Agri Info

Adding Green to your Life

May 1, 2023

குளுக்கோஸ் பாதிப்பு மூளையையும் தாக்குமா..? அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்..!

May 01, 2023 0

 அன்றாடம் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் குளுக்கோஸாக உடைக்கப்பட்டு, கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி நாம் உயிர் வாழ்வதற்கு காரணமாக அமைகிறது.

நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் குளுக்கோஸை எப்படி உண்கின்றன மற்றும் அவற்றை வளர்சிதை மாற்றம் செய்கின்றன என்பது பற்றியும், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்படும் பொழுது செல்கள் அவற்றை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பது பற்றியும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிளாட் ஸ்டோன் இன்ஸ்டிட்யூட் மற்றும் யூசி பிரான்சிஸ்கோ அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வயதானாலும் மூளையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர்.

கென் நக்காமுரா என்ற கிளாட்ஸ்டோன் ஆராய்ச்சியாளர் "மூளைக்கு அதிக அளவிலான குளுக்கோஸ் தேவைப்படும் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். ஆனால் நியூரான்கள் குளுக்கோஸை எந்த வகையில் சார்ந்து இருக்கின்றன என்பதும், அவை சர்க்கரையை உடைக்க என்ன மாதிரியான முறைகளை பின்பற்றுகின்றன என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை." என்று கூறுகிறார்.

நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகள் அனைத்தும் குளுக்கோஸ் ஆக உடைக்கப்படுகின்றன. உடைக்கப்பட்ட இந்த குளுக்கோஸானது கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அது உடல் முழுவதும் வழங்கப்பட்டு, செல்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதன் மூலமாக நாம் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கிறது. கிளயன் செல்கள் அல்லது மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள திசுக்களில் காணப்படும் செல்களானது பெரும்பாலான குளுக்கோஸை பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிளையன் செல்கள் குளுக்கோஸை மறைமுகமாக லாக்டேட் என்ற வளர்சிதை மாற்ற பொருளாக மாற்றி நியூரான்களுக்கு வழங்குகின்றன. எனினும் இந்தக் கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த கூற்றுக்கு ஆதாரம் திரட்டும் விதமாக ப்ளூரி போட்டன்ட் ஸ்டெம் செல்ஸ் முறையை பயன்படுத்தி சுத்தமான மனித நியூரான்களை நக்காமுரா குழுவினர் உருவாக்கினர். கிளையன் செல்கள் இல்லாத மனிதன் நியூரான்களை ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்குவது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலான காரியமாக இருந்தது.

பின்னர் இந்த நியூரான்களை ட்ராக் செய்யக்கூடிய ஒரு லேபிள் வடிவத்தில் உள்ள குளுக்கோஸுடன் கலந்தனர். நியூரான்கள் குளுக்கோஸை பயன்படுத்துவதும், அதனை சிறிய வளர்ச்சிதை மாற்ற பொருட்களாக மாற்றுவதும் இந்த ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டது.

ஜீன் எடிட்டிங் முறையை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் நியூரான்களிலிருந்து இரண்டு முக்கிய புரதங்களை நீக்கினர். அதன் மூலமாக அவை எவ்வாறு வளர்சிதை மாற்ற பொருட்களை பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இரண்டு புரதங்களில் ஒன்று குளுக்கோஸை பயன்படுத்தப்படுகிறது மற்றொன்று கிளைகாலிசிஸ் செயல்முறைக்கு காரணமாக அமைகிறது. இந்த புரதங்களில் ஒன்றை நீக்குவது மனித நியூரான்களில் குளுக்கோஸ் உடைப்பதற்கான செயல்முறையை முற்றிலுமாக நிறுத்தும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அடுத்தபடியாக எலிகளின் நியூரான்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. குளுக்கோஸைப் பெறுதல் மற்றும் கிளைகாலசிஸ் செயல்முறைக்கு காரணமான புரதங்கள் மூளை செல்களில் இருந்து நீக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த எலிகள் கற்பித்தல் மற்றும் நினைவுகள் பிரச்சனைகளை சந்தித்தன. இந்த ஆராய்ச்சி மூலமாக நியூரான்கள் எவ்வாறு அவற்றின் வழக்கமான செயல்முறைக்கு கிளைகாலசிஸை நாடி உள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிளைகாலிசிஸ் செயல்முறை மூலமாக ஆற்றல் கிடைக்காத போது நியூரான்கள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றனர் என்பது பற்றியும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

இதுவே ஒரு சில மூளை சார்ந்த நோய்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நியூரான்கள் பிறவகையான ஆற்றல் மூலங்களான கேலக்டோஸ் போன்றவற்றை பயன்படுத்துகிறது. எனினும் கேலக்டோஸ் அவற்றிற்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. ஆகையால் இது குளுக்கோஸ் வளர்சிதை மாற்ற இழப்பிற்கு கேலக்டோஸால் முழுமையாக சமரசம் செய்ய முடியவில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஸ்வீட் சாப்பிடும் க்ரேவிங்ஸை எப்படி கட்டுப்படுத்துவது..? உங்களுக்கான சில ஐடியாஸ்..!

May 01, 2023 0

 

பச்சிளம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரையில் எல்லோருக்குமே இனிப்புகள் என்றால் அலாதி பிரியம் தான். சாதாரண மிட்டாய்களில் தொடங்கி, பலகார வகைகள், ஜூஸ் வகைகள், உணவுகள் என சர்க்கரை சேர்க்கப்பட்ட எல்லாமே நமக்கு பிடித்தமானதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு சர்க்கரை நோய் அபாயம் மற்றும் இதர உடல்நல பிரச்சினைகளால் பலரும் சர்க்கரையை ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை தவிர்ப்பது கட்டாய தேவையாக இருப்பினும், மற்ற எல்லோரும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லதல்ல. அதே சமயம், நாம் எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறோம் என்ற கட்டுப்பாடு வேண்டும். அதிலும் நிறைவூட்டப்பட்ட சர்க்கரை ஆபத்தானதாகும். இந்த நிலையில், சர்க்கரையை தேடும் நம் மனதை கட்டுப்படுத்துவது எப்படி? இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

எதனால் சர்க்கரை வேட்கை அதிகரிக்கிறது?

சர்க்கரை வேட்கை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரற்ற நிலையில் இருப்பதால் இத்தகைய எண்ணம் மேலோங்குகிறது. சாப்பிட்ட பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு தேவையான ஆற்றலை அது வழங்கும். அதேபோல இனிப்புகளை சாப்பிடும்போது நம் உடலில் செரடோனின் என்னும் ஹார்மோன் அதிகரிப்பதால் நம் எண்ண ஓட்டங்கள் மேம்படும்.

போதிய தூக்கமின்மை காரணமாகவும் கூட இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் சர்க்கரை வேட்கையை கட்டுப்படுத்தலாம்.

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நம் உடலில் இன்சுலின் தன்மை மாறுபடும். ஆக, புரத உணவுகளை உட்கொள்ளும்போது சர்க்கரை வேட்கை குறையும்.
செரடோனின் ஹார்மோன் சுரப்பை மேம்படுத்தக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகளான நட்ஸ், பாலக்கீரை போன்றவற்றை உட்கொள்ளலாம். அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதாலும் சர்க்கரைக்கான வேட்கை அதிகரிக்கும். ஆகவே, போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
உணவுக்குப் பிறகு லவங்க பட்டை நீர் அருந்துவது நல்ல பலனை தரும்.
குடல் நலனை மேம்படுத்தக் கூடிய இட்லி, தோசை, தயிர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
உணவை பிரித்து கொஞ்சம், கொஞ்சமாக அவ்வபோது சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
வெந்தய நீர் அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும்.
தினந்தோறும் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசியமான ஃபேட்டி ஆசிட் உற்பத்தி இதனால் அதிகரிக்கும். அது சர்க்கரை வேட்கையை தணிக்கும்.
உடலில் விட்டமின் டி சத்து நிறைவாக இருப்பின், இனிப்புகள் மீது அதிக நாட்டம் ஏற்படாது. ஆகவே, தினசரி காலை அல்லது மாலை வேளையில் 15 நிமிடங்களாவது சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

குழந்தைகளுக்கு 'ஹெல்த் ட்ரிங்ஸ்’கொடுப்பது நல்லதா..? கெட்டதா..? குழந்தைகள் நல மருத்துவரின் பதில்..!

May 01, 2023 0

 கடந்த பல பல தசாப்தங்களாக பல நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸ்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. பல தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்து பார்த்தால், ஹெல்த் டிரிங்ஸ் என்ற பெயரில் நம் குழந்தைகளுக்கு நாம் கொடுப்பது சரியான உணவுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக குழந்தைகளுக்கான ஹெல்த் ட்ரிங்ஸ் தாயரிப்புகள் பற்றிய ஒரு முக்கிய கருத்தை முன்வைத்துள்ளார் பிரபல Neonatology and Pediatrics டாக்டரான சவுரப் கன்னா.  இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சவுரப் கன்னா, பெரும்பாலான பிராண்டுகள் தங்களது ஹெல்த் டிரிங்ஸ் தயாரிப்புகளை "எனர்ஜி மற்றும் வைட்டமின்ஸ் நிறைந்த ட்ரிங்ஸ்" என்று விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் மறுபுறம் குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் அதிக அளவு சர்க்கரை அவற்றில் பயன்படுத்தப்படுவதை எங்குமே குறிப்பிடவில்லை என்கிறார்.

மேலும் பேசிய சவுரப், பொதுவாக இந்த தயாரிப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. தவிர குழந்தைகள் வலுவாக இருக்கவும், உயரமாக வளரவும் உதவும் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றன. ஆனால் உண்மையில் எனர்ஜி ட்ரிங்ஸ் மற்றும் இத்தகைய ஹெல்தி ட்ரிங்க்ஸ்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியாது. இதை இம்யூனிசேஷன்/தடுப்பூசிகளால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்.

குழந்தைகளுக்காக வாங்கும் ட்ரிங்க்ஸ்களில் பெற்றோர்கள் சரிபார்க்க வேண்டியவை...

ஊட்டச்சத்து நிபுணர் அல்லது குழந்தை மருத்துவரின் பரிந்துரையின்படி, உணவு உட்கொள்வதன் மூலம் ஒரு குழந்தைக்கு கிடைக்காத ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து அல்லது குறைபாட்டை பொறுத்து, அந்த குழந்தைக்கு சப்ளிமென்ட்ஸ் (எனர்ஜி பானங்கள் போன்றவை) பரிந்துரைக்கப்படலாம். அப்போது ஒரு பெற்றோர் வாங்க நினைக்கும் ட்ரிங்ஸில் அதிக சுகர் கன்டென்ட் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ப்ரோட்டீன்ஸ், வைட்டமின்ஸ், மினரல்ஸ், டிஹெச்ஏ போன்றவை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் சில பொருட்களாகும். மேலும் இவற்றை குழந்தை உணவின் மூலம் எடுத்து கொள்ளும் நிலை வரும் வரை (சில காலம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சவுரப் கன்னா.

ஹெல்த் டிரிங்க்ஸை குழந்தைக்கு எப்போது பரிந்துரைக்க வேண்டும்.?

இந்த மாதிரியான சப்ளிமென்ட்ஸ் மற்றும் ஹெல்த் டிரிங்க்ஸ்களை குறிப்பிட்ட குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை உணவுகள் மூலம் வழங்க முடியாவிட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். இவற்றை நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது, மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் சவுரப் கன்னா.

இந்த ட்ரிங்க்ஸ்களை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தால் என்னென்ன சிக்கல்கள் வரலாம்..?

இந்த ட்ரிங்ஸ்களில் நிறைய ப்ராசஸ்டு சுகர்ஸ் உள்ளன. எனவே இவற்றை தொடர்ந்து குழந்தைகள் குடித்தால் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 27 மில்லியன் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவை தவிர்த்துவிட்டு, தங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை தவறவிடும் குழந்தைகள், இந்த ட்ரிங்ஸ்களை குடித்த பிறகு ஃபுல்-ஆனதாக உணரலாம். இது அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். தவிர இந்த ட்ரிங்ஸ்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இனிப்பு மற்றும் சாக்லேட் சுவைகளுக்கு குழந்தைகள் தொடர்ந்து அடிமையாகலாம் என்கிறார்.

மற்றொரு மருத்துவரான எட்வினா ராஜ் கூறுகையில் ஹெல்த் ட்ரிங்க்ஸ் தவிர ஜாம்ஸ், ஸ்ப்ரெட்ஸ், கேண்டீஸ், ஜெல்லிஸ், கேக்ஸ், பிஸ்கட்ஸ், கெட்ச்அப்ஸ் போன்றவை சர்க்கரையின் ஆதாரங்களாகும். ஒரு குழந்தையின் டயட்டில் இருந்து இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது, அப்படி செய்தல் அந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் குழந்தைகளுக்கு அதிகரிக்கும். எனவே அவற்றின் நுகர்வை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தலாம் என்றார்.

ஹெல்த் ட்ரிங்க்ஸ் பற்றி குறிப்பிட்ட எட்வினா ராஜ், ஒவ்வொரு ஹெல்த் டிரிங்க்ஸ்களும் கலவையில் வேறுபடுகிறது. இது அவற்றில் உள்ள additives-ன் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளது. மேலும் இவை 4 டீஸ்பூன் சப்ளிமென்ட்டில் 12-17 கிராம் வரை கார்போஹைட்ரேட்ஸ்களை கொண்டுள்ளன. இதை பாலில் சேர்க்கும் போது காலை உணவாக உட்கொள்ளும் தானியங்கள் / சப்பாத்தியின் ஒரு serving-க்கு சமம். எனவே ஒரு குழந்தையின் தினசரி உணவைத் திட்டமிடும் போது இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஹெல்த் ட்ரிங்க்ஸ் அதிக எடை மற்றும் வாழ்க்கை முறை நோய்களுக்கானஅபாயத்தை அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

ஆரோக்கிய மாற்று..!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பொருட்களை விட இயற்கை மூலங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமான மாற்றாக இருக்கும் என்கிறார் டாக்டர் கன்னா. உதாரணமாக பெற்றோர்கள் வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்கு மேங்கோ ஷேக் அல்லது வாழைப்பழ ஷேக் செய்து கொடுக்கலாம், இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

April 26, 2023

உப்பு மிளகாய் தூள் போட்டு மாங்காய் சாப்பிட ரொம்ப பிடிக்குமா..? அப்போ நீங்கதான் இதை படிக்கனும்..!

April 26, 2023 0

 அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி என மாம்பழங்களில் பல வகைகள் உள்ளன. மாம்பழங்களின் ருசி அருமையான இனிப்பு என்றாலும், மாங்காயையும் பெரும்பாலானோர் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பச்சை அல்லது பழுக்காத மாம்பழங்களான மாங்காய்களின் புளிப்பு மற்றும் தனித்துவமான சுவை சாப்பிடுவோருக்கு மிகவும் அலாதி அனுபவத்தை தருகின்றன. மாங்காயை பொடியாக நறுக்கி உப்பு தண்ணீரில் ஊற வைத்து சுவைக்கலாம். பல வீடுகளில் பச்சை மாங்காய் ஊறுகாய் முக்கியமான சைடிஷாக இருக்கிறது. மாங்காயை மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையோ அருமை.! எனவே மாங்காயை நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும்.!

மாம்பழங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.. இந்த கோடையில் பச்சை மாங்காய்களை உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே:

மாம்பழங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.. இந்த கோடையில் பச்சை மாங்காய்களை உட்கொள்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இங்கே:

இதய ஆரோக்கியம் : மாங்காய்களில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. மாங்காயில் இருக்கும் வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் ரத்த நாளங்களை தளர்த்த உதவுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதிக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது.

ஜீரணத்தை எளிதாக்குகிறது : மாங்காய்களில் amylases எனப்படும் செரிமான நொதிகள் உள்ளன, இவை கடினமான உணவு மூலக்கூறுகளை உடைக்க உதவுகின்றன. இதனால் அவை எளிதில் உறிஞ்சப்படுகின்றன. தவிர amylases என்சைம்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுகிறது.

கொலஸ்ட்ரால் கன்ட்ரோல் : நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள டீட்டாக்ஸிஃபிகேஷன் மிகவும் முக்கியமானது. பச்சை மாங்காய்களில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகின்றன. கூடுதலாக மாங்காய்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எடையை குறைக்க உதவுகிறது : மாங்காய்களில் குறைவான கலோரிகள் இருப்பதால் எடை இழப்பை இலக்காக கொண்டவர்களுக்கு உதவும். மேலும் மாங்காய்களில் ஃபேட் , கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதாலும் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. மாங்காய்களில் காணப்படும் C, K, A, B6 மற்றும் ஃபோலேட் உட்பட பல முக்கிய வைட்டமின்ஸ்கள் சிகிச்சை நன்மைகள் (therapeutic advantages) நிறைந்தவை. எனவே செரிமான பிரச்சனைகளை சரி செய்ய, பார்வையை மேம்படுத்த, உடல் எடையை குறைக்க ஆயுர்வேதத்தில் மாங்காய்கள் அடிக்கடி எடுக்க பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தப்பி தவறி கூட கோடையில் இந்த 6 இடங்களுக்கு மட்டும் சம்மர் வெக்கேஷன் பிளான் பண்ணிடாதீங்க…

April 26, 2023 0

 இந்தியா பரந்து விரிந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. எனவே, தான் வருடத்தில் 365 நாட்களும் எக்கச் சக்கமான வெளிநாட்டு பயணிகள் இந்தியாவை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இந்தியாவில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், கோடைக்காலத்தில் சில இடங்கள் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக கருதப்படுவதில்லை. கோடைக்காலத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடும் போது, சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்திய இளைஞர்கள் பலரின் கனவு, கோவாவுக்கு சுற்றுலா செல்வது. பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், அழகான நிலப்பரப்புகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், கோடை காலத்தில் வழக்கத்தை விட இரு மடங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். கோடைக்காலத்தில் காணப்படும் வெப்பத்தால், கடற்கரை அழகைகூட உங்களால் முழுமையாக ரசிக்க முடியாது. எனவே, ஏப்ரல் முதல் ஜூன் தொடக்கம் வரை கோவா செல்வதை தவிர்ப்பது நல்லது.


ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். காதல் சின்னமான தாஜ்மஹாலை காண ஆண்டு முழுக்க கோடிக்கணக்கில் மக்கள் வருகின்றனர். ஆனால், கோடைக்காலம் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க சிறந்த காலம் கிடையாது. ஏனென்றால், ஏப்ரல் முதல் ஜூலை வரை வெப்பநிலை மற்றும் வெப்ப காற்று அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டங்களில் அங்கு செல்வது பெரும் சவாலாக இருக்கும்.

இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெயசல்மர் (Jaisalmer) பிரமிக்க வைக்கம் மஞ்சள் நிற மணல் பரப்புகளை கொண்ட அழகான இடம். இங்கிருக்கும் மணல் திட்டுக்கள் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும், கோடைக்காலத்தில் 42 டிகிரி வரை கொளுத்தும் வெயிலால், நெருப்பு பூமியாக காணப்படும். இதனால், நீங்கள் அசெளகரியத்தை உணர்வீர்கள். எனவே, ஜூன் வரை இங்கு செல்லும் திட்டம் இருந்தால் அந்த திட்டத்தை கைவிடுவது நல்லது.

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் சென்னையில் அழகான கடற்கரை, பழங்கால கட்டிடங்கள், கோயில்கள் என ஏராளமான சுற்றுலா தளங்கள் இருந்தாலும், இதன் அழகை காண கோடைக்காலம் சிறந்தது அல்ல. இளைப்பாரல் பயணத்தை மேற்கொள்பவர்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை பயணத்தை தள்ளி வைத்து நல்லது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கஜுராஹோ (Khajuraho) பகுதியில் காணப்படும் அழகான சுவர் சிற்பங்கள் இடைக்கால பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. இது கலை மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறந்த இடமாக இருந்தாலும், இதை கண்டு ரசிக்க கோடைக்காலம் சிறந்தது அல்ல. பார்ப்பதற்கு பசுமையாக இருந்தாலும், பல்லை காட்டும் கோடை வெயிலின் தாக்கத்தை உங்களால் சமாளிக்க இயலாது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்க கோயில் அனைத்து மதத்தினரும் செல்லும் கோயிலாக உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவதால் எப்போதும் கூட்டம் நிறைந்த பகுதியாகவே காணப்படுகிறது. உச்சகட்ட வெயில் காலமாக இருக்கும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதை ரசிப்பதை காட்டிலும், இனிமையான அனுபவத்தை பெற நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை செல்வது சிறந்தது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இந்தியாவின் பெரிய புத்தக கிராமமாக மாறும் காஷ்மீர் அரகம்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

April 26, 2023 0

 இன்றைய தலைமுறைகள் கைகளில் புத்தகத்தை எடுத்து படிக்கும்  பழக்கமே இல்லாமல்  வருகின்றனர். இவர்களுக்கு பாட புத்தகம் தாண்டி கதை, கவிதை, என்று எதையும் புத்தகத்தைத் தொட்டு, பக்கங்களை கையால்  திருப்பி படிக்கும் ஆசை இல்லை. போன், டேப்லெட், கணினி என்று திரைகளை சார்ந்தே வளர்க்கிறார்கள்.

இவர்களுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுவரவும் பல அமைப்புகளும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. ஒரு தனியார் கடை கூட வாங்கும் பொருளோடு புத்தகம் இலவசம் என்று அறிவித்துள்ளது.

இதே போல வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அரகம் கிராமத்தை  நாட்டின் மிகப்பெரிய புத்தக கிராமமாக  மாற்ற புனேவைச் சேர்ந்த சர்ஹாத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான திட்ட வரையறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.

ஏன் அரகம் கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதற்கான காரணம் இன்னும் சுவாரசியமானது. புத்தகம் படிப்பது என்பது எவ்வளவு சுவாரஸ்யமானதோ அதேபோல எங்கே இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம். படிக்க அமர்ந்து இருக்கும் சூழலே நம்மை படிக்க தூண்டுவதாக இருந்தால் அது நிச்சயம் சொர்க்க லோக அனுபவம்தான்.

அப்படி இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் தான் அரகம் . மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளைப் பற்றி  ஆராயவும் உதவும் இயற்கை எழில் நிறைந்த பகுதி என்பதால் தான் இந்த இடத்தை நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. புத்தகம் படிக்கும் சூழல் நம்மை லயித்து போக வைக்கவும், சிந்திக்க வைப்பதாகவும் இருப்பது வரமன்றோ?

அந்த வகையில்  காஷ்மீரில் அரகத்திற்கு இணையான இடம் இருக்க முடியாது என்றும், காஷ்மீர் இலக்கியம் மற்றும் காஷ்மீரின் வளமான வரலாற்றை ஆராயவும், இந்த கிராமம் சரியான இடமாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடம் புத்தகங்களை ரசிக்கும்போது மாறுபட்ட இயற்கை பாதைகள் நிதானமாக நடப்பது மற்றும் பல மீன்பிடி இடங்களில் அமர்ந்து வாசிப்பது போன்ற கூடுதல் விருப்பங்களை வழங்க இருக்கிறது.

இதைப் பற்றி மேலும் விவரித்த தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி, புத்தகக் கிராமம் பற்றிய யோசனை  புதியது அல்ல. ஆனால் காஷ்மீரின் அழகான கிராமத்தில் அமர்ந்து கலையையும், இயற்கையையும்,  அதோடு பண்டைய மற்றும் நவீன இலக்கியங்கள், காஷ்மீரின் வரலாறு ஆகியவற்றைப் பெறக்கூடிய ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரவே முயல்கிறோம் என்றும் கூறினார்.

புத்தகங்கள் மட்டுமல்லாது காஷ்மீரின்  நாட்டுப்புற கலாச்சாரத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியையும் இந்த திட்டம் எடுத்து வருகிறது. இந்த புத்தக கிராமத்தில்  காஷ்மீரின்  பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் மக்கள் படிக்கவும் சிந்திக்கவும் இரவலாகக் கிடைக்கும். நடந்துகொண்டே, ட்ரெக்கிங் போய்க்கொண்டே கேட்கும் ஆடியோ புத்தகங்களும் இங்கு கிடைக்கும்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆப்பிள் சுற்றுலா மற்றும் பார்டர் டூரிஸத்தை சர்ஹாத் திட்டமிட்டுள்ளதாகவும், புத்தக கிராமத்தை சுற்றுலா சர்கியூட்களில்  ஒருங்கிணைத்து, மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கவும், புத்தக கிராமத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும்  NGO முயற்சித்து வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் கிராம கட்டமைப்பில்  ஒரு முக்கிய கட்டிடம் உள்ளது. அது இலக்கியவாதிகள் மற்றும் படிக்கும் சமூகத்தின் வழக்கமான பயன்பாட்டிற்காக ஒரு பெரிய நூலகத்தைக் கொண்டிருக்கும். இது ஆரம்பத்தில் உருது, ஆங்கிலம், காஷ்மீரி, இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் புத்தகங்களைக் கொண்டிருக்கும். பின்னர் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டியோ பயிற்சியில் உடல் எடையை குறைக்க வேண்டுமா..? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

April 26, 2023 0

 எடை இழக்க விரும்புபவர்களுக்கு கார்டியோ பயிற்சி ஒரு சிறந்த ஆப்ஷனாக அமையும். ஒருவர் தினமும் எந்த அளவிற்கு கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அந்த வகையில், எடை இழப்புக்கு உதவக் கூடிய ஒரு பிரபலமான பயிற்சி முறை தான் கார்டியோ. கலோரிகளை எரிப்பதன் மூலமும், தசைகளை ஈடுபடுத்துவதன் மூலமும், உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலமும், கட்டுப்படுத்தப்பட்ட சுவாசத்தை ஊக்குவிப்பதன் மூலமும் இது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.

கார்டியோவில் நிறைய வகைகள் உள்ளன, உங்களுக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் தேர்வு செய்தால் கண்டிப்பாக பலனளிக்கும். தினமும் எவ்வளவு நேரம் கார்டியோ செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

எடை இழப்புக்கான கார்டியோ பயிற்சிகள் : கார்டியோவில் நடைபயிற்சி செய்தல், ஜாகிங் செய்தல், நீச்சலடித்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT), ஜம்பிங் ரோப், ரோயிங் மற்றும் நீள்வட்டப் பயிற்சி ஆகியவை அடங்கும். நீங்கள் எடை குறைப்பதில் தீவிரமாக இருந்தால், கார்டியோ உடற்பயிற்சி வகுப்புகளிலும் சேரலாம். இந்த உடற்பயிற்சிகள் அனைத்தும் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து கலோரிகளை எரிக்க உதவுகின்றன.

சரியான முடிவுகளை பெற ஒருவர் எந்த அளவிற்கு கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்? உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் தினமும் கார்டியோ பயிற்சிகளை செய்வது அவசியம் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் தினமும் எவ்வளவு மணி நேரம் கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். பொதுவாக, நீங்கள் இப்பொழுது தான் கார்டியோ பயிற்சிகள் செய்யத் தொடங்கி உள்ளீர்கள் என்றால், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான-தீவிரமான கார்டியோ பயிற்சிகளை தவறாமல் செய்வதை இலக்காக அமைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் இப்பயிற்சிகளை வெகு நாட்களாக செய்து வந்தால், அதி-தீவிர கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்தால், வாரத்திற்கு 75 நிமிடங்களுக்கு கார்டியோ பயிற்சிகளை செய்யலாம். அதே சமயம், எடை இழக்கும் ஆர்வத்தில் கார்டியோ பயிற்சிகளை அளவுக்கு அதிகமாகவும் செய்யக் கூடாது. உங்கள் உடல் போதும் என்று சிக்னல் காட்டினால், நிறுத்தி விடுங்கள். ஏனெனில், அதிகப்படியான கார்டியோ பயிற்சிகள் எரிச்சல் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கலாம்.

தொப்பையை குறைப்பதற்கான சிறந்த கார்டியோ பயிற்சிகள்
அனைத்து வகையான கார்டியோ பயிற்சிகளும் கலோரிகளை எரிக்க உதவுகின்றன. அதே வேளையில், உங்கள் தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில், ஓடுவது சிறந்த முடிவுகளைக் கொடுக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் உணவு முறைகளை மாற்றாமலும் கூட, நீங்கள் மிதமான வேகத்தில் தொடங்கி அதி வேகம் வரை ஓடுவது தொப்பையைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.

இருப்பினும், மெதுவாகத் தொடங்கி படிப்படியாக உங்கள் வேகத்தையும் தீவிரத்தையும் அதிகரிப்பது முக்கியம். அதே சமயம், கலோரி அதிகமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், எவ்வளவு தான் ஓடினாலும், அது உங்களுக்கு பலனளிக்காது. தினமும் சைக்கிளிங் கூட செய்யலாம். எனவே, சமச்சீரான உணவு உண்டு, மேற்கூறியவாறு போதிய கார்டியோ பயிற்சிகளை செய்தாலே போதும், உங்கள் தொப்பைக்கு குட் பை சொல்லிவிடலாம்!

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

செரிமான பிரச்சனை வாட்டி எடுக்குதா..? நீங்க ஏன் இந்த கை வைத்தியத்தை டிரை பண்ணி பார்க்கக்கூடாது..?

April 26, 2023 0

ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பானது மனம் மற்றும் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனினும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவும் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நாம் உண்ணும் முறையும், உணவுகளும் தற்போது மாறிவிட்டன. அதிகப்படியான ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது எரிச்சல் கொண்ட குடல் நோய் குறி, லாக்டோஸுக்கான சகிப்புத்தன்மை மற்றும் கசிவுக் குடல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பானது மனம் மட்டும் உடல் சார்ந்த நோய்களை உண்டாக்கும் என்பது நாம் பலரும் அறிந்ததே. செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் நமது வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படும். மேலும் மன ரீதியான சிக்கல்கள் உண்டாகும்.

ஆரோக்கியமான செரிமான அமைப்பு என்பது என்ன? சீரான முறையில், சரியான செரிமானம் நடைபெற்று ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் முறையாக நடைபெறுமாயின் அது ஆரோக்கியமான செரிமான அமைப்பாக கருதப்படுகிறது. மேலும் ஆரோக்கியமான செரிமான அமைப்பில் வீக்கம் மற்றும் அசௌகரியம் குறைவாகவே இருக்கும். செரிமான அமைப்பில் காணப்படும் சிறு குடல் மற்றும் பெருகுடல் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவுகளை செயலாக்கி அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் முதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு அளிப்பது வரை செரிமான அமைப்பு பல வேலைகளை செய்கிறது. ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பு வாழ்க்கையின் தரத்தை பாதிக்கக்கூடும். உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன.

இஞ்சி : இஞ்சியில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் காணப்படுவதால் இது செரிமான அமைப்பில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இஞ்சி டீ பருகுவது, குழம்பு சமைக்கும் போது ஒரூ துண்டு இஞ்சி சேர்ப்பது போன்றவை உங்களுக்கு உதவக்கூடும்.

ப்ரோபயோடிக்கள் : ப்ரோபயோடிக்கள் என்பது செரிமான அமைப்பில் உள்ள பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்களை ஆகும். புளிக்க வைக்கப்பட்ட உணவுகளான தயிர், மோர் மற்றும் ஒரு சில காய்கறிகள் ப்ரோபயோடிக்கள் பெற சிறந்த வழியாகும். ஒரு சுகாதார நிபுணரை சந்தித்து ப்ரோபயாட்டிக் சப்ளிமென்ட்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

புதினா எண்ணெய் : புதினா எண்ணெயில் காணப்படக்கூடிய அமைதிப்படுத்தும் விளைவுகள் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. தேநீர் தயாரிக்கும் பொழுது ஒரு சில புதினா இலைகளை சேர்த்து பருகலாம் அல்லது புதினா அத்தியாவசிய எண்ணெயை வாங்கியும் பயன்படுத்தலாம்.

சிலிப்பொி எல்ம் (Slippery elm) : சிலிப்பொி எல்ம் என்ற மூலிகை பல நூற்றாண்டுகளாக செரிமான கோளாறுகளை சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான அமைப்பில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலமாக வீக்கத்தை குறைத்து குடலை ஆற்ற உதவுகிறது. நீங்கள் கடைகளில் கிடைக்கக்கூடிய சிலிப்பொி எல்ம் சப்ளிமெண்டுகளை பவுடர் அல்லது காப்ஸ்யூல் வடிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

எலும்பு சூப் : எலும்பு சூப்பானது எலும்புகள், இறைச்சி மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுவதால் இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாக கருதப்படுகிறது. இதில் ஏராளமான கொலாஜன், ஜெலட்டின் மற்றும் செரிமான அமைப்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கடைகளில் எலும்பு சூப் விற்பனை செய்யப்பட்டாலும் அதனை வீட்டில் தயார் செய்து சாப்பிடுவது சிறந்தது.

ஒருவரது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வீட்டு வைத்தியங்கள் உதவினாலும் இதனை ஒரு மருந்துகளுக்கு மாற்றாக ஒருவர் கருதக்கூடாது. நீங்கள் நாள்பட்ட செரிமான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தால், உங்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ள நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஃபிரிட்ஜில் ஒருபோதும் இந்த பழங்களை ஸ்டோர் பண்ணி வைக்காதீங்க.. மீறினால் ஃபுட் பாய்சன் ஆகிடும்..!

April 26, 2023 0

கோடை காலத்தில் எந்த உணவாக இருந்தாலும் சீக்கிரமே கெட்டுவிடும். எனவே அளவாக சமைத்து பிரெஷாக சாப்பிடுவதே சிறந்தது. இதில் உணவுகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் கூட வெளியே வைத்தால் கெட்டுவிடும். இதுபோன்ற காரணங்களால்தான் கோடையில் ஃபிரிஜின் தேவை அதிகமாக இருக்கிறது. 


அதற்காக எதை வேண்டுமென்றாலும் ஃபிரிஜில் வைத்துவிடலாம் என்கிற எண்ணமும் தவறு. சில பழங்களை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அவை உங்களுகே விஷமாக மாறும். அந்த வகையில் கோடைக்காலத்தில் ஃபிரிட்ஜில் அடிக்கடி இந்த பழங்களை வைக்கிறீர்கள் எனில் இன்றே தவிர்த்திடுங்கள்.

Marthastivert.com இல் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின்படி, குளிர்சாதன பெட்டியில் வைத்தால் தீங்கு விளைவிக்கும் பல பழங்கள் உள்ளன. எந்தெந்த பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்று பார்ப்போம்



தர்பூசணி: இது ஆச்சரியமாக இருந்தாலும், தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது. தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, ​​அதில் உள்ள சத்துக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். தர்பூசணியை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால், ஃபுட் பாய்சன் அபாயமும் அதிகரிக்கிறது. ஏனெனில் வெட்டப்பட்ட தர்பூசணியை ஃபிரிட்ஜில் அப்படியே வைப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கின்றன. அவற்றை அப்படியே நேரடியாக உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க. எனவே ஒருபோதும் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.

ஆரஞ்சு - ஆரஞ்சு பழம் அமிலம் நிறைந்தது. இந்த அமிலம் குளிர்சாதனப் பெட்டியின் குளிரைத் தாங்க முடியாமல் அதன் சத்துக்களை இழக்கிறது. எனவே எந்த சிட்ரஸ் பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்க வேண்டும். தேவைப்பட்டால் குளிர்ந்த நீரில் போட்டு வையுங்கள்.

ஒரு அறிக்கையின்படி, ஆப்ரிகாட், ஆசிய பேரிக்காய், வெண்ணெய், வாழைப்பழம், கொய்யா, கிவி, மாம்பழம், தர்பூசணி, பப்பாளி, பேரீச்சம்பழம், பீச், பேரிக்காய், பேரிச்சம் பழம், பிளம்ஸ் போன்றவற்றையும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது . ஏனெனில் இந்த பழங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தவுடன் அவற்றின் குணங்களை இழந்துவிடும். மாம்பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறைந்து ஊட்டச்சத்து மதிப்பும் குறைகிறது.




கோடைக்காலத்தில் முலாம் பழம் அவசியம் சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

April 26, 2023 0

 


கோடைக்காலம் வந்திடுச்சு, வெயில் வாட்டி வதைக்கிறது.. சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர்ச்சத்து இன்றி உடல் சோர்வாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.

இதுப்போன்ற நேரத்தில் தான் நாம் தர்பூசணி, முலாம்பழம், கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்ற அதிக நீரேற்றம் உள்ள பழங்களைத் தான் தேர்வு செய்வோம். இப்படி கோடைக்காலத்திற்கு உடலை நீரேற்றத்துடன் வைக்கக்கூடிய முலாம்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதோ இதன் முழு விபரம் இங்கே..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் : முலாம்பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் தொடர்ச்சியாக இந்த கோடைக்காலத்தில் முலாம்பழங்களை சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.



சிறுநீரக பிரச்சனைக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளாமான சைலோகைன்கள் உள்ளது. இவை சிறுநீரக கற்களைத் தடுக்கவும், நம்முடைய உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவியாக உள்ளது.

மலச்சிக்கலுக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளமான நீர்ச்சத்துக்கள் உள்ளது போன்று அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளது. இவற்றை நீங்கள் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக இயக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியம் : முலாம்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாகும். ஏனெனில் அதன் சதை முதல் விதைகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருந்தப் போதும் சரியான அளவில் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பல்வேறு நோய்களில் இருந்து உடலை திறம்பட பாதுகாக்கும். மேலும் முலாம்பழத்தில் உள்ள விதைகள் மற்றும் பழத்திலிருந்து ஒரு பேஸ்டை தயாரிப்பதன் மூலம் இயற்கையான பேஸ் மாஸ்க் செய்ய முடியும். இந்த பேஸ்ட்டை நீங்கள் உபயோகிக்கும் போது, சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி மற்றும் கருந்தழும்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவியாக உள்ளது.



சரும ஆரோக்கியம் : முலாம்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாகும். ஏனெனில் அதன் சதை முதல் விதைகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருந்தப் போதும் சரியான அளவில் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பல்வேறு நோய்களில் இருந்து உடலை திறம்பட பாதுகாக்கும். மேலும் முலாம்பழத்தில் உள்ள விதைகள் மற்றும் பழத்திலிருந்து ஒரு பேஸ்டை தயாரிப்பதன் மூலம் இயற்கையான பேஸ் மாஸ்க் செய்ய முடியும். இந்த பேஸ்ட்டை நீங்கள் உபயோகிக்கும் போது, சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி மற்றும் கருந்தழும்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவியாக உள்ளது.

இது மட்டுமின்றி, முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ தலை முடி ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றது. மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், உடல் எடைக்குறைப்பு, ஆரோக்கியமான தோல் வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவியாக உள்ளது. எனவே இந்த கோடைக்கால சீசனில் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முலாம்பழத்தை மறக்காமல் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

போல்டான பெண்களிடம் இருக்கும் குணங்கள்.. உங்களிடம் இதெல்லாம் இருக்கா..?

April 26, 2023 0

 

உறுதியான பெண்களுக்கென சில குணாதிசியங்கள் உள்ளன. அத்தகைய குணாதிசியங்களைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே பொறுமை என்று முன்பெல்லாம் கூறுவது வழக்கம். அதே போல், பெண்களின் குணங்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரு பெரும் பட்டியலே இருக்கும். ஆனால், இந்தப் பதிவில் உறுதியான பெண்கள் என்னென்ன குணாதிசியங்கள் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


நம்பிக்கை : பொதுவாக உறுதியான பெண்களுக்கு நம்பிக்கை தான் பக்க பலமாக இருக்கும். அவர்களிடத்தில் அசாதாரணமான குணங்கள் நிறைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தங்களால் என்ன முடியும் என்பதை நன்கு அறிந்தே செயல்படுவார்கள். ஆம், நம்பிக்கையுடன் தங்கள் மதிப்பறிந்து செயல்படுவதே அவர்களின் பலம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


சுதந்திரம்: உறுதியான பெண்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவது வழக்கம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை போல தன்னிறைவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இலக்குகள், விருப்பங்கள், மற்றும் லட்சியம் என அமைத்து, அதை நோக்கி நம்பிக்கையுடன் சுதந்திரமாக பயணிப்பதே அவர்களின் சிறப்பு.

சமத்துவம் : ஆண், பெண் என்ற வித்தியாசம் அல்லது பேதம் பார்க்காமல், தங்களை சமத்துவத்துவத்துடன் அனைவரும் பார்க்க வேண்டும் நடத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். சமமான மரியாதை அளிக்கப் பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். எந்த விதமான பேதமோ, தவறான கையாளுதலோ இருந்தால், அதனை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

தெளிவான தகவல் பரிமாற்றம் : எந்த ஒளிவு மறைவும் இல்லாத உண்மையான தகவல் பரிமாற்றத்தையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தேவைகள் மற்றும் யோசனைகளை எந்த வித தயக்கமும் இன்றி தெளிவாக வெளிப்படுத்துவார்கள். அதே போல் அவர்களின் துணையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எல்லைகள் அறிந்து செயல்படுதல் : அவர்களின் எல்லைகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். தங்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அறிந்து அவர்கள் தங்கள் நல்வாழ்வு குறித்து விழிப்புடன் இருந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களுக்கான நேரத்தை அமைத்து கொள்வார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த குணங்கள் அத்தனையும் உங்களுக்கும் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஒரு உறுதியான பெண். இந்த மன உறுதி கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க பக்க பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கொட்டிக் கிடக்கும் வேலை

April 26, 2023 0

 TNHRCE DEPARTMENT JOBS: திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் வட்டம் , சின்னமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்எண்ணிக்கைசம்பள விகிதம்கல்வித்தகுதி
வழக்கு எழுத்தர்118500 –58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;
சீட்டு விற்பனை எழுத்தர்218500 – 58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;
தட்டச்சர்118500 – 58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் ; தமிழிலில் இளநிலை கணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
காவலர்415900-50400 Pay Matrix-17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
தோட்டக்காரர்111600-36800 pay matrix-12தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
திருவலகு215900-50400 Pay Matrix - 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
கூர்க்கா115900 - 50400 Pay Matrix – 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
உதவி மின் பணியாளர்116600-52400 Pay Matrix -18மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் 01.07.2022ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பப் படிவத்தை sivanmalaimurugan.hrce.tn.gov.in  மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 17.05.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணியசுவாமி சுவாமி திருக்கோயில்,சிவன்மலை - 638701, காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பபட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் , ரூ. 50/- மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு - பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

April 26, 2023 0

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:

1.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2.வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

4.இருப்பிடம்: சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

5.பாலினம்: பெண்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-29.04.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி-

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 29.04.2023-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை

April 26, 2023 0

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (non- priority) வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 10.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம்,

அண்ணா நகர், தான்தோன்றிமலை,

கரூர்- 639 005.

நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல் (அ) வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்