Agri Info

Adding Green to your Life

April 15, 2023

அடிவயிற்று தொப்பையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

April 15, 2023 0

 ஒருவரது சிறப்பான ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது, இரவில் போதுமான அளவு தூக்கத்தை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் எவ்வித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே 

உடல் கொழுப்பு விநியோகத்தை தீர்மானிப்பதில் தூக்கத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.  அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறைந்த அளவிலான தூக்கத்தை பெரும் பெரியவர்களின் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுகிறது.  ஆனால் இந்த கொழுப்புகள் கைகள், கால்கள் மற்றும் அடிவயிறு போன்ற எந்த உறுப்பில் சேரும் என்பது பற்றி எவ்வித தெளிவான தகவலும் கண்டறியப்படவில்லை.  அதிக எடையுடன் இருப்பது பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

பெரியவர்களில் 66%க்கும் அதிகமானோர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.  ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமான உடல் கொழுப்பை பராமரிப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது.  

உடலில் அதிகளவு கொழுப்புகள் இருப்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.  இதுதவிர அதிக கொழுப்புகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், எண்டோடெலியல் மற்றும் கார்டியோமெடபாலிக் செயலிழப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.  

இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு போதுமான அளவில் தூக்கத்தை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் தூக்கம் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பராமரிப்பதற்கான வழிமுறையாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டவும் உதவும்.

வெயில் காலத்தில் தேங்காய் சாப்பிடுவது இவ்வுளவு நல்லதா?

April 15, 2023 0

 Coconut Summer Tips: கோடையில் ஆரோக்கியமாகவும், உடற்தகுதியுடனும் இருக்க மக்கள் பெரும்பாலும் தேங்காய் குடிப்பார்கள். ஆனால் தேங்காய் உங்களின் பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்குக் காரணம் இது குளிர்விக்கும் தன்மை கொண்டது. 

அதனால் தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. செரிமானம் சரியாகும், எலும்புகளும் வலுவாக இருக்கும். அதே நேரத்தில், இதய நோய்களைக் குணப்படுத்தவும் தேங்காய் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. 

தேங்காய் எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த. ஆனால் கோடையில் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும். வெயில் காலத்தில், தேங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

கோடையில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

செரிமானம் சிறப்பாக இருக்கும்

கோடை காலத்தில் வயிறு குளிர்ச்சியாக இருக்க வேண்டுமானால், தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலை வலுவாக வைத்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். அதனால்தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். 

வயிறு குளிர்ச்சியாக இருக்கும் 

கோடை காலத்தில் வயிற்றில் எரியும் உணர்வால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காய் மிகவும் குளிர்ச்சியானது. மறுபுறம், நீங்கள் கோடை காலத்தில் தேங்காய் உட்கொள்வதனால் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனுடன் தினமும் காலையில் காய்ந்த தேங்காய் சாப்பிடலாம்.

வெப்பத்தில் இருந்து நிவாரணம் 

கோடை காலத்தில், ஒவ்வொரு நபரும் சூரியன் மற்றும் அனல் காற்றால் சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பலருக்கு வெப்ப முடக்குவாதம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

கோடையில் உடலை குளிரவைக்கும் பெருஞ்சீரகம்

April 15, 2023 0

 கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம். 


செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. 


வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும். சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். 


வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். 

காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பாகற்காய் கசக்கும், அதன் நன்மைகள் இனிக்கும்...

April 15, 2023 0

 கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். 

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும். 

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

* வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

 Click here to join whatsapp group for daily health tip

கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?

April 15, 2023 0

 கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது. கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான பிற காரணங்கள் குறித்து பார்ப்போம். 

மஞ்சள் காமாலைக்கு தீர்வளிக்கும்: ஆயுர்வேதத்தின் படி, கரும்பு இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்ட பொருளாகும். இது கல்லீரலை வலுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலை நோய் நெருக்கவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணைபுரியக்கூடியது. எந்தவகை நோய்பாதிப்பின்போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்பு சாறு உதவக்கூடியது.


நோய்த்தொற்றுகளை தடுக்கும்: கரும்பு சாறு டையூரிடிக் பண்புகளை கொண்டது என்பதால் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கரும்பு சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கரும்புச்சாறு போக்கும். கரும்பு சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. 

சோடியமும் குறைவாகவே இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்பு சாறுக்கு முக்கிய பங்கு உண்டு. செரிமானத்தை மேம்படுத்தும்: செரிமான மண்டலம் சீராக இயங்கவும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கரும்பு சாறு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்: கரும்புச் சாற்றில் உள்ளடங்கி இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கி, எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம். 

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்: கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக கோடை கால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும். அதனை சரிபடுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது. மேலும் கரும்பு சாறில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.


 Click here to join whatsapp group for daily health tip

கோடை காலத்தில் குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

April 15, 2023 0

 கோடை காலத்தில் வெப்ப தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இளைஞர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் விளையாடும்போது வெளியேறும் வியர்வையின் அளவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். நாவறட்சி ஏற்படும். 

சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். உடல் சோர்வு, தலை வலி, காய்ச்சல், வாந்தி, வயிற்று போக்கு, அம்மை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தோல் நோய்களும் தோன்றும். வியர்வை அதிகமாக வெளியேறும்போது தண்ணீரால் கழுவாமல் விட்டுவிட்டால் நமைச்சல் உண்டாகி அது கொப்பளங்களாக மாறிவிடக்கூடும். ஆதலால் வெயிலில் விளையாடும் குழந்தைகள் இருமுறை குளிப்பது நல்லது.


வியர்வை அதிகமாக வெளியேறும்போது உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவு குறைய தொடங்கிவிடும். வியர்வையாக வெளியேறும் நீரை ஈடு செய்ய வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவது கூடாது. அதனுடன் உப்புச்சத்தின் அளவையும் ஈடு செய்ய வேண்டும். அதற்கு தண்ணீருடன் உப்பையும் சேர்த்து அருந்த வேண்டும்.

எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதனுடன் உப்பு சேர்த்தும் குடித்து வரலாம். அது உடலில் இருந்து வெளியேறிய நீரையும், உப்புச்சத்தையும் ஈடுகட்டும். கோடை காலத்தில் சிறு குழந்தைகள் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வியர்வை வெளியேற்றம் அதிகமாகும்போது சோர்வு அதிகம் ஏற்படும். 

தாகம் எடுத்தாலும் விளையாட்டிலேயே முழு கவனமாய் இருப்பார்கள். அதனால் அவ்வப்போது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து, அவர்களுக்கு பருக கொடுக்கலாம். தண்ணீரை நன்கு காய்ச்சி கொடுப்பது நல்லது. குழந்தைகள் காற்றோட்டமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

காற்றோட்டம் குறைவாக இருந்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு குழந்தை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோடை காலம் முடியும் வரையில் அவ்வப்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதிலும் எண்ணெய்யை காய்ச்சி, ஆறவைத்து உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டி வரலாம். மஞ்சளை அரைத்து உடலில் தேய்த்து வருவதும் நோய்த்தொற்றில் இருந்து காக்கும்.

 Click here to join whatsapp group for daily health tip

தூக்கத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

April 15, 2023 0

 கோவை அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், மனநல டாக்டருமான ஜெ.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:- ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாளில் 3-ல் ஒரு பங்கு காலம் தூக்கத்தில் கழிகிறது. எனவே தூக்கம் என்பது இன்றிய மையாதது. அது சோம்பேறித்தனம் அல்ல. தூக்கம் என்பது விழிப்புடன் வேலை செய்ய ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது. வயதுக்கு ஏற்ப தூங்கும் கால அளவு இருக்கும். 

சராசரியாக 8 மணி நேர தூக்க அவசியம். ஒவ்வொருவர் பார்க்கும் வேலையை பொறுத்து அதில் சற்று மாறுபாடு இருக்கலாம். இடையூறு இல்லாமல் தூங்கி அதிகாலையில் புத்துணர்வாக எழுவதே தரமான தூக்கம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட தரமான தூக்கமே முக்கியம். எனவே தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு படுக்கையை வேறு வேலை குறித்து திட்டமிடும் இடமாக மாற்ற கூடாது. அப்படி செய்தால் மூளை விழித்துக் கொள்ளும். தூக்கம் பாதிக்கும். தூங்கும் போது தான் உடல்உறுப்புகள், மூளை போன்றவை ஓய்வு கொள்ளும்.


தூங்கும் நேரத்தை வரையறுத்துக் கொண்டு திட்டமிட்டபடி தூங்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். வயிறுமுட்ட சாப்பிட்ட உடனே தூங்க செல்வது, நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்க செல்லும் போது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். 

மது குடித்தால் தான் தூக்கம் வரும் என்று கூறுவது உண்மை அல்ல. அப்படி ஒருவர் கூறினால் அவர் அந்த நோய்க்கு ஆளாகிறார் என்று அர்த்தம். நன்றாக தூங்குவதற்கு தூங்கும் அறையின் சூழலும் முக்கியம். பயமுறுத்தும் வகையில் இருளாகவோ, வெளிச்சமாகவோ இருக்க கூடாது. மங்கிய வெளிச்சத்தில் காற்றோட்டத்துடன் படுக்கை அறை இருக்க வேண்டும். 

பகல் நேரத்தில் நிறைய நேரம் தூங்குவது இரவு தூக்கத்தை பாதிக்கும். உடல் பயிற்சி மற்றும் உடல்உழைப்பு இருக்கிற போது தூக்கம் நன்றாக இருக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டால் இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், உடல் பருமன், மனச்சோர்வு மற்றும் செயல்திறன் குறைபாடு வரலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை சம்மந்தப்பட்ட வியாதிகள் 40 சதவீதம் அதிகமாக உள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை பெண்களின் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம். 

இரவில் செல்போன் போன்ற டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் தூக்கம் பாதிக்கிறது. இது பெரும் பிரச்சினையாக இளைஞர்கள் மத்தியில் உருவெடுத்து வருகிறது. 

தூங்க செல்வதற்கு முன்னதாக காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். கனவுகள் ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதியாகம். கெட்ட கனவுகள் அடிக்கடி வருவது, அதனால் தூக்கம் கெடுவது, இரவில் கெட்ட கனவுகளை நினைத்து பயப்படுவது போன்றவை இருப்பின் டாக்டர்களை அணுக வேண்டும். 

மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் விஷயங்கள் அப்போது கனவுக ளாக வெளிப்படும். அதில் பெரும்பாலானவை மறந்து போகும். இரவில் தூக்கத்தில் எழுவது, நடப்பது போன்ற குறை பாடுகள் சிறு வயதில் வரும். நாளடைவில் தானாவே சரியாகி வில்லை. இல்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும். தூங்கும் போது குறட்டை வருவதும், அதனிடையே மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கம் கலைவதும் இருப்பின் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


உடல் எடையைக் குறைக்க சப்பாத்தி எவ்வாறு உதவும்...? நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே..!

April 15, 2023 0

 இன்றைக்கு உடல் பருமன் என்பது பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்னையாக இருப்பதோடு, பல நோய்களுக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. இதனால் தான் வாக்கிங், ஜாக்கிங், யோகா, டயட் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

குறிப்பாக ஒவ்வொருவரும் தங்களது டயட் பிளானில் சப்பாத்தியை தினத்தோறும் சேர்த்துக்கொள்கின்றனர். முழு கோதுமையைக் கொண்டு சாப்பாத்தி மாவு தயாரிக்கப்படுவதால் இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

சப்பாத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் : சப்பாத்தியில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி9, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களால் நிரம்பியுள்ளது. மேலும், கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளதால் உடல் எடையை நிர்வகிக்க பேருதவியாக உள்ளது.

உடல் எடைக்குறைப்பில் சப்பாத்தி எப்படி உதவும்? சப்பாத்தியில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது. நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, மனநிலையையும் மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. பொதுவாக சப்பாத்திக்கு அதிகளவில் நாம் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. இதனால் தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.

அதிகளவு நார் சத்துக்கள் சப்பாத்தியில் இருப்பதால், மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான அமைப்பு சீராக இயங்க உதவியாக உள்ளது. இதோடு ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவியாக உள்ளது. மேலும் நீங்கள் உங்களது டயட்டில் சப்பாத்தியை அதிகளவில் சேர்க்கும்போது, சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பின் போது சப்பாத்தியை எவ்வளவு சாப்பிட வேண்டும்? ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சப்பாத்தியில்  கார்போ ஹைட்ரேட்டுகள், நார்ச் சத்துகள் நிறைந்திருந்தாலும் இதை அதிகளவில் சாப்பிடக்கூடாது என்கின்றனர். ஆம் 50 கிராம் எடைக் கொண்ட ஒரு சப்பாத்தியில் 120 கிராம் கலோரிகள் உள்ளது என்றும், ஒரு நாளைக்கு நீங்கள் 5-க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை சாப்பிடும் போது, சுமார் 720 கலோரி உடலில் சேர்கின்றது.

எனவே எப்போதும் சப்பாத்தியை தனியாக சாப்பிடாதீர்கள். சாலட், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்களது உடல் எடையை சீராக வைத்திருக்க முடியும் என்கின்றனர். மேலும் இதற்காக நீங்கள் உடல் எடையைக் குறைப்பிற்கு சாப்பிடக்கூடிய சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருள்களை முழுமையாக நிறுத்த வேண்டியது இல்லை எனவும், புத்திசாலித்தனமாகவும், புரிதலுடன் நீங்கள் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.


 Click here to join whatsapp group for daily health tip

April 14, 2023

குழந்தையுடன் தனியாக பயணிக்கும் தாய்மார்களுக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய டிப்ஸ்..!

April 14, 2023 0

 எல்லா நேரங்களிலும் பெரியவர்கள் மட்டும் தனியாக பயணிக்கும் வாய்ப்பு இருக்காது. சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் பயணிப்பதை பல நேரங்களில் பார்த்திருப்போம். நாமும் கூட குழந்தைகளுடன் பயணித்திருப்போம். அப்போது தான் சிறு குழந்தைகளுடன் பயணம் செய்வது எளிதானது அல்ல என்பதே புரியும்.

 Click here to join whatsapp group for daily health tip

சன் ஸ்கிரீன் சருமத்திற்கு செய்யும் நன்மைகளை பற்றி தெரியுமா..? அப்ளை செய்யும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..!

April 14, 2023 0

 சம்மர் வந்தாச்சு. இனி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். உண்மையில், எந்த பருவமாக இருந்தாலும் சரி, ஆண்டு முழுவதும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது சருமத்தை பாதுகாக்கும் ஆயுதம் தான் சன்ஸ்கிரீன். சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்கும் ஒரு தடையாக சன்ஸ்கிரீன் செயல்படுகிறது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சரும சுருக்கங்கள், முன்கூட்டிய வயதாவ தற்கான அறிகுறிகள், சரும எரிச்சல் போன்ற பல பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். அதோடு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சரும புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் தடுக்கும். அன்றாடம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

சூரியனில் இருந்து வெளியாகும் UVA கதிர்கள் நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும் அதே நேரத்தில், UVB கதிர்களானது உடனடியாக சருமத்தை பாதிக்கிறது. சரும புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதே முகத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை ஆகும்.

சூரிய கதிர்களுக்கு நேரடியாக நமது சருமத்தை வெளிப்படுத்துவது மங்கு, திட்டுக்கள் (ஹைப்பர்பிக்மெண்டேஷன்) போன்றவற்றை ஏற்படுத்தும். இது போன்ற சரும பிரச்சினைகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க விரும்பினால் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்தை நீண்ட நாட்கள் சூரிய கதிர்களுக்கு வெளிப்படுத்துவது முன்கூட்டிய வயதான அறிகுறிகளை உண்டாக்கும். அதோடு இது கிரோஸ் ஃபீட், சுருக்கங்கள், கொலாஜன் இழப்பு போன்றவற்றையும் உண்டாக்கலாம். முகத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது இது போன்ற பிரச்சனைகளுக்கு எதிரான ஒரு தடுப்பாக செயல்படுகிறது. இதனால் உங்கள் சருமம் நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்கும்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு சருமத்தின் முக்கியமான புரதங்களான கொலாஜன், கெரட்டின் மற்றும் எலாஸ்டின் போன்றவை வெளியேறாமல் பார்த்து கொள்கிறது. ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்திற்கு இந்த புரதங்கள் மிகவும் அவசியம். UV கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், தேவையான புரதங்களை தக்க வைத்து கொள்ளவும் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு டைட்டானியம் ஆக்சைடு நிறைந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

சன்பர்ன் சருமத்தின் அடுக்கை மெலிந்து போகச் செய்யும். இதனால் தோல் உரிதல், வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு நீங்கள் ஆளாகலாம். நீங்கள் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தால், குறைந்தது SPF 30 கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். அதிக அளவிலான நன்மைகளைப் பெற மினரல் சார்ந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பெண்கள் ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்துகளை தினமும் உட்கொள்வது அவசியம்.!

April 14, 2023 0

 மகளிர் நலனை பொருத்தவரையில், அலட்சியப் போக்குடன் கைவிடப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக ஊட்டச்சத்து உள்ளது. நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், அதன் மூலமாக எவ்வளவு சத்து கிடைக்கிறது என்பதை கண்காணிக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. ஆனால், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், யுனிசெஃப் அமைப்பு, இந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வளர் இளம் சிறுமிகள் மற்றும் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என்பது பிரதான பிரச்சனையாக இருக்கிறது.

பெண்களுக்கு முக்கியத்துவம் ஏன்?

ஊட்டச்சத்து என்று வருகின்றபோது பெண்களின் நலன் குறித்துதான் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர் இளம் சிறுமிகள் பலவீனம் அடைகின்றனர் மற்றும் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால், கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற சமயங்களில் மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

கர்ப்ப காலத்தில் போதுமான ஊட்டச்சத்து மற்றும் விட்டமின்கள் போன்றவை கிடைக்காத காரணத்தால் குறைப்பிரசவம் மற்றும் உடல் எடை குறைவான குழந்தை என்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்துடன் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள பெண்களைப் போலவே இந்திய பெண்களின் நிலைமையும் சற்று மோசமாக இருக்கிறது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதி அடைகின்றனர். நான்கில் ஒரு பங்கு பெண்கள் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

சீரான உணவு : 

பருப்பு, தானியங்கள், சிறுதானியங்கள், முட்டை, இறைச்சி, மீன், பால், பால் சார்ந்த பொருட்கள், அனைத்து வகை காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த சீரான உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும், மிக முக்கியமாக என்னென்ன சத்து தேவைப்படும் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

மகளிருக்கு மாவுச்சத்து அவசியமானது. இதுதான் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. உங்கள் உணவில் நான்கில் ஒரு பங்கு மாவுச்சத்து உணவுகளாக இருக்க வேண்டும். உருளைக் கிழங்கு, சாதம் போன்றவற்றில் மாவுச்சத்து உள்ளது.
பருப்பு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றில் அபரிமிதமாக கிடைக்கும் புரதச்ச்சத்து இன்றியமையாத ஒன்றாகும். நாளொன்றுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் 2 முதல் 3 பங்கு அளவு புரதம் இருக்க வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி ஊட்டச்சத்து, விட்டமின்கள், மினரல்கள் அடங்கிய காய்கறிகளும், பழங்களும் மிக அவசியமாகும். அழற்சி, இதய நோய்கள், நீரிழிவு போன்றவற்றை தவிர்க்க இது உதவும்.
டீ, காஃபி, மில்க்‌ஷேக் போன்ற ஏதோ ஒரு வடிவில் தினசரி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பால் உற்பத்தி பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
உடலில் செல்களின் கட்டமைப்புக்கும், உறுப்புகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும் கொழுப்புகள் அவசியமாகும். வெண்ணெய், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, தேங்காய் எண்ணெய், நட்ஸ் போன்றவற்றில் கொழுப்புச்சத்து கிடைக்கும்.
கால்சியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த பாதாம் பருப்பு, பச்சை காய்கறிகள், அத்தி, மீன், முட்டை போன்றவற்றையும் பெண்கள் தங்களுடைய உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பெண்களிடையே அதிகரிக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்… இதற்கு ஆயுர்வேதம் எவ்வாறு உதவும்..?

April 14, 2023 0

 ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் உடலில் ஹார்மோன்கள் சீராக இயங்கினால் தான் மட்டுமே உடல் மற்றும் மன நலத்துடன் வாழ முடியும். நாம் சிரிப்பதற்குக் கூட ஹார்மோன்கள் சுரக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். சில நேரங்களில் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வினால் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர் மக்கள். அதிலும் ஆண்களை விட பெண்களுக்குத் தான் ஹார்மோன்களின் சமநிலையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு, குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு, நடு சுழற்சி புள்ளிகள், கருப்பை நீர்க்கட்டிகள், பிசிஓடி போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் தற்போது அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. முதலில் ஏன் ஏற்படுகிறது? ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்..

ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் என்றால் என்ன? நம்முடைய உடலில் பல்வேறு செயல்பாடுகளை ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரன் எனப்படும் பெண் பாலின ஹார்மோன்கள் முக்கியமாக கருப்பைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தான் பெண்ணின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் ஏற்படும் போது தான் பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கருவுறுதலில் பிரச்சனை, பிசிஓடி, பிசிஓஎஸ், அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஹார்மோன் சமநிலையின்மைக்கு சிகிச்சையளிப்பது எப்படி? இன்றைக்கு உள்ள பெரும்பாலான மருத்துவமனையில் பிசிஓடி பிரச்சனைக்குத் தான் பெண்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வேண்டும் என்றால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால் இது நிச்சயம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதிகப்படியான ஸ்டீராய்டுகளை நாம் பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே இதுப்போன்ற சூழலில் நாம் மருந்து மாத்திரைகளுக்குப் பதிலாக நம்முடைய உணவு பழக்கவழக்கம், அதிக நேரம் தூங்குவது, மன அழுத்தமின்றி வாழ்வது, உடல் இயக்கத்திற்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்வது போன்ற விஷயங்களை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும்.

இவ்வாறு மேற்கொண்டாலும் சில அவசர காலங்களில் மருத்துவ உதவி என்பது நிச்சயம் தேவைப்படும். இதுப்போன்ற பெண்களுக்கு சிறந்த தீர்வு ஆயுர்வேதமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். நோய்க்கான காரணத்தையும், போக்கையும் மாற்றுவதற்கு இந்த சிகிச்சைகள் உதவியாக உள்ளது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் வழங்கப்படும் மூலிகைகள், பஞ்சகர்மா சிகிச்சைகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஹார்மோன் சமநிலைப்பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு, அதிக ஸ்டீராய்டு மருத்துகளை உட்கொள்ளவும் தேவையில்லை. எனவே உங்களது வாழ்க்கைமுறையில் முதலில் மாற்றம் கொண்டு வாருங்கள். பின்னர் தேவைப்படும் பட்சத்தில் ஆயுர்வேதத்தின் உதவியை நாட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பியூட்டி பார்லர் தொடங்கலாம் என திட்டமிடுகிறீர்களா..? உங்களுக்கான A to Z கைட்லைன்..!

April 14, 2023 0

 பியூட்டி பார்லர் தொடங்க நீங்கள் திட்டமிட்டு இருந்தால், உங்களிடம் இருக்கும் நிதி, அழகு நிலையத்தின் மாதாந்திர வாடகை, தேவையான பொருட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையத்தின் மாதாந்திர வருவாய் போன்ற சில முக்கியமான விவரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இதில் பலரும் பல விதமான வேலை அல்லது வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் விரும்பி ஈடுபடும் ஒரு வகையான வணிகம் தான் பியூட்டி பார்லர். முன்பெல்லாம் பியூட்டி பார்லர் பணக்காரர்கள் அல்லது ஆடம்பரமாக வாழ்பவர்கள் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தது. ஆனால், இன்று இது பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்து வருகிறது. நீங்கள் ஒரு பியூட்டி பார்லரைத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் பியூட்டி பார்லர் ஆரம்பிக்க விரும்பினால், முதலில் அதற்கு நீங்கள் ஒரு திடமான வணிகத் திட்டத்தை வகுக்க வேண்டும். இது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை உங்களுக்கு கொடுக்கும். இதற்கு நீங்கள் ஆராய்ச்சி செய் வேண்டும். அதோடு, மற்ற அல்லது பிரபலமான அழகு நிலையங்களின் செயல்பாட்டு சூழலை பகுப்பாய்வு செய்ய வேண்டும். கூடுதலாக, உங்களுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பியொட்டி பார்லர்கள் என்னென்ன சேவை வழங்குகிறார்கள், அதன் விலை என்ன என்பது போன்ற தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய இந்தத் திட்டத்தில், உங்களிடம் இருக்கும் நிதி, மாதாந்திர வாடகை, தேவையான பொருட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அழகு நிலையத்தின் மூலம் பெறக்கூடிய மாதாந்திர வருவாய் போன்ற சில முக்கியமான விவரங்களையும் சேர்க்க வேண்டும். பொதுவாக பியூட்டி பார்லர் கொண்டு ஒருவர் மாதத்திற்கு ₹6000 முதல் ₹50,000 வரை ஈட்டலாம்.

சிறு அழகு நிலையங்கள் முதல் மிகப் பிரம்மாண்டமான அழகு நிலையங்கள் வரை அவரவர் இருப்புக்கு ஏற்றவாறு இடத்தை தேர்வு செய்து ஆரம்பிக்கலாம். ஆனால், இது தொடர்பாக, அதன் உரிமையாளர் கட்டமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம். சுதந்திரமான அழகு நிலையங்கள் தான் தற்போது உரிமையமைப்பின் மிகவும் பொதுவான வகையாக உள்ளது. ஒரு சுயாதீன தொழிலதிபர் தாங்களாகவே ஒரு பியூட்டி பார்லரைத் தொடங்கலாம் அல்லது நடத்தலாம். இதற்கு மிகக் குறைந்த ஆரம்ப முதலீடு போதும். அதோடு இதில் அன்றாட செயல்பாட்டு செலவுகளையும் எளிதில் சமாளிக்கலாம்.

அடுத்து நீங்கள் அழகு நிலையத்திற்கு எந்த இடத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம். நிறைய வாடிக்கையாளர்கள் உங்கள் நிலையத்தைத் தேடி வரும் வகையில் ஒரு இடத்தை தேர்வு செய்வது நல்லது. குறிப்பாக நிறைய பேர் வசிக்கும் ஒரு இடம் அல்லது மார்க்கெட் பகுதிகள் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கூடுதலாக, மக்கள் உங்கள் இடத்திற்கு எளிதில் வரும் வகையில் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையம் போன்றவற்றிற்கு அருகாமையில், இலவச பார்க்கிங் வசதியுடன் ஒரு இடம் கிடைத்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

அதே சமயம் நீங்கள் மிகவும் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது. நீங்கள் அளிக்கும் சேவைக்கு ஏற்ற கட்டணம் வசூலிக்க வேண்டும், அதே சமயம் சேவையின் தரத்தை ஒரு போதும் குறைத்து விடக் கூடாது. நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் வருவாயை அதிகரிக்க நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களையும் நீங்கள் விற்பனை செய்யலாம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டாலே போதும், உங்கள் பியூட்டி பார்லர் சிறப்பாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பசுமை, அமைதி, சுத்தமான காற்று இதெல்லாம் வேண்டுமா..? இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு சென்று வாருங்க..!

April 14, 2023 0

 காற்று மாசுபாடு இல்லாத நகரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயங்களாக மாறிவிட்டது. காற்று மாசுபாடு என்பது 2 ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் கட்டுரை அல்ல, இந்தியாவில் காணப்படும் பல நோய்களுக்கு முக்கிய காரணம். நாம் அனைவருக்கும், இந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து ஏதாவது அமைதியான மற்றும் பசுமை நிறைந்த கிராமங்களுக்கு செல்ல ஆசை இருக்கும். அப்படி நினைக்கும் போது எல்லாம், நமது நியாபகத்திற்கு வருவது கேரளா மட்டும் தான். காற்றுத் தர குறியீடு (AQI) அளவை பொறுத்து ஒரு நகரத்தின் பசுமை நிலை அளவிடப்படுகிறது. அந்த வகையில் AQI அடிப்படையில் மிகவும் குறைவான காற்று மாசு கொண்ட இந்தியாவின் ஒரு சில நகரங்கள் பற்றி பார்க்கலாம்.

​ராஜமன்றி : ராஜமன்றி ஆனது ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கரத்தின் AQI அளவு ஆனது 18-ஆக உள்ளது.

அய்சால் : மிசோரத்தின் தலைநகராக இருக்கும் அய்சால், இதன் தட்பவெட்ப நிலை மற்றும் பசுமை தோற்றத்திற்கு பெயர் பெற்றது. சுத்தமான சுற்றுச்சூழலுக்கு அடையாளமாக உள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 20-ஆக உள்ளது.

சில்லாங் : வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள சில்லாங், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1525 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 21-ஆக உள்ளது.

அமராவதி : தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவின் தலைநகராக கருதப்படும் அமராவதி, கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இந்நகரின் AQI அளவு ஆனது 28-ஆக உள்ளது.

ஹவுரா : ஹவுரா, மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை நகரம் ஆகும். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 28-ஆக அளவிடப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் : கேரளாவின் தலைநகராக உள்ள திருவனந்தபுரம் இந்தியாவின் மிகவும் பசுமையான நகரம் என அறியப்படுகிறது. பார்க்கும் இடம் எல்லாம் நீர் நிலைகள் நிறைந்து காணப்படும் இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 30-ஆக உள்ளது.

மடிகேரி : கர்நாடக மாநிலத்தின் குடுகு மாவட்டத்தில் அமைந்துள்ள மடிகேரி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1170 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தின் AQI அளவு ஆனது 30-ஆக உள்ளது.

ஹாசன் : கர்நாடக மாநிலத்தின் மற்றொம் ஒரு பசுமையான நகரமாக ஹாசன் உள்ளது. இந்த நகரத்தின் AQI அளவு 30-ஆக இருக்கும் அதே நேரம், இந்த நகரம் பிரபலமான பேக்கரிகள் நிறைந்த ஒரு நகரமாகவும் உள்ளது.


ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்தியாவின் இந்த இடங்களில் இலவச உணவோடு தங்கலாம்..!

April 14, 2023 0

பயணம் என்பது யாருக்கு தான் பிடிக்காது. ஆனால் அந்த பயணத்தின் போது இரவு தங்கி ஓய்வெடுக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பது தான் கஷ்டமான விஷயம். நம் பட்ஜெட்டுக்குள் பார்த்தல் அது தூரமாக இருக்கும். வசதிகள் இருக்காது. வசதிகளை பார்த்தல் விலை எகிறும்.


அதனால் மதம் சார்ந்த குழுக்கள் இணைந்து மடங்களை உருவாக்குகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற பல ஆசிரமங்கள் உள்ளன. சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் இலவச தங்கும் வசதி உள்ள ஆசிரமங்களை மக்கள் பயன்பாட்டிற்கு விடுகின்றனர். அப்படியான சில இடங்களை பற்றி பார்ப்போம்.

கீதா பவன், ரிஷிகேஷ்:: வாழ்க்கையில் ஒரு முறையாவது கங்கைக்கரைக்கு போய் செய்த பாவங்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பர். அப்படி மக்கள் செல்லும் இடங்களில் ஒன்று ரிஷிகேஷ். ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கீதா பவன், ஆசிரமத்தில் 1000க்கும் மேற்பட்ட அறைகள் கொண்டு, பொது மக்கள் தங்க வசதி செய்து தருகிறது. ஆசிரமத்தில் லக்ஷ்மி நாராயண கோவில், மற்றும் நூலகம் உள்ளது. சுத்தமான சைவ உணவுகளை இங்கு உண்டு மகிழலாம்.

பாரத் ஹெரிடேஜ் சர்வீஸ், ரிஷிகேஷ்: இந்த இடம் மற்ற ஆசிரமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த ஆசிரமத்தில் தாங்கும் வசதியோடு  உடலுக்கும் மனதுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கே நீங்கள் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம் இலவச தங்குமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆசிரமத்தில் பல வெளிநாட்டவர்களும் உள்ளனர்.

ஆனந்தாஷ்ரம், கேரளா:ஆனந்தாஷ்ரமத்தில் நீங்கள் எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழலாம். உங்கள் மனதை மிகவும் அமைதிப்படுத்த உதவும். பாபா ராமதாஸ் நிறுவிய இந்த ஆசிரமம் ஏல உயிரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்குவதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

ஈஷா அறக்கட்டளை, கோயம்புத்தூர் - இந்த ஆசிரமம் வெள்ளியங்கிரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. மலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான ஆதியோகி சிவன் சிலையை இங்கு காணலாம். ஈஷா அறக்கட்டளையின் தங்குமிடங்களில் தன்னார்வ நடவடிக்கைகளில் பங்குபெறும் மக்களுக்கு இலவச தங்கும் வசதிகளைத் தருகிறது.

ஸ்ரீ ரமணாஷ்ரம்,தமிழ்நாடு - திருவண்ணாமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆசிரமத்தில் தங்குவதற்கு வாடகை செலுத்தத் தேவையில்லை. இங்கு சுத்தமான சைவ உணவை உண்டு மகிழலாம். அங்கிருந்து திருவண்ணாமலை கோவிலை தரிசிக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip