Agri Info

Adding Green to your Life

May 26, 2023

மாதத்திற்கு ரூ.20,000 ஊக்கத்தொகை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு

May 26, 2023 0

 மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மகளிருக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தில்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள தில்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சேர விரும்புவர்கள் இந்தஇணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஏற்றுமதி தொழிலில் சாதிக்க வேண்டுமா? தமிழக அரசின் இலவச பயிற்சித் திட்டம் இதோ

May 26, 2023 0

 இந்தியாவில் தற்போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் (1 நாள்) பயிற்சியினை வரும் 03:06:2023ம் தேதி (காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை) வழங்க உள்ளது.

Ads by 

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள். வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

முகவரி:  தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் மின்னஞ்சல் முகவரி : asstd@editn.in | admin@editn.in ஆகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

May 26, 2023 0

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.31,000/-ஊதியம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow, Junior Research Fellow பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNAU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow, Junior Research Fellow பணிகளுக்கென மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Agriculture/ Horticulture/ Sericulture பாடப்பிரிவில் B.sc / M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNAU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNAU தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNAU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 06.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

May 26, 2023 0

 

CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) டெல்லி – புதுதில்லியில் உள்ள குரூப் ஜெனரல் மேனேஜர்/ சீனியர் ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு 08.06.2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CONCOR காலிப்பணியிடங்கள்:

Group General Manager/ Senior General Manager பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager தகுதி விவரங்கள்:

SAG/NFSAG/SG அளவில் பணிபுரியும் IRSEE அதிகாரிகள் குறைந்தபட்சம் 17 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 54 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CONCOR தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000 – 2,60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CONCOR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

May 24, 2023

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

May 24, 2023 0

 

UPSC CISF AC(EXE) LDCE அறிவிப்பு 2023 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது உதவி கமாண்டன்ட்கள் பணியிடங்கள் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் ( CISF AC LDCE ) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC காலிப்பணியிடங்கள்:

போட்டித் தேர்வின் அடிப்படையில் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CISF AC(EXE) LDCE வயது வரம்பு:

விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 01, 2023 அன்று 35 வயதை எட்டியிருக்கக்கூடாது, அதாவது விண்ணப்பதாரர்கள் 02 ஆகஸ்ட் 1988க்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்ததேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:
  • எழுத்துத் தேர்வு
  • உடல் திறன் சோதனை
  • நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 13.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

May 24, 2023 0

 

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலை – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

South East Central Railway ஆனது NAPS-ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.South East Central Railway காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கென காலியாக உள்ள 105 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electrician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

South East Central Railway வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.7,000/- முதல் ரூ.7,700/- வரை ஊதியமாக(உதவித்தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

South East Central Railway தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

May 24, 2023 0

 

Reserve Bank of India-வில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- சம்பளம்!

Part-time Pharmacist பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Reserve Bank of India ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Part-time Pharmacist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Pharmacy / B. Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Part-time Pharmacist ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியமாக வழங்கப்படும்.


RBI தேர்வு செய்யப்படும் முறை:

screening / shortlisting செய்யப்படும் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 13.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

May 24, 2023 0

 

Axis Finance Limited நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

Axis Finance Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Axis Finance Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant பணிக்கென மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Axis Finance Limited வயது வரம்பு:

24.05.2023ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 0 முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Axis Finance Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Axis Finance Limited-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Assistant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news