Agri Info

Adding Green to your Life

March 24, 2023

குட் நியூஸ்! மாதம் 2 லட்சத்திற்கு மேல் சம்பளம்! சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு!

March 24, 2023 0

 CMRL Recruitment 2023: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL-Chennai Metro Rail Limited) காலியாக உள்ள General Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த CMRL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Tech/B.E 

 ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24/03/2022 முதல் 17/04/2023 வரை CMRL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த CMRL Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் விண்ணப்பதாரர்களை CMRL ஆட்சேர்ப்பு செய்கிறது. 

இந்த CMRL நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://chennaimetrorail.org/) அறிந்து கொள்ளலாம். CMRL Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

CMRL ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்CMRL-Chennai Metro Rail Limited
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennaimetrorail.org/


RecruitmentCMRL Recruitment 2023
CMRL AddressChennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107

CMRL CAREERS 2023 FULL DETAILS:

அரசு வேலையில் (Government Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் CMRL Recruitment 2023-க்கு விண்ணப்பிக்கலாம். CMRL Job Vacancy, CMRL Job Qualification, CMRL Job Age Limit, CMRL Job Location, CMRL Job Salary, CMRL Job Selection Process, CMRL Job APPly Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிGeneral Manager
காலியிடங்கள்01 பணியிடம் மட்டும் நிரப்பவுள்ளன
கல்வித்தகுதிB.Tech/B.E
சம்பளம்மாதம் ரூ.2,25,000/- ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Chennai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

CMRL RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 24 மார்ச் 2022
கடைசி தேதி: 17 ஏப்ரல் 2023
CMRL Recruitment 2023 Notification pdf

CMRL CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?


  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://chennaimetrorail.org/-க்கு செல்லவும். CMRL Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (CMRL Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ CMRL Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • CMRL Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் CMRL Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • CMRL Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • CMRL Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! நேர்காணலுக்கு செல்லுங்க..! தமிழக அரசு வேலையில சேருங்க..!

March 24, 2023 0

 TNSRLM Recruitment 2023: தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM – Tamil Nadu State Rural Livelihood Mission) காலியாக உள்ள Block Coordinator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNSRLM Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree

 ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.03.2023 முதல் 31.03.2023 வரை TNSRLM Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Tiruvannamalai-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த TNSRLM Job Notification-க்கு, Offline முறையில் விண்ணப்பதாரர்களை TNSRLM ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNSRLM நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (tiruvannamalai.nic.in) அறிந்து கொள்ளலாம். T

NSRLM Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

TNSRLM ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
(TNSRLM-Tamil Nadu State Rural Livelihood Mission)
அதிகாரப்பூர்வ இணையதளம்tiruvannamalai.nic.in
வேலைவாய்ப்பு வகைTN Government Jobs
RecruitmentTNSRLM Recruitment 2023
TNSRLM Address1st Floor,Annai Teresa Mahalir Valaagam,Valluvar Kottam, Nungambakkam, Chennai, TamilNadu, India-600034.

TNSRLM RECRUITMENT 2023 FULL DETAILS:


பதவிBlock Coordinator
காலியிடங்கள்ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது
கல்வித்தகுதிTNSRLM திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்As Per Norms
வயது வரம்புதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவண்ணாமலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-01-2023 தேதியின்படி 28 வயதாக இருக்க வேண்டும்.
பணியிடம்Jobs in Tiruvannamalai
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறைOffline
அஞ்சல் முகவரிஇணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை வேங்கிக்கால் & அஞ்சல் , 606 604

TNSRLM RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். TNSRLM-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள TNSRLM Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 20 மார்ச் 2023
கடைசி தேதி: 31 மார்ச் 2023
TNSRLM Recruitment 2023 Official Notification & Application Form pdf

TNSRLM CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TNSRLM Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNSRLM Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.

TNSRLM Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

தேவைப்பட்டால் TNSRLM Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

TNSRLM Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNSRLM Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் .... செக் செய்வது எப்படி?

March 24, 2023 0

 tnpsc group 4 exam results: குரூப் 4 நிலை பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தங்களது பதவி எண்-ஐ சமர்க்க வேண்டும். தாங்கள் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை திரையில் தோன்றும்.

அடுத்த கட்டமாக, இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தகுதியான நபர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆள்சேர்ப்பு முகாம்.. எப்போ தெரியுமா?

March 24, 2023 0

 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களுக்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஒருங் கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன், தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்ஸில் பணிபுரிய ஓட்டுதர்கள் மற்றும் மருத் துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சாவூர் மருத் துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ஓட்டுநருக்கான பணியில்சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதா ரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.

இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந் தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதி யமாக ரூ. 15 ஆயிரத்து 235 வழங்கப்ப டும். எழுத்து தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறைநேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்து வம் தொடர்பான தேர்வு சாலை விதி களுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

அனைத்திலும்தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாள்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங் கும் வசதி செய்து தரப்படும். இதேபோல மருத்துவ உதவியாள ருக்கான தகுதிகள் பி.எஸ்சி. நர்சிங், பிளஸ் 2 படிப்புக்கு பிறகு ஜி.என். எம். ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகள் இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது உயிர்அறி வியல், பி.எஸ்சி. விலங்கியல், தாவரவி யல், உயிரியல், வேதியியல், நுண்ணுரி யியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய வற்றில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாதம் ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 435 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வய துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத் துறை யின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப் பட்டவர்கள் 50 நாள்களுக்கு முழு மையான வகுப்பறை பயிற்சி, மருத் துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப் படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்க ளுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 23, 2023

IDFC தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

March 23, 2023 0

 

IDFC தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் வங்கி ஆன IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு Relationship Manager மற்றும் Senior Sales Manager பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IDFC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Relationship Manager மற்றும் Senior Sales Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 1  Pdf
Download Notification 2023 2 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய விமான நிலையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – ரூ.9,000/- உதவித்தொகை!

March 23, 2023 0

 

இந்திய விமான நிலையத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2023 – ரூ.9,000/- உதவித்தொகை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்ப புதிய NAPS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள்:

Apprentice (Electrician) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.9,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

March 23, 2023 0

 

Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

Airports Authority of India-வில் Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:
  • ஓய்வு பெற்ற (Retired) ATCOs Level E7/E6 (Jt. General Manager / Dy. General Manager) அளவிலான பணிகளில் பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து gmhrwr@aai.aero என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அதிக லெமன் ஜூஸ் ஆபத்தா.? ஒருநாளைக்கு எலுமிச்சை சாறு எவ்வளவு குடிக்கலாம்?

March 23, 2023 0

 எலுமிச்சை சாறைப் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்துக் குடித்தால் அடிக்கும் வெயிலுக்கு அமிர்தமாய் இருக்கும். இந்த சுவையை தினமும் அருந்தத் தோன்றும். ஆனால் அப்படிக் குடிப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதில் உள்ள ஆசிட் எலும்புகளை அரித்துவிடும் என்று கூறப்படுகிறது. அது உண்மையா..?

ஆராய்ந்து பார்த்ததில் எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நல்லது. நிறைய ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இருப்பினும் மூட்டு வலி கொண்டவர்களோ அல்லது அதிகமாக எலுமிச்சை எடுத்துக்கொண்டாலோ எலும்புகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அப்படி ஊட்டச்சத்து நிபுணர் ரூபாளி தத்தா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என இதுவரை எந்த ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை. அதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் மூட்டு வீக்கம், மூட்டு வலி இருப்போருக்கு நல்லது என நம்பப்படுகிறது. 

அதேபோல்  இது குறித்து பேசிய மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சுவை, யாரேனும் நெஞ்சு எரிச்சல், ஆசிட் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் எலுமிச்சை பரிந்துரைப்பதில்லை. மற்றபடி எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒருநாளைக்கு 2 எலுமிச்சை வரை சாப்பிடலாம். அது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது. விருப்பம் போல் உப்பு, சர்க்கரை இப்படி எது வேண்டுமென்றாலும் கலந்து குடிக்கலாம். குறிப்பாக எலுமிச்சை ஜூஸுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரல் மற்றும் சிறுநீர் பையை சுத்திகரிக்க உதவும்

எனவே, இதனால் அப்படி ஆகுமோ..இப்படி ஆகுமோ என்று யோசிக்காமல் கோடைக்கு அமிர்தமாய் இருந்தால் , உங்களுக்குக் குடிக்கப் பிடித்தால் தாராளமாக தினமும் ஒரு கிளாஸ் பருகி அந்த சுவையை அனுபவிக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் ஆரோக்கியம் முக்கியம்.. வெயில் காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்!

March 23, 2023 0

 நாடு முழுவதும் கோடைகாலம் மெதுமெதுவாக துவங்கி வரும் நிலையில் பல இடங்களில் கடும் வெயில் இப்போதே வாட்ட துவங்கி விட்டது. இந்த கோடையில் பிஸியான வேலைநேரம் மற்றும் நீண்ட வேலை நேரங்களை கொண்டவர்கள் தங்களது உற்பத்தித்திறன் மற்றும் சீரான ஆரோக்கியத்தை பராமரிக்க ஹைட்ரேட்டாக இருப்பது அவசியம்.

பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ்களின் முக்கியத்தும் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். உடலையும் மனதையும் சிறந்த முறையில் செயல்பட வைக்க போதுமான திரவங்களை எடுத்து கொள்ள பல வழிகள் உள்ளன. இது குறித்து பல தகவல்களை ஷேர் செய்து இருக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான சௌமியா தியாகராஜன். இவர் கூறுகையில் தண்ணீர் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள் ஆகும், இது உடலின் அனைத்து உறுப்புகள் மற்றும் அமைப்புகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது.

நாம் டிஹைட்ரேட்டாகி விட்டால் நம்முடைய புத்திசாலித்தனமான உடல் அதற்கான சில சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. தோல் சுருக்கம், உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகள், அதிக பசி அல்லது பொதுவான எரிச்சல் கூட உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். ஆனால் காலை 9 மணி முதல் வேலையில் பிசியாகி விடுவதால் பெரும்பாலானோர் இதுபோன்ற அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். பிரபல டயட்டீஷியனான மனிஷா சோப்ரா பேசுகையில், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பகல்நேர சோர்வை குறைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பணியிடங்களில் இருந்தாலும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக அவசியம் என்கிறார்.

பெரும்பாலானோர் ஆஃபிஸ் டைமில் நாம் அடிக்கடி டீ மற்றும் காஃபி குடிப்பார்கள், ஆனால் இவை நம் உடலை ஹைட்ரேட் செய்து மாறாக டிஹைட்ரேட் செய்கிறது, அதாவது நீரழிப்பை ஏற்படுத்துகிறது. பிஸியான வேலை நேரத்திற்கு நடுவில் உங்களை ஹைட்ரேட்டாக வைத்து கோலவஸ்து எப்படி என்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

பெரிய மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்கள்: தண்ணீர் காலியானதும் பாட்டிலில் ரீஃபில் செய்ய செல்ல உங்களுக்கு சோம்பலாக இருந்தால் அல்லது பாட்டில் காலியாக இருக்கும் போது மீண்டும் தண்ணீரை நிரப்ப மறந்து விடுகிறீர்கள் என்றால் இந்த ஹேக் உங்களுக்கானது. தண்ணீரை குடிக்க தூண்டும் வகையிலான அழகான மற்றும் ஃபேன்ஸியான வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் அவை 2-3 லிட்டர் அளவுள்ள பெரிய பாட்டில்களாக இருக்குமாறு பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.

கோல்ட் சூப்ஸ்: ( Cold Soups) கோடை காலம் வந்துவிட்டதால் அடிக்கும் வெயிலுக்கு நடுவே சூடான சூப்களை குடிக்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். கோடைகாலத்திற்கு ஏற்ற Cold Soups-களுக்கான ரெசிபிக்கள் ஆன்லைனில் ஏராளமாக உள்ளன. பூசணி, சுரைக்காய், வெள்ளரி, கீரை போன்ற இலை கீரைகளை கூட Cold Soups தயாரிக்க பயன்படுத்தலாம். குளிர்ச்சியான காய்கறிகளை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள சிறந்த வழியாகவும் இருக்கும்.

இளநீர்: கோடைகால விற்பனையில் மக்கள் அதிகம் குடிக்கும் ஒன்றாக இருக்கிறது இளநீர். இதில் நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ்கள் உள்ளன. குறிப்பாக பேக் செய்யப்பட்ட இளநீரை தவிர்க்கவும். இளநீர் தரும் அற்புத பலன்களை முழுவதுமாக பெற நேரடியாக இளநீர் கடைக்கு சென்றோ அல்லது இளநீரை வீட்டிற்கு வாங்கி வந்தோ குடிக்கவும்.

நீர்ச்சத்துமிக்க உணவுகள்: வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, சிட்ரஸ் பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் தண்ணீரைச் சேர்ப்பதற்கான மற்றொரு சிறந்த வழி, உங்கள் பருப்பு, மோர் மற்றும் லஸ்ஸி-யில் அதிகஅளவு தண்ணீரை சேர்ப்பது.

எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ்: உங்களது வேலை வெயிலில் அதிகம் அலைவதாக இருந்தால் வியர்வையால் நீங்கள் இழக்கும் எலக்ட்ரோலைட்ஸ்களை நிரப்ப நல்ல தரமான எலக்ட்ரோலைட் சப்ளிமென்ட்ஸ் எடுப்பதை உறுதி செய்யவும்.

ஆரோக்கிய ஸ்நாக்ஸ் : வழக்கமாக எடுத்து கொள்ளும் நொறுக்கு தீனிகளுக்கு பதில் கோடை காலத்தில் தர்பூசணிகள், பெர்ரி, வெள்ளரிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவும். இந்த கோடையில் ஊழியர்கள் நலன் மீது அக்கறை கொண்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிக தண்ணீர் குடிக்க வலியுறுத்துவதோடு பிற ஆரோக்கிய பானங்களை அவர்களுக்கு வழங்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெயிட் குறையும்.. செரிமானம்.. கோடைக் காலத்தில் லெமன் ஜூஸ் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

March 23, 2023 0

 எலுமிச்சை பழம் கோடை காலத்தில் ஏழை எளிய மக்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் விரும்பி பயன்படுத்தும் பழமாக உள்ளது. நிம்பு பானி, ஷிகன்ஜி மற்றும் நிம்பு சோடா என்றும் அழைக்கப்படும் எலுமிச்சை நீர் கோடை காலத்தில் அனைவருக்கு ஏற்றது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் இதனை மக்கள் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது. கோடை காலம் என்று கிடையாது பொதுவான தினங்களில் கூட பலரும் காபி, டீக்கு பதிலாக இளம் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பருகுவதால் ஆரோக்கியத்தோடு, சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சியும் கிடைத்து நாளை இனிமையாக ஆரம்பிக்க உதவுகிறது.

மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கும், இதயம், கண் போன்ற உறுப்புகளுக்கும் நல்லது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தாமல் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு பக்கவாதம் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட எலுமிச்சை சாறு கலந்த அல்லது எலுமிச்சை துண்டுகள் கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் உடலுக்கு கிடைக்கிறது என பார்க்கலாம்..

1. உடல் எடை குறைப்பு: எலுமிச்சையில் நிறைந்துள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து கொழுப்புகளின் ஆக்ஸினேற்றத்திற்கு உதவுகிறது. எலுமிச்சை பழத்தில் காணப்படும் பெக்டின் என்ற நார்ச்சத்து பசியைக் குறைக்கவும், வயிற்றை முழுமையாக உணரவும் வைக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது மற்றும் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்வது குறைக்கப்படுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருப்பதோடு, கொழுப்பை எரித்து, எடையை எளிதில் குறைக்கவும் உதவுகிறது.

2. நீரேற்றம்: எலுமிச்சை நீர்  உடல் நீரேற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில் தண்ணீரில் கலக்கும் புளிப்புச் சுவை அதனை அதிக அளவில் உட்கொள்ள வைக்கிறது. எலுமிச்சை நீர் நம் உடலில் சோடியம் அளவை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதோடு, முக்கிய ஊட்டச்சத்துக்களை நிரப்பவும் உதவுகிறது. எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.

3. செரிமானம்: காலையில் சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சிறந்தது. ஏனெனில் இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு, செரிமானப் பாதையை சுத்திகரிக்க உதவுகிறது. உங்கள் நாளை வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தொடங்க முடிவு செய்தால், நீங்கள் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆயுர்வேத அடிப்படையில், எலுமிச்சை நீர் செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவும் 'அக்னி' எனப்படும் நெருப்பு உறுப்பை தூண்டுவதாக நம்பப்படுகிறது.

4. சரும பலன்கள்: எலுமிச்சை நீரில் அதிக வைட்டமின் சி உள்ளது, இது தோல்களில் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 2016ம் ஆண்டு எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, முடிகளற்ற எலிகளின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை சிட்ரஸ் சாறு அமிலம் கட்டுப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

March 23, 2023 0

நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4 கிராம் புரதம், 2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா 3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது. வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகளை குறித்து காண்போம்.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது : வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். இதனை தினமும் சாப்பிடுபவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

மனச்சோர்வை குறைக்கும் : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

தலைமுடி உதிர்வை குறிக்கிறது : வால்நட்ஸை தினமும் சாப்பிட்டால், அதில் உள்ள பயோடின் என்னும் வைட்டமின் பி7, தலைமுடியின் வலிமையை அதிகரித்து தலைமுடி உதிர்வதை குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள் வால்நட்ஸை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உடல் பருமனை குறைக்க உதவுகிறது : இந்த பருப்புகள் பசியை குறைப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகின்றன. இவற்றை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம். இந்த வால்நட்ஸ்களை வறுத்து சிறு சிறு துண்டுகளாக பொடித்து வாழைப்பழம், மாம்பழம் ஆகியவற்றை கொண்ட சாலட்களில் சேர்ந்து சாப்பிடலாம். அவற்றை பச்சையாகவும் சாப்பிடலாம், ஏனெனில் அவற்றின் சத்து மதிப்பு அப்படியே தான் இருக்கும்.

இதயத்திற்கு நல்லது : வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோகியத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு காமா-டோகோபெரோல் வடிவத்தில் உள்ளது. இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் ஒமேகா -3, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது : இந்த அக்ரூட் பருப்புகள் அதாவது வால்நட் நல்ல செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கின்றன. அவற்றில் இருக்கும் ப்ரீபயாடிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை : பாதாம், பிஸ்தா போன்ற பல்வேறு வகை பருப்புகள் மற்றும் பெர்ரி வகைகளை காட்டிலும், வைட்டமின் ஈ, எலாஜிக் அமிலம், மெலடோனின், கரோட்டினாய்டுகள் போன்ற சிறந்த உயர்தர ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த வால்நட்சில் உள்ளன.

விந்தணுக்களின் வளர்ச்சிக்கு நல்லது : வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. ஆகவே தான் ஆண்கள் தினமும் 5 வால்நட்ஸை சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

இது தவிர, சருமத்தில் சுருக்கங்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது. மேலும், ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. வால்நட்ஸ்களை நாம் தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இளைஞர்களே அரிய வாய்ப்பு... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க..

March 23, 2023 0

 சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கிண்டியில் மார்ச் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இம்முகாம் வாயிலாகப் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் நிறுவனங்கள் மற்றும் கலந்துகொள்கிறவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news