Jobs In L&T: கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் சேவையில் முன்னணி வகிக்கும் லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனம் DIPLOMA ENGINEER TRAINEES பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: பட்டயப் பயிற்சி பொறியாளர் (DIPLOMA ENGINEER TRAINEES)
காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி: 2023 ஏப்ரல் - மே கல்வியாண்டில் கீழ்காணும் துறைகளில் Civil, Electrical, Mechanical, Mechatronics, Electronics & Communication, Electronics & Instrumentation, Automobile, Environmental Health & Safety, Computer Science / Information Technology, Mining, Instrumentation & Control, Chemical & Metallurgy பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
அடிப்படைத் தகுதிகள்: 10 + 2 தேர்வுக்குப் பிறகு 3 ஆண்டுகள்/ 6 செமஸ்டர் தேர்வுகள் கொண்ட முழுநேர டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்; 2023 ஜூன் 30 -க்குள் டிப்ளமோ படிப்பை முடிக்க காத்திருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
60% மதிப்பெண்களுடன் முதற் முயற்சியிலேயே டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளோமா படிப்பிற்கு முன்னரோ/பின்னரோ பொறியியல்/அறிவியல்/கலை ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள்; sandwich courses மூலம் டிப்ளமா படித்த்வர்கள், தகுதியற்றவை; செமஸ்டர் தேர்வுகளில் ஏதேனும் அரியர் வைத்தவர்கள்; மேலைநாடுகளில் கல்வித் தகுதியை எட்டியவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2001 க்கும் 30-6-2005 இடையில் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி https://campus.lntedutech.com/offline/#/open/off-campus-det/profile ஆகும்.
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news