வாட்டும் வெயிலில் ஏசி இல்லாமல் இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஒருவேளை இருந்தாலும், இந்த காலநிலையில் மின் கட்டணம் எகிறும். ஆனால் செலவே இல்லாமல் உங்களையும், உங்கள் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க, சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.
கோடை காலத்தில் மின்விசிறி இல்லாமல் அறையை குளிரவைப்பது எப்படி? மின்விசிறியின் முன் ஐஸ் கட்டிகளை வைப்பதன் மூலமோ அல்லது ஈரமான துணியை தொங்கவிடுவதன் மூலமோ அறையை குளிரூட்டும் திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். விசிறிகள் வியர்வையை முழுவதுமாக உறிஞ்சாமல் இருக்கலாம், ஆனால் ஏர் கண்டிஷனிங்குடன் ஒப்பிடும்போது, அவை மின்சாரத்தைச் சேமிக்கும் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கும்.
நிறைய தண்ணீர் குடியுங்கள். வியர்வை மூலம் இழந்த அனைத்து நீர் மற்றும் அத்தியாவசிய தாதுக்களையும் நிரப்ப இது தான் முக்கிய வழி. நீரிழப்பைத் தடுக்க அதிக நீர்ச்சத்து கொண்ட கோடைகால பழங்கள் மற்றும் கோடைகால காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அருந்துவது போரடித்தால் மோர், மாம்பழச் சாறு மற்றும் சர்க்கரைகள் சேர்க்காத மில்க் ஷேக் ஆகியவற்றை பருகுங்கள். பயணத்தின்போது உங்களை ஹைட்ரேட் செய்ய இளநீர் ஒரு சிறந்த தேர்வு.
காரமான மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். குறைந்த எண்ணெய்யில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவும். வெள்ளரி, வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மிளகு சேர்த்த சாலட்கள், தயிர் வடை மற்றும் தயிர் சார்ந்த சுவையூட்டிகள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும்.
வாட்டர் மிஸ்ட்களை பயன்படுத்தி ஏசி இல்லாமல் அறையை குளிர்விக்கலாம். இது குளிரூட்டும் தொழில்நுட்பத்திற்கு ஒரு வரப்பிரசாதம். அதனுடன் அறையில் உள்ள பிரகாசமான விளக்குகளை அணைக்கவும்.
கோடையில் சாடின், பட்டு மற்றும் பாலிஸ்டர் துணிகளை தவிர்க்கவும். இது இரவு உடைக்கும் பொருந்தும். காட்டன் உடை போதுமான அளவு வியர்வையை உறிஞ்சி, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
ஏசி இல்லாமலேயே அறையை குளிரூட்டுவது உங்கள் வீட்டிலும் வாழ்க்கை முறையிலும் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாத்தியமாகும்.