Agri Info

Adding Green to your Life

April 12, 2023

இந்த விடுமுறைக்கு ஏற்ற பட்ஜெட் ஸ்பாட்... கிருஷ்ணகிரியின் வற்றாத அங்குத்தி அருவி..!

April 12, 2023 0

 வெயில் காலம் வந்துவிட்டால் சின்ன பறவை முதல் மனிதர்கள் வரை எல்லாருக்கும் தண்ணீர் என்பது எப்போதும் தேவைப்படும் ஒன்றாக மாறி விடுகிறது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் எப்போது கிடைக்கும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். இப்படியான நேரத்தில் ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள் அலறுகின்ற விசயம் உங்களுக்குத் தெரியுமா ?

ஆமாங்க, அந்த அருவிக்கு மேல காகம் பறக்கவே பயந்து நடுங்குதுன்னா பாருங்களேன். இதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் விட்ட சாபமே என்கின்றனர் சிலர். சரி அந்த அருவி எங்க இருக்கு, என்னவென்ன மர்மங்களையெல்லாம் கொண்டுள்ளது என்று தெரிந்துகொள்வோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து கெடகானூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் நிறைந்த அங்குத்தி அருவி பொங்கி வழிகிறது. வெயில் காலத்தில் பொதுவாக ஏரி, குளம், சுனை எல்லாம் வைத்தும் நேரத்தில் கூட  வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் பரவியுள்ள ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அங்குத்தி சுனை வற்றுவதில்லை.

பூமியில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வரும் இடத்தை தான் சுனை என்று கூறுவோம். அப்படி தண்ணீர் ஊறும்  5  நீர் நிலைகள் இங்கு உள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே ஐந்து நீர்வீழ்ச்சிக்கு பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 5 அருவிகளில் ஒன்றான பீமன் அருவியில்தான் பீமன் வனவாசத்தின்போது முட்டி போட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.அதே போல பாண்டவர்களின் தாயான குந்தி, மோர் கடைந்த இடமும் இந்த அருவியின் அருகேயே உள்ளது என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பாண்டவர்களின் பாதம், அருவியின் மேல் உள்ள பாறையில் உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் இங்குள்ள பாறையின் மீது ஒரு பெரிய பாம்பின் படிமம் உள்ளது.  புறநா கதைகளின் படி ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்களைக் கொல்ல பெரிய பாம்பு வந்தது. தூக்கத்தில் ஐவரும் பாம்பின் மீது புரண்டதால் பாம்பின் வடிவம் பாறையில் பதிந்துள்ளது என்று கூறுகின்றனர். இதன் உண்மை தன்மை எந்த அளவு என்று தெரியாது.

சரி முதலில் சொன்ன காகத்தின் கதைக்கு வருவோம். ஒரு முறை பாண்டவர்களில் ஒருவரான பீமன் தவத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது பூணூலை காகம் ஒன்று தீண்ட முயன்றுள்ளது. தவம் கலைந்த பீமன், காக்கைக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணத்தினாலேயே அங்குத்தி அருவி மீது காகம் பறக்கவும், அருவி நீரை குடிக்கவும் அஞ்சுகிறது என்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம். ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம், கெடகானூர் சென்று காட்டு வழியில் நடந்து சென்றால் அங்குத்தி அருவியை அடையலாம். அருவி மட்டும் அல்லாமல்,  இங்கே 1000 ஆண்டுகள் பழமையான ஒரு திரௌபதி அம்மன் கோவிலும் உள்ளது.

ஜவ்வாது மலையில் மூலிகை மரங்கள் இடையே ஊடுருவி வரும் இந்த நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. அதோடு கோடையிலும் வற்றாமல் ஓடும் இந்த அறிவிக்கும் சுனைக்கும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பாறைகள் மெது தண்ணீர் படந்துகொண்டே இருப்பதால் பாசம் பிடித்து இருக்கும். நடக்கும்போது கவனம் தேவை.இங்கே வரும் பார்வையாளர்களிடம் ரூ.30 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300 ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும். அந்த பேக்கேஜைப் பெற https://www.forests.tn.gov.in/pages/view/anguthai-jonal-fals இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்.

கோடை விடுமுறையில் வர இறுதி சுற்றுலாவிற்கு குழந்தைகளை அழைத்துச்செல்ல ஏற்ற இடமாக இது நிச்சயம் இருக்கும். சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவிக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். அதற்கு ஏற்றார்போல் உங்கள் பயண திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பார்க்கின்சன் நோய் எப்படி உருவாகிறது..? இதற்கு என்ன காரணம்..?

April 12, 2023 0

 பார்க்கின்சன் நோய் என்பது நமது நரம்பு அமைப்பினை பாதிக்கக்கூடிய ஒரு உடல்நலக்கோளாறு ஆகும். இதன் காரணமாக இது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் உடல் உறுப்புகளை மெதுவாக சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதற்கான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் மிகக்குறைவாகவே காணப்படும். ஒரு கைகளில் மட்டும் நடுக்கத்தை ஒருவர் உணரலாம். நாளாக நாளாக உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பின்னடைவு ஏற்படுகிறது. இந்த பதிவில் பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள், ஆபத்துக் காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பார்க்கலாம்.

அறிகுறிகள்:

பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் மிகவும் மிதமாக இருப்பதால் அவற்றை கண்டறிய முடியாமல் போகலாம். உடலின் ஒரு புறத்தில் மட்டுமே தெரிய ஆரம்பிக்கும் இந்த அறிகுறிகள் காலப்போக்கில் இருபுறமும் உணரப்படுகிறது. பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் பின்வருமாறு..

*நடுக்கம்: எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் கூட கைகளில் நடுக்கம் ஏற்படும். ஏதேனும் வேலை செய்யும் போது இந்த நடுக்கம் குறையலாம். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை தேய்க்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.

*உடல் இயக்கத்தில் தோய்வு: நீங்கள் சாதாரணமாக செய்து கொண்டிருந்த வேலை கூட இப்போது கடினமாக தோன்றலாம். நடப்பது, சேரில் இருந்து எழுந்திப்பது போன்ற சிறு சிறு விஷயங்கள் கூட உங்களுக்கு சிரமத்தை அளிக்கலாம்.

*இறுக்கமான தசைகள்: தசைகளில் ஒரு வித இறுக்க உணர்வு ஏற்படும். இது வலியை உண்டாக்கும்.

*தோரணை மற்றும் உடலை பேலன்ஸ் செய்வதில் சிக்கல்:

நேரான உடல் தோரணை மாறி கூன் விழுந்த தோரணை ஒருவருக்கு ஏற்படலாம். உடலை பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழ நேரலாம்.

*தன்னியக்க செயல்பாடுகளை செய்ய முடியாமல் போதல்:

சிமிட்டுதல், சிரிப்பது மற்றும் நடக்கும் போது கைகளை வீசுவது போன்ற செயல்பாடுகளை செய்வதில் சிக்கல் எழலாம்.

*பேசுவதில் பிரச்சினை:

ஒருவர் வழக்கத்தை விட மெதுவாக பேச ஆரம்பிக்கலாம் அல்லது பேசுவதற்கு தயங்கலாம்.

*எழுதுவதில் சிக்கல்:

பேனா பிடித்து எழுவது சிரமமாக தோன்றும். மேலும் எழுத்துக்கள் முன்பை விட சிறியதாக இருக்கும்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடை ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பின்வரும் சில விஷயங்கள் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

*மரபணுக்கள்: மரபணுவில் ஏற்படும் ஒரு சில மாற்றங்கள் பார்க்கின்சன் நோய்க்கு வழிவகுக்கலாம்.

*சுற்றுச்சூழல் தூண்டுதல்கள்: ஒரு சில நச்சுகள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஆபத்துக் காரணிகள்:

பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடைய ஒரு சில ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு..

*வயது: இந்த நோய் பெரும்பாலும் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. இள வயதில் பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

*மரபுவழி: உங்கள் நெருங்கிய சொந்தத்திற்குள் இருக்கும் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

*பாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிக அளவில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

*நச்சுக்களிடம் வெளிப்படுவது: பூச்சி கொல்லிகள் போன்றவற்றின் வெளிப்பாடு பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

தடுப்புமுறை:

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் அறியப்படாததால் இதற்கான தடுப்பு முறையும் ஒரு புதிராகவே உள்ளது. எனினும், காபி, டீ, கிரீன் டீ, கோலா போன்ற காபின் கலந்த பானங்களை குடிப்பது பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 6, 2023

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடக்கப்போகுதாம்!

April 06, 2023 0

 Alagappa University Notification 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MSc. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.04.2023 முதல் 11.04.2023 வரை Alagappa University Jobs அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Karaikudi-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த Alagappa University Job Vacancy 2023-க்கு, நேர்காணல் (Walk-in) முறையில் விண்ணப்பதாரர்களை Alagappa University ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த Alagappa University நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.alagappauniversity.ac.in) அறிந்து கொள்ளலாம். 

நிறுவனத்தின் பெயர்அழகப்பா பல்கலைக்கழகம் – (Alagappa University)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.alagappauniversity.ac.in

RecruitmentAlagappa University Recruitment 2023
Alagappa University AddressAlagappa Puram, Karaikudi, Tamil Nadu 630003

ALAGAPPAUNIVERSITY.AC.IN RECRUITMENT 2023 FULL DETAILS:

பதவிProject Fellow
காலியிடங்கள்15 பணியிடங்களை வெளியிட்டுள்ளது
கல்வித்தகுதிMSc
சம்பளம்மாதாந்திர சம்பளமாக ரூ.12,000 வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Jobs in Karaikudi – Tamil Nadu
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Walk-in)
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் (Walk-in)

ALAGAPPA UNIVERSITY RECRUITMENT 2023 PDF IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 05 ஏப்ரல் 2023
கடைசி தேதி: 11 ஏப்ரல் 2023
Alagappa University Recruitment 2023 Official Notification

ALAGAPPA UNIVERSITY CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?


  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.alagappauniversity.ac.in -க்கு செல்லவும். Alagappa University Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (Alagappa University Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Alagappa University Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Alagappa University Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • அழகப்பா பல்கலைக்கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Alagappa University Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • Alagappa University Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு

April 06, 2023 0

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிப் பணியிடங்களுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

தகுதியான பட்டதாரிகள் இணையம் வழியாக மே 3 வரை விண்ணப்பிக்கலாம். உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் 1.30 லட்சம் காவலர் பணியிடங்கள்... வெளியானது முக்கிய அறிவிப்பு..!

April 06, 2023 0

 இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) கான்ஸ்டபிள் (General Duty) பதவிக்கான  ஆட்சேர்ப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை விதிமுறையின்  கீழ் 2023ல், 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் 10% இடங்கள் அக்னி வீரர்களுக்கு  ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி  வாரியத்தில் 10, +2 அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18- 23க்குள் கீழ் இருக்க வேண்டும் என்றும், பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல்  5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வில் பங்கேற்பவர்களின் வயது வரம்பை தீர்மானிக்கும் தேதியை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் என்றும், அக்னிபத் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த முதல் குழுவினருக்கு (First Batch of Ex- Agniveers)  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல்  5 ஆண்டு வரை வயது சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கான்ஸ்டபிள் பதவிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை  சம்பளம் கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test) மூலம் நியமன முறை இருக்கும் என்றும், முன்னாள் அக்னி வீரர்களுக்கு  உடற் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ((ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பில்,  காலியிடங்களின் முழு விவரம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தெளிவாகக் கொடுக்கப்படும்.  

இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள் சேர்க்கையாக கருதப்படுகிறது. எனவே, காவலர் வேலையை கனவாக கொண்ட  இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் காவல் படை இணையதளத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.        

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

April 5, 2023

எலும்புகளுக்கு நன்மை அளிக்கும் உணவுகள்... தீமை தரும் உணவுகள் - எவை எவை?

April 05, 2023 0

 Good And Bad Foods For Bones: வயது வந்தோருக்கு அவர்களின் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறினார். நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மோசமான எலும்பு ஆரோக்கியம் ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பிற்கால வாழ்க்கையில், எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான எலும்புகளுக்கு பால் மட்டும் தீர்வு அல்ல. நமது தினசரி உணவில் போதுமான அளவு கால்சியம் சத்தை வழங்குவதற்கு, எலும்புகளை வலுப்படுத்தும் சில உணவுகளும் தேவை. அதன் பின்வரும் பட்டியல் காணலாம்.

நம் உடலை பலப்படுத்தும் உணவுகள்:

- தினமும் 50 கிராம் கீரையுடன், 6 கேரட்களை சேர்த்து ஜூஸாக அடித்து ஒரு கிளாஸ் அருந்தவும். இதில் தோராயமாக 300 மி.கி கால்சியம் உள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
- ராஜ்மா, காபூலி சனா, கருப்பட்டி, குலீத் போன்ற முழு பருப்பு வகைகளிலும், 100 கிராம் பருப்பில் 200 முதல் 250 கிராம் வரை கால்சியம் உள்ளது.

- தினமும் 2-3 தேக்கரண்டி வெள்ளை மற்றும் கருப்பு எள் சாப்பிடுங்கள்.
- கீரை, கோஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
- போதுமான புரதங்களை உட்கொள்வதும் அவசியம். முட்டை, நட்ஸ் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்தவை.
- சிட்ரஸ் நிறைந்த உணவு, உங்கள் உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமாகும். பெர்ரி, ஆரஞ்சு திராட்சைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை:

- அதிக சோடியம் உள்ள உணவுகள்
- சர்க்கரை அதிகம் உள்ள தின்பண்டங்கள்
- கார்பனேற்றப்பட்ட பானங்கள்: அவை சர்க்கரை மற்றும் காஃபின் நிறைந்தவை மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் பாஸ்போரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன.
- இறைச்சியின் புரதத்தை அதிகமாக உட்கொள்வதும் நல்லதல்ல.
- அதிக காஃபின் உள்ளடக்கம் அல்லது அதிகப்படியான காபி, தேநீர் குடிப்பதாலும் எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பு ஏற்படலாம். 
- புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு கால்சியம் குறைவதற்கு வழிவகுக்கிறது. 

எலும்புகள் முக்கியமாக கால்சியத்தால் ஆனவை மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை ஒருவர் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். இவை தவிர, உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையும் எலும்பு அடர்த்தியை பாதிக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இதய செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகள்..! இந்த 5 விஷயங்களை புறக்கணிக்காதீர்கள்

April 05, 2023 0

 உங்கள் மோசமான வாழ்க்கை முறையால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உணவு முதல் அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் இதய செயலிழப்புக்கான காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இதய நோய் உலகம் முழுவதும் ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி வருகிறது. சுமார் 6.4 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வயது வந்தோரில் 1 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் நம் நாட்டில் மிக அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதய செயலிழப்பு ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இதில் இதய உறுப்புகள் பலவீனமடைகின்றன. இதயம் அதன் இயல்பான வேலையைச் செய்ய முடியாது. இதய நோய்க்கு நீண்டகாலமாக ஏதேனும் ஒரு மரபணு நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சில ஆபத்தான மருந்துகளின் பயன்பாடு, நரம்பியல் நோய்கள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

இதய செயலிழப்பு அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் சோர்வு, மூச்சுத் திணறல், மார்பு வலி, வயிற்று அசௌகரியம் மற்றும் வியர்வை போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருக்கலாம். இந்த நோய் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானது. இதய நோயைக் கருத்தில் கொள்ளும்போது, ​​ஒரு நபரின் வயது, நிலை மற்றும் தொற்று ஆகியவை இதய நோயின் அறிகுறிகளில் வேறுபடலாம்.

மூச்சுத் திணறல் - இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான நோயாளிகள் இரவில் தூங்கும் போது அதிக ஓய்வில் உள்ளனர். இந்த அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது ஒரு தீவிர நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

வீக்கம் - இதய நோய் நோயாளிகளுக்கு வீக்கம் பொதுவானது. இந்த வீக்கம் ஒரு மூட்டு அல்லது காலில் மட்டுமல்ல, உடல் முழுவதும் காணப்படுகிறது.

வயிறு பிரச்சனைகள் - இதய செயலிழப்பு காரணமாக, நோயாளிகள் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்தப் பிரச்சனைகளில் வயிற்றுப் புண், வாந்தி அல்லது வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

மார்பு வலி - இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி மார்பு வலியை அனுபவிக்கிறார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

April 05, 2023 0

 உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாட வாழ்வில் சிறந்த உணவு முறையை பின்பற்றுகிறோம். அந்த ஆரோக்கியத்தை முழுமையான பெற பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் எதனுடன் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. அந்த வகையில் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை தரும் ஆம்லா அர்ஜுனா ஜூஸ் எனப்படும் நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஜூஸ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது :  நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஜூஸ் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதில் இருந்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை நீக்குவது வரை பலவித நன்மைகளை செய்கிறது. இதில் உள்ள அர்ஜுன்ஜெனின், அர்ஜுனாலிக் அமிலம் மற்றும் பாலி பெனால்ஸ் ஆகியவை இதய தசைகளை வலுப்படுத்துகின்றன. இதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புக்களையும் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இந்த அர்ஜுன் ஆம்லா ஜூஸில் உள்ள நெல்லிக்காய்  சாறு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் சி உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

செரிமானத்திற்கு உதவுகிறது: செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் ஆம்லா அர்ஜுன் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். வீட்டிலேயே இந்த ஜூஸை தயாரித்து சேமித்து வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டில் அடைக்கப்பட்ட ஜூசை பயன்படுத்தினால் 30எம்எல் அளவில் ஒரு கிளாசில் ஊற்றிக் கொண்டு, பிறகு அதன் மீதமுள்ள முக்கால் பகுதியில் மிதமாக சூடாக்கப்பட்ட நீரை ஊற்றி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: இந்த ஜூஸை தினசரி குடிப்பதால் நம்முடைய சருமத்தை மிகவும் பளபளப்பாகவும், தெளிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளினால் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்யவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது.

ஆம்லா அர்ஜுன் ஜூஸ் முறை : தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் - ஒரு கப், மருத மரப்பட்டை - ஒரு துண்டு, தேன் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - இரண்டு கப். செய்முறை: முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி அதனை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து ஒரு மஸ்லின் துணியை எடுத்து ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 20 மில்லி லிட்டர் அளவிலான ஜூஸ் ஆவது வரும் வரை நீங்கள் அதனை பிழிய வேண்டும்.

பிறகு இரண்டு கப் அளவில் நீரை எடுத்து கொண்டு அடுப்பின் தீயை அதிகமாக வைத்து சூடாக்க வேண்டும். இப்போது அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள மருத மர பட்டைகளையும் சேர்த்து நீரானது பாதி அளவு குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அந்த நீரை எடுத்து நம் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள நெல்லிக்காய் ஜூஸுடன் சேர்த்து கலக்க வேண்டும். அதனோடு தேனையும் கலந்து ஆறவிட்டபின் பருகலாம். இதனை மிதமான சூட்டுடைய நீருடன் கலந்து குடிப்பது இன்னும் அதிக நன்மைகளை கொடுக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பன்னீர் அல்லது சிக்கன்... இரண்டில் எது சிறப்பானது?

April 05, 2023 0

 பன்னீர் மற்றும் போன்லெஸ் சிக்கன் ஆகிய இரண்டையும் 65 செய்து அருகருகே வைத்துவிட்டு, சற்று தொலைவில் இருந்து பார்த்தால் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. துண்டு, துண்டுகளாக வெட்டி சமைத்து விட்டால் இரண்டுக்குமான உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், பன்னீர் சைவ உணவு பிரியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. அதேபோல அசைவ உணவுப்  பிரியர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக சிக்கன் உள்ளது.

தோற்றத்தில் ஒன்றுபோல இருந்தாலும் பன்னீர் மற்றும் சிக்கன் இடையே சுவை, மனம் உள்பட பல வகைகளில் வேறுபாடு உண்டு. பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இதில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை உண்டு. ஆஸ்த்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பன்னீர் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைவ பிரியர் என்றால் இது ஒன்றுதான் உங்களுக்கு சிறப்பான தேர்வு.

மெல்லிய இறைச்சியாக கருதப்படும் சிக்கனில் அமினோ அமிலங்கள் நிறைய இருக்கின்றன. சிக்கன் சாப்பிட்டால் நமது எலும்பு மற்றும் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் அசைவ பிரியர் என்றால் பன்னீர் அல்லது சிக்கன் எது சிறப்பானது என்ற குழப்பம் உங்களுக்கு வரக் கூடும்.

புரதச்சத்து : உங்களுக்கு மிகுதியான புரதச்சத்து தேவைப்படும் பட்சத்தில் சிக்கனைத் தான் தேர்வு செய்ய வேண்டும். சிக்கன் சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். அதே சமயம், பன்னீரிலும் புரதச்சத்து குறைவில்லாமல் இருக்கிறது. 100 கிராம் அளவு சிக்கனில் 31 கிராம் புரதமும், 100 கிராம் அளவு பன்னீரில் 20 கிராம் அளவு புரதமும் இருக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் : சிக்கனில் விட்டமின் பி12, நியசின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. பன்னீரில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்துடன் ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் அவசியம். இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்ள கால்சியம் உதவுகிறது.

கலோரிகள் : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிக்கன் நல்ல தேர்வாக அமையும். 100 கிராம் அளவு சிக்கனில் 165 கலோரிகள் உள்ளன. ஆனால், 100 கிராம் அளவு பன்னீர் எடுத்துக் கொண்டால் அதில் 265 கலோரிகள் முதல் 320 கலோரிகள் வரை உள்ளன.

எது சிறப்பானது? ஃப்ரீசரில் வைத்த சிக்கனை வாங்கக் கூடாது. நீங்கள் வாங்கும் சிக்கன் அப்போது ஃபிரெஷ்ஷாக நறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் ஆண்டிபயாடிக் இல்லா சிக்கனை தேர்வு செய்ய வேண்டும். அதுவே பன்னீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம். உடனடி ருசிகர சமையலுக்கு பன்னீர் உதவியாக இருக்கும்.

எது ஆரோக்கியமானது? புரதச்சத்தை பொருத்தவரையில் இரண்டுமே நல்ல தேர்வு தான். கொழுப்பு குறைந்த உணவை தேர்வு செய்ய விரும்பினால் சிக்கனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அதேசமயம், இரண்டு உணவுகளுமே உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip