மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர் வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
Lower Division Clerk (இளநிலை எழுத்தர்) - 1;
Cook (சமையலர்) - 2;
பல்நோக்குப் பணியாளர் (MTS -Messenger ) - 7
பல்நோக்குப் பணியாளர் (MTS Garderner) - 2
கல்வித் தகுதிகள்: இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதர அனைத்து பதவிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிகளுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள
ஊதிய விவரம்: எழுத்தர் பதவிக்கு ரூ.19,900/- சமையலர் பதவிக்கு ரூ.19,900/-, பல்நோக்குப் பணியாளர் MTS (Messenger) - ரூ.18,000/-, பல்நோக்குப் பணியாளர் MTS (Gardener) - ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://indianarmy.nic.in/- ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னையில் உள்ள ’Island Grounds’-ல் நடைபெறுகிறது. ஆள்சேர்க்கை அறிவிப்பை இந்த இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Click here for latest employment news