Agri Info

Adding Green to your Life

May 5, 2023

RRB ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்!

May 05, 2023 0

 

RRB ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – 238 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்!

Assistant Loco Pilots (ALP) பணியிடங்களை நிரப்ப வட மேற்கு ரயில்வே துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 238 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RRB ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Assistant Loco Pilots (ALP) பதவிக்கு என மொத்தம் 238 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 முதல் 47 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/written examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று 06.05.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 4, 2023

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..?

May 04, 2023 0

 

உடலில் மெழுகு போல் இருக்கும் கொழுப்புதான் செல்களின் இயக்கத்திற்கு உணவாக இருக்கிறது. இருப்பினும் அது அளவுக்கு அதிகமாகும்போது உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. இது இரண்டு வகையாக உள்ளது - குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (LDL) மற்றும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதம் (HDL). நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் எல்டிஎல் அளவு அதிகமாக இருந்தால், இரத்த தமனிகளில் கொழுப்பு படிவுகள் அதிகரிக்கும். அவை பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

தமனிகளில் உள்ள பிளேக்ஸ் உருவானால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை உண்டாக்குகிறது. அந்த வகையில் ஆண் , பெண் என இருபாலருக்கும் HDL, LDL மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..? அளவை மீறிய அளவு என்ன..? அதனால் வரும் பாதிப்புகள் என்ன.? என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

19 வயதுக்கு உட்பட்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு : இன்று மருத்துவ செய்திஅறிக்கையின்படி, 19 வயது வரை உள்ள இளைஞர்களின் உடலில் மொத்த கொலஸ்ட்ரால் 170mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும். அவற்றின் HDL 120 mg/dl க்கும் குறைவாகவும் LDL 100 mg/dl க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், HDL 45 mg/dl க்கும் அதிகமாக இருக்க வேண்டும்

20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு.. 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் உடலின் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 125-200 mg/dl க்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், HDL அல்லாத அளவு 130 mg/dl க்கும் குறைவாகவும், LDL அளவு 100 mg/dl க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், HDL அளவு 40 mg/dl அல்லது அதற்கு மேல் இருப்பது அவசியம்.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு.. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உடலின் மொத்த கொலஸ்ட்ரால் 125-200 mg/dl க்குள் இருக்க வேண்டும். கூடுதலாக, HDL அளவு 130 mg/dl க்கும் குறைவாகவும், LDL அளவு 100 mg/dl க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். HDL அளவு 50 mg/dl அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் பராமரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு மோசமடையும் போது இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்கள் இது தான் - மருத்துவர் தரும் விளக்கம்

May 04, 2023 0

 ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் அனைவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக உள்ளது.

இந்தியாவில் ஆஸ்துுமா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 20 வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்கள் காற்று மாசு முக்கிய காரணமாக உள்ளது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை கட்டுப்படுத்த இன்ஹேலர் மருந்து தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த முடியும். அதே போல் தடுப்பூசி நிமோனியா எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு முறைகளையும் ஆஸ்துமா நோயாளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் குறிப்பாக கீரை வகைகள் பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என திருச்சியை சேர்ந்த ஆஸ்துமா அலர்ஜி மருத்துவர் கமல் கூறுகிறார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவில் கார்போஹைட்ரேட்ஸ் எடுத்து கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்யுமா.? விளக்கும் மருத்துவர்..!

May 04, 2023 0

பலரும் கார்போஹைட்ரேட்ஸ் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் Carbs கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை கணிசமான அளவு அதிகரிப்பதாக பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் கார்போஹைட்ரேட்ஸ் மீது குற்றம் சாட்டப்பட வேண்டுமா..? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபல ஃபிட்னஸ் ட்ரெயினரான Ramapriya இது ஒரு கட்டுக்கதை என மறுத்து, இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை உட்கொள்வதில் தவறில்லை என்பதை தனது சமீபத்திய சோஷியம் மீடியா போஸ்ட் மூலம் விளக்கியுள்ளார்.

ஒரு சிலர் நம் உடல் இரவில் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டுகளை வித்தியாசமாக ப்ராசஸ் செய்கிறது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கும் என கூறுகின்றனர். இது சரியான கருத்தா என்ற கேள்விக்கு பதில் இல்லை என கூறியுள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள ப்ரியா, ”நம் உடல் இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை வித்தியாசமாக ப்ராசஸ் செய்வதில்லை. கார்போஹைட்ரேட்ஸ் எனர்ஜிக்காக குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன. மேலும் சில கார்போஹைட்ரேட்ஸ் நம் கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோஜனாக (Glycogen) ஸ்டோராகும். அதிகப்படியான குளுக்கோஸ், உங்கள் உடலால் உடனடியாகப் பயன்படுத்த முடியாத அல்லது கிளைகோஜனாக மாற்ற முடியாமல் கொழுப்பாக சேமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Fitwithrama (@fitwithrama)



ஃபிட்னஸ் ட்ரெயினரான Ramapriya-வின் கூற்றுப்படி, Fat loss என்று வரும் போது ஒருவர் எடுத்து கொள்ளும் மொத்த கலோரிகள் தான் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் இங்கே பிரச்சனை இல்லை. கார்போஹைட்ரேட் அல்லது வேறு எந்த உணவுகளையும் அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரிகளை எடுத்து கொள்ள வழிவகுக்கும். 

தவிர நீங்கள் எடுத்து கொள்ளும் கூடுதல் கலோரிகள் உங்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படும். எனவே அதிக கலோரிகளை சாப்பிடுவது தான் உடல் எடை வழிவகுக்கும். கலோரியை மிதமாக எடுத்து கொள்கிறீர்கள் என்றால், இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களை சாப்பிடுவது ஒரு பொருட்டல்ல. மிதமான கலோரி நுகர்வால் எடை குறையும் ” என்றார்.

Ramapriya-வின் கருத்தை ஆமோதித்துள்ள பெங்களூர் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் தலைமை மருத்துவ உணவியல் நிபுணரான டாக்டர் பிரியங்கா ரோஹத்கி, கார்போஹைட்ரேட்ஸ்கள் பலர் கூறும் அளவுக்கு மோசமானவை அல்ல என்றார்.

”கார்போஹைட்ரேட்ஸ் இரவில் உடலுக்குத் தேவையானவை தான், ஏனெனில் இரவில் தூங்கும் போது உடலின் பழுது மற்றும் மீட்புக்கு இது உட்படுகிறது. எனவே உடல் தசைகளை சரி செய்ய, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இரண்டையும் நமது உடல் ஆற்றல் மூலமாக பயன்படுத்துகிறது என்றார். உங்கள் Portions உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக இருந்தால், இரவில் கார்போஹைட்ரேட்ஸ்களைத் தவிர்ப்பது வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது போல கார்போஹைட்ரேட்ஸ்களை தீமை விளைவிப்பவையாக கருதுவதை நிறுத்துங்கள். அதிகப்படியான எதுவும் உங்கள் எடையை அதிகரிக்க செய்யலாம்” என்கிறார் பிரியங்கா.

இரவு உணவு மற்றும் தூக்கத்திற்கு இடையே எப்போதும் 1 - 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் சிம்பிள் கார்போஹைட்ரேட்ஸ்களைத் தவிர்த்து முழு தானியங்கள், அன்பாலிஷ்ட் தானியங்கள், தினைகள் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் அவற்றை சாப்பிட வேண்டும் என்பதே எனது ஆலோசனையும் கூட என்றார் பிரியங்கா ரோஹத்கி.

பிரபல Internal medicine கன்சல்டன்ட்டான அபிஷேக் சுபாஷ் கூறுகையில், தூங்க செல்வதற்கு சற்று முன் சாப்பிட வேண்டும் என்றால், ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை சாப்பிடலாம் என்கிறார். மிக முக்கியமாக, நாள் முழுவதும் ஒருவர் தனது கலோரி உட்கொள்ளலைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். இரவுக்குள் போதுமான கலோரி எடுத்து கொண்டுவிட்டீர்கள் என்றால், இரவில் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கிறார்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்..? மருத்துவர் தரும் எச்சரிக்கை..!

May 04, 2023 0

 உடல் பருமன் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அதனை சமாளிப்பது குறித்தும் உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆன சுச்சின் பஜாஜ் அவர்கள் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

வெயில் சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் ஹீட் ஸ்ட்ரோக். கோடையில் அதிக வெப்பநிலைக்கு வெளிப்படும் போது உடல் அதிக வெப்பமடைந்து விடுகிறது. இதன் காரணமாக நம் உடல் உறுப்புகள் செயலிழந்து போகக் கூடிய நிலையை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான உடல்நல பாதிப்பு தான் ஹீட் ஸ்ட்ரோக் ஆகும். மருத்துவர் சுச்சின் பஜாஜ் "இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது மூளை பாதிப்பு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுத்து விடும்," என்று கூறுகிறார்.

ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்:

  • வேகமான இதயத்துடிப்பு
  • தலைவலி
  • தலைச்சுற்றல்
  • குழப்பம்
  • சுயநினைவு இழப்பு

இது யாரைத் தாக்கும்?

இது அனைவரையும் தாக்கும் என்றாலும் கூட, உடல் பருமன் இருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில், 2018 ஆம் ஆண்டில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, உடல் பருமனாக உள்ள மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும், உடல் வெப்பநிலைக்கும் இடையே நேர்மறையான தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருந்தது.

ஏனென்றால், இவர்களின் உடலில் உள்ள அதிகப்படியான உடல் கொழுப்பானது ஒரு இன்சுலேட்டராக செயல்பட்டு, வெயில் சுட்டெரிக்கும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதை கடினமாக்கி விடுகிறது. அது மட்டும் அல்ல, உடல் பருமனாது நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்களும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

போதுமான தண்ணீர் குடித்தல்: கோடைக் காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிப்பது அவசியம். அதே சமயம், மது, காபி போன்றவற்றைத் தவிர்க்கலாம். இவ்வாறு போதுமான நீர் குடுத்தால், உங்கள் உடலில் இருந்து வெப்பமானது வியர்வை வழியாக வெளியே செல்லும். உங்கள் உடல் உஷ்ணமாகாமல் இருக்கும்.

கோடைக்கு ஏற்ற ஆடைகளை அணிதல்: இறுக்கமாக இல்லாத லூஸ் ஃபிட்டிங் உடைய ஆடைகளை அணிய வேண்டும்.

வெப்பம் நிறைந்த நேரங்களில் அதிக கடின உழைப்பு மிகுந்த வேலைகளைத் தவிர்த்தல்: நீங்கள் வெளியே சென்று வேலைப் பார்த்தல், அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்வது அவசியம், ஸ்பிரே பாட்டில் ஒன்றை வைத்துக் கொண்டு புத்துணர்ச்சி பெறுங்கள். உங்களால் முடிந்தால், வெப்பம் நிறைந்த நேரத்தில், அதாவது காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள். வெளியில் செல்ல வேண்டி இருந்தால், அடிக்கடி தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். நிழலில் அடிக்கடி ஓய்வு எடுப்பதை உறுதி செய்ய்யுங்கள்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்: சன் பர்ன் ஏற்படாமல் தடுக்க, குறைந்தபட்சம் SPF 30 உடனான வைட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். வெயிலில் செல்ல வேண்டி இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. அதோடு, மண்டையில் வெயில் படாதவாறு தொப்பி மற்றும் குடை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 3, 2023

விமான நிலைய வேலைவாய்ப்புகள் – Indian Airport Jobs 2023!!

May 03, 2023 0

 

விமான நிலைய வேலைவாய்ப்புகள் – Indian Airport Jobs 2023!!

இந்திய விமான நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை நாங்கள் இப்பதிவின் கீழ் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில் பணியிடம் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு விமான சேவை நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தேவையின் பொறுத்து வெளியிட்டு வருகிறது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளை நாங்கள் ஒவ்வொன்றாக வகைப்படுத்தி வழங்கியுள்ளோம். இந்த லிங்குகளை கிளிக் செய்து விமான நிலையத்தில் தற்போது உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை நீங்கள் அறியலாம்.

அத்துடன் சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது விமான நிலைய பணியிடங்களை நாடுவோர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து உடனடியாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: AAI

பதவியின் பெயர்:Jr. Consultant

கடைசி தேதி:12.05.2023

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Airports Authority of India தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் E3/E4/E5 level இலிருந்து PSUs /AAI IAF/Indian Army/Indian Navy officials/ State or Central Govt./ Paramilitary forces பணிகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Airports Authority of India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும்.

Airports Authority of India தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் recttceller@aai.aero இறுதி நாளுக்குள் 12.5.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



BEL நிறுவனத்தில் Project Engineer வேலை – 470+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்:ரூ.55,000/-

May 03, 2023 0
BEL நிறுவனத்தில் Project Engineer வேலை – 470+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்:ரூ.55,000/-

BEL நிறுவனம் ஆனது Project Engineer-I , Trainee Engineer– I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 471 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL காலிப்பணியிடங்கள்:

Project Engineer-I , Trainee Engineer– I பணிக்கென மொத்தம் 471 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் BE / B.Tech/B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

Project Engineer-I

  • 1st Year – Rs. 40,000/-
  • 2nd Year – Rs. 45,000/-
  • 3rd Year – Rs. 50,000/-
  • 4th Year – Rs. 55,000/-

Trainee Engineer-I

  • 1st Year – ரூ.30,000/-
  • 2nd Year – ரூ.35,000/-
  • 3rd Year – ரூ.40,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து பணியின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் (18.05.2023) அதிகாரபூர்வ முகவரிக்கு(20.05.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



 Click here to join WhatsApp group for Daily employment news

 Click here for latest employment news


மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

May 03, 2023 0

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Project Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., Biophysics/ Bioinformatics / Biotechnology/ Life Sciences தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.05.2023ம் தேதிக்குள் drgugank@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 2, 2023

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது.. மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி..

May 02, 2023 0

 

ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கோவையில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்புத்தூரில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் புதிய ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளது. இதில் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கல்வியை எளிய முறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல், உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு என வெவ்வேறு வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் ஒருவருட காலத்திற்கு நடைபெறும்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பும், சர்வதேச மாண்டிசோரி கல்வியில் (Montessori education) டிப்ளமோ பயில்வதற்கு பிளஸ் டூ தேர்வு பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாண்டிசோரி கல்வியில் முதுகலை டிப்ளமோ படிக்க ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தினமும் இணையம் மூலமாக இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து விவரங்களுக்கு https://ncdconline.org/ என்ற இணையத்தை பார்வையிடலாம். அல்லது 9288026146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு ஆனந்தி கூறினார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இலவச தையல் கலை பயிற்சி பெண்கள் பங்கேற்க அழைப்பு...

May 02, 2023 0
ஈரோடு: கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும், 10ல் துவங்குகிறது.

ஜூன் 13 வரை 30 நாட்கள் நடக்கிறது.பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுவர்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயிற்சியில் சேரலாம். 

பயிற்சியில் சேர முன் பதிவு அவசியம். ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேர விரும்புவோர், 8778323213, 7200650604, 0424 - 2400338 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



சுருக்கெழுத்து பயின்றால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா? நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் விளக்கம்!

May 02, 2023 0

 சுருக்கெழுத்து பயின்றால் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதாக நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  சுருக்கெழுத்தில் 5 நிலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு வருடத்திற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தில் சான்றிதழ்களை வழங்குகின்றன. 

நீதிமன்றங்களில் சுருக்கெழுத்துப் பணி, பிரபல நிறுவனங்களில் அதன் தலைமை அதிகாரிக்கு குறிப்பெடுக்கும் பணி என்று வேலை வாய்ப்புகள், மிகப் பெரிய வழக்கறிஞர்கள் தனக்கென்று ஒரு சுருக்கெழுத்தாளரைப் பணியில் வைத்திருப்பார்கள். 

நீதிபதிகள் தீர்ப்புகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்வதை சுருக்கெழுத்தில் எழுதி தட்டச்சு செய்வார்கள். பெரிய அதிகாரிகள் தான் பேச வேண்டிய கூட்டத்தில் பேசவேண்டியதை கூற சுருக்கெழுத்தாளர்கள் எழுதி தட்டச்சு செய்து கொடுப்பார்கள். எனவே இதுகுறித்து தெரியாத மாணவர்களும் இனி சுருக்கெழுத்து பயில அருகே உள்ள பயிற்சி நிலையத்தை நாட வேண்டும்.

சுருக்கெழுத்து தேர்வு எழுத குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே சுருக்கெழுத்து பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனை படிக்க வயது என்பது தடை கிடையாது. சுருக்கெழுத்து ஆங்கிலம் படிக்க பிட்மேன் முறையும் தமிழுக்கு ஸ்ரீனிவாசராவ் முறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் : திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

May 02, 2023 0

 திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 7 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.05.2023 மாலை வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பணி விவரம்

பணி விவரம்காலிப்பணியிடங்கள்சம்பளம்
தட்டச்சர்118,500-58,600
உதவி மின்பணியாளர்116,600-52,400
காவலர்415,900-50,400
பெருக்குபவர்115,900-50,400

வயது

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/25706/1313/document_1.pdf

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டியவை..

1.பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்

2.ஆதார் அட்டை நகல்

3.இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்று நகல்

4.கல்வி சான்று நகல்

5.நன்னடத்தைச்சான்று

6.அனுபவ சான்று நகல்

7.சுயவிலாசமிட்ட ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் 8.உறை ஒன்று.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

3  மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகளை இணைக்கவும்.

முழுமையான விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.5.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் நிறுவனத்தில் வேலை.. ரூ.43,000 வரை சம்பளம் - வெளியான சூப்பர் அறிவிப்பு

May 02, 2023 0

 Aavin Jobs 2023: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள் எண்ணிக்கை: 1

கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். கணினி செயல்திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். கிராமப் புற பால் பண்ணைகளில் பணி செய்ததற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம்  17ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம்:  The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd., K.P.Road,

Nagercoil – 629 003. , Tamil Nadu .

Email : aavinkk@gmail.com

Tel : 04652 - 230356

Fax: 04652-230785 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news