Agri Info

Adding Green to your Life

March 31, 2023

VARIOUS வேலைகளை தமிழ்நாடு TNNLU அறிவித்துள்ளது! ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சம்பளம் வாங்கலாம்!

March 31, 2023 0

 TNNLU Recruitment 2023 Notification PDF: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (TNNLU – Tamil Nadu National Law University) காலியாக உள்ள Various Hostel Warden (Resident) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த tnnlu.ac.in Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Graduation

 இந்த வேலையில்  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.03.2023 முதல் 30.04.2023 வரை TNNLU Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Tiruchirappalli-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TNNLU Job Notification-க்கு, ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பதாரர்களை TNNLU நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TNNLU நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://tnnlu.ac.in/) அறிந்து கொள்ளலாம். 

THE TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY

TNNLU ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
Tamil Nadu National Law University
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tnnlu.ac.in/
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs
RecruitmentTNNLU Recruitment 2023
TNNLU Headquarters AddressThe Tamil Nadu National Law University
Dindigul Main Road, Navalurkuttappattu,
Tiruchirappalli – 620 027, Tamil Nadu, India.


பதவிHostel Warden (Resident)
காலியிடங்கள்Various
கல்வித்தகுதிTNNLU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும்
வயது வரம்புதமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-04-2023 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்Jobs in Tiruchirappalli
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்No Application Fee
விண்ணப்பிக்கும் முறைஆப்லைன் (அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்)
முகவரிThe Registrar, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, Tiruchirappalli- 620027

TNNLU RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி29 மார்ச் 2023
கடைசி தேதி30 ஏப்ரல் 2023
அதிகாரப்பூர்வ அறிவிப்புTNNLU Recruitment 2023 Official Notification & Application Form pdf

TNNLU RECRUITMENT 2023 NOTIFICATION PDF-க்கு விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnnlu.ac.in/-க்கு செல்லவும். TNNLU Vacancy 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TNNLU Jobs 2023 Application Form விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TNNLU Recruitment 2023 Notification பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience, etc,.) பதிவேற்றவும்.
  • Tamil Nadu National Law University அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TNNLU Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TNNLU Jobs 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • TNNLU Recruitment 2023 Notification PDF அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • Q1. TNNLU முழு வடிவம் என்ன?

    தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் – Tamil Nadu National Law University.

    Q2. TNNLU Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

    The Apply Mode is Offline.

    Q3. TNNLU Jobs 2023 க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன?

    தற்போது, பல்வேறு வகையான காலியிடங்கள் உள்ளன

    Q4. TNNLU Vacancy 2023 அறிவிப்புக்கான கல்வித்தகுதி என்ன?

    The Qualification is Graduation.

    Q5. TNNLU Recruitment 2023 பதவியின் பெயர்கள் என்ன?

    The Job name is Hostel Warden (Resident).


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (TNUHDB) புதிய வேலை! 85 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சம்பளம் வாங்கிட ரெடியா நீங்க? tnuhdb.tn.gov.in

March 31, 2023 0

 TNUHDB Recruitment 2023 Notification PDF: தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (Tamil Nadu Urban Habitat Development Board – TNUHDB) காலியாக உள்ள Specialist பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TNUHDB Job Vacancy in Chennai-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Master’s Degree, Post Graduation

தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31/03/2023 முதல் 13/04/2023 வரை TNUHDB Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TNUHDB Job Notification-க்கு, Offline முறையில் விண்ணப்பதாரர்களை TNUHDB ஆட்சேர்ப்பு செய்கிறது. 

இந்த TNUHDB நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (tnuhdb.tn.gov.in) அறிந்து கொள்ளலாம். 

TNUHDB RECRUITMENT 2023 FULL DETAILS:

TNUHDB Job Vacancy, TNUHDB Job Qualification, TNUHDB Job Age Limit, TNUHDB Job Location, TNUHDB Job Salary, TNUHDB Job Selection Process, TNUHDB Job Apply Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்
Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)
அதிகாரப்பூர்வ இணையதளம்tnuhdb.tn.gov.in
வேலைவாய்ப்பு வகைTamilnadu Government Jobs
RecruitmentTNUHDB Recruitment 2023
TNUHDB AddressTamil Nadu Urban Habitat Development Board
No.5, Kamarajar Salai, Chepauk,
(Near Vivekananda House)
Chennai – 600 005
பதவிSpecialist
காலியிடங்கள்04 பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதிTNUHDB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Master’s Degree, Post Graduation பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்ரூ.85000/- மாதத்திற்கு சம்பளம்
வயது வரம்புதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 31-03-2023 தேதியின்படி 45 வயதாக இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in Chennai
(தமிழ்நாட்டில் உள்ள சிங்கார சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது)
தேர்வு செய்யப்படும் முறைQualification, Experience Skills and Followed by Interview
விண்ணப்பக் கட்டணம்No Application Fee
விண்ணப்பிக்கும் முறைOffline
(ஆஃப்லைன் முறையில் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்)
முகவரிExecutive Engineer, (HFA Cell), Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB), 5, Kamarajarsalai, Chennai – 600005

அறிவிப்பு தேதி: 31 மார்ச் 2023

கடைசி தேதி: 13 ஏப்ரல் 2023

TNUHDB RECRUITMENT 2023 OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM

What is the TNUHDB Full Form?

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் – Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)

TNUHDB Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Offline

How many vacancies are TNUHDB Vacancies 2023?

தற்போது, 04 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

What is the qualification for TNUHDB Recruitment 2023?

The qualification is Master’s Degree, Post Graduation

What are the TNUHDB Careers 2023 Post names?

The Post name is Specialist


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை!

March 31, 2023 0

 வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் பொருள்.

உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது. அவை, கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - ஏ, டி, ஈ, கே. தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி12 பிரிவுகள், வைட்டமின் சி. வைட்டமின் குறைபாடுகள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வைட்டமின்கள் எரிசக்தி போல் அதிக அளவில் தேவைப்படாது. இருப்பினும், மருத்துவர்கள் சில சமயங்களில் வைட்டமின் மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர். மூன்று விஷயங்களுக்காக இது சிபாரிசு செய்யப்படுகின்றது.உடலில் காணப்படும் வைட்டமின் சத்து குறைபாடு.குறைபாடு ஏற்படக் கூடிய காலங்களை தவிர்க்க. (உ.ம்) கர்ப்ப காலம், அறுவைசிகிச்சை, நோய் பாதிப்பு.

சில நோய் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான முன் நடவடிக்கையாக மருத்துவரின் அறிவுரையின் பேரிலேயே வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சைவ உணவு உண்பவர்களுக்கு கண்டிப்பாக வைட்டமின் பி12 சத்து மாத்திரை தேவைப்படும். அன்றாடம் வைட்டமின் சத்து என்பது இன்சூரன்ஸ் பாலிஸி போன்றது. ஆகவேதான் ஒரு மல்டி வைட்டமின் என்பது அதிக சிபாரிசு பெறுகின்றது.

ஆரோக்கியமான உணவிவை உட்கொள்ளுங்கள். மருத்துவ ஆலோசனையோடு ஒரு சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள்.வைட்டமின் 'டி' சத்து தேவையா என அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.மிக அதிக அளவிலான வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சரியாகாது.

நீரில் கரையும் வைட்டமின்கள்

போலேட் எனப்படும் இந்த வைட்டமின் பிறவி குறைபாடுகளை நீக்கும்.தயமின் எனப்படும் பி1 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு ஏற்படும். ஓட்ஸ், கைகுத்தல் அரிசி, காய்கறி, உருளைக்கிழங்கு, முட்டை இவற்றிலிருந்து இந்த வைட்டமின் கிடைக்கும்.ரிபோப்ளேவின் எனப்படும் பி2 குறைபாட்டால் நாக்கு வீக்கம், வாய் ஓரத்தில் புண் ஏற்படும். இந்த வைட்டமின் பால் பொருட்கள், வாழைப்பழம், பச்சை வாழைப்பழம் இவற்றில் கிடைக்கும்.

நியாசின் எனப்படும் பி3 சரும பாதுகாப்பு, ஜீரண செயல்பாடுமுறை, கெட்ட கொழுப்பு நீக்குதல் போன்றவற்றை கொடுக்கும். ஆயினும் அதிகம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அசைவம், மீன், முட்டை, காய்கறி இவற்றில் பி3 வைட்டமின் சத்து கிடைக்கும்.பன்டோதினிக் ஆசிட் எனப்படும் பி5 வைட்டமின் உடல் உணவிலிருந்து சத்து எடுத்துக் கொள்ள உதவும். சில ஹார்மோன்கள், கொலஸ்டிரால் உருவாக்கவும் உதவுகின்றது. குறைபாடு ஏற்படும் பொழுது பராஸ்திஷியா என்ற பாதிப்பு ஏற்படும். வைட்டமின் பி5 அதிகமானால் வயிற்றுப் போக்கு, பிரட்டல், நெஞ்நெரிச்சல் பி5 சத்து அசைவ உணவு, மீன், முட்டை, காய்கறி இவற்றிலிருந்து கிடைக்கின்றது.

பிரிடாக்ஸின் எனப்படும் பி6 வைட்டமின் சத்து உடலின் ரசாயன மாற்றங்களுக்கு உதவுகின்றது. இரத்த சோகை இதன் குறைபாட்டால் ஏற்படும். இந்த சத்து அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படும். அசைவம் காய்கறி, கொட்டைகள், வாழைப்பழம் இவற்றில் பி6 வைட்டமின் சத்து கிடைக்கிறது.பயோடின் எனப்படும் பி7 வைட்டமின் சத்தில் குறைபாடு ஏற்பட்டால் சரும பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்படும்.

முட்டை, கடலை, கீரை இவற்றில் எளிதாய் இச்சத்து கிடைக்கும்.சயன கோபாளமின் எனப்படும் வைட்டமின் பி12 ரத்த அணுக்கள் நரம்பு மண்டல செயல்பாடு ஆகியவற்றுக்கு அத்தியாவசமானது. இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும். அசைவ உணவிலேயே இது அதிகம் கிடைக்கின்றது. வைட்டமின் சி தான் உடலில் அதிகமாக காணப்படும் கொலாஜன் எனப்படும் புரதம் உருவாக காரணம் ஆகின்றது. பல், சருமம், எலும்பு, ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க இந்த வைட்டமின் மிகவும் அவசியமாகின்றது. பழங்கள், காய்கறிகள், கல்லீரல் இவற்றில் அதிகம் கிடைக்கின்றது. ஆய்வுகள் பி வைட்டமின் பிரிவுகள் ஞாபகத்திறனை காப்பதாகக் கூறுகின்றன.

இதே போன்று வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின் இவைகளும் மூளை நரம்புகளை காத்து வலிவூட்டுகின்றன. ஆயினும் ஆய்வுகள் கீரை, பருப்பு, ஆரஞ்சு, சோயா இந்த மாதிரி உணவுப் பொருட்களின் மூலம் பெறுவதையே வலியுறுத்துகின்றன. வைட்டமின் பி பிரிவு குறைபாடுகளை சோர்வு, அதிக படபடப்பு, வெளிர்ந்த சருமம், வறண்ட நாக்கு, ஈறில் இரத்த கசிவு, வயிறு பாதிப்பு, எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிய முடியும்.

அதிக வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தே என்பதனை நன்கு உணர வேண்டும். வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். இவை அதிக நாட்கள் உடலில் தங்கும். அதிக அளவு எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின் ஏ

ரெடினால் என்றும் சொல்லப்படும். இந்த வைட்டமினுக்கு உடலில் பல வேலைகள் உள்ளன. அதிக வெளிச்சம், குறைந்த வெளிச்சம் இவற்றிக்கு கண் தன்னை சரி செய்து கொள்வது இந்த வைட்டமினால்தான். எலும்பு வளர்ச்சி, பல் வளர்ச்சி, திசுக்களின் வளர்ச்சி நோய் எதிர்ப்பு சக்தி இவை அனைத்திற்கும் இந்த வைட்டமின் பொறுப்பு.

சருமம், கண், வாய் உள்தசை, மூக்கு, தொண்டை, நுரையீரல் இவை ஈரப்பதத்தோடு இருப்பதும் இந்த வைட்டமினையே சார்ந்துள்ளன. மேலும் ஒரு சில வகை புற்று நோய்களையும் வைட்டமின் 'ஏ' தவிர்க்கும். பல வகை உணவுகள் உண்ணும் பொழுது அதாவது பால் பொருட்கள், மீன், கல்லீரல் இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கின்றது.

தாவர வகையிலிருந்து அடர்ந்த பச்சை நிறம் கொண்ட இலைகள், காய்கறிகள்,கேரட், பரங்கிகாய் இவையெல்லாம் வைட்டமின் 'ஏ' கிடைக்கும் உணவுப் பொருட்கள். சராசரி தேவையாக ஆணுக்கு 900 மைகி 1 பெண்ணுக்கு 700 மைகி அளவு இது தேவைப்படுகின்றது. வைட்டமின் 'ஏ' கல்லீரலில் தேக்கி வைக்கப்படுகின்றது.

அதனால் தான் இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது 2 வருடம் வரை கூட அறிகுறிகள் தெரிவதில்லை. இரவு கண் தெரியாமை, சொரசொரப்பான வறண்ட சருமம், எளிதில் உடல் நோய் வாய்ப் படுதல், எலும்பு வளர்ச்சி குறைபாடு போன்றவை வைட்டமின் 'ஏ' குறைபாட்டால் ஏற்படும் நோய்கள். வைட்டமின் 'ஏ' அதிகம் இருந்தால்; அதாவது அன்றாடம் 3000 மைகி மேல் உடல் பெற்றால் வறண்ட சருமம், அரிக்கும் சருமம், தலைவலி, வயிற்றுப் பிரட்டல், பசியின்மை, பார்வை சரியின்மை, தலைசுற்றல், இடுப்பு எலும்பு முறிவு போன்றவை ஏற்படும்.

வைட்டமின் டி

உடல் உபயோகத்திற்கான கால்ஷியம், பாஸ்பரசில் வைட்டமின் டி மிக முக்கிய பங்காற்றுகின்றது. சிறு குடலில் இருந்து நன்கு கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் உருவாகவும், பாதுகாக்கப்படவும் இந்த வைட்டமின் 'டி'யே காரணமாகின்றது. திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு நல்ல எலும்பும், பல்லும் பெற வைட்டமின் 'டி' மிக அவசியம். பால், பால் பொருட்கள், மீன், மீன் எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் 'டி' கிடைக்கின்றது.

இத்தோடு சூரிய ஒளியில் சருமமே வைட்டமின் 'டி'யை உற்பத்தி செய்கின்றது. ஒரு வயது முதல் ஐம்பது வயது வரை ஒருவருக்கு 15 மைகி வைட்டமின் 'டி' தேவைப்படுகின்றது. இளம் காலை வெயில், மாலை வெயில் பொழுதில் கை, கால், முகத்தில் வெயில் படும் படி 10 நிமிடங்கள் இருக்கலாம். அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் 'சன் ஸ்கீரின்' அவசியம் உபயோகிக்க வேண்டும். வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் எனப்படும் வளைந்த கால்கள், பெரியோருக்கு எலும்பு அடர்த்தி
குறைதல் ஏற்படுகின்றது.

குழந்தைகளுக்கு பின் தலை தட்டையாகின்றது. புற்று நோய் பாதிக்கும் அபாயம் அதிகமாகின்றன. ரத்தக் கொதிப்பு, நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுகின்றது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தாய்பால் மட்டும் பெறும் சிறு குழந்தைகள், அடர்ந்த நிறம் கொண்டோர், முதியோர் நோயாளிகள் ஆகியோருக்கு வைட்டமின் 'டி' குறைபாடு ஏற்படுகின்றது. அதிக அளவு வைட்டமின் 'டி' ரத்தத்தில் அதிக கால்ஷியம், உடல், மன வளர்ச்சி குறைவு, வயிற்று குமட்டல், வாந்தி இவற்றினை ஏற்படுத்தும்.

வைட்டடமின் ஈ

வைட்டமின் ஈ உடலில் வைட்டமின் ஏ,சி, சிகப்பு அணுக்கள் நல்ல அமினோ அமிலங்கள் இவற்றை காக்கின்றது. நல்ல பழங்கள், காய்கறிகள் மூலமே இவற்றைப்பெற முடியும் என சமீபத்திய ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சூரிய காந்தி எண்ணெய், சோயாபீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் இவைகள் மூலம் வைட்டமின் ஈ சத்து கிடைக்கின்றது. ஆணும், பெண்ணும் 14 வயதிற்கு மேல் 15 மைகி அளவு அன்றாடம் வைட்டமின் ஈ பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

வைட்டமின் கே

வைட்டமின் கே பாக்டீரியாவால் குடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றது. ரத்தம் கெட்டிப்பட, எலும்பின் ஆரோக்கியம், ரத்தம், எலும்பு, சிறுநீரகம் இவற்றிக்கான புரதம் அளிக்க உதவுகின்றது. முட்டைக் கோஸ் பச்சை முட்டைக்கோஸ், காலிப்ளவர், பச்சை நிற இலைகள், தாவர எண்ணெய் இவற்றிலிருந்து வைட்டமின் கே கிடைக்கின்றது. போதுமான அளவு வைட்டமின் கே உடலில் இல்லை எனில் சிறு காயத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு வைட்டமின் கே. குறைபாடு ஏற்படும். மிக அதிக அளவு வைட்டமின் கே; திசுக்களுக்கும் கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தெரிந்துகொள்ளவேண்டியவை

கொழுப்பில் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே இவை நீண்ட காலம் உடல் சேகரிப்பில் இருக்கும்.பீட்டா கரோட்டினை உடல் வைட்டமின் 'ஏ'வாக மாற்றும். இது காய்கறி பழங்களில் அதிகம் உள்ளது.குறைவான வைட்டமின் டி, உடலுக்குத் தேவையான சூரிய வெளிச்சம் இன்மை இவை இன்றைய மருத்துவ பொதுநல கவலையாக உள்ளது. வைட்டமின் ஈ உடலின் பாதுகாப்பு. குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உருவாகும் வைட்டமின் கே, கீரைகளில் அதிகம் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மூல நோயும் உணவு முறையும்!

March 31, 2023 0

 மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும்.

மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது.

மூல நோயில் உள்மூலம், (Internal piles), வெளிமூலம் (External piles), பவுத்திர மூலம் (Fistula) மூன்று வகைகள் உள்ளது. அது நான்கு கட்டங்களாக பிரித்துள்ளனர். அதில் மிகவும் எரிச்சலுடன் கஷ்டப்பட்டு மலம் கழிப்பவர்கள் முதல் நிலையில் இருக்கின்றனர். மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல் மற்றும் ஆசன வாயை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் இருந்தால் அது இரண்டாம் நிலை.மலம் கழிக்கும்போது சிறிய சதைப்பகுதி வெளியே வருவதும், மலம் கழித்து முடித்தவுடன் மீண்டும் சதைப்பகுதி உள்ளே சென்றுவிடுவதும் மூன்றாம் நிலை.

மலம் கழிக்கும்போது, வெளியே வரும் சதைப்பகுதியானது. மீண்டும் உள்ளே செல்லாமல் அப்படியே வெளியே நின்றுவிடுவது நான்காம் நிலை. இதுபோன்று கஷ்டப்பட்டு, அழுத்தம் கொடுத்து மலம் கழிக்கும் நிலை ஏற்படும்போது, உள்ளே இருக்கும் ரத்த குழாய் வெடிப்பு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பின்னர், அதுவே வேறு சில பிரச்னைகளையும் உடலில் தோற்றுவித்துவிடலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே இதிலிருந்து விடுபட, உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம் என்கிறார் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் என். ராதிகா.

தண்ணீர்

பொதுவாக, எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதிலும், தற்போது கோடை தொடங்கிவிட்டது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் தினசரி குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். அப்படி தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகள், இளநீர், மோர் அல்லது சீரக தண்ணீராகவோ எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் போதிய அளவில் உடலில் இருந்தாலே, அவை உடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளித்தள்ளும்.

நார்ச்சத்தும் - நீர்ச்சத்தும்

நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நார்ச்சத்து நிறைந்த அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், வெண்டைக்காய்,
வாழைத்தண்டு போன்ற காய்கறிகளையும், நீர்ச்சத்து நிறைந்த, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செளசெள, முள்ளங்கி, முட்டைகோஸ், பூசணிக்காய், வெண் பூசணிக்காய் போன்றவற்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. மூல நோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளில், கருணைக்கிழங்கு மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேசமயம், கருணைக்கிழங்கு அதிகளவு சூடானது என்பதால், கருணைக்கிழங்குடன் பாசிபருப்பு சேர்த்து சமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடலாம். அதுபோன்று, சமையலில் வெங்காயம், இஞ்சி - பூண்டு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சி - பூண்டை விழுதாக இல்லாமல், பொரியல்களில் தட்டி போட்டோ அல்லது நறுக்கிச் சேர்த்தோ சமைப்பது நல்லது. பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால், மோர், தயிராக எடுத்துக் கொள்ளலாம்.

கீரைகள்

வாரத்திற்கு 3 நாட்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக எல்லா கீரையும் நல்லதுதான், சத்தும் நிறைந்தது.

பழங்கள்

மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக்கியமாக தினசரி ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பழம் அதிகளவில் நார்ச்சத்தும் இதர சத்துகளும் அடங்கியது. அதேசமயம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, அவர்கள் வாழைப்பழத்துக்கு பதிலாக பப்பாளி பழம் சில துண்டுகள் தினசரி எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று கொய்யாக்காய், கிர்ணிப்பழம், தர்பூசணி போன்றவற்றை ஜூஸாக எடுத்துக் கொள்ளாமல் பழங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, மாதுளம் பழம், அன்னாசி, ஆப்பிள், சப்போட்டா மற்றும் உலர் பழங்களான, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், காய்ந்த திராட்சையை பொருத்தவரை, சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பத்து காய்ந்த திராட்சையை இரவே ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும், பல் தேய்த்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால். விரைவில் படிப்படியாக மலச்சிக்கலின்போது ஏற்படும் எரிச்சல், வலி எல்லாம் குறைந்துவிடும்.

மூலிகைகள்

துத்தி இலை பச்சையாக கிடைத்தால், அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம் அல்லது சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம். இது சதை வளர்ந்து ரத்தம் வடியும் நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பிரண்டை துவையல், வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வதும் பயன்தரும்.
கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா சூரணத்தை அரை தேக்கரண்டி வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.

அருகம்புல் வேர்ப்பொடி. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது. இது ரத்தமாக வருபவர்களும், கொப்புளங்கள் இருப்பவர்களும் இந்தப் பொடியை கஷாயமாகவோ அல்லது அரை ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். ரோஜா இதழ்களில் தயாரிக்கப்பட்ட குல்கந்து அல்லது ரோஜா இதழ்களுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சிறுதானிய வகைகள்

சிறுதானிய வகைகளில் அனைத்துமே சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு கூழ் மிகவும் நல்லது. அதுபோன்று பச்சைபயறு, காராமணி, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், இந்த சுண்டல் வகைகள் சாப்பிட்டதும், ஒரு டம்ளர் சீரகம் கலந்த வெந்நீர் அருந்துவது நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பச்சரிசி சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. மைதா சார்ந்த உணவுகளான பிரெட், பன், பிஸ்கட், ரஸ்க்,, கேக், பரோட்டா, நூடுல்ஸ், பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது. எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக மசாலா சேர்த்த காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது மிகமிக அவசியமானது. அடுத்த இதழில் மூல நோய்க்கான வெளிப்பூச்சுகள் குறித்து பார்க்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகரிக்கும் வெயில், பாதிக்கப்படும் உடல்நலன்; வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

March 31, 2023 0

 கோடைகாலம் தொடங்கி, வெயில் வாட்டத் தொடங்கி விட்டது. எதிர்வரும் நாள்களில் வெயில் இன்னும் அதிகமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. கோடையில் ஏற்படும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை எப்படித் தற்காத்து கொள்ளலாம்? இது குறித்து, மருத்துவர் சரவண பாரதியிடம் கேட்டோம்...

மருத்துவர் சரவண பாரதி.

என்னென்ன பாதிப்புகள்?

``சுற்றுச்சூழல் தட்பவெப்பநிலையானது குறைந்தது 40 டிகிரி செல்சியஸை எட்டும்போது, அதை Heat waves எனக் கூறுவோம். இந்தியாவில் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி, ஜூன் மாதம் வரை இந்த வெப்ப அலைகளை உணரலாம். சில சமயத்தில், ஜூலை வரை கூட இது நீடிக்க வாய்ப்புள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஐந்து, ஆறு வெப்ப அலைகளை இந்தியாவில் பார்க்க முடியும்.

வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்போது, நம் உடல் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் உடலின் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ள முயலும். வெளிப்புறத்தில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்தச் செயல் கடினமானதாக மாறும். இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தசைவலி, அதீத அசதி, மயக்கம், வலிப்பு, தலைவலி, வாய் குழறுதல், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி என பல்வேறு விதமான பாதிப்புகளை இந்த அதிக வெப்பம் ஏற்படுத்தலாம். சில சமயம் மரணம்கூட நிகழலாம்.

வெப்ப அலையும் முதலுதவியும்!

இதைத் தடுப்பதற்கு உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். யாராவது வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டால் அதற்கான முதலுதவி முறைகள் உள்ளன.

* பாதிக்கப்பட்டவரை, வெயிலில் இருந்து நிழலான ஒரு பகுதிக்கு கொண்டு வர வேண்டும்.

* அவரின் ஆடைகள் இறுக்கமாக இருந்தால் தளர்வாக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்து, கால்களை சற்று உயர்வாக வைக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய‌ வேண்டும்.

* ஸ்பான்ஜை பயன்படுத்தி உடலில் நீரால் ஒற்றடம் கொடுக்கலாம்.

கோடை காலத்தில் குழந்தைகள் விஷயத்தில் முக்கிய கவனம் தேவை. வெயில் அதிகமாக அடிக்கும்‌ போது அவர்களை வெளியே விளையாட அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்" என்று மருத்துவர் சரவண பாரதி தெரிவித்தார்.

அம்மைவெயில்கால நோய்களைத் தடுக்க உதவும் காய்கள், கனிகள், பானங்கள்!

அச்சுறுத்தும் அம்மை!

கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பற்றி சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.. ``கோடை காலத்தில் பொதுவாக அம்மை, மஞ்சள்காமாலை போன்ற வைரஸால் ஏற்படும் நோய்கள் அதிகம்‌ பரவும். குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் வற்றுவதால் நீர் மாசுபாடு கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இதனால் நீர் மூலம் பரவும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படலாம். இது தவிர சிறுநீரக கற்கள் ஏற்படலாம். ஆனால் இந்தக் கற்கள் உருவாகி அவற்றின் தாக்கம் கோடை முடிந்து ஜூலை மாதத்தில்தான் தெரியத் தொடங்கும்.

கோடையில் வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்ற சரும பாதிப்புகளும் உண்டாகும். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு வெயில் காலத்தில் அதிகம் வியர்ப்பதால் உடலில் உப்புச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு வரலாம். இது தவிர, முக்கியமாக அதீத வெயிலில் நேரடியாக செல்லும்போது உடலில் உள்ள நீர்ச்சத்து, உப்புச்சத்து ஆகியவை வெகுவாகக் குறைந்து மூர்ச்சை (Sunstroke) ஏற்படக்கூட வாய்ப்புள்ளது‌.

உடல் சூட்டை குறைக்கும் பழச்சாறு, இளநீர்

வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ள, சில வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். முந்தைய காலங்களில் வெளியே சென்றால் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்தது. இது வெயில் நேரடியாக உச்சந்தலையில் படாமல் இருப்பதற்காக செய்யப்பட்ட நடைமுறை. எனவே நாமும் வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது நேரடியாக தலையில் வெயில் படுவதைத் தவிர்க்க, தொப்பி போன்ற எதையாவது அணியலாம்.

மருத்துவர் சிவராமன்`அம்மை நோய் பாதிப்பு 300 சதவிகிதம் அதிகரிப்பு!' - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

இதுதவிர, அதிகமாக வெயில் அடிக்கும் மதிய நேரங்களில் அவசியமற்று வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருநாளைக்கு மூன்று முதல், நான்கு லிட்டர் தண்ணீர் வரை குடிக்கலாம். வீடுகளில் மண்பானை வைத்து அதில் வெட்டிவேர் இட்ட தண்ணீரை வைத்துப் பருகுவது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இயற்கையான பழச்சாறுகள், பதநீர், இளநீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஆனால், சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் மற்றும் பதநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். அவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து, சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பிரச்னையை உண்டாக்கும். தாகத்தைத் தணிப்பதற்கு என ஏரியேட்டடு பானங்கள் (Aerated drinks) பருகுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய், சுரைக்காய், வெள்ளை பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

  

நீராகாரம் வந்தாச்சு கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...

இந்தக் காய்கறிகள், வயிற்றில் உள்ள புண்களையும் குணப்படுத்தும். உண்ணும் உணவில் அதிக காரம் சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது, கோடை காலத்தில் ஏற்பட கூடிய செரிமானக் கோளாறுகளைக் குறைக்கும். இரவு உணவை கொஞ்சம் விரைவாக உட்கொள்வதும் கோடை காலத்தில் சிறந்தது. கோடைக்கு நீராகாரம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

முந்தைய நாள் தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றில், காலையில் நிறைய மோர் சேர்த்துப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மிகச் சிறந்த புரோபயாடிக் ஆகவும் இந்த உணவு உதவும்" என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்தார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Post office: உங்களிடம் போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் இருக்கா? உங்கள் கணக்கில் இப்போ எவ்வளவு பேலன்ஸ் இருக்கு? இதோ தெரிஞ்சுக்க ஈஸியான வழிகள்..!

March 31, 2023 0

 ஒருவரின் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைப்பது உழைக்கும் நபர்களிடையே பொதுவான நடைமுறையாகும். சேமிப்பதற்கான முதல் படி சேமிப்புக் கணக்கைத் திறப்பது. தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில், தபால் அலுவலகங்கள் அல்லது எந்த வங்கியிலும் திறக்கலாம்.இதற்கிடையில், நீங்கள் திறக்கும் அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இதில் உள்ளன. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது அல்லது மிஸ்டு கால் கொடுப்பது என தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்ப்பது என்பது எளிது. இதோ அதற்கான வழிமுறைகள்.

எஸ்எம்எஸ் மூலம் பேலன்ஸ் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் "பேலன்ஸ்" என ஆங்கிலத்தில் டைப் செய்து 7738062873 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். சில நிமிடங்களில், அவர்களது தபால் நிலைய இருப்பு விவரங்கள் அடங்கிய செய்தி கிடைக்கும்.

இதேபோல், பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 8424054994 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அனுப்பினால், சில நிமிடங்களில் கணக்கு இருப்பு விவரங்கள் SMS அனுப்பப்படும்.

IPPB என்ற மொபைல் செயலி என்பது அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வழியாகும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க இ-பாஸ்புக் வசதி அல்லது ஊடாடும் குரல் பதில் அமைப்பு (IVRS) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஐவிஆர்எஸ் மூலம் இருப்பைச் சரிபார்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 155299 என்ற எண்ணை அழைத்து, வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க நெட் பேங்கிங் மற்றொரு வசதியான முறையாகும். வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ தபால் அலுவலக வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் அவர்களின் இருப்புத் தகவலை அணுக, அவர்களின் கணக்கில் உள்நுழையலாம்.

கடைசியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அஞ்சல் அலுவலகத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதில் அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அடங்கிய செய்தியைப் பெற உள்ளிட வேண்டும்.