Agri Info

Adding Green to your Life

April 4, 2023

தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை!

April 04, 2023 0

 Tamil nadu Government Jobs: மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமார் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 01.01.2023 அன்றைய நிலையில் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் (SC) ஆதிதிராவிட அருந்ததி இனத்தவர் (SCA) மற்றும் பழங்குடியின இனத்தவர்கள் 37 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் பிற்பட்ட முஸ்லீம் இனத்தவர் (BCM) 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (OC) 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

எனவே, மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன், தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையான அட்டை ஆகியற்றின் ஒளிநகல்களுடன் மண்டல் இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு), மண்டல இணை இயக்கும் (வேலைவாய்ப்பு)அலுவலகம், வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நிதிக்குழு வளாகம், திருச்சி, 620001 என்ற முகவரிக்கு 10.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவஞ்சல் மூவமாகவோ அவ்வது நேர வின்னப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 60 உதவி ஆசிரியர் பணியிடங்கள் : உடனே விண்ணப்பியுங்கள்

April 04, 2023 0

 RECRUITMENT OF ASSISTANT PROFESSOR: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்:

உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்:

முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; முன்னைவர் பட்டம் பெற்றவர்கள் (அல்லது) யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  (அல்லது) மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் (SLET) தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மாநில அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஏற்கனவே, பணியில் இருப்பின் (In- service candidates), துறை தலைவரால் வழங்கப்படும் "தடையின்மைச் சான்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Detailed Notification.

General Instructions

Application Form:

விண்ணப்பம் செய்வது எப்படி?  ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்ப படிவத்தினை https://www.tndalu.ac.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேவைப்படும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களையும், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம்  ரூ. 1,180 ஆகும். பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 590 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028” என்ற பெயரில் காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேர்வு இல்லை.. மாதம் ரூ. 30,000 வரை சம்பளம்.. திருவள்ளூர் மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை!

April 04, 2023 0

திருவள்ளூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பதவி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு Outsourcing  முறையில் அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு பணியில் ஈடுபடுத்த உள்ளது.



அமைப்பியல் துறையில் (Cryil Engineering) பட்டப்படிப்பு (RE) மற்றும் பட்டயப்படிப்பு (DIPLOMA) முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 05.04.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

நேர்காணலுக்கு கொண்டு வரவேண்டிய சான்றுகள்

கல்விச் சான்று (SSLC/HSC/D.C.E/B.E / B.Tech (CIVIL))

பள்ளி மாற்றுச் சான்று

இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை)

பணிமுன் அனுபவச்சான்று (3 ஆண்டுகள்)

கணினி கல்வித்தகுதி

ஓட்டுநர் உரிமம்

நேர்காணல் நடைபெறும் இடம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை   அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருவள்ளூர்,

தொலைபேசி 044 27663808

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

April 3, 2023

IRCTC Jobs; ரயில்வே வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

April 03, 2023 0

 இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் மற்றும் சுற்றுலா கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Hospitality Monitors

காலியிடங்களின் எண்ணிக்கை: 48

கல்வித் தகுதி : B.Sc. in Hospitality and Hotel Administration/ Hotel Management and Catering Science/ BBA/ MBA படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 30,000

Tourism Monitors

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுற்றுலா சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdf அல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் தேதி : 10.04.2023, 11.04.2023

நேர்காணல் நடைபெறும் இடம் : Institute of Hotel Management 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai – 600113.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdfல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


சுகாதாரத் துறைசம்பளம் : ரூ. 60,000 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2023 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023032822-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager)பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவமனை தர மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Masters in Hospital Administration Health Management / Public Health படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023032822-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 45 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பசுமைத் தோழர்கள், திட்ட நடத்துனர், இணை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Green Fellows

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 60,000 + 15,000

Programme Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


சென்னை குடிநீர் வாரிய வேலை… எழுத்துத் தேர்வு இல்லை… 108 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 76

Civil Engineering / Mechanical Engineering – 52

Electrical and Electronics Engineering – 24

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 9,000

Technician (Diploma) Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை: 32

Civil Engineering – 10

Electrical and Electronics Engineering – 22

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: 8,000

வயது தகுதி: 31.10.2022 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ ST/ OBC (NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/03/CMW_Notification_2023_24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


April 2, 2023

2674 சமூக நல அலுவலர் பதவி... பலரும் எதிர்பார்த்த வேலை அறிவிப்பு வெளியானது... உடனே விண்ணப்பியுங்கள்..!

April 02, 2023 0

 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக  உள்ள  2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்,  தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

1. சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant):

காலியிடங்கள்: 2674 (நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம் )

கல்வித் தகுதி:  ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2023, ஏப்ரல்  26 அன்றுவிண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில்  ( Computer Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.700ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023

தேர்வு அறிவிக்கை:  Social Security Assistant notification

2. சுருக்கெழுத்தர் பணி (stenographer (Group C) :

காலியிடங்கள்: 185

கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2023, ஏப்ரல்  26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை:  எழுத்துத் தேர்வு (Written test), சுருக்கெழுத்தர் திறன் தேர்வில்  ( Stenography Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.700ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. stenographer (Group C) Notification இங்கே பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news