியத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் காயங்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.

இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால்தான், சிறுதானியங்களை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கொத்தமல்லி விதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

March 15, 2023 0

 கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.

கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரியாக்க பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம்.

இரவு தூங்கும் முன் தனியா விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை எழுந்ததும் கண்களில் தெளித்து கழுவுங்கள். இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்தால் கண்களில் தொற்று ஏற்படாது.

மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய்  சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நெருங்காது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஹெர்னியா என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது, இதன் வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்..!

March 15, 2023 0

 ஹெர்னியா என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஹெர்னியா நோயானது தமிழில் குடலிறக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. பலவீனமான வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியே குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்பு திசு வெளியில் வயிற்று பகுதியில் பிதுங்கி தெரியும் பிரச்சனை ஹெர்னியா என குறிப்பிடப்படுகிறது.

ஹெர்னியாவை பற்றி இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் வலுவிழந்து பலவீனமாக இருக்கும் வயிற்று பகுதியின் அடிப்புறச் சுவர் வழியே சிறுகுடல் பிதுக்கி அல்லது துருத்தி கொண்டு, வெளிப்புறமாகப் பார்க்கும்போது புடைப்பாக இருக்கும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என கூறப்படுகிறது. ஹெர்னியா பிரச்சனையானது பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஹெர்னியாவானது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் உருவாகிறது. இது வழக்கமாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது, அல்லது சில நேரங்களில் மிக குறைவான அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. ஹெர்னியாவால் தோன்றும் கட்டி அல்லது புடைப்பு நோயாளி படுத்திருக்கும்போது சில நேரங்களில் மீண்டும் உள்ளே தள்ளப்பட்டு மறைந்துவிடும். இருமும் போது ஹெர்னியா வெளிப்படக்கூடும்.

ஹெர்னியாவின் வகைகள்:

Inguinal hernia - இந்த வகையான ஹெர்னியாவானது, கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொடை வழியே ஏற்படுகிறது. குடலிறக்கம் ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்களிலும் ஏற்படலாம். இது மிகவும் பொதுவான வகை குடலிறக்கம் மற்றும் இது முக்கியமாக ஆண்களை பாதிக்கிறது.

What is Hernia | Dr. Abhimanyu Kapoor

Femoral hernia - குடல் திசுக்கள் தொடை சுவற்றை நோக்கி தள்ளப்படுவது பெமோரல் ஹெர்னியா எனப்படுகிறது. அதாவது இடுப்பு அல்லது உள் தொடையின் தசைச் சுவரில் உள்ள ஒரு பலவீனமான இடத்தில் குடல் திசுக்கள் வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Umbilical hernia - இந்த வகை ஹெர்னியாவானது கொழுப்பு திசு அல்லது குடலின் ஒரு பகுதி தொப்புளின் வழியே பிதுங்கி நீளும் போது ஏற்படுகிறது. தொப்புளில் உள்ள உறுதியான திசு மிகவும் மெல்லியதாகி, இடைவெளியை ஏற்படுத்தும்போது இந்த ஹெர்னியா ஏற்படுகிறது. வயிற்றில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது கர்ப்பம் மற்றும் உடல் பருமன் காரணமாக பெரியவர்களுக்கு இது ஏற்படுகிறது.

பிற வகைகள்:

Incisional hernia - முந்தைய அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட வடு மூலம் கட்டி உருவாகிறது

Epigastric hernia - இந்த வகை ஹெர்னியா என்பது குடலின் ஒரு பகுதி வயிற்று தொப்புளுக்கு மார்புக்கும் இடையில் உள்ள வயிற்று தசைகள் வழியாயே குடலின் ஒருபகுதி வெளியே தள்ளப்படும்போது ஏற்படுகிறது.

Diaphragmatic hernia - இந்த வகை ஹெர்னியா உதரவிதானத்தில் ஒரு துளை இருக்கும் ஒரு பிறப்பு குறைபாடு ஆகும். அடிவயிற்றில் உள்ள உறுப்புகள் (குடல் மற்றும் கல்லீரல் போன்றவை) உதரவிதானத்தில் உள்ள துளை வழியாக மேல்நோக்கி மார்புக்குள் செல்லலாம். வயிற்றில் உதரவிதானம் சரியாக வளரவில்லை என்றால் இது குழந்தைகளை பாதிக்கலாம்.

Muscle hernia - இந்த வகை ஹெர்னியாவில் தசையின் ஒரு பகுதி திசு வழியே புடைத்து நிற்கும். இது விளையாட்டு காயத்தின் விளைவாக பொதுவாக கால் தசைகளில் ஏற்படுகின்றன.

கண்டறிவது எப்படி.?

பாதிக்கப்பட்ட பகுதியை பரிசோதிப்பதன் மூலம் மருத்துவர் எந்த வகை ஹெர்னியா என்பதை கண்டறிவார், தவிர நோயாளி ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார். பாதிப்பின் அளவை உறுதிப்படுத்த நோயறிதலை செய்த பின் ஹெர்னியாவை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவையா என்பதை அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தீர்மானிக்கும்போது ஹெர்னியாவின் வகை மற்றும் ஹெர்னியா ஏற்பட்டுள்ள பகுதிகள் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளாக இருக்கின்றன. ஏனெனில் சில வகையான ஹெர்னியாக்கள் மற்றவற்றை விட குடல் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

அறுவை சிகிச்சை எப்போது.?

அறிகுறிகள் கடுமையாக இருந்தாலோ அல்லது மோசமாகினாலோ அல்லது ஹெர்னியா நோயாளியின் இயல்பான செயல்பாட்டு திறனைப் பாதித்தால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம்.

பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவசர சிகிச்சை...

வயிற்றில் திடீர் மற்றும் கடும் வலி மற்றும் ஹெர்னியாவால் மலம் கழிப்பதில் சிரமம், மீண்டும் மீண்டும் வாந்தி, ஹெர்னியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படுகிறது.

Hernia Operation - Types, Risks, Preparation, Recovery | Sahyadri Hospital

சர்ஜரி:

ஓபன் சர்ஜரி - கட்டி அல்லது புடைப்பை மீண்டும் வயிற்றுக்குள் தள்ள செய்யப்படும் சர்ஜரி

லேப்ராஸ்கோபி - இது மிகவும் கடினமான ஒன்று என்றாலும் திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களால் செய்யப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் பக்கவாத நோய்

March 15, 2023 0

 மூளை... மனித உடலின் தலைமைச் செயலகம் இதுதான். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஓர் ஒழுங்கமைவு செயல்பாட்டில் இயங்கச்செய்யும் மைய செயலகமாக மூளை செயல்பட்டு வருகிறது. உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகளின் மூலம் உறுப்புகளை இயங்கச்செய்யும் இதன் செயல்பாடுகள் ரத்த ஓட்டத்தை சார்ந்தே நடைபெறுகிறது. எலும்பு மற்றும் தசையால் சூழப்பட்ட உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கு ரத்த குழாய்களும், நரம்பு மண்டலமும் முக்கியமானதாகும். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் திடீர் அடைப்பும், ரத்த கசிவும் பக்கவாதம் எனும் (உடல் செயல்பாடு இழப்பு) நோயை உருவாக்குகிறது.


மைய செயலகமான மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே 85 சதவீதம் பாதிப்பு உண்டாவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவர்களின் உயிருக்கு மிகவும் பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு முன் அறிகுறியும் இன்றி உருவாகும் இந்த நோயால் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

உடலின் செயல்பாடுகளை அசைவற்று நிறுத்தி, ஓரிடத்தில் இயக்கமில்லாமல் முடங்கச் செய்யும் பக்கவாதமானது, உலகில் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் இரண்டாவது நோயாக கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய கோளாறு, சீரற்ற ரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய காரணங்களால் ஏற்படும் பக்கவாத நோயினால் உலகில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதாகவும் அதில் ஒன்றரை கோடி பேர் மரணத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

BE FAST- என்கிற அறிகுறிகளே 90-95 சதவீதம் பக்கவாத பாதிப்பு இருப்பதை உறுதி செய்யும் கூறுகளாகும். 

B- Balance- நிதானமின்றி செயல்படுதல் 

E- Eye vision- பார்வை மங்குதல்

F- Face- முகத்தில் ஒரு பகுதி அசைவற்றும் மறுபகுதி அதிக அசைவுடனும் இயங்குதல் 

A- Arm- கை, தோள்பட்டைகள் முழுமையாக செயல்படாமல் போவது 

S- Speech- பேச்சு குளறல் 

T- Time- விரைந்து நேரத்தில் மருத்துவமனை அணுகுதல் இவ்வாறு அதிகப்படியான பாதிப்பை உருவாக்கும் பக்கவாத நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 29-ந் தேதி உலக பக்கவாத தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 உடல் உறுப்புகளின் செயலினை நிறுத்தி உயிரை பறிக்கும் பக்கவாத நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்த இந்நாளில் இருந்து நாமும் செயலாற்றுவோம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காஃபி குடிக்க சரியான நேரம் எது தெரியுமா?

March 15, 2023 0

 காஃபி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பானம். காலையில் எழுந்ததும் ஒரு கப் காஃபி குடித்தால் தான் அன்றைய நாளே சிலருக்கு துவங்கும். காஃபி என்பது  ஆற்றலை வழங்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. புத்துணர்ச்சி தருவதாலேயே காஃபி குடிக்க பலர் விரும்புகிறார்கள். காஃபி பிரியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் காஃபி குடிப்பார்கள். இருப்பினும், உங்கள் காஃபி நுகர்வில் கவனம் செலுத்தாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு அதிகமான கப் காஃபி குடிப்பதால் உங்கள் உடலில் காஃபின் ஏற்றப்படுகிறது. அதிகப்படியான காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். அப்படியானால் நீங்கள் தினமும் எவ்வளவு காஃபி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காஃபி குடிக்க சிறந்த நேரம் எது?

காலை எழுந்ததும் காஃபி குடிப்பதால் நாள் முழுவதும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. காரணம், உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும். இது ஒருவரை விழித்திருக்கவும் ஆற்றல் மிக்கதாகவும் வைத்திருக்கும் மூலக்கூறாக அறியப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்தவுடன் காஃபி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும்.

கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் காஃபி குடித்தால், அது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும். எனவே, காஃபி குடிக்க விரும்புபவர்கள் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் காஃபி குடிக்கவும். அதிலும், காலை உணவு சாப்பிட்ட பிறகு காஃபி குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் காஃபி குடிக்கும்போது, குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் காஃபி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது. பின்னர் பல மணிநேரங்களுக்கு உடலில் காஃபின் அளவு உயர்ந்தே காணப்படும்.

எனவே, ஒவ்வொரு முறையும் காஃபி குடிக்கும் போது 2 அவுன்ஸ் அளவு குடிப்பதே சிறந்தது. அதேபோல, நீங்கள் மாலையில் எடுத்துக்கொள்ளும் காஃபியை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வதால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip