Agri Info

Adding Green to your Life

March 31, 2023

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்.... ரூ. 60 ஆயிரம் வரை சம்பளத்தில் அரசு வேலை..!

March 31, 2023 0

 இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10, +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது. recruitment.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT); சம்பள நிலை: 19,900- 63,200 (நிலை - 2)

முக்கியமான நாட்கள்:  இதற்கான விண்ணப்பங்கள் எதிர் வரும் ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.

காலியிடங்கள்: 200 - இதில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10,+2 வகுப்பு முடித்திருக்க வேண்டும்.  நிமிடத்திற்கு 40 ஆங்கில  வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.600 ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20-04-2023 அன்று 18-27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறத் தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

காலியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆட்சேர்க்கை அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/. என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

March 31, 2023 0

 வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் முற்றிலும் தற்காலிக  தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் வரும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

காலியிட விவரங்கள்: 

உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்:  எண்ணிக்கை 1; கல்வித் தகுதி:  இளங்கலை காமர்ஸ் அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.15,000

பாதுகாவலர்: எண்ணிக்கை -2; கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.12,000

சமையலர்: எண்ணிக்கை 1; கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.10,000.

உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பாதுகாவலர்/சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 33 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள், விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் நேரிலோ, தபால் மூலமாகவே அல்லது கொரியர் மூலமாகவே வரும் நாளை (31.03.2023) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, வேலூர் - 632 001 ஆகும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 29, 2023

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு!

March 29, 2023 0

 இந்திய விமானப்படை - அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயுவுக்கான (Both Male & Female) ஆன்லைன் விண்ணப்பம் - அறிவிக்கை வெளியீடு!

AGNIVEER_VAYU_02-2023.pdf - Download here...


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த 10 உணவுகளை டிராவல் பண்ணும்போது சாப்பிடாதீங்க... உங்க ஜாலியான பயணத்தை மோசமாக்கிடும்..!

March 29, 2023 0

 நீங்கள் மற்ற மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்த ஊர் கிளைமேட் மற்றும் கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் புதிதாக இருக்கும். அந்த தகவமைப்புகளுக்கு உங்கள் உடல் பழக்கப்படாமல் இருப்பதால் எளிதாக தொற்றுகள், பாக்டீரியாக்கள் தொற்றக்கூடும். குறிப்பாக உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும். எனவே பயணத்தின் போது சில உணவுகளை தவிர்த்துவிட்டாலே நாம் திட்டமிட்ட படி பயனத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

வேக வைக்காத அல்லது நன்கு வேக வைத்த இறைச்சி உணவுகள் : முழுமையாக வேக வைக்காத இறைச்சிகளில் பாக்டீரியாக்கள் இருக்கக் கூடும். அது நமக்கு ஃபுட் பாய்சனாக மாறலாம். எனவே சரியாக சமைக்காத, வேக வைக்காத இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தெருவோர உணவுகள் : பொதுவாகவே தெருவோர உணவுகளை பார்த்தாலே சாப்பிட எச்சில் ஊறும். ஆனால் அது சுகாதாரமானதா என்கிற கேள்விக்கு பதில் இல்லை. ஒருவேளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினால் அந்த இடம் சுகாதாரமாக உள்ளதா, சுத்தமான பாத்திரம், உணவுப் பொருட்களை சீராக சுத்தம் செய்து சமைக்கிறார்களா, வேலை செய்பவர் சுத்தத்தை கடைப்பிடிக்கிறாரா என்பதை உறுதி செய்த பின் சாப்பிடுங்கள்.

பதப்படுத்தப்படாத பால் உணவுகள் : முறையாக பதப்படுத்தாமல் பயன்படுத்தும் சீஸ், பனீர் போன்ற பால் சார்ந்த உணவுகளில் ஆபத்து நிறைந்த பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அப்படிப்பட்ட உணவுகளை தவிர்த்தல் நல்லது.

குழாய் தண்ணீர் : செல்லும் இடங்களில் தாகமாக உள்ளது எனில் குழாய் தண்ணீர் தானே என குடித்துவிடாதீர்கள். புது இடங்களில் ஆபத்தான பாக்டீரியாக்கள், தொற்றுகள் இருக்கக் கூடும். அவை உங்கள் உடலுக்கு பழக்கமில்லாதவையாக இருக்கும். எனவே உடனே அவை உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அழித்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே எப்போதும் நீங்கள் கொண்டு செல்லும் அல்லது வாட்டர் பாட்டின் தண்ணீரை குடிப்பது நல்லது.

குளுர்ச்சியான உணவுகள் : குளுர்ச்சியான பானங்கள் குடிப்பதை தவிருங்கள். நீங்கள் குடிக்கும் பானங்களில் ஐஸ் கட்டி போட்டு குடிப்பதையும் தவிருங்கள். இது உங்களுக்கு சளி அல்லது தொண்டை கரகரப்பு, இருமலை தரலாம்.

கழுவாத பழங்கள் : காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவாமல் சாப்பிட்டால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். எனவே நன்கு கழுவிய பழங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுங்கள்.

ஷெல் ஃபிஷ் : ஷெல் ஃபிஷ் மீன் வகைகளான இறால், நத்தை போன்றவை சாப்பிட சுவையாக இருக்கலாம். ஆனால் அதில் பாதிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் இருக்கக் கூடும். நன்கு சமைக்கப்படாமல் பச்சையாக இருக்கக் கூடும். எனவே முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

ஃபிரைடு உணவுகள் : வறுத்த மற்றும் பொறித்த உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் செரிமானிக்க சிரமமாக இருக்கும். இதனால் வயிற்று கோளாறுகளை அனுபவிக்கலாம். எனவே பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள் : காரசாரமான உணவுகள் சாப்பிட ருசியாக இருந்தாலும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் ருசிக்காக கொஞ்சம் சாப்பிடலாம்.

பழக்கமில்லாத உணவுகள் : புதிய இடங்களில் புதிய உணவுகளை சாப்பிட முயற்சி செய்கிறீர்கள் எனில் அதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதை கவனியுங்கள். சாப்பிடவுடன் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுகிறது எனில் அந்த உணவில் கலந்துள்ள ஏதோ ஒரு பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பேரண்டிங்கில் இந்திய பெற்றோர்களை இந்த விஷயத்தில்அடிச்சுக்கவே முடியாது..!

March 29, 2023 0

 ஒரு குழந்தை எப்படி வளர்கிறது என்பதை பெரும்பாலும் குழந்தையை வளர்க்கும் பெற்றோரை பொருத்தே அமைகிறது. இதைத் தவிர நமது சமூக மற்றும் பாரம்பரிய கட்டுப்பாடுகளும் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு பெற்றோருமே முழுவதும் சிறந்த பெற்றோராக இருக்க முடியாது.

ஆனால் முடிந்த அளவு தன் குழந்தையை வளர்க்கும் முறையை அவர்கள் சிறப்பாக மாற்ற முயற்சி செய்யலாம். குறிப்பாக இந்திய பெற்றோர்கள் சில விஷயங்களில் மற்ற நாட்டு பெற்றோர்களை விட சிறப்பானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் இந்திய பெற்றோர்கள் எந்தெந்த வகையில் சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியும்! இந்திய பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு எந்த விதமான செய்திகளை எப்போது சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி நன்றாக தெரியும். இதை தவிர அவர்கள் எப்போது எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.

உதாரணத்திற்கு இணையதளத்தை பயன்படுத்துவது, டிவி பார்ப்பது, கடுஞ்சொற்கள் பேசுவது ஆகியவற்றை தங்கள் குழந்தை கற்றுக்கொள்வதில் இருந்து எப்போதும் அவர்களை தள்ளி வைக்கவே முயற்சி செய்வார்கள். அவர்கள் மனதளவில் முதிர்ச்சியாக மாறும் வரை இது போன்ற சிக்கலான விஷயங்களில் அவர்கள் மாட்டிக் கொள்வதை விரும்புவதில்லை.

நடத்தை: இந்திய பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி தான் முதலில் கற்றுக் கொடுக்கிறார்கள். முரட்டுத்தனமாக இருப்பதையும், மரியாதை குறைவாக பேசுவதையும் அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. முக்கியமாக மரியாதை குறைவாக நடப்பதை அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. பெற்றோரிடமோ, சகோதர சகோதரிகளிடமோ அல்லது வெளியாட்களிடமோ நாகரீகமாக எவ்வாறு நடந்து கொள்வது என்பதை மிக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

கல்வியின் முக்கியத்துவம்: படிப்பு என்று வந்து விட்டாலே இந்திய பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். வகுப்புகளை புறக்கணிப்பதையும் தேவையற்ற விடுமுறை எடுப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. மேலும் வேண்டுமென்றால் உங்களது கல்விக்காக அதிகம் செலவு செய்யக் கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சுய ஒழுக்கத்தையும் பெற்றோர்கள் இளம் வயதிலேயே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.

ஆன்மீகம்: இந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகம் மிகவும் முக்கியமான ஒன்று. ஆன்மீகத்தைப் பற்றி இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். அவ்வப்போது கோவிலுக்கு அழைத்துச் செல்வது வீட்டிலேயே ஜபம் செய்வது ஆகியவை இந்தியர்களின் வீட்டில் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள். மேலும் இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு புராணக் கதைகளை கூறி ஆன்மீக நாட்டத்தை ஊக்குவிக்கின்றனர்.

நட்பு வட்டம்: தங்கள் குழந்தைகளை விட அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி இந்திய பெற்றோர்களுக்கு எப்போதுமே நன்றாக தெரியும். எப்போதும் தங்கள் குழந்தைகளை தீய நட்பு வட்டத்திடமிருந்து ஒதுக்கி வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். மேலும் குழந்தைகளிடம் பழகும் நண்பர்களை பற்றி மிக எளிதாகவே அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். ஒருவேளை அந்த நண்பர்கள் சுயநலம் மிக்கவராகவோ அல்லது பொறாமை கொண்டவராகவோ, கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்டவராகவோ இருந்தால் உடனடியாக தங்கள் குழந்தைகளை அவர்களிடமிருந்து விலக்கி வைத்து விடுவார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு இரும்பு சத்து கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் 7 உணவுகள்..!

March 29, 2023 0

 நமது உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது இரும்பு சத்து ஆகும். முக்கியமாக நமது ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கும், உடல் இயக்கங்கள் சரியாக வேலை செய்வதற்கும் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.

இறைச்சி மற்றும் மீன் : இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. தினசரி நாம் உண்ணும் உணவில் மீன் மற்றும் இறைச்சியா ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நமது உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை நம் பெற முடியும்.

ப்ரோக்கோலி : ஒரு கப் ப்ரோக்கோலி கிட்டத்தட்ட ஒரு நபருக்கு தேவையான அளவில் ஆறு சதவீதம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது. எனவே நமது தினசரி உணவில் பிரக்கோலி சேர்த்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான இரும்புச்சத்தை நாம் பெற முடியும்.

கீரை : ஒரு கப் கீரையில் கிட்டத்தட்ட 3.72mg அளவிலான இரும்பு சத்து அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கீரை வகைகளில் பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் தாதுக்களும் நிறைந்துள்ளன. எனவே தினசரி உணவில் குறைந்த பட்சம் ஒரு வேளையாவது கீரை இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

செலரி : செலரியில் இரும்பு சத்து, ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அவன் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டிய சத்துக்கள் ஆகும்.

பூசணி விதைகள் : நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிப்பதில் பூசணி விதைகள் முன்னிலையில் இருக்கின்றன. இவற்றில் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவற்றை நாம் நொறுக்கு தீனியாக கூட எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

மாதுளம்பழம் : இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாதுளம் பழத்தின் விதைகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளும் அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோயா : சோயாவில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதில் அதிகம் நிறைந்துள்ளது. ஒரு கப் சோயா பீனை நாம் எடுத்துக் கொண்டால் அதில் 9.9 mg அளவிலான இரும்புச்சத்து நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் என்ன ஆகும் ? நம் உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு நமது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது அவசியமாகும். சுருக்கமாக எச்பி என அழைக்கப்படும் இந்த ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு குறைவாக இருக்கும் போது நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடைப்படும். இதன் காரணமாக அந்த நபர் மிகவும் சோர்வாகவும் வலுவிழந்தும் காணப்படுவார்.

ஹீமோகுளோபின் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஒரு வளர்ந்த ஆண் மகனுக்கு 14 - 15g/dl அளவும், பெண்களுக்கு 12-16 g/dl அளவும் ஹீமோகுளோபின் ரத்தத்தில் இருக்க வேண்டும்.

ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளதற்கான அறிகுறிகள் என்ன? ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மை, சருமம் மஞ்சள் நிறமாதல், அசாதாரமான இதயத்துடிப்பு, மயக்கம், நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

March 28, 2023

TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023!

March 28, 2023 0

 

TCS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள HRO- US Sourcing role, F&A-RTR role, F&A SOX and GAAP roles, HRO US On boarding role பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் (01.04.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி HRO- US Sourcing role, F&A-RTR role, F&A SOX and GAAP roles, HRO US On boarding role பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelors degree / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TCS அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TCS தேர்வு செய்யப்படும் முறை :

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் (01.04.2023) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICFRE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க விரையுங்கள்!

March 28, 2023 0

 

ICFRE நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Account Officer பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் (01.04.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICFRE காலிப்பணியிடங்கள்:

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Account Officer பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE கல்வி தகுதி:

Account Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

ICFRE ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level 08 ஊதிய அளவின் படி மாதம் சம்பளம் வழங்கப்படும்.

ICFRE தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 10.05.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நிலக்கரி சுரங்க ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!

March 28, 2023 0

 

நிலக்கரி சுரங்க ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,50,000/- || முழு விவரங்களுடன்!

Central Coalfields Limited ஆனது Advisor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை தற்போது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,500/- முதல் ரூ.1,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

CCL காலிப்பணியிடங்கள்:

CCL வெளியிட்ட அறிவிப்பின்படி Advisor பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advisor தகுதி:

IFS-ல் Supperannuated Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.37,500/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

CCL தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.04.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCIL ஆணையத்தில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை – B.E, B.Tech தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

March 28, 2023 0

 

TCIL ஆணையத்தில் ரூ.3,00,000/- ஊதியத்தில் வேலை – B.E, B.Tech தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Telecommunications Consultants India Ltd எனப்படும் TCIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Chief General Manager மற்றும் Executive Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCIL காலிப்பணியிடங்கள்:

TCIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி General Manager, Chief General Manager மற்றும் Executive Director பணிக்கென மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

General Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. / B.Tech / M.Tech / MCA / B.Sc தேர்ச்சி பெற்றவர்கள், Pay Matrix Level 14 வரையிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 முதல் 61 க்குள் இருக்க வேண்டும்.

General Manager ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract, Deputation அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பழனி கோவிலில் 281 காலி பணியிடங்கள்.. மாத சம்பளம் ரூ.1,13,500 வரை வாங்கலாம் - முழு விவரம் இதோ..!

March 28, 2023 0

 தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பாதித்தாலும், அரசாங்க வேலை போல் வருமா என்ற எண்ணமே பலரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தில் பணிபுரிய மாணவ-மாணவிகள் முதல் திருமணமான தம்பதிகள் வரை கடினமாக போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு பயிற்சி நிலையங்களில் வெறித்தனமாக படித்து வருகின்றனர்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு இல்லாமல், நேர்முக தேர்வு வைத்து தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பல்வேறு காலிப்பணியிடங்கள்:

இதில், காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துநர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 281 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல், நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடைபெற உள்ளன.

என்னென்ன பணியிடங்கள்?

ஆட்சேர்ப்பு அறிவிப்பில் நான்கு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தட்டச்சர், நூலகர் ஆகிய துறைகளை உள்ளடக்கி வெளித்துறை பிரிவின் கீழ் 174 இடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய துறைகளை உள்ளடக்கி தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும், நாதஸ்வரம், தவில் ஆகிய பணிகளை உள்ளடக்கி உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும், ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட துறைகளை 19 காலிப்பணிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

வயது தகுதி:

மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் 45 வயது மிகாமலும் இருக்க வேண்டும் மற்றும் இந்து சமயத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க palanimurugan.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.inஆகிய இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி ஆகும். விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

சம்பள விவரம்:

வெளித்துறை:

1. தட்டச்சர் ( 6 காலியிடங்கள்) - ரூ.18,500/ரூ.58,000

2. நூலகர் (1 காலியிடம்) - ரூ.18,500/ரூ.58,000

3. கூர்க்கா (உப கோயில் 2) - ரூ.11,600/ரூ.36,800

4. அலுவலக உதவியாளர் (65 காலியிடம்) - ரூ.15,900/ரூ.50,400

5. உபகோவில் பல வேலை (26 காலியிடம்) - ரூ.11,600/ரூ.36,800

6. உதவி சமையல் (2 காலியிடம்) - ரூ.11,600/ரூ.36,800

7. ஆயா (3 காலியிடம்) - ரூ.15,900/ரூ.50,400

8. பூஜை கோவில் (1 மலைக்கோயில்) - ரூ.15,900/ரூ.50,400

(9 உப கோயில்) - ரூ.11,600/ரூ.36,800

9. காவல் ( 50 மலைக்கோயில்) - ரூ.15,900/ரூ.50,400

10. பாத்திரசுத்தி ( 1 மலைகோயில்) - ரூ.15,700/ரூ.50,000

தொழில்நுட்பம்

11. கணிணி பொறியாளர் (1) - ரூ.35,900 - ரூ.1,13.500

12. இளநிலை பொறியாளர் (மின்) ( 1 ) - ரூ.35,900 - ரூ.1,13.500

13. வரைவாளர் (சிவில்) (2) - ரூ.20,600 - ரூ.65,500

14. வரைவாளர் (மின்) (1) - ரூ.20,600 - ரூ.65,500

15. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) (6) - ரூ.20,600 - ரூ.65,500

16. தொழில்நுட்ப உதவியாளர் (மின்) (1) - ரூ.20,600 - ரூ.65,500

17. ஹெச்.டி ஆபரேட்டர் (5) - ரூ.18,200 - ரூ.57,900

18. பம்ப் ஆபரேட்டர் (6) - ரூ.18,000 - ரூ.56,900

19. பிளம்பர் (15) - ரூ.18,000 - ரூ.56,900

20. தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய இயக்குபவர் (2) - ரூ.16,600 - ரூ.52,400

21. ஃபிட்டர் (3) - ரூ.18,000 - ரூ.56,900

22. வின்ச் மெக்கானிக் (1) - ரூ.16,600 - ரூ.52,400

23. வின்ச் ஆபரேட்டர் (8) - ரூ.16,600 - ரூ.52,400

24. மிசின் ஆபரேட்டர் (5) - ரூ.16,600 - ரூ.52,400

25. டிராலி கார்டு (9) - ரூ.16,600 - ரூ.52,400

26. ஓட்டுனர் (4) - ரூ.18,500 - ரூ.58,600

27. நடத்துனர் (5) - ரூ.16,600 - ரூ.50,400

28. கிளீனர் (1) - ரூ.15,700 - ரூ.50,000

29. மருத்துவர் (2) - ரூ.36,700 - ரூ.1,16.200

30. FNA (1) - ரூ.11,600 - ரூ.36,800

31. MNA (1) - ரூ.11,600 - ரூ.36,800

32. சுகாதார ஆய்வர் (1) - ரூ.35,600 - ரூ.1,12,,800

33. வேளாண் அலுவலர் (1) - ரூ.35,900 - ரூ.1,13,,500

ஆசிரியர் காலியிடங்கள்

34. ஆசிரியை ( ஆங்கிலம் - 2, தமிழ் - 4, கணிதம் - 2, வரலாறு - 2, இயற்பியல் - 1, வேதியியல் - 1, உயிரியல் - 1, இசை ஆசிரியை - 1, உடற்கல்வி (ஆண்) - 1, உடற்கல்வி (பெண்) - 1) - ரூ.19,500 / ரூ.62,,500

35. ஆய்வக உதவியாளர் (1) - ரூ.15,900 - ரூ.50,400

36. வேதபாட சாலை (சிவ ஆகம ஆசிரியர்) (1) - ரூ.35,400 - ரூ.1,12,400

37. தேவார ஆசிரியர் (1) - ரூ.35,400 - ரூ.1,12,400

உள்துறை காலியிடங்கள்

38. நாதஸ்வரம் (3) - ரூ.15,700 - ரூ.50,400

39. தவில் (5) - ரூ.15,700 - ரூ.50,400

40. தாளம் (3) - ரூ.15,700 - ரூ.50,400

41. அர்ச்சகர்கள் (3) - ரூ.11,600 - ரூ.36,800

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,

பழனி - 624601

திண்டுக்கல் மாவட்டம்

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IRCTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/-ஊதியம்!

March 28, 2023 0
IRCTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.35,000/-ஊதியம்!

IRCTC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Tourism Monitor பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.04.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IRCTC காலிப்பணியிடம் :

IRCTC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Tourism Monitor பணிக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC கல்வி தகுதி:

Tourism Monitor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree, Graduation Degree / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IRCTC ஊதியம் விவரம் :

Tourism Monitor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/-முதல்- ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IRCTC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 05.04.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link Form

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

March 27, 2023

SBI வங்கியின் 30 நாள் இலவச தொழிற்பயிற்சி: உணவு, தங்கும் இடம் முற்றிலும் இலவசம்

March 27, 2023 0

 அரியலூர் மாவட்டத்தைச்சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (SBI RSETI) இலவச தொழிற்பயிற்சிகளை அறிவித்துள்ளது.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சுய வேலைவாய்ப்பை உருவாக்கிட, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (Rural Self Employment Training Institutes – RSETIs) அமைக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி நிறுவனங்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சிகளை மேற்கொள்கிறது. மேலும், இந்த பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவை ஊக்கப்படுத்திட வங்கி கடன் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (SBI RSETI) இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.

பயிற்சியின் விவரம்.


பயிற்சிநாட்கள்
வெல்டிங் & பேபிரிகேஷன்30 நாட்கள்
அலுமினியம் & பேபிரிகேஷன்30 நாட்கள்
எம்பிரைடரி மற்றும் பூ வேலைபாடு30 நாட்கள்
பெண்களுக்கான சணல் பை தயாரித்தல்13 நாட்கள்
காளான் வளர்ப்பு10 நாட்கள்



எவ்வித கட்டணமும் இன்றி 100% செய்முறை பயிற்சி, சீருடை, மூன்று வேலையும் உணவு, தேநீர், விடுதியில் தங்கி படிக்கும் வசதி, யோகா பயிற்சி மற்றும் பயிற்சி சான்றிதழ் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

திறன் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் தொழில் தொடங்குவதற்கும் வங்கி கடன் பெற தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு எதிர்வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை  வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல் 6ம் தேதி முதல் பயிற்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: எழுத, படிக்க தெரிந்தால் போதும்

தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், மாற்று சான்றிதழ் நகல்(TC), 100 நாள் வேலை அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 வங்கி கணக்குபுத்தக நகல் ஆகியனவற்றை எடுத்து வர வேண்டும்.  இப்பயிற்சிகளுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகிறது தொடர்புக்கு: 9944850442, 7539960190, 9626644433, 7558184628.

முகவரி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RTO அலுவலகம் பின்புறம்), திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுர், அரியலூர்-621707. 04329-250173 ஆகும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news