Agri Info

Adding Green to your Life

May 2, 2023

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ. 1 லட்சம் வரை மாதச் சம்பளம்

May 02, 2023 0

 தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய  இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குறிய கடைசி நாள் 26.05.2023 ஆகும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி: தடவியல் அறிவியல்  படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

இயற்பியல், வேதியியல், உயிரியியல், இயற்பியல் & வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 – 1,35,100/-(நிலை-18)

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம் :

விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.inwww.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம்ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசின் இந்த செய்தி உங்களுக்குத் தான்

May 02, 2023 0

 தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு  (GST and E-way Billing (Advance) குறித்து இணையவழி பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு , அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை  3 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா... ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

May 02, 2023 0

 

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா... ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உடல் எடை கூடுவதை போல் அவர்கள் உயரமும் அதிகரிக்க வேண்டும். 2-10 வயதுக்கு இடையில், குழந்தைகள் சீரான வேகத்தில் வளர்கிறார்கள், ஆனால் குழந்தைகள் வளர வளர உயரமாக ஆவதன் வேகம் குறைகிறது. 15 - 18 வயது வரை வளர்ச்சி என்பது சிறிது குறைவாகவே இருக்கும். பிறந்த குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியைக் கண்காணிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல குழந்தைகள் வளர வளர அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும் அவசியம். 

இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல. எனவே குழந்தைகளின் உயரம் அதிகரிக்க உதவும் உணவுகளை உண்பதன் மூலம் அவர்கள் உயரத்திலும் நன்றாக வலர்வார்கள்.

குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும் சில உணவுகள்!

1. பால்

ஏறக்குறைய அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுவதால், பால் ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கின்றன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுங்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.

2. பச்சை இலை காய்கறிகள்

சில குழந்தைகள் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் எண்ணெய் அல்லது நொறுக்குத் தீனிகளை விரும்புகிறார்கள், ஆனால் இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், பச்சைக் காய்கறிகளை உண்ணும்படி பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்துவது முக்கியம். இதிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும். முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் கீரைகள் ஆகிய பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.

3. பழங்கள்

அனைத்து வயதினரும் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று நீங்கள் விரும்பினால், இன்றிலிருந்து குழந்தைகளுக்கு பழங்களை ஊட்டத் தொடங்குங்கள். சீசனில் கிடைக்கும் பழங்களை கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் சீசனில் கிடைக்கும் அந்தந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் அதன் ஊட்ட சத்துக்களை முழுமையாக பெறலாம்.

4. முட்டை

முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாக அறியப்படுகிறது. காலை உணவில் உங்கள் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டைகளை கொடுக்க வேண்டும். புரதம் தவிர, இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். சூப்பர் புட் என கருதப்படும் முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

5. பருப்பு வகைகள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள. அவை உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கான உணவுகளில் தினமும் பருப்புகளை சேர்க்க வேண்டும். இது குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும். 


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிரிட்ஜ் தண்ணீருக்கு NO சொல்லுங்க..! பானை தண்ணீரின் நன்மைகள் இதோ..!

May 02, 2023 0

 இந்த ஆண்டு வழக்கத்தை விட எல்லா பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலை 10 மணிக்கெல்லாம் வெளியிலின் கடுமை அதிகரித்து மாலை 5 மணி வரை நீடிக்கிறது. சூரிய கதிர்கள் வெளியில் செல்வோரை குத்துகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடலில் நீர் சத்தை தக்க வைக்க அவரவர் உடலுக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீரை பருக வேண்டும். அதேநேரத்தில் சூட்டை தணிக்க பலரும் பிரிட்ஜ் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனைவிட பானை நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதனை தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்களும் பானை தண்ணீருக்கு மாறிவிடுவீர்கள். 

குளிர்ந்த நீர்

பொதுவாக, வெயிலின் காரணமாக நாக்கு அடிக்கடி வறண்டு போய் காணப்படும். இதனால், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில், குடம் உள்ளிட்டவற்றில் இருக்கும் போது அதனுடன் சேர்ந்து, நீரும் சூடாகி விடும். இந்த சூடான நீரைக் குடிக்கும் போது, நமக்கு தாகம் அடங்காமல் இருக்கும். எனவே, தாகம் தணிய குளிர்ந்த நீரைப் பருகலாம்.

ஃபிரிட்ஜ் நீரைக் குடிக்கலாமா.?

தற்போதைய கால கட்டங்களில் குளிர்ந்த நீர் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது குளிர்சாதனப்பெட்டி தான். ஆனால், நாம் வெயிலில் சென்று வந்து உடனே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைப் பருகும் போது உடல் சூடு அதிகமாவதை உணரலாம். அதே சமயம், இந்த குளிர்ச்சி இருமல், சளி உள்ளிட்டவற்றை வரவைக்கலாம். எனவே, பெரும்பாலும் ஃபிரிட்ஜ் நீரைப் பருகாமல் இருப்பது நல்லது.

பானை தண்ணீர்

ஃபிரிட்ஜ் நீர் வேண்டாம் என்றால், வேறு எந்த நீர் குளிர்ச்சியாக இருக்கும். நம் முதியோர்களின் நடைமுறையாக விளங்கிய பானைத் தண்ணீர் உடலுக்கு மிக அதிக நன்மைகள் அளிக்கிறது. அதே சமயம், நோய் தடுப்பானாகவும் உதவுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் பானை இயற்கையான முறையில் தண்ணீரை சேமிக்கும் சிறந்த வழியாகும். இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால், நாம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம்.

மண்பானை நீரின் நன்மைகள்

இயற்கையான குளிர்ச்சி

களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் நீர் சரியான வெப்பநிலையில் இருக்கும். எனவே, இது குளிர்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், தொண்டை இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பக்கவாதம் வராது

பொதுவாக, கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, சூரியக் கதிர்களால் பக்கவாதம் ஏற்படும். மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகும் போது, அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நம் உடலைக் குளிரூட்டுவதுடன், குளுக்கோஸின் அளவைப் பராமரிக்கிறது. இது சன் ஸ்ட்ரோக் எனப்படும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தைக் குறைக்கிறது.

நச்சுத்தன்மை இல்லாதது

களிமண் பானையில் உள்ள தண்ணீரில் எந்த வித நச்சு இரசாயனங்களும் இருக்காது. எனவே, இந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.

பருவகால நோய்களை சரிசெய்ய

கோடை வெப்பத்தால், சரும நோய், அம்மை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மண் பானை நீரில் இருக்கக் கூடிய கனிம சத்துக்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மெட்டபாலிசம் அதிகரிப்பு

சாதாரண நீரை விட, களிமண் பானையில் சேமித்து வைக்கும் நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சமன் செய்யப்படுகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை... சர்க்கரைநோய் வருமா?

May 02, 2023 0

 மருத்துவர் சஃபி

உங்களுடைய வயது என்ன என்று நீங்கள் குறிப்பிடவில்லை. வயதைக் குறிப்பிட்டிருந்தால் உங்கள் கேள்விக்கான பதிலை இன்னும் விரிவாகச் சொல்ல முடியும். சர்க்கரையும், இனிப்புகளும் அதிகம் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என்று சொல்வோம்.


நம் உடலானது நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை மற்றும் உணவுகளுக்குத் தேவையான இன்சுலினை சுரக்காமல் எதிர்நிலை ஏற்படும் வாய்ப்பையே இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் என்கிறோம். இதன் விளைவாக பின்னாளில் உடல்பருமன் பாதிப்பு வரலாம். 


பெண்ணாக இருந்தால் ஹார்மோன் பாதிப்புகளும் வரலாம். சர்க்கரைநோய் வரும் ஆபத்தும் நிச்சயம் உண்டு.


இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரைநோய் வரும் என்று இதைப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையும் இனிப்புகளையும் எடுத்துக்கொள்ளும்போது அதன் விளைவாக சர்க்கரைநோய் பாதிக்கும்.


சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிடும் வழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறீர்கள்... குறைந்தபட்சம் நீங்கள் உண்ணும் உணவுகளின் கலோரிகளை எரிப்பதற்கான நடவடிக்கைகளிலாவது இறங்க வேண்டும்.

நீரிழிவு நோய்

தினமும் வாக்கிங் செல்வது, ஏரோபிக்ஸ் போன்ற ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது போன்றவை மிக முக்கியம். மன உறுதி இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியும். முயற்சி செய்யுங்கள். 

நீரிழிவு வந்துவிட்டால் உங்களால் எப்போதுமே இனிப்பு சாப்பிட முடியாது. எனவே அது வருவதற்கு முன்பே இனிப்பு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்திக் கொண்டால், எப்போதாவது ஆசைப்படும்போதாவது சாப்பிட முடியும்.

May 1, 2023

ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைவது சாத்தியமா... அது சரியானதா?

May 01, 2023 0

 ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே...

அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஷீபா தேவராஜ்

ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ குறைவதெல்லாம் ஆரோக்கியக்கேடான விஷயம்தான்.

அப்படி ஒருவர் அதீதமாக எடை குறைகிறார் என்றால் அவர் மிகக் குறைந்த அளவே சாப்பிடுகிறார் அல்லது எந்தவிதச் சத்துகளும் இல்லாமல் சாப்பிடுகிறார் என்றே அர்த்தம்.

வெறித்தனமாக எடையைக் குறைக்கும் முயற்சியில் இப்படி உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கும் எத்தனையோ பேரை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். வெறும் நட்ஸ் மட்டும் சாப்பிடுவது, காய்கறி ஜூஸ் குடிப்பது என தீவிரமாக இருந்து 5 கிலோ, 10 கிலோவெல்லாம் எடையைக் குறைப்பார்கள். இது மிகவும் ஆபத்தானது. இப்படிச் செய்வதால், அதே வேகத்தில் எடை மீண்டும் கூடும் அபாயமும் இருக்கிறது.

எனவே எடைக்குறைப்பு முயற்சி என்பது மெதுவாக இலக்கை அடைவதாக இருந்தாலும் பரவாயில்லை என்ற தெளிவுக்கு வர வேண்டும். 21 நாள் சேலன்ஜ் என்ற பெயரில் நான் உட்பட ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் பலரும் எடைக்குறைப்புக்கான பயிற்சிகளை வழங்குகிறோம். அதில் அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவதையே அனுமதிப்போம்.

ஆரோக்கியமான எடைக்குறைப்பில் ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கம்தான் பிரதானமாக இருக்கும். உணவுப்பழக்கத்துடன் கூடவே உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்கிறபோது தசை இழப்பு ஏற்படாது. சருமத்தில் தொய்வும் ஏற்படாது.

சரியாக உடற்பயிற்சி செய்யாதது, மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் பெரு நுண்ணூட்டச் சத்துகள் இல்லாமல் சாப்பிடுவது போன்றவற்றால் சருமம் தொய்வடையும். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தும்போது இந்தப் பிரச்னை வராது. தழும்புகள் வராது. எனவே சரியான வழிகாட்டுதலுடன் எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்குங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கல்லீரலை மெல்ல கொல்லும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க!

May 01, 2023 0

 கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல். எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உணவில் அலட்சியம் காட்டுவது போன்றவற்றால், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் இயக்கத்தைப் பாதிக்கிறது. அதிலும், உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் பல்வேறு நோய்களில் மிகவும் பொதுவானது கல்லீரல் பாதிப்பு என்று சொல்லலாம்.

மைதா

மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையானது தான். ஆனால் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதாவை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.

 உப்பு

அதிக உப்பை சாப்பிடுவதும் கல்லீரலை சேதப்படுத்தும். உப்பில் சோடியம் உள்ளது. அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது. இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சியின் விஷயத்தில் உப்பு தவிர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.

குளிர் பானங்கள் மற்றும் சோடா

குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவை உடல் பருமனை அதிகரிக்கின்றன. 

வலி நிவாரண மாத்திரைகள்

அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மருந்துகளை நீண்ட நேரம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு மருந்தும் சில நேரங்களில் இதற்கு காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.

துரித உணவுகள்

துரித உணவுகளும் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு ஒரு பெரிய காரணமாகும். துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதினால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.

சர்க்கரை

பலர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உடல் பருமனை அதிகரிக்க சர்க்கரை வேலை செய்கிறது. இதனுடன், இது கல்லீரலையும் அதிக அளவில் சேதப்படுத்தும். எனவே, சர்க்கரையை சாப்பிட அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள். ஏனெனில் சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.

மது அருந்துதல்

அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரலை மோசமாக பாதிக்கிறது. தினமும் மது அருந்தினால், அது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் மது அருந்தக் கூடாது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோடையை குளிர்ச்சியாக்க சூப்பரான லைப்ஸ்டைல் இதோ..! 5 எளிய வழிகள்

May 01, 2023 0

 கோடைக்காலம் என்பது மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கும் பருவமாகும். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான சிறந்த நேரமாகும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கவும், உங்கள் வாழ்க்கைமுறையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் அன்றாட வழக்கத்தில் எளிமையான ஆனால் பயனுள்ள வாழ்க்கை மாற்றங்களை சேர்ப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம். 

ஆரோக்கியமான உணவை உண்பது முதல் சுறுசுறுப்பாக இருப்பது வரை, கோடையில் உங்கள் வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதற்கான சில நல்ல வழிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அதை முயற்சிப்பதன் மூலம் கோடையில் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் உங்கள் லைப்ஸ்டைலை மேம்படுத்தலாம். 

போதுமான தண்ணீர் குடிக்கவும்

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க நீரேற்றமாக இருப்பது முக்கியம். குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் நீரிழப்பு ஆபத்து அதிகமாக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இது உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் உடல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. ஆனால் இது உங்கள் தோல், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களிலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்துச் செல்வது மற்றும் நாள் முழுவதும் அதை நிரப்புவது உங்கள் நீரேற்றம் இலக்குகளுடன் தொடர்ந்து இருக்க உதவும்.

வழக்கமான நடைப்பயணங்கள்

நடைபயிற்சி எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும். இது நாள்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும். ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும், உங்கள் உற்சாகத்தை உயர்த்தவும் உதவும். ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு விறுவிறுப்பான நடைப்பயிற்சியை முயற்சிக்கவும் அல்லது நாள் முழுவதும் சிறிய படிகளாகப் பிரிக்கவும். வாகனம் ஓட்டுவதற்கு அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குறுகிய பயணங்களுக்கு நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டிச் செல்ல முற்படுங்கள்.

போதுமான உறக்கம்

போதுமான நல்ல தூக்கம் பொது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானது. உடல் பருமன், நீரிழிவு மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவான தூக்கத்தின் விளைவாக ஏற்படும் சில உடல்நலப் பிரச்சினைகள். ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொண்டு, வழக்கமான தூக்க வழக்கத்தை அமைக்கவும். உறங்குவதற்கு முன் மொபைல் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்கவும். வாசிப்பது அல்லது வெதுவெதுப்பான குளியல் ஆகியவற்றுடன் ஓய்வெடுக்க முயற்சிக்கவும்.

ஆரோக்கியமான உணவு தேர்வு

அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். மேலும் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். சோடா குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிப்பது, வறுத்த உணவுகளுக்குப் பதிலாக வேகவைத்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது. தாவர அடிப்படையிலான உணவுகளைச் சேர்ப்பது போன்ற சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உணவு முறையில் மாற்றம் கொண்டு வர முடியும். 

முலாம்பழம் சாப்பிடுங்கள்

கோடையில் அதிகம் முலாம் பழத்தை சாப்பிடுங்கள். அவற்றில் குறைவான கலோரி இருக்கிறது. ஆனால் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை நீரேற்றம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடை இழப்புக்கு உதவுகின்றன. கோடையில் இவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

May 01, 2023 0

 தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன.

இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தயிர் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..? ஆம்.. தயிர் அதிக சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அதை கொஞ்சம் அளவுக்கு மீறி சாப்பிட்டாலும் வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் வீக்கத்தை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதி மருத்துவத்தில் இதைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கியிடம் பேசினோம் .

தயிர் உண்மையில் வாயு வீக்கத்தை அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகையில், ”தயிர் ஒரு சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது, இதை அதிகமாக உட்கொள்வது ஏற்கனவே வயிற்று பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதியில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து எந்த ஆய்வும் வெளி வரவில்லை. மாறாக, இது புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாக நாங்கள் கருதுகிறோம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் நிறைய உள்ளன.

அதனால்தான் உடல் எடையை குறைக்க தயிர் சாப்பிட பரிந்துரைக்கிறோம். சொல்லப்போனால், ஒட்டுமொத்த தயிரால் எந்தத் தீங்கும் இல்லை. ஏற்கனவே வயிறு உப்புசம் அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இது மிகச் சிலருக்கே ஏற்படும். தயிர் தீங்கு விளைவிப்பதாக உணர்ந்தால், வெறுமனே அல்லாமல் சாதத்துடன் சாப்பிட பாதிப்பு இருக்காது” என்று கூறினார்.

கீல்வாதம் வலி : கீல்வாதத்தின் வலியை தயிர் அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதத்திலும் நம்பப்படுகிறது. அதாவது தயிர் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதால், அது பியூரின்களாக உடைகிறது. பியூரின் மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவியத் தொடங்குகிறது. ஆனால் மூட்டு வலிக்கும் தயிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகிறார். ”தயிர் சாப்பிடுவதால் மூட்டுவலி அதிகரிக்காது. இதுபற்றி அலோபதி மருத்துவத்தில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறுகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஜில் ஜில் கூல் கூல்.. கேரளாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 சுற்றுலா தலங்கள்!

May 01, 2023 0

 கோடைகாலத்தில் வெயிலில் இருந்து தப்பிக்க கேரளா பக்கம் ட்ரிப் அடிக்கும் மக்கள் சூட்டை குறைத்துக்கொள்ளவும், குளுகுளு யை அனுபவிக்கவும் ஏற்ற கேரளாவின் பிரபல உப்பங்கழி முதல் துறைமுகம் வரையான  5  சிறந்த இடங்களை பற்றி தான் இந்தத் செய்தித் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.


குமரகத்தின் உப்பங்கழி:
கேரள நிலத்தின் பிரபலமான குமரகத்தின் பிரமிக்க வைக்கும் காயல்கள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் அற்புதமான கலவையாகும். தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த நீர்வழியாக நீங்கள் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம். போட் ஹவுஸ் அனுபவத்திற்கும் சரியான இடமாக இருக்கும்.

மூணாறு :
மூணாறு அதன் பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான இது   பசுமையான சூழலால் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தையும் குளுகுளு  உணர்வையும் கொடுக்கும். அதோடு, தேயிலை தொழிற்சாலையில்   தேயிலை இலைகளை பதப்படுத்துவது பற்றி அறிந்து கொள்ளலாம்.

வர்கலா:
வர்கலாவின் கடற்கரைகள் கரடுமுரடான பாறைகள் மற்றும் அழகிய நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றவை.  வர்கலா கடல் பகுதியில் இப்போது டால்பின்கள் வருகை தந்திருப்பதால் அது கடலில் துள்ளி குதிக்கும்  காட்சிகளை மிஸ் செய்து விடாதீர்கள்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி:   கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி, மர வீடுகளுக்கு பிரபலமான ஒரு பகுதி ஆகும். கம்பீரமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடிக்கு மேல் இருந்து நீர் கீழே விழுகிறது. இது ஒரு மூடுபனியை போன்ற நீர் திவிலைகளால் ஆன சூழலை உருவாக்குகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதிக்குச் சென்று இயற்கையின் அழகை ரசிக்கலாம்

கொச்சி துறைமுகம்:
கொச்சியின் மையத்தில் அமைந்துள்ள  ஃபோர்ட் கொச்சி. ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் இங்குள்ள பல கட்டிடங்கள் போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் காலனித்துவப்படுத்தப்பட்ட பகுதி. இந்த நகரத்தை  நடந்தோ அல்லது சைக்கிளிலோ சுற்றிப் பார்க்கலாம் மற்றும் உள்ளூர் சுவையான உணவுகளை அனுபவிக்கும் போது தனித்துவமான கட்டிடக்கலையைப் பார்த்து வியக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Dust Allergy | தூசி ஒவ்வமையிலிருந்து மூக்கை பாதுகாக்க உதவும் சில ஆயுர்வேத டிப்ஸ்..!

May 01, 2023 0

 நுரையீரல் வறண்டு போகாமல், நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் சேர்க்கும் வேலையை மூக்கு செய்கிறது. மூக்கின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மூக்கு என்பது நமது தலையில் நுழையக்கூடிய ஒரு நுழைவாயிலாக கருதப்படுகிறது. மூக்கில் ஏற்படும் எந்த ஒரு அடைப்பு அல்லது நோயானது நேரடியாக நம் தலையை பாதிக்கக்கூடும். மூக்கு என்பது புலன் உறுப்பு என்ற அங்கீகாரத்தை தாண்டி, இது சுவாசத்திற்கான ஒரு முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. நுரையீரலை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து மூக்கு பாதுகாக்கிறது. உடலுக்குள் மருந்தை உட்செலுத்த விரைவான ஒரு வழியாக மூக்கு கருதப்படுகிறது. அதோடு தலையை சென்றடைய இது ஒரு சிறந்த வழியாகவும் அமைகிறது. இப்பொழுது மூக்கின் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பதற்கான சில குறிப்புகளை பார்க்கலாம்:-

சுத்தம் செய்தல்: உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை எப்பொழுதும் சுத்தமாக வைப்பது பல நன்மைகளை அளிக்கும். குறிப்பாக இது மூக்கின் ஆரோக்கியத்திற்கு அதிக பலன் தரும். அதோடு வீட்டினை காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்வது சுவாசித்தல் செயல்முறையை எளிதாக்கும். மூக்கில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய உப்பு நீரை பயன்படுத்தலாம்.

பாதுகாத்தல்: உங்களுக்கு அடிக்கடி அலர்ஜி ஏற்படுமாயின் உங்கள் மூக்கிற்குள் ஒரு துளி நெய்யை விடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் மூக்குப் பாதையில் தொடர்பு கொள்வதை தடுக்கும்.

வலிமை சேர்த்தல்: உங்களுக்கு மூக்கடைப்பு இருந்தால் வறண்ட பொடியை உள்ளிழுப்பது உங்களுக்கு உதவ கூடும். இது வீக்கத்தை ஆற்றுவதோடு, மூக்கில் காணப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களையும் அகற்றுவதற்கு உதவும்.

தூண்டுதல்: வழக்கமான முறையில் 'அனுதைலத்தை' மூக்கில் விடுவது ஒட்டுமொத்த தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது தலைவலியை போக்குவதோடு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நீங்கள் மூக்கில் ஏதேனும் சிக்கலை அனுபவிக்கும் போது அது உங்கள் ஒட்டுமொத்த உடலையும் பாதிப்பதை என்றைக்காவது கவனித்துள்ளீர்களா? மூக்கடைப்பு ஏற்படும் சமயத்தில் உங்களுக்கு நன்றாக தூங்க வேண்டும் போல இருக்கும், ஆனால் தூங்க முடியாது. மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவிப்பீர்கள். உடம்பு அசதியாக இருக்கும், ஆனால் ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம்.

ஆகவே உங்கள் மூக்கின் ஆரோக்கியத்தை கவனிப்பதை உங்களின் அன்றாட பழக்கமாக கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகள் ஒரு ஆலோசனை மட்டுமே. எந்தவொரு குறிப்பையும் பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோடை காலத்தில் அடிக்கடி ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!

May 01, 2023 0

 வெயிலில் அலைந்து திருந்து வீட்டிற்கு வருபவர்கள் உடனே நமது வீட்டு 'ஃப்ரிட்ஜில்' உள்ள குளு-குளு நீரை எடுத்து பருகுவார்கள். இது சமயங்களில் ஆபத்தை உண்டாக்கலாம் என்றும், குடல் அழுகல் ஏற்படும் அபாயமே உள்ளதாகவும் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோடைகாலத்தில் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலாவிடம் கேள்வியெழுப்பினோம்.

அதற்கு பதிலளித்த அவர், கோவையில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 101 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பொதுவாக மக்கள் தேவையில்லாமல் வெளியே போகக்கூடாது. முதியவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் இந்த காலகட்டத்தில் அதிகமாக விளையாடச் செல்வார்கள். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்கள் வெளியே செல்லவதை தவிர்க்க வேண்டும்.


ஜில் என்ற தண்ணீர் குடிப்பது எப்போதுமே தவிர்ப்பது நல்லது. சாதாரண நீரைக் குடிக்கலாம். ஆர்.ஓ நீரில் கூட சத்துக்கள் இருப்பதில்லை என்று கூறப்பட்டு வருகிறது. ஜில் என்ற தண்ணீரை குடித்தால் குளிருக்கு நமது ரத்தக்குழாய் சுருங்கும். குடலுக்கு செல்லும் போது இன்னும் ரத்த ஓட்டம் குறையும் போது குடல் அழுகிப்போவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ரத்த குழாய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், அனைவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று கூற முடியாது. எனவே சாதாரண நீரையே பருகலாம்.

வெயிலின் தாக்கத்தால் வியர்வை வெளிப்படும்போது பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டு சிலருக்கு சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டிற்கு வந்தவுடன் கைகள், கழுத்து பகுதிகளைக் கழுவ வேண்டும் என கூறினார்.

தளர்வான ஆடைகளை அணியலாம். கருப்பு நிறை உடை அணிவரை தவிர்க்க வேண்டும். வெள்ளை நிற ஆடைகள் அணிவதன் மூலமாக வெயில் தாக்கம் அதிக அளவில் இருக்காது. தினமும் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் பருகாமல் இருந்தால் நமது உடலில் தாது சத்துக்கள் குறையும். அதனால் வளர்சிதை மாற்ற சமநிலையின்மை ஏற்படக்கூடும். வெளியே செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிந்து செல்லலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க இதை மட்டும் செய்தாலே போதும்!

May 01, 2023 0

 நம்மில் பலரும் ஓய்வு இல்லாத வாழ்க்கையை வாழ்கிறோம். சரியாக ஆய்வு எடுக்காமல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல், கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு வேலை வேலை என சம்பாத்தியத்தில் பின் ஓடுகிறோம். நமது ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பலர் உடல்நலம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?... தற்போது நீரழிவு, இதய நோய், சிறுநீரக தோற்று ஆகியவை இளைஞர்களை அதிகமாக பாதிக்கும் நோய்களாக இருக்கிறது. நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள் தான் நமது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

சோர்வு, தூக்கமின்மை, அரிப்பு, முகம் அல்லது கால்களின் வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்றவை சிறுநீரக தொற்றின் அறிகுறிகள் ஆகும். Web MD இன் தகவல்படி, உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைக்க சில உதவிக்குறிப்புகளை உங்களுக்கு கூறுகிறோம். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

அதிகப்படியான மருந்து உட்கொள்வது : அழற்சி எதிர்ப்பு (antibiotics) மருந்துகள் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும். அதே சமயம் ஆண்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். இதில் உள்ள மூலக்கூறுகளின் சப்ளிமெண்ட்ஸ் சிறுநீரகங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால், மருந்துகளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுங்கள் : உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதே சமயம், கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை உள்ளவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதே நேரத்தில், உங்கள் உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

நிறைய தண்ணீர் குடிக்கவும் : ஏராளமான தண்ணீர் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுகள் வெளியேறும். இது நீரிழப்பு, கற்கள் அல்லது சிறுநீரக தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள் : சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, தினமும் 30-60 நிமிடம் உடற்பயிற்சி செய்யலாம். இதனால், சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பும் குறையும். இருப்பினும், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள். மேலும், அவ்வப்போது வழக்கமான சோதனைகளைச் செய்ய மறக்காதீர்கள்.

மது பழக்கத்திலிருந்து விலகி இருங்கள் : சிறுநீரக பாதிப்புக்கு புகைபிடித்தல் மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. மது அருந்துவதால் சிறுநீரகம் சரியாக இயங்காது. அதே நேரத்தில், புகைபிடித்தல் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. எனவே, சிறுநீரக நோய்களைத் தடுக்க புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உஷார்.. தர்பூசணியில் இப்படியும் நடக்குது கலப்படம்.. பார்த்து வாங்குவது எப்படி?

May 01, 2023 0

 கோடை காலத்தில் அதிகம் உண்ணப்படும் பழங்களில் ஒன்றாக தர்பூசணி உள்ளது. கோடை வெயிலில் இருந்து உடலை நீரேற்றமாக வைக்கவும், உடல் சூட்டை தணிக்க என ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுள்ளது தர்பூசணி. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. கோடைக்காலத்தில் இது அதிகளவில் விற்பனையாவதால் இதிலும் கூட கடப்படம் செய்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?. கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.

சிவப்பான தர்பூசணி ஏன் ஆபத்தானது? : சிட்டிகிரீனின் கூற்றுப்படி, விற்பனையாளர்கள் பழுக்காத தர்பூசணியை விரைவாக பழுக்க வைக்க ஆக்ஸிடாஸின் (Oxytocin) ரசாயனத்தைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆக்ஸிடாஸின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால், வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, பேதி போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.

சில சமயங்களில் நாம் தர்பூசணி வாங்க கடைக்கு செல்லும் போது, அடர் சிவப்பு நிறத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இப்படிப்பட்ட தர்பூசணிகளைப் பார்த்தவுடன் ஆஹா.. இது நல்லா இனிக்கும் என நினைத்து நாம் யோசிக்காமல் வாங்கிவிடுவோம். ஆனால், இந்த நிறம் ஒரு வியாபார உத்தி என உங்களுக்கு தெரியுமா?. இரசாயனங்களை பயன்படுத்தி பழங்களில் சிவப்பு நிறத்தை கொண்டு வருகின்றனர். அவை, ஆரோக்கியமானவை அல்ல. 

நீங்கள் கடையில் வாங்கும் தர்பூசணி இயற்கையாக பழுத்ததா இல்லை இரசாயனம் கொண்டு வலுக்க வைத்ததா என்பதை எப்படி கண்டு பிடிக்கலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.

இன்னும் சிலர் தர்பூசணியில் விரைவாக பழுக்க கால்சியம் கார்பைடு-யை (Calcium Carbide) பயன்படுத்துகின்றனர். இது ஈரத்துடன் சேரும்போது எத்திலீனை வெளியிடுகிறது. இதனால், காய் வேகமாக பழுக்கிறது. இதை சாப்பிடுவதால் தலைவலி அல்லது புற்றுநோய் கூட ஏற்படலாம். செயற்கையாக பழுத்த அல்லது ரசாயனம் கலந்த தர்பூசணியை எப்படி அடையாளம் காண்பது? :


வயிற்றில் இந்த பிரச்சனை இருக்கவங்க தயிர் சாப்பிடக்கூடாதா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வரும் பாதிப்புகள்..!

May 01, 2023 0

 தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதில் புரதத்தின் அளவு அதிகமாக கிடைக்கிறது. மறுபுறம், இது நன்மை தரும் பாக்டீரியாவால் புளிக்கப்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மையளிக்கிறது. எனவேதான் தயிர் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாக உள்ளது. தயிரில் கால்சியம், வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. உதாரணத்திற்கு 100 கிராம் தயிரில் 3.5 கிராம் புரதம் உள்ளது. இது தவிர பல வகையான சத்துக்கள் இதில் உள்ளன.

இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும், தயிர் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா..? ஆம்.. தயிர் அதிக சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே அதை கொஞ்சம் அளவுக்கு மீறி சாப்பிட்டாலும் வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் வீக்கத்தை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதி மருத்துவத்தில் இதைப் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பிரியங்கா ரோஹத்கியிடம் பேசினோம் .

தயிர் உண்மையில் வாயு வீக்கத்தை அதிகரிக்கிறதா என்ற கேள்விக்கு டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகையில், ”தயிர் ஒரு சக்தி வாய்ந்த உணவு என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது, இதை அதிகமாக உட்கொள்வது ஏற்கனவே வயிற்று பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனை அதிகரிக்கிறது. ஆனால் அலோபதியில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து எந்த ஆய்வும் வெளி வரவில்லை. மாறாக, இது புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாக நாங்கள் கருதுகிறோம். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் நிறைய உள்ளன.

அதனால்தான் உடல் எடையை குறைக்க தயிர் சாப்பிட பரிந்துரைக்கிறோம். சொல்லப்போனால், ஒட்டுமொத்த தயிரால் எந்தத் தீங்கும் இல்லை. ஏற்கனவே வயிறு உப்புசம் அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இது மிகச் சிலருக்கே ஏற்படும். தயிர் தீங்கு விளைவிப்பதாக உணர்ந்தால், வெறுமனே அல்லாமல் சாதத்துடன் சாப்பிட பாதிப்பு இருக்காது” என்று கூறினார்.

கீல்வாதம் வலி : கீல்வாதத்தின் வலியை தயிர் அதிகரிக்கிறது என்று ஆயுர்வேதத்திலும் நம்பப்படுகிறது. அதாவது தயிர் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதால், அது பியூரின்களாக உடைகிறது. பியூரின் மூட்டுகளில் படிகங்கள் வடிவில் குவியத் தொடங்குகிறது. ஆனால் மூட்டு வலிக்கும் தயிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறுகிறார். ”தயிர் சாப்பிடுவதால் மூட்டுவலி அதிகரிக்காது. இதுபற்றி அலோபதி மருத்துவத்தில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறுகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip