Agri Info

Adding Green to your Life

April 3, 2023

சென்னை குடிநீர் வாரிய வேலை… எழுத்துத் தேர்வு இல்லை… 108 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 76

Civil Engineering / Mechanical Engineering – 52

Electrical and Electronics Engineering – 24

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 32

Civil Engineering – 10

Electrical and Electronics Engineering – 22

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 8,000

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/03/CMW_Notification_2023_24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


April 2, 2023

2674 சமூக நல அலுவலர் பதவி... பலரும் எதிர்பார்த்த வேலை அறிவிப்பு வெளியானது... உடனே விண்ணப்பியுங்கள்..!

April 02, 2023 0

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக  உள்ள  2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்,  தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

1. சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant):

காலியிடங்கள்: 2674 (நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம் )

கல்வித் தகுதி:  ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2023, ஏப்ரல்  26 அன்றுவிண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில்  ( Computer Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.700ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023

தேர்வு அறிவிக்கை:  Social Security Assistant notification

2. சுருக்கெழுத்தர் பணி (stenographer (Group C) :

காலியிடங்கள்: 185

கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2023, ஏப்ரல்  26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு (Written test), சுருக்கெழுத்தர் திறன் தேர்வில்  ( Stenography Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.700ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. stenographer (Group C) Notification இங்கே பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


Jobs In L&T: எல்&டி நிறுவனத்தின் கொட்டிக் கிடைக்கும் வேலைவாய்ப்பு - டிப்ளமோ முடித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!

April 02, 2023 0

 Jobs In L&T: கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் சேவையில் முன்னணி வகிக்கும் லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனம் DIPLOMA ENGINEER TRAINEES பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: பட்டயப் பயிற்சி பொறியாளர் (DIPLOMA ENGINEER TRAINEES)

காலியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வித் தகுதி: 2023 ஏப்ரல் - மே கல்வியாண்டில் கீழ்காணும் துறைகளில் Civil, Electrical, Mechanical, Mechatronics, Electronics & Communication, Electronics & Instrumentation, Automobile, Environmental Health & Safety, Computer Science / Information Technology, Mining, Instrumentation & Control, Chemical & Metallurgy பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அடிப்படைத் தகுதிகள்:  10 + 2 தேர்வுக்குப் பிறகு 3 ஆண்டுகள்/ 6 செமஸ்டர் தேர்வுகள் கொண்ட முழுநேர டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்; 2023 ஜூன் 30 -க்குள் டிப்ளமோ படிப்பை முடிக்க காத்திருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

60% மதிப்பெண்களுடன் முதற் முயற்சியிலேயே டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிப்ளோமா படிப்பிற்கு முன்னரோ/பின்னரோ பொறியியல்/அறிவியல்/கலை  ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள்; sandwich courses மூலம் டிப்ளமா படித்த்வர்கள்,  தகுதியற்றவை; செமஸ்டர் தேர்வுகளில் ஏதேனும் அரியர் வைத்தவர்கள்; மேலைநாடுகளில் கல்வித் தகுதியை எட்டியவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  விண்ணப்பதாரர்கள்   1-7-2001 க்கும் 30-6-2005 இடையில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?  லார்சன் & டப்ரோ (எல்&டி) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி, ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், சுயவிவரக்குறிப்பு உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி https://campus.lntedutech.com/offline/#/open/off-campus-det/profile ஆகும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


April 1, 2023

Parenting Tips : குழந்தை வளர்ப்பில் பிள்ளைகளுக்கு கற்றுத்தர புத்த மதம் சொல்லும் விஷயங்கள்...

April 01, 2023 0

 குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. பிறந்தது முதல் சில மாதங்கள் வரை குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமே பெரிதாக கருத்தில் கொள்ளப்படும். வளர வளர, குழந்தைகளின் நடவடிக்கை, அவர்கள் குணம், திறன்கள் ஆகியவை மீது கூடுதல் கவனம் தேவைப்படும். குழந்தை வளர்ப்பது எப்படி என்பது பற்றி மகப்பேறு மருத்துவர்கள், உளவியலாளர்கள், குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் பல்வேறு முக்கியமான விஷயங்களை வலியுறுத்தி வருகின்றனர். இவற்றில், புத்த மதம் குழந்தைகள் வளர்ப்பில் எதுவெல்லாம் முக்கியம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி பல விஷயங்களை வலியுறுத்துகிறது.

பெற்றோர் தான் குழந்தைகளின் கண்ணாடி

பெரும்பாலும், பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ, என்ன செய்கிறார்களோ அதையே தான் குழந்தைகளும் செய்வார்கள். குழந்தைகள் தான் என்ன பார்க்கிறதோ, கேட்கிறதோ, எவ்வாறு உணர்கிறதோ அதையே பிரதிபலிக்கும். எனவே, பெற்றோர்கள் பேசும் வார்த்தைகள், அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று அனைத்துமே குழந்தைகள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூடாது

குழந்தைகள் மீது நீங்கள் எவ்வளவு பிரியம் வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களிடம் பல விதங்களில் வெளிப்படுத்த வேண்டும். வளர்ந்தவர்களுக்கே நீங்கள் ஒருவர் மீது அன்பாக இருக்கிறீர்களா இல்லையா என்பது வெளிப்படையாக சொன்னால் தவிர தெரியாது. அதனால், குழந்தைகளிடம் அவர்கள் மீதுள்ள அன்பை வார்த்தைகளால், செயல்களால் வெளிப்படுத்த வேண்டும்.

உங்களால் எதை செய்ய முடியுமோ அதை மட்டும் கூறுங்கள்

எல்லா பெற்றோருக்குமே தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும்படியான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும், குழந்தைகள் கேட்பது எல்லாம் வாங்கி தர வேண்டும், குழந்தைகள் பிடித்ததையெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு பெற்றோராக உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் செய்வதாக உறுதியளிக்கக்கூடாது.

உதாரணமாக நீங்கள் வெளியே கூட்டி செல்கிறீர்கள், ஏதேனும் ஒரு பொருள் வாங்கி தருகிறீர்கள், அல்லது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து விளையாடலாம் என்று கூறிவிட்டு அதை நீங்கள் செய்யவில்லை என்றால் அது உங்கள் ஃபால்ஸ் ப்ராமிஸ், அதாவது போலி கொடுத்ததாக ஆகிறது. எதையேனும் செய்வதாக சொல்லிவிட்டு, அதை செய்யவில்லை என்றால் உங்கள் மீது குழந்தைகளுக்கு அவநம்பிக்கை ஏற்படும். குழந்தைகள் மனதில் நீங்கள் நேர்மையற்றவர் என்று பதிய செய்யும்.

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்

ஒடுக்கமாக கட்டுப்பாட்டுடன் குழந்தைகள் வளரும் பொழுது, அவர்கள் டீன் ஏஜ் மற்றும் அடல்ட் ஆன பிறகு எல்லாவற்றிற்கும் எதிராக ஏதேனும் செய்து கொண்டிருப்பார்கள்; யார் எதை சொன்னாலும் அதை கேட்காமல் ‘ரிபல்’ போல இருப்பார்கள். எனவே குழந்தைகளை வளர வளர அவர்கள் விருப்பத்தின்படி பல விஷயங்களை நீங்கள் விட்டுவிட வேண்டும். குழந்தைகள் ஏதேனும் தவறாக செய்யும் பட்சத்தில் மட்டும் தவறு செய்வதை சுட்டிக்காட்டினால் போதும்.

குழந்தைகளை கிண்டல் செய்யக்கூடாது

கிண்டல், கேலி செய்வது அல்லது நையாண்டி நக்கல் செய்வது என்பது மிகவும் தவறான செயல். கிண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பெரிய அளவுக்கு மன ரீதியாக பாதிக்கப்படுவார்கள். பெற்றோர்களின் அல்லது பெரியவர்களின் கண்ணோட்டத்தில் ஒரு நகைச்சுவையாக தெரியும் ஒரு விஷயம் குழந்தைகளுக்கு மிகப்பெரிய அவமானத்தை உணரச் செய்யும். எனவே குழந்தைகளை எப்பொழுதுமே கிண்டல் செய்யக்கூடாது.

குழந்தைக்கு மரியாதை அளிக்கவும்

அந்தந்த வயதுக்கு உரிய மரியாதை என்று வரும் பொழுது குழந்தைகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு மரியாதை அளிப்பது எப்படி என்று யோசிக்கலாம். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களுக்கு எது பிடிக்கவில்லை என்று காது கொடுத்து கேட்பது கூட அவர்களுக்கு அளிக்கும் மரியாதைதான். சிறு குழந்தை தானே குழந்தை சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

எப்போதுமே பெற்றோராக புதிது புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்

பெற்றோராக உங்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் கிடைத்தாலும், உங்களுக்கு அனுபவங்கள் இருந்தாலும், குழந்தை வளர்ப்பில் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் அவ்வப்போது தெரிந்து கொள்வீர்கள். எனவே பெற்றோராக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பது உணர வேண்டும்.

குழந்தைகளுக்கான சுதந்திரம்

பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை இப்படித்தான் வளர வேண்டும், இதைத்தான் சாப்பிட வேண்டும், இது மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பலவிதமான வரையறைகளை உருவாக்கியுள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும். உங்கள் எல்லா விருப்பத்தையும் குழந்தைகள் மீது திணிக்க கூடாது.

மொபைல் பயன்பாட்டால் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு! - ஒரு கசப்பனுபவம் |

April 01, 2023 0

 இப்போது இருக்கின்ற தலைமுறையினரை எல்லாம் பெற்றோர்களை விட சினிமா , டிவி , இணையம் தான் அதிகம் வாழ்க்கை முறையை , நிஜத்தைக் கற்றுக் கொடுத்து வளர்க்கிறது.

இந்த தலைமுறை குழந்தைகள் பிறக்கும் போதே ஃபோனோட பிறக்கவில்லை அவ்வளவு தான்.

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் முடிவின் படி நான்கு மாத குழந்தை ஒரு நாளுக்கு சராசரியாக ஆறு மணி நேரம் டிஜிட்டல் திரையைப் பார்க்கிறதாம்.

இல்லைப்பா நாங்க எல்லாம் என் பிள்ளைய அப்படி வளர்க்கவில்லை. டிவி , ஃபோன் எதுவுமே கொடுக்கமாட்டோம்னு சொல்ற பெற்றோர்க்கு ஒரு கேள்வி , தங்கள் குழந்தைகளை வெளியூரில் இருக்கும் உங்கள் சொந்தங்களிடம் காணொளி அழைப்பின் மூலம் காட்டுனதே இல்லையா? , இல்லை அவர்களின் சின்ன சின்ன அழகிய தருணங்களை புகைப்படம் , காணொளி பதிவு என எடுத்ததே இல்லையா?

எனக்கு தெரிந்து இதற்கு பெரும்பாலான பெற்றோர்களுக்கு பதில் கூற முடியாது, ஏன் நான் உட்பட.

ஏன், இந்த தகவல் எனக்கு தெரியும் முன்னர் நானும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று காணொளி அழைப்பு , தினமும் ஒரு புகைப்படமாவது சொடுக்கிக் கொண்டு தான் இருந்தேன்.

நன்கு முதிரச்சி அடைந்த விழித்திரையைக் கொண்ட மனிதர் ஒருவரே அடிக்கடி டிஜிட்டல் திரையைப் பார்த்தால் கண் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

அப்படி பார்த்தால் இன்னும் வளரவே ஆரம்பிக்காத குழந்தையின் கண் பாவையின் (Retina) நிலை இத்தகைய டிஜிட்டல் ஒளிக்கற்றையால் என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள்.

இதோ போன மாதம் எனது தோழியின் மருத்துவமனையில் பத்து வயது சிறுமி கண் எரிச்சல் , வெள்விழி படலம் சிவந்து போய் உள்ளது என்ற பிரச்சனையோடு வந்தாராம்.

ஏதோ சாதாரண அலர்ஜி பிரச்சனையாக இருக்கும் என பரிசோதனைகளைச் செய்தவர்களுக்கு கடைசியில் முடிவாக பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.

டிஜிட்டல் ஒளி பட்டு பட்டு கண்ணின் உள் பகுதியில் புண் ஏற்பட்டு கடைசியில் அவரது பார்வை நரம்புகளை பாதித்து விட்டதாம். இனி அந்த சிறுமியின் பார்வைத்திறனை மீட்டுக் கொண்டு வர வழியில்லை. எனவும் அவருக்கு இப்போது மீதி இருக்கும் 20% பார்வைத் திறனை கெடாமல் பார்த்துக் கொள்வது அவர்களின் கைகளில் தான் உள்ளது எனவும் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த தாய் அழுத அழுகை பற்றி என் தோழி கூறிய போது சற்றே என் மனதில் கிலித் தோன்றியது உண்மை.

இப்போ இருக்கின்ற பிள்ளைகளுக்கு டிஜிட்டல் திரையைக் காட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் கல்வியிலும் ஒரு பகுதியாகி விட்டது.

சிறிய சிறிய மாற்றங்கள் செய்து அவர்களின் கண் பார்வையை காப்பாற்றலாம்.

கண்டிப்பாக இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அலைப்பேசியின் தொடுத்திரையில் உள்ள உருவம் தெளிவாக தெரியப் போவது இல்லை. அதை எதற்காக அவர்களின் முகத்தின் முன் காட்டி அவர்களுக்கு தொடுதிரையைப் பழக்கப்படுத்த வேண்டும். பேசாமல் பின் பக்க கேமராவின் வழியே அவர்களின் அசைவுகளையும் , அழகிய தருணங்களையும் உங்கள் சொந்தங்களிடம் காட்டினால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் , நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் கண்களும் உங்களுக்கு நன்றி சொல்லும்.

புகைப்படம் , காணொளி பதிவு செய்யும் போதும் அப்படியே சுயப்படமாக அதிகம் எடுக்காமல் பின் பக்க கேமராவைப் பயன்படுத்தியே அவர்களின் இயல்பான அசைவுகளை எடுங்கள். முக்கியமாக Flash light பயன்படுத்த வேண்டாம்.

உணவு ஊட்டும் போது தயவு செய்து டிவியோ , ஃபோனோ வேண்டாமே! அது அவர்களின் பசியையும் கவனிக்க விடாது. உடலையும் , மனதையும் இரண்டையுமே பாதிக்கும். முடிந்த வரையில் வேறு எதாவது முறையில் முயற்சி செய்து பார்க்கலாமே.

கண்டிப்பாக இன்று டிவியோ , ஃபோனோ பார்த்தே ஆக வேண்டும் என்ற சூழலில் , ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ஐந்து நிமிட இடைவேளி , அவ்வப்போது உள்ளங்கையை சூடுப்படுத்தி கண்களின் மீது வைத்து அதனை சாந்தப் படுத்தல் போன்றவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.

சித்திமும் கைப் பழக்கம் செந்தமிழும் நா பழக்கம் தானே

பழக்க பழக்க அவர்களே அதன் பகிமையைப் புரிந்துக் கொள்வார்கள்.


-Dr.Thabu


இந்தியாவில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க என்ன தகுதி வேண்டும்? முழுமையான விளக்கம்!

April 01, 2023 0

 யார் நினைத்தாலும் குழந்தையைத் தத்தெடுக்க முடியுமா, அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையை எப்படித் தத்தெடுப்பது என்பது குறித்து நம் வாசகர் கேட்ட கேள்விக்கான பதிலை, வழக்கறிஞர். பழனிமுத்து அவர்களிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் பின்வருமாறு:

Child Adoption in India
Child Adoption in India

1956 குழந்தை தத்தெடுப்புச் சட்டம் ஒன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, நாளடைவில் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க பல சீர்த்திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. அதன்படி, குழந்தைகள் இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்க தம்பதியினருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்ற பட்டியல்:

1) கணவனும் மனைவியும் இணைந்து எந்தக் குழந்தையை வேண்டுமென்றாலும் தத்தெடுக்கலாம். ஆனால், கணவன் (ஆண்) பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

அப்படிக் குடும்பத்தினரின் விருப்பத்துடன் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையைவிட அந்தக் குடும்பத் தலைவர் (கணவர்) 25 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.


2) 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.


3) கணவன் அல்லது மனைவி இவர்களில் யாராவது 55 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் அவர்கள் இருவரின் வயதையும் சேர்த்துக் கூட்டினால் 110 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4) 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம். ஆனால், 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்பினால் குழந்தைகளின் ஒப்புதல் கேட்டு அவர்களின் விருப்பப்படியே தத்தெடுக்க வேண்டும்.


5) குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் அக்குழந்தையை வளர்க்கும் தகுதியைக் காண்பிக்கும் விதமாக அவர்களின் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


6) குழந்தை தத்தெடுப்பு ஆதார மையத்தில் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புபவர்கள் அங்கு பதிவு செய்ய வேண்டும். அங்கிருந்து இவர்களுக்கு குழந்தையைத் தருவார்கள்.

வருமான சோதனை, உடல்நல சோதனை (எய்ட்ஸ்) என அனைத்தும் சரிபார்த்தபின் நீதிமன்றதில் மனுப் போட வேண்டும். நீதிமன்றத்தில் 'In camera proceedings' நடைபெறும்.

அதன்பின் இருவரின் வாக்குமூலத்தையும் பெற்ற பின் அவர்களுக்குத் தத்தெடுப்புச் சான்றிதழ் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.

7) நீதிமன்றச் சான்றிதழ் பெற்ற பின் அவர்கள் குழந்தையை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்கள் குழந்தையாக வளர்க்கலாம்.


CSIR – CECRI நிறுவனத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

April 01, 2023 0

 

CSIR – CECRI நிறுவனத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

CSIR-மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Senior Project Associate, Project Associate –I பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சென்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நிறுவனம்CSIR – CECRI
பணியின் பெயர்Senior Project Associate, Project Associate –I
பணியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி13.04.2023
விண்ணப்பிக்கும் முறைWalk-in-Interview
CSIR – CECRI காலிப்பணியிடங்கள்:

CSIR – CECRI தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Project Associate, Project Associate –I பணிகளுக்கென மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 35 முதல் 40 வரை இருக்க வேண்டும்.

CSIR – CECRI கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Ph.D / M.Sc / B.E/B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CSIR – CECRI ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.42,000/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

CSIR – CECRI தேர்வு செய்யப்படும் முறை:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR – CECRI விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரியில் CSIR – CECRI, Karaikudi (13.04.2023) அன்று நடைபெறும் Walk-in-Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


March 31, 2023

இந்திய விமானப்படையில் சேர அரிய வாய்ப்பு.. திண்டுக்கல் இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

March 31, 2023 0

 இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “இந்திய விமானப் படையில் 2023-24ம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கான வயது வரம்பு 26.12.2002 முதல் 26.06.2006-க்குள் பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். 31.03.2023ம் தேதி வரை agnipathvayu.cdac.inவழியாக விண்ணப்பிக்கலாம் . இதற்கான இணையவழி தேர்வு 10.05.2023 அன்று நடத்தப்படும்.

மேலும், கல்வித்தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . உடல் தகுதியைப் பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டி மீட்டர் உயரமும் பெண்கள் 152 சென்டி மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். இத்தேர்வானது எழுத்துத் தேர்வு உடற்தகுதித்தேர்வு, மருத்துவப் . பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. அக்னி வீரர் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு சுமார் 50.000 முதல் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இத்தேர்விற்கு பெருமளவில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பல்வேறு பணியிடங்களை நிரப்ப முடிவு! காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!

March 31, 2023 0

 GRI Dindigul Recruitment 2023: காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் (Gandhigram Rural Institute – GRI Dindigul) காலியாக உள்ள Guest Teacher/ Teaching Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 இந்த GRI Dindigul Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Masters Degree, M.Com, MA, MBA, Ph.D. தமிழ்நாடு அரசு வேலையில்  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29/03/2023 முதல் 10/04/2023 வரை GRI Dindigul Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Dindigul -யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த GRI Dindigul Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை GRI Dindigul நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த GRI Dindigul நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://www.ruraluniv.ac.in/) அறிந்து கொள்ளலாம். 

GRI Dindigul Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

GRI DINDIGUL ORGANIZATION DETAILS:

நிறுவனத்தின் பெயர்Gandhigram Rural Institute (GRI Dindigul)
காந்திகிராம கிராமிய நிறுவனம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.ruraluniv.ac.in/
வேலைவாய்ப்பு வகைTamilnadu Govt Jobs 2023
RecruitmentGRI Dindigul Recruitment 2023
GRI Dindigul AddressThe Gandhigram Rural Institute (Deemed to be University)
Gandhigram, Dindigul District,
Tamil Nadu, India. Pincode: 624 302

GRI DINDIGUL CAREERS 2023 FULL DETAILS:


பதவிGuest Teacher/ Teaching Assistant
காலியிடங்கள்Various பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதிMasters Degree, M.Com, MA, MBA, Ph.D
சம்பளம்விதிமுறைப்படி சம்பளம் கொடுக்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Jobs in Dindigul – Tamilnadu
தேர்வு செய்யப்படும் முறைநேரடி நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேரடி நேர்காணல்
முகவரிIndira Gandhi Block in GRI

GRI DINDIGUL RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

அறிவிப்பு தேதி: 29 மார்ச் 2023
கடைசி தேதி: 10 ஏப்ரல் 2023
GRI Dindigul Recruitment 2023 Notification & Application Form PDF

GRI DINDIGUL CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.ruraluniv.ac.in/ -க்கு செல்லவும். GRI Dindigul Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (GRI Dindigul Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ GRI Dindigul Recruitment 2023 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • GRI Dindigul Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • காந்திகிராம கிராமிய நிறுவனம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் GRI Dindigul Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • GRI Dindigul Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • GRI Dindigul Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • Q1. What is the GRI Dindigul Full Form?

    Gandhigram Rural Institute (GRI Dindigul)
    காந்திகிராம கிராமிய நிறுவனம்.

    Q2.GRI Dindigul Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

    The apply mode is Walkin .

    Q3. How many vacancies are GRI Dindigul Vacancies 2023?

    தற்போது, Various காலியிடங்கள் உள்ளன.

    Q4. What is the qualification for this GRI Dindigul Recruitment 2023?

    The qualification is Masters Degree, M.Com, MA, MBA, Ph.D

    Q5. What are the GRI Dindigul Careers 2023 Post names?

    The Post name is Guest Teacher/ Teaching Assistant

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news