Agri Info

Adding Green to your Life

May 23, 2023

மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்: மருத்துவமனை தர மேலாளர் வேலை ... உடனே விண்ணப்பியுங்கள்

May 23, 2023 0

 நாகப்பட்டினம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager) பதவியை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 45 ஆண்டுகள்

கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் மருத்துவமனை மேலாண்மை பட்ட படிப்பு (Masters in Hospital Administration / Health Management) மற்றும் பொது சுகாதார துறையில் முதுநிலை பட்ட படிப்பு (Master of Public Health) (Regular course Not Correspondence Course) / Two Years Experience in Public Health/ Hospital Administration முடித்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

அடிப்படைச் சம்பளம்: ரூ.60 ஆயிரம்

நிபந்தனைகள்:

இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

நிரந்தர பணி நியமனத்தில் எந்த விதமான முன்னுரிமையும் கோர முடியாது.

எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியுடன் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க கடைசி நாள் 31.05.2023 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஒரத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் - 611108 ஆகும். விண்ணப்ப அறிவிக்கையை இங்கேபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!

May 23, 2023 0

 தென்காசி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டமும், HCL நிறுவனமும் இணைந்து 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

HCL நிறுவனம் TechBee திட்டத்தின் வாயிலாக 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matric/CBSE/ICSE), அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.

அதற்கான தேர்வு Onlineல் மே 27மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை S. வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் (SVC Engineering College of Technology) நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10th, 12th Mark sheet, Aadhaar card, Passport Photo-1, Android Mobile phone & மதிய உணவு எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், HCL -TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/IM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம்.

Intenship பயிற்சியின்போது 7வது மாதம் முதல்  12வது மாதம் வரை உதவித் தொகை மாதம் 10,000 வழங்கப்படும். இத்தேர்வில் 2023ல் 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற அனைத்துப் பிரிவு அரசு/அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் கீழ்க்கண்ட Linkல் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும், பதிவு செய்யாத மாணவர்களும் நேரடியாக தேர்விற்கு வரலாம். பதிவு செய்யவும். https://forms.office.com/r/q3vmdm7qdi மேலும் தொடர்புக்கு மு.செந்தில்குமார் - 9788156509, 6382998925 தொடர்ப்பு கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய தபால் துறையில் 12,828 கிராம அஞ்சல் பணியிடங்கள்: 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை

May 23, 2023 0

1/ 6
 நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது




நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.


நாடு முழுவதும் : 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், தமிழ் நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. கோயம்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம் கிழக்கு, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 இடங்களும், தாம்பரம் மண்டலத்தில் 3 இடங்களும், விருத்தாச்சலம் மண்டலத்தில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைத் தாண்டி, நாட்டின் எந்தவொரு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS (Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


ரூ. 75,000 வரை சம்பளம்: இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

May 23, 2023 0

 கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்:

பதவியின் பெயர்வயதுகல்வித்தகுதிஒப்பந்த ஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்MBBSரூ.75,000/-
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்DGNM ( DiplomaIn General NursingMidwife )ரூ.14,000/-
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்(Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள்1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ரூ.6,000

மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் திருக்கோயில் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

May 23, 2023 0

 பொதுவாகவே நாம் சில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவற்றின் சுவையை அதிகரிப்பதற்கும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் சில மசாலாக்களையோ அல்லது சுவையூட்டிகளையோ பயன்படுத்துவது வழக்கமானது தான். ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது அவற்றில் சுவையூட்டிகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக நம்மில் பலரும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களோடு சர்க்கரை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அவை உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களோடு சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காலை உணவில் சேர்க்கப்படும் தானியங்கள்: பெரும்பாலும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் தானிய வகைகளோடு பாலை சேர்த்து உட்கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் சேர்க்கும் பாலிலேயே மிக அதிக அளவில் சர்க்கரை ஏற்கனவே இருப்பதால் கூடுதலாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பழ இனிப்புகள்: பழங்களை சேர்த்து தயாரிக்கும் இனிப்பு வகைகளை நீங்கள் விரும்பி உட்கொள்பவராக இருந்தால் முடிந்த அளவு அவற்றுடன் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அதிக அளவில் இனிப்பு சுவை தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவு பழங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான இனிப்பு சுவையை பெற முடியும்.

காபி : பெரும்பாலான மக்கள் காபியுடன் சர்க்கரை சேர்த்து அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கும் போது அது பல்வேறு வித நன்மைகளை கொடுக்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்: உங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் உணவு கட்டுப்பாட்டின் அளவை பொறுத்து தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய சர்க்கரையின் அளவானது மாறுபடும். “அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்” பரிந்துரையின்படி ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஒன்பது டீஸ்பூன் வரை சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோடை காலத்தில் இந்த 5 உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

May 23, 2023 0

 பொதுவாகவே நம்மில் பலரும் கொழுப்பு அல்லது காரம் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும், எண்ணெயில் பொரித்த மற்றும் துரித உணவுகளை உட்கொண்ட பின்னும் , வயிற்றில் அமிலத்தன்மையானது அதிகரித்து அதனால் சில அசோகரிங்களை உணர்ந்து இருக்கலாம். இதனால் சிலருக்கு அடிக்கடி ஏப்பம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம்..

இதைப்பற்றி பேசிய ஊட்டச்சத்து நிபுணரான லவ்நீத் பத்ரா கூறுகையில், சில சமயங்களில் தவறான உணவுகளை உட்கொள்வது மட்டுமல்லாமல் சரியான உணவுகளை உட்கொள்ள தவறுதினாலும் உடலில் அமிலத்தன்மையானது அதிகரிக்கலாம். ஆண்டாசிட்ஸ் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின்றி எடுக்கப்படும் சில மருந்து மாத்திரைகள் ஆகியவற்றினாலும் அமிலத்தன்மையானது அதிகரிக்க கூடும். இது போன்ற சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை அதிகரித்து வாழ்வதன் மூலம் அமிலதன்மையின் அறிகுறிகளை சற்று குறைக்க முடியும்.


அந்த வகையில் குறிப்பாக வெயில் காலங்களில் போது உடலில் ஏற்படும் அதிகப்படியான அமிலத்தன்மையை குறைப்பதற்கு உட்கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து உணவு பொருட்களை பற்றி இப்போது பார்ப்போம்.

அரிசி: வெயில் காலங்களில் போது அரிசி மற்றும் பாஸ்டா போன்ற உணவு வகைகள் நமது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அரிசியானது மிக எளிதாக செரிமானம் செய்யக்கூடிய வகையில் இருக்கும். அதே சமயத்தில் அமிலத்தன்மை ஏற்படுத்துவதையும் இது கட்டுப்படுத்துகிறது. மேலும் இந்த உணவுப் பொருட்கள் நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த உதவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தின் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. நமது உடலில் அமிலங்கள் சுரப்பதை சம நிலையில் வைப்பதற்கும் வாழைப்பழம் பெரும் அளவில் உதவுகிறது. இவை மட்டுமின்றி உடலில் சேர்க்கப்படும் உணவுப் பொருட்களை செரிமான மண்டலத்தில் இலகுவாக நகர்த்துவதற்கு உதவி செய்யும் நார்ச்சத்தான பெக்டினும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

வெள்ளரிக்காய் : ஆல்கலைன் உணவுப் பொருளான வெள்ளரிக்காய், நமது உடலில் உள்ள பி எச் அளவை அதிகரித்து அமிலத்தன்மையை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் அதிக அளவு நீர் நிறைந்துள்ளதாலும் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளதாலும் வெயில் காலங்களில் உண்பதற்கு மிகவும் ஏற்ற உணவாகும்.

சப்ஜா விதைகள்: சப்ஜா விதைகள் இயற்கையாகவே நமது உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. மேலும் அமிலதன்மையால் ஏற்படும் நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. நீரில் ஊற வைத்து இவற்றை உட்கொள்ளும்போது உடலின் அமிலத்தன்மை கட்டுப்படுத்தி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது

நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகள்: வேறு காய்கறிகள் என அறியப்படும் நிலத்திற்கு அடியில் விளைவிக்கப்படும் இந்த காய்கறிகளில் ஸ்டார்ச் ஆனது அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு நன்மை தரக்கூடிய கார்போஹைட்ரேடுகள் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து ஆகியவையும் அதிகம் உள்ளன. இவற்றை உண்பதினால் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படாது.

ஆனால் இவற்றை சமைக்கும் போது அதிக அளவு எண்ணெய் அல்லது காரம் சேர்க்காமல் சமைக்க வேண்டும். இல்லையெனில் இவையும் அமிலத்தன்மையை உண்டாக்கும். உருளைக்கிழங்குகள், கேரட் மற்றும் பீட்ரூட் போன்றவை வேர் காய்கறிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


சிக்கனை சமைக்கும் முன் இப்படி கழுவாதீங்க... உயிருக்கே ஆபத்தாகலாம்..!

May 23, 2023 0

 பொதுவாக எந்த உணவுப் பொருளையும் சமைக்கும் முன் சுத்தமாக கழுவிய பின் சமையலில் சேர்க்க வேண்டும் என்பார்கள். அதுதான் சுத்தமாக சமைக்கும் முறையும் கூட. ஆனால் இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

ஆம்... சமைக்கும் முன் சிக்கனை கழுவக் கூடாது என உலகெங்கிலும் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு சமைப்பது உயிருக்கே ஆபத்தாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்.

The Conversation இன் அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் கட்டுப்பாட்டாளர்களும் சமைக்கும் முன் பச்சையாக இருக்கும் கோழி இறைச்சியை கழுவ வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர். சிக்கனை கழுவினால், சமையலறையைச் சுற்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவக்கூடும் என்பதால் அவ்வாறு செய்வது தவறான முறை என்கின்றனர். அதற்கு பதிலாக சிக்கனை கழுவாமல் நன்றாக சமைப்பது சிறந்தது. அதுவே பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது.

சிக்கனை கழுவுவது ஒரு பொதுவான நடைமுறையாகும். ஆஸ்திரேலியாவின் உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் நடத்திய ஆய்வில், ஆஸ்திரேலிய குடும்பங்களில் பாதி பேர் சிக்கனை சமைப்பதற்கு முன்பு கழுவுகிறார்கள் என்று காட்டுகிறது. 25% நுகர்வோர் சிக்கனை அடிக்கடி கழுவுவதாக டச்சு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.


சிக்கனை கழுவ என்ன காரணம்..? உணவில் பரவும் நோய்க்கான இரண்டு முக்கிய காரணங்கள் கேம்பிலோபாக்டர் (காம்பிலோபாக்டர்) மற்றும் சால்மோனெல்லா (சால்மோனெல்லா) ஆகிய பாக்டீரியாக்கள்தான். அவை பொதுவாக கோழி இறைச்சிகளில் காணப்படுகின்றன. சிக்கனை கழுவும்போது அந்த பாக்டீரியாக்கள் சமையலறையில் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இதன் காரணமாக நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.

ஆஸ்திரேலியாவில், கடந்த இரண்டு தசாப்தங்களில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன. வருடத்திற்கு 220,000 கேம்பிலோபாக்டர் நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, 50,000 கோழி இறைச்சியிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

சிக்கனை கழுவிய தண்ணீரிலிருந்து அந்த ஆய்வு நடத்தப்பட்டபோது இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு செய்தபோது அந்த நீர் துளிகள் மூலம் சமையலறை சிங்க் பகுதிகளை சுற்றிலும் இந்த பாக்ட்டீரியாக்கள் பாரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை நிரூபித்துள்ளது.

சிக்கனை கழுவிய தண்ணீரிலிருந்து அந்த ஆய்வு நடத்தப்பட்டபோது இந்த ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு ஆய்வு செய்தபோது அந்த நீர் துளிகள் மூலம் சமையலறை சிங்க் பகுதிகளை சுற்றிலும் இந்த பாக்ட்டீரியாக்கள் பாரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை நிரூபித்துள்ளது.குறிப்பாக நீர்த்துளிகள் சிதறி தெறிக்கும் அமைப்புகளில் கழுவும்போது அது அதிவேகமாக மற்ற இடங்களுக்கும் தாவும் என்று கூறப்படுகிறது. அவை சிறு சிறு தேக்கங்களில் தங்கி உற்பத்தியை பெருக்கவும் செய்யலாம். இதனால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு உபாதைகள் வரலாம் என்றும் எச்சரிக்கிறது.

மாற்று வழி..? எனவே சிக்கனை கழுவுவதற்கு பதிலாக குறைந்த வெப்ப அளவிலான கொதி நீரில் சிக்கனை கழுவலாம் . அந்த நீரில் சிக்கனை அலசி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த வெப்ப நீரில் கிருமிகள் அழிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. அந்த சுடு நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, மஞ்சள் சேர்த்து சிக்கனை கழுவலாம். சிக்கன் கழுவிய நீரை வீட்டு சிங்க் தொட்டியிலேயே ஊற்றாமல் வெளிப்புறத்தில் ஊற்றுவது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையை குறைக்க செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்த கூடாது: உலக சுகாதார மையம்

May 23, 2023 0

 பொதுவாக இனிப்பு சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கும் என்பார்கள். ஆனால் செயற்கை இனிப்பூட்டிகளை சாப்பிட்டால் அதே பலன் கிடைக்குமா? உலக சுகாதார மையம் தரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன.

இனிப்பு உடல் எடையை கூட்டும், சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இனிப்புக்கான செயற்கை மாற்றாக கொண்டுவரப்பட்டவை தான் artificial sweeteners. இவை பல வகைகளில் கிடைக்கின்றன. மாத்திரைகளாகவும், திரவ வடிவத்திலும், பவுடராகவும் விற்கப்படுகின்றன.

காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியாது என நினைப்பவர்கள் அவற்றுக்கு மாற்றாக இந்த artificial sweeteners-ஐ தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், செயற்கை இனிப்பூட்டிகளின் கலோரிகள் குறைவு என்பதால் சர்க்கரைக்கு பதிலாக இவற்றை விரும்புகின்றனர்.

உலக சுகாதார மையமோ இந்த வகையான இனிப்பூட்டிகள் எந்த வகையிலும் உடல் எடையை குறைக்க உதவாது என கூறுகிறது. தவிர டைப்-2 சர்க்கரை நோய்க்கு இது வழிவகுக்கும் என தெரியவந்துள்ளதாக கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல மாரடைப்பு போன்ற இதய நோய்க்கும் இது வழிவகுக்குமாம்.

மேலும் இவற்றில் எந்த வித சத்தும் இல்லை என்பதால், மக்கள் இவற்றை புறகணிப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் இனிப்பு சுவையை விரும்புவோர் பழங்களிலும் சர்க்கரை உண்டு என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லது என கூறுகிறது.

கிளீவ்லாண்ட் கிளினிக் (Cleveland Clinic) என்னும் நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 4ஆயிரம் பேரிடம் நடத்திய மற்றுமொரு ஆய்வில், அவர்களில் எரித்ரைடோல் என்னும் artificial sweetener பயன்படுத்தியவர்கள் பலர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயத்திற்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளது.

செயற்கை பொருட்களின் வணிகம் அதிகரித்துவிட்ட சூழலில், இயற்கை கொடையாக கொடுக்கும் உணவு பொருட்களே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பழக்கங்களை மேற்கொண்டாலே பல நோய்களிலிருந்து தப்பலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி டீடாக்ஸ் வாட்டர் கேள்விப்பட்டிருக்கீங்களா..? பல நன்மைகள் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

May 23, 2023 0

 ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள் அல்லது மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீடாக்ஸ் வாட்டர் (Detox Water), நம் உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றி வெளியேற்ற உதவுகிறது.

பொதுவாக டீடாக்ஸ் வாட்டர் என்பது அடிப்படையில் ஒருவரது சுவை மற்றும் விருப்பங்களை பொறுத்து பல பழங்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நற்குணங்கள் அடங்கிய நீர் ஆகும். டீடாக்ஸ் வாட்டர் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது என நம்பப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்போர் மத்தியில் டீடாக்ஸ் வாட்டர் பிரபலமாக உள்ளது.

சமீபத்தில் பிரபலமாகி வரும் டீடாக்ஸ் வாட்டர் ரெசிபியாக இருக்கிறது Cucumber-Lemon-Ginger (வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி) வாட்டர். கூடுதல் கலோரிகளின்றி டீடாக்ஸ் நன்மைகளுடன் வருகிறது இந்த ரெசிபி. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நிதி குப்தா தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், டீடாக்ஸ் வாட்டரானது செரிமானத்தோடு நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பொதுவாக வெள்ளரி, எலுமிச்சை, புதினா, இஞ்சி மற்றும் பெர்ரி போன்ற பொருட்களை தண்ணீரில் மிக்ஸ் செய்வதன் மூலம் டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இவரின் கூற்றுப்படி எலுமிச்சை, இஞ்சியுடன் சேர்த்து வெள்ளரியையும் பயன்படுத்தி தயார் செய்யப்படும் Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் நம்மை புத்துணர்ச்சியாக வைக்க உதவுவதோடு ஆரோக்கியமான பானமாக அமைகிறது. இந்த டீடாக்ஸ் வாட்டரின் சில நன்மைகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதன்படி.. வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களின் சிறந்த ஆதாரமாகவும் வெள்ளரி உள்ளது.

வெள்ளரி டீடாக்ஸ் வாட்டரை பருகுவது செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறவும் உதவும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் மற்றும் இதில் நேச்சுரல் டீடாக்ஸிஃபையிங் பண்புகள் உள்ளன.

சரி, இந்த ஆரோக்கியமான Cucumber-Lemon-Ginger டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்க தேவையான பொருட்கள் என்னவென்பதை கீழே பார்க்கலாம்.

மீடியம் சைஸ் வெள்ளரி - 1, விதை நீக்கப்பட்ட லெமன் - 1, இஞ்சி - 1 பீஸ், புதினா இலைகள் - 10, சியா விதைகள் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 லிட்டர், ஐஸ் க்யூப்ஸ் - தேவையான அளவு

டீடாக்ஸ் பானங்கள் உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த இயற்கை மருத்துவர் டாக்டர் சந்தோஷ் பாண்டே, நம் உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்ற போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதில் ஒருவர் அதில் தனக்கு பிடித்த சுவையான பொருட்களை சேர்ப்பதன் மூலம் ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்ட அளவை எளிதாக பருக முடியும். எனவே டீடாக்ஸ் வாட்டர் என குறிப்பிடப்படும் இன்ஃப்யூஸ்ட் வாட்டர் (Infused water), கூடுதல் கலோரிகள் இன்றி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையை சேர்க்க சிறந்த வழி என்கிறார் சந்தோஷ் பாண்டே. வெள்ளரி-எலுமிச்சை-இஞ்சி சேர்க்கப்பட்ட தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு சிறந்த டீடாக்ஸ் வாட்டராகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீடாக்ஸ் வாட்டரில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்றி கூறுகையில், வெள்ளரிகள் அவற்றின் ஹைட்ரேட்டிங் பண்புகளுக்காக பெயர் பெற்றவை, அதே நேரம் எலுமிச்சை சாறு நச்சுத்தன்மையை நீக்குவதற்கு சிறந்தது. ஏனெனில் இது கல்லீரலை simulates செய்கிறது மற்றும் பசியைக் குறைக்கும் ஒரு வகை நார்ச்சத்தான Pectin-ஐ கொண்டுள்ளது. இஞ்சி ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாகும். எனவே தினசரி எலுமிச்சை, இஞ்சி மற்றும் வெள்ளரி கலந்த தண்ணீரை குடிப்பது ஆரோக்கியமானது. இந்த அற்புத ஆர்கானிக் உணவுகளை தினமும் எடுப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் முழு உடல் அமைப்பையும் சுத்தப்படுத்த உதவுகிறது என்றார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 22, 2023

உங்க இதயம் வேகமாக துடித்து சட்டென குறைகிறதா..? உடனே செக் பண்ணுங்க..!

May 22, 2023 0

 ஒழுங்கற்ற இதயதுடிப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. ஆம் சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சில சம்பவங்களினால் இதய துடிப்பு மிக வேகமாக இருக்கும். அதே சமயம் சில நேரங்களில் மிக மெதுவாக இயங்கும். இப்படி மாறி மாறி ஒழுங்கற்ற இதயத்துடிப்பை மருத்துவ உலகில் அரித்மியா (arrhythmia) என்று அழைக்கின்றனர்.

இது குறித்து பிரபல மருத்துவர் ப்ரீதம் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், சாதாரணமாகவே வயது வந்தோருக்கான இதய துடிப்பு வீதம் நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிக்கிறது. ஆனால் இதய துடிப்பு சற்று மாறும் போது, மயக்கம், மூச்சுத்திணறல் மற்றும் அதிக வியர்வை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதுப்போன்ற பிரச்சனை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை நிச்சயம் விட்டு விட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்

இருந்தப்போதும், சீரற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டாலே, இதயத்தில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமல்ல. உடலின் வெவ்வேறு செயல்பாடுகளின் போது, இதயத் துடிப்பு வேகமடைவது இயல்பானது. இதேபோல், ஒருவர் ஓய்வெடுக்கும்போது அல்லது தூங்கும்போது, மெதுவாக இதயத் துடிப்பு ஏற்படுவது இயல்பானது.

ஒழுங்கற்ற இதய துடிப்பு உயிருக்கு ஆபத்தானதா? மருத்துவ ரீதியாக சில வகையான அரித்மியாக்கள் அதாவது ஒழுங்கற்ற இதய துடிப்பு பாதிப்பில்லாதவை. இவற்றிற்கு உடனடி சிகிச்சை தேவையில்லை. இருந்தப்போதும் மருத்துவ சோதனை மேற்கொண்ட பின்னர் என்ன வகையான பிரச்சனை உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நீங்கள் சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரித்மியாவின் வகைகள்: டாக்டர். கிருஷ்ணமூர்த்தியின் கூற்றுப்படி, பல்வேறு வகையான அரித்மியாக்கள் உள்ளன. இவை ஈசிஜி அல்லது ஹோல்டர் கண்காணிப்பு போன்ற எளிய நோயறிதல் சோதனைகள் மூலம் அடையாளம் காண முடியும். இந்த அரித்மியாக்கள் அப்நார்மல் ரிதம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சில அசாதாரண தாளங்கள் இதயத்தின் மேல் அறைகளில் உருவாகின்றன, இவை சுப்ரா வென்ட்ரிகுலர் அரித்மியாஸ் என்றும், இதயத்தின் கீழ் அறைகளில் தோன்றுபவை வென்ட்ரிகுலர் அரித்மியா என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும்? அரித்மியாவை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது ஒரு அபாயகரமான பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது இதயத் தடுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். “இதயத் துடிப்பை சரிசெய்வதற்காக இதயத்திற்கு மின் சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் இதயத் துடிப்பைச் சரிசெய்ய பொருத்தப்பட்ட சிறிய சாதனமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஏன் ஏற்படுகிறது? தூக்கம், உடல் செயல்பாடுகள் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக இதயத் துடிப்பு மற்றும் இதயத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானவை. ஆனால் மற்ற நேரங்களில், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, அல்லது அரித்மியா, ஒரு தீவிர பிரச்சனையாக மாறக்கூடும். எனவே நீங்கள் முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே பல நோய்களின் பாதிப்பை நாம் தவிர்க்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பலவீனமாகும் எலும்புகள்... இனி நீங்கள் இதில் கவனம் செலுத்துங்க...

May 22, 2023 0

 வேலை, வீடு, குடும்பம் என வேகமாக நகரும் இந்த உலகில் எலும்புகளின் ஆரோக்கியம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியம் என்பது நடைப்பயிற்சி அல்லது விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளுடன் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் தொடர்புடையது. இந்த இடத்தில், எலும்புகளுக்கான ஆரோக்கியமான உணவு தேவைகள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதினர் சந்திக்கும் தற்போதைய பிரச்சனைகள் - சூரிய ஒளியின் பற்றாக்குறை, வைட்டமின்-டி குறைபாடு காரணமாக மோசமான கால்சியம் அப்சார்ப்ஷன்; நடுத்தர வயது மற்றும் உழைக்கும் இளைஞர்களுக்கு - மீண்டும் வைட்டமின் டி குறைபாடு மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவைகளால் எலும்புகள் பலவீனம் அடைகிறது. வயதானவர்களை பொறுத்தவரை, இது ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும், அதாவது ரேப்பிட் போன் டையிங் (rapid bone dying) ஆகும்.

மேற்கண்ட நிலைமைகளில், எலும்புகளின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களை நாம் எவ்வாறு கையாள்வது? முதலாவதாக, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகள் பற்றிய ஞானம் மற்றும் விழிப்புணர்வு நமக்கு தேவை: கால்சியம் ஆனது பால், தயிர், கீரை, பாதாம், மீன் (மத்தி மற்றும் சால்மன்) ஆரஞ்சு, ப்ரோக்கோலி, காளான்கள் போன்றவைகளில் அதிகமாக உளள்து. வைட்டமின் டி ஆனது மீன் (மத்தி, சால்மன், சூரை போன்றவை), மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சூரிய ஒளியில் அதிகமாக உள்ளது.

இரண்டாவதாக போன் கால்சியம் மினரலைசேஷன் மற்றும் டிமினரலைசேஷன் (Bone calcium mineralization and demineralization) பயிற்சிகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும். வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் மேற்கூறிய செயல்முறை எலும்புகளை வலுப்படுத்துகிறது. பொதுவாகவே 'போன் லாஸ்' மற்றும் அதை தொடர்ந்து 'நியூ போன் ஃபார்மேஷன்' என நமது உடலின் எலும்புகளின் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இது தரமான மற்றும் நல்ல எலும்பின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு நிலையான செயல்முறையாகும். இதற்கு உடற்பயிற்சிகளும் அவசியம். அதாவது நடைபயிற்சி, ரன்னிங், ஜிம் அல்லது நடனம் போன்ற வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, முதியோர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்படுவதால், அவர்கள் முற்றிலும் வேறுபட்ட சிக்கலை எதிர்கொள்கின்றனர். ஆஸ்டியோபோரோசிஸை முற்றிலுமாகத் தடுக்க முடியாது, ஆனால் அது சார்ந்த அறிவு, போதுமான மருத்துவ பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சையின் மூலம் இந்த நிலையை கணிசமாகக் குறைக்க முடியும். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது, பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் மாதவிடாய் காரணமாக பெண்களுக்கும், முதியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதை மிக விரைவில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

மாதவிடாய் காலத்தில் பிஸ் பாஸ்போனேட் போன்ற மருந்துகளுடன் ஹார்மோன் சிகிச்சை பெறுவதன் மூலம் இதை தடுக்கலாம். உடன் தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சில நிலைமைகளை கண்டறிந்தும் கூட எலும்புகள் பலவீனமாவதை தடுக்கலாம்.

மேற்கண்ட தகவல்களை வழங்கியது பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை துறை நிபுணரான டாக்டர் சாய் கிருஷ்ண பி நாயுடு ஆவார்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீரிழிவு நோய் முதல் புற்றுநோய் வரை.. உடல் பருமனால் வரும் பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க..!

May 22, 2023 0

 

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உடல் பருமனின் காரணமாக வருடம் தோறும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக உடல் பருமனுடன் சம்பந்தப்பட்ட மற்ற ஆரோக்கிய குறைபாடுகளினாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதில் இதய கோளாறுகள், டைப் 2 நீரிழிவு நோய், புற்று நோய், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை உள்ளடக்கம்.

எனவே முடிந்த அளவு உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. சரியான சிகிச்சையின் மூலமும், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமும் உடல் பருமனை சரி செய்வது மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும். உடல் பருமன் மூலம் என்னென்ன வழிகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இதயம் சம்பந்தப்பட்ட நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாரடைப்பு, இதய தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக அதிக உடல் எடையின் காரணமாக இதயம் மற்றும் ரத்த நாளங்களில் அதிக ரத்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் அதிக அளவு கொழுப்பும் இருப்பதால் இவை இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாக காரணமாகின்றன.

டைப் 2 நீரிழிவு நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் போது டைப் 2 நீரிழிவு நோய் தாக்குவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. உடலில் சேரும் அதிக அளவு கொழுப்பானது உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வைத்து விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அவை இதய கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சுவாச கோளாறுகள்: உடல் பருமனானது நமது சுவாசப் பாதையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உறக்கமின்மை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் இவற்றினால் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்பட்டு உறங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.

புற்றுநோய் : மார்பகப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவைகள் உடல் பருமன் உள்ளோருக்கு அதிகம் ஏற்படுகின்றன. ஆனால் உடல் பருமனுக்கும் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி இன்னமும் கூட சரியாக நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அழற்சி, ஹார்மோன் சமநிலையில் குறைபாடு, இன்சுலின் எதிர்ப்பு போன்றவை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.

கல்லீரல் கோளாறுகள்: அதிக உடல் பருமனின் காரணமாக கல்லீரலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது. இந்த நோயினால் பல்வேறு வித உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். ஸ்டீட்டோஹெபடைடிஸ், சிர்றோசிஸ் போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்கள் தாக்குவதற்கான அபாயம் உண்டு.

தொற்றுகள் தாக்குவதற்கான அபாயம்: உடல் பருமமானது ஒருவரின் நோய் எதிர்ப்பு திறனை வெகுவாக குறைத்து விடுகிறது இதனால் அவர் பல்வேறு நோய்த்தொற்றுக் கிருமிகளால் பாதிக்கக்கூடும் குறிப்பாக சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகள், காயங்களின் போது ஏற்படும் தொற்றுகள், அறுவை சிகிச்சையின் போதும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மூட்டு இணைப்புகளில் பிரச்சினை: உடல் பருமன் காரணமாக மூட்டு இணைப்புகள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள இணைப்புகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆஸ்டியோஆர்த்தரடீஸ், மூட்டு இணைப்புகளில் வலி, மூட்டுகளின் இயக்கத்தில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை உண்டாக்க கூடும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 18, 2023

உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு விரைவில் தேர்வு: இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்

May 18, 2023 0

 சென்னை: அடிப்படை கல்வித் தகுதியில் புதிய திருத்தத்துடன் உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இதன்படி, இனிமேல் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.

தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளி்ல் குறிப்பிட்ட விகிதாச்சார பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுகள் நடத்தப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மாவட்ட சுற்றுலா அலுவலர் பதவியில் 3 காலியிடங்களுக்கான தேர்வுஜுன் மாதம் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே, உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் எனடிஎன்பிஎஸ்சி-யின் 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும்தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு தொடர்ந்து அக்டோபரில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் காலஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு சுற்றுலா தொடர்பான பட்டப் படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலா மேலாண்மையில் டிப்ளமா படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை கல்வித்தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியாக இருந்தால் அவர்களுக்கு அரசு கணினிசான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையின்படி, உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். மே மாதம் ஆகியும் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது, "உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து ஒப்புதல் வரப்பெற்றதும் தேர்வுக்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்" என்றார்.

உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித்தகுதி திருத்தம் குறித்து சுற்றுலாத் துறையினரிடம் விசாரித்தபோது, இந்த தேர்வுக்கு பட்டப் படிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்றுதற்போதைய கல்வித் தகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் பட்டப் படிப்பில் தமிழ் ஒரு பாடமாக இல்லை.

நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை கல்வித் தகுதியை பெற்றிருந்தாலும் இந்த விதிமுறை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழல் தற்போது உள்ளது. இதை கருத்தில்கொண்டு எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2-வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் போதும். பட்டப் படிப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அடிப்படை கல்வித் தகுதியில் திருத்தம் செய்யப்பட உள்ளது" என்று தெரிவித்தனர்.

கல்வித்தகுதி திருத்தம் தொடர்பாக சுற்றுலாத் துறையிடமிருந்து டிஎன்பிஎஸ்சி-க்கு இன்னும் ஒப்புதல் அனுப்பப்படவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இண்ட்கோ சர்வ் ஊக்கத்தொகையுடன் தேயிலை துறை சார்ந்த தொழில் பழகுநர் பயிற்சி: மே 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

May 18, 2023 0

 உதகை: குன்னூர் இண்ட்கோ சர்வ் மூலமாக ஊக்கத்தொகையுடன் தேயிலை துறை சார்ந்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் உலக வங்கி இணைந்து செயல்படுத்தும் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தை, தமிழகத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேயிலை துறை சார்ந்து பயிற்சி அளிக்க,இண்ட்கோ சர்வ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இண்ட்கோசர்வ் மூலமாக தேயிலை தயாரிப்பாளர் (20 இடங்கள்), தேயிலை தொழிற்சாலை உதவியாளர் (20 இடங்கள்) பயிற்சிகளை ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சியாக அளிக்க உள்ளது.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு, விதிமுறைகளின் படி ஒதுக்கீடு உண்டு. அடிப்படைத் தகுதி குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான காலம் ஒரு வருடம். தொழிற்பழகுநர் பயிற்சிவிதிகள்படி, பயிற்சி காலத்தில்கல்வித் தகுதிக்கேற்ப மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழிற்பழகுநர்களுக்கு காப்பீட்டு வசதியும் உண்டு.

தேயிலைத் தோட்டம், ரகங்கள்,உரங்கள், இயந்திரங்கள், தயாரிக்கும் முறை, ஏல மையங்கள் உள்ளிட்ட அனைத்தும், தொடர்புடைய நிபுணர்களால் கற்றுத்தரப்பட உள்ளன. பயிற்சி நிறைவில், மத்திய அரசின் அக்ரிகல்சர்ஸ் ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியா மூலமாக சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை இண்ட்கோ சர்வின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் 16 இண்ட்கோ தொழிற்சாலைகளிலும், இண்ட்கோ சர்விலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இண்ட்கோ சர்வின் இணையதளத்தில் இருந்துபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு குன்னூரில் உள்ள இண்ட்கோ சர்வ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அஞ்சல் துறையில் நேரடி முகவர்கள் வேலைவாய்ப்பு

May 18, 2023 0

 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக(Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களை (Direct Agents) ஈடுபடுத்த இருப்பதாக சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ( Chennai City Central Division)  தெரிவித்துள்ளார்.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதே சமயம், இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும்.

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இது, ஆள் சேர்க்கை அறிவிப்பு கிடையாது.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news