Agri Info

Adding Green to your Life

May 12, 2023

நீங்கள் நிதி சிக்கல்களில் இருக்கிறீர்களா? கவலைய விடுங்க... இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

May 12, 2023 0


நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் பணம் செலவாகிறதா.! உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்வது கஷ்டமாக இருக்கிறதா.! இது உங்களுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, பலருக்கும் மனஅழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்த கூடிய பிரச்சனையாக இருக்கிறது.

நிதி அழுத்தம் என்பது பலருக்கும் ஏற்படும் மிகவும் பொதுவான அனுபவம். அதிகரிக்கும் கடன், எதிர்பாராத செலவுகள் அல்லது வேலை பாதுகாப்பின்மை  என எதுவாக இருந்தாலும் Financial Anxiety என்று சொல்லக் கூடிய நிதி அழுத்தமானது ஒருவரின் மன ஆரோக்கியத்தையும்,   ஒட்டுமொத்த நல்வாழ்க்கையிலும்  கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.  

இந்த நிதி கவலை ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தீர்வு இல்லை, ஏனென்றால் இது நபருக்கு நபர் மாறுபட கூடியது.

எனினும் உங்களது அன்றாட வாழ்க்கையில் நிதி சார்ந்த  சிக்கல்களை நிர்வகிப்பதற்காக LISSUN-வில் Strategy & Operation தலைவராக இருக்கும் நிபுணர் நிஷாந்த் ஜோஷி பகிர்ந்துள்ள டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

Financial Anxiety -ஐ புரிந்து கொள்வது: நிதி சார்ந்து எழும் கவலையை புரிந்துகொள்ள அதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பீதி, கவலை மற்றும் மன அழுத்தம் உட்பட பல வழிகளில் நிதி கவலை வெளிப்படுகிறது. Financial Anxiety-யை அனுபவிக்கும் நபர்கள் தலைவலி, வயிற்று பிரச்சனைகள் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம். தவிர வேலையின்மை, எதிர்பாராத செலவுகள், மோசமான நிதி மேலாண்மை உள்ளிட்டவை நிதி அழுத்தத்திற்கான பொதுவான தூண்டுதல்களாக இருக்கின்றன.

பட்ஜெட் பிளானிங்: அதிர்ஷ்டவசமாக நிதி சார்ந்த கவலைகளை நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிராக்டிக்கல் ஸ்ட்ராடெஜிஸ்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பொதுவான உத்தி பட்ஜெட்டை திட்டமிடுவது மற்றும் அதனை சரியாக பின்பற்றுவதும் ஆகும். இது நீங்கள் செய்யும் செலவுகளை கண்காணிக்க, உங்களுக்கான நிதி நோக்கங்களை திட்டமிட அனுமதிக்கிறது. நிதி மீதான கட்டுப்பாட்டை எடுத்து கொண்டு உங்களது மன அழுத்தத்தை குறைக்கிறது.

நிபுணர்களால் பகிரப்பட்ட சில பொதுவான நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் நிதி திட்டமிடலை துவங்கலாம். Financial counselling -க்கு சென்று நிபுணர்களுடன் கலந்துரையாடுவது உங்கள் நிதி நிலையை பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்குவதோடு, நிதி முன்னேற்றத்திற்கான உத்திகளை நீங்கள் கற்று கொள்ளலாம்.

Financial planning நிபுணரின் ஆலோசனையை பெறுவது, உங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகும் ஒரு முழுமையான ஃபினான்ஷியல் ரோட்மேப்-ஐ உருவாக்குவதில் பயனளிக்கும். மேலும் நிபுணர்கள் கூறும் கடன் ஆலோசனையானது நிலுவையில் உள்ள உங்கள் கடன்களை நேர்த்தியாக நிர்வகிக்கவும் உதவியாக இருக்கும்.

நிபுணர்களின் தலையீடு: சூழல்களை பொறுத்து சில நேரங்களில் உளவியல்  நிபுணர்களின் தலையீடு தேவைப்படும் அளவுக்கு நிதி சார்ந்த அச்சம் அதிகரிக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முக்கிய சவாலாக இருக்கும் உண்மையான நிதி நிலையை கருத்தில் கொள்ளாமல் மாறாக நம் வாழ்க்கையில் அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து அதிக கவலை ஏற்பட கூடும். இப்படி நிதி கவலையை அதிகப்படுத்தும் எந்தவொரு அடிப்படை மனநல கவலைகளையும் கையாள்வதில் உளவியல் சிகிச்சை முக்கியமானதாக இருக்க கூடும். எனவே உளவியல் சிகிச்சை நிபுணரிடம் கவுன்சிலிங் செல்வது பணத்துடனான உறவை மறுவரையறை செய்ய, வாழ்வில் திருப்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த உதவும்.

பிறருடன் தொடர்பு: உங்களை போன்றே நிதி சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுடன் தொடர்புகளை வளர்த்து கொள்வது நிதி கவலையுடன் போராடும் போது உங்களுக்கு உதவியாக இருக்க கூடும். நீங்கள் எதிர்கொள்ளும் நிதி சவால்களை வெற்றிகரமாக சமாளித்து கொண்டிருக்கும் நபருடன் நீங்கள் தொடர்பு கொள்வது உங்களது ஊக்கத்தை அதிகரிக்கும். சவால்களை எதிர்த்து போராடும் போது ஆதரவையும், உதவியையும் தேடுவது பலவீனம் அல்ல மாறாக வலிமையின் அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நெல்லையில் ஆடு, மாடு வளர்த்து தொழில் செய்ய பயிற்சி.. மிஸ் பண்ணிடாதீங்க!

May 12, 2023 0

 கால்நடை மருத்துவக் கல்லூரி அளிக்கும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அளிக்கும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி 09 -10 - 2012 அன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியாக தமிழக அரசால் துவக்கி வைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பை வழங்குவதுடன் இக்கல்லூரி தென் தமிழக மாவட்டங்களில் உள்ள மாடு ஆடு கோழி மற்றும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ வசதிகளையும் அளிக்கிறது.கால்நடை உற்பத்தி கால்நடை மருத்துவம் தீவன உற்பத்தி மற்றும் செல்லப்பிராணிகளின் நலன் ஆகிய பிரிவுகளின் பல்வேறு தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்வுகளை இக்கல்லூரி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

மேலும் கிராமப்புற பகுதி இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பினை அளித்து பொருளாதார மேம்பாட்டினை உறுதிப்படுத்தும் வகையில் கரவை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற பல்வேறு சுய வேலை வாய்ப்புகளை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அளித்து வருகிறது. கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சார்ந்த அனைத்து சுய வேலை வாய்ப்பு பயிற்சிகளில் பங்கு பெற தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம் ஒரு மாதமாகும்.கறவை மாட்டுப்பண்ணை வெள்ளாடு வளர்ப்பு நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு போன்ற சுயவேலை வாய்ப்பு பயிற்சி கட்டணம் 3000 ஆகும். செம்மரி ஆடு வளர்ப்பு பயிற்சி கட்டணம் ஆயிரம் ரூபாய் ஆகும். பயிற்சிகளுக்கு ஆண்டு முழுவதும் சேர்க்கை நடைபெறுகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் சேரலாம் .

பயிற்சியில் சேர விரும்புவோர் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை விரிவாக்க கல்வித்துறை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ராமையம்பட்டி சங்கரன்கோவில் ரோடு திருநெல்வேலி என்ற முகவரியில் அல்லது 04622336347 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.30 ஆயிரம் வரை சம்பளம்... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..!

May 12, 2023 0

 காஞ்சிபுரம் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மைய நிர்வாகி (Centre Administrator) (காலிப் பணியிடம் -1 )

சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management)  முதுகலை பட்டம் (Master's Degree ) பெற்றிருக்க வேண்டும். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்.

மாத ஊதியம் ரூ.30,000/ஆகும்.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (vacancy 1)

கல்வித் தகுதி: சமூகப் பணி,  ஆலோசனை உளவியல் M.Sc (Counselling Psychology or Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் முதுகலை பட்டம் M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது 1 வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது வெளியிலோ பணிபுரிந்திருக்க வேண்டும்.

மாத ஊதியம் ரூ,20.000/- ஆகும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும்.

வழக்கு அலுவலர்கள் (காலிப் பணியிடங்கள் - 2)

சமூகப் பணி(Social Work) உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சி (Development Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும்போது சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள் 2 )

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 22.05.2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,  காஞ்சிபுரம் 631 501  என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

May 12, 2023 0

 

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

முன்னணி தனியார் நிறுவனமாக இயங்கி வரும் Amazon நிறுவனம் ஆனது RME Coordinator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

RME Coordinator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RME Coordinator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Electrical/ Electronics, Controls & instrumentation தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Amazon வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RME Coordinator தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் Apply Now என்பதை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

May 12, 2023 0

 

சென்னை Wipro நிறுவனத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய பன்னாட்டு நிறுவனமான Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Manager மற்றும் Lead Administrator பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Project Manager மற்றும் Lead Administrator பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் இருந்து வணிகம், பொறியியல் மற்றும் மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும்.

Manager பணிக்கு தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் Written Exam, Group Discussion, Skill Test, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தனியார் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிகிரி முடித்தவரா? உங்களுக்கான Office Assistant வேலைவாய்ப்பு || மாத ஊதியம்: ரூ.20,000/-

May 12, 2023 0

 

டிகிரி முடித்தவரா? உங்களுக்கான Office Assistant வேலைவாய்ப்பு || மாத ஊதியம்: ரூ.20,000/-

Indian Bank Trust for Rural Development (IBTRD) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Faculty, Office Assistant, Attender பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IBTRD காலிப்பணியிடங்கள்:

Faculty, Office Assistant, Watchman/Gardener பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / MSW / MA / B.Sc./ B.Ed / 7ம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IBTRD வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Office Assistant ஊதிய விவரம்:
  • Faculty – ரூ.20,000/-
  • Office Assistant – ரூ.12,000/-
  • Watchman/Gardener – ரூ.6,000/-
IBTRD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 11, 2023

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம்… ஒன்றுக்கும் அதிகமான கணக்கு இருந்தால் என்ன ஆகும்?

May 11, 2023 0

 தற்போதையை காலகட்டத்தில் வங்கி கணக்கு இல்லாத நபரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயத்தில் ஒன்று. ஏனென்றால், இன்று பிறந்த குழந்தை முதல்  அனைவரிடமும் வங்கி கணக்கு இருக்கும். இன்னும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்போம். 

குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சம்பள வங்கி கணக்கு என பல கணக்கு நமது பெயரில் இருக்கும்.ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம். 1-க்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அதற்கான விதி என்ன என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?. இது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இதற்கான தகவல்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்துள்ளனர். சிலர் இதை விட அதிகமான வங்கி கணக்கு வைத்துள்ளனர். ஏனென்றால், இந்தியாவில் வங்கிக் கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை. வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே, ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம். அதே சமயம் அதை நிர்வாகிப்பதும் எளிது.

உங்கள் கணக்குகளில் இருந்து சரியான பரிவர்த்தனைகளை தொடர்ந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. நீண்ட காலமாக உங்கள் வங்கி கணக்கை நீங்கள் உபயோகிக்காமல் இருந்தால், வங்கி உங்கள் கணக்கை மூடலாம். எனவே, தான் உங்கள் எல்லா கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பல வங்கிக் கணக்குகளைத் திறக்கும் போது ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து வங்கிகளும் சம்பளக் கணக்கைத் தவிர சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கியுள்ளன. அதாவது, உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்க வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை கழிக்கப்படும்.

கட்டணம் கழித்த பிறகும் நீங்கள் குறைந்தபட்ச கணக்கை பராமரிக்கவில்லை என்றால்.. உங்கள் வங்கி கணக்கு எதிர்மறையாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் குறைந்தபட்ச இருப்பு பற்றி கவனமாக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கை இந்த முறையில் சரியாக நிர்வகிக்கலாம்.

அதிக கணக்குகள் மூலம் வங்கிகள் பல நன்மைகளைப் பெறுகின்றன. ஒவ்வொரு வங்கியும் செய்திகளை அனுப்புவதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கின்றன. வங்கிக் கணக்கை பராமரிப்பதற்கான செலவையும் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் டெபிட் கார்டுக்கு வங்கி ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுக்குத் தேவையான வங்கிக் கணக்குகளைத் திறக்கவும். இது உங்கள் சேமிப்பை பத்திரமாக வைத்திருக்க உதவும்.



ஓய்வுபெறும் போது 95 லட்சம் பிஎஃப் பணம்... எப்படி தெரியுமா?

May 11, 2023 0

 நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா? அப்படியெனில் ஓய்வின் போது PF கணக்கு மூலம் எவ்வளவு தொகை பெற முடியும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தனியார் துறை ஊழியர்களுக்கு, அவர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் (அடிப்படை சம்பளத்திலிருந்து) பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமே DA பொருந்தும்.

அதோடு நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இதில் 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தற்போதைய EPFO ​​விதிகளின்படி, EPS பங்களிப்புக்கான அடிப்படை சம்பள வரம்பு ரூ. 15 ஆயிரம்.

அதாவது நிறுவனத்தின் தரப்பில் ரூ. 1250 மட்டுமே இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மீதமுள்ள தொகை PFO கணக்கில் டெபாசிட் செய்யப்படும். உதாரணமாக ரூ. 25 ஆயிரம் அடிப்படை சம்பளம் வாங்கும் ஊழியரின் பிஎஃப் பங்களிப்பு ரூ. 3 ஆயிரமாக இருக்கும்.

நிறுவனத்தின் பங்களிப்பு 8.33 சதவீதம் அதாவது ரூ.2082 இபிஎஸ்க்கு செல்லும். 3.67% EPF கணக்கிற்குச் செல்லும். அதாவது ரூ. 917 EPF கணக்கில் வரவு வைக்கப்படும்.

தற்போதைய பிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதம். இப்போது ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 25 ஆயிரம் இருந்தால், ஓய்வு பெறும் நேரத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று பார்ப்போம். பணியாளரின் வயது 25 என வைத்துக் கொண்டால், 58 வயதில் அவருக்கு பி.எஃப் பணம் ரூ. 95 லட்சம் கிடைக்கும்.

அதேபோல, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 5 சதவிகிதம் அதிகரித்தால், பிஎஃப் கணக்கில் மொத்த ஓய்வூதியம் ரூ. 1.9 கோடி இருக்கும். அதே வேளையில் ஊழியருக்கு 30 வயதென்றால், 58 வயதில் ஓய்வு பெறும் போது, பிஎஃப் கணக்கில் ரூ. 61 லட்சம் இருக்கும். அடிப்படை சம்பளம் ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்தால், அவருக்கு ரூ. 1.1 கோடி கிடைக்கும்.

ஊழியர் 35 வயதானவர் என்றால் 58 வயதில் அவருக்கு ரூ. 39 லட்சம் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை சம்பளம் 5 சதவீதம் அதிகரித்தால், இறுதியில் ரூ. 69 லட்சம் பெறலாம்.


தங்கத்திற்கு நாம் இவ்வளவு வரி செலுத்துகிறோமா? தெரிந்துகொள்ளுங்கள்..!

May 11, 2023 0

 தங்கம் எல்லோரும் வாங்குகிறோம்... ஆனால் அந்த தங்கத்திற்கு வரியாக மட்டும் எவ்வளவு செலுத்துகிறோம் தெரியுமா?



தங்கம், நகையாக நாம் கையில் வந்து சேரும் போது, மொத்தமாக சுமார் 18 சதவிதம் அளவிற்கு வரியாக மட்டும் செலுத்தி இருப்போம்.. இப்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்ற ஒரு கணக்கு பார்க்கலாம்.

இறக்குமதி வரி என்பது 10 சதவிதம், அதாவது 10 ஆயிரம் ரூபாய், Agriculture Infrastructure Cess என்று 5 சதவிதம், அதாவது 5 ஆயிரம் ரூபாய்.

நகையாக நாம் வாங்கும் தங்கத்திற்கு 3%, அதாவது 3 ஆயிரம் ரூபாய். மொத்தமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கும் தங்கத்தில், 18 ஆயிரம் வரி மட்டும். இது போக செய்கூலி சேதாரம் ஒரு 15 சதவிதம் என்று வைத்து கொண்டால், அது ஒரு 15 ஆயிரம்..

எனவே, ஒரு லட்சம் ரூபாய் தங்க நகையில், வரிகள் மற்றும் செய்கூலி சேதாரமாக மட்டும் ரூ. 33,000 கொடுக்கிறோம்.


மாம்பழங்களை அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா..? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்..?

May 11, 2023 0

 கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வரும் 2 விஷயங்கள் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் சுவையான மாம்பழங்கள் தான். நாம் அனைவரும் கோடையில் மாம்பழங்களை சாப்பிட மிகவும் ஆவலாக இருக்கிறோம்.

தற்போது நாட்டில் கோடை காலம் நிலவி வரும் சூழலில் ஜூஸியான மாம்பழம் அதிகம் விற்பனையாகி வருகிறது. மாம்பழம் மிகவும் ஆரோக்கியமானது என்றாலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகள் அல்லது பக்கவிளைவுகளை இங்கே பார்க்கலாம்.

அதிக சர்க்கரை : இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகள் அடங்கிய மாம்பழங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை. எனினும் இந்த பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. இதிலிருக்கும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே நீரிழிவு நோயாளியாகள் மாம்பழங்களை சாப்பிடும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. அதே போல மாம்பழத்தில் அதிக சர்க்கரை உளளடக்கம் இருப்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பாக இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு ஏற்படலாம் : மாம்பழத்தில் அதிகம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த சூழலில் மாம்பழங்கள் அதிகம் சாப்பிடுவது குடல் எரிச்சலை ஏற்படுத்தலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள எந்த பழமும் வயிற்று போக்கை உண்டாக்க கூடியது. எனவே மாம்பழங்களை அதிகம் சாப்பிடாமல் கட்டுப்படுத்தி கொள்ளவது கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

எடை அதிகரிக்க கூடும் : சுவைமிகுந்தமாம்பழங்களில் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த பழங்களை அதிகம் எடுத்து கொள்வது எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக இருக்கும். மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவது எடையை கூட்டும் என்பதால், ஒரு நல்ல உடலமைப்பை பராமரிக்க விரும்புவோர் மாம்பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிரக்க வேண்டும்.

அலர்ஜி விளைவுகள் : மாம்பழங்களில் Urushiol என்ற கெமிக்கல் இருக்கிறது. இந்த கெமிக்கலுக்கு சகிப்புத்தன்மை குறைவாக உள்ள நபர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிட்டால் தோல் அழற்சி ஏற்படும். இதன் காரணமாக சருமத்தில் வீக்கம் மற்றும் அரிப்பு ஏற்படலாம். மாம்பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் சில அலர்ஜி ரியாக்ஷன்கள் ஏற்படலாம் மற்றும் ரன்னி நோஸ், வயிற்று வலி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். மாம்பழங்களை அதிகம் எடுத்து கொள்வது யூர்டிகேரியா போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

அனாபிலாக்டிக் ஷாக் (Anaphylactic Shock): மாம்பழங்கள் ஒரு சிலருக்கு Anaphylactic Shock-ஐ ஏற்படுத்த கூடும். இது ஒரு அலர்ஜி ரியாக்ஷன் ஆகும். உடனடியாக இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் குமட்டல், வாந்தி, அதிர்ச்சி மற்றும் சுயநினைவின்மைக்கு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

வயிற்று பிரச்சனைகள் : University of Virginia Health System-ன் ஆய்வின்படி குளுக்கோஸுடன் ஒப்பிடும்போது மாம்பழங்களில் பிரக்டோஸ் அதிகம் உள்ளது. இது உடலில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. இது பிரக்டோஸை உறிஞ்சுவதை கடினமாக்குகிறது. இந்த கண்டிஷன் வயிற்றில் வீக்கம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் வயிற்றில் ஏதேனும் அஜீரண சிக்கலை எதிர்கொண்டால், மாம்பழங்களை அதிகம் சாப்பிடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்..? மாம்பழத்தை ஒரு நாளைக்கு சுமார் 2 கப் (330 கிராம்) வரை சாப்பிடுவது நல்லது. மாம்பழம் சுவையானதுதான் என்றாலும் மற்ற பழங்களை விட இதில் அதிக சர்க்கரை உள்ளது, எனவே மிதமான அளவில் மாம்பழம் சாப்பிடுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகபட்சமாக அரை கப் சாப்பிடலாம். அதுவும் கட்டுப்பாட்டில் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்குமோனு சந்தேகமா இருக்கா..? இந்த அறிகுறிகளை கவனியுங்க..!

May 11, 2023 0

 நம் ரத்தத்தில் கால்சியம் சத்து மிக, மிக குறைவாக இருப்பதை கால்சியம் பற்றாக்குறை அல்லது ஹைபோகால்சீமியா என்று சொல்கிறோம். நம் உடலில் எலும்பு மற்றும் பல் ஆகியவற்றின் கட்டமைப்புக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாத சத்தாகும். இத்தகைய சூழலில், கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால், அதன் காரணமாக ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நீண்ட காலமாக போதுமான அளவுக்கு கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் பிரச்சினை ஏற்படக் கூடும். வயது காரணம் மற்றும் மரபணு ரீதியாகவும் நமக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்.

சீரற்ற உணவு முறை, சில மருந்துகளை உட்கொள்வது அல்லது கால்சியம் நிறைந்த உணவுகளுக்கு ஒவ்வாமை போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சினை ஏற்படக் கூடும். காரணம் எதுவாக இருந்தாலும், உடலில் கால்சியம் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும்போது, அதை உரிய முறையில் பரிசோதனை செய்து, அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிகுந்த சோர்வு மற்றும் பலவீனம் : உடல் சோர்வு என்பது பல்வேறு பிரச்சினைகளின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. எனினும், உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்போது கூட சோர்வு ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் உடல் பலவீனம் அடையக் கூடும். அத்துடன் லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் அல்லது கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ஓஸ்டோபெனியா மற்றும் ஓஸ்டோபோரோசிஸ் : இது ஒருவகை எலும்பு தேய்மான நோய் ஆகும். கை விரல்கள் நேராக இல்லாமல் வளைந்து, நெளிந்து காணப்படும். எலும்பு அடர்த்தி குறைவதன் காரணமாக இதுபோன்ற பலவீனம் ஏற்படும்.

சரும பிரச்சினைகள் : சருமம் வறண்டு காணப்படுதல், நகங்களில் வெடிப்பு போன்றவை கால்சியம் சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும். குறிப்பாக, நகங்கள் மெலிந்து, பலவீனம் அடையும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்.

பல் பிரச்சினைகள் : எலும்புகளுக்கு மட்டுமல்லாமல் பற்களுக்கும் கால்சியம் சத்து மிக முக்கியமானதாகும். கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் பற்சிதைவு, ஈருகள் அரிப்பு போன்ற பிரச்சினை வரும்.

முறையற்ற இதயத்துடிப்பு : ரத்தத்தில் கால்சியம் சத்து அளவு சரியாக இருக்கும் போது நமது இதயத் துடிப்பும் சரியான அளவில் இருக்கும். அதுவே, கால்சியம் சத்து குறைந்தால் இதயத் துடிப்பு அதிகமாகிவிடும். சிலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூட மாற வாய்ப்பு உண்டு.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கொலஸ்ட்ரால் முதல் இரத்த சோகை வரை... இத்தனை பிரச்சனைகளுக்கு பலன் தரும் ’கருப்பு திராட்சை’

May 11, 2023 0

 ஒரு சில பழ வகைகள் உலர் பழங்களாக மாற்றப்பட்டு, சந்தையில் கிடைக்கின்றன. இவை நீண்ட காலம் பயன்படுத்தும் அளவுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். அத்தி பழம், அக்ரூட், உலர்ந்த திராட்சை போன்றவை. பல்வேறு வகையான உலர் திராட்சை வகைகள் கடைகளில் கிடைக்கின்றன. திராட்சை பழங்கள் மிகவும் குறைவான அளவே ப்ராசஸ் செய்யப்படுவதால், மற்ற உணவுகளைப் போல இதில் அதிக பிரசர்வேட்டிவ் சேர்க்கப்படுவது இல்லை.

பலருக்கும் ரெய்சின்ஸ் எனப்படும் பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சை பற்றி தெரியும். அதுவே, கருப்பு நிறத்தில் கிடைக்கும் உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?ரத்த சோகை, செரிமான கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை தீர்வாக அமைகிறது.

செரிமானத்தை எளிதாக்குகிறது : பொதுவாகவே, பழங்களில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். அதிலும், உலர் கருப்பு திராட்சையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினசரி இதனை உண்பது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. அது மட்டுமின்றி, செரிமானத்தையும் எளிதாக்குகிறது.தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது. மேலும், திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.

எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது: ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும். வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது ஆகியவற்றைத் தடுக்க, தினசரி கருப்பு உலர் திராட்சையை சாப்பிட்டு வரலாம்.

உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பை அதிகப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது : கருப்பு திராட்சை என்பது, கருப்பு உலர் திராட்சையைக் குறிக்கிறது. இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பிரவுன் நிற உலர் திராட்சையை விட, அதிக இரும்பு சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது. இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் உதவுகின்றன.

இரத்த சோகையை தடுத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: கருப்பு திராட்சையில் நிறைந்துள்ள இரும்பு சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் கருப்பு திராட்சையில் இருக்கும் காப்பர், உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. இதனால், ரத்த சோகை தடுக்கப்படுவதோடு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

கொலஸ்டிராலை குறைத்து இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்: கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது, ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. குறிப்பாக, LDL கொலஸ்டிரால் எனப்படும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதன் மூலம் இதயத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. தினமும் சிறிதளவு கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், இதய நோய் அபயாத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவும்.

புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது: கருப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து கருப்பு திராட்சை பாதுகாக்கலாம்.வாயுத் தொந்தரவு ஏற்படாமல் இருக்க, கருப்பு நிற உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்த பின்பே சாப்பிட வேண்டும்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,50,000/-

May 11, 2023 0

 

TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,50,000/-

சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29-05-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TIDCO காலிப்பணியிடங்கள்:

Assistant Manager பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

TIDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA/ ICWA/ ACA/ AICMA/ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


TIDCO சம்பள விவரம்:
  • Assistant Manager (Accounts) – ரூ. 1,00,000/-
  • Assistant General Manager (Finance) – ரூ. 1,50,000/-
  • Financial Analyst – ரூ. 2,00,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TIDCO Assistant Manager விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் TIDCO அதிகாரப்பூர்வ இணையதளமான tidco.com இல் 10-05-2023 முதல் 29-மே-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

BOB Financial நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

May 11, 2023 0

 

BOB Financial நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Assistant Manager / Senior. Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BOB Financial நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB Financial காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager / Senior. Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BOB Financial வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

BOB Financial ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Assistant Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.05.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HVF ஆவடி Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – 168 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.8050/-

May 11, 2023 0

 

HVF ஆவடி Trade Apprentices வேலைவாய்ப்பு 2023 – 168 காலிப்பணியிடங்கள் || உதவித்தொகை: ரூ.8050/-

கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடி ஆனது Trade Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HVF ஆவடி காலிப்பணியிடங்கள்:
  • Fitter (G) – Non ITI – 32 பணியிடங்கள்
  • Machinist – Non ITI – 36 பணியிடங்கள்
  • Welder (G&E) – Non ITI – 24 பணியிடங்கள்
  • Electrician – EX ITI -10 பணியிடங்கள்
  • Machinist – EX ITI – 38 பணியிடங்கள்
  • Welder (G&E) – EX ITI – 28 பணியிடங்கள்

Trade Apprentices பதவிக்கு என மொத்தம் 168 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Apprentices கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

14.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Trade Apprentices சம்பள விவரம்:
  • NON-ITI(Matriculation/ Xth Class) – For Ist year ₹ 6000 and IInd year ₹ 6600
  • EX-ITI (ITI Pass) – For 1 year Trade ₹ 7700 For 2 years Trade ₹ 8050
தேர்வு செயல் முறை:
  • Merit List
  • Certificate Verification
  • HVF ஆவடி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
    • UR & OBC விண்ணப்பதாரர்கள் (Non-refundable) – ரூ.100/-
    • SC/ST/Women/PWD/Others (Transgender) விண்ணப்பதாரர்கள் -ரூ.750/-
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 14.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news