Agri Info

Adding Green to your Life

April 12, 2023

சமூக அக்கறை கொண்ட இளைஞரா நீங்கள்? - மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் பெறும் வாய்ப்பு!

April 12, 2023 0

 மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய இளையோர் படை (National Youth Corps - NYC) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலராக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, மாதம் ரூ. 5000 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய இளையோர் படையில் சேர் ஆர்வமுள்ள  இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அம்மாவட்ட தேசிய இளையோர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 1 2023 அன்று, 18 முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்..

தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்கள், மக்களின் ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், மற்றும் இதர சமூகப் பிரச்சனைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அவசர காலங்களில் மத்திய/மாநில அரசு நிர்வாகங்களுக்கு துணை புரிதல், திட்டங்களை செயல்படுத்த உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் காலம் 2 ஆண்டுகள் ஆகும். மாதம் ரூ. 5000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்  நேரு இளைஞர் மைய அமைப்பு (Nehru Yuva Kendra Sangathan -NYKS) https://nyks.nic.in/NationalCorps/nyc.html இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர நிபந்தனைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. (அல்லது) நாகப்பட்டினம் மாவட்ட அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:
  • முதலில்https://nyks.nic.in/NationalCorps/nyc.html என்ற அதிகாரபூர்வ இணையதளபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • Apply for NYV Selection  தேர்வு செய்து உள் நுழையவும்
  • அதில் உங்களது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்து உள் நுழையவும்.
  • அதனை தொடர்ந்து வரும் பக்கத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தில் கல்வித்தகுதி, முகவரி, வயது, வேலை அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
  • இறுதியாக விவரங்களை சரிபார்த்து ‘SAMIT’ கொடுக்கவும். பிறகு உங்களது இ – மெயில் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ITI தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

April 12, 2023 0

CPRI- ல் Engineering Officer வேலைவாய்ப்பு 2023 – 99 காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute) ஆனது Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கென காலியாக உள்ள 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Bachelor’s Degree in Engineering / B.Sc / Diploma in Engineering / ITI / BA/ BSc. / B.Com/ BBA / BBM / BCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level – 7 (Rs. 44,900 – 1,42,400) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Engineering Officer Grade 1 – Level – 7 (Rs. 44,900 – 1,42,400)
  • Scientific Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Engineering Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Technician Grade 1 Level – 2 (Rs. 19,900– 63,200)
  • Assistant Grade II Level – 4 (Rs. 25,500 – 81,100)
CPRI விண்ணப்ப கட்டணம்:
  • Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant – ரூ.1000/-
  • Technician Gr.1, Assistant Gr. II – ரூ.500/-
  • SC/ST/PwBD/Ex-servicemen/women – கட்டணம் இல்லை.
Technician தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.04.2023ம் தேதிக்கு போன் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

April 12, 2023 0
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-04-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNRD Thoothukudi காலிப்பணியிடங்கள் :

ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் தூத்துக்குடி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 21-ஏப்-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

  Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Coal india limited நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,05,000/- ஊதியம்!

April 12, 2023 0

 

Coal india limited நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,05,000/- ஊதியம்!

Coal india limited நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Advisor, Technical Secretariat, Chairman Office பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Coal india limited காலிப்பணியிடங்கள்:

Coal india limited நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Technical Secretariat, Chairman Office பணிகளுக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coal india limited வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Coal india limited கல்வி தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Coal india limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,05,000/- ஊதியம் வழங்கப்படும்.

Coal india limited தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlist / Personal talk மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Coal india limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நேர்காணல் மட்டுமே: ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000 சம்பளத்தில் வேலை

April 12, 2023 0

 

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர் (Engagement of veterinarians)

காலியிடங்கள் எண்ணிக்கை: 3

கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். இருசக்கர (அல்லது) நான்கு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதி  படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம்:

The General Manager,

Dindigul District Co-operative Milk Producers Union Ltd.,

No.8, East Govinthapuram,

Dindigul – 624 001.

தொலைபேசி எண்கள்: 0451 – 2431516 Fax : 2430480.

மின்னஞ்சல் முகவரி– aavindigl@gmail.com

இணையதளம் – www.aavindindigul.com

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஒப்பந்த காலம் ஓராண்டாகும். 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்... மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை...!

April 12, 2023 0

 மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர் வரும் ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: 

Lower Division Clerk (இளநிலை எழுத்தர்) - 1;

Cook (சமையலர்) - 2;

பல்நோக்குப் பணியாளர் (MTS -Messenger ) - 7 

பல்நோக்குப் பணியாளர் (MTS Garderner) - 2

கல்வித்  தகுதிகள்: இளநிலை எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இதர அனைத்து பதவிகளுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிகளுக்கு,  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்  மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள

ஊதிய விவரம்:  எழுத்தர் பதவிக்கு  ரூ.19,900/- சமையலர் பதவிக்கு ரூ.19,900/-, பல்நோக்குப் பணியாளர் MTS (Messenger) - ரூ.18,000/-, பல்நோக்குப் பணியாளர்  MTS (Gardener) - ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி? இந்திய ராணுவத்தின்  அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  https://indianarmy.nic.in/-  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 தேர்வு நடைபெறும் இடம்சென்னையில் உள்ள ’Island Grounds’-ல் நடைபெறுகிறது. ஆள்சேர்க்கை அறிவிப்பை இந்த இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நாள் ஒன்றுக்கு ரூ.1000 சம்பளம்... தமிழக அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு

April 12, 2023 0

 தமிழக அரசின் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் இல்லத்தில் உளவியல் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான 2 பணியிடங்கள் மதிப்பூதியம் (Honorarium) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும் தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள், 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய அனைத்து சான்றிதழ்களுடன் (ஒளி நகல்கள்) 20-04-2023 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களை கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம் மாதத்தில் ஐந்து தினங்களுக்கு (நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம் மட்டும்) வழங்கப்படும் இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317, கே.டி.எஸ். மணி தெரு, மாமல்லன் நகர், (மாமல்லன் மேல்நிலைப் பள்ளி அருகில்), காஞ்சிபுரம் – 631 502. தொலைபேசி எண் 044-27234950

இவ்வாறுமாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Jobs: ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்... ஏதேனும் டிகிரி இருந்தால் போதும்!

April 12, 2023 0

 TNPSC Recruitment: தமிழ்நாடு சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை: உதவி சிறை அலுவலர்: ஆண்கள்(54), பெண்கள் (5)

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023  அன்று 18 -32  வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,30,400 வரை சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது (Level-11)

தேர்வு முறை:   எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட  ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம்: எழுத்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்னைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  அதிகாரப்பூர்வமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்பு மட்டும் போதும்... ரூ.15,700 சம்பளம்.. சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

April 12, 2023 0

 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  (சென்னை தெற்கு) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு பட்டியல் இனத்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.35/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 8.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க  வேண்டிய முகவரி;

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

தேர்வாணையச் சாலை,

வ.உ.சி.நகர், பூங்கா நகரம்.

சென்னை (தெற்கு) .

நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல் (அ) வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

உங்கள் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியானவர்களாக வளர்க்க விரும்புகிறீர்களா..? உங்களுக்கான டிப்ஸ்..!

April 12, 2023 0

 ஒவ்வொரு பெற்றோருக்கும் வாழ்க்கையில் மிகவும் சவாலான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குழந்தை வளர்ப்புதான். அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் நன்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள கூடியவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருப்பினும் குழந்தைகளை எப்போதும் மகிழ்ச்சியாக வளர்ப்பது என்பது பெற்றோருக்கு அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு பொறுமை, அர்ப்பணிப்பு மற்றும் சரியான பேரன்டிங் டெக்னிக்ஸ் தேவை. தொழில்நுட்பமும், கவனச்சிதறல்களும் பெருகிவிட்ட இன்றைய உலகில், ஒருவர் சிறந்த பெற்றோராக இருப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது.

வலுவான உறவுகளை உருவாக்குவது, குழந்தைகளின் சுயமரியாதையை வளர்ப்பது மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளை ஊக்குவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதால் பாசிட்டிவ் பேரன்டிங் டெக்னிக்ஸ் பிரபலமாகி வருகின்றன. பெற்றோருக்குரிய இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் நேர்மறை கண்ணோட்டத்தை வளர்க்க, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்களே சமாளிக்க மற்றும் மற்றவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்க உதவுகின்றன.

மகிழ்ச்சியான மற்றும் நம்பிக்கையான குழந்தைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள நுட்பங்கள் இங்கே..

ஒரு மனிதனாக அன்றாடச் சிக்கலில் சிக்கி கொள்வதும், அதனால் நிகழ்காலத்தை நினைக்காமல் கவலைகளில் சிக்கி கொள்வதும் சகஜம். ஆனால் உங்கள் குழந்தையை வளர்க்கும் போது முழு ஈடுபாட்டுடன் இருப்பது மகிழ்ச்சியான குழந்தையை வளர்க்க ஒரு பெற்றோர் செய்ய கூடிய மிக முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். விளையாட்டாக இருந்தாலும் சரி, புத்தகம் படிப்பதாக இருந்தாலும் சரி அல்லது அவர்களின் நாள் எப்படி சென்றது என்பதை பற்றி கேட்பதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையுடன் செலவிடும் நேரத்தில் அவர்களின் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஃபோன், டிவி-யை ஒதுக்கி விட்டு அவர்கள் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

ஒரு குழந்தையின் நடத்தையை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று பெற்றோர்கள் எப்போதும் சீரான தன்மையுடன் (Consistency) இருக்க வேண்டும். பேரன்டிங் டெக்னிக்ஸ்களில் Consistency என்பது, உங்கள் எதிர்பார்ப்புகள், எதிர்வினைகள் மற்றும் செயல்களில் நீங்கள் குழந்தைகளால் எளிதில் யூகிக்க கூடியவர்களாக இருப்பது ஆகும். தங்களது பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவது அவர்கள் பாதுகாப்பாக உணர்வில் வளர உதவும். குழந்தைகளிடம் உங்களை பற்றிய தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் எல்லைகளை அமைப்பதும் இதில் அடக்கம்.

ஒரு குழந்தையின் நடத்தையை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று பெற்றோர்கள் எப்போதும் சீரான தன்மையுடன் (Consistency) இருக்க வேண்டும். பேரன்டிங் டெக்னிக்ஸ்களில் Consistency என்பது, உங்கள் எதிர்பார்ப்புகள், எதிர்வினைகள் மற்றும் செயல்களில் நீங்கள் குழந்தைகளால் எளிதில் யூகிக்க கூடியவர்களாக இருப்பது ஆகும். தங்களது பெற்றோரிடம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை குழந்தைகள் அறிவது அவர்கள் பாதுகாப்பாக உணர்வில் வளர உதவும். குழந்தைகளிடம் உங்களை பற்றிய தெளிவான எதிர்பார்ப்புகள் மற்றும் எல்லைகளை அமைப்பதும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தையுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். இந்த பழக்கம் குழந்தையுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவும்.

மற்றொருவருடைய உணர்ச்சிப் போக்கை ஊகித்துணர்ந்து அவரது மனப்பாங்கை அறியும் திறன் Empathy எனப்படுகிறது. உங்கள் குழந்தையின் ஃபீலிங்க்ஸ்களுக்கு நீங்கள் Empathy-யை வெளிப்படுத்தும் போது, நீங்கள் அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றி அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும், அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறீர்கள். எனவே உங்கள் குழந்தையின் உணர்வுகளை அங்கீகரித்து அவர்களுக்குத் தேவைப்படும் போது ஆதரவு மற்றும் ஆறுதலை வழங்குவது அவர்களுக்கு அன்பான சூழலில் வளரும் வாய்ப்பை உருவாக்குகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோடை வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல இளநீர்... இந்த நன்மைகளுக்காவும் தினமும் குடியுங்கள்..!

April 12, 2023 0

 இந்தியாவில் ஏற்கனவே கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் அனைவரும் சூரியனின் வெப்ப அலைகளில் இருந்து தங்களை பாதுகாக்க என்த்னென்னவோ வழிமுறைகளை பின்பற்ற துவங்கி விட்டனர். இந்திய ஆய்வு மையமும் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான வழிமுறைகளை பின்பற்றுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் 40லிருந்து 45 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பம் அதிகரிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதே சில இடங்களில் மேலே சொன்ன வெப்பநிலையை விட அதிக வெப்பத்தை உணரமுடிகிறது.

இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.

வெப்பத்தை தணிக்கும் வகையில் குளுமையான உணவு பொருட்களையும் நீராகரங்களையும் நாம் உட்கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது, இளநீர் மற்றும் மற்ற நீராகாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தை தணிக்கக இயலும். இவை மட்டுமின்றி இளநீர் குடிப்பதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

எலக்ட்ரோலைட்டுகள் : இளநீரில் பொட்டாஷியம், சோடியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இந்த எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்கள் உடலில் நீர் சத்து குறைவதை தடுப்பதோடு உடல் வெப்பத்தையும் குறைக்க உதவுகிறது. உடலில் நீர் சத்து குறைவதால் ஏற்படும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படாமலும் நம்மை பாதுகாக்கிறது.

நீர்ச்சத்து : போதுமான அளவு இளநீர் பருகும் போது, கோடையில் அதிக வெப்பத்தினால் நமது உடலிலிருந்து வியர்வையாக வெளியேறும் நீர் சத்தை சமன் செய்ய உதவுகிறது. மேலும் தற்போது சந்தைகளில் கிடைக்கும் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களுக்கு மிகச்சிறந்த மாற்றாகவும் இளநீர் அமையும்.

குளிர்ச்சித் தன்மை : கோடை காலங்களில் போதுமான அளவு இளநீர் குடிப்பதால் அது உடலின் வெப்பத்தை குறைத்து குளுமையை தருகிறது. முக்கியமாக உடல் சூடு அதிகமுடையவர்கள் இளநீரை அதிகம் பருகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டச்சத்துக்கள் : இளநீரில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் அழற்சி தன்மையை குறைக்க உதவுகிறது.

குறைவான கலோரிகள் : இளநீரில் கலோரிகள் குறைவாகவும் அதே சமயத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் நிறைந்துள்ளது. அதன் காரணமாக உடலுக்கு அதே சக்தியை தருவதோடு மிகுந்த ஆரோக்கியத்தையும் தருகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களை Self-Care செய்துகொள்ளாததே மன அழுத்தம் அதிகரிக்க காரணம்- விளக்கும் மனநல மருத்துவர்.!

April 12, 2023 0

 உலகில் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு WHO (world health organization) கூறுகிறது. டிப்ரஷன் போன்ற மன உளைச்சல்களும், மன கோளாறுகளும் தற்கொலைக்கு வழிவகுக்கிறது.WHO-வின் இந்த தரவுகள் கவலையளிக்க கூடியவையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ரஞ்சன் பட்டாச்சார்யா, நம் மன ஆரோக்கியத்தை பேண சுய-கவனிப்பு செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை ஷேர் செய்து உள்ளார். மேலும் ஒருவர் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வாழ்க்கையில் பாசிட்டிவாக இருப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. வாழ்க்கையில் திருப்தி உணர்வை பெற மற்றும் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள பொதுவாக இன்னும் நிறைய செய்ய வேண்டும். உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நிபுணர் பகிர்ந்துள்ள டிப்ஸ்கள் இங்கே.


வழக்கமான ஒர்கவுட்ஸ் : தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஒர்கவுட்ஸ் செய்வது உடல் Endorphin ஹார்மோனை வெளியிட உதவுகிறது. இந்த ஹார்மோன் உடலை மற்றும் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த ஹார்மோன் நாள் முழுவதும் மோட்டிவேட்டாக இருக்க சக்தியளிக்கிறது.


டயட் : ஃபிரெஷ்ஷான பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் கூடிய ஆரோக்கியமான, சத்தான மற்றும் சீரான உணவுகள் அடங்கிய டயட் நரம்புகளை புத்துயி பெற செய்கிறது. மன அழுத்தத்தால் தூண்டப்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தின் அபாயத்தை ஆரோக்கியமான டயட் குறைக்கிறது.


போதுமான தூக்கம் :  ஒரு நாளைக்கு சராசரியாக 6-8 மணி நேரம் போதுமான தூக்கம் இருக்க வேண்டும். இதற்கு தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் டிவி, லேப்டாப்,ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும்.

மெடிட்டேஷன் : ரிலாக்சேஷன் எக்ஸ்ஸர்சைஸ், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் ஜேக்கப்சனின் முற்போக்கான தசை தளர்வு (JPMR) உள்ளிட்ட பயிற்சிகளை தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் செய்வதை இலக்காக கொள்ளுங்கள்.

பொழுதுபோக்குகள் : உங்களுக்கு பிடித்த மியூசிக் அல்லது பாடல்களை கேட்பது, பாட்டு பாடுவது, பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது உள்ளிட்டவற்றிற் வழக்கமான அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

பிடித்தவர்களுடன் பேசுங்கள் : உங்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் நம்பகமான நண்பர்கள் அல்லது நபர்களை சந்தித்து நேருக்கு நேர் பேசுவது அல்லது ஆடியோ-வீடியோ கால்ஸ்கள் மூலம் பேசுவது உங்களது மனதை உற்சாகமாக வைக்க உதவும் வழிகள்.

பார்ப்பது, கேட்பது, சுவைப்பது மற்றும் நுகர்வது என உங்களை சுற்றியுள்ள உலகில் கவனம் செலுத்துதல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

உங்களை நீங்களே மதிக்க கற்று கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் சிடுசிடுவென்று இருப்பது மற்றும் சுயவிமர்சனத்தை தவிர்க்கவும்.

உங்கள் மனதை அடிமைப்படுத்தும் எந்த ஒரு தேவையற்ற விஷயங்களுக்கும் மற்றும் போதை பொருட்களுக்கும் நோ சொல்லுங்கள்.

உங்கள் லிமிட் மற்றும் எதிர்பார்ப்புகளை ஒரு வரம்பிற்குள் செட் செய்து கொள்ளுங்கள். அந்த லிமிட்டை தாண்டி செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கட்டாயப்படுத்தி உடல் மற்றும் மன ரீதியாக சிரமப்படாதீர்கள்.

இதற்கிடையே Fittr and INFS இணை நிறுவனரும், இயக்குனருமான பாலகிருஷ்ணா ரெட்டி பேசுகையில், சுய பாதுகாப்பு என்பது ஒரு ஆடம்பரம் அல்ல, ஆனால் மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க அவசியமான ஒன்று. உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், சுய-கவனிப்பை பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதாக, நிதானமாக சமாளிக்க உதவும். ஒரு பயனுள்ள self-care ரொட்டீனை வழக்கத்தை உருவாக்க படிப்படியான நடைமுறைகளை உருவாக்குவது அவசியம். எல்லாவற்றையும் சரியாக செய்ய உங்கள் மீது நீங்களே அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள் என்கிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும் டிடாக்ஸ் முறை.. நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்..!

April 12, 2023 0

 தற்போது டிடாக்ஸ் என்ற வார்த்தை பிரபலமடைந்து வருகிறது. பலர் இன்று டிடாக்ஸ் செயல்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவது மிகவும் முக்கியமான காரியம் ஆகும். உடலில் காணப்படும் தேவையற்ற நச்சுப்பொருட்களை அகற்றும் இந்த செயல்முறை டிடாக்சிஃபிகேஷன் (Detoxification) என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.

நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை ஆசைக்காக சாப்பிட்டு விட்டு, பின்னர் வருத்தப்படுவது பலரது வழக்கம். எனினும், இதனை எளிதில் எதிர்கொள்ள உதவும் ஒரு எளிமையான வழியே டிடாக்ஸ் ஆகும்.

டிடாக்ஸ் என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இந்த செயல்முறையின் போது நீங்கள் ஒரு சில பானங்களை பருக வேண்டும் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

உடலில் உள்ள நச்சுகளை அவ்வப்போது அகற்றினால் தான் உடலானது இயற்கையான முறையில் செயல்பட ஆரம்பிக்கும். டிடாக்சிஃபிகேஷன் என்பது ஒரு பழைமையான மற்றும் இயற்கையான செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் போது உடலில் உள்ள கழிவுகள், பழைய மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, உடலின் செயல்பாடானது மீட்டமைக்கப்படுகிறது.

டிடாக்சிஃபிகேஷன் செயல்முறையை மேற்கொள்ளும்போது, இரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை, காபின், புகையிலை போன்றவற்றை அகற்ற வேண்டும். அதே சமயம், அதிகப்படியான தண்ணீர், நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் டிடாக்ஸ் செயல்முறையை எளிதாக்கும்.

இயற்கையான முறையில் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் 7 டிப்ஸ்:-

அமிலத்தை உருவாக்கக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளான பால் சார்ந்த பொருட்கள், பிரெட், பேக் செய்யப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் குறிப்பாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரை மற்றும் பொரித்த கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.
காரத்தன்மை நிறைந்த உணவுகள், முழு சைவ உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளவும். இவை உடலை சுத்தப்படுத்த உதவக்கூடும்.
காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். இலைக் காய்கறிகள் நச்சுகளை அகற்ற சிறந்தவை. இது இரைப்பை குடல் மற்றும் ஒட்டுமொத்த உடலையும் நச்சுகள் இல்லாமல் வைக்க உதவுகிறது.
பூண்டு, சிவப்பு நிற கிராம்பு, மற்றும் காய்கறி சாறு போன்றவையும் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகின்றன. மேலும் கோதுமைப்புல் சாறு, புதினா கொத்தமல்லி சாறு, மற்றும் தக்காளி கீரை சாறு போன்றவற்றையும் நீங்கள் கருதலாம்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற வியர்த்தல் என்பது ஒரு முக்கியமான செயல்முறை ஆகும். ஆகையால் நச்சுகளை நீக்குவதற்கு தேவையான வியர்த்தல் செயல்முறையைத் தொடங்க உடல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது.
டிடாக்ஸ் பானங்கள் மற்றும் மூலிகை பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.
மது பானங்கள் குடிப்பது மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை கட்டுப்படுத்திக் கொள்ளவும். முடிந்த வரை அவற்றை தவிர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


குறிப்பிட்ட நபரை அனைவருக்கும் பிடிக்க என்ன காரணம் தெரியுமா..? இந்த குணங்கள் இருப்பதுதான்..!

April 12, 2023 0

 மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டாலே அதன் பிறகு அவர்கள் உங்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு உயர்ந்த மனிதராகவும் நேர்மறை எண்ணம் கொண்டவராகவுமே பார்ப்பார்கள். மேலும் உங்களது பழக்கவழக்கங்களின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சமுதாயத்தில் ஒரு முன்மாதிரியாகவும் நீங்கள் திகழ்வீர்கள்.. பெரும்பாலும் இப்படி சமுதாயத்தால் மிகவும் மதிக்கப்படும் மனிதர்கள் பலருமே பொதுவான சில உயரிய குணங்களைக் கொண்டுள்ளனர். இரக்கத்தன்மை, பொறுமை, அமைதி போன்றவை இவர்களிடம் இயற்கையாகவே காணப்படும்.

மேலும் தனக்கு மட்டும் நன்மை தரக்கூடிய விஷயங்களை செய்யாமல் தம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மையை தரும் வகையில் முடிவுகளை எடுப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் தலைமை பண்பை கொண்டவராகவும் தன்னை சுற்றி இருக்கும் நபர்களை மிக எளிதாக கட்டுப்படுத்தும் பண்பையும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற மதிப்பு மிக்க மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் சில பகுதிகளை பற்றி போது பார்ப்போம்.

கவனித்தல் : இவர்கள் பெரும்பாலுமே அதிகம் பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதை விரும்புவார்கள். மனதை அலைபாய விட்டுக் கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மனதை வைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் மற்றவர்கள் பேசும் போது குறுக்கே பேசாமல் முழுவதுமாக அவர்களை பேச விட்டு அதன் பிறகு தன்னுடைய பதிலை கூறுவார்கள்.

அனுதாபிகளாக இருப்பார்கள் : இவர்கள் பெரும்பாலுமே அனுதாபிகளாகவே இருப்பார்கள். மற்றவர்களின் கோணத்திலிருந்து அவர்களது பிரச்சினையை பார்த்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதே சமயத்தில் இரக்க குணம் கொண்டவராகவும், மற்றவர்களை அன்போடு நடத்துவதற்கும் அதிகம் விரும்புவார்கள். இதனால்தான் இவர்களுக்கு மற்றவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

பணிவு : இவர்கள் எப்போதுமே மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் மற்றொருவர்களை விட உயர்ந்தவர் என்ற தலைகனத்தைக் கொண்டிருக்காமல், எப்போதுமே ஒரே விதமாகவே நடந்து கொள்வார்கள். மேலும் மற்றவர்களிடமிருந்தும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தனக்கு அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் கொண்டிருக்காமல் தனக்கு ஏதேனும் தெரியவில்லை எனில் அதனை ஒப்புக் கொள்வார்கள்.

நம்பகத்தன்மை : இவர்களிடம் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். இவர்களை சுற்றியுள்ள நபர்கள் பலருமே இவர்களை சார்ந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு மற்றவரை பாதுகாப்பாகவும் உணர வைப்பதுடன் நம்பகத்தன்மை மிக்கவராக இருப்பார்கள். ஒருவருக்கு சத்தியம் செய்தால் அதனை காப்பாற்றுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். மேலும் எப்போதுமே அனைவருக்கும் உதவ தயாராக இருப்பார்கள்.

மரியாதையான பேச்சு : இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும், பேசும் போதும் எப்போதும் மரியாதையுடனே இருப்பார்கள். மிகவும் பணிவாகவும் மற்றவர்கள் விரும்பும் வகையிலும் இவர்களது பேச்சு இருக்கும். மேலும் உடன் இருப்பவரின் கருத்தை நிராகரிக்கும் போதும் கூட அவர்கள் மனம் புண்படாதபடி நிராகரிப்பார்கள்.


சென்னைக்கு அருகே குறைந்த பட்ஜெட்டில் செல்ல ஒரு அட்டகாசமான அருவி.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஸ்பாட்..!

April 12, 2023 0

சென்னையில் இருந்து 70கிமீ தொலைவில் ஆந்திர பகுதியில் அடர்ந்த காடுகள், தெளிந்த நீரோடை, அள்ளித்தெளிக்கும் நீர்வீச்சி என்று இயற்கையின் மடியில் சுகமாக உலாவர ஏற்ற இடமாக நாகலாபுரம் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில அழகிய ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்,  அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாதுகாத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இந்த இடத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பைக், கார் பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போக நுழைவுக்கட்டணமாக  ரூ.50  வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் கொண்டாட ஏற்ற ஸ்பாட்டாக இது இருக்கும்.
ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்களும் இந்த ஸ்பாட்டை தேர்ந்தெடுக்கலாம் ஏனென்றால் பார்க்கிங் முதல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுமார் 1 முதல் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே பயணம் செல்ல வேண்டும்.

இந்த நாகலாபுரம் அருவியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளது. பாதுகாப்பு கருதி முதல் நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 2 மற்றும் 3ஆவது நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நீரில் விளையாட லைப் ஜாக்கெட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip