Agri Info

Adding Green to your Life

April 5, 2023

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்?

April 05, 2023 0

 குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிப்பட்டுள்ள நிலையில், எந்த ரேங்க் வரை வேலை உறுதி செய்யப்படும் என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களிடத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் மூலம்,  கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும்,  பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.  முன்னதாக, கடந்த 2018 -2019 மற்றும் 2019 -2020 ஆண்டுகளுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 9,882 காலிஇடங்கள் நிரப்பப்பட்டன.

பணியிடங்கள்2018 -2020 குரூப் 4 தேர்வு (மொத்த காலியிடங்கள்  )2022 குரூப் 4 தேர்வு  (தற்போது அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் )
கிராம நிர்வாக அலுவலர்608425
இளநிலை உதவியாளர்48945,102
தட்டச்சர்28403,314
சுருக்கெழுத்தர் தட்டச்சர்10351,186
நில அளவையர்505 -

தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம் வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச் சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

கடந்தாண்டு, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நில அளவையர் என மூன்று பதவிகளையும் சேர்த்து  மொத்தம் 6,007 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த 6,007 பணியிடங்களுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank)   2607 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத  பிசி பிரிவில் முதல் 5,527 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 9,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 24,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 12,992 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 17,393 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 31,927 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இந்தாண்டு குரூப் 4 தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் பண்டக காப்பாளர் என மூன்று பதவிகளையும் சேர்த்து மொத்தம்  5,596 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மூன்று பதவிகளில், கடந்தாண்டை விட கிட்டத்தட்ட  411 பணியிடங்கள் மட்டுமே குறைவாக நிரப்பப்பட உள்ளன. எனவே, தற்போது கட் ஆஃப் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டச்சர் பணியிடங்கள் கட் ஆஃப் :

கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 2,840 தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது, 3,314 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank)  1,251 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத  பிசி பிரிவில் முதல் 4,499 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 4,130 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 14,688 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 6,366 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 10,831 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 15, 320வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்தாண்டு, தட்டச்சர் பதவிக்கு 474 காலியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்தாண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, இந்தாண்டு சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கும்  கூடுதலாக 474 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு: இன்னும் சில தினங்களில்,  எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும். இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணைய வழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள், அவ்வபோதைய நிலவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

April 4, 2023

நீங்கள் ஆரோக்கியமான உணவு என நினைத்து உண்ணும் இவை ஆரோக்கியமானது அல்ல.!

April 04, 2023 0

 இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு முறைகள் தான் உடல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறோம் என்று, பெயர் தெரியாத உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகள் போன்றவற்றால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது.

எனவே தான் நம்முடைய வாழ்வில் ஆரோக்கியமான உணவுமுறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதுவரை சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகள் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், இதை விட மோசமான சில உணவுகள் உள்ளது என்றும், இதுப்போன்றவற்றை கட்டாயம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க வேண்டும் என்கின்றார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டயட் இன்சைட் நிறுவனனருமான அமன் பூரி. ஆரோக்கியமான வாழ்விற்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.

மார்கரின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் : (Margarine and Refined oils) இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எண்ணெய்கள் பூஜ்ஜிய ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாக உள்ளது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் படிந்து உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமைகிறது.

பாக்கெட் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனி : பிஸ்கட், குக்கீஸ், நம்கீன், தானியங்கள், மியூஸ்லி, சிப்ஸ், பேக்கரி போன்றவற்றில் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும் போது உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்கிறது. மற்றும் உடல் பருமனும் ஒருபுறம் அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நாம் அதிகளவில் பயன்படுத்தும் போது, பல உடல் நலப்பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக பதப்பட்ட உணவுப்பொருள்களில் சோடியம் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் அதிகளவில் உள்ளதால், நாம் சாப்பிடும் போது நமக்கு சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்பட நாள்பட உடல் நலப்பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

வெள்ளை சர்க்கரை : ஜாம், ஜெல்லி, இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் பேக்கரி பொருள்களில் அதிகளவு வெள்ளை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதில் எந்தவித ஊட்டச்சத்துகளும் இல்லை. எனவே இதற்கு மாற்றாக எலுமிச்சை, இளநீர், பழங்கள், அத்திப்பழங்கள், தேன், வெல்லம், திராட்சை, உலர்ந்த பாதாமி பழங்கள் போன்றவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் நிறைவுற்ற கொழுப்புகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா, சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உங்களது உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையை குறைப்போர் கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்..!

April 04, 2023 0

 கோடைக்காலம் வந்தாலே.. எப்படியெல்லாம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் நிறைய ஏற்படும். இந்த நாட்களில் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதோடு அதிகப்படியான நொறுக்குத் தீனிகளையும் நாம் சாப்பிடுவோம்.

இதனால் ஒரு புறம் நம்முடைய உடல் எடை அதிகரிக்கிறது. இருந்தப் போதும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு கோடைக்காலம் தான் ஏற்றதாக கருதப்படுகிறது. குளிரோ, பனியோ இல்லாததால், கோடை காலத்தில் காலையிலேயே வாக்கிங் முதல் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை நாம் எவ்வித இடையூறு இல்லாமல் நம்மால் மேற்கொள்ள முடியும்.

இதோடு அதிகமான வியர்வையும் உடலிருந்து வெளியேறுவதால் வழக்கத்தை விட தண்ணீர் அதிகமாக பருகுவோம். அதிக தண்ணீர் அருந்துவதும் நம்முடைய உடல் எடை குறைப்பிற்கு சிறந்த வழியாக அமைகிறது. மேலும் ஆராய்ச்சிகளின் படி, அதிக வெப்பம், நமக்கு பசி உணர்வை ஏற்படுத்தாது என்பதால், குறைவாக சாப்பிடுகிறோம். எனவே நம்முடைய உடல் எடையும் குறைகிறது. எனவே கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு என்னென்ன ஆரோக்கிய உணவுளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

பெர்ரி : குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு சிறந்த பழமாக கருதப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூபெர்ரிகள், ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் போன்றவையும் ஆரோக்கியமான உடல் எடைக்குறைப்பிற்கு சிறந்த தேர்வாக உள்ளது.

தர்பூசணி : கோடைக்காலத்தில் மக்களால் அதிகம் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது தர்பூசணி. இதில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உடல் எடை குறைகக உதவியாக உள்ளது.

கீரை : முன்னதாக நடத்திய ஆய்வுகளின் படி, தினமும் கீரையை உட்கொள்பவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளை எரிக்கவும் உதவியாக உள்ளது.

கிரீன் டீ : வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்கு கிரீன் டீ உதவியாக உள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் காஃபின் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை கணிசமாக குறைய உதவியாக உள்ளது.

திராட்சைப்பழம் : திராட்சைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பண்புகள் உள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள என்சைம்கள் காரணமாக இது விரைவான எடை இழப்புக்கு உதவியாக உள்ளது.

இதோடு அதிக அளவு தண்ணீர் குடிப்பது, தினமும் உடற்பயிற்சியை மறக்காமல் மேற்கொள்வது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் நீங்கள் உங்களது உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகமாக வெளியே சுற்றுவதுதான் உங்கள் வேலையா..? கோடை வெயிலை சமாளிக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

April 04, 2023 0

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பலரது வேலை முறை வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வது, வெயிலில் வேலை செய்வது அல்லது தினசரி வேலைக்கு செல்வதற்காக வெயிலில் சில மணி நேரங்கள் பயணம் செய்வது என்று இருக்கிறது.

வெயில் மிகுந்த ஹாட் வெதர் கண்டிஷனில் தொடர்ந்து வேலை செய்வது ஆபத்தானது. இது ஒருகட்டத்தில் வெப்ப சோர்வு, ஹீட் கிராம்ப்ஸ் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பல வெப்பம் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே ஹாட் வெதர் கண்டிஷனில் பணிபுரியும் ஒருவர் தான் பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மிகுந்த வெயிலுக்கு மத்தியில் வேலை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் இங்கே..

ஹைட்ரேட்டாக இருங்கள் : வெப்பமான காலநிலையில் வேலை செய்பவர் நீங்கள் என்றால் வேலைக்கு முன், வேலை செய்யும் போது மற்றும் வேலை செய்து முடித்த பிறகு என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைய தண்ணீர் குடிப்பது உடல் டிஹைட்ரேட்டாகாமல் தடுக்க உதவும். அதே போல வேலை நேரங்களில் காஃபின், ஆல்கஹால் அல்லது சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்கவும், ஏனெனில் இவை உங்கள் உடல் டிஹைட்ரேட் -ஆக வழிவகுக்கும்.

சரியான முறையில் உடை : உங்கள் சருமம் சுவாசிக்க மற்றும் வியர்க்க அனுமதிக்கும் லைட்-வெயிட், லூஸ்-ஃபிட்டிங் மற்றும் லைட்-கலர்ட் ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள். அகலமான விளிம்பு கொண்ட தொப்பி மற்றும் சன்கிளாஸ்கள் பயன்படுத்துவது கடும் வெப்பத்தில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

தேவைப்படும் போது பிரேக் : உங்கள் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த மற்றும் உடல் அதிகம் சூடாவதை தடுக்க நேரம் கிடைக்கும் போது ஓய்வு வேண்டும் என நீங்கள் நினைக்கும் போது கூலிங்கான மற்றும் நிழலான பகுதியில் அடிக்கடி இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள் : சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஹை SPF கொண்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.

உடலை குளிரூட்டி கொள்ளுங்கள் : கடும் வெயில் காரணமாக உங்கள் உடலில் அதிகரிக்கும் வெப்பநிலையை குறைக்க ஈரமான துண்டுகள், ஃபேன்கள் அல்லது போர்ட்டபிள் ஏர் கண்டிஷனிங் யூனிட்ஸ் போன்ற கூலிங் கருவிகளை பயன்படுத்தவும்.

வெப்பம் தொடர்பான நோய்களின் அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்... வெப்ப சோர்வு, ஹீட் கிராம்ப்ஸ் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றின் அறிகுறிகள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்து கொள்வது பிரச்சனை ஏற்பட்டால் துரிதமாக செயல்பட உதவும். வெப்பம் சார்ந்த நோய்களின் அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

அதிக வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும்... வெப்பம் தொடர்பான நோயின் அபாயத்தைக் குறைக்க,கடும் வெயில் நிலவும் நேரத்தில் (பொதுவாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) வேலை செய்வதை தவிர்க்கவும் அல்லது போதுமான பிரேக் எடுத்து அவ்வப்போது வேலை செய்ய வெளியே செல்லலாம். மேற்காணும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், வெப்பம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் மற்றும் பாதுகாப்பாக இருக்கலாம்.

1. குளிர் பானங்களை அதிகமாக குடிக்காதீர்கள்

கோடை காலம் வந்தவுடன் மக்கள் முதலில் குளிர்பானம், பாக்கெட் ஜூஸ் போன்றவற்றை குடிக்கத் தொடங்குவார்கள். ஆனால், இது மாறாக நீரேற்றத்திற்கு காரணமாகிறது. இதன் காரணமாக உங்களின் உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், அவை செரிமான அமைப்பையும் பாதிக்கின்றன. குளிர்பானங்களில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வயிற்றில் ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது, இதன் காரணமாக வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான நொதிகள் பாதிக்கப்படுகின்றன.

2. அதிக காரமான, வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டாம்

காரமான மற்றும் வறுத்த உணவுகள் எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீங்கள் கோடையில் இதை சாப்பிட்டால், அது இன்னும் அதிக தீங்கு விளைவிக்கும். இது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. ஏனெனில் அத்தகைய உணவை ஜீரணிப்பது மிகவும் கடினம். இதனால், பித்தம் அதிகமாகி, உடல் உஷ்ணம் அதிகரித்து அதிக வியர்வை, நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலருக்கு சமருங்களில், பருக்கள் பிரச்சனையும் இருக்கலாம்.

3. கடினமான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்கவும்

கோடைக்காலத்தில் தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறும், தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்யும் போது, அது நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உடற்பயிற்சியில் இருந்து உங்களை விலக்கி வைக்காதீர்கள், லேசான உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை கவனிக்கும் வழிகள்

இந்த பருவத்தில், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். மேலும், பிரஷ் ஜூஸ்களை குடிக்கவும். இது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும் மற்றும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இரவில் எப்போதும் லேசான உணவை உண்ணுங்கள். அங்கே நிறைய தூங்குங்கள். உணவுடன் சாலட், தயிர் சாப்பிட மறக்காதீர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எந்த தேர்வும் இல்லை: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு

April 04, 2023 0

 

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வளப்பயிற்றுநர், (District Resource Person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB& CB) என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள்/முன்னுரிமை ஏதும் கோர இயலாது.

கல்வித்தகுதி:

Sociology, Social work, Social Work Management ஆகியவையில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்று, 6 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

(அல்லது)

ஏதேனும் ஒரு துறையில் பட்டத்துடன், சுய உதவிக் குழுக்கள் திட்டத்தின் கீழ்  சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு பணிகளில் குறைந்தது 8 ஆண்டு பணி முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

1. மேற்படி பணிக்கு விண்ணப்பம் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

2. விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி நிராகரிக்கப்படும். செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக

3. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

இணையவழி விண்ணப்பக் காலம் 31.03.2023 காலை 11.00 மணி முதல் 10-04-2023 மாலை 5.00 மணி வரை ஆகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.வேலைவாய்ப்பு அறிவிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 1லட்சம் வரை சம்பளம்... சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

April 04, 2023 0

 தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தலைமைச் செயலக  திட்ட மேலான்மை இயக்க அலகின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவிகாலியிடங்கள் எண்ணிக்கைதொகுப்ப்பூதியம்அடிப்படைத் தகுதிகள்
மூத்த ஆலோசகர்(senior consultant)11,25,000பொது நிர்வாகம்/சமூக அறிவியில்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 5 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆலோசகர்(Consultant)275,000பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 3 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
திட்ட மேலாண்மை உதவியாளர்(Project Management Assistant)230,000பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 2 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
கணினி இயக்குபவர் (Data entry operator)15,000ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு  பணியாற்றி இருக்க வேண்டும்

 இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின்அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.04.2023 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி;  The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15 ஆகும். 

மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, பணியின் இதர நிபந்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக்க கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை!

April 04, 2023 0

 Tamil nadu Government Jobs: மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமார் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 01.01.2023 அன்றைய நிலையில் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் (SC) ஆதிதிராவிட அருந்ததி இனத்தவர் (SCA) மற்றும் பழங்குடியின இனத்தவர்கள் 37 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் பிற்பட்ட முஸ்லீம் இனத்தவர் (BCM) 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (OC) 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

எனவே, மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன், தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையான அட்டை ஆகியற்றின் ஒளிநகல்களுடன் மண்டல் இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு), மண்டல இணை இயக்கும் (வேலைவாய்ப்பு)அலுவலகம், வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நிதிக்குழு வளாகம், திருச்சி, 620001 என்ற முகவரிக்கு 10.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவஞ்சல் மூவமாகவோ அவ்வது நேர வின்னப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 60 உதவி ஆசிரியர் பணியிடங்கள் : உடனே விண்ணப்பியுங்கள்

April 04, 2023 0

 RECRUITMENT OF ASSISTANT PROFESSOR: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 60 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்:

உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித் தகுதிகள்:

முதுநிலை பட்ட மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; முன்னைவர் பட்டம் பெற்றவர்கள் (அல்லது) யுஜிசி மற்றும் சிஎஸ்ஐஆர் நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்  (அல்லது) மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் (SLET) தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மாநில அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஏற்கனவே, பணியில் இருப்பின் (In- service candidates), துறை தலைவரால் வழங்கப்படும் "தடையின்மைச் சான்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

Detailed Notification.

General Instructions

Application Form:

விண்ணப்பம் செய்வது எப்படி?  ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்ப படிவத்தினை https://www.tndalu.ac.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேவைப்படும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களையும், தேவையான இதர ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான, விண்ணப்பக் கட்டணம்  ரூ. 1,180 ஆகும். பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 590 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை The Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028” என்ற பெயரில் காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேர்வு இல்லை.. மாதம் ரூ. 30,000 வரை சம்பளம்.. திருவள்ளூர் மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை!

April 04, 2023 0

திருவள்ளூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பதவி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு Outsourcing  முறையில் அதிகபட்சம் 6 மாத காலத்திற்கு பணியில் ஈடுபடுத்த உள்ளது.



அமைப்பியல் துறையில் (Cryil Engineering) பட்டப்படிப்பு (RE) மற்றும் பட்டயப்படிப்பு (DIPLOMA) முடித்து குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 05.04.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கீழ்கண்ட சான்றுகளுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை சேர்த்து அதிகபட்சம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

நேர்காணலுக்கு கொண்டு வரவேண்டிய சான்றுகள்

கல்விச் சான்று (SSLC/HSC/D.C.E/B.E / B.Tech (CIVIL))

பள்ளி மாற்றுச் சான்று

இருப்பிடச்சான்று (குடும்ப அட்டை/ஆதார் அட்டை/வாக்காளர் அடையாள அட்டை)

பணிமுன் அனுபவச்சான்று (3 ஆண்டுகள்)

கணினி கல்வித்தகுதி

ஓட்டுநர் உரிமம்

நேர்காணல் நடைபெறும் இடம்: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை   அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருவள்ளூர்,

தொலைபேசி 044 27663808

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

April 3, 2023

IRCTC Jobs; ரயில்வே வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

April 03, 2023 0

 இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் மற்றும் சுற்றுலா கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Hospitality Monitors

காலியிடங்களின் எண்ணிக்கை: 48

கல்வித் தகுதி : B.Sc. in Hospitality and Hotel Administration/ Hotel Management and Catering Science/ BBA/ MBA படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 30,000

Tourism Monitors

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுற்றுலா சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdf அல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் தேதி : 10.04.2023, 11.04.2023

நேர்காணல் நடைபெறும் இடம் : Institute of Hotel Management 4th Cross Street, CIT Campus, Taramani, Chennai – 600113.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://irctc.com/assets/images/Notification%20HM2023%20South%20Zone-Annex-II.pdfல்லது https://irctc.com/assets/images/Notification%20TM2023%20South%20Zone%20Annex-I.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


சுகாதாரத் துறைசம்பளம் : ரூ. 60,000 தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும். முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2023 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023032822-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager)பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மருத்துவமனை தர மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Masters in Hospital Administration Health Management / Public Health படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரியலூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2023/03/2023032822-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வேலை; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

April 03, 2023 0

 

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 45 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பசுமைத் தோழர்கள், திட்ட நடத்துனர், இணை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 15.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Green Fellows

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 60,000 + 15,000

Programme Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.environment.tn.gov.in/cmgfp என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news