Agri Info

Adding Green to your Life

March 19, 2023

IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

March 19, 2023 0

 

IOCL நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – 500+காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆனது Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Engineering Assistant, Junior Quality Control Analyst, Junior Material Assistant, Junior Nursing Assistant பணிக்கென மொத்தம் 513 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • 10ம் வகுப்பு / ITI/ Diploma/ Degree (Engg) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு.
  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு IOCL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    IOCL தேர்வு செய்யப்படும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test and a Skill/Proficiency/Physical Test (SPPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.03.2023ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.03.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Download Notification PDF 

    Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 19, 2023 0

 CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப CSB வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSB Bank காலிப்பணியிடங்கள்:

Client Delivery manager பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Client Delivery manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CSB Bank வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Client Delivery manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CSB Bank ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

Client Delivery manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

March 19, 2023 0

 TVS Motor நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

TVS Motor நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Senior Digital Engineer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TVSM காலிப்பணியிடங்கள்:

Senior Digital Engineer பணிகென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Digital Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / MCA / ME / BCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TVSM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Digital Engineer முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 7 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TVSM ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TVS Motor நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Senior Digital Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

Click here to join WhatsApp group for Daily employment news

இரவு நிம்மதியாக தூங்க வேண்டுமா.?அப்போ இதையெல்லாம் உடனே மாத்துங்க.!

March 19, 2023 0

 உலக உறக்க தினம் 2023 : ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு தினமானது தினசரி பரிந்துரைக்கப்பட்ட நேரம் ஒருவர் அவசியம் தூங்க வேண்டும் மற்றும் சரியான உறக்கத்தினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க அனுசரிக்கப்படுகிறது.

பரபரப்பான மெஷின் வாழ்க்கைக்கு நடுவே பலரும் குறைந்த நேரமே தூங்குகிறார்கள் அல்லது நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த சூழலில் சமீப ஆண்டுகளாக தூக்கத்தின் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துவதை நம்மால் அடிக்கடி கேட்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் ஒருவருக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால் அது அவரது இயல்பான மன, உடல், உணர்ச்சி செயல்பாடுகளில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க விரும்பும் ஒருவர் தினசரி தேவையான அளவு ஓய்வு மற்றும் உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிலர் தங்களிடம் சில மோசமான தூக்க பழக்கத்தை வைத்து கொண்டே இரவில் போதுமான ஓய்வே இல்லை, சரியாக தூங்கவே இல்லை என்று புலம்புவார்கள். உங்களுக்கும் இரவில் சரியான தூக்கம் இல்லை என்றால் கீழ்காணும் மோசமான ஸ்லீப்பிங் ஹேபிட்ஸ் உங்களிடம் இருக்கிறதா என்று சரிபார்த்து அவற்றை திருத்தி கொள்ளுங்கள்.

தூங்க செல்லும் முன் எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவது:

ஸ்மார்ட் ஃபோன்ஸ், கம்ப்யூட்டர்ஸ் மற்றும் டேப்லெட்ஸ் போன்ற எலெக்ட்ரானிக் டிவைஸ்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட்டானது தூக்க ஹார்மோன் என குறிப்பிடப்படும் மெலடோனின் (Melatonin) உற்பத்தியை அடக்கி, சர்க்காடியன் ரிதமை சீர்குலைக்கிறது. இது தூக்கத்தின் தரத்தை குறைப்பதோடு தூங்க போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

Why you should not use your mobile before going to sleep? - Lotus Eye Hospital & Institute

தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் காஃபின்...

மாலை நேரத்தில் ( 4 முதல் 6 மணிக்குள்) காஃபின் பானங்களை குடிப்பது வேறு. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் அல்லது தூங்க செல்லும் முன் காஃபின் பானங்களை குடிப்பது தூக்கத்திற்கு நல்லதல்ல. தாமதமான மாலை நேரம் அல்லது இரவில் காஃபி, டீ அல்லது சோடா குடிப்பது தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது...

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது மற்றும் காலை எழுவது சர்க்காடியன் ரிதமை சீர்குலைத்து, இரவு தூக்கத்தையும் கடினமாக்கும், அதே போல காலை கண் விழிப்பதையும் கடினமாக்கும். தினசரி இரவு ஒரே நேரத்தில் தூங்க செல்வது சிறப்பான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

ஹெவி டின்னர்:

இரவு நேரத்தில் தூங்க செல்வதற்கு முன் ஹெவியான உணவுகளை சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு தூங்குவதையும் கடினமாக்கும். இரவு உணவு சாப்பிடுவது என்பது லைட்டாக இருக்குமாறு பார்த்து கொள்ளும் அதே நேரம் உறங்குவதற்கு 2 முதல் 2 1/2 மணி நேரங்களுக்கு முன்பாக சாப்பிட்டு விட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். உதவும், என்றாலும் தூங்க செல்லும் முன்போ அல்லது தூங்குவதற்கு ஓரிரு மணிநேரத்திற்கு முன்போ தீவிர ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுவது தூங்குவதை கடினமாக்கும். எனவே, உறங்க செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன் உடற்பயிற்சியை முடித்து விட வே.

தூக்க தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ்கள்:

தினசரி இரவில் ஒரே நேரத்தில் (10 மணி என்றால் 10 மணிக்கு தூங்க செல்வது) தூங்க சென்று காலை கண்விழிப்பது வார இறுதி நாட்களில் கூட, சர்க்காடியன் ரிதமை சீராக்க மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்.
தூங்க செல்லும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, புத்தகம் படிப்பது அல்லது உங்களுக்கு பிடித்த இனிமையான மற்றும் அமைதியான இசை அல்லது பாடல்களை கேட்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உங்கள் உடலை தூக்கத்திற்கு தயார்படுத்த உதவும்.
கூலான, டார்க்கான மற்றும் சுறுப்புறம் அமைதியாக இருக்கும் ரூமில் தூங்குவது நன்றாக தூங்க உதவும். நலன் தரமான மற்றும் வசதியான மெத்தை மற்றும் தலையணையை பயன்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நிம்மதியான தூங்கத்திற்கு தூன்க்க செல்லும் 1 மணி நேரத்திற்கு முன்பே எலெக்ட்ரானிக் டிவைஸ்களுக்கு பை சொல்லி விடுங்கள், காஃபின் உட்கொள்வதையும் தவிர்க்கவும்.
தினசரி வழக்கமான குறைந்தபட்ச 30 நிமிட உடல் செயல்பாடுகள் தூக்கத்தின் தரம் மற்றும் கால அளவை மேம்படுத்த உதவும். எனினும் தூங்க செல்வதற்கு முன் ஒர்கவுட்ஸ் செய்ய கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் மற்றும் கவலை உங்களது தூக்கத்தில் தலையிடலாம், எனவே தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற ரிலாக்ஸ் டெக்னிக்ஸ்களை பயிற்சி செய்யுங்கள்.
உடல் பருமன், நீரிழிவு, மனச்சோர்வு, இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் நாள்பட்ட தூக்கமின்மை கோளாறு தொடர்புடையது. எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
நம் உடல் தன்னைத்தானே சரிசெய்து புத்துணர்ச்சியாக இயங்க ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு தூக்கமே முக்கியம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


மோர் முதல் மீன் வரை... பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்.!

March 19, 2023 0

 ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் அதற்கு அவரின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். செரிமான மண்டலத்தின் முதல் பகுதியாகவும், முக்கிய பகுதியாகவும் இருப்பது வாய்ப்பகுதி. வாயில் உள்ள பற்கள் மற்றும் ஈறுகள் தான் நாம் உண்ணும் உணவை அரைத்து செரிப்பதற்கு ஏதுவாக மாற்றுகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையெனில் அதனால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகக்கூடும்.

பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஒரு சரியான உணவு பழக்கத்தை மேற்கொண்டாலே பல் சொத்தை ஈறுகளில் வீக்கம் போன்ற பல்வேறு வித பிரச்னைகள் ஏற்படாமல் நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். எனவே நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில குறிப்பிட்ட உணவு வகைகளை பற்றி இப்போது பார்ப்போம்

பால், மோர் மற்றும் சீஸ் : சிகாகோ பல்கலைக்கழக அறிக்கையின் படி பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் வைத்திருப்பதற்கு கால்சியம் மற்றும் புரோட்டின் ஆகியவை முக்கியமானது. எனவே உங்களது தினசரி உணவில் பால், மோர் மற்றும் சீஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சீஸில் அடங்கியுள்ள பாஸ்பேட் நமது பற்களின் பி எச் (PH) அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் நமது வாயில் எச்சில் சரியாக சுரப்பதற்கும் பாஸ்பேட் தேவைப்படுகிறது. இதை தவிர மோரில் உள்ள ப்ரோபயோடிக் வாயில் அமிலத்தன்மையை குறைக்க உதவுகிறது.

தண்ணீர் : நமது உடலின் 60 சதவீதம் நீரால் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்குமே தண்ணீர் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். முக்கியமாக ஃப்ளூரைடு கலந்துள்ள தண்ணீரை நாம் குடிக்கும் போது அவை பற்களுக்கு மிகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது. 

உலர் பழங்கள் : டிரை ஃப்ரூட்ஸ் உட்கொள்வது நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அது தவிர நட்ஸ்களில் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அடங்கியுள்ளன இவை அனைத்துமே பல் சொத்தை ஏற்படுவதை தடுப்பதுடன் பாக்டீரியாவோடு போராட உதவுகிறது. குறிப்பாக வைட்டமின் டி ஆனது இவர்களுக்கு அதிக நன்மையை கொடுக்கக்கூடியது. இவை பாதாமில் அதிகம் காணப்படுகின்றன.

மீன் : மீன்களில் அடங்கியுள்ள அதிக புரதச் சத்துக்களும் வேறு பல ஊட்டச் சத்துக்களும் பற்களுக்கு வலிமையை அளித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் வாயில் எச்சில் சுரப்பதை அதிகரித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அளவிற்கு அதிகமாக அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்.!

March 19, 2023 0

 


அன்னாசிப்பழம் ஒரு சுவையான பழமாகும். பொதுவாக இது வெயில் காலங்களில் அதிக அளவில் விற்கப்படும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் நிரம்பியுள்ளது.

இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் செரிமான நொதிகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கூறுகள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதிகப்படியான அளவில் அன்னாசிப் பழங்களை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இதை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, இதன் அளவை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். பர்டூ பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத் துறையின் கூற்றுப்படி, வைட்டமின் சி நிறைந்த பழங்களை பழுக்காமல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ரத்த போக்கு : அன்னாசிப் பழத்தின் சாறு மற்றும் தண்டில் ப்ரோமெலைன் என்சைம் உள்ளது. இது நமது உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்த கூடும். இயற்கையான ப்ரோமைலைன் ஆபத்தானதாகத் தெரியவில்லை என்றாலும், ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், இது ரத்தப்போக்கை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

ரத்த சர்க்கரை அளவு : அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் நிறைந்துள்ளன. எனவே, சிலருக்கு இதை அதிகமாக சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். பெரும்பாலான பழங்களில் சேர்க்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க முடியும். அந்த வகையில், அரை கப் அன்னாசிப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட் 15 கிராம் ஆகும். எனவே, இதன் அளவில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பற்கள் : அன்னாசிப் பழத்தின் அமிலத் தன்மையின் விளைவாக பற்கள் மற்றும் ஈறுகள் மிகவும் மோசமடையக் கூடும். மேலும், இது பல் சொத்தை மற்றும் ஈறு அழற்சியை ஏற்படுத்தலாம். நமது நோயெதிர்ப்பு அமைப்பு அன்னாசிப் பழத்தில் உள்ள புரதத்தை மகரந்தம் அல்லது வேறு ஒவ்வாமை என்று தவறாகக் கருதி கொள்ள கூடும் என்பதால் இந்த நிகழ்வு நிகழ்கிறது.

வயிற்று போக்கு : அன்னாசி ஜூஸ் குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது சில சமயங்களில் வயிற்று போக்கை ஏற்படுத்தலாம். அதனால் வெறும் வயிற்றில் இதை குடிக்க கூடாது. அதே போன்று, அன்னாச்சி ஜூஸை அதிக அளவிலும் எடுத்து கொள்ள கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.



March 18, 2023

கவலை, மன அழுத்தம் இனி வேண்டாம்.. தீர்வுக்கு சில வழிகள் இதோ!

March 18, 2023 0

 இன்றைய இயந்திர உலகில் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாத நபர்களே இருக்க முடியாது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டும் தான் மன அழுத்தம் இருக்கும் என்று சொல்ல முடியாது. வீட்டு வேலை செய்பவர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள் என பல தரப்பினருக்கும் வெவ்வேறு ரூபங்களில் மன அழுத்தம் குடி கொண்டிருக்கும்.

பதற்றம், கவலைக்குரிய சிந்தனைகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற உடல் ரீதியிலான மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படியாகக் கொண்டதாக கவலை இருக்கிறது. கவலை தோய்ந்த மனதுடன் இருப்பவர்கள் எதிலும் போதிய ஆர்வம் செலுத்தாமல், எப்போதும் சோர்வுடனே காணப்படுவார்கள். அதிகப்படியான வியர்வை, தடுமாற்றம், சீரற்ற இதயத்துடிப்பு ஆகியவை கவலையின் அறிகுறிகள் ஆகும்.

நிறைய பேர் கவலைக்கும், அச்சத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவார்கள். அச்சம் என்பது அந்த சமயத்தில் மட்டும் வரக் கூடியது. கவலை என்பது நீடித்து இருக்கக் கூடியது. சரி, இந்த கவலைக்கு இயற்கையாக தீர்வு காண்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

சுறுசுறுப்பாக இருப்பது : மனதுக்கு கவலை அளிக்கின்ற விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் கவலை அதிகமாகுமே தவிர குறையாது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அதைப் போல கவலைகளை மறந்து சிரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மாற்று நடவடிக்கைகளில் நம் கவனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாக இயங்கினால் கவலைகள் பறந்து ஓடும்.

ஆரோக்கியமான உணவு : ரத்த சர்க்கரை குறைவு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்களாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிறமூட்டிய உணவுகளை சாப்பிடும்போது ஏற்படும் மன மாற்றங்களாலும் நம் மனதில் கவலைகள் நிரம்பும். இவற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது.

மது மற்றும் புகை தவிர்க்க வேண்டும் : கவலைகளை மறக்கவே மது அருந்துவதாக சிலர் கூறுவது உண்டு. ஆனால், அது தற்காலிக தீர்வாக இருக்குமே அன்றி நிரந்தர தீர்வை தராது. இது மட்டுமல்லாமல் சிகரெட் புகைப்பதும் தீங்கானதாகும். இவையிரண்டுமே நம் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்களை மட்டுப்படுத்தும்.

காஃபியை குறைக்க வேண்டும் : நீடித்த கவலை கொண்டிருப்பவர்கள் காஃபி அருந்துவதை கைவிட வேண்டும். ஏனெனில் அது நம் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு பதற்றம் உண்டாக இதுவே காரணமாகும். மதுபோதையை போல காஃபியும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

யோகா மற்றும் தியானம் : மனதை அமைதிப்படுத்த இதைவிட சிறப்பான மருந்துகள் வேறெதுவும் இருக்க முடியாது. தினசரி 30 நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்தால் நாளடைவில் மன அழுத்தப் பிரச்சினை முற்றிலுமாக ஒழிந்து விடும். மனநலன் மேம்பட மிகவும் உதவியாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வேலை மற்றும் படிப்பில் கவனம் ரொம்ப சிதறுதா.? இனி இதை செஞ்சு பாருங்க!

March 18, 2023 0

 தனிப்பட்ட வாழ்க்கை முறையோ, அலுவலக சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளையோ சிறப்பாக செய்து முடிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியை பின்பற்றி வருகின்றனர். அதே சமயம் தனிப்பட்ட வாழ்க்கையும் - அலுவலக வேலைகளையும் சமாளிப்பதற்குள் பலருக்கும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்..

இவ்வாறு மன அழுத்தம் இன்றி ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிக்க பயன்படுத்தப்படும் ஒரு உத்தி தான் “பொமோடோரோ உத்தி” ஆகும். இந்த முறையை பயன்படுத்தி நாம் வேலை செய்யும் போது கணிசமான அளவில் நேரம் சேமிக்க முடிவதுடன் நாம் எடுத்த வேலையையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். அதிலும் குறிப்பாக வேலை நேரங்களின்போது அவ்வபோது கவன சிதறலால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த முறை அதிகம் கைகொடுக்கும்.

அது என்ன பொமோடோரோ உத்தி அது எப்படி கடைப்பிடிப்பது? : அதாவது முதலில் நீங்கள் செய்யப் போகும் வேலையை முடிவு செய்து கொள்ள வேண்டும். அது உங்கள் அலுவலக வேலையாகவும், தொழில் சம்பந்தப்பட்டதாகவும் அல்லது வீட்டு வேலையாக கூட இருக்கலாம். பிறகு அடுத்த 25 நிமிடங்களுக்கு எந்த வித கவன சிதறல்களிலும் ஈடுபடாமல் உங்களது முழு கவனத்தையும் அந்த வேலையின் மீது வைத்து செயல்பட வேண்டும். 25 நிமிடங்கள் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் வரை இடைவேளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த இடைவெளி நேரத்தில் டீ குடிப்பது, வாக்கிங் செல்வது, பிடித்தவர்களுடன் பேசுவது ஆகிய வேலைகளை வைத்துக் கொள்ளலாம். இது ஒரு செட் ஆகும்.. இவ்வாறு நான்கு செட்கள் செய்து முடித்த பிறகு 15 இலிருந்து 30 நிமிடங்கள் வரை மீண்டும் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் இதைத்தான் பொமோடோரோ உத்தி என்று கூறுகிறார்கள்.

என்ன பயன் ? : 1980-களில் பெரிய வேலைகளை செய்து முடிப்பதற்கு மிகச்சிறந்த உத்தியாக இந்த பொமோடோரோ முறை கடைப்பிடிக்கப்பட்டது. எந்தவித சிறப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் மிக எளிதாக செய்ய முடிவதால் பலரும் இந்த முறையை கடைப்பிடிக்க துவங்கினார்கள். முக்கியமாக மிகப்பெரிய வேலைகளை செய்வதற்கு தான் இந்த முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வேலை சிறிதாக இருப்பின் வழக்கத்தை விட சிறப்பாகவும் குறுகிய நேரத்திலும் நம்மால் செய்து முடிக்க முடியும்.

யாரெல்லாம் இந்த உத்தியை பின்பற்றலாம்..?  : யாருக்கெல்லாம் அவ்வபோது கவனசிதறல் ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வேலையை செய்ய முடியாதோ அவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றலாம். மேலும் நீண்ட காலமாக கிடப்பிலிருந்த வேலைகளை செய்து முடிக்க அலுவலக நேரம் போக மீதி நேரத்திலும் வேலை செய்பவர்களும் வரும் இந்த முறையை பின்பற்றலாம். எழுத்தாளர்கள், வலை பக்கத்திற்கான ஆராய்ச்சி செய்பவர்கள் ஆகியோர்களுக்கும் இந்த முறை ஏற்றது.

எப்படி உருவானது இந்த முறை..? : முதன் முதலில் பிரான்சிஸகோ சிரிலோ என்ற பல்கலைக்கழக மாணவனால் இந்த முறை உருவாக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில் அந்த மாணவருக்கு தனது பாடங்களை படிக்கும் போது அதிகப்படியான கவனச் சிதறல்கள் ஏற்பட்டு தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை இருந்தது. இதை சரி செய்ய தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை கவன சிதறல் இல்லாமல் படிக்க அவர் முயற்சித்தார். இவ்வாறு படிக்கும்போது நேரத்தை கணக்கீடு செய்ய தக்காளியின் வடிவத்தில் இருந்த ஒரு கிச்சன் டைமரை அவர் பயன்படுத்தினார். அதுவே நாளடைவில் பொமோடோரோ உத்தி என்று ஆனது. இத்தாலிய மொழியில் பொமோடோரோ என்றால் தக்காளி என்று பெயராம்.


உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான 6 சிறந்த யோகாசனங்கள்!

March 18, 2023 0

 


உயர் இரத்த அழுத்தம் என்பது தற்போது மக்களிடையே மிகவும் பொதுவான பாதிப்பாக நிலையாகி வருகிறது. இந்த உயர் இரத்த அழுத்தம் உங்கள் இதயம், சிறுநீரகங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஆபத்தில் ஆழ்த்தலாம் கூறுகின்றனர். இதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் (WHO) வரையறையின்படி, இரத்த அழுத்தம் என்பது உடலின் முக்கிய இரத்த நாளங்களான தமனிகளின் சுவர்களில் இரத்தத்தை கொண்டு செல்வதன் மூலம் செலுத்தப்படும் செயல்முறையாகும். எனவே, இந்த செயல்பாட்டில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் என்று சொல்வார்கள். ஆரோக்கியமான சமச்சீரான உணவை உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றுவது அல்லது சரியான மருத்துவ கவனிப்பு ஆகியவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சில வழிகள் ஆகும்.

இவை தவிர, உயர் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக வைக்க யோகா ஒரு அமைதியான மற்றும் ஆரோக்கியமான வழியாக உள்ளது. இந்த பழங்கால முறை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக உள்ளது. இந்த பதிவில் உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க கூடிய யோகா ஆசனங்களை பற்றி பார்க்கலாம்.


சக்ரவாகசனம் : இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது உங்கள் உடல், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு ஸ்ட்ரெச்சிங் செய்வதாகும். இதற்காக இதை செய்வதற்கு உங்கள் நான்கு கால்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்க வேண்டும். நீங்கள் மேலே பார்க்கும்போது மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வயிற்றை தரையை நோக்கி கீழே இறக்கவும். உங்கள் கன்னத்தை உங்கள் மார்பில் வைத்து, உங்கள் தொப்புளை உங்கள் முதுகெலும்பை நோக்கி இழுத்து, உங்கள் முதுகெலும்பை மேல் பகுதியை நோக்கி வளைக்கும்போது மூச்சை வெளியே விடுங்கள். இது பார்ப்பதற்கு பூனை நிற்பது போன்று இருக்கும்.




புஜங்காசன் : இது நாகப்பாம்பு போஸ் என்றும் அழைக்கப்படுகிறது, புஜங்காசனம் முக்கியமாக வயிற்றுப் பகுதியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை செய்வதற்கு தரையில் குப்பற படுத்து, கால்களை நீட்டி, இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மார்பை மேலே உயர்த்த வேண்டும். இது பல்வேறு நன்மைகளை செய்ய கூடிய ஆசனமாகும்.



சுகாசனம் : இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது சுலபமான ஆசனமாகும். இது எளிதான மற்றும் பயனுள்ள யோகா ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனத்தை செய்ய முதுகை நிமிர்ந்தும், கால்களைக் குறுக்காகவும் வைத்து உட்கார வேண்டும். அடுத்து கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்களுக்கு மூச்சை உள்ளிழுக்கவும். இது ஒரு நிதானமான நுட்பமாகும். மேலும், இது மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது மற்றும் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்துகிறது.



சவசனம் : நீண்ட மன அழுத்தம் நிறைந்த வேலைக்குப் பிறகு, நாம் பெரிதும் விரும்புவது விரும்புவது நல்ல உறக்கம் தான். இந்த ஆசனத்திலும் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இதை செய்வதற்கு, மேல் நோக்கிய படி படுத்துக் கொள்ள வேண்டும். உடலை மிக இலகுவாக வைக்க வேண்டியது அவசியம். இந்த ஆசனம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும்.



குழந்தையின் தோரணை : இந்த ஆசனம் பார்ப்பதற்கு நீங்கள் ஓய்வெடுப்பது போல் தோன்றலாம், ஆனால் இந்த ஆசனம்  முதுகை ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது. இது ஒரு நீண்ட, சோர்வுற்ற நாளின் முடிவில் படுக்கைக்கு முன் செய்து வந்தால், ஒரு சிறந்த மன அழுத்தத்தை நிவாரணியாக இருக்கும். இதை செய்ய, உங்கள் கைகளை உங்கள் முன் நேராக நீட்டியவாறு தொடங்குங்கள், பின்னர் மண்டியிட்ட நிலையில் ஓய்வெடுக்கும்.



பிரிட்ஜ் போஸ் : இந்த யோகா போஸ் உங்கள் உடலை வலுப்படுத்தவும், சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதய அடைப்புகளை சரிசெய்ய இந்த ஆசனம் பெரிதும் உதவும். இதை செய்வதற்கு, மேல் நோக்கி படுத்து கொண்டு, உங்கள் கால்களை அகலமாக வைக்கவும். அடுத்து, உங்கள் கால்களை வலுவாக அழுத்தி, பாயில் இருந்து பாதி உடலை உயர்த்தவும். பின்னர் உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து, உங்கள் உள்ளங்கைகள் தரையில் கீழ்நோக்கி இருக்கமாறு பார்த்து கொள்ளவும். இதை தினம்தோறும் செய்து வந்தால் எண்ணற்ற பலன்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு என்பது மிகவும் முதன்மையானது. எனவே, உங்கள் அன்றாட வழக்கத்தில் 15-20 நிமிடம் யோகா செய்வதற்கு ஒதுக்கலாம். இது தசைகள், செரிமானம் மற்றும் பலவற்றை மேம்படுத்த உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தூக்கம் ரொம்ப முக்கியம் பாஸ்.. உறக்கத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கு!

March 18, 2023 0

 

குழந்தைகள் தினம், மகளிர் தினம், ஆண்கள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், பட்டிருப்போம். தூக்கத்திற்கு ஒரு தினம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? எது! தூக்கத்துக்கு எல்லாம் தனியாக நாள் இருக்கா என்று யோசிக்கிறீர்களா? உண்மையில் இருக்குங்க.

உலக உறக்க தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, உரக்க தினம் மார்ச் 17 ஆன இன்று வந்துள்ளது. தூரோகம் என்பதன் முக்கியத்துவத்தை பெரும்பாலான இன்றைய சமூகம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு நல்ல தூக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆரோக்கியமான தூக்க பழக்கங்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் தான் இன்று

சரியான உறக்கம் எது?

எந்த நேரத்திலும் தூங்குவது தூக்கம் அல்ல. அதே போல எப்போதும் தூங்கி வழிவதும் தூக்கம் அல்ல. சரியான உறக்கம் என்பது இரவில் படுத்து அதிகாலையில் எழுவதாகும். இரவில் நீங்கள் தூங்கும்போது பினியல் சுரப்பியால் மெலடோனின் வெளியிடப்படும். இரவு நேரத்தில் இதன் அளவு அதிகரிக்கும். அதன் பின்னர் ​​உங்கள் பிட்யூட்டரி சுரப்பி வளர்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது, இது உங்கள் உடல் வளரவும், தன்னைத்தானே சரிசெய்யவும் உதவுகிறது.

இது நீங்கள் பகலில் தூங்கும் போது ஏற்படாது. உடல் தன்னை தயார்படுத்தாத போது அடுத்த நாளை நீங்கள் தொடர்ந்தால் உங்கள் உடல் சோர்வுறும். நோய் பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் தூக்கத்தின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், உலகின் பல பகுதிகள் அதை ஒரு அடிப்படை தேவைக்கு பதிலாக ஆடம்பரமாக கருதுகின்றனர். ஓய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த உறக்க நாள் தொடங்கப்பட்டது

உறக்க நாள் வரலாறு:

தூக்க மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைப்பான உலக தூக்க சங்கத்தால் உறக்க நாள் 2008 இல் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

உறக்க நாளின் முக்கியத்துவம்:

இந்த தினத்தின் முதன்மை நோக்கம் உலகளவில் தூக்கக் கோளாறுகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதும், அதை பற்றிய விழிப்புணர்வுகளை பரப்புவதும், தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதார வழங்குநர்களை ஒன்றிணைப்பதாகும். அதே போல மக்களை சரியான நேரத்தில் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்துவதாகும்.

உலக தூக்க நாள் 2023: தீம்

இந்த ஆண்டு உலக தூக்க தினத்தின் கருப்பொருள் 'உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்' என்பதாகும். நன்றாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய நடத்தையாக தூக்கம் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதை கொண்டு வரும் முயற்சி தான் இது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? - இந்த வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக விடுபடலாம்!

March 18, 2023 0

 கொரோனா காலக்கட்டத்திற்கு பின்னதாக பெரும்பாலானவர்கள் ஒர்க் ப்ரம் ஹோம் என வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் சரிசமமாக உட்கார்ந்து வேலைப்பார்க்கும் போதே நமக்கு கழுத்து மற்றும் முதுகு வலி அதிகளவில் ஏற்படும். இந்நிலையில் வீட்டில் நினைத்த இடத்தில் உட்கார்ந்து வேலைப்பார்ப்பதால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி அதிகரிக்கிறது. இதனால் தான் spinal எனப்படும் முதுகெலும்பில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது என்பதால் அதிக வலி ஏற்படுகிறது.

பொதுவாக பெண்களுக்குத் தான் அதிகளவில் முதுகு வலி ஏற்படுகிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் பல சிகிச்சைகள் மேற்கொள்கிறோம். இனி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.. உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணமுடியும். குறிப்பாக ஹெர்னியேட்டட் டிஸ்க், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் அல்லது தசைப்பிடிப்பு போன்ற பல காரணங்களாலும் முதுகு வலி ஏற்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் முதுகு வலி வராமல் பராமரிக்க உதவும் வழிமுறைகள்: உடற்பயிற்சி செய்தல் : ஆரோக்கியமான முறையில் முதுகு வலியை சரிசெய்ய வேண்டும் என்றால், தினமும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் உடற்பயிற்சியைச் செய்யும் போது முதுகெலும்பை ஆதரிக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு நெகிழ்வுத்தன்மை அளிப்பதோடு உடல் சீராக இயங்க உதவியாக உள்ளது. எனவே நடைபயிற்சி, நீச்சல் மற்றும் யோகா போன்றவற்றை நீங்கள் மேற்கொண்டாலே முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் 6 உணவுகள்

நேராக அமர்ந்திருத்தல் : நாம் எப்போதும்,எங்கு உட்கார்ந்திருந்தாலும் நேராக உட்கார வேண்டும். இதோடு தூங்கும் போதும் எவ்வித இடையூறு இல்லாமல் தூங்கவேண்டும். இல்லையென்றால் நமது முதுகுத்தண்டிற்கு கூடுதல் அழுத்தம் ஏற்படுவதோடு முதுகுவலி மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே தான் நாம் எந்த செயல்பாடுகள் செய்தாலும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆரம்பத்தில் நிச்சயம் வலி ஏற்படும். இருந்தப் போதும் இதைத் தொடர்ச்சியாக செய்ய முயலுங்கள்.

முதுகெலும்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 6 தவறான தோரணைகள்

முதுகெலும்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் தூங்கும் போது, முதுகில் அழுத்தத்தைக் குறைப்பதற்கு உங்களது கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைக்க முயற்சி செய்யவும். கழுத்து வலி அதிகமாக இருந்தால் கழுத்து குஷன் பயன்படுத்துங்கள். இதோடு உங்களது கழுத்து வலிக்காமல் இருக்கும அளவிற்கு தலையணைகளை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.

தரமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் : சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக தூக்கமின்மை முதுகு வலி மற்றும் அதிக கழுத்து வலியையும் நமக்கு ஏற்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-9 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் மன அழுத்தம் குறைவதோடு உங்களது தசைகளில் பதற்றத்தைக் குறைத்து முதுகுவலியையும் குணப்படுத்துகிறது. எனவே நல்ல தூக்கத்தை நீங்கள் கடைப்பிடிப்பதோடு,மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தியானம் அல்லது மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

நாள்பட்ட முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? காரணங்களும்... தீர்வுகளும்...


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 17, 2023

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

March 17, 2023 0

 

Post Office Recruitment Jobs: தமிழ்நாடு அஞ்சல்துறை துறையின் பல்வேறு  வட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் (staff car Driver) பணியிடங்களுக்கான அறிவிப்பை  அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது. இதற்கான சம்பள நிலை ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அறிவிக்கை எண்No.MSE/B9-2/XV/202127-02-2023
பதவிகார் ஓட்டுநர்-  staff car Drivergeneral central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts
காலியிடங்கள் எண்ணிக்கை58
கல்வித் தகுதிஇந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் நிபந்தனைகள்இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்புவயது வரம்பு 18 -27-க்குள் இருக்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test)  பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.03.2023 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, ' The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, chennai - 600 006 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளியீடு! - தேர்வானவர்கள் செய்ய வேண்டியது என்ன?

March 17, 2023 0

 

India post gds result 2023:  நாடு  முழுவதும் உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் IndiaPost GDS Online என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து முடிவுகளை  தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதிகாரிகளின் எந்தவித நேரடித் தலையீடுகள் இல்லாமல், தொழில்நுட்ப உதவியோடு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை இதில் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை சரிபார்ப்பது எப்படி? 

தமிழ்நாட்டில் மொத்தம் 3,164 தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வர்கள், வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Shortlist candidates பிரிவில், தமிழ்நாடு வட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்;

short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதனை , பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு:

தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சரிபார்ப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள Divisional head முன்னிலையில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் தங்கள் சான்றிதழ் ஆவணங்களை சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும்.

சரிபார்ப்பின் போது, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news