Agri Info

Adding Green to your Life

May 18, 2023

எடை இழப்புக்கு உதவும் ’கலோரி பற்றாக்குறை’ பற்றி தெரியுமா..? இதை பின்பற்றும் வழிகள்..!

May 18, 2023 0

 கூடுதல் எடையை குறைக்கும் முயற்சியில் நீங்கள் இருந்தால் Calorie deficit அதாவது கலோரி பற்றாக்குறை என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதன் சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.?

எளிமையாக சொன்னால், நீங்கள் உணவு மற்றும் பானங்கள் மூலம் எடுத்து கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்கும் போது Calorie deficit ஏற்படுகிறது. கலோரி பற்றாக்குறை உங்கள் உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட Fat Reserves-களை டேப் செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. இது காலப்போக்கில் எடை குறைய வழிவகுக்கிறது. அதாவது உடல் எடையை குறைக்க நீங்கள் Calorie deficit-ஐ உருவாக்க வேண்டும். அதாவது உங்கள் உடல் பயன்படுத்துவதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வது.

இங்கே நாம் எடை இழப்பில் Calorie deficit-ன் முக்கியத்துவம் பற்றியும், வெற்றிகரமாக மற்றும் பாதுகாப்பாக இதை அடைவதற்கான வழிகளை பற்றியும் பார்க்கலாம்.

கலோரி பற்றாக்குறை (Calorie deficit) என்றால் என்ன.?

ஒருவர் தற்போதிருக்கும் தனது எடையை பராமரிக்க தேவையானதை விட, குறைவான கலோரிகளை உட்கொள்ளும் போது Calorie deficit ஏற்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது, ஏனெனில் தேவையான ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பாக (Stored fat) உடல் மாறுகிறது. டயட்டில் மாற்றங்கள் செய்வது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் கலோரி பற்றாக்குறையை அடையலாம்.

இருப்பினும் கலோரி பற்றாக்குறையை உருவாக்கும் முயற்சியில் உடல்நலனில் ஏதேனும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க, உடலுக்கு பாதுகாப்பான மற்றும் நீடித்த கலோரி பற்றாக்குறையை உருவாக்குவதில் ஒருவர் கவனம் செலுத்துவது முக்கியம். ஆரோக்கியமான எடை இழப்பு விகிதம் என்று பார்த்தால் பொதுவாக வாரத்திற்கு 1 முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கலாம். இது ஒரு நாளைக்கு சுமார் 500 முதல் 1000 கலோரிகள் வரை Calorie deficit ஏற்படுவதற்கு சமமானது.

ஏன் கலோரி பற்றாக்குறை முக்கியம்.!

குறிப்பிட்ட அளவு கலோரி பற்றாக்குறையை அடைந்து பராமரிப்பது எனர்ஜி லெவலை அதிகரிக்க மற்றும் பிஸிக்கல் ஃபிட்னஸை மேம்படுத்த வழிவகுக்கும். பெரும்பாலும் Calorie deficit-ஐ அடைவதில் ஒரு அங்கமாக இருக்கிறது தினசரி உடற்பயிற்சி வழக்கம். இந்த ரெகுலர் ஒர்கவுட் வழக்கம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. தவிர மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தனக்கான Calorie deficit-ஐ உருவாக்கி ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் ஒருவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும்.

Calorie deficit-ஐ அடைவதற்கான வழிகள் இங்கே:

சரியான ஒரு App-ஐ பயன்படுத்தி தினசரி நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கலாம். இந்த பழக்கம் நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை எப்படி குறைக்கலாம் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு உதவும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீண்ட நேரம் பசிக்காமலும் இருக்கும், திருப்தியாகவும் உணர உதவும். இதனால் தேவையற்ற அல்லது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்க்கலாம். லீன் மீட்ஸ், பீன்ஸ், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்க்கலாம்.
உட்கொள்ளும் கலோரிகளின் அளவை குறைக்க உதவும் சிறந்த வழி, குறைவாக சாப்பிடுவது தான். இதற்காக நீங்கள் குறைவாக சாப்பிட உதவும் சிறிய தட்டுக்கள், பவுல்ஸ் மற்றும் கப்ஸ்களை பயன்படுத்தலாம்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் சேர்ப்பது, முழு கொழுப்புள்ள பாலுக்குப் பதிலாக குறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பது மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் மூலம் குறைந்த கலோரியை உட்கொள்ளலாம்.
அதிக கலோரிகளை எரிக்க மற்றும் கலோரி பற்றாக்குறையை உருவாக்க உடற்பயிற்சி உதவுகிறது. எனவே வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் Moderate-intensity உடற்பயிற்சி அல்லது 75 நிமிட vigorous-intensity உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.
நல்ல Calorie deficit-ஐ அடைவதற்கான சிறந்த வழி ஆரோக்கியமான டயட் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இரண்டையும் சேர்த்தே பின்பற்றுவது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் மேம்படுத்தும் அதே நேரம் அதிக கலோரி பற்றாக்குறையை உருவாக்கவும் உதவும். தேவைக்கு அதிகமாக Calorie deficit-ஐ உருவாக்குவது Muscle loss மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஸ்வீட்டை உணவுக்கு முன்பு அல்லது பின்பு.. எப்போது சாப்பிட வேண்டும்..?

May 18, 2023 0

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும்போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறும் வழக்கம் கூட உண்டு. ஆனால், இது தவறானது.

பெரும்பாலான ரெஸ்ட்ராண்ட்களில் கூட உணவின் இறுதியில் ஸ்வீட் பரிமாறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சுவைப்பதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். ஆனால், இது தரும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்.

அதே சமயம், உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. இது நம் உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தவும், ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். ஆயுர்வேத நிபுணர், மருத்துவர் நிதிகா கோலி, இதுகுறித்த ஆலோசனைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு, “பின்வரும் ஆலோசனைகள் என்பது பண்டைய கால ஆயுர்வேத பலன்களை உள்வாங்கிக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி ஸ்வீட்கள் மூலமாக உடல் நலன், ஆற்றல் போன்றவற்றை அதிகரிக்க முடியும்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.


உணவுக்கு முன்பாக ஸ்வீட்கள் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக இனிப்புகள் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆகவே, இனிப்புகளை முதலில் எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவே உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது செரிமானத்தை அது மட்டுப்படுத்துகிறது.

உணவுக்கு முன்னால் இனிப்புகளை எடுத்துக் கொள்ளும்போது நம் நாவில் உள்ள சுவை மண்டலத்தை அது தூண்டிவிடும். உணவுக்குப் பிறகு இனிப்புகளை எடுத்துக் கொண்டால் உணவு செரிமானம் ஆகாமல், ஆசிட் சுரப்பு அதிகமாவதற்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல் உணவுக்குப் பின்னர் இனிப்புகளை எடுத்துக் கொண்டால் வாயு உருவாகும் என்று ஆயுர்வேத நிபுணர் நிதிகா கோலி தெரிவித்துள்ளார்.

காலை உணவில் இனிப்பு முக்கியம்:

மற்ற வேளை உணவுகளைக் காட்டிலும் காலை வேளை உணவுக்கு முன்பாக ஸ்வீட் எடுத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக, நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதனால், தமிழர் பண்பாட்டில் பெரும்பாலும் காலை டிபன் உணவுக்கு முன்பாக கேசரி, அல்வா, போன்றவற்றை பரிமாறுகின்றனர். நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க வேண்டும் என விரும்புபவர்கள் லோ-கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வித விதமான மனித மூளைகள்.. மூளை அருங்காட்சியகம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

May 18, 2023 0

 இந்த உலகத்தில் கல், மண், சிலைகள், படங்கள், ஓவியங்கள், எலும்புக்கூடுகள், ஏன் முடியை வைத்து கூட அருங்காட்சியகம் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மூளை அருங்காட்சியகம் என்று ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டர் வைத்து செய்தது அல்ல... உண்மையான மனித மூளை...

உண்மையில் மனித மூளையைக் கொண்ட ஒரு அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ளது. அதுவும் எங்கோ வடஇந்தியாவில் இல்லை. நமக்கு மிக அருகில் தான் இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரத்தில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்) தான் இந்த மூளை அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.

வெவ்வேறு நரம்பியல் நோய்கள் கொண்ட மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மூளை மாதிரிகள் அருங்காட்சியகத்தின்  சேகரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் மூளைக் கட்டிகள், பார்கின்சன் நோய், கால்-கை வலிப்பு, அல்சைமர் நோய் மற்றும் பிற மூளை தொடர்பான கோளாறுகள் உள்ள மூளைகளை இங்கே பார்க்கலாம்.

மனித மூளை மட்டும் அல்லாமல், முள்ளந்தண்டு வடம் மற்றும் பிற பாரன்கிமல் உறுப்புகள் அனைத்தும் அருங்காட்சியகத்தின்  சேகரிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உறுப்புகளை  பார்வையாளர்கள் தொடுவதற்கும் உணருவதற்கும் கூட வாய்ப்பு  கிடைக்கின்றன. இது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும்.

நியூரோபயாலஜி துறையில் ஆர்வம் உள்ளவர்களும் மூளை சார்ந்த விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆரவமாக இருப்பவர்களின் நிச்சயமாக பார்க்க வேண்டிய அருங்காட்சியகம் தான் இது. இந்த தனித்துவமான நிம்ஹான்ஸ் மூளை அருங்காட்சியகம், பெங்களூரில்  ஓசூர் மெயின் ரோடு, வில்சன் கார்டன் அருகில், அமைந்துள்ளது.

அருங்காட்சியத்தை சுற்றி  பார்ப்பதைத் தாண்டி இறந்தபின் சடலங்கள் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் மூளை தானம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தை காண கட்டணங்கள் ஏதும் இல்லை. புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை மட்டும், மதியம் 2:30 முதல் 4:30 மணி வரை செயல்படுகிறது. மற்ற நாட்களில், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எழும்பூர் அரசு மருத்துவமனையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

May 18, 2023 0

 சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் 2 வார்டு மேலாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் மே மாதம் எதிர்வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: வார்டு மேலாளர் (Ward Manager)

காலியிடங்கள் எண்ணிக்கை: 2

மாதச் சம்பளம்: ரூ. 10 ஆயிரம்

கல்வித் தகுதி:  கணினி இயக்கம் அறிவுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

நிபந்தனைகள்: இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 11  மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளன.

மேலும், தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குதர் மற்றும் பேராசிரியர்.

மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும்

அரசு தாய் சேய் நல மருத்துவமனை

எழும்பூர் சென்னை -600008.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.05.2023

நிர்ணயிக்கப்பட்ட (26.05.2023) தேதிக்கு பிறகு கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ்ஸில் வேலைவாய்ப்பு..! முழு விவரம் இதோ..!

May 18, 2023 0

 விருதுநகர் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவையில் EMT மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “EMT மற்றும் ஆம்புலன்ஸ் பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பபடுகிறது. இதற்கான தேர்வு நாளை (மே19ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

வேலைக்கான தகுதிகள் :

இ.எம்.டி என்று சொல்லப்படும் எமர்ஜென்சி மெடிக்கல் லேப் டெக்னீசியன் வேலைக்கு பி.எஸ்சி நர்சிங், ஏ.என்.எம். ஜி.என்.எம், டிப்ளமா இன் மெடிக்கல் லேப் டெக்னீசியன், டிப்ளமா இன் பார்மசி மற்றும் லைஃப் சையின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை எழுத்துத் தேர்வு, செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என 3 பிரிவுகளாக நடக்கும். மேலும் கண் பரிசோதனை உட்பட உடல் பரிசோதனைகளும் இருக்கும்.

இந்த 2 பணியிடங்களுக்கான தேர்வு வரும் மே 19ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அங்கு நேரில் அசல் சான்றிதழ்களோடு சென்று கலந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.வயது வரம்பு : 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, அடிப்படை மருத்துவ அறிவு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று பிரிவுகளாக நடக்கும்.

சம்பளம் : மாதம் ரூ.15,000

இதேபோல் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், கையில் கனரக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் கையில் இருக்க வேண்டும். உயரம் 163 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்... ரூ. 39,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

May 18, 2023 0

 சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பணியிடம்ஊதியம்
ஓதுவார்1ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

மேலும் விவரங்கள் இங்கே கிளிக்செய்யவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

May 18, 2023 0

 காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ,12-வது மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.


எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 19.05.2023 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு... சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணிடாதீங்க..!

May 18, 2023 0

 தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 16, 2023

சர்க்கரை நோய் முதல் சிறுநீரக பிரச்சனை வரை.. கோவக்காயில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?

May 16, 2023 0

 சில, பல ஆண்டுகளுக்கு முன்னால் வயலோர வேலிகளிலும், புதர்களிலும் தாமாக பரவிக் கொடி வகையாக மட்டுமே கோவக்காய் அறியப்பட்டது. அதை யாரும் சீண்டிக்கூட பார்க்க மாட்டார்கள். கிராமத்து மக்கள் சிலர் அந்த கோவக்காய் கொடிகளை அறுத்து வந்து ஆடுகளுக்கு போடுவது உண்டு. அதேபோல பள்ளிக் குழந்தைகள் கோவக்காய் கொடி இலைகளை பறித்து, அடுப்புக் கரியுடன் அரைத்து அதை வகுப்பறையின் கரும்பலகையில் தடவுவார்கள்.

அதே சமயம், கோவக்காயில் மருத்துவ பலன்கள் இருக்கின்றது என விழிப்புணர்வு பெற தொடங்கிய நிலையில், மக்களிடம் அதற்கான தேவை அதிகரித்தது. இந்த நிலையில், அதை தோட்டப்பயிராக சாகுபடி செய்ய தொடங்கினர். கோவாக்காயை நீள வாக்கில் அல்லது வட்ட வடிவில் வெட்டி பொரியல் செய்து சாப்பிடுகின்றனர். சிலர் சாம்பாரிலும் சேர்த்துக் கொள்கின்றனர்.

ஊட்டச்சத்து விகிதம் : பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.


ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் : ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.

உடல் பருமனை தடுக்கும் : உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் உள்ளன. உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதை இது தடுக்கும். அதேபோல மெடபாலிச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலக்கட்டு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

சோர்வை போக்குகிறது : நம் உடல் இயக்கத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தச்சோகை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ஆரோக்கியத்தை தக்க வைக்க கோவக்காய் உதவுகிறது.

இதர நன்மைகள் : கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும். கால்சியம் மற்றும் இதர மினரல்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் தங்கிவிடும். கோவக்காயில் உள்ள ஆரோக்கியமான கால்சியம் சத்து இந்த சிறுநீரக கற்களை தடுக்கக் கூடியது. கோவக்காய் இலைகள் மற்றும் தண்டுகளை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவினால் அலர்ஜிகள் குணமாகும். கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

காசு பணம் செலவழிக்க வேண்டாம்... இதை மட்டும் பண்ணுங்க... என்றுமே நீங்க இளமைதான்..!

May 16, 2023 0

 

என்றுமே இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? நம் அனைவருக்குமே அழகாக இருக்கணும், எப்போதுமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதனை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சில முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும். நல்ல விஷயங்களை நாம் பட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. பிறரின் அனுபவங்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில், இளமையாக இருப்பவர்கள் அவர்களின் இளமையை கட்டிக் காக்க என்னென்ன ரகசியங்களை பின்பற்றினார்கள் என்பதை தெரிந்து கொண்டு நாமும் அதனை பின்பற்றினாலே போதுமானது. என்றும் இளமையாக இருக்க உதவும் ஒரு சில குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்:-

ஆழ்ந்த உறக்கம் : வயதானாலும் இளமையாக காட்சியளிக்கும் நபர்கள் சீரான தூக்க சுழற்சியை கொண்டிருப்பதாக கூறுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறக்கம் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

உணவு : நீண்ட ஆயுள் மற்றும் வயதான அறிகுறிகளை தவிர்ப்பதற்கான முக்கிய ரகசியம் உணவுதான். கெமிக்கல்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லாத ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே அழகும் ஆரோக்கியமும் பெற்று நீண்ட காலம் வாழலாம்.

ஆரோக்கியமான உணவுகள்: நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான மற்றொரு ரகசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக சாப்பிடுவது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற வண்ணமயமான உணவுகளை தினந்தோறும் சாப்பிடுவது உங்கள் இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

உடற்பயிற்சி : உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். தினமும் உடற்பயிற்சியை வழக்கமாக செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இது உங்கள் தசைகளை இறுக்கி வயதான தோற்றத்தை தடுக்கும்.

மன ஆரோக்கியம் : நமது உடல் ஆரோக்கியமானது மன ஆரோக்கியத்தை சார்ந்துள்ளது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இளமையாக தோன்றும் பல நபர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது போலவே மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரும பராமரிப்பு : சருமம் என்பது நமது வயதின் கண்ணாடி என்றே கூறலாம். ஆகவே நமது சருமத்தை கவனித்துக் கொண்டாலே, இளமையான தோற்றத்தை எளிதில் அடைந்து விடலாம்.

சூரிய ஒளி : சூரிய ஒளியில் காணப்படும் வைட்டமின் டி சத்தானது நமது சருமம், எலும்புகள் மற்றும் மன ஆரோக்கியம் ஆகிய மூன்றுக்கும் முக்கியம். ஆகவே தினமும் 10 நிமிடமாவது சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் : புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் மோசமான நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது ஒருவரது ஆயுளை நீட்டிக்க உதவும்.

குறைவான சோம்பல் நேரம் : நீண்ட நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஒருவேளை நீங்கள் கம்ப்யூட்டர் போற்றவற்றின் முன்பு அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுத்து ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பராமரித்தல் : உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டாலே உங்களின் ஆயுள் அதிகரிக்கும். ஆகவே ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த ஒரு விஷயங்களையும் செய்ய வேண்டாம்.

 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

May 16, 2023 0

 தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சரவணன் பாரதி தெரிவித்துள்ளார். 

1. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை உடுத்த வேண்டும்.

2. உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது.

3. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்லலாம்.

4. வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

5. நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

6. பெண்கள் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

7. பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

8. ஏசி அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.

9. நீச்சல் குளங்களுக்கு செல்லும் போதும் தண்ணீர் பருக வேண்டும்.

10. குளிர் பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

11. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்கலாம்.

12. குழந்தைகளை மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே அனுமதிக்க கூடாது.

13. குழந்தைகள் வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவி விட வேண்டும்.

14. பெரியவர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகளவில் தர வேண்டும்.

15. நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிடுவது அவசியம்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..!

May 16, 2023 0

 எப்பொழுதும் வீடு, அலுவலகம், குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை காட்டிலும் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பெரும்பாலான பெண்கள் இந்த தவறை தான் செய்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிடாமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ என்று தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் கேடு விளைவிக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களின் உடலைக் காட்டிலும் பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு வேலை நீங்களும் எல்லா நேரமும் பிசியாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத ஒரு பெண்ணாக இருந்தால் இந்த பதிவில் உங்களுக்கான ஒரு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம்.

உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது அல்லது போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது பலவிதமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற உடல்நல பிரச்சனைகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய எட்டு விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு அவர்களுக்கு சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு அவசியம் தேவை. பெண்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளை கவனித்து ஆரோக்கியமாக இருக்க கட்டாயமாக ஒரு சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முதலில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு கால்சியம் நிறைந்த உணவுகளையாவது சாப்பிடுவது அவசியம்.
உங்கள் உணவுகளில் எலுமிச்சைகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
முந்தைய நாள் இரவு தூங்கும் பொழுது நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் பாதாமை தோல் உரித்து அதனை சாப்பிடவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
தினமும் முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் பழக்கத்திற்கு வாருங்கள்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகவே முடிந்தவரை உணவுகளை பிரித்து சிறிய அளவுகளாக சாப்பிடவும்.
உணவுகளை தவிர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சிற்றுண்டிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டிகள் பொறுத்தவரை ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பழ வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும். மேலும் உணவுகளை தவிர்ப்பது முற்றிலுமாக தவறு ஒருபோதும் அதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையாகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை உருவாக்க கற்றுக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள். யோகா, தியானம், ஆடல், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இதனை தவறாமல் தினந்தோறும் செய்தல் வேண்டும்.



 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 15, 2023

TNPSC, UPSC தேர்வுகளுக்கு உண்டு உறைவிட இலவசப் பயிற்சி

May 15, 2023 0

 TNPSC (Group-1), UPSC (IAS, IPS) தேர்வுகளை எழுத உள்ளவர்களுக்காக உண்டு உறைவிட இலவசப் பயிற்சியை சேவாபாரதி வழங்கி வருகிறது.


இது தொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இயற்கை சீற்றங்களான சுனாமி, பெருமழை போன்ற காலங்களிலும் கொரானா பெருந்தொற்றுக் காலத்திலும் சேவாபாரதி தமிழ்நாடு அரும் சேவை புரிந்ததை அனைவரும் அறிவர். மேலும், பல அரிய சேவைகளை சேவாபாரதி வருடம் முழுவதும் வழங்கி வருகிறது. கல்விச் சேவையின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா நகரில், பாரதி பயிலகம் எனும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வு மையத்தை கடந்த 2021ல் துவக்கி சேவாபாரதி நடத்தி வருகிறது.

சேவாபாரதியின் இப்பணியில் பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி இணைந்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. பி.எல். ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி கடந்த 16 ஆண்டுகளாக, இந்தப் பணியில் சிறப்பான சேவையைச் செய்து வருகிறது. கடந்தாண்டு, பாரதி பயிலகம் தமிழக அரசின் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கும், குரூப் 2 முதன்மை தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்தது.

மேலும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கும் ஒரு புதிய திட்டத்தை பாரதி பயிலகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வருகின்ற ஜூன் 2023 முதல், டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-1), யு.பி.எஸ்.சி (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)., தேர்வுகளுக்கு ஓராண்டிற்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளித்து மாணவர்கள் அரசுப் பணியில் சேரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சமுதாயத்தில் / பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது, ஓராண்டுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

இதில் சேர மே-25க்குள், contactbharathi57@gmail.com என்ற இ-மெயில் ஐடியில், மாணவர்கள் தங்கள் முழுவிவரத்துடன் (Bio-Data) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தி, சேவாபாரதி, பாரதி பயிலகம், பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமியின் குழுவால் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண். 9003242208" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.43,000 வரை சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை : வெளியானது முக்கிய அறிவிப்பு

May 15, 2023 0

 Aavin Recruitment 2023: கன்னியாகுமரிநேரடி தேர்வு நடைபெறும் இடம்: கன்னியாகுமரி  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், நாகோர்கோயில் - 629 003, மின்னஞ்சல் முகவரி: aavinkk@gmail.com, தொலைபேசி எண். 04652 - 230356 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்:கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை1
கல்வித் தகுதிகால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம்ஓராண்டு
கூடுதல் நிபந்தனைகள்கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்
சம்பளம்ரூ. 43,000

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம் 17ம் தேதி காலை 11.30 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.


மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

May 15, 2023 0

 Pudukkottai District Job Alerts: புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Program cum Administrative Assistant) பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஊதியம்:  ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.12,000- வழங்கப்படும்.

அடிப்படைத் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: தேசிய நலக்குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு முன்அனுபயம் பெற்றிருக்க வேண்டும்.

கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் 15.05.2023 முதல் 20.05.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.